EPISODE – 16
“ஏய் என்னடி இது…” என்று விழி விரிய டேபிளில் இருந்த லேப்டேப்பை பார்த்தவன் “இது சுரேந்திரனுடைய லேப்டாப்பா சூப்பர் டி…” என்றான்.
“ஆமா.. ” என்றாள் காலரை உயர்த்திக்கொண்டு.
“இது எப்படி நீ எடுத்த…” என்றான் ஆர்வமாக.
“ஐயோ இதை எடுக்குறதுக்குள்ள நான் பட்டப்பாடி இருக்கே” என்று பெருமூச்சுவிட்டாள்.
“தேங்க்ஸ் டி செல்ல குட்டி… சரி… அதெல்லாம் அப்புறம் பேசலாம்… இப்போ அந்த லேப்டாப் ஓப்பன் ஆகுதா… இல்ல… அவன் வேறு ஏதும் பாஸ்வேர்டு போட்டு வச்சிருக்கானான்னு பாக்கலாம்… நீ எதும் செக் பண்ணியா” என்றான்.
“இல்ல … அதை எடுத்துட்டு நான் நேரா இங்க தாண்டா வரேன்… நான் இன்னும் செக் பண்ணல…” என்றாள்
பவித்ரன் அந்த லேப்டாப்பை வாங்கி ஓபன் பண்ண ட்ரை செய்ய அது பாஸ்வேர்ட் கேட்டது.
“ஓ ஷிட்… இட் இஸ் ஆஸ்கிங் ஃபார் பாஸ்வேர்ட்… பட் தட் இஸ் நாட் எ பிக் பிராப்ளம்…” என்றான்.
“உனக்கு அவன் பாஸ்வர்ட் எதுவும் தெரியுமா? என்ன?” என்றாள் புரியாமல்.
“உனக்கு ஒன்னும் தெரியுமா?.. என்னோட பிரண்டு எஸ் ஐ குமார் இருக்கான்ல… அவனுக்கு தெரிஞ்ச ஹேக்கர் ஒருத்தன் இருக்கிறான்… வெரி இன்டெலிஜென்ட்… அவன வச்சு இத ஓபன் பண்ணிடலாம்” என்றான் பவித்ரன்.
“ எனி ஹவ் யூ ஹவ் டன் எ கிரேட் ஜாப்… மை டியர் வைஃபீ”… என்றான்.
“என்னடா பவி அவ்வளவுதானா…” என்று அவனைப் பார்த்து குறும்பாக சிரிக்க…
“வாடி என் செல்ல குட்டி…” என்று இறுக்கமாக அவளை அணைத்து அவள் இதழில் தன் இதழை பதித்தான்.
அங்கே அன்பும், காதலும் கலந்திருந்ததால்… அந்த முத்த பரிமாற்றம்… அவர்களுக்குள் இன்னும் பிணைப்பை உருவாக்கிக் கொண்டிருந்தது.
“விகாஷினி… என் பொண்டாட்டீஈஈ… எனக்கு இன்னைக்கு ரொம்ப மூடா இருக்குடி…” என்று மேலும் இறுக்கி அணைத்தான்.
“அச்சச்சோ… அதுக்கு என்ன பண்றது இப்போ”
“என்னோட டாக்டர் பொண்டாட்டிக்கு இது கூட தெரியாதா?”
“நான் வெறும் இ என் டி டாக்டர் தான். என்னோட வேலையெல்லாம் முகத்தோட முடிஞ்சிடும்…” என்று சிரித்தாள்,
“அப்படியா டி… சரி அப்ப இன்னைக்கு உனக்கு நான் சொல்லித் தரேன்… முகத்துக்கு கீழே எல்லாம் என்னென்ன வேலை இருக்குன்னு” என்று அவளை நெருங்கினான்.
இருவரும் அணைத்து சுகித்தபடியே… அப்படியே நகர்ந்து… அங்கே பேஷண்டை செக் பண்ண போடப்பட்டிருந்த கட்டிலில் விழுந்தனர்…
“டேய் டாக்டர்… நம்ம கல்யாணம் வரைக்கும் பொருத்துக்க கூடாதா…” என்றாள்
“அறிவுக்கு தெரியுதுடி… இந்த உடம்புக்கு புரியலையேஏஏ …” என்று அவன் சிவாஜி கணேசன் மாதிரி மிமிக்ரி பண்ண…
விகாஷினி சிரித்து விட்டாள் .
அவளின் சிரிக்கும் உதடுகளை இவனது உதடுகளால் கவ்வினான்.
அவன் கவ்வியதும் மின்சாரம் உடலில் பாய… இவளும் இறுக்கி அணைத்துக் கொள்ள… இருவரது கால்களும் பின்னிக்கொண்டது.
“டேய் டாக்டர்… கொஞ்சம் மெதுவா டா…”
“விகாசி… எத்தனை நாள் ஆச்சு… இனி எத்தனை நாள் கழிச்சு நாம பாக்க போறோமோ… அதனால இன்னைக்கு… ஆசை தீர…” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்
“ஏன்டா… இந்த பேஷன்ட் படுக்கிற பெட்டில வச்சு… நம்ம ஃபர்ஸ்ட் நைட் முடிக்கணும்கறையா…” விகாஸினி முனங்கிக் கொண்டே கேட்க…
“ஹாஸ்பிடல் பெட்டா… ஃபர்ஸ்ட் நைட் பெட்டா… எந்த இடம் அப்படிங்கறது முக்கியம் இல்ல… இதோ இந்த இடம் தாண்டி முக்கியம்” என்று அவள் உடலில் அவன் கைகளும், உதடுகளும் மேயத்துவங்கியது.
அவன் உதடுகள் அவள் உடலில் உரச… அதற்கு மேல் பேச முடியாமல் பரவச நிலைக்கு சென்று விட்டாள் விகாஷினி.
கடிகாரம் தனது வேலையை செய்து கொண்டிருந்தது.
ஒரு வழியாக… டாக்டர்கள் இருவரும் செக்கப்பை முடித்துக் கொண்டு எழுந்தனர்…
பவித்ரன் அவளைப் பார்த்து கண்ணடிக்க… அவளும் இவனைப் பார்த்து
“டாக்டருக்கு ஆசை தீர்ந்துருச்சா…” என்றாள்.
“ஒரு நாள்ல தீர்ற ஆசையா இது…” என்றான் மோகமாக.
“கல்யாணம் மட்டும் முடியட்டும்… நான் ஒரு வருஷம் ஹாஸ்பிடலுக்கே வரமாட்டேன்… ஃபுல்லா இந்த வேலை தான்…” என்று அவள் கன்னத்தை வருடினான்.
“ரொம்ப ஆசை தாண்டா உனக்கு…” என்று அவன் மார்பை கிள்ளினான்.
“சரிடி பசிக்குது… அப்படியே வெளியே போயி டின்னர் சாப்பிட்டுட்டு போலாம்” என்றான்.
“ஏன் நிறைய எனர்ஜி போயிருச்சா?” என்று குறும்பாக சிரித்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை… என்கிட்ட எனர்ஜி பேங்க்கே இருக்கு” என்றான்.
“சரி வா போலாம்…” என்று இருவரும் சிரித்துக் கொண்டே ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பினர்.
இருவரும் கிளம்பி அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர்.
“பவி நீ என்னடா சாப்பிட போற…”என்றாள்
“நான் இன்னைக்கு நிறைய சாப்பிட போறேன்… என்னமோ இன்னைக்கு சந்தோஷம் இருக்கு டி எனக்கு…”
“அய்யாவின் மகிழ்ச்சியின் காரணம் தெரிந்து கொள்ளலாமா….” என்று சிரித்தாள்.
“ப்பா… எப்படி இருந்த தெரியுமா நீ!.. என்ன அழகு… அப்படியே செதுக்கி வச்ச சிலை மாதிரி… அதுக்கெல்லாம் சொந்தக்காரன் நான் தான் அப்படிங்கிற சந்தோசம் தாண்டி…” என்றான்.
விகாஷினிக்கு வெட்கமாகவும் கூடவே சந்தோஷமாகவும் இருந்தது.
இருவரும் பேசிக்கொண்டே ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
பவித்ரன் ஏதோ சுதாரிப்பு வந்தவனாக டக்கென்று திரும்பி பார்க்க…
“ஏண்டா பவி… என்ன ஆச்சு” என்றாள்.
“நம்மள யாரும் கவனிக்கிற மாதிரி தோணுச்சு…. அதான்…” என்றான்.
பின் இருவரும் அதிகமாக பேசவில்லை. சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள்… அவர் அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
அடுத்த நாள் காலை… பவித்ரன் காலை 9:30க்கு ஹாஸ்பிடல் வர… ஹாஸ்பிடல் கேட் பூட்டியே இருந்தது… பேஷண்ட்ஸ் சிலர் காத்திருந்தனர்.
சாவி தன்னிடம் ஒன்று, அட்டெண்டர் இடம் ஒன்று இருப்பது அவனுக்கு தெரியும்.
“ஏன் அவன் இன்னும் வரல” என்று யோசனையுடன் கதவை திறந்தான்.
உள்ளே போய் உட்கார்ந்தவன்… தனது அட்டெண்டருக்கு போன் செய்தான்…
போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.
“என்னாச்சுன்னு தெரியலையே” என்று யோசித்துக் கொண்டே பேஷன்ட்ஸ் ஒவ்வொரு ஆளாக உள்ளே வரச்சொல்லி பார்த்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில்… அட்டெண்டரின் அம்மா அறக்கபறக்க ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தார்.
“ஏம்மா என்ன ஆச்சு…”
“சார்… காலைல ஹாஸ்பிடலுக்கு வேலைக்கு வரேன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துகிட்டு இருந்தான். அப்ப அவன யாரோ நாலு பேரு அடிச்சு வண்டில தூக்கிட்டு போயிட்டாங்க சார்… யாருன்னு தெரியல… எப்படியாச்சும் என் பையன காப்பாத்துங்க சார்…”
பவித்திரனுக்கு புரிந்து விட்டது.
சுரேந்திரனுக்கு நான் இந்த விஷயத்துல இன்வால்வ் ஆகி இருக்கிறது தெரிஞ்சிருச்சு. அத பத்தி தெரிஞ்சுக்க தான் இவன தூக்கிட்டு போயிருப்பான்.
“அவனுக்கு ஏதாவது ஆகுறதுக்குள்ள அவனை காப்பாத்தணும்…” என்று அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.
அட்டெண்டர் பையன் ஒரு சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்தான்.
பக்கத்தில் சுரேந்தரும், உதயாவும் உட்கார்ந்திருந்தனர்.
“சொல்லுடா உங்க டாக்டர் என்ன வேலை பண்ணிட்டு இருக்கான்…
இவன் எதுக்கு சிஐடி வேலை பார்த்துட்டு இருக்கான்…”
ஒருவன் அவனை முரட்டுத்தனமாக அடிக்க…
“அண்ணா… நான் வெறும் அட்டெண்டர்னா அங்க” என்றான் அவன் கதறிக்கொண்டே.
“வரவங்களுக்கு பெயர் மட்டும் எழுதி உள்ள அனுப்புறது மட்டும் தான் என்னோட வேலை… அப்புறம் எனக்கு வேற ஒன்னும் தெரியாதுன்னா… என்ன நம்புங்க” என்று கெஞ்சினான் அவன்.
“நீதான் பெயர் எழுதி அனுப்புவியா… சரி பேஷண்ட் தவிர வேற யாராவது உங்க டாக்டர் பார்க்க வருவாங்களா?” என்றான்.
ஒரு நிமிடம் யோசித்தவன்… “ஆமாண்ணா… குமார்ன்னு ஒரு போலீஸ்காரர் வந்து பார்ப்பார்…” என்றான்.
உதயாவுக்கு எல்லாமே புரிந்து விட்டது.
“சூப்பர் டா… அப்புறம் வேற யார் வருவா அங்க”.
“வேற யாரும் பர்சனலா பார்க்க வரமாட்டாங்கண்ணா”
“சரி… நீ டெய்லியும் வர்ற பேஷண்டோட பேர எப்படி என்டர் பண்ணுவ… கம்ப்யூட்டர் வேலைக்கு தனியா ஆள் இருக்கா அங்க”
“அண்ணா இப்ப கொஞ்ச நாள் தான் கூட்டமே வருது அங்க… அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆளுக்கே வேலை இருக்காதுண்ணா… நானே சும்மாதான் உட்கார்ந்துட்டு வருவேன்… டாக்டரும் சும்மாதான் உட்கார்ந்துட்டு போவார். பேசன்ட்டும் யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் தான் வருவாங்க…” என்றான்.
“சும்மா உக்காந்து இருந்ததுனால தான் உங்க டாக்டருக்கு சிஐடி வேல பாக்கணும்னு தோணுச்சா… இருக்கட்டும்… மொத்தமா சும்மா உட்கார வச்சிரலாமா உங்க டாக்டர?” என்று குதர்க்கமாக சிரித்தான் உதயா.
“அதெல்லாம் சரிடா தம்பி… திடீர்னு எப்படி உங்க டாக்டருக்கு கூட்டம் பிக்கப் ஆச்சு…”
“எங்க டாக்டர் எப்பவுமே நல்லா தான் ட்ரீட்மெண்ட் கொடுப்பாரு… அவரோட கெட்ட நேரம்… திருட்டுத்தனம் பன்ற, மொள்ளமாரி பசங்ககிட்ட தான்… கூட்டம் அதிகமா போகுது. இந்த அறிவுகெட்ட ஜனங்களை சொல்லணும்… எவன் அதிகமா பணம் புடுங்குறானோ… அவன் தான் நல்லா பாப்பானாம் இவங்களுக்கு…. இந்த முட்டாள் பசங்களுக்கு எல்லாம் நல்லதே நினைக்கக் கூடாது…” என்றான் சற்று ஆதங்கமாக,
“டேய்… இந்த மாதிரியெல்லாம் பேசினா வாய ஒடச்சிடுவேன்…” என்று கோபமானான் சுரேந்திரன்.
“நீ வாய ஒடச்சாலும்… உண்மையதான்ணா நான் சொல்றேன்…” என்றான் அவனும்.
“இப்போ ஒழுங்கா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு…” என்றான் சுரேந்திரன்.
“எங்க டாக்டர்கிட்ட ரெகுலரா கொஞ்சம் பேஷன்ட் வந்து பார்ப்பாங்க… அப்படி வர்ற பேஷண்ட்டுக வெளியில் போய் சொல்றாங்கல்ல… இவர் நல்லா பாக்குறாருன்னு… அப்படித்தான் இவருக்கு கூட்டம் இப்ப அதிகமா வர ஆரம்பிச்சிருக்கு” என்றான்.
சுரேந்திரனுக்கு ஏதோ பொறி தட்ட “சரி பேஷண்டோட டீடெயில்ஸ் எப்படி மெயின்டெயின் பண்ணுவ…”
“சார்… என்ன சார்… நீங்க திரும்பவும் அதையே கேக்குறீங்க… எங்ககிட்ட இப்பதான் கூட்டம் கொஞ்சம் அதிகமா வருது… இதுவரைக்கும் நாங்க எதுவுமே மெயின்டெயின் பண்ணல….”
“அப்புறம் எப்படித்தாண்டா ட்ரீட்மெண்ட் பார்ப்பீங்க…”
“சார்… ஒன்னும் இல்ல… காலைல டாக்டர் வர்றதுக்கு அரை மணி நேரம் முன்னாடி நான் போயி ஹாஸ்பிடல் திறந்து வைப்பேன்… கூட்டுற அம்மா வந்து… சுத்தம் பண்ணிட்டு போவாங்க…”
“அதுக்கப்புறம் பேஷன்ட் யாராவது வந்தா நான் அவங்களோட பேர நோட்டுல எழுதி வைப்பேன் வரிசையா… டாக்டர் வந்தப்புறம் அவங்கள ஒவ்வொருத்தரா உள்ள அனுப்புவேன்… இவ்வளவுதான்… இத போய் இப்படி நோண்டி நோண்டி கேக்குறீங்களே… நீங்க எல்லாம் என்னத்த தான் படிச்சீங்களோ”…
“டேய்… எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இங்கேயே உன்னை கொன்னு உங்ககிட்ட இருக்கிற கிட்னி… சட்டினி எல்லாத்தையும் புடிங்கிட்டு விட்டருவேன் பார்த்துக்க…” என்றான் கடுப்பாக உதயா
“ஆமா… அதெல்லாம் இருந்து மட்டும் இங்க என்னத்த போய் வாழுது…”
“உதயா… அவன்கிட்ட பேசினது போதும் நம்ம அடுத்து என்ன செய்யறது யோசிக்கலாம்…” என்றான் சுரேந்திரன்.
“இப்ப இந்த ஹாஸ்பிடலுக்கு ரெகுலரா வர்றவங்க யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம்னா… நமக்கு ரூட் கிளியர் ஆயிடும்…” என்றான்.
“டேய்… அந்த நோட்ட உங்க ஹாஸ்பிடல் எங்கடா வெச்சி இருக்கீங்க…” என்றான் உதயா
“சார்… பெயர் எழுதி வைக்கிற நோட்டை கொண்டு போய் லாக்கர்லயா வெப்பேன்… அங்க முன்னாடி ஒரு டேபிள் இருக்கும் அது மேல தான் கிடக்கும்” என்றான் சாதாரணமாக.
கூட இருந்த அடியாள் ஒருவனை அழைத்து… “சீக்கிரமா போய் அந்த நோட்டை எப்படியாவது அடிச்சுட்டு வா…”
சரி என்று ஒருவன் கிளம்பினான்.
“டேய்… இவன பத்திரமா பாத்துக்கங்க… அசால்டா விட்டுறாதீங்க…” என்று அங்கிருந்த ரவுடிகளிடம் சொல்லிவிட்டு சுரேந்திரனும் உதயாவும் கிளம்பினர்.
அங்கே போலீஸ் ஸ்டேஷனில்… எஸ் ஐ குமார், இன்ஸ்பெக்டர் இவங்க ரெண்டு பேரும் விகாஷினி கொண்டு வந்த லேப்டாப்பை வச்சுக்கிட்டு இன்டெல் மணிக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தனர்.
