News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்புத் தண்டா காதல் தப்பு 27

by Sinamika Writes
620 views
A+A-
Reset

தப்பு 27

பாஸ்கருக்கு முன்பாகவே ரெஸ்டாரண்டில் அவனுக்காக வந்து காத்திருந்தான் யுகேந்திரன்,

தன் மொபைலை எடுத்து பூவிழி வீட்டின் cctv கேமெராவை ஆன் செய்து அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தான் யுகேன்.

“யுகேன் மாமா! பூவழியைக் கண்டுபிடிச்சுட்டீங்களா? எங்க இருக்கா அவ?” என்று கேட்டபடி அவன் பின்னால் இருந்து யுகேனின் மொபைலில் பூவிழியைப் பார்த்துவிட்ட ஆராதனா கேட்டாள்.

அவள் குரலைக் கேட்டதும் அதிர்ந்த யுகேன் தன் முன்னே வந்த பாஸ்கரையும், அவனோடு வந்த ஆராவையும் புரியாமல் பார்த்தவன் “என்ன டா பண்ணி வெச்சிருக்க?” என்று  அவன் எதிரே அமர்ந்த ஆராவை கண்களால் சுட்டிக்காட்டியவன்., பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டான் யுகேன் .

“நான் உனக்கு மெயில் பண்ணின விஷயத்தை விட முக்கியமான விஷயம் பேசணும் யுகேன் . அதனால தான் இவளை இங்க கூட்டி வந்திருக்கேன்” என்றான்.

“இவளை வெச்சுட்டு என்ன டா முக்கியமான விஷயம் பேசப்போற.. எனக்கு புரியல.” என்றான் யுகேந்திரன் சற்று கடுப்பாக.

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதைக் கேளு சரியா” என்றவன் “ஒரு டூ மினிட்ஸ் வெய்ட் பண்ணு . நானே எல்லாம் விளக்கமா சொல்றேன் உனக்கு” என்றான்.

“எதுக்கு டா வெய்ட் பண்ணனும். அதான் ஏதோ பேசணும்னு முடிவு பண்ணிட்டு ரெண்டு பேரும் வந்திருக்கிங்களே.. வந்த விஷயத்தை சொல்லு முதல்ல ” என்றான் பொறுமை இல்லாமல்.

“இங்க பாரு யுகேன் இன்னொரு ஆள் வர வேண்டி இருக்கு. அவங்க வந்ததும் பேசலாம். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு டா.. ” என்றவன் “என்ன ஆரா வந்தாச்சா? கேட்டியா ?” என்றான்.

“ம்ம்.. ” என்றவள் “கார் பார்க் பண்ணிட்டு இருக்கார் . இப்போ வந்திருவார் ” என்றாள்,

யுகேந்திரனுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. குழப்பத்தோடும், கடுப்போடும் பாஸ்கரை பார்க்க..

“கொஞ்சம் பொறுத்துக்கோ மச்சி..” என்று புருவம் சுருக்கி கெஞ்சியவன் சற்று பதற்றமாகவே இருந்தான்.

சில நிமிடங்களில் இவர்கள் இருந்த டேபிள் பக்கம் ஒரு ஆறடி உருவம் வந்து நிற்க..

அவனைப் பார்த்ததும் ஆராதனா தயக்கமும், சங்கடமுமாக எழுந்து நின்று “வா யுவன் ” என்றாள்.

பாஸ்கர் எழுந்து “ஹெலோ யுவன் ” என்று அவனுக்கு கையைக் கொடுக்க..

“ஹாய்!” என்று பதிலுக்கு கை குலுக்கியவன் யுகேந்திரனைப் பார்த்து “ஹாய் ப்ரோ!.. உடம்பு சரியாகிடுச்சு போல.. ” என்றவன் “ஐயம் யுவஜிஷ் ராஜேந்திரன், எல்லாரும் என்னை யுவன்னு கூப்பிடுவாங்க ” என்று யுகேனின் கையைப் பற்றி குலுக்கினான்.

அவன் பெயருக்கு பின்னால் வந்த பெயரைக் கேட்டதும் யுகேந்திரன், பாஸ்கர் இருவரும் சற்று அதிர்ந்து தான் போயினர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள..

“என்ன ப்ரோ பாக்குறீங்க., ராஜேந்திரன் யாருன்னு யோசிக்கிறீங்களா?”என்றான்.

யுகேனும் , பாஸ்கரும் ஆம் என்று தலையை ஆட்ட..

“நீங்க யோசிச்சது தப்பே இல்ல. மிஸ்டர் ராஜேந்திரனுக்கு நான் இலிஜிமினேட் சன். என்னை இவ்ளோ வருஷம் உங்க எல்லார்கிட்டே இருந்தும் மறைச்சே வெச்சிருந்தார் நம்ம அப்பா ராஜேந்திரன்.” என்றான்.

“யுவன் என்ன சொல்றிங்க! அப்போ நீங்க என் மாமாவோட கீப்.. ” என்று சொல்ல வந்த ஆரா மேலும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்க்க.

“எஸ், ஆரா நீ சொல்றது சரி தான். உங்க மாமாவோட கீப்புக்கு பிறந்தவன் தான் நான். “என்றான் யுவஜிஷ்.

“மச்சான் நான் மெயில் பண்ணினது உண்மையா தான் இருக்கு போல டா. இவன் காவேரியோட பையனா” என்று பாஸ்கர் அதிர்ந்து கேட்க.

“ஹே பாஸ்கி .. என் அம்மா யாருன்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா? நான் ஒரு பிளான் பண்ணி உங்க வீட்டுக்குள்ள வரலாம்னு இவளை கன்சிவ் ஆக்கினா.. நீங்க என்ன என்னைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சு வெச்சிருப்பிங்க போல இருக்கே.. ” என்று ஆராவின் பக்கம் வந்து அவள் தோளில் கை போட்டபடி பேசினான்.

ஆராவை தோளோடு அணைத்தபடி நின்று இருந்த யுவனை பார்த்தவன் ஆராவைப் பார்க்க..

அவன் பார்வையைக் கண்டதும் தன் தோளில் இருந்த யுவனின் கையை எடுத்துவிட்டு அவனை விட்டு சற்று தள்ளி நின்றாள் ஆரா.

அவளையும், யுகேனையும் பார்த்தவன் “நீ சொன்னது போல ப்ரோ கொஞ்சம் டெரரான ஆள் தான் போல.. ” என்றான்.

“ஹே! யாரு டா நீ.. திடீர்னு வந்து என் அப்பாவுக்கு பொறந்தேன்னு நீ சொல்லிட்டா நான் அப்படியே நம்பிருவேன்னு நினைக்குறியா?” என்று கோபத்தில் கத்திய யுகேந்திரன்.

“ஆரா இவன் சொல்றது உண்மையா? நீ கர்ப்பமா இருக்கியா?” என்றான்.

ஆராவோ பதற்றத்தோடும், தயக்கத்தோடும் தடுமாறியவள் அவள் அருகே இருந்த பாஸ்கரிடம் “டேய் என்னை மாமாகிட்டே இருந்து காப்பாத்தி விடுடா.. அவரைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு ” என்றாள்.

“நான் எதுக்கு டி உன்னைக் காப்பாத்தணும். அவன் யாரு என்னன்னே தெரியாம பார்த்து பழகின கொஞ்ச நாள்ல கற்பமாகிட்டு வந்து நிக்க தெரியுது இல்ல. நீயே அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ” என்று கடுப்பில் பேசினான்,

“உன்னை போய் நம்பினேன் பாரு என்னை சொல்லனும் ” என்றவள் “மாமா, அது வந்து நான் படிச்சா காலேஜில் இவரு கெஸ்ட் லெக்டரரா வந்தாரு. முதல்ல எங்களுக்குள்ள சண்டை தான் அதிகம் வரும். அப்பறோம் கொஞ்ச நாள்ல ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். அப்பறோம் எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம் ஆகி.. ” என்று மேலும் பேச முடியாமல் அவள் தடுமாற.

“ஆமா நெருக்கம் ஆகி அவன் குழந்தையை சுமந்துட்டு தான் இவ இங்க கிளம்பி வந்திருக்கா. அதுவும் எப்படினு தெரியுமா இதோ நிக்குறானோ இவளை கர்ப்பமாகிட்டு ஊரைவிட்டு சொல்லாமக் கொள்ளாம ஓடிப்போயிருக்கான். அவனை தேடி தேடி அலுத்துப் போய் தான் மேடம் இந்தியாவே கிளம்பி வந்திருக்காங்க.  ” என்று ஆராதனாவை முறைத்த பாஸ்கர்.

“இன்னிக்கு மேடம் ஆபீஸ்க்கு வந்தாங்களே . அப்போ திடீர்னு போனை பார்த்து ஒரே ஷாக் என்னன்னு கிட்ட போய் பார்த்தா.. வாட்ஸாப்ப்ல ஒரு இமேஜ் வந்திருக்கு அதை ஓபன் பண்ணி பார்த்து தான் இவ ஷாக் ஆகிருக்கா. அது தெரியாம நானும் வேற அந்த போட்டோவை பார்த்து தொலைச்சுட்டேன் ” என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டான்.

“பாஸ்கி .. அந்த போட்டோவை நீங்களும் பாத்துட்டீங்களா? ஐயோ ஆரா இதையெல்லாம் எதுக்கு நீ அவங்களுக்கு காட்டின.. அவங்க நம்ம ரெண்டு பேரையும் என்ன நினைப்பாங்க” என்று வெட்கப்பட்டான் யுவன்.

 அதை காண சகிக்காத யுகேந்திரன் முகத்தை சுளித்தபடி “டேய் என்ன போட்டோ டா அது சொல்லித் தொலையேன்”என்று பாஸ்கரை திட்டினான்.

“ அது வந்து மச்சான் அது எப்படி நான் என் வாயால சொல்லுவேன் பாக்க கூடாது எல்லாம் பார்த்து தொலைச்சுட்டேன்” என்று பாஸ்கர் தான் கண்ட போட்டோவை பற்றி சொல்லத் தயங்க.

“ இப்ப நீ சொல்லப் போறியா இல்ல நான் எழுந்து போகட்டுமா?” என்றான் உச்சபட்ச கோபத்தில்.

“ டேய் இருடா ஆனா ஊன்னா கோவிச்சுக்கிட்டு” என்ற பாஸ்கர் “அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே கட்டில் தூங்கினது போட்டோ எடுத்து இவளுக்கு அனுப்பி இருக்கேன் டா இவன்” என்றான்.

 தூங்கினது தானே அதுக்காக இப்படி என்றான் யுகேந்திரன்.

ப்ரோ நிஜமாவே நீ பூவிழிய கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க போறவன் தானா? இவ்வளவு தத்தியா இருக்க என்ற யுவன்.

 நாங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் டைம் பிசிக்கலா ஒண்ணா இருந்ததுக்கு அப்புறம் எடுத்த போட்டோ அது. எங்க ஞாபகம் இருக்கட்டும் அதைத்தான் அவளுக்கு அனுப்பினேன். அதை வேற இந்த பாஸ்கி பார்த்து தொலைச்சுட்டார் என்றான்.

 அதைக் கேட்டதும் முகத்தை சுளித்த யோகேந்திரன் எதுக்கு அவளை விட்டுட்டு போன இப்ப எதுக்கு திடீர்னு  இருக்க அதை சொல்லு முதல்ல என்றான்.

 ப்ரோ எதுக்கு இவ்ளோ கோபப்படுறீங்க நான் பண்ணுனதுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்கு என்றான் மிகவும் சாதாரணமாக.

 எது அவ வயித்துல புள்ளைய குடுத்துட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப்போனதுக்கு காரணம் இருக்கா என்றான் பாஸ்கர்.

கண்டிப்பா இருக்கு பாஸ்கி என்றான் யுவன்.

ஒரு நிமிஷம் இருடா காவேரி… காவேரி அம்மாவுக்கு நீ பிறந்து இருக்கேன்னு சொன்னா.. அப்போ பூவிழியும் காவிரி அம்மாவோட பொண்ணு தானே அப்புறம் எப்படி யுகேனுக்கு அவர் பூவிழியை கல்யாணம் பண்ணி வச்சாரு. எனக்கு குழப்பமா இருக்கே என்றான் பாஸ்கர்.

அதுதான் எனக்கும் தெரியல எனக்கு தெரிஞ்சு என் அம்மாவுக்கு நான் மட்டும்தான் பிறந்தேன். பூவிழி பிறந்ததா எனக்கு ஞாபகமே இல்லை என்றான் யுவன்.

 அந்தப் பிரச்சனைக்கு அப்புறம் வருவோம். இப்போ நீ ஆராவுக்கு பதில் சொல்லு அவளை எதுக்கு இந்த நிலைமைக்கு ஆளாக்குன கல்யாணம் பண்ணாமலேயே குழந்தைய கொடுக்கறது தப்புன்னு உனக்கு தெரியாதா என்றான் யுகேந்திரன் 

 தெரியும் தெரியும் ப்ரோ தெரிஞ்சுதா அவள இந்த நிலைமைக்கு ஆளாக்கனும் அதுக்கு ஒரு காரணமும் இருக்கு என்றான் சற்று இறுகிய குரலில் யுவன்.

 என்ன காரணம் நீ செஞ்ச தப்புக்கு என்ன பொய் சொல்ல போற என்றான் யுகேந்திரன் 

 நான் எதுக்கு யுகேன் பொய் சொல்லணும். அப்பா பேரு சொல்ல முடியாம இத்தனை வருஷம் இந்த உலகத்துல வாழ்றதுக்கு எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியுமா அம்மா, அப்பா ரெண்டு பேருமே உயிரோடு இருந்தும் இந்த உலகத்துல யாரும் இல்லாத அனாதை போல வாழ்றது  எவ்வளவு கொடுமைனு தெரியுமா? என்று தன் கோபத்தை காட்டியவன்.

அதை நான் அனுபவிச்சு இருக்கேன். காவிரி தான் என்னோட அம்மான்னு தெரியும் ராஜேந்திரன் தான் என்னோட அப்பான்னு தெரியும் ஆனா அதை இந்த உலகத்துக்கு சொல்ல முடியாத பாவியா தானே இத்தனை வருஷம் வாழ்ந்திட்டு இருந்தேன்.

 நீ அனுபவிச்ச எல்லா வசதியையும் நானும் தான் அனுபவிச்சேன். அப்பா எனக்கு இப்போ வரை எந்த குறையும் வச்சதில்லை ஆனா ஒரே ஒரு குறை என்ன இந்த உலகத்துக்கு அவரோட மகனா அடையாளம் காட்டல என் அம்மாவும் அவரோட மனைவியா அடையாளம் காட்டல அது தான் என்னால பொறுத்துக்க முடியல அதுக்காகத்தான் நான் என்றவன் ஆராவைப் பார்த்தான்.

அவன் நிலையை முதல் முறை கேட்ட ஆராவிற்கு யுவன் மீது பரிதாபம் உண்டானது. அவனை கண்கள் கலங்க அவள் பார்க்க..

 என்ன மன்னிச்சிடு ஆரா என்னோட சுயநலத்துக்காக உன் வாழ்க்கையை நான் கெடுத்துட்டேன். அதுக்காக நான் உன்னை அப்படியே விட்டுட்டு போவேன்னு அர்த்தம் இல்லை.

 இந்த உலகத்துக்கு என்னை நான் வெளிக் காட்டணும் இவர்தான் என் அப்பா! இவங்க தான் என் அம்மா! இதுதான் என் குடும்பம்னு எல்லாருக்கும் நான் காட்டணும்.அதுக்காக தான் நான் இப்படி செய்ய வேண்டியது போயிடுச்சு என்ன மன்னிச்சிடுடி!  சாரி.. என்று அவள் கையை பற்றிக் கொண்டு குரல் தழுதழுக்க கெஞ்சினான் யுவன்.

 ஏன் யுவன் என்ன அப்படியே விட்டுட்டு போனீங்க இந்த உண்மையை என்கிட்ட சொல்லி இருந்தா நானே உங்கள கூட்டி வந்து உங்களுக்காக நியாயம் கேட்டு இருப்பேனே.. என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள்.

 அவளின் இந்த மனதை எப்போதுதான் முழுவதுமாக அறிந்தால் யுவன் தனக்காக முதல் முதல் கவலைப்பட்ட ஒரு ஜீவன் என்றால் அது ஆராதனா தான்.

அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தியவன் அழாதடி? என்ன மன்னிச்சிரு. உன்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்னோட சுயநலத்துக்காக உன்ன நான் யூஸ் பண்ணிக்கிட்டேன் என்ன மன்னிச்சிடுடி என்று அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான்.

 இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த பாஸ்கருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

 ஒருவர் மீது ஒருவர் இவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு அக்கரையாக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது.

 ஆரா மேல இவ்வளவு லவ் வச்சிருக்க.. அப்புறம் எதுக்கு அவள் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிட்டு  அவளை விட்டுட்டு போன என்றான் பாஸ்கர் சற்று ஆதங்கமாக.

ஆராவோட கர்ப்பம் வீட்ல தெரியணும் அதுக்கு காரணம் யாருன்னு எல்லாரும் கேக்குறப்போ அப்போ.  நான் வந்து அங்க நிக்கணும் நான் தான் ஆரோவோட கர்ப்பத்துக்கு காரணம்னு தெரிஞ்சதும் அப்பா என்ன பண்ணுவார். அவரால் என்ன அதுக்கப்புறம் ஒதுக்கவே முடியாது அந்த ஒரே காரணதுக்காக தான் நான் அவளை விட்டுட்டு போனேன் என்றான்.

 அப்புறம் எதுக்கு இப்படி திரும்பி வந்த என் தான் யுகேந்திரன் கடுப்பாக.

ஒரு வேகத்துல அப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு ஆராவை விட்டுட்டு போயிட்டேன். ஆனா அதுக்கப்புறம் என் மனசாட்சி என்ன கழுவி ஊத்துச்சு கடைசில நானும் என் அப்பா மாதிரியே ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சிட்டேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.. கவலைப்பட்டேன் என்றவன்.

அவளை பாக்கணும்னு முடிவு பண்ணி தான் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்த போட்டோவை ஆராவுக்கு அனுப்பி அவகிட்டே பேசலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்குள்ள பாஸ்கி அந்த போட்டோவை பார்த்துட்டார்.  நான் நேரிலேயே வர வேண்டியதா போயிடுச்சு என்றான்.

 நீ சொல்றதெல்லாம் என்னால நம்ப முடியலையே என்றான் யுகேந்திரன்.

 நான் என்ன செஞ்சா நீ நம்புவ ப்ரோ என்றான் யுவன்.

எனக்கு பூவிழியைப் பத்தி தெரியணும். அவ உண்மையாவே யாருன்னு தெரியணும். காவேரி அம்மாவுக்கும், அவளுக்கும் என்ன உறவுன்னு தெரியணும். அதை நீ செஞ்சிட்டா நீ சொல்றத நான் நம்புறேன் என்றான் யுகேந்திரன்.

ப்பூ… இவ்ளோதானா.. சீக்கிரமாவே நீங்க கேட்டதை நான் செய்கிறேன் நான் தான் உன்னோட தம்பின்னு ப்ரூஃப் பண்றேன் ப்ரோ என்று யுகேந்திரன் முன்பு கை நீட்டினான்.

 நீட்டிய கையையும் அவனையும் பார்த்துவிட்டு எழுந்த யுகேந்திரன். நீ முதல்ல நான் கேட்டத செய் அதுக்கப்புறம் இந்த அண்ணன் தம்பி உறவை எல்லாம் பாத்துக்கலாம் என்றவன் டேய் வாடா உன் கிட்ட நான் நிறைய பேச வேண்டி இருக்கு என்று பாஸ்கரை அழைத்தான்.

 டேய் அப்போ ஆராவை வீட்டில விடணுமே என்றான் பாஸ்கர்.

அதான் அவன் இருக்கானே அவனுக்கு கொண்டு போய் விட சொல்லு என்றவன் ஆராவைப் பார்த்து நீ வரும்போது பூவிழி கிடைச்சிட்டாளான்னு கேட்டியே என்றான்.

 அவள் ஆமாம் என்று தலையாட்ட.

 அவர் எங்கேயும் போகல நான் தான் அவளை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருக்கேன் இந்த விஷயம் நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும். வீட்ல யாருக்கும் தெரிஞ்சது என்று விரல் உயர்த்தி அவளை மிரட்ட.

அய்யோ!  இல்ல மாமா சத்தியமா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்று அவசரமாக மறுத்தாள்.

 பாஸ்கரன் யுகேந்திரனும் கிளம்பி விட ஆராவின் கையை பற்றி கொண்டு அந்த மேஜையில் அமர்ந்தவன் அவளோடு காதல் மொழி பேசத் தொடங்கியிருந்தான் யுவன்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.