News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் 1, PART-2

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

PART-2

அவன் அப்படி சொன்னதும் அவனுக்கு வாயெல்லாம் பல்லாக இளித்தவன் “சார் இப்பவே நம்ம ஆளுங்களை அனுப்பறேன். நீங்களே ஏறு வேணும்னு சொல்லுங்க ” என்றான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“நோ.. நோ.. ஐ வாண்ட் ப்ரெஷ் ” என்றான்.

அவன் கேட்ட விதம் அந்தப் பப் கலாச்சாரத்தில் சர்வர்களுக்கும் மேலாளர்களுக்கும் பரிச்சயமான ஒன்றுதான். உடனடியாகத் தன் மொபைலை எடுத்துப் பப்பின் மேலாண்மைப் பிரிவில் இருக்கும் பிரகாஷை வரவழைத்தான் சர்வர்.

நிமிடங்களில் அங்கு வந்து நின்றான் முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த பிரகாஷ். பப்பின் வி.ஐ.பி கஸ்டமர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அவனது வேலை.

“சார்… இவன் தான் பிரகாஷ். நீங்க கேட்ட மாதிரி ஃப்ரெஷ் பீஸ் இப்போதைக்கு இங்க நேரடியா இல்ல. ஆனா இவன் உங்களுக்கு பெஸ்ட்டா ஏற்பாடு பண்ணுவான்” என்று சர்வர் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

பிரகாஷ் மாறனின் அருகில் பவ்யமாக வந்து நின்று, “சார்! உங்களுக்கு எந்த மாதிரியான பொண்ணு வேணும்? எத்தனை நாளைக்கு? நைட் ஃபுல்லாவா அல்லது குறிப்பிட்ட நேரமா?” என்று வியாபார நோக்கத்துடன் கேட்டான்.

மாறன் அவனது கேள்வியைப் புறக்கணித்துவிட்டு, “எனக்கு இப்போதைக்கு நேரில் யாரும் தேவையில்லை. ஆனால் நான் கூப்பிடும் போதெல்லாம், நான் கேட்கும்போதெல்லாம் ஆன்லைனில் அவைலபிளா இருக்கிற மாதிரி ஒரு பொண்ணு வேணும். இப்போ லைவ் சாட், வீடியோ கால் மாதிரிலாம் இருக்குல்ல… அதுல என் மூடுக்கு ஏத்த மாதிரி பேசுறதுக்கு ஒருத்தி வேணும்” என்று தன் விசித்திரமான தேவையைச் சொன்னான்.

மாறனின் தேவையைப் புரிந்து கொண்ட பிரகாஷ், உடனடியாகத் தான் வைத்திருந்த ஐ-பேட்டை  திறந்தான். அதில் ஒரு பிரத்யேக ஆப் மூலம் பல பெண்களின் புகைப்படங்களைக் காட்டத் தொடங்கினான்.

அந்தத் திரையில் தோன்றிய பெண்கள் அனைவரும் நவீன நாகரிக உடையணிந்து, கவர்ச்சியாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலரின் முகத்தில் வெளிப்படையான கவர்ச்சியும், சிலரின் முகத்தில் சோர்வை மறைத்த செயற்கையான புன்னகையும் இருந்தது. இன்றைக்கு இருக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகத்தான் அந்தப் படங்களும் பெண்களின் தோற்றமும் இருந்தன.

ஆனால், எத்தனையோ முகங்களை பிரகாஷ் மாற்றிக் காட்டிக் கொண்டே சென்றும், மாறனின் கண்கள் எதிலும் படியவில்லை. உதட்டைப் பிதுக்கியவன்,

“இவங்களைலாம் பார்த்தா ஃப்ரெஷ் கேர்ள்ஸ் போல தெரியலையே… ஏற்கனவே பல பேருக்கு செட் பண்ணிப் பழக்கப்பட்ட முகங்களா இருக்கு. எனக்கு வித்தியாசமா, ஆர்டிஃபிஷியல் இல்லாம, நிஜமா என் கூட பேசுற மாதிரி ஒரு பொண்ணு வேணும்” என்றான் எரிச்சலுடன்.

வெளியே சென்ற பிரகாஷ், ஒரு சில நிமிடங்களிலேயே உதட்டில் ஒரு புன்னகையுடன் தன் கையில் ஒரு புதிய டேப்லெட்டுடன் அறைக்குள் நுழைந்தான். அவன் முகத்தில் இருந்த அந்தத் திருப்தியான சிரிப்பே, மாறன் கேட்டதற்கன சரியான ‘சரக்கு’ அவனிடம் சிக்கிவிட்டது என்பதைச் சொல்லாமல் சொன்னது.

மாறன் சிகரெட்டின் சாம்பலை ஆஷ்ட்ரேயில் தட்டியபடியே, “என்ன பிரகாஷ்… நான் கேட்டது மாதிரி கிடைச்சிடுச்சா?” என்றான் சோர்வு கலந்த அலட்சியமான குரலில்.

அவன் எதிரில் இருந்த சோஃபாவில் பணிவாக அமர்ந்த பிரகாஷ், தன் டேப்லெட்டின் திரையைத் தட்டி மாறனின் முன் நீட்டினான்.

“சார்… சாதாரணமா பப்க்கு வர்ற பொண்ணுங்கள மாதிரி இவங்களைக் நினைக்காதீங்க. இப்போ லேட்டஸ்டா மார்க்கெட்ல செம ட்ரெண்டிங்ல இருக்கிற ஒரு விஷயம் இது. பப்ளிக் சோஷியல் மீடியாக்களிலேயோ அல்லது டேட்டிங் ஆப்ஸ்களிலேயோ கிடைக்கிற சாதாரன ஆட்கள் கிடையாது இவங்க.

தனிப்பட்ட முறையில, கேமராவுக்கு முன்னாடி யாருக்கும் தெரியாம எக்ஸ்குளூசிவ்வா லைவ் வர்ற ஆர்டிஸ்ட்கள் சார் இவங்க. நீங்க எப்போ கூப்பிட்டாலும், என்ன கேட்டாலும், எந்த மாதிரி காஸ்ட்யூம்ல வரணும்னு சொன்னாலும் அப்படியே கேமராவில் லைவ் வருவாங்க. ஃப்ரெஷ்னஸ் அண்ட் பிரைவசி கியாரண்டி! ஆனா ஒரே கண்டிஸன் இவங்க யாரும் அவங்க முகத்தை இந்த செட்டில் காட்ட மாட்டாங்க” என்றான் பிரகாஷ் .

அந்தத் திரையில் இப்போது ஒரு புதிய ஆப் ஓபன் ஆகியிருந்தது. அங்கே சில இளம் பெண்களின் லைவ் ஐடிகள் ஓடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு பெண்ணின் ப்ரொஃபைலைத் தொட்டான் பிரகாஷ்.

திரையில் தோன்றிய அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மாறனின் கண்கள் சற்று சுருங்கின.

வழக்கமான பப் நடனப் பெண்களைப் போல இல்லாமல், ஏதோ ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண் போலவும், அதே நேரம் பார்ப்பவர்களை ஈர்க்கும் ஒருவித ஏக்கம் கலந்த அழகு அவள் கண்களில் இருந்தது.

அவளது பின்னணி அலங்காரம் கூட ஒரு சாதாரண அறை போலத்தான் இருந்தது. ஆனால் அவளது கண்களில் இருந்த சோகம் மாறனின் கவனத்தை ஈர்த்தது. தன் துப்பட்டாவை வைத்து முகத்தை முழுவதும் மறைத்து இருந்தாள். கண்கள் மட்டும் தெரிய,

அவள் அணிந்து இருந்த சுடிதாரே அவள் அங்க வளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இவங்க போட்டோ போட்டோ ” என்று அந்த ப்ரோபைலை தொட்டுக் கேட்டான்.

“சாரி சார் , அது ரெஸ்ட்ரிக்ட்டெட். இவங்களோட ஒரே கண்டிஷன் இது தான்” என்றான் முடிவாக.

“ஓஹ்!…”என்றவன்

“உடம்பைக் காட்டுவாங்க.. ஆனா முகத்தை மட்டும் இல்ல. .” என்று நக்கலாக சிரித்தவன்

PART-3

“இவ யாரு?” என்றான் மாறன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து.

“ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உலகத்துல இப்போ ரொம்ப பாப்புலர். ஸ்பெஷல் கோட் அல்லது எக்ஸ்குளூசிவ் மெம்பர்ஷிப் இருக்கிறவங்க மட்டும் தான் பேச முடியும். இந்த உலகத்துக்கு புசுங்குறதுனால உங்களுக்கு இவங்க பேசுற விதம் இவங்களோட லைவ் சாட் கண்டிப்பா உங்க டென்ஷனை ஃபுல்லா மாத்திரும்,” என்று பிரகாஷ் வர்ணித்தான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் மாறனின் உதடுகள் லேசாக வளைந்தன—ஒரு நக்கல் சிரிப்பு.

“சரி, அவளை இப்போ லைவ் வரச் சொல்லு. பாப்போம், என் மூடுக்கு அவ சரியா வருவாளான்னு,” என்று தன் ஷூ கால்களை டேபிளின் மீது தூக்கி வைத்துக்கொண்டு ஐ-பேட்டை உற்று நோக்கத் தொடங்கினான் மாறன்.

பிரகாஷ் தன் மொபைலில் அந்தப் பெண்ணின் மேனேஜ்மெண்ட் கன்சோலுக்கு ஒரு ரகசிய கோப்பைக் கொடுத்துவிட்டு, மாறனிடம் “சார், இன்னும் ரெண்டு நிமிஷத்துல ஸ்கிரீன்ல அவங்க லைவ் வந்துடுவாங்க. நீங்க பேசுங்க… நான் வெளியே வெயிட் பண்றேன்” என்றுவிட்டு சத்தமின்றி அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அறைக்குள் ஒரு நிசப்தம் நிலவியது. மாறனின் கண்கள் அந்தத் திரையையே நோக்கியிருந்தன.

சற்று நேரத்தில், அந்தத் திரையில் இருந்த பிளாக் ஸ்கிரீன் மறைந்து, ஒரு மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பெண் முகத்தில் கேமரா ஃபோகஸ் ஆனது. அந்தப் பக்கம் கேமரா முன்பு வந்து அமர்ந்த அந்த பெண் , தயங்கித் தன் தலைமுடியை ஒதுக்கிவிட்டு கேமராவைப் பார்த்தாள்…

திரையில் தெரியும் பெண்ணைப் பார்த்த மாறனின் கண்கள் லேசான போதையோடும், அதே நேரம் ஒருவித ஈர்ப்போடும் அந்தத் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.