ஆன்லைன் 1,PART-3
“உன் பேர் என்ன?” என்றான்.
திரையில் இருந்த பெண்ணோ சிறு தயக்கத்தோடு “ரேஷ்.. ரேஷ்மா.. ” என்றாள்.
“உன் உண்மையான பேரைக் கேட்டேன்” என்றான் அழுத்தமாக.
“ஹா!.. சார் அது.. அது.. வந்து ” என்று அந்த பெண் தடுமாற.
“சரி உடம்பைக் காட்ட முடிஞ்சா உனக்கு முகத்தை காட்ட தைரியம் இல்லையா?” என்றான் நக்கலாக.
“என்னோட கஷ்டத்துக்காக தான் இந்த மாதிரி வேளைக்கு வந்திருக்கேன். என் முகம் உங்களுக்குத் தேவை இல்லையே.. என் உடம்பு தானே.. ” என்றாள் வலி நிறைந்த குரலில்.
“கஷ்டம்னா போய் பிச்சை எடுக்கலாமே. இந்த தொழிலுக்கு எதுக்கு டி வந்த ” என்ற அவன் வார்த்தைகள் அவள் இதயத்தில் ஊசியாய் இறங்கியது.
அவள் விழிகளில் வலியுடனும், கண்ணீருடனும் அவனைப் பார்த்தவள் “பிச்சை யாரும் லட்சங்கள்ல கொக்குறது இல்ல ” என்றாள்.
“அதுக்கு என்ன அவசியம்.. ” என்று எழுந்து ஸ்க்ரீன் முன்னாள் மாறன் வர..
அதற்குள் சிரித்த முகமாகத் திரும்பி வந்த பிரகாஷ், “பேசிட்டிங்களா சார் ” என்று அந்த ஐ- பேடை எடுத்து விடியோவை கட் செய்தவன் மாறனிடம் வந்து பேசத் தொடங்கினான்.
“சார்… நீங்க கேட்ட இந்த பொண்ணு . இப்போதைக்கு ஆன்லைன் உலகத்துல இவங்க ரொம்பவே ட்ரெண்டிங். ஆனா இவங்க ரொம்பப் புதுசுங்கிறதுனால, பப்பல இருக்கிற மத்த பெரிய பணக்காரக் கட்சிகளெல்லாம் இவங்க அழகில் மயங்கிப் போய், ‘நான் அதிகமா பணம் தர்றேன், அவளை எனக்கு ஃபிக்ஸ் பண்ணுங்க’ அப்படின்னு போட்டி போட்டுகிட்டு இருக்காங்க சார். யாரு பெஸ்ட் பிரைஸ் கொடுக்கிறாங்களோ, அவங்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரைக்கும் தான் இவங்க லைவ் வருவாங்க…” என்று தன் கமிஷன் வியாபாரத்தைப் பற்றிக் கூறினான்.
மாறன் சிகரெட் புகையை வெளிவிட்டுக் கொண்டே, சற்று நேரம் அந்தப் ப்ரொஃபைலையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையில் ஒரு பிடிவாதம் இருந்தது.
“இவளோட பெஸ்ட் பிரைஸ் என்ன?” என்று சாதாரணமாகக் கேட்டான் மாறன்.
பிரகாஷ் சில லட்சங்களைச் சொல்லிவிட்டு, “மத்தவங்க இதைவிட அதிகமான தொகையைக் கொடுத்து இவளைக் கேட்டுகிட்டு இருக்காங்க சார்…” என்று தயங்கினான்.
அவன் சொல்லி முடிப்பதற்குள் மாறன் சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தமாகத் திணித்தவன், தன் கோபத்தையும் பணபலத்தையும் சேர்த்து மேஜை மீது அதட்டினான்.
“நீ என்ன சொன்ன… மத்தவங்க கேக்குறாங்களா? அவங்க கேக்குற தொகையை விட டபுள் அமௌண்ட் தர்றேன். இவளை நீ எனக்கு மட்டும் பிக்ஸ் பண்ணு! இனிமே இவ எனக்கு மட்டும்தான் லைவ் சாட் வரணும். நான் சொல்ற வரைக்கும் இவளை வேறு யாருக்கும் எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது. புரியுதா?” என்றான் அதிகாரத் தோரணையில்.
அதிர்ந்துபோன பிரகாஷ் யோசனையுடன் நின்றான். “சார்… சில லட்சங்களைச் சில நாட்களுக்குக் கொடுத்துட்டு நீங்க பாட்டுக்கு வேலையை முடிச்சிட்டுப் போயிருவீங்க. அதுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி? இவளுக்கு எப்படி இவ்வளவு பணம்…” என்று மனதுக்குள் யோசித்தவன், உடனே தன் முதலாளியிடம் போனில் பேசி விஷயத்தைச் சொன்னான்.
மாறன் தரும் பிரம்மாண்டமான தொகையைக் கேள்விப்பட்ட அந்தப் பப் முதலாளி உடனடியாக சம்மதிப்பதாகத் தலை அசைத்தான். பிரகாஷும் வேறு வழியின்றி மாறனின் நிபந்தனைக்குத் தலைவணங்கி, “சார்… பாஸ் ஓகே சொல்லிட்டாரு. அந்த பொண்ணு இனி உங்களுக்கு மட்டும்தான்!” என்றான்.
ஆனால், அங்கே மற்றொரு சிக்கல் எழுந்தது.
“சார், லைவ் வீடியோ சாட் பண்றதுக்கு எங்க ஏற்பாடு பண்ணனும்? எங்க பப்பில இருக்கிற வி.ஐ.பி ரூம்ல இருந்து பண்ணட்டுமா?” என்று பிரகாஷ் கேட்க…
மாறன் உடனடியாக அதை மறுத்தான். “நோ… பப் இடம் எனக்கு கம்ஃபர்ட்டா இருக்காது. நான் சொல்ற இடத்துல மீராவைத் தங்க வச்சு லைவ் பண்ண ஏற்பாடு பண்ணு. அந்த லொகேஷன், மத்த அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாமே நான் பாத்துக்குறேன். ஓகேவா?” என்றான்.
பதறிப்போன பிரகாஷ், “சார்… என்ன இது? இதுக்கு எங்க பாஸ் சம்மதிக்க மாட்டார். எல்லாமே எங்க இடத்துல இருந்து தான் செய்யணும். இதுல எங்களுக்கு நிரைய சிக்கல் இருக்கு” என்று தயங்கினான்.
அதை சற்றும் பொறுக்காத மாறன், கோபமாக மேஜையைத் தட்டிவிட்டுக் கத்தினான்.
“பணத்தைத் ட்ரிபிள் பண்றேன்! “ என்ற இறுக்கமான குரலில் உத்தரவிட்டான்.
“சாரி சார், இதுக்கு எங்க பாஸ் முடியாதுனு சொல்லிட்டார். ஆனா ஒரு ஆப்ஷன் இருக்கு ” என்றான்.
“என்ன ?” என்றான் மாறன்.
“ரொம்ப ப்ரீமியமான பொண்ணுங்களை எல்லாம் நாங்க தனியா ஒரு இடத்துல தங்க வைப்போம் . அங்க எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது. நீங்க எதிர்பார்த்தது போல எல்லாமே கிடைக்கும் ” என்றான்.
“ம்ம்.. ” என்று யோசித்தவன் அங்கே வேற யாரும் ..” என்றான்.
“நோ சார் இவங்களுக்கு தனி இடம் , அந்த இடத்துல வேற யாரும் வர மாட்டாங்க” என்றான்.
“ஓகே நான் இப்பவே உன் அக்கௌண்ட்க்கு அமௌன்ட் ட்ரான்ஸ்பர்” பண்றேன் என்றவன் “24*7 அவெய்லபிளா இருக்கனும் எனக்கு “என்றான்.
“சார் அது வந்து.. ” என்று அவன் தலையை சொரிய..
“எவ்ளோ சார்ஜ் ” என்று புரிந்து கொண்டு கேட்டான் மாறன்.
“சார் அது வந்து ஈவினிங் 9 டு மோர்னிங் 6 வரை தான் அவெய்லபிள் அது எங்க கம்பெனி ரூல்ஸ் என்றான்.
“உன் கம்பெனி ரூல்ஸ் தானே.. அதை நீ மாத்திக்கலாம் ” என்றவன் “ஈவ்னிங் 6 டு மோர்னிங் 6 ” என்றவன் அவன் கேட்ட தொகைக்கும் மேலாக பணத்தை அனுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி இருந்தான்.
“சார் நாளைக்கு ஈவினிங் எல்லா ஆரஞ்சுமெண்ட்ஸ் பண்ணிட்டு , உங்களுக்கு லைவ் சாட் ஐடி ஷேர் பண்றேன் ” என்று மாறன் சென்ற திசையை நோக்கி சத்தமிட..
அவனைப் பார்க்காமலேயே கையை மேலே உயர்த்தி தம்ஸ் அப் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
