Home Uncategorizedஎனை மாயம் செய்யும் ராட்சசன் 15

எனை மாயம் செய்யும் ராட்சசன் 15

by Layas Tamil Novel
235 views

EPISODE 15

அனைவரும் காலை உணவை முடித்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து இருந்தனர்.

மீனு கிட்சனில் இருந்து பால்கோவா செய்து சுட சுட பாதம், பிஸ்தா எல்லாம் போட்டு எடுத்து வந்து ஜெய் முன்பு நீட்டினாள் . 

அவன் அருகில் அமர்ந்து  இருந்த சூர்யா, சந்தோஷ் இருவரும் சுடச் சுட பால்கோவாவை பார்த்துவிட்டு ” என்ன அண்ணி பால்கோவாவை சுட சுட கொண்டு வந்து கொடுக்கிறீங்க. அதுவும் அண்ணாவுக்கு மட்டும் கொடுக்கிறீங்க. எங்களுக்கு இல்லையா? ” என்றான் சந்தோஷ்.

“உங்களுக்கெல்லாம் இல்லாமையா இவருக்கு பால்கோவா சுட சுட சாப்பிட பிடிக்குமே அதான் செய்து முடிச்சதும் முதல்ல அவருக்கு கொண்டு வந்தேன். நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ஆறினதும் உங்களுக்கு  எடுத்துட்டு வந்து தரேன் ” என்றாள்.

” வேணாம் வேணாம் எங்களுக்கும்  சூடாவே கொண்டு வந்து கொடுங்க நாங்களும் சாப்பிட்டு பாக்குறோம் சூடா பால்கோவா எப்படி இருக்கும்னு ” என்றான் சூர்யா.

” அம்மா மீனு என் மகனுக்கு சூடா பால்கோவா பிடிக்கும்னு  உனக்கு எப்படி தெரியும்” என்றார் கஜேந்திரன்.

மீனு அவரை பார்த்து சிரித்துவிட்டு ” மாமா இவருக்கு பால்கோவா சூடா சாப்பிட பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் ” என்றாள்.

“அப்படியா? உனக்கு எப்படி மா தெரியும்? உன்கிட்டே ஜெய்  அவனுக்கு பிடிச்சதை பத்தி  யாராவது சொன்னாங்களா? சந்தோஷ் எதுவும் சொன்னானா?” என்றார் கஜேந்திரன்.

” எனக்கு சந்தோசோ வேற யாருமே எதுவும் சொல்லல மாமா  ” என்றவள்  ஜெய்யை சிரித்தபடி பார்த்துவிட்டு திரும்பி கஜேந்திரனிடம் ” இவர் தான் இவருக்கு என்கிட்டே  சொன்னாரு ” என்றாள்  வெட்கப்பட்டுக்கொண்டே.

மீனு சொன்னதை கேட்டதும் ஜெய் அதிர்ச்சியாக அவளை திரும்பி பார்க்க… அவளோ ஜெய்யை பார்த்தும் பார்க்காதவள் போல திரும்பிக் கொண்டாள்.

மீனு சொன்னதை கேட்டு ஆச்சர்யமான கஜேந்திரன் ” நிஜமா தான் சொல்றியா? என் மகனே உன்கிட்டே இதை எல்லாம் சொன்னானா? ” என்றார் நம்பமுடியாமல்.

“ம்ம்.. ஆமா மாமா ” என்றாள் மீனு சிரித்த முகமாக. 

” நான் எப்போ, இவ கிட்டே சொன்னேன்.” என்று குழப்பமாக ஜெய் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க.,. “என்ன மா சொல்றே!! என்னால நம்பவே முடியலையே அவன் மனசுக்குள்ள என்ன இருக்கு, இல்லைன்னு அவ்ளோ சீக்கிரத்துல வாயை திறந்து யாருகிட்டயும் சொல்ல மாட்டானே? ஆனா எப்படி உன் கிட்டே ” என்று  புரியாமல் அவர் கேட்டார்.

” சத்தியமா அவரே என்கிட்டே சொன்னாரு மாமா, வேணும்னா நீங்களே அவர் கிட்டே கேட்டு பாருங்க ” என்று சொல்லி ஜெய்யை  பார்த்து புருவம் உயர்த்தி எப்படி? என்பதுபோல பார்த்தாள் .

” இவ என்ன இவ்ளோ கான்பிடென்டா எனக்கு தெரிரியும்னு சொல்றா ” என குழப்பமான மனநிலையுடன் மீனுவை பார்த்தான்.

“அப்பா நீங்க இருங்க நான் கேக்குறேன் ” என்று சந்தோஷ் குறுக்கே புகுந்து ” அண்ணா உனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு இத்தனை வருசமா உங்க கூட இருக்க எங்க யாருக்குமே தெரியாது. ஆனா உங்களுக்கும் அண்ணிக்கும் நேத்து தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள எல்லாத்தையும் அதுவும்  ஒரே ராத்திரிரியில்  எல்லாமே  சொல்லிட்டீங்க.. என்னால இதை ஒத்துக்கவே முடியாது ” என்றான் சந்தோஷ்.

” ஏன் முடியாது, இல்லை ஏன் முடியாதுனு கேக்குறேன். நீங்க யாரும் இதுவரை என் மாமாவுக்கு பிடிச்சது என்னனு ஒரு வார்த்தை கூட கேட்டு இருக்கமாடீங்களா இருக்கும். என் அக்கா தான் எல்லாமே கேட்டு தெரிஞ்சிருக்கா. அது உங்களுக்கு பொறுக்கலையா? ” என்று பூஜா சந்தோசிடம் போறிந்து தள்ளினாள்.

அவள் எகிறிக்கொண்டு சந்தோசிடம் சண்டைக்கு செல்ல அதை பார்த்துதும் சூர்யா “டேய் ஜெய் என்ன டா கல்யாணம் ஆனதும் தான் ஆச்சு உனக்கு உன் பொண்டாட்டியோட சிஸ்டர் வரைக்கும் உனக்கு வக்காலத்து வாங்கிட்டு நிக்குறா ” என்றான் பூஜாவை  பார்த்து.

” ஐயோ எல்லாரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா.. நானே ஏற்கனவே குழம்பி போயிருக்கேன். நான் எனக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு இவ.. என்றவன் பின் இவங்க கிட்டே சொல்லவே இல்லை. ” எனக்கு பால்கோவா சூடா சாப்பிட பிடிக்கும்னு என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும்  தவிர யாருக்கும் தெரிரியாது”என்றவன் மீனுவை பார்த்து சற்று கோபமாக ” நான் எப்போ இதெல்லாம் உன்கிட்டே சொன்னேன். ” என்றான்.

” உங்களுக்கு விளையாட நேரம் இல்லையா எப்போ சொன்னிங்கன்னு இப்படியா எல்லார் முன்னாடியும் கேட்பிங்க.. எனக்கு வெட்கமா இருக்கு.” என்று வெட்ப்பட்டுக் கொண்டே மீனு கிட்சனுக்குள்ளே ஓடிவிட..

அதை பார்த்த அனைவரும் நமட்டு சிரிப்பை உதிரித்துவிட்டு எதுவும் தெரியாதவர்கள் போல தங்கள் பார்வையை வேறுப்புறம் திருப்பிக்கொள்ள… கிட்சனில் இருந்து மீனு “ஏய் பூஜா இங்கே வா.. இந்த பால்கோவாவை எல்லாருக்கும் கொண்டு போய் கொடு.. அவரை முதல்ல நான் செய்துகொடுத்த பால்கோவாவை சாப்பிட சொல்லு சாப்பிட்டுட்டு எப்படி இருக்குனு சொல்ல  சொல்லு ” என்றாள்.

” டேய் ஜெய் உன் பொண்டாட்டி சொல்றது கேட்குதுள்ள முதல்ல சூடு  ஆறுறதுக்குள்ள பால்கோவாவை சாப்பிட்டு எப்படி இருக்குன்னு உன்போண்டாட்டிகிட்டே சொல்லு ” என்று சூர்யா சொல்ல.. ” ஆமா தம்பி என் பொண்ணு முதன் முதலா ஆசையா உங்களுக்காக சமைச்சிருக்கா நீங்க சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க அவ சந்தோசப்படுவா ” என்று குருவும் கூற.

 அப்பட்டமாக பொய் பேசிவிட்டு சென்ற மீனுவின் மேல் கோபமாக வந்தது ஜெயியிற்கு ஆனால் அனைவர் முன்பும் அதை காட்டி எல்லோரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன் பேசாமல் தன் கையில் இருந்த சூடாக இருந்த பால்கோவாவை பார்த்தான்.

பார்ப்பதற்கே சாப்பிட தூண்டும் அளவு அதன் நறுமணம் அவன் நாசியை துளைக்க .. ஸ்பூனில் எடுத்து பால்கோவாவை ஒரு வாய் சாப்பிட்டான். பால்கோவா சூடாக வாய்க்குள் வைத்ததும் பாகாக கரைந்து அவன் மூளை, மனம் என அவனுக்குள் தூங்கி இருந்த சுவை அரும்புகளை தூண்டி விட்டு இருக்க… கண்கள் மூடி அதன்

ருசியை அனுபவித்தவன் அடுத்தடுத்து ஸ்பூனினல் எடுத்து சாப்பிட ஆரம்பித்து இருந்தான்.

அதற்குள் பூஜா அனைவர்க்கும் பாகோவாவை கொண்டு வந்து  கொடுத்திருக்க… ஜெய் சாப்பிடுவதை பார்த்துவிட்டு அனைவர்க்கும் மீனு செய்த பால்கோவாவை சுவைத்து பார்க்க ஆர்வத்தை தூண்ட.. வேகமாக தங்கள் பால்கோவாவை எடுத்து சாப்பிடவர்கள் அனைவரும்” ஆஹா,.. ஓஹோ.. ” என மீனுவை புகழ்ந்து தள்ள..

இங்கே இவ்வளவு நேரம் கண்களை மூடி பால்கோவாவை ரசித்து ருசித்து முழுவதுமாக காலி செய்த ஜெய் கண்களை  திறந்ததும் அவன் கண்கள் இரண்டும் கோபத்தில் கோவை பழம் போல சிவந்து இருக்க.. அதை  பார்த்த சூர்யா தன் அருகில் பூஜாவை சைட் அடித்துக்கொண்டே பால்கோவாவை சாப்பிட்டுக்கொண்டு இருந்த சந்தோஷை சுரண்டினான் சூர்யா.

“ம்ப்ச்  என்ன சூர்யா னா…” என்றான் சற்று எரிச்சலாக.

” ஏண்டா இப்போ எதுக்கு இப்படி எரிஞ்சு விழுற என் மேல… என்றவன் ” அங்கே பாரு உங்க அண்ணா ஒரு கிண்ணம் நிறைய இருந்த பால்கோவாவை முழுசும் சாப்பிட்டு முடிச்சிட்டு இப்போ கோபத்தோட இருக்கறதை ” என்றான் சூர்யா. 

ஜெய்யை பார்த்த சந்தோஷ் ” ஆமா ன்னா.. என்ன ஆச்சு இவருக்கு பால்கோவா நல்லதானே இருந்துச்சு அப்பறோம் ஏன் முகத்தை இவ்ளோ கோவமா வெச்சிருக்காரு ” என்றான் சந்தோஷ்.

” ஒருவேளை பால்கோவா ரொம்ப சூடா இருந்து அவன் வாயை சுட்டு இருக்குமோ? ‘  என்றான் சூர்யா.

அவர்கள் இருவரையும் தன் பார்வையை சூழல விட்டு முறைத்த ஜெய் கிட்சன் இருந்த  திசையை பார்க்க… மீனு உள்ளே இருந்தாப்டியே அவன் சாப்பிப்பிடும் அழகை இவ்வளவு நேரம் ரசித்துக்கொண்டு நின்று இருந்தவள் ஜெய்யை பார்க்க..” ரூமுக்கு வா உன்கிட்டே எனக்கு கொஞ்சம் பேச வேண்டி இருக்கும் ” என்றுவிட்டு வீல் சேரை இயக்கோடி தன் அறை நோக்கி சென்றான்.

அங்கிருந்த அனைவருக்கும் ஜெய் ஏன்  இப்படி கோபமாக இருக்கிறான் என்று யாருக்குமே புரியவில்லை. இந்த நிலைமையில் மீனு உள்ளே சென்றாள் அவன் மீனுவின் மனது புண்படும்படி எதுவும்  பேசிவிடுவான் என நினைத்த கஜேந்திரன் மீனுவை போகவேண்டாம் என்று தடுக்க… ” ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா இப்போ போகலையின்னா எப்படிடியும் அவரை நான் பார்த்து தானே ஆகணும் அப்போ என்ன செய்றது. இருங்க நான் போய் அவர் என்ன சொல்றருன்னு கேட்டுட்டு வரேன் ” என்றுவிட்டு தன் அறைக்கு  சென்றாள்.

” என்னடா உன் அண்ணன் இப்படி இருக்கான் பாவோம் மீனு அவன்கிட்டே மாட்டிக்கிட்டு  என்ன பாடு படப்போராளோ தெரியலேயே ” என்று சூர்யா மீனுவுக்காக வருத்தப்பட.. ” நீங்க அதை  பத்தி எல்லாம் கவலை படாதீங்க.. என் பொண்ணு எப்படி பட்டவங்களையும் அவளோட கள்ளம் இல்லாத சிரிப்பாலையே தன்னோட வழிக்கு கொண்டு வந்திருவா. மாப்பிள்ளையையும் அதே போல அவ சமாளிச்சு அவரை சமாதானம் செய்துடுவா பாருங்க ” என்று தன் மகள் பற்றி பெருமையாக ஜனனி கூற.. பூஜாவும், குருவும் அதற்கு ஆமா என்பது போல தலையாட்டிக்கொண்டு மீனு என்ன செய்யபோகிறாள் என்று பதை பதைப்போடு அவர்கள் அறையையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured