News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

My Dear ஆல்பா புருஷா

by Layas Tamil Novel
1.6K views
A+A-
Reset

PROMO

அந்த அறையே ஒருவித இருக்கத்தோடு இருந்தது. அதன் மையத்தில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான்  45 வயதிலும் ‘கம்பீரம்’ குறையாத தீரஜ் நிவேந்தன் தன் ஸ்கூலின் வரவு-செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். லேசான நரை விழுந்த தாடி அவனுக்கு ஒரு ராயல் லுக் கொடுத்தது.

முகத்தில் ஒருவித இருக்கத்தோடு தன் ஸ்கூலின் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

“டேட்! ” என்று கதவை தட்டிக்கொண்டு தயங்கியபடி உள்ளே நுழைத்தான் தீரஜ்ஜின் மகன் ரக்ஷித். 

துருதுறுவென்றிருக்கும் அவன் கண்களில் இன்று ஒரு வித பயமும், பதட்டமும் குடிகொண்டிருந்தது.

அவன் குரலை கேட்டு நிமிர்ந்த தீரஜ் தன் மகனின் முகம் கண்டு புருவம் சுருகியவன் “வாட்?” என்றான் .

“டேட்! அது.. நானும், அனுபமாவும் ” என்றவன் எச்சில் விழுங்கியபடி அடுத்து பேச தயங்க.

“எஸ்!  சொல்லு ரக்ஷித் , ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டிங்களா?”

“எ.. எஸ் டேட்”

“குட்! அப்பறோம் ஏன் உன் பேஸ் conused இருக்கு. அனு அப்பா,அம்மா ஏதாவது சொன்னங்களா? நீங்க லவ் பண்ணறது தான் நம்ம ரெண்டு பேமிலிக்கும்  தெரியுமே. அண்ட் ஆல்ரெடி வி அக்ஸப்ட் யுவர் லவ்”

“நோ! டேட்! அது ப்ரோப்லேம் இல்ல… அது வந்து .. அனு  இஸ் கேர்ரியங் மை சைல்ட்” என்றவன் தீரஜின் முகத்தை கூர்ந்து பார்த்தான் , அவன் முகத்தில் எழும் உணர்வுகளை படிக்க.. ஆனால் அது அந்த கடவுளே நினைத்தாலும் கண்டுபிடிப்பது சுலபமல்லவே.

ரக்ஷித் சொன்னதை கேட்டதும் அதிர்ந்தவன் “வாட்!” என்றவன். “ஓகே! அப்போ இளங்கோகிட்டே உங்க கல்யாணம் பத்தி பேசுறேன்”என்று தன் போனை எடுத்தான்.

“நோ! டேட்! வேணாம் ” என்று அவசரமாக தடுத்தவன்.

“டேட்! அவங்க ஏற்கனவே எவ்ளோ யோசிச்சு எங்க காதலை அக்செப்ட் பண்ணினாங்கனு உனக்கே நல்லா தெரியும். அம்மா இல்லாத நம்ம வீட்டுக்கு அனுவை அனுப்ப அவங்க எவ்ளோ யோசிச்சாங்க. இந்த நேரத்துல இப்போ அனு ப்ரெக்நன்டனு தெரிஞ்சா என்ன ஆகும். அதனால… ” என்றவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “நீ கல்யாணம் பண்ணிடு ப்பா முதல்ல..பிலீஸ்…” என்றான்.

ரக்ஷித் மீது இருந்த கோபத்தை தன் கையில் இருந்த பைலில் கட்டியவன் “டோன்ட் பிலே ரக்ஷித், எனக்கு 42 வயசு ஆச்சு இப்போ எனக்கு கல்யாணம் முக்கியமா?”

“அனு வீட்ல எங்க கல்யாணத்தை பத்தி பேசணும். ஆனா அவங்க உன்னையும் , என்னையும் பாக்குற பார்வை மாறிடக்கூடாது . அதுக்காக தான் நான் கேக்குறேன். உன்கிட்டே நான் எவ்ளோ வருஷமா கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டிருக்கேன். அப்போ எல்லாம் ஏதாவது ரீசன் சொல்லி நீ ஒதுக்கல. பட் இந்த முறை நீ கல்யாணம் செய்தா தான் எங்க மேரேஜ் நடக்கும். அதனால… “

“அதனால… இன்னும் என்ன டா..” என்று இருக்கையை விட்டு எழுந்து ரக்ஷித்தின் முன்பு வந்து நின்றான்.

அவன் ஆஜாகுபான உடலும் , அவன் முகத்தில் தெரிந்த இருக்கத்தையும் பார்த்து அவன் செல்ல மகன் மிரண்டு விட்டான். அதை பார்த்து தன் இறுக்கம் தளர்த்தவன்.

“சொல்லு..” என்று பெருமூச்சு விட்டபடி.

“நீ.. நீ.. இப்பவே கனிகா ஆன்ட்டியை போய் பாரு. அவங்களை எப்படியாவது இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வை.. ம்ஹும் இல்ல கல்யாணம் பண்ணிடு” என்றான்.

“டேய்! நா.. எப்படி டா..”

“டேட்! அம்மா இறந்த அப்பறோம் நீ தனியா நின்னு என்னை வளர்த்த.. நீ நினைச்சிருந்தா உன்னோட காதலை திரும்ப புதுப்பிச்சு இருக்கலாம். ஆனா இப்போ வர கல்யாணமே பண்ணிக்காம எனக்காக வாழ்த்துட்ட.. இப்பவும் எனக்காக இதை செய்யேன்” என்று கெஞ்சினான்.

தீரஜ் ஆழ்ந்து அவனை பார்த்தவன் அந்த ரூமை விட்டு கனிகாவை பார்க்க சென்றான்.

“என்னோட எக்ஸ்கிட்டேயே போய் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டா அவ என்னை பத்தி என்ன நினைப்பா? ஓஹ் ஷிட்! அவளை எப்படி கன்வின்ஸ் பண்றது” என்று யோசனையில் காரை செலுத்தியவன்.

 “ரக்ஷித்! யூ இடியட் ! ஒரு விஷயம் கூட உன்னால சேப்பா பண்ண முடியலை ” என்று தன் மகனை திட்டிக்கொண்டே காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் கனிகா வீடு காலிங் பெல்லை அழுத்தினான்.

கனிகா தான் வந்து கதவை திறந்தாள். 35 வயதுள்ளவள் என்று அவளைக் கண்டதும் யாரும் கணித்துவிட முடியாது. அவ்வளவு காட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்கிறாள் இன்றும்… முதிர் கன்னியா என்றும் சொல்லிவிட முடியாத அளவிற்கு அவள் தோற்றம் இருக்கும்.  இருவருக்குமே வயதை மீறிய அழகு தான் கண் முன்னே நிற்கும்.  

“கனி! ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ” என்று உள்ளே சென்றான்.

அவன் உள்ளே வரவும் “நானும் உன்கிட்டே பேசணும்” என்றவள் கண்கள் சிவக்க அவனைப் பார்த்தாள். 

தீரஜ் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்திருக்க.. அவன் மீது தன் கையில் இருந்ததை தூக்கி வீசியவள் “நீ பண்ணி வெச்சிருக்க வேலையை பாரு” என்றாள் கோபமாக..

ஒன்றும் புரியாமல் அவள் தன் மேல் விட்டெறிந்ததை எடுத்து முகத்திற்கு நேராக வைத்து பார்த்தான் “அதில் இரண்டு சிவப்பு கோடுகள் அடர்த்தியாக இருந்தது. அவள் வீசிய ப்ரெக்நென்சி கிட்டில் இருந்த கோடுகளை கண்டு அதிர்ந்தவன் “கனி! நீ!… ” என்று அவன் முடிக்கவில்லை.

“ஆமா நானே தான் உன்னால இப்போ கர்ப்பமா இருக்கேன். இந்த வயசுல நமக்கு இது தேவையா?” என்று அவனை முறைத்தாள்.

தீராஜிற்கு தலையே சுற்றியது. இப்பொது என்ன முடிவெடுப்பது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை .

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.