News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

நைட் உன் ரூமுக்கு நான் வருவேன் மூர்க்கன் 21

by Sinamika Writes
1.6K views
A+A-
Reset

மூர்க்கன் 21

காமாட்சியுடன் சேர்ந்து இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள் இளங்கிளி.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஏன் டி ! கனி! அவங்க எல்லாரும் உனக்குத் தெரிஞ்சவங்களா ? நானும் வந்ததுல இருந்து பாத்துட்டே தான் இருக்கேன். ஆளாளுக்கு வந்து உன்கிட்டே பேசுறது என்ன.. உன்னை அப்படியே தாங்குறது போல இல்ல நடந்துக்கறாங்க ” என்றாள்.

“ஐயோ! அக்கா அப்படி எல்லாம் எதுவும் இல்ல. அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. கயல் இருக்க இல்ல அவங்க தான் சொன்னாங்க என்னைப் போலவே அவங்க அக்கா இருப்பாங்களாம். அவங்களை மாதிரியே நான் இருக்கறதுனால தான் எல்லாரும் என்கிட்டே வந்து பேசுறாங்கனு சொன்னா” என்றாள் இளங்கிளி.

“அப்படியா டி!.. ஆச்சார்யமாதான் இருக்கு , ஒன்னு போலவே ஆளுங்க இருப்பாங்கன்னு சொல்றது எல்லாம் நிசம் தான் போல.. ” என்றவர் “ஆனா ஒன்னு டி.. இவங்க வந்த அப்பறோம் நம்ம ஆதி, அல்லி ரெண்டு பேரும் உன்னையும் , என்னையும் தொந்தரவு செய்றது இல்ல.. ஆளாளுக்கு அவங்க வீட்டுப் பிள்ளைங்க போல உன் பசங்கள தூக்கி வெச்சு கொஞ்சுறாங்க ” என்றாள்.

அதை கேட்டு மென்மையாகப் புன்னகைத்தவள் “அக்கா! சமைச்சதெல்லாம் எடுத்து டைனிங் டேபிள்ல வெச்சுடலாமா? எல்லாரும் சாப்பிடற நேரம் ஆச்சு ” என்றாள்.

“சரி டி, நீ இந்த குழம்பை வேற பாத்திரத்துக்கு மாத்தி வை . நான் இதை எல்லாம் வெச்சுட்டு வரேன் ” என்று டைனிங் டேபிளில் உணவுகளை எடுத்து வைக்க ஆரம்பிக்க.. குழம்பை ஊற்றி எடுத்து வந்து வைத்த இளங்கிளி. அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவள் “அக்கா நான் போய் எல்லாரையும் சாப்பிட கூப்பிடறேன் ” என்று அங்கிருந்து செல்லப் போனாள்.

அப்போது அவள் செல்லும் வழியை மறைத்துக்கொண்டு வந்து நின்றான் ராவண்.

அவன் நிற்பதை கவனிக்காமல் சென்ற இளங்கிளி வேகமாக ராவண் மீது மோதி கீழே விழப்போனாள். அவளை சட்டென சுதாரித்து கீழே விழாமல் பிடித்து இறுக்கி அணைத்தபடி பிடித்த ராவண் “எதிர்ல வரதுத் தெரியாம இபப்டியா வந்து மேல மோதுவ..” என்று அவளிடம் வம்பு செய்தான்.

அவன் மார்பில் கையை வைத்து தள்ளி அவனிடம் இருந்து பிரிந்தவள் “நான் தான் பாக்கல , உங்களுக்கு கண்ணு இருக்குல்ல சார் . இபப்டி தான் வந்து இடிக்கட்டும்னு நிப்பீங்களா”எந்த பதிலுக்கு அவளும் விடாமல் பேசினாள்.

“நான் ஏன் ஒதுங்கி நிக்கணும், இந்த மாதிரி வாய்ப்பு வந்தா அதை அனுபவிக்கனும், விலகிப் போனா இப்படி உன்னை உரசிட்டு நிக்குறது போல வாய்ப்பு கிடைக்குமா ” என்று அவள் இடையில் பதித்திருந்த தன் கையை தன் நெஞ்சோடு வைத்து அழுத்தியபடி சொன்னான்.

“உங்க பொண்டாட்டியை மேல வெச்சுட்டு என்கிட்டே இப்படி நடந்துக்க உங்களுக்கு வெக்கமா இல்ல.. ” என்று எரிந்து விழுந்தாள்.

“அவ மேலையே இருக்கட்டும், நீ கீழ தானே இருக்க.. ” என்று குதர்க்கமாக பேச..

அவனை புரியாமல் இளங்கிளி பார்க்க..

“நீ கீழ இருக்குறது தானே எனக்கு வசதி . அப்போ தானே வந்து உன்னை தனியா சந்திச்சு பேச முடியும் ” என்று அவளை விழுங்குவது போல பார்த்தான்.

“சார் இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றவள் “வழியை விடுங்க நான் போய் எல்லாரையும் சாப்பிட கூப்பிடனும்” என்றாள்.

“நானும் அதுக்கு தான் வந்தேன் ” என்றவன் “என் ரூமுக்கு வரியா?” என்றான்.

அவனை வெடுக்கென இளங்கிளி நிமிர்ந்து பார்க்க.. .

“எனக்கும் , என்னோட வைப்புக்கும் சாப்பாடு எடுத்துட்டு மேல வரியான்னு கேட்டேன்” என்றான் நக்கலாக .

“உங்களுக்கு ஒழுங்காவே பேச வராதா?” என்றவள் “சாப்பாடு தானே கொடுத்து விடறேன் . நீங்க போங்க ” என்றாள்.

“ஒழுங்கா நல்ல பிள்ளையா நான் பேசிட்டு தானே இருக்கேன். உன்னை நான் எதுவுமே பண்ணலையே ” என்றவன். “என் ரூமுக்கு நீ தான் வரணும்.. நீ மட்டும் தான் வரணும் ” என்று அவளை நெருங்கினான்.

ராவண் நெருங்கி வரவும் வேகமாக அவனை விட்டு பின்னால் சென்றவள் “சார் யார் வந்தா என்ன உங்களுக்கு சாப்பிடு வரும் ” என்று அவனை விட்டு வேகமாக தாண்டி செல்லப் போக..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவள் கையைப் பற்றியவன் “நீ என் ரூமுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரலையின்னா. நைட் உன் ரூமுக்கு நான் வருவேன் ” என்றான்.

அவன் கையில் இருந்து தன் கையை வெடுக்கென இழுத்துக் கொண்டவள் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட..

சாப்பிட தட்டை எடுத்து வைக்க அங்கே வந்த காமாட்சி ராவண் நிற்பதை பார்த்தவள் அவன் இளங்கிளியிடம் பேசுவதை பார்த்து அவன் நடந்து கொள்வது சரி இல்லை என்று காமாட்சிக்குப் பட்டது. அவனை முறைத்துக்கொண்டே காமாட்சி தட்டுகளை எடுத்து வைக்க..

டைனிங் டேபிளுக்கு வந்தவன் மூடி வைத்து இருந்த உணவுகளை எல்லாம் திறந்து பார்த்தான். “என்ன இவ்ளோ ஐட்டம்ஸ் செஞ்சிருக்கீங்க.. நீங்க பண்ணினதா?” என்று அங்கே இருந்த ஸ்வீட் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே கேட்டான்.

“நானும் , கனியும் சேர்த்து செஞ்சோம் ” என்ற காமாட்சி. “ஆளுங்க நிறைய இருக்காங்க இல்ல அப்பறோம் இவ்ளோ இருந்தா தானே எல்லாருக்கும் சாப்பிட சரியா இருக்கும் ” என்றார்.

“பரவால்லையே நல்லா தான் இருக்கு ” என்றவன் “உங்க பேரு என்ன? ” என்றான்.

“kகாமாட்சி..” என்று இழுவையாக அவர் சொல்ல..

“ஓஹோ!” என்றவன் “சாப்பாடு வாசமே அருமையா இருக்கு.. இதை செஞ்சவங்க கைக்கு ஒரு தங்க வளையல் போடலாமே.. ” என்றபடி மற்ற உணவுகளை திறந்து பார்த்தபடி பேசினான்.

“அதெப்படி ஒரு தங்க வளையல் பத்தும். நானும், கனியும் கஷ்டப்பட்டு செஞ்சிருக்கோம். நீங்க வாங்குறதுன்னா நாலு தங்க வளையல் வாங்கிப் போடுங்க , எனக்கு ரெண்டு , அவளுக்கு ரெண்டு ” என்று அவன் பின்னே வந்த இளங்கிளியை கண்களால் காட்டி சொன்னார் காமாட்சி.

அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தவன் “அதுக்கென்ன நாலு வளையல் என்ன கை முழுசும் தங்க வளையல் போட்டுடலாம் ” என்று இளங்கிளியின் கையைப் பற்றி அப்டியே தடவிக்கொண்டே அவன் கை மேலேற..

அவன் கைய வெடுக்கென உதறியவள் அங்கிருந்து கிச்சனுக்குள் சென்றுவிட்டாள்.

“தம்பி என்ன வந்ததுல இருந்து எங்க கனி மேல ஒரு கண்ணனாவே இருக்கீங்க. இது நல்லதுக்கு இல்ல.. அந்த புள்ள பாவம் அது பேரை கெடுத்துவிட்ராதிங்க” என்று அக்கறையாக சொன்னார்.

“சேச்சே.. நான் அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன் நீங்க கவலையே படாதீங்க…” என்றவன் குனிந்து காமாட்சியின் காதருகே வந்தவன் “அவ பேரைக் கெடுக்க மாட்டேன் .. அவளையே… ” என்று முடித்துவிட்டு அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என் ரூமுக்கு சாப்பாடு கொண்டு வர சொல்லுங்க.. அதுவும் உங்க கனியை ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட..

அவன் பேசியதை கேட்டு அதிர்ந்த காமாட்சி வாயில் கையை வைத்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டார்.

அப்போது அங்கு வந்து பரிமளாவும், மீனாட்சியும் காமாட்சி நின்ற தோரணையைப் பார்த்துவிட்டு அவரிடம் வந்தனர்.

“என்ன டி காமாட்சி என்ன வாயில கை வெச்சுட்டு நின்னுட்டு இருக்க ” என்றார் மீனாட்சி.

“ம்ஹும்.. அது ஒண்ணுமில்லம்மா.” என்றவர் பரிமளாவைப் பார்த்து “இன்னிக்கு காலையில் ஒரு தம்பி வந்துச்சே , அது நிஜமாவே உங்க பையனா?” என்றார்.

“ஆமா காமாட்சி, ஏன்?” என்றார் பரிமளா.

“உங்க கூட இருந்த அந்த ரெண்டு தம்பிகளும் சுத்த தங்கம். ஆனா அந்தா மேல இருக்கே உங்க மகன் அவரு சரி இல்ல.. ” என்றார்.

அதை கேட்டதும் பரிமளாவின் முகம் மாறிவிட..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஏய் காமாட்சி என்ன டி பேசிட்டு இருக்க . அது அவங்க பையன் தெரியும் தானே… இப்படியா பேசுவ நீ..”என்று மீனாட்சி அவரை அதட்ட..

“அதனால தான் மா நானும் சொல்றேன். இவங்க எவ்ளோ தங்கமான ஆளு. இவங்க மட்டுமா.. இங்க வந்திருக்க எல்லாருமே இந்த ரெண்டு நாள்ல எப்படி பேசிப் பழகுறாங்க. ஆனா அந்த மேல இருக்க தம்பி என்னன்னா நம்ம கனியை சுத்தி சுத்தி வருது. அவளை அந்த தம்பி பாக்குற பார்வையே சரி இல்ல. அவளை கையைப் பிடிச்சுப் பேசுது.. என்ன என்னவோ சொல்லிட்டுப் போகுது. அந்த புள்ள பாவம் , இவ்ளோ வருஷம் புருஷன் இல்லாம வாழ்ந்தாலும் கௌரவமா வாழ்ந்துட்டு இருக்கா. இவரு பண்றது, பேசுறது சரி இல்ல. கனி வாயை திறந்து எதுவும் சொல்ல மாட்டா.. அவளுக்காக நான் தானே பேசணும். ” என்று இளங்கிளியின் மீது அக்கறையும், உண்மையான அன்பும், உரிமையுமாக காமாட்சி பேச..

அவர் பேசியதை வைத்தே ராவண் இளங்கிளியிடம் எதுவும் சேட்டை செய்திருப்பான் என்று உணர்ந்த பரிமளா. “இவனுக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா.. ” என்று எண்ணியவர் “சரிம்மா நான் என் புள்ளையைக் கண்டிச்சு வெக்குறேன் போதுமா? “என்று சொல்லிவிட்டு “எனக்கு சாப்பாடு போடுவியா? இல்ல என் பையன் மேல இருக்க கோபத்துல பட்டினி போற்றுவியா?” என்று வந்து சாப்பிட அமர்ந்தார்.

“ஐயோ! என்ன இப்படி சொல்லிட்டீங்க. நீங்க எல்லாரும் சாப்பிட தானே இத்தனையும் செஞ்சிருக்கா கனி” என்றவர் “சாப்பாடு பரிமாறத் துவங்க.. ஒவ்வொருவராக வந்து சாப்பிடத் துவங்கினர்.

இளங்கிளியும் வந்து அனைவர்க்கும் சாப்பாடு பரிமாற.. அனைவரும் பேசி சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்தனர்.

அப்போது மாடியில் இருந்து கீழே வந்த ராவண் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க.. அவர்களிடம் வந்து பேசியபடி இளங்கிளியை சைட் அடித்துக்கொண்டே பேசினான்.

அப்போது ஈஸ்வர் குறுக்கே வந்தவன் “என்ன மச்சான் இங்க இருக்கீங்க.. உங்க பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வந்திருக்கீங்க.. ” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

அவனை முறைத்த ராவண் “எனக்கு என்ன பண்ணனும்னு தெறியும் ” என்றவன் “என் ரூமுக்கு சாப்பாடு கொண்டு வர சொன்னேனே.. இன்னும் கொடுக்கலன்னு தான் கேட்க கீழ வந்தேன் . உங்களை எல்லாம் பார்த்ததுல ரக்ஷனாவுக்கு சாப்பாடு கொடுக்க சொல்ல மறந்துட்டேன்” என்றான்.

“இவளை எல்லாம் பார்த்து மறந்துட்டியா? இல்ல… “என்று ராவண் தோளில் கையைப் போட்டு நின்ற ருத்ரசேனா அவன் காதருகே குனிந்து “உங்க பொண்டாட்டியைப் பார்த்ததுல மயங்கிதியா?” என்றான்.

அதில் ராவணுக்கே வெட்கம் வந்துவிட.. அதை மறைக்க தலையை அழுந்தக் கோதியவன் “அதுவும் ஒரு காரணம் தான். அவளை தனியா மீட் பண்ணலாம்னு பாக்குறேன். அதுக்கு இடம் கொடுக்கவே மாட்டேங்குறா அவ.. அப்போ இருந்து மேல சாப்பாடு கொண்டு வர சொல்றேன். வருவனான்னு போக்குக் காட்டிட்டு நிக்குறா” என்றவன் இளங்கிளியைப் பார்க்க..

அவளோ அவன் இருப்பதையே கண்டுகொள்ளாதவள் போல சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தாள்.

“சரி நீ மேல போ , நான் அனுப்பி வெக்குறேன் ” என்றான் ருத்ரசேனா .

“ம்ம்..  “என்றவன் அனைவரிடமும் பேசிவிட்டு மேலே சென்றுவிட..

எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க.. “கனி மேல அப்படி கொடுத்த விட்டியா ? என் பிரெண்டோட வைஃப் இன்னும் சாப்பிடாம இருக்காங்க ” என்றான்.

“இதோ எடுத்துட்டு போறேன் சார் ” என்றாள் இளங்கிளி.

“அவங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கொடுத்து விட்று கனி. ப்ரெக்னெண்டா இருக்காங்க இல்ல. நேரத்துக்கு சாப்பிடணும் தானே ” என்றாரன் ருத்ரசேனா.

அவனிடம் சரி என்றவள் கிச்சனுக்குள் சென்று மேலே கொண்டு செல்ல சாப்பாடு எடுத்து வைக்க.. அப்போது அங்கு வந்த காமாட்சி “என்கிட்டே கொடு கனி, நான் போய் மேல சாப்பாடு கொடுத்துட்டு வரேன் ” என்று உணவை எடுத்துக்கொண்டு மேலே சென்றார்.

இளங்கிளியும் பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளுக்கு ஊட்ட சென்றுவிட..  அப்போது தான் கர்ணனை காலையில் இருந்து பார்க்கவில்லை என்று அவளுக்கு தோன்றியது.

அவசர அவசரமாக ஆதிக்கும், அல்லிக்கும் சாப்பாடு ஊட்டி முடித்தவள், அவர்களை யஸ்வந்திகாவுடன் விளையாட விட்டுவிட்டு ருத்ராவைக் காண அவன் அறைக்கு சென்றாள்.

அவன் அறைக்கதவை தட்டியவள் ருத்ரன் வந்து கதவைத் திறக்கவும் “சார், அண்ணாவை எங்கையும் வெளிய அனுப்பிருக்கிங்களா? காலையில் இருந்து ஆளையே காணோம். என்கிட்டேயும் எதுவும் சொல்லல” என்றாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அட ஆமா கனி நான் சொல்ல மறந்துட்டேன். ஒரு வேலை விஷயமா கொஞ்சம் வெளியூர் அனுப்பிருக்கேன். ரெண்டு நாள்ல வந்திருவான் . உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன் மறந்துட்டேன் சாரி ” என்றான்.

“ஐயோ! என்ன சார் என்கிட்டே போய் சாரி சொல்லிட்டு” என்றவள் “அண்ணா எங்க போறதா இருந்தாலும் என்கிட்டே சொல்லாம போகாதே ” என்று யோசித்தபடி கீழே வந்தவள் . பிள்ளைகளை காண வெளியே செல்ல..

அவர்களை பரிமளா தன் அறைக்கு கூடி சென்றதாக காமாட்சி சொல்லவும் அங்கே சென்றாள்.

ஆதியும், அல்லியும் யஸ்வந்திகாவை அணைத்துக்கொண்டு உறங்கி இருக்க..

அவர்களை அழைத்து செல்ல வந்தவளிடம் “பிள்ளைங்க இன்னிக்கு இங்கையே தூங்கட்டும் ” என்று பரிமளா சொல்லவும் அவரிடம் மறுப்பு சொல்ல முடியாமல் கைகளை பிசைந்தபடி நிற்க..

“நீ போய் தூங்கும்மா நான் பாத்துக்கிறேன் ” என்று அவளை  அனுப்பிவைத்தார்.

கர்ணனைப் பற்றிய யோசனையில் தன் அறைக்கு வந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல..

அங்கே அவள் படுத்திருக்கும் பாயில் தலைக்கு கை கொடுத்து அவள் வருகைக்காக அவளாக வாசலையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தான் ராவண்.

அவனை அங்கு சற்றும் எதிர்பாராதவள் உறைந்து நிற்க..

அப்டியே அவள் பக்கம் எழுந்து வேகமாக வந்தவன் “இவ்ளோ நேரம் என்ன டி பண்ணிட்டு இருந்த ” என்று  அவளை இழுத்து அணைத்து அவள் இதழில் தன் இதழைப் பொருத்தி இருந்தான் ராவண்

ஸ்டோரி படிச்சிட்டீங்களா அப்போ கமெண்ட் பண்ணிடுங்க😍 கூடவே லைக் பண்ணுங்க.

You may also like

3 comments

Uma August 24, 2026 - 11:00 pm

😄😄Innaiku episode super sis..enjoy pannen

Reply
Layas Tamil Novel August 25, 2026 - 10:53 am

😁😍😍😍

Reply
Layas Tamil Novel August 26, 2026 - 7:50 am

thank you

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.