Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 204

உன் ரகசிய ரசிகை நான் 204

by Layas Tamil Novel
95 views

EPISODE-204

ஹாஸ்பிடலில் இருந்து வேதாச்சலத்தை விக்கி தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

அவருக்கு ஆரத்தி எடுத்த நிலானியும் மாதவியும் அவரை வீட்டிற்குள் அழைக்க..

விக்கியின் வீட்டு வாசல் வரை வந்தவர் அவன் வீட்டிற்குள் நுழையாமல் விக்கியின் முகத்தை பார்த்தபடி நின்று இருந்தார்.

என்னப்பா அப்படி பாக்குறீங்க வாங்க உள்ளே போகலாம் என்று விக்கி அவரை சிரித்து முகமாக வீட்டிற்குள் அழைக்க…

உன்னை அந்த வீட்டிலிருந்து விரட்டி விடும் போது நான் எதுவுமே சொல்லாம அமைதியா இருந்துட்டேன் விக்கி ஆனால் நீ அதை எல்லாம் எதையும் மனசுல வச்சுக்காம இன்னைக்கு இப்படி சிரிச்சு முகமா சந்தோஷமா என்ன உன் வீட்டுக்கு கூட்டிட்டு வர…

இதிலிருந்து தெரிய வேண்டாம் உன்னோட மனசு எவ்வளவு சுத்தமா இருக்குதுன்னு சொல்லிட்டு என்றார் வேதாச்சலம்.

அப்பா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க நீங்க அந்த வீட்டை விட்டு என்ன தூரத்தில் அதுக்கான காரணம் ஒன்னு இருக்கு தானே செஞ்சது.

அப்போ நீங்க எனக்கு நல்லது செய்யணும் நெனச்சு தானே அந்த வீட்டை விட்டு அனுப்பி இருக்கீங்க. நானும் அந்த வீட்டை விட்டுவிட்டு அம்மாவோட தனி வந்தேன் எனக்கு எந்த குறையும் இல்லை நான் எதை பத்தியும் நினைக்க வும் இல்லை நீங்கள் கண்டது போட்டு மனச குழப்பிக்காம முதல்ல வீட்டுக்குள்ள வாங்க மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லி அவரின் கைப்பிடித்த விக்கி வேதாச்சலத்தை தன் வீட்டிற்குள் அழைத்து சென்றான்.

அவரை அழைத்து வந்து ஹாலில் அமர வைத்து விட்டு வேதாச்சலம் சிவகாமி இருவரும் தங்குவதற்கு ஆன அறையை தயார் செய்ய விக்கி சென்று விட்டான்.

வேதாச்சலத்தின் அருகில் அமர்ந்திருந்த சிவகாமி அவரை பார்த்த வாரே இருக்க …

அதை கவனித்த நிலானி தன் அருகில் நின்றிருந்த மாதவியின் கையில் தன்னுடன் வா என்று அழைத்தால்.

மாதிவி புரியாமல் என்ன என்று நிலானியை கேட்க..

அவளிடம் கண் ஜாடை செய்து வேதாச்சலத்தையும் சிவகாமியையும் காட்டி நிலானி அவளை தன்னுடன் வர அழைக்க…

அவள் ஜாடை செய்து வேதாச்சலத்தையும் சிவகாமியையும் தனியே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள என்று இடம் கொடுத்து விட்டு உள்ளே செல்லலாம் என்று நிலானி அழைத்ததை மாதவி புரிந்து கொள்ளவில்லை.

மாதவி இப்படி தட்டியாக இருப்பதை பார்த்த நிலானி தன் தலையில் அடித்துக் கொண்டவள் சிவகாமியிடம் அத்தை நீங்க மாமா கூட பேசிக்கிட்டு இருங்க நான் போய் உங்க மாமாவுக்கு உங்களுக்கும் சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி உள்ளே செல்ல அப்போதும் மாதவி அங்கேயே நின்று இருக்க நிலானி மாதவியை பார்த்து மாதவி கொஞ்சம் என் கூட வாயேன் எனக்கு கொஞ்சம் கிச்சன்ல ஹெல்ப் பண்ணு என்று சொல்ல ஏதோ வரேன் அண்ணி என்று சொல்லி மாதவி அவளுடன் சென்றாள்.

ஹாஸ்பிடலில் இருந்த எந்த ஒரு வார காலத்தில் நிலானியும் மாதவியும் சற்று நெருக்கமாக பழக ஆரம்பித்திருந்தனர்.

கிட்சனிற்குள் வந்ததும் மாதவியை இழுத்து தன் அருகில் நிற்க வைத்த நிலானி. ஏ மாதவி நான் உன்கிட்ட ஜாடை செய்து என் கூட உள்ள வாடின்னு எத்தனை முறை கூப்பிடுறது நான் உன்கிட்ட ஜாடை பேசினது உனக்கு சுத்தமா புரியவே இல்லையா அப்படியே தட்டி மாதிரி நின்னுட்டு இருக்க என்றால் கடுப்பாக.

அண்ணி நீங்க எப்போ என்ன ஜாடை செய்து கூப்பிட்டீங்க நீங்க கூப்பிட்டது எனக்கு தெரியவே இல்லையே என்றால் மாதவி.

உன்னை எல்லாம் கட்டிக்க போறவன் ரொம்ப கஷ்டப்பட போறான் உன் கிட்ட ஒரு விஷயத்தை சொல்லி புரிய வைத்து அந்த சொன்ன விஷயத்தை நடத்தி காட்டுறதுக்குள்ள உன் புருஷன் ஒரு வழியாகிவிடுவான் என்று சொன்னால் நிலானி.

அவரை அப்படி எல்லாம் சொல்லாதீங்க அவர் ரொம்ப ஸ்மார்ட் அதெல்லாம் நல்லபடியா என்ன பாத்துக்குவார் என்று போதியை நினைத்து மாதவி சொல்ல..

ஏற்கனவே போதியை பற்றியும் மாதவியின் உடனான அவனுடைய உறவைப் பற்றியும் அங்கு இருந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் நிலானிக்கு மாதவி போதியை பற்றி தான் சொல்கிறாள் என்று புரிந்தது.

எனக்கென்ன நீயாச்சு அவராச்சு என்னமோ பண்ணுங்க என்றவள் சரி வா நம்ம நைட்டு சாப்பிட எதுவும் டிபன் ரெடி பண்ணலாம்.

அத்தை மாமா கூட கொஞ்ச நேரம் செலவழிக்கட்டும் ஏற்கனவே அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் பிரிந்து இருந்தாங்க ஹாஸ்பிடல்லயும் அவங்க ரெண்டு பேரையும் தனியா யாருமே விடல யாரோ ஒருத்தர் அவங்க கூடவே இருந்துட்டு இருந்தோம் சென்றவள் சமையல் கட்டில் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தால்.

அவள் சமையல் கட்டில் பாத்திரங்களை உருட்டி சத்தம் எழுப்பியதை கேட்க முடியாத மாதவி அய்யோ அண்ணி என்ன பண்ணிட்டு இருக்கீங்க ஏன் இப்படி எல்லாம் பாத்திரத்தையும் உருட்டிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டால்.

அதுவா அது வந்து மாதவி எத்தனை நாளா அத்தையும் நம்ம வீட்ல இருக்க வேலையாட்களும் தான் சாப்பாடு செஞ்சுட்டு இருந்தாங்க.

இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களா இல்லையான்னு சரியா தெரியாததுனால வீட்ல இருந்த வேலையாட்கள் எல்லாம் நாளைக்கு வர சொல்லி லீவு கொடுத்து அனுப்பிட்டேன்.

அத்தையும் இப்போ மாமா கூட இருக்காங்க எனக்கு சுத்தமா சமையல் செய்யவே தெரியாது என்று நிலானி சங்கடமாக சொல்ல…

ப்பூ… இவ்வளவுதானா அண்ணி இதுக்கு ஏன் சங்கடப்படுறீங்க தள்ளுங்க நானே சமைக்கிறேன் என்றால் மாதவி.

மாதவி உனக்கு சமையல் எல்லாம் செய்ய தெரியுமா என்று ஆச்சரியமாக கேட்டால் நிலானி.

என்ன அண்ணே இப்படி கேக்குறீங்க நான் எங்க வீட்ல வேலைக்குன்னு சேர்ந்ததே சமையல் காரியா தானே என்றவள்.

நீங்க எதுவும் செய்ய வேண்டாம் போய் அண்ணாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க நான் எல்லா வேலையும் கிச்சன்ல பாத்துக்குறேன் என்று மாதவி அது கிச்சனில் உதவி செய்கிறேன் என்று சொன்ன நிலானியை வலுக்கட்டாயமாக வைத்தாள்.

நான் சென்றதும் மல மல சமையல் கட்டில் வேலைகளை ஆரம்பித்த மாதவி. ஒரு மணி நேரத்திற்குள் வகை வகையாக உணவுகளை சமைத்து அதை டைனிங் டேபிளில் அடுக்கி இருந்தால்.

விக்கியுடன் சேர்ந்து சிவகாமியின் அறையை வேதாச்சலம் ஓய்வெடுப்பதற்காக ரெடி செய்துவிட்டு வந்த விக்கிக்கும், நிலானிக்கும் வந்த மாதவியின் சமையல் வாசம் பசியை கிளற தானாகவே இருவரும் டைனிங் டேபிளுக்கு வந்தனர்.

அங்கே அவர்களுக்கு முன்பாக வேதாச்சலமும் சிவகாமியும் அமர்ந்திருக்க…

என்ன அம்மா ஸ்பெஷல் இன்னைக்கு சமையல் ரொம்ப கம கமன்னு வாசல் வர வரும் போல இருக்கு என்று கேட்டான் விக்கி.

இன்னைக்கு நான் சமைக்கில விக்கி உன்னோட தங்கை மாதிரி சமைச்சி இருக்கா என்றார சிவகாமி.

மாதவி தான் சமைத்தால் இன்று தெரிந்ததும் விக்கி மாதவி நீ செய்த சாப்பாட்டுடைய வாசத்திலேயே அந்த உணவு எவ்வளவு சுவையா இருக்குன்னு என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடியுது என்றவன்.

எத்தனை அருகில் நின்றிருந்த நிலானி பார்த்தவாறு இதோ இவளுக்கும் கொஞ்சம் சமையல் சொல்லிக் கொடு மாதவி.

கல்யாணம் ஆனதிலிருந்து பொண்டாட்டி கையால ஒரு சுடுதண்ணியாவது வச்சு குடிக்கணும்னு நான் நினைக்கிறேன் அதுக்கு ஒரு முறை கூட வாய்ப்பு கொடுக்காமல் என் பொண்டாட்டி சமையல் கட்டு பக்கமே போகாம படிக்கிறேன்னு பொய் சொல்லிட்டு டிமிக்கி கொடுத்துட்டு இருக்கா என்றால் விக்கி.

விக்கி அவாரு சொன்னதும் நிலானி அவனை முறைத்தவள் அதெல்லாம் ஒன்னும் இல்ல.

நான் சமையல் செய்ய கத்துக்கறேன்னு அத்தை கிட்ட சொன்னேன். ஆனா அவங்க தான் நீ முதல்ல படிப்புல கவனம் செலுத்து இதையெல்லாம் எப்போ வேணா கத்துக்கலாம் என்று சொல்லி என்ன வேலை செய்யவே விடல என்றால் நிலானி.

சப்போர்ட் சிவகாமியும் நிலானிக்கே ஆதரவாக தேவிக்கு அவள சும்மா எதுவும் சொல்லிகிட்டு இருக்காத அவ படிப்பு முடிஞ்சதும் தானாகவே எல்லாமே கத்துக்குவ என்று சொல்லி நிலானியை பார்த்து இல்லியா நிலா.. என்று கேட்க.

ஆமா அத்தை நான் படிப்பு முடிஞ்சு வந்ததும் கிட்டேயும் மாதவி கிட்டயும் சமையல் கத்துக்கிட்டு என் புருஷனுக்கு சாப்பாடு செஞ்சு போட்டு ஒரு நாள் அசத்த போறேன் பாருங்க என்றால் நிலானி.

அப்படி மட்டும் நீ செஞ்சு கொடுத்துட்டேன் எனக்கு சமையல் செஞ்சு கொடுத்த என் பொண்டாட்டி கைக்கு வைரத்துல வளையில் போடுவேன் என்றான்.

தாராளமா என் மருமகளுக்கு நீ வாங்கி போடலாம் என்று சிவகாமி சொல்ல… அம்மா அப்போ என் கைக்கு நான் தானே இப்போ இவ்வளவு உதவியும் தனியா சமைச்சேன் அப்போ எனக்கு எந்த பரிசும் இல்லையா என்று கேட்டால் மாதவி.

ஏன் இல்லாம உனக்கு தானே என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கி தரேன் என்றான் விக்கி.

சரி அண்ணா நீங்க முதல்ல நான் செஞ்சு வெச்சது சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நான் இன்னொரு நாள் எனக்கு வேணும்கிறது உங்க கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன் என்றாள்.

சரி என்று அவளை உணவு பரிமாறச் சொல்லிவிட்டு உணவை சாப்பிட ஆரம்பித்தான் விக்கி..

இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க…

அப்போது வேதாச்சலத்தை பார்ப்பதற்காக போதியும் அவனுடைய அம்மா அப்பாவும் அங்கே வந்திருந்தனர்.

இவர்கள் பேசி சிரிக்கும் சத்தம் வாசல் வரை கேட்க வந்தவர்கள் இவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து அங்கேயே நின்று விட்டனர்.

அனைவரிடமும் பேசியவாறு நிலானி டைனிங் டேபிளை சுற்றி சுற்றி வந்து ஒவ்வொருவராக உணவை பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டு இருந்தால்.

இதை எல்லாம் வாசலில் நின்றவாறே… பார்த்துக் கொண்டிருந்த போதியின் அம்மா பரவாயில்லையேடா என் மருமக எவ்வளவு சுறுசுறுப்பா வேலையை இழுத்து போட்டுட்டு செய்கிறாள் என்று பாரேன் என்று போதியிடம் சொல்லிக் கொண்டே நாங்களும் உங்க கூட வந்து எங்க மருமக கையால சாப்பிடலாமா என்று கேட்டுக் கொண்டே போதியின் அம்மா உள்ளே சென்றார்.

அவர் அப்படிச் சொன்னது கேட்டதும் அனைவரும் திரும்பி அவர் சத்தம் கேட்டு வாசல் புறம் திரும்ப அங்கே போதி தன் பெற்றோருடன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

அவர்களைப் பார்த்ததும் விக்கி எழுந்து சென்று வரவேற்றுவேன் அவர்களையும் அழைத்து வந்து தங்களோடு அமர வைத்து என் தங்கச்சி செஞ்ச சாப்பாடு நீங்களும் சாப்பிட்டு பாருங்க என்று சொல்ல…

நாங்க சும்மாதான் சாப்பிடுவோம்னு சொன்னோம் வேலைக்கு எங்களுக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க என்று சொன்னார் போதியின் அம்மா.

என்ன ஆன்ட்டி இப்படி சொல்றீங்க கொஞ்சமா சாப்பிடுங்க என்ற விக்கி அவரை வற்புறுத்த..

உங்க வீட்டில சாப்பிடணும்னா நாங்க சொல்றது கண்டிஷனுக்கு நீங்க ஒத்துக்கிட்டா தான் சாப்பிடுவோம் என்றார் போதியின் அம்மா.

என்ன அடி சாப்பிடுவதற்கெல்லாம கண்டிஷன் போடுவீங்க சரி சொல்லுங்க நீங்க எந்த கண்டிஷன் சொன்னாலும் அதுக்கு நான் சம்மதிக்கிறேன் என்று விஷயம் தெரியாமல் விக்கி அவரிடம் சொன்னான்.

நான் யோசிச்சுக்க விக்கி என்கிட்ட வாக்கு கொடுத்துட்டேன் நான் போடுற கண்டிஷனை நீ செஞ்சு தான் ஆகணும் என்றவர்.

நாங்க உங்க வீட்டில கை நனைக்கனும்னா நீங்க உங்க வீட்டு பொண்ண என் மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்தால் மட்டும்தான் உங்க வீட்ல நான் கை நினைப்பேன் என்று முறுக்கிக் கொண்டு நின்றார் போதியின் அம்மா.

அவர் அப்படி சொன்னதும் அவர்களை பார்த்து சிரித்தபடி நின்றிருந்த மாதவி. என தன்னை திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி கேட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல் கையில் வைத்திருந்த பாத்திரத்தை டைனிங் டேபிள் வைத்துவிட்டு கிச்சனுக்குள் ஓடிவிட்டாள்.

அவள் வெட்கப்பட்டு உள்ளே செல்வதை ரசித்தபடி நின்றிருந்த போதி விக்கியிடும் திரும்பி சீக்கிரமா சொல்லுங்க விக்கி என்றான்.

இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு நீங்களும் மாதவியும் ஒருத்தர ஒருத்தர் விரும்புகிறீர்கள் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன்னு நாங்க எதுவும் சொல்லலையே என்றான் விக்கி.

அப்போ அடுத்த முகூர்த்தத்திலேயே மாதவியை போதிக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க உங்களுக்கு சம்மதமா என்றால் போதியின் அம்மா.

அவர் இவ்வளவு வேகமாக அடுத்தடுத்த விஷயங்களை பேசவும் அமர அதை எல்லாம் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த வேதாச்சலமும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்து அவர்கள் பின் திரும்பி போதியின் அம்மாவிடம்.

இவ்வளவு அவசரப்படுறீங்க நாங்களே எங்க பொண்ணயும், பையனையும் இத்தனை வருஷமா பிரிந்து இருந்து என் பொண்ணு கூடயும் பையன் கூடையும் இப்போதுதான் ஒண்ணா ஒரே வீட்ல இருக்கோம்.

அதுக்குள்ள நீங்க வந்து என் மகளை என்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்களே என்று கேட்டார் சிவகாமி வருத்தமாக.

அப்படி இல்ல சம்மந்தி எங்களுக்கு உங்க மகளை உங்ககிட்ட இருந்து பிரிச்சு கூட்டிகிட்டு போகணும்னு ஆசை இல்ல.

உங்க மக அந்த சங்கவி கிட்ட மாட்டிகிட்டு பட்ட கஷ்டத்தை நினைத்து நினைத்து என் பையன் எப்படி புலம்பினான்னு எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றார் போதியின் அப்பா.

எங்களுக்கு புரிகிற சம்பந்தி அதுக்காக இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் என்று வேதாச்சலம் இழுக்க…

விக்கி வேதாச்சலத்திடம் அப்பா இன்னிக்கு இல்லேன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் நாம மாதவியை போதியுடைய வீட்டுக்கு அனுப்பி வைத்து தானே ஆகணும்.

அதை ஏன் அவங்க கேட்கும் போதே நாம சந்தோசமா செய்து கொடுக்கக் கூடாது என்றான்.

விக்கி சொன்னதும் சரியென வேதாச்சலத்திற்கு பட அப்போ சரி சம்பந்தி என் பையன் சொன்னது போலவே செஞ்சிடலாம் நீங்களே ஒரு நல்ல நாளா பார்த்து குறிச்சுட்டு வாங்க அந்த அன்னைக்கு மாதவிக்கும், மாப்பிள்ளைக்கும் நிச்சயம் பண்ணிடலாம்.

அப்போவே இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு நாளை குறிச்சிடலாம் என்று சொன்னார் வேதாச்சலம்.

அதுக்கெல்லாம் அவசியமே இல்ல சம்மந்தி நாங்க வரும்போது ஒரு முடிவுடன் தான் வந்தோம் நிச்சயமெல்லாம் எதுவும் வேண்டாம் நேரடியாக நம்ம கல்யாணத்துக்கே போயிடலாம் என்றவர்.

தன் கையில் இருந்த ஒரு காகிதத்தை வேதாச்சலத்திடம் கொடுத்து இதுல நாங்க மூணு தேதி குறிச்சிட்டு வந்திருக்கோம். இந்த மூணு தேதியில் உங்களுக்கு எந்த தேதி வசதி படுமோ அந்த அன்னைக்கு உங்க பொண்ணு மாதவிக்கும் என் மகன் போதிக்கும் கல்யாணம் வச்சுக்கலாம் என்றார் போதியின் அம்மா.

அவர் இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்வதை பார்த்து அங்கிருந்தவர்கள் அசந்து போக…

என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க என்னோட மகனோட கல்யாணத்த எவ்வளவு சீக்கிரத்துல பாக்கணும்னு நான் எத்தனை நாள் கனவு கண்டேன்னு எனக்குத்தான் தெரியும்.

அதனால இப்படித்தான் எல்லாமே சீக்கிரம் சீக்கிரமா நடக்குது நீங்க இதய பத்தியும் பெருசா கவலைப்பட வேண்டாம் உங்க பொண்ணு மட்டும் எங்களுக்கு கொடுத்தால் போதும் என்றார்.

அவரின் மூச்சடைக்கி வைத்த அன்பை எண்ணி மற்றவர்கள் திகைத்துப் போய் இருக்க…

எனக்குள் இருந்து இவர்கள் பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாதவியை அழைத்த போதியின் அம்மா.

மாதவியை தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்திக் கொண்டவர் சீக்கிரமா நான் கொடுத்த மூனு நாள்ல ஒரு நல்ல நாளா அதுவும் எந்த நாள் பக்கத்துல இருக்கோ அதை பார்த்து சம்பந்தி என் மருமகள நான் சீக்கிரமா என் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் என்று சொன்னார் போதியின் அம்மா..

என் மகன் என் தங்கச்சியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதில்ல உங்க மகனை விட நீங்க தான் ரொம்ப ஆர்வமா இருக்கீங்க ஆன்ட்டி என்று சொன்ன விக்கி நாங்க தான் கல்யாணத்துக்கு சம்படித்துட்டோமே இப்பவாவது வந்து உங்க மருமகள் செய்தத சாப்பிடலாமே என்று கேட்டான்.

தாராளமா இப்போவே சாப்பிடலாம் என்றவர் மாதவியை அழைத்து வா மருமகளே… அத்தைக்கு நீ என்னென்ன செஞ்சு வெச்சிருக்கோ எல்லாத்தையும் பரிமாறு நான் என் மருமகள் செஞ்சது ஆசை தீர சாப்பிட போறேன் என்று சொல்லி மாதவியை பரிமாற சொல்லி அழகு பார்த்தவர் அவள் பரிமாறிய உணவுகளை எல்லாம் சாப்பிட ஆரம்பித்தார்.

போதியின் அம்மா கொடுத்து கொடுத்த நாளிலேயே சரியாக இன்றிலிருந்து 20 நாட்கள் கழித்து ஒரு முகூர்த்த தேதி அதில் இருந்தது அதையே வேதாச்சலமும் குறித்து நாங்க சம்பந்தி இதுல நாங்க நாலு குறிச்சி வச்சிருக்கோம் இந்த தேதியிலேயே நம்ம கல்யாணத்த வச்சுக்கலாம் என்று சொன்னார்.

அப்பா அந்த காகிதத்தை வாங்கி பார்த்தவர் தன் மகனை பார்த்து சந்தோசமா என்று கேட்க..

போதி அப்பா டபுள் சந்தோஷம் என்று சொல்லி மாதவியை பார்த்தான். அவள் போதியை பார்த்து வைக்கப்பட்டு கொண்டே… போதியின் அம்மாவின் தட்டில் உணவுகளை வைத்துக்கொண்டு இருந்தால்.

மருமகளே போதும் போதும் இதுக்கு இத்தனை சாப்பாடு எனக்கு வைக்கிறீங்க கொஞ்சமா உங்க வீட்டுக்காரனையும் கவனிங்க அவன் ரொம்ப நேரமா நீ அவனுக்கு சாப்பாடு பரிமாறுவேன்னு உன்னையே பார்த்துட்டு இருக்கேன் என்று சொன்னார்.

மாதவி அவர் சொன்னதை கேட்டு வெட்கப்பட்டவர் போங்க அத்தை அவருக்கு நீங்களே சாப்பாடு போடுங்க நான் போட மாட்டேன் என்று சொல்லி தன்னரைக்கு ஓடிவிட்டாள்.

கல்யாணம்னு சொன்னாலே பிள்ளைகளுக்கு எல்லாம் வெட்கம் வந்துருது என்று பெரியவர்கள் அவர்களை கிண்டல் செய்தவாறு சாப்பிட ஆரம்பித்தனர்.

❤️

முடியாது… முடியவே முடியாது…. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்கேடா… நாம என்ன வெளிநாட்டில் வாழ்ந்துட்டு இருக்கோம்னு நினைச்சுட்டு இருக்கியா. நம்ம இருக்கறது இந்தியா நம் நாட்டுக்குனு ஒரு பண்பு கலாச்சாரம்னு இருக்கு அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு எப்படி நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ கூட தாலி கட்டிக்காம அது என்ன லிவிங் டு வெதர் அப்படி தான் கல்யாணம் பண்ணிக்காமலே அவ கூட போய் வாழனும்னு சொல்ற இது எல்லாம் என்ன பழக்கம் என்று கேட்டார் பவன்இன் அம்மா.

அம்மா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. இந்த காலத்துல இது எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம். அதுவும் இல்லாம அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆகி இருந்ததுனால உறவுகள் மேல ரொம்பவே பயந்து போய் இருக்கா என்றான்.

அதுக்காக இப்படியே கல்யாணம் பண்ணிக்காமயே ஒன்னும் ஒரே வீட்ல புருஷன் பொண்டாட்டியா வாழறேன்னு சொல்றதெல்லாம் எந்த விதத்துலடா நியாயமா இருக்கு என்று கேட்டவர் இப்போ ஒன்னும் கெட்டு போகல நீ மதுவை நம்ம வீட்டுக்கு அழிச்சிட்டு வா நான் அவகிட்ட பேசி புரிய வைத்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன் என்று சொன்னார் பவன்இன் அம்மா

ஐயோ அம்மா நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க எதுவும் மதுகிட்ட பேச வேண்டாம் நான் சொல்றது தான் முடிவு.

ஒரு நல்ல நாளா பார்த்து நான் மதுவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வீட்ல புருஷன் பொண்டாட்டியா வாழத்தான் போறோம்.

நாங்க ஒன்னும் உங்களை விட்டுட்டு தனியா வேற எங்கேயும் போய் எனக்கு ரொம்ப சொல்லுடி உங்க கூட தானே நாங்க வந்து இருக்கிறோம் என்று சொல்கிறேன் என்றால் பவன்.

இங்கே பாருடா என்கிட்ட இப்படி வந்து சொல்ல உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா அம்மாவை வச்சுக்கிட்டு ஒரு பொண்ணு கூட தாலி கட்டாமல் ஒரே வீட்டில் ஒரே அறையில் குடித்தனம் நடத்துறேன்னு சொல்றது எனக்கு சுத்தமா பிடிக்கல அதுக்கு மேல உன்னோட இஷ்டம் நான் இதுக்கு மேல உன்கிட்ட பேச விருப்பப்படவில்லை. நீ நினைச்ச மாதிரி மதுவை கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்காம நம்ம வீட்டில் வாழணும்னு நினைச்சீங்கன்னா அவளை என்னிக்கி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரியோ அன்னைலிருந்து என்கிட்ட பேசுறது விட்டுட்டு இதுதான் என்னோட முடிவு என்று சொன்னவர் அவன் பதிலுக்கும் காத்திராமல் எழுந்து உள்ளே சென்றார்.

❤️

You may also like

1 comment

S joshna December 14, 2025 - 11:56 am

Super akka 💐

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured