தப்பு 16
மறுநாளில் இருந்து யுகேந்திரனுக்கும், பூவிழிக்கும் அந்த ஆஸ்ரமத்தில் சிகிச்சைகள் துவங்கி இருந்தது,
“மாமா உங்களுக்கு தானே உடம்பு குணமகனும், எனக்கு எதுக்கு?” என்றவளை முறைத்தவன் “நீ எங்க வீட்டுக்கு வந்த நாளில் இருந்து நான் உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன். ஒரு நாள் கூட ஓய்வு இல்லாம நீ வேலை பார்த்துட்டு இருந்த . நமக்கு கல்யாணம் ஆன அப்பறோம் இன்னும் வேலை அதிகம் ஆகிருச்சு ” என்றவன்.
“நீ கர்ப்பமா இருக்கேனு தெரிஞ்சும் என் அத்தை உன்னை எவ்ளோ வேலை வாங்கிருப்பாங்க . இவ்ளோ நாள் வேலை பார்த்த இந்த உடம்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும் அதான் இங்க அழைச்சிட்டு வந்து என்னோட சேர்த்து உனக்கும் டிரீட்மென்ட் ஆரம்பிச்சிருக்கேன். நீ சமத்தா சொல்றதை செய்துட்டு பேசாம இரு. உன்னோட உடம்புக்கு இது இந்த நேரத்துல கண்டிப்பா தேவை ” என்று பூவிழியின் வயிற்றை பார்வையால் சுட்டிக் காட்டிக் கூறினான்.
யுகேந்திரனின் இந்த அக்கரையில் பூவிழி நெகிழ்ந்து போனாள். அவள் அம்மாவிற்குப் பிறகு அவளிடம் இவ்வளவு அக்கறை கட்டுவது யுகேந்திரன் மட்டும் தான். அவனை நெகிழ்ச்சியாகப் பார்த்தாள்.
“என்ன ?” என்று யுகேந்திரன் அவளை புருவம் உயர்த்தி கேட்டான்.
சிரித்த முகத்துடன் பூவிழி அருகே வந்த ராகிதா “வாங்க, உள்ளே போலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற மைல்டான ரிலாக்சேஷன் தெரபி தான்…” என்று பூவிழியை அழைக்க, பூவிழிக்கு லேசாகப் பயம் வந்துவிட்டது. உடனே யுகேந்திரனின் கையைப் பிடித்து இறுக்கிக் கொண்டாள்.
“பயப்படாம போயிட்டு வா பூவிழி, உன்னை ஒன்னும் பண்ண மாட்டாங்க…” என்று அவன் அவளைத் தைரியப்படுத்தி அனுப்பி வைக்க, ராகிதாவோடு தயங்கியபடியே உள்ளே சென்றாள்.
“ம்ம்.. சரி மாமா ” என்று சம்மதமாக தலை ஆட்டினாள்.
உள்ளே சென்றதும் பூவிழிக்கு அடிவயிற்றில் பயம் கலந்த லேசான நடுக்கம் ஒட்டிக்கொண்டது. அங்கே ஒரு பெரிய மரப் பலகையும், சுற்றிலும் விதவிதமான மணக்கும் எண்ணெய் பாட்டில்களும் மூலிகைகளும் இருக்க, அதைப் பார்த்ததும் அவளுக்குக் கண் கலங்கிவிட்டது.
“இது எல்லாம் என்ன? என்னை என்ன பண்ணப் போறீங்க?” என்று அவள் அப்பாவியாகக் கேட்க, ராகிதா கலகலவென்று சிரித்தாள்.
“அச்சோ மேடம் பயப்பட வேண்டாம்! இது கர்ப்பிணிப் பிள்ளைங்களுக்கு உடம்பு நரம்புகள் ரிலாக்ஸ் ஆக பச்சிலை எண்ணெயை வச்சு செய்யுற மென்மையான மசாஜ். படுத்துக்கோங்க, கொஞ்ச நேரத்துல நீங்களே ரிலாக்ஸ் ஆகுறதை உணர்விங்க!” என்றாள் ராகிதா.
அடுத்ததாக ராகிதா செய்த வேலையைப் பார்த்து பூவிழி தலைசுற்றிப் போய்விட்டாள். “மேடம், உங்க டிரஸ்ஸை மாத்திட்டு இந்த கவுனைப் போடுங்க…” என்று ஒரு மெல்லிய ஆடையை நீட்டினாள்.
அதைப் வாங்கிய பூவிழி அதிர்ந்து போய், “ஐயோ! இது என்ன ரொம்ப லூசா… இல்ல இல்ல ரொம்ப மெல்லிசா இருக்கிற மாதிரி இருக்கே! என்னால இதைப் போட்டுக்க முடியாது , வேற ஏதாவது துணி இருக்கா? இல்லேன்னா நான் இதையே போட்டுக்கிறேன்” என்று அந்த மெல்லிய ஆடையை போட்டுக்கொள்ள வெட்கப்பட்டு முகம் சிவக்கக் கேட்டாள்.
“அச்சோ மேடம், இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல. எண்ணெயெல்லாம் உடம்புல ஊறுறதுக்கு இப்படித்தான் இருக்கணும். சீக்கிரம் மாத்திட்டு வாங்க!” என்று ராகிதா சிரிக்க, வேறு வழியின்றி கவுனை மாற்றிக் கொண்டாள் பூவிழி.
அந்த மெல்லிய உடையில் மேடிட்ட வயிற்றோடு தயங்கி தயங்கி மார்புவரை கட்டி இருந்த துணியோடு தயக்கத்துடன் வந்தாள்,
அவள் தயங்குவதைப் பார்த்த ராகிதா “மேடம், இங்க நாங்க மட்டும் தான் இருக்கோம் ” என்று தன்னுடன் இருந்த மற்றொரு பெண்ணையும் காட்டிக் கூறியவள் அங்கே இருந்த ஒரு மரப் பலகையைக் காட்டி “இதுல அப்படியே படுத்துகோங்க மேடம்” என்றாள்.
ஒரு சிறு தயக்கத்துடன் வந்தவள் அவர்கள் கட்டிய மரத்தினால் செய்யப்பட்ட பெஞ்சில் படுத்துக்கொண்டாள் . இரு பெண்கள் பூவிலியின் அருகே வந்து மூலிகை எண்ணெய் எடுத்து அவள் தலையிலும் , கை , கால்களிலும் மென்மையாகத் தடவத் துவங்கினர். அவள் உடலில் மற்ற பாகங்களில் தடவ பூவிழி என்ன சொல்லியும் விடவே இல்லை. அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாமல் எண்ணெய் தேய்த்துவிடத் துவங்கி இருந்தனர்.
குளிர்காற்றுடன் அந்த வெதுவெதுப்பான எண்ணெய் சேரவும் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. அது முடிந்ததும் அவள் உடலில் பூசிய எண்ணெயோடு படுத்திருக்க.. அவளை அழைத்த ராகிதா “மேடெம் இந்த சேரில் வந்து உக்காருங்க ” என்றாள் .
உடல் முழுவதும் எண்ணெய் இருக்க பூவிழி வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ள.. இரு பெண்கள் அழுக்கு ஒரு பக்கம் அவள் கையைப் பற்றி அருகே இருந்த சாய்வு நாற்காலியில் மெல்ல அமர வைத்தனர். பின் ராகிதாவும் மற்றொரு மருத்துவரும் சேர்ந்து பூவிழியிடம் வந்து மூச்சுப் பயிற்சி செய்யச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர்.
“இப்போ மேடம்… மூச்சை நல்லா உள்ளே இழுத்துட்டு, அப்படியே மெல்ல வெளிய விடுங்க!” என்றார் டாக்டர்.
அவர் சொன்னதை அப்படியே கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, விசித்திரமான சத்தத்துடன் மூச்சை உள்ளே இழுத்துவிட்ட பூவிழியின் முகபாவனையைப் பார்த்த ராகிதாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை பூவிலியிடம் காட்டிக்கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.
மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும். பூவிழியோ வேக வேகமாக மூச்சை உள்ளும் , வெளியேயும் இழுத்துவிட.. அது பார்க்க சற்று சிரிப்பாகத் தான் இருந்தது. அந்த மூச்சு பயிற்சி முடிந்ததும்
அடுத்ததாக, முகத்தில் களைப்பு நீங்க ஒரு குளிர்ந்த மூலிகைப் பற்று போட ஆரம்பித்தனர், அந்த மூலிகை பச்சை நிறத்தில் இருக்க.. அதை போட்டுவிட்டவர்கள்.. மேடம் இந்த பேக் காய்ஞ்சதும் அவ்ளோ தான் முடிஞ்சுது. உங்களை குளிப்பாட்டி முடிச்சா போதும். நீங்க உங்க ரூமுக்கு போகலாம் ” என்றவர்கள் “நீங்க அப்படியே கண்ணை மூடிப் படுத்துகோங்க. நாங்க வெளியே வெய்ட் பண்றோம் ஒரு பிப்ட்டின் மினிட்ஸ் கழிச்சு வந்து கிளீன் பண்றோம் ” என்று அங்கே இருந்து வெளியே சென்றனர்.,
siரித்து நேரம் அபப்டியே படுத்திருந்த பூவிழி மெல்ல கண் விழித்து சுற்றிலும் பார்த்தாள் . அவளுக்கு சற்று தள்ளி சுவற்றில் மாட்டி இருந்த கண்ணாடியில் தன் உருவம் தெரிய.. அதில் தெரிந்த தன் உருவத்தைக் கண்டதும் பூவிழி அலறிவிட்டாள்!
“அம்மாடியோவ்! என்னோட முகம் இப்படி பேய் மாதிரி ஆயிடுச்சு? என்னை எங்க மாமா பார்த்தா பயந்து ஓடிப் போயிருவாரே! எனக்கு இந்த ட்ரீட்மென்ட்டே வேணாம், என்னை வெளியே விடுங்க!” என்று கத்த ஆரம்பித்தாள்.
வெளியே நின்றுகொண்டிருந்த டாக்டரும் நர்ஸ்களும் அவளது அலறலைக் கேட்டுச் சிரிக்கத் தொடங்கினர்.
“ஐயோ மேடம்! இது முகம் பொலிவாக இருக்கிற நேச்சுரல் பேஷியல் மாஸ்க் தான். பயப்படாம இருங்க, பேபியும் நீங்களும் ரொம்ப சேஃப்!” என்று ராகிதா சொல்லச் சொல்ல,
“இல்லங்க… என்னால முடியாது… எங்க மாமாகிட்ட சொல்லிடுங்க, நான் போறேன்!” என்று பூவிழி அங்கிருந்து தப்பிக்க முயன்றாள்.
அப்போது எதிர்பாராதவிதமாக, தனது சிகிச்சையை முடித்துவிட்டு பூவிழி இருக்கும் அறைப் பக்கம் வழிகேட்டு வந்தான் யுகேந்திரன். கதவு லேசாகத் திறந்திருக்க, உள்ளே இருந்து பச்சை முகத்துடன், வித்தியாசமான கவுனில், தலையில் எண்ணெயுடன் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் பூவிழியை அவன் பார்த்துவிட்டான்!
யுகேந்திரனை அங்கே பார்த்ததும் பூவிழிக்குத் தலைகால் புரியவில்லை. “ஐயோ மாமா!” என்று கத்தியவள், தன்னை யாராவது பார்த்துவிடுவார்களோ என்று வெட்கத்தில் , அருகே இருந்த பெரிய போர்வையால் தன் முகத்தையும் உடலையும் மளமளவென்று மூடிக்கொண்டு ஒரு ஓரமாகப் போய் ஒண்டிக் கொண்டாள்.
அவளது இந்த அப்பாவியான வெட்கத்தையும், அவள் கோலத்தையும் பார்த்த யுகேந்திரனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாய்விட்டுச் சிரித்தவன், “ஹேய்… என்ன பூவிழி இது, பச்சை கிளி மாதிரி மாறிட்ட?” என்று அவன் பங்கிற்கு அவளைக் கிண்டல் செய்ய, பூவிழி வெட்கத்தால் காது வரை சிவந்துபோய் தரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள்!
“சார், இவங்களுக்கு இந்த மாதிரி டிரீட்மென்ட் எல்லாம் புதுசு போல.. அதான் கொஞ்சம் கூச்சப்படுறாங்க” என்றாள் ராகிதா.
“இட்ஸ் ஓகே வழுக்கு இது எல்லாம் புதுசு தான் ” என்றவன் “சரி எப்போ முடியும்” என்றான்.
“ஒரு ஹாட் பாத் மட்டும் எடுத்தா போதும் சார் முடிஞ்சுது. அதுக்காக தான் இவங்க வெய்ட் பண்ராங்க ” என்று இரு பெண்களைக் காட்டினாள்.
அவர்களைப் பார்த்தவன் “ஓகே நீங்க முடிச்சிட்டு சொல்லுங்க, நான் இங்கையே வெய்ட் பண்றேன் ” என்று வீல் சேரை இயக்கி அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் வெளியே வந்தவர்கள் “சார் அவங்க ரொம்ப பிரச்சனை பண்ராங்க . குளிக்க மாட்டேன்னு அடம் பண்ராங்க ” என்று அவன் முன் வந்து நின்றாள் ராகிதா.
“ஏன் என்ன ஆச்சு?” என்றான் யுகேந்திரன் புரியாமல்.
“எங்க முன்னாடி டிரஸ் ரிமூவ் பண்ண ரொம்ப கூச்சப்படுறாங்க ” என்று தலையைக் கவிழித்துக்கொண்டே கூறினாள் ராகிதா.
“அவ என் முன்னாடி டிரஸ் இல்லாம நிக்குறதுக்கே அவ்ளோ கூச்சப்படுவா. இதுல உங்க முன்னாடி நின்னுட்டாலும்.. ” என்று நினைத்து முணுமுணுத்தவன் ” நான் பேசுறேன் ” என்றவன் உள்ளே சென்று பூவிழியிடம் சென்றான்,
சேரில் அமர்ந்து இருந்தவள் அவன் வருவதைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து நின்றவள் தன் முகத்தை மறைக்க மீண்டும் போர்வையைத் தேடினாள்.
“இப்போ எதுக்கு முகத்தை மறைக்க இவ்ளோ கஷ்டப்படுற.. நான் தான் பாத்துட்டேன் இல்ல.. ” என்றவன் ” ஏன் டி குளிக்க மாட்டேன்னு சொல்றியாமே ” என்றான்.
“ம்ஹும்.. இல்ல மாமா நான் குளிக்குறேன்னு தான் சொல்றேன். ஆனா அவங்க தான் என்னை குளிப்பாட்டி விட்றேன்னு வந்து சொல்ராங்க, நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன் நான் குளிச்சுக்கறேன்னு..” என்று அவனிடம் கெஞ்சலாகக் கூறினாள்.
“சாதாரணமா இருந்தா நீயே குளிக்கிறதுனா ஓகேன்னு சொல்லலாம். ஆனா அவங்க உனக்கு ஆயில் எல்லாம் வெச்சு விட்டு பேக் எல்லாம் போட்டிருக்காங்க இல்ல.. அவங்க உனக்காக ஹாட் பாத் வெச்சிருக்காங்க, ஆயில் பூசி இருக்க இல்ல உனக்கு சளிபிடிக்காம எந்த தொந்தரவும் பண்ணாம இருக்கணும்னா இந்த மூலிகை குளியல் ரொம்ப அவசியம் ” என்றான்.
“இல்ல இந்த மூலிகை தண்ணி தானே.. நானே நல்லா தேய்ச்சுக் குளிச்சுகிறேன் மாமா அவங்க வேணாம். ஏற்கனவே இந்த துணியைக் கொடுத்து போட சொன்னதுக்கு நான் அமைதியா தானே இருந்தேன். இது மட்டும் வேணாமே “என்று அங்கே இருந்த ஒரு இடத்தில வைக்கப்பட்டு இருந்த சூடான தண்ணீரைக் காட்டிக்கொண்டே யுகேந்திரனிடம் கெஞ்சினாள்.
“இவளை இப்படி எல்லாம் பேசி நம்ம வழிக்குக் கொண்டு வர முடியாது. என்னோட வழி தான் சரி ” என்று நினைத்தவன் “இங்க பாரு பூவிழி, இப்போ அவங்களை உனக்கு குளிப்பாட்ட நீ விடலையின்னா நானே வந்து உனக்கு குளிச்சு விடுவேன் பரவால்லையா ?” என்றான்.
இப்படி சொன்னால் தான் வேண்டாம் என்று அவர்களை தனக்கு குளிக்க அனுமதிப்பாள் என்று நினைத்து தான் சொன்னான்.
அவனை அதிர்ந்து பார்த்தவள் “மாமா என்ன நீங்க… ” என்று அவள் சினுங்க..
“அவங்களும் உன்னை மாதிரி பொண்ணுங்க தானே டி.. இது ஒரு ட்ரீட்மெண்ட் தானே. ” என்றான்.
“ம்ஹும்.. முடியாது ” என்று தலையை கவிழ்த்துக்கொண்டு அவள் சினுங்க..
“கடைசியா கேக்குறேன் . அவங்களை குளிப்பாட்ட விடப்போறியா? இல்லையா?” என்றான்.
“ம்ஹும்..” என்று சிறு பிள்ளை போல தலையை ஆட்டினாள் அவள்.
“அப்போ சரி, வா நான் வந்து உனக்கு குளிப்பாட்டி விடுறேன் ” என்று அவள் அருகே சென்று கையைப் பற்றிக்கொள்ள..
“சரி வாங்க ” என்று அவன் வீல் சேரை குளிக்க தண்ணீர் வைத்து இருந்த இடத்திற்கு அவளே அழைத்து செல்ல..
இந்த முறை அதிர்ச்சியானது என்னவோ யுகேந்திரன் முறை ஆகிப் போனது.
அவளை திரும்பி அதிர்ச்சியாகப் பார்க்க.. “அவங்க வேணாம் , நீங்களே குளிப்பாட்டி விடுங்க.. ” என்று வெட்கத்தோடு சொன்னாள்.
அவள் செயலை நம்பமுடியாமல் பார்த்தவன் இதழ்களில் ஒரு கர்வப் புன்னகை அவனையும் அறியாமல் தோன்றியது.
உள்ளிருந்த படியே “ராகிதா , நீங்க எல்லாரும் கிளம்புங்க ” என்றான் யுகேந்திரன்.
இதுவரை உள்ளே பேசிக்கொண்டதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே யுகேந்திரன் குரல் வந்ததும் அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல்”ஓகே சார் ” என்று அங்கிருந்து கிளம்பி சென்றிருக்க.. ..
அவன் பின்னே நின்றவள் கையைப் பற்றி முன்னே இழுத்தவன் “அமுக்காஞ்சி.. நான் குளிக்க கூப்பிட்டாளே அப்படி சிணுங்குவ.. இன்னிக்கு என்ன நீயே என்னை குளிப்பாட்ட சொல்லிட்ட.. ” என்றான்.
“நீங்களும்.. அவங்களும் ஒண்ணா… ” என்றவள் கையைப் பற்றி மெல்ல முன்னே இழுத்தவன் அவள் இடையைப் பற்றி தன் மடியில் அமர்த்திக்கொள்ள..
“ஐயோ! மாமா! என் உடம்பு பூரா எண்ணையா இருக்கு . நீங்க இப்போதான் குளிச்சுட்டு வந்திருக்கீங்க.. ” என்று பூவிழி பதற..
“சும்மா உக்காரு டி.. அதான் ரெண்டு பேரும் குளிக்கப் போறோமே.. ” என்றவன் அவள் கட்டி இருந்த துணியின் ஒற்றை நாடாவை அவிழ்க்க..
அவள் மார்பு வரை மறைத்து இருந்த அவள் ஆடை கீழ் இறங்கிவிட… அதை அவசரமாக பிடிக்கப் போனவள் முகத்தைப் பற்றி தன் பக்கம் திரும்பியவன். “ட்ரெஸ்ஸோடவே குளிக்கப்போறியா?” என்று அவள் விழிகளைப் பார்த்து கேட்டான்.
அவளோ வெட்கத்தோடு இல்லை என்று தலையை ஆட்ட..
அவங்களை கை , காலைத் தவிற எங்கையும் எண்ணை தேய்க்க விடலையின்னு சொன்னாங்க. அதனால அவங்க விட்ட இடத்துல எல்லாம் நான் உனக்கு ஆயில் மசாஜ் பண்ணி விட்டுட்டு தான் குளிப்பாட்டி விடப் போறேன் ” என்றான்.
அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க..
“உனக்கு வேணம்னா சொல்லிடு . நான் போயிட்டு அவங்களை வர சொல்றேன்” என்றான் வேண்டுமென்றே.
“ஹா! ஹய்யோ! வேணாம் மாமா.. ” என்று அவசரமாகத் தடுத்தவள் “நீங்களே… ” என்று தலையை கவிழ்த்துக் கொள்ள..
அவளை சிரித்தபடி பார்த்தவன் மார்போடு அணைத்துப் பிடித்திருந்த அவள் கைகளைப் பிரித்து விட்டவன் அருகே இருந்த கிண்ணத்தில் இருந்த எண்ணெயை எடுத்து மேலே ஊற்றியவன் அவள் கிண்ணங்களில் இருந்து மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.
அவளோ கூச்சத்தில் நெளிய.. அதை ரசித்தபடி ஆயில் மசாஜ் அவள் உடல் முழுதும் செய்து , தன் லீலைகளைத் துவங்கி தன் தேவையை முடித்த பின் அவளோடு சேர்ந்து தானும் மூலிகைக் குளியலை எடுத்துவிட்டு ஒருவித புத்துணர்வோடு அந்த அறையை விட்டு யுகேந்திரன் வெளியே வர.. அவன் பின்னே மேனி முழுதும் அவன் ஜலத்தில் சிவந்திருக்க.. அதை மறைக்க முடியாமல் இன்னமும் அவன் செய்த லீலைகளின் உணர்வுகளில் இருந்து மீளாமல் அவன் பின்னே சென்றாள்.
“
கதை படிச்சீங்களா ஸ்டோரி எப்படிப் போகுது உங்க கருத்துக்களை சொன்னா தானே நான் கதை போக்கு எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்குவேன். மறுபடியும் எழுத உத்வேகமாக இருக்கும்

1 comment
Super mam