News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்புத் தண்டா காதல் 28

by Sinamika Writes
32 views
A+A-
Reset

தப்பு 28

“டேய் மச்சான் என்ன டா நடக்குது இங்க? உன் அப்பா என்ன தான் பண்ணி வெச்சிருக்காருனு தெரியல. காவேரி பையன்னு ஒருத்தன் வந்து நிக்குறான். ஆனா அதே காவேரி எப்படி பூவிழியோட அம்மாவா இருக்க முடியும்” என்று குழப்பாக கேட்டான் பாஸ்கர்.

யுவனிடம் பேசிவிட்டு நேராக தன் ஆபிஸிற்கு வந்த யுகேந்திரன் பாஸ்கர் போலவே குழப்பதோடு அமர்ந்திருந்தான்.

“டேய் நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன டா எதுவும் பேசாம அமைதியா இருக்க. காவேரியோட பொண்ணு பூவிழியா இருந்தா என்ன டா பண்றது ” என்று தயக்கத்தோடு கேட்டான்.

அதுவரை அமைதியாக இருந்த யுகேன் “அதுக்கு வாய்ப்பே இல்ல.. ” என்று அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வந்து அழுத்தமாக விழுந்தது.

பாஸ்கர் அவனைப் பார்க்க..

“அப்படி காவேரியோட குழந்தை பூவிழியா இருந்திருந்தா எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்க மாட்டார்.” என்றான்.

அவன் சொல்வதும் சரிதான் என்று நினைத்த பாஸ்கர் “அப்போ பூவிழி?” என்றான் கேள்வியாக.

“பூவிழி யாருனு தெரிஞ்சவங்க ரெண்டு பேரு . ஒன்னு என் அப்பா” என்றான்.

“சரி அப்போ அந்த இன்னோரு ஆள்?” என்றான்.

“காவேரி ” என்று பாஸ்கரைப் பார்த்தான்.

“அவங்களை தான் உன் அப்பா அடைச்சு வெச்சிருக்க போல செட்டப் பண்ணி பூவிழியோட இருக்க வேதிருக்கோமேவெச்சிருக்கோமே.. நீ எப்படி அவங்ககிட்டே பூவிழி பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்குவ.. ” என்றான் பாஸ்கர்.

“யோசிக்கணும் இல்லேனா நானே நேரடியா அவங்ககிட்டே பேசி தான் ஆகணும்” என்றான்.

“அப்போ நீ தான் பூவிழியை தனியா அடைச்சு வெச்சிருக்கேன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருமே.. ” என்றான் .

“எப்படியும் ஒரு நாள் தெரியத் தானே போகுது” என்றவன்.

“அதுக்கு முன்ன என் அப்பாகிட்டே கொஞ்சம் விளையாடிப் பாக்கலாமா?”என்றான் ஒரு புன்னகையோடு.

“என்ன டா உன் பேச்சே சரி இல்ல . என்ன ஆச்சு? அவர்கிட்டே என்ன விளையாட்டுப் போற.. பாவம் டா அவரு “என்றான்.

“அப்போ நான் பாவம் இல்லையா? என் பூவிழி பாவம் இல்லையா? காவேரி? யுவன்? இவங்க எல்லாம் என்ன பண்ணினாங்க. இவ்ளோ பேரோட வாழ்க்கையில விளையாட்ற அளவுக்கு என்ன டா பண்ணினாங்க அவங்க எல்லாம்” என்றான் ஆதங்கமாக,

யுகேன் சொல்வதும் சரி தான் என்று தோன்றியது பாஸ்கருக்கு தோன்ற.. “இப்போ என்ன விளையாட்டு டா ஆடப்போற.. ” என்றான்.

அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “நாளைக்கு காலைல தெரியும் ” என்றான்.

“என்னவோ சொல்ற? எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது. உன்கிட்டே கேட்டாலும் நீ எப்படியும் சொல்ல மாட்ட .. நீ சொல்றதுக்கு முன்ன உன் பேன்ஸ் கண்டு பிடிச்சு சொல்லிருவாங்கனு நான் நினைக்கிறேன் ” என்றவன் “சரி வா போகலாம் “என்றான்.

“எங்க?” என்றான்.

“வீட்டுக்கு டா மணி பாரு ஒன்பது ஆகப்போகுது “என்றான் பாஸ்கர்.

“நீ கிளம்பு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா முடிச்சிட்டுக் கிளம்பறேன்” என்று அங்கிருந்து கிளம்பி இருந்தான் பாஸ்கர்.

அவன் சென்றதும் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் கேபினில் இருந்த சோபாவில் அமர்ந்து எதிரே இருந்த டேபிளில் கால் வைத்த அமர்ந்தவன் தன் மொபைலை எடுத்து CCTV ஐ ஆன் செய்து பூவிழி என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.

அவள் தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கையில் எதையோ வைத்து குறித்துக்கொண்டு இருந்தாள். சாப்பிட்டுக்கொண்டே சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

“அமுக்காஞ்சி ஏதோ திருட்டுத் தனம் பண்ணுறா?” என்று அந்த திரையை மட்டும் பெரிதாக்கி ஜூம் செய்து பார்த்தான். கையில் மாங்காயை வைத்துக்கொண்டு அதை ரசித்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்,

அவள் சாப்பிடுவதைப் பார்த்தவனுக்கு ஒரு மாதிரி பல் எல்லாம் கூசியது,

“இதை சாப்பிட ஏன் திருட்டுத்தனம் பண்ணுறா இவ..’ என்று யோசித்துக்கொண்டிருக்க..

“பூவு…  அடியே பூவு.. எங்க டி இருக்க? சீக்கிரமே சாப்பிட சொல்லி உனக்கு சாப்பாடு கொண்டு வந்து வெச்சிருக்காங்க நீ அதை சாப்பிடாம எங்க டி போன.” என்று குரல் கொடுத்துக்கொண்டே அவர் தோட்டம் பக்கம் வர..

அவர் குரல் கேட்டதும் சட்டென சாப்பிட்டுக்கொண்டிருந்த மாங்காயை சேலைக்குள் வைத்து மறைத்துக் கொண்டாள்.

அவசரமாக வாயை துடைத்தவள் “எதுக்குமா கத்துறிங்க. நான்  இங்க தான் காத்து வாங்க வந்தேன் ” என்று அவருக்கு குரல் கொடுத்தாள்.

“அடிப்பாவி” என்ற ரீதியில் யுகேன் அவளைப் பார்க்க..

“என்ன டி இங்க வந்து உக்காந்திருக்க ” என்றார்.

“அதான் காத்து வாங்க வந்தேன்னு சொல்றேன் இல்ல” என்று அவரிடம் எகிறினாள்.

“ஏன் டி கத்துற.. உன்னைக் காணோம்னு தான் கேட்டேன். நீ இன்னும் சாப்பிடலையே” என்றார்.

“பசிச்சா தானே மா சாப்பிடுவேன். சும்மா கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் வந்து சாப்பிடு சாப்பிடுன்னு.. நச்சரிச்சா நான் என்ன தான் பண்ணுவேன் ” என்றாள் சலிப்பாக.

“ஏண்டி உன் உனக்கும், உன் புள்ளைக்கும் தானே உன்னை சாப்பிட சொல்றது. நீ சரியா சாப்பிடலையின்னா அந்த கடன்காரன் வேற கேமெராவுல பாத்துட்டு என்னை தான் திட்டுவான்” என்று ராஜேந்திரனை கரித்துக் கொட்டினார்.

“ம்மா.. நானும் கேக்கணும்னு தான் நினைக்கிறேன். முதல்ல எல்லாம் நீ ராஜேந்திரன் சாரை இப்படி எல்லாம் பேசினது இல்லையே . இப்போ ஏன் அடிக்கடி அவரை திட்டுற.. என்ன ஆச்சு ?” என்றாள்.

“அவன் உனக்கு பண்ணின காரியத்துக்கு திட்டாம தலையிலையா தூக்கி வெச்சு ஆட முடியும். என்னைக் கொண்டு போய் அடைச்சு வெச்சு.. உன்னை மிரட்டி இந்த கல்யாணத்தை பண்ணி வெச்சு.. இதெல்லாம் ஒரு பெரிய குடும்பத்து ஆளு பண்ற வேலையா டி.. அந்த ஆள் பண்ணினதை எல்லாம் நினைச்சாலே எனக்கு ஆத்திரமா வருது” என்று புலம்பினார்.

“நேத்தெல்லாம் எதுக்கு அப்பாவை இவங்க அவ்ளோ திட்டினாங்கன்னு யுவனை பார்த்த அப்பறோம் தான் புரியுது ” என்று யோசித்தவன் “இவங்க திட்டுறதுல தப்பே இல்ல.”என்று நினைத்துக்கொண்டான்.

“சரி டி வா.. ரொம்ப நேரம் இங்க இருக்க வேணாம் .ராத்திரி நேரம் செடிங்க இருக்க இடத்துல பூச்சி, புழு ஏதாவது இருக்கப் போகுது ” என்று அவள் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்தினார்.

“கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க விட்ரியா நீ.. “என்று சலிப்பாக வயிற்றை பிடித்துக்கொண்டு பூவிழி எழ..

அவள் மடியில் மறைத்து வைத்திருந்த மாங்காய் கீழே விழுந்தது.

“ஐயோ!… இப்போ நான் என்ன பண்ணுவேன் ” என்று காவேரியைப் பார்க்க..

அவரோ இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவளை முறைத்தபடி நின்று இருந்தார்.

“அம்மா.. அது வந்து.. ” என்று பூவிழி நெளிய..

“என்ன டி வந்து … நொந்துன்னு.. காலையில இருந்து இதோட எத்தனாவது மாங்காய் சாப்பிட்டிருப்ப நீ.. ” என்று குரலை உயர்த்தினார்.

அதில் அதிர்ந்தவள் கைவிரலைகளை உயர்த்திக் காட்டி ஏழு.. இல்ல எட்டு சாப்பிட்டிருப்பேன் ” என்றாள்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த யுகேன் “அடிப்பாவி ஒரே நாள்ல இவ்ளோ மாங்காய் சாப்பிட்டிருக்க.. ” என்று எண்ணியபடி பூவிழியைப் பார்க்க..

அவளோ காவேரிக்கு பயந்து விழித்துக்கொண்டிருந்தாள்.

‘இத்தனை மாங்காயை சாப்பிட்டா நாக்கெல்லாம் புண்ணாகிப் போயிரும் . நாக்கு தடிச்சுக்கும். எதை சாப்பிட்டாலும் ருசியையே தெரியாது. ” என்றவர் “அதனால தான் உனக்கு பார்த்து பார்த்து செய்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிடாம இந்த மாங்காயை சாப்பிட்டு வயித்தை நிறைச்சிருக்கியா? உன்னை ” என்று அவள் காதைப் பிடித்து அவர் திருக..

“ஷ் அம்மா! வலிக்குது ” என்று சிணுங்கியவள் அவர் கையை தட்டி விட்டு கீழே விழுந்த மாம்பழத்தை எடுத்து அதில் இருந்த மண்ணை ஊத்தி துடைத்தவள் “என்னமா பண்றது இது சாப்பிட தான் எனக்கு பிடிச்சிருக்கு ” என்று மீண்டும் மாங்காயை கடித்து அவள் சாப்பிட..

“ஐயோ! நீ சாப்பிடறதை பார்க்க எனக்கு தான் டி பல்லு கூசுது. அப்பப்பா.. இந்த பச்சை மாங்காயை எப்படி தான் திங்குறியோ.. ” என்று முகத்தை சுளித்தவர் அவள் கையில் இருந்த மாங்காயைப் பறித்து ஊஞ்சலில் வைத்துவிட்டு அவள் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

அந்த ஊஞ்சலை ஜூம் செய்து பார்த்த யுகேந்திரனோ.. “இவளே இன்னும் குழந்தை மாதிரி தான் இருக்கா , இதுல என் குழந்தையை வேற பெத்துக் கொடுக்கப் போரா .. ” என்று நினைத்தவன் மணியைப் பார்த்தான் ஒன்பதை நெருங்கி இருக்க..

உடனே ஸ்பீக்கரில் பூவிழி என்று தன் தந்தையின் குரலில் அழைத்தான்.

காவேரியுடன் செல்ல சண்டை போட்ட படி வீட்டிற்குள் வந்தவள் முகம் ராஜேந்திரன் குரல் கேட்டதும் இருகிப் போனது.

“சார்.. ‘ என்று இருந்த இடத்தில அவள் குரல் கொடுக்க..

“உன்கிட்டே ஒன்பது மணிக்கு நான் தனியா பேசணும்னு சொன்னேனே மறந்து போயிருச்சா உனக்கு. ” என்றான்.

அப்போது தான் அவன் சொன்னது அவளுக்கு நினைவில் வந்திருக்க..

“ஐயோ! மாங்காய் தின்ன நினைப்புல சார் பேசணும்னு சொன்னதையே மறந்துட்டேனே .. “என்று திருதிருவென விழித்தாள்.

“உன்கிட்டே நான் அப்பறோம் பேசுறேன். உன் அம்மாகிட்டே நான் பேசணும். அவங்களை உன்னோட ரூமுக்கு வர சொல்லு” என்றான்.

சொன்னது என்னவோ யுகேன் தான், ஆனால் காவேரி தன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று தன்னை அழைத்து ராஜேந்திரன் என்று நினைத்தவர் கேமெராவை முறைக்க..

“இவங்ககிட்டே பேசணும்னு தான் வர சொன்னேன் . அதுக்கு ஏன் கோவிச்சுக்கறாங்க” என்று புரியாமல் யோசித்தவன் “ம்ம்.. உன் அம்மாவை வர சொல்லு ” என்றான் அதிகாரக் குரலில்.

“அம்மா ஏன் நின்னுட்டு இருக்க. போ.. ” என்று அவரை அறைக்குள் போடா சொன்னாள்.

“இரு டி தள்ளாத போறேன் ” என்று வேண்டாவிருப்பமாக பூவிழி அறைக்குள் சென்றார்.

உள்ளே வந்தவர் “சொல்லுங்க ” என்றார் எங்கோ பார்த்தபடி.

அவர் கோபம் புரியாமல் இருந்தவனுக்கு அப்போது தான் உரைத்தது , அவர் இப்பொது கோபமாக இருப்பது தன்னால் இல்லை ராஜேந்திரனால்  என்று புரிந்தது.

தன் குரலை சரி செய்தவன் “காவேரி!” என்றான் ராஜேந்திரன் குரலில்.

குரல் வந்த திசையில் வெடுக்கென நிமிர்ந்து பார்த்தவர் “என்ன புதுசா பேரை சொல்லிக் கூப்பிடறீங்க.. என்னை எப்பவும் சிங்காரின்னு தானே கூப்பிடுவீங்க” என்றார்.

“என்னது சிங்காரியா!” என்று அதிர்ந்தவன் “அப்பா என்ன இது இப்படியா இவங்களைக் கூப்பிடுவ நீ.. எல்லாம் என் நேரம் ” என்று யோசித்தவன். “அது .. அது வந்து நீயும், நானும் தனியா இருக்க அப்போ அந்த மாதிரி கூப்டுக்கலாம். இப்போ நீ இருக்க இடம் அப்படியா . அங்க பூவிழி இருக்கா. தப்பித் தவறி நாம பேசுறது அவ காதுல விழுந்துட்டா அது நல்லா இருக்காதில்ல.. ‘ என்றான்.

அவர் எதுவும் பேசாமல் இருக்க..

சரி நான் சொல்றதை நீ கவனமா கேளு.. என்றார்.

காவேரியோ என்ன என்பது போல நிற்க..

“நம்ம பையன் இருக்கானே.. “என்று அவன் முடிந்திருக்கவில்லை.

“என் புள்ளை கிடைச்சுட்டானா? அவனை கண்டுபிடிச்சுட்டீங்களா? அவன் எங்க இருக்கான்? எப்படி இருக்கான்?”என்று கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள.. தாய்மை உணர்வு மேலோங்க அவர் கேட்க..

“அப்போ இவங்களுக்கு யுவன் எங்க இருக்கான். என்ன பண்றான் இது எதுவுமே தெரியாதா? அவங்க யுவனை பார்த்தது கூடாக கிடையாதா?” என்று புருவம் சுருக்கியவன் “அவனை தான் தேடிட்டு இருக்கேன். ஆனா இன்னமும் அவன் இருக்க இடம் என்னனு தெரியல எனக்கு  “என்று சமாளித்தான்.

“ஏங்க நீங்க சொன்னது போலவே பூவிழியை வளர்த்துனேன். என் புள்ளையை நான் பார்க்கணும்னா பூவிழியை வளர்த்தனும். அவளோட அம்மாவா நான் இருக்கணும்னு சொன்னிங்க. நான் உண்மையாவே அவளோட அம்மாவா தான் இதுவரை இருக்கேன். என் புள்ளையை ஒரு முறையாவது என் கண்ணுல காட்டுவீங்கன்னு தானே நான் தவியா தவிக்குறேன். யாரு என்னன்னு தெரியாத பூவிழியை நீங்க கொண்டு வந்து என் கையில கொடுத்த அப்போ அவ பச்சை மண்ணு . அவளை என் புள்ளை மாதிரி நினைச்சு நான் வளர்தலையா? இவ்ளோ செஞ்சும் என் பையனை என் கண்ணுளையே காட்ட மேட்டேங்குறீங்களே.. ” என்று அழுதார்.

அவர் குரலில் இருந்த தவிப்பை யுகேனால் உணர முடிந்தது. இருந்தும் அவனால் என்ன தான் செய்ய முடியும். பூவிழியைப் பற்றிய எந்த ஒரு விபரமும் காவேரியிடம் இருந்து கிடைக்காது என்று அவர் பேச்சில் இருந்து புரிந்து கொண்டவன் “சரி அழாதே.. சீக்கிரமே அவனை கண்டு பிடிச்சு உன் முன்னாடி நிறுத்துறேன்” என்றான்.

“இதையே தான் இத்தனை வருஷமும் சொல்றிங்க.. நம்ம யுகேன் தம்பிக்கும் அவனுக்கும் இருந்தா ரெண்டு வயசு தான் வித்தியாசம் வரும், அவன் இல்லாத குறையை நான் நம்ம மூத்தவனை பாரத்து தான் ஆறுதலாகிக்குறேன்.” என்றார்.

“தன்னையும் அவர் பிள்ளை போல உரிமை கொண்டாடி பேசியத்தைக் கண்டு நெகிழ்ந்து போனான் யுகேந்திரன். தாய் பாசம் எப்படி இருக்கும் என்று அறிந்திராதவனுக்கு காவேரியின் இந்த உரிமைப் பேச்சு அவனை நெகிழ  செய்தது.

“சரி பீல் பண்ணாத நான் சீக்கிரமே அவனைக் கண்டு பிடிச்சு உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன் ” என்றான்.

“ம்ம்.. ” என்று அவர் கண்ணீரைத் துடைத்துக்கொள்ள..

“சரி சாப்பிட்டியா?” என்றான் சாஃப்டான குரலில்.

“உங்களுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு?  என் பேரை சொல்லிக் கூப்பிடறீங்க . நான் கேக்காமலேயே நம்ம பையனைப் பத்தி சொல்றிங்க. இன்னிக்கு சாப்டியான்னு எல்லாம் கேக்குறீங்க.நீங்க தானா இது ” என்றார்.

“ஐயோ! என் அப்பா இவங்ககிட்டே எப்படி தான் பேசி வெச்சிருக்காரோ தெரியலையே “என்று தலையில் அடித்துக்கொண்டவன். “அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீ கிளம்பு பூவிழியை நேரத்துக்கு சாப்பிட சொல்லு  “என்று போனை ஆப் செய்தான்.

அவரிடம் பேசியவனுக்கு வியர்த்து இருக்க.. வீட்டில் வந்து காரை பார்க் செய்தவன். இவர் எதுக்கு இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தி இருக்கார். என்ன தான் இவர் நினைச்சிட்டு இருக்கார் என்று நினைத்துருக்க..

அப்போது வாசலில் அவனுக்காகவே காத்திருந்த டிரைவர் பொன்ராசு ஒரு பையை நீட்ட..

அதை வாங்கிகொண்டவன் “இனி நீ இங்க வர வேணாம் எதுவா இருந்தாலும் நான் உன்னை வெளியில வெச்சு மீட் பண்ணிக்கிறேன் ” என்றவன் “பூவிழியையும் , காவேரி அம்மாவையும் பத்திரமா பாத்துக்க..” என்று உள்ளே சென்றுவிட்டான்.

நேராக தன் அறைக்கு வந்தவன் அந்த கவரை மேஜையில் வைத்துவிட்டு குளிக்க சென்றவன் திரும்பி வந்து அந்த கவரைப் பிரித்தான் . அதில் பூவிழி சாப்பிட்டு வாய்த்த மாங்காய் இருந்தது. அவள் ஊஞ்சலில் வைத்துவிட்டு சென்ற மாங்காயை பொன்ராசிடம் சொல்லி எடுத்து வர சொல்லி இருந்தான்.

அதை கையிலெடுத்தவன் பூவிழி இந்த மாங்காயை ரசித்து ருசித்து சாப்பிட்டதை நினைவு கூர்ந்தவன் ஆசையாக அந்த மாங்காயை அவள் கடித்திருந்த அதே இடத்தில்  கடித்தவன் முகம் அஷ்டகோணலானது.

அதை சாப்பிட முடியாமல் வாயில் இருந்து எடுத்தவன் “அமுக்கஞ்சி மாங்காய்  என்ன டி இவ்ளோ புளிக்காது இதை எப்படி நீ சாப்பிட்ட.. ” என்று அவளைத் திட்டியவன் கேமெராவை ஆன் செய்து அவளைப் பார்க்க..

அவளோ யுகேன் அவளுக்காக வாங்கிக்கொடுத்த நைட் கௌனை அணிந்து கொண்டு கட்டிலில் அமர்ந்து மாங்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.