News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் 5

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

ஆன்லைன் 5

“அம்மா!. .கண்டிப்பா நான் வந்தே ஆகணுமா?  எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு ” என்று சிணுங்கிக்கொண்டே அவரிடம் வந்தாள் மீனு,.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஏய் நான் என்ன உன்னை வேற எங்கையும் போகணும்னா கூபிட்றேன். உனக்கு கல்யாணத்துக்கு சேலை எடுக்கணும். சம்மந்தி வீட்டுக்கும் எடுக்கணும் அதான் கடைக்கு வாடி போலாம்னு கூப்பிட்டா முடியாதுனு சொல்ற. உன்னோட கல்யாணத்துக்கு நீ வந்து பார்த்து எடுத்தா தானே டி நல்லா இருக்கும் “என்றார்.

“ம்ம்ம் என் கல்யாணத்தை என்னை கேட்டா நடத்துறீங்க. அப்பா தானே முடிவெடுத்தாரு . இதையும் அவரையே செய்ய சொல்லு.. ” என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு பேசினாள்.

“ஏய்! உன் அப்பா மட்டுமா இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னார். உங்க அண்ணா தான் டி இந்த கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணிருக்கான் . அவன் தான் ஆர்யன்கிட்டே உன்னைக் கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டிருக்கான் . அந்த ஒரே காரணத்துக்காக தான் இந்த கல்யாணமே நடக்குது ” என்றார்.

“என்னம்மா சொல்ற! அண்ணாவா என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டுச்சு ” என்றாள்

“ஆமா டி” என்றார் அவரும்.

“ம்ம்ம்.. ” என்று வாய்க்குள் முனகினாள்.

“சரி உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை போல… கீழே ஆர்யன், அவன் அம்மா, கனிஸ்கா எல்லாரும் வந்திருக்காங்க .நீயே வந்து  அவங்ககிட்டே இந்த கல்யாணம் பிடிக்கலையினு வந்து சொல்லிரு. அப்படியே உன் அண்ணாகிட்டயும் ” என்று சொன்னார்.

அவளோ “எல்லாரும் கீழே இருக்காங்களா? இதை ஏன்மா நீ முன்னையே சொல்லல.. நீ போய் வந்தவங்களை கவனி . நான் பைவ் மினிட்ஸ்ல ரெடி ஆகி வரேன் ” என்று அவரை கீழே அனுப்பினாள்.

அவரோ சிரித்துக்கொண்டே வெளியில் வந்தவர் “அவ அண்ணன் சொன்னானதும்  இவளுக்கு எல்லாம் ஓகேவாம் . அப்போ நாங்க எல்லாம் என்ன தக்காளி தொக்கா இவளுக்கு “: என்று நினைத்து சிரித்துக்கொண்டே கீழே வந்தவர் “பாக்கியம் ஒரு அஞ்சு நிமிஷம் ரெடியாகி வந்திருவா” என்றவர் “சிங்காரம் காபி ரெடியா?” என்று கிச்சனை நோக்கி குரல் கொடுக்க.

சமையல் கட்டில் இருந்து ஒரு ட்ரேயில் காபியும், ஸ்னாக்ஸ்சும் சகிதமாக ஹாலுக்கு வந்து சிங்காரம் அதை அனைவர்க்கும் கொடுத்துவிட்டு சென்றார்.

ஆர்யனும் வீட்டை சுற்றிப் பார்த்தபடி காபியை எடுத்து அருந்தினான்.

“மாப்பிள்ளை ஜோசியரைப் பார்த்து நாள் குறிச்சிட்டு வந்திருக்கோம். எனக்கு என் பொண்ணு கல்யாணத்தை க்ராண்டா நடத்தணும்னு தான் ஆசை . ஆனா கல்யாணத்துக்கு வருவாங்க எல்லாம் மாறனைப் பத்தி தான் கேட்பாங்க. அவன் வேளைக்கு போகலையா? ஆஃபீஸை பாத்துக்க வேண்டியது தானே.. ஊதாரி.. குடிகாரன் அது இதுனு சொல்வாங்க. அவனும் கல்யாணத்துக்கு வரும்போது குடிச்சிட்டு வந்தா என்னால அதை தாங்கிக்க முடியாது ” என்றார் மாறன் மீது இருந்த கோபத்தில்.

“அப்பா, ஏன் எப்போ பாரு அண்ணாவையே குத்தம் சொல்றிங்க. என் கல்யாணம் ஆச்சே என் அண்ணா அப்டி எல்லாம் வராது . ” என்று மாறனுக்கு ஆதரவாக பேசிக்கொண்டே படி இறங்கி வந்தாள்.

அவள் குரல் கேட்டு ஆர்யன் தன் பார்வையை அவள் வந்த பக்கம் திருப்பினான்.

மஞ்சள் நிற ஸ்பைஸ் சில்க் சுடிதாரில் பூவேலை செய்த விதவிதமான வண்ணங்களில் எம்பிராய்டரி போடப்பட்ட சுடிதாரை அணிந்து தலையை அழகாக பின்னி காதில் தங்க ஜிமிக்கி ஆட அங்கே வந்தாள் மீனு,

“உன் கல்யாணத்துக்கு மட்டும் அப்படி வரமாட்டான் சரி. ஆனா அவன் குடிச்சிட்டு ஊரை சுத்துறது யாருக்கும் தெரியாதுன்னு நினைக்குறியா? போனவாரம் கூட என் பெரியப்பா பையன் ஒரு பார்ல இருந்து வர்ரதை கையில பாட்டிலோடு வந்து கார்ல ஏறினதை பார்த்திருக்கார் . உடனே எனக்கு போன் அடிச்சு என்ன புள்ளை வளர்த்தி வெச்சிருக்கேன்னு கேக்குறார் . எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்துச்சுனு தெரியுமா உனக்கு  “என்றார்.

“யாரு அந்த சாமிநாதன் அங்கிளா .. அவர் எப்படிப்பட்டவர்னு அம்மா சொல்லி கேட்டிருக்கேன். அவர் வயசுல எவ்ளோ பொண்ணுகளை ஏமாத்திட்டு சுத்திட்டு இருந்தார். அவர் வந்து என் அண்ணாவை குறை சொல்றாரா .. இருக்கட்டும் ஒரு நாள் என்கிட்டே அவர் மாட்டாமையா  போவாரு. அன்னிக்கு இருக்கு அவருக்கு ” என்றவள் “இங்க பாருங்க என் கல்யாணத்தை சிம்பிள்லா நடத்தணும்னா நடத்துங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா அதுக்காக என் அண்ணனை எல்லாம் இழுக்காதீங்க  சரியா ” என்றாள்.

அவள் ஒரு இடத்தில கூட மாறனை விட்டுக் கொடுக்காமல் பேச.. தான் பேச முடியாததை தன் மகள் பேசுகிறாள் என்று அங்கயற்கண்ணி சந்தோஷப்பட்டார்.

“அண்ணா இப்போ என்ன உங்களுக்கு கல்யாணம் சிம்பிள்லா பண்ணனும் அவ்ளோ தானே.. ஒரு பிரச்சனையும் இல்ல. என் வீட்டுக்காரர் போன அப்பறோம் அவர் சொந்தம் எல்லாம் எங்க வீட்டுக்கு வர்றதையே நிறுத்திட்டாங்க. என் பக்கம் வந்து போக என் தங்கிச்சியும், அவ பசங்களும் மட்டும் தான். அதனால் அவங்களை மட்டும் தான் நான் இவங்க கல்யாணத்துக்கு கூப்பிடப் போறேன். நீங்க உங்க சைடுல யாரும் கூப்பிடறதா இருந்தா கூப்பிட்டுக்கொண்ட ” என்றார் பாக்கியம் .

“சரி எல்லாரும் கல்யாணத்தை சிம்பிளா வெக்கலாமா? இல்ல க்ராண்டா நடத்தலாமான்னு பேசுறிங்களே.. கல்யாணம் எப்போன்னு இன்னும் சொல்லவே இல்லையே ” என்றாள் கனிஷ்கா.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அட ஆமா நானும் அதை யோசிக்கவே இல்லையே என்ற பாக்கியம் “அண்ணா எப்போ கல்யாணம்  ” என்றார்.

“அடுத்த பத்து நாள்ல ரெண்டு முகூர்த்தம் இருக்குனு ஜோசியர் சொன்னார் அதுல நம்ம எல்லாருக்கும் தோது படுதோ அப்போ வெச்சுக்கலாம் ” என்றார் சதாசிவம்.

பின் ஜோசியர் குறித்துக் கொடுத்த தேதிகளை அவர்களிடம் சொல்ல. .

“வெள்ளிக்கிழமை நல்லா இருக்கு. அப்போவே கல்யாணத்தை வெச்சுக்கலாம் அண்ணா . எங்களுக்கு ஓகே உங்களுக்கு ” என்றார்.

‘ஆன்டி, ஒரு நிமிஷம் இருங்க என் அண்ணாவுக்கு அந்த டேட் ஓகேவான்னு கேக்குறேன் ” என்று அவர் சொன்ன தேதியை மாறனுக்கு வாட்ஸாப் அனுப்பிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க… அது இன்னும் சிங்கள் டிக்கிலேயே இருந்தது.

அவள் முகம் மாறுவதை கண்ட சதாசிவம் ” என்ன உன் அண்ணாவுக்கு மெசேஜ் போகலையா?” என்றார் நக்கலாக.

அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள..

“எனக்கு தெரியும் அவன் இப்படி தான் பண்ணுவான்னு .. அவன் இருக்குற நிலைக்கு இந்த நேரம் எந்த பார்ல குடிச்சிட்டு கிடக்குறானோ.. ” என்று பொரிந்து தள்ளினார்.

“அங்கிள் விடுங்க.. அவன்கிட்டே நான் பேசிட்டு சொல்றேன். அவன் சொல்ற டேட்லையே கல்யாணம் வெச்சுக்கலாம் ” என்றவனை ஆச்சர்யமாக நிமிர்த்து பார்த்தாள் மீனு,

அவள் மனதறிந்து அவளுக்காக ஆர்யன் பேசி இருக்க..

முதல் முறை எந்தவித பயமும் இல்லாமல் அவனை பார்த்தாள்,

அவனும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தவன் “போலாமா? “என்றான்.

“சரி மாப்பிள்ளை நீங்களே அவன்கிட்டே பேசிட்டு சொல்லுங்க. அந்த நாள்லையே கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிணாக்கலாம்  “என்று சொன்ன சதாசிவம் அனைவரையும் அழைத்துக்கொண்டு கல்யாணத்துக்கு ஆடைகள் எடுக்க கடைக்கு சென்றார்.

இங்கே இரவு முழுவதும் மீராவுடன் வீடியோ சாட் செய்ததில் களைத்து போய் உறங்கி இருந்த மாறன். பன்னிரண்டு மணி போலத்தான் கண்விழித்தான்  உடலை நெளித்துக் கொண்டு எழுந்து பாத்ரூம் சென்று குளித்துவிட்டு கீழே வந்தான்.

அவன் ஹாளுக்கு வரவும் பின் வாசல் வழியாக சமைத்த உணவுகளை எடுத்துக்கொண்டு ஆஷா வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

 கையில் ஹாட் பாக்ஸ் ரோடு உள்ளே வந்தவள் காலடி சத்தம் கேட்டு சத்தம் வந்து திசை நோக்கி திரும்ப அங்கே டிராக் பண்ணிட்டு அணிந்து வீட்டுக்குள்ள அணியும் ஸ்லிப்பர் ஓடு மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

அவன் வருவதை  முழுமையாக  பார்க்கவில்லை அவன் மார்பு வரை கண்களை உயர்த்தியவள் அதற்கு மேல் முகத்தை பார்க்க பயந்தவளாக வந்த வேகத்தில் திரும்பி ஹாட் பாக்ஸோடு பின்னால் இருந்த கிச்சனுக்கு சென்று விட்டாள் 

 ஐயோ ஆஷா ஜஸ்ட் மிஸ் டி… அந்த குடிகாரன் கண்ணுல நான் மாட்டி இருந்தா இந்நேரம் என் கதி என்ன ஆகி இருக்கும் என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டவள்.

அவன் உணவு சாப்பிட தான் கீழே வந்திருக்கிறான் என்று புரிந்தது அந்த உணவை எப்படி கொண்டு போய் டைனிங் டேபிளில் வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 அவசரத்திற்கு  மணியை அழைக்கலாம் என்றால் அவரும் வெளியே சென்றுவிட இப்போது என்ன செய்வது என்று யோசனையில் கிச்சனிலேயே நின்றிருந்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

 இங்கே கொலை பசியில் கீழே வந்த மாறனும் டைனிங் டேபிளில் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருப்பதை கண்டவன் மணி.. மணி… என்று அந்த வீடே அதிரும்படி கத்தினான்.

“போச்சு போச்சு அந்த குடிகாரனுக்கு பசிக்கும் போல அதான் இந்த கத்து கத்துறார். மணி அண்ணா வேற நேரத்துக்கு தம்பி சாப்பிடும் சீக்கிரம் செஞ்சு வச்சுட்டுன்னு சொல்லிட்டு போனாரு.  இப்ப அவரும் இல்ல இவர் வேற இப்படி கத்துறார் நான் என்னதான் பண்ணுவேன் கடவுளே என்று கைகளை பிசைந்து கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.

 மீண்டும் மாறனின் குரல் அந்த ஹாலை அதிரச்செய்ய..

 வேற வழியே இல்ல ஆஷா நீதான் சமைச்ச சாப்பாட்டை கொண்டு போய் வைக்கணும் இன்னும் கொஞ்ச நேரம் விட்டா அப்புறம் அந்த ஆளு கோவத்துல ஏதாவது செஞ்சாலும் செஞ்சுடுவேன் என்ன வேலை விட்டு அனுப்பிட்டானா அப்புறம் நான் பணத்துக்கு என்ன பண்ணுவேன் என்று அவளுக்கு அவளை பேசிக்கொண்டாள்.

பின் அங்கிருந்த தன் ஷாலை எடுத்து முகத்தை முழுவதும் மறைத்து   விழிகள் மட்டும் தெரிவது போல சுற்றி கட்டியவள் ஹாட் பாக்ஸையும் தட்டையும் எடுத்துக்கொண்டு கைகள் நடுங்க ஹாளுக்குள் நுழைந்தாள்.

 அங்கே பசியில் அமர்ந்திருந்த மாறனும் கொலுசு சத்தம் நிறுத்தி நிறுத்தி கேட்கவும் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்ப..

 அங்கே ஆஷா கையில் ஹாட் பாக்ஸ் தட்டுடன் அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 பச்சை வண்ண சுடிதார் சிவப்பு வண்ண பேண்ட் அணிந்திருந்தாள். அந்த பேண்ட்டுக்குள் மாட்டி மூச்சு விட சிரமப்பட்டது போல பாதி உடலை மட்டும் வெளியே காட்டி தொங்கிக் கொண்டிருந்த இரு கால்களில் இருந்த கொலுசில் இருந்து ஒளி எழுப்ப அந்த சத்தத்தோடு அவனை நோக்கி அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 அவன் பார்வை அவள் பாதத்தில் இருந்து கொலுசைத் தாண்டி அப்படியே மேலேறி வந்தது.

.

மிகவும் ஒல்லியான தேகம் வயிறு பஞ்சத்தில் வாழ்ந்தவர்கள் போல ஒட்டி இருக்க.. அவன் பார்வை அவள் வயிற்றிலிருந்து மேல் எழுந்தது.

 அவள் அணிந்திருந்த  சுடிதார் முழங்கை வரை முழுவதுமாக அவள் கைகளை மறைத்திருந்தது.

 அப்படியே அவன் பார்வை மேலேற அந்த பிரம்மன் வாரி வழங்கும் வள்ளல் போல..

அவள் மேனியின் மொத்த சதைப்பற்றையும் ஒரே இடத்தில் குவித்து வைத்தது போல அவள் நிலவுகள் இருக்க..

கண்டதும் அதை கண்டதும் சலனப்பட்டது மாறனின் மனம் ஒரு நிமிடம்..

அடுத்த நொடியே  சட்டென அங்கிருந்து அவன் பார்வையை அவள் முகத்திற்கு நிமிர்த்தினான். முகத்தை சிவப்பு ஷாலைக் கொண்டு அவள் சுற்றி இருக்க புருவம் சுருக்கி அவளை பார்த்தான்.

You may also like

1 comment

Mehala October 17, 2026 - 5:03 pm

Ashathane antha meera sister

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.