மூர்க்கன் 2
பாஸ்! அந்த மாணிக்கம் மறுபடியும் எங்கேயோ எஸ்கேப் ஆயிட்டான். அவன எங்களால கண்டுபிடிக்க முடியல அவனோட பொண்ண மட்டும்தான் கூட்டிட்டு வந்திருக்கும் என்று வந்தான் அவன் வேலையாள்.
அவ எங்க என்றான் ராவண்
பாஸ்! வெளியே தான் இருக்கா என்றான்.
கூப்பிடு என்றான்
அந்த வேலையால் அவசரமாக தலையாட்டிவிட்டு வெளியே வேகமாக சென்றவன் உள்ள வாங்க ரெண்டு பேரும் என்று அழைத்துக் கொண்டு முன்னால் செல்ல அவர்கள் பின்னால் மாணிக்கத்தின் மகள் இளங்கிளியும் அவர் மனைவி விசாலாட்சியம் உள்ளே நுழைந்தனர்.
இருவருமே பயந்து போய் தான் இருந்தனர் அது அவர்கள் முகத்தை பார்க்கும் போதே தெரிந்துவிடும் ஹாலில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த ஒரு பெரிய மர நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அருகில் இருந்த தன் மயிலுவை வருடி கொடுத்துக் கொண்டு உள்ளே வந்தவர்களை உருவம் சுருக்கி பார்த்தால் அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அந்த அடியால் சார் இந்த பொண்ணு மட்டும் தான் தூக்கிட்டு வருதா இருந்தது அந்த பொண்ணோட அம்மா இது இவங்க பயங்கரமா ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க அதனால வேற வழி இல்லாம அவங்களையும் சேர்த்து இங்க தூக்கிட்டு வர வேண்டியது ஆயிடுச்சு என்றான்.
வீட்டுக்குள் நுழைந்தவர்கள் அந்த இடத்தை சற்று பதற்றத்தோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தபடி மெல்ல நடந்து வந்தனர் சீக்கிரம் வாமா என்று அந்த வேலையால் அதட்ட தயங்கி படி நடந்து வந்து இருவரும் சற்று வேகம் எடுத்து ராவண் முன் வந்து நின்றனர்
உள்ளே வந்த இளங்கிளியின் கண்ணில் முதலில் பட்டது மயில் தான் அவன் உயரமும் கம்பீரமும் கண்டு சற்று பதறித்தான் போனால் புசுபுசுவென வெள்ளையும் கருப்புமான முடிகள் அடர்த்தியாக படர்ந்து இருக்க அதன் பிரவுன் நிற விழிகள் பார்க்க சற்று பயமாக தான் இருந்தது அதைக் கண்டுதான் அவள் பயந்து விசாலாட்சியின் கையை இறுக்கப்பற்றிய படி அவரை உரசிக்கொண்டு நின்றாள்.
ராவண் அவளை பார்வையாலே அளக்க துவங்கினான். பழுப்படைந்த நிலையில் பல தடவை துவைத்து வெளுத்துப் போன உடையை அணிந்திருந்தாள். அவனைப் போலவே அவளும் சிவந்தமேனியாய் தான் இருந்தாள் அவள்.
கூந்தலை முன்னே எடுத்து போட்டு இருக்க அது அவள் இடை வரை பாம்பு போல வளைந்து இருந்தது. கைகள் லேசான சதைப்பற்றோடு இடை வரை நீண்டிருக்க அவள் கைகளில் இருந்து அவன் கண்கள் நேராக வேறு எங்கும் பயணிக்காமல் அவள் முகத்தில் தான் வந்து நின்றது.
சாந்தமான பயந்த முகம் அவளுடையது முகத்தில் ஒரு மருவோ கொப்புளங்களோ எதுவுமில்லாமல் பளிங்கு போல பளபளவென அவள் கண்ணம் இரண்டும் அந்த அறையின் எல் இ டி வெளிச்சத்தில் மேலும் பளபளத்து காட்டியது.
அவள் கருவிழிகள் இரண்டும் இங்கும் அங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
ம்க்கும்.. அவன் குரலில் சட்டென நிமிர்ந்து ராவனை பார்த்தால்
உன் பேர் என்ன என்றான்
இ… இளங்கிளி என்றால் குரல் நடுங்க.
வார்த்தைகள் மட்டுமே அவளிடம் இருந்து வந்தது அவன் குரல் கேட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு சட்டென பார்வையை தாழ்த்திக் கொண்டாள் அவனை முழுதாக கூட இளங்கிளி பார்க்கவில்லை.
அவள் உதட்டு அசைவை கூர்ந்து பார்த்தவன் வலது பக்கம் கீழுதல் ஓரம் ஒரு மச்சம் இருப்பதை கண்டான் அவள் பலிந்து போன்ற முகத்தில் திருஷ்டி வைத்தது போல அந்த மச்சம் இருக்க அதை பார்த்துவிட்டு மீண்டும் அவள் கண்களைப் பார்த்தான்
இன்னமும் அவள் பார்வை தரையில் தான் நிலைத்திருந்தது.
யார் நீங்க? எங்களை எதுக்காக இங்க இழுத்துட்டு வந்தீங்க. உங்களுக்கு என்ன வேணும்? என்று விசாலாட்சி நேரடியாக இராவனிடம் எந்த பயமும் இல்லாமல் பேச
மாணிக்கம் உங்க புருஷன் தானே என்றான்
அவன் மாணிக்கத்தின் பெயரைச் சொன்னதுமே புரிந்து விட்டது விசாலாட்சிக்கு.
அந்த ஆள் உன்கிட்ட எவ்வளவு பணம் வாங்கி இருக்கான் சொல்லுங்க. கொஞ்சம் கொஞ்சமா அந்த பணத்தை நான் திருப்பிக் கொடுத்துடுகிறேன் என்றார் நேரடியாக
கொஞ்சம் கொஞ்சம்னா உங்களால எவ்ளோ கொடுக்க முடியும் என்றான் கம்பீரமான குரலை.
அந்தக் குரலில் இளங்கிளி நடுங்கி விட்டாள் விசில் ஆட்சியின் கையை மேலும் இருக்க பற்றி படி அவரை ஒன்றி நின்றாள.
அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் முழுமையாக அவளிடம் தன் பார்வையை செலுத்தியவன் இளங்கிளியை பார்த்தவாறு விசாலாட்சியிடம் ம்ம்ம்ம்.. எவ்வளவு கொடுக்க முடியும் சொல்லுங்க என்றான்
அவரோ அவன் பார்வை நிலைத்த இடத்தை உணர்ந்தவர் தன் கையை இளங்கிளியின் மீது வைத்து அவளை தன் பின்னால் நிற்க வைத்தவர்.
ஒரு ஆயிரம், இரண்டாயிரம் வாரத்துக்கு என்னால கொடுக்க முடியும் மாசம்னா ஒரு 5000 வரை கொடுத்திடுவேன் என்றார்.
ராவண் விழிகள் விஷாலாட்சியின் முகத்தில் அழுத்தமாக படிந்தது.
இளங்கிளியை அவர் பார்வையில் இருந்து மறைத்தது அவனுக்கு பிடிக்கவில்லை.
மாசம் 5000 அண்ணா அப்போ மாணிக்கம் வாங்குன கடனை அடைக்க உங்க ஆயுசு போதாதே எப்படி அழைப்பீர்கள் என்று தன் சோபாவில் இருந்து அவன் உயரத்திற்கு எழுந்து நின்றான் ராவண்.
விசாலாட்சியின் பின்னால் இருந்த இளங்கிளி தன் தலையை லேசாக உயர்த்தி அவர் தோள்களின் பின்னால் இருந்து ராவணின் உயரத்தை பார்த்தால். அவள் விழிகள் அவன் உயரத்தைக் கண்டு ஆச்சரியத்தில் விரிவதை பார்த்த ராவணன் இதழ்கள் ஓரம் லேசாக வளைந்தது.
ஆயிசுக்கும் கடன் அடைக்கணுமா அப்படியே அவர் எவ்வளவு உங்ககிட்ட வாங்கி இருக்க என்றார் சற்று நலிந்த குரலில்.
இளங்கிளியின் பார்வையில் தன் பார்வையை நிலைக்க விட்டிருந்த ராவண் அவளிடம் இருந்து மீட்டெடுத்த தன் பார்வையை அவன் வேலையாலிடம் நிறுத்தினான்.
அதை புரிந்து கொண்ட வேலையால் ஒரு பத்திரத்தை கொண்டு வந்து விசாலாட்சியின் முன்பு கொடுக்க அதை வாங்கியவர் இது என்னங்க தம்பி என்றார் ராவணிடம்
மாணிக்கம் வாங்கின கடன் என்றான்
பத்திரத்தில் கையெழுத்து போட்டு வாங்குற அளவுக்கு கடன் வாங்கிட்டானா அந்த பாவி என்று நினைத்தவர் இளா இதுல என்ன இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுமா என்று திரும்பி தன் மகளிடம் பத்திரத்தை நீட்டினார்.
கைகள் நடுங்க அவர் நீட்டிய பத்திரத்தை வாங்கியவள் அவசரமாக பிரித்து அதில் இருப்பதை படித்தால் அவள் விழிகள் அந்த பத்திரத்தில் இருக்கும் எழுத்துக்களை அவசரமாக படிப்பதை ரசித்தபடி அவர்களின் நோக்கி மெல்ல நடந்து வந்தான் ராவண்
அதை படிக்க படிக்க அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது அதை அதிர்ச்சியோடு நிமிர்ந்து தன் அம்மாவை பார்த்தாள்.
அவரோ அவள் முகத்தில் இருந்து அதிர்ச்சியை அப்பட்டமாக கணித்தவர் நிறைய வாங்கிட்டானோ என்று உள்ளுக்குள் பதறியப்படியே என்னடி ஆச்சு எவ்வளவுதான் வாங்கி இருக்காரு அந்த மனுஷன் என்றார்
அவர் சொன்னதும் மீண்டும் ஒருமுறை பத்திரத்தை படித்து தான் கண்டது நிஜம்தானா என்று உறுதி செய்தவள் விழிகளில் நீர்கள் கோர்க்க
அம்மா ஒன்றரை கோடினு எழுதி இருக்கு என்றாள்
என்னடி சொல்ற ஒன்றரை கோடியா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்று விட்டார்
ம்ம்… நம்ம வீட்டு தான் அடமானம் வச்சு இந்த பணத்தை அப்பா இவங்க கிட்ட வாங்கி இருக்கிறார் என்ற இளங்கிளியின் குரலும் அழுதபடி தழுதழுத்தது.
செய்வதறியாது திகைத்து நின்ற விஷாலாட்சி அவர் முன்னே அழுத்தமான காலடி தடங்கலோடு வந்து நின்ற ராவணை இயலாமையோடு அவனைப் பார்த்தார்
சொல்லுங்க என்ன பண்ணலாம் என்றான் அடுத்த கேள்வியாக.
விசாலாட்சிக்கு பேச்சே வரவில்லை இவ்வளவு பணத்தை எப்படி அவரால் கொடுக்க முடியும்.
ஏற்கனவே அவர்கள் வீட்டில் கஷ்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது இதில் இவ்வளவு பெரிய கடன் சுமையை இவர்கள் மீது போட்டுவிட்டு தலைமறைவான மாணிக்கத்தை பிடித்து சட்டையை உலுக்கி கேள்வி தான் கேட்க முடியுமே ஒழிய அவரால் இவ்வளவு பெரிய பணத்தை புரட்டி கொடுக்க முடியாது
உங்க வீட்ட நான் எடுத்துக்கிட்டாலும் இதில் வாங்குன தொகையை ஓரளவுக்கு தான் சரி கட்ட முடியும் அப்போவும் நீங்க கொடுக்க வேண்டிய பணம் நிறைய இருக்குமே என்ன பண்றது என்றான்.
அவர் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது தன் மகளின் கையை இறுக்கப்பற்றிக் கொண்டு தம்பி அவர் இவ்வளவு பணம் வாங்கின விஷயம் சத்தியமா எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா இதை வாங்கவே நான் விட்டு இருக்க மாட்டேன் என்றார்
இனி அத பத்தி பேசி பிரயோஜனம் இல்ல. நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் மாணிக்கம் வாங்கின பணத்தை உங்களால் கொடுக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுக்கு பதிலா என்றவன் பார்வை இளங்கிளியின் மீது படிந்து அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு விசாலாட்சியிடம் திரும்பியவன்
எனக்கு அதுக்கு பதிலா உங்க பொண்ணு வேணும் என்றான்.
இளங்கிளியை அவசரமாக இழுத்து தன் பக்கம் நிறுத்தி அவளை தோளோடு சேர்த்து அனைத்து விஷாலாக்ஷி தம்பி நாங்க அப்படிப்பட்ட குடும்பம் கிடையாது என்றார்.
நானும் நீங்க நினைக்கிறது போல கிடையாது என்றவன் மாணிக்கம் கொடுக்க வேண்டிய பணத்தை என்னால வசூல் பண்ண முடியும் ஆனா எனக்கு இப்போ அந்த பணம் முக்கியயில்லை என்றவன் உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுங்க அந்த பணத்துக்கு என்றான்.
இது என்ன பணத்துக்கு பொருளை பண்டமாற்று செய்வது போல மாணிக்கம் வாங்கிய கடனுக்காக தன் மகளை இவனுக்கு பலி கொடுக்க வேண்டுமா என்று அதிர்ந்து அவனைப் பார்த்தார்
உங்களுக்கு வேற வழியே இல்ல என்றவன் நாளைக்கு காலையில எட்டு மணிக்கு என்னோட கார் உங்க வீட்டில நிக்கும் நீங்களும் உங்க பொண்ணும் அதுல வந்துடுங்க என்றவன் இளங்கிளியைப் பார்த்துவிட்டு திரும்பி உள்ளே நடந்தான்.
தம்பி உங்கள மாதிரி கந்துவட்டிக்காரனுக்கு, ஆளுங்கள வச்சு மிரட்டுறவனுக்கு என் பொண்ண நான் கட்டிக் கொடுக்கிறதா இல்லை என்றார் வேகமாக
மயிலோவிடம் வந்தவன் அதன் தலையை வருடிய படியே ஒரு பக்கமாக தலையை மட்டும்
திருப்பியவன் உங்ககிட்ட நான் அனுமதி கேட்கல என்று விட்டு அவன் விறு விறுவென படி ஏறி மேலே சென்று விட விசாலாட்சியும் இளங்கிளியும் மேலே செல்பவனின் முதுகை அதிர்ந்தபடி பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.
