மூர்க்கன் 52
“இளங்கிளி.. இளங்கிளி! கிளி…” என்ற குரல் கேட்டு தன் அறைக்குள் இரும்து வேகமாக ஓடிவந்தாள் நம்ம கிளி.
“ என்னங்க அத்தை கூப்பிட்டீங்களா?” என்று அவசரமாக அவர் பரிமளாவின் அருகே சென்றாள்.
“எப்ப பாரு உன் புருஷன் கூடயே ஒட்டிக்கிட்டு இருக்க.. எங்களை எல்லாம் பார்த்தா மனுஷங்களா தெரியலையா. எங்க கூடயும் வந்து கொஞ்ச நேரம் செலவழிக்கனுன்னு தோணுதா உனக்கு” என்று செல்லமாக அவளை அதற்றினார் பரிமளா.
“ஐயோ அத்தை அப்படியெல்லாம் இல்ல நான் உங்க கூட இருக்கணும்னு தான் சொல்றேன். ஆனா அவரு தான்…” என்று தயங்கி படி கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
“ஆம்பளைங்க அப்படிதாண்டி இருப்பாங்க எப்பவும் அட்டை மாதிரி நம்மளை ஓட்டிகிட்டே இருக்கணும் அவங்களுக்கு… அவங்களையே பாத்துட்டு இருந்தா நமக்கான நேரம் எப்பதான் கிடைக்கும். அதனால உன் புருஷன் இலுப்புக்கு எல்லாம் போகாம உனக்கு பிடிச்ச ஏதாவது ஒரு வேலைய செய், இல்ல ஏதாவது கத்துக்கணுமா அதை போய் செய்” என்றார்.
“ சரிங்க அத்தை” என்று நல்ல பிள்ளையாக தலையாட்டினாள் கிளி.
“என் பொண்டாட்டியையும், என்னையும் பிரிக்கிறதுக்கு பிளான் போட்டு அவளுக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்கீங்களா. முதல்லயே நான் கூப்பிட்டா வர மாட்டேங்குறா அத்தை திட்டுவாங்க.. பாட்டி கூப்பிடுறாங்கன்னு ஏதாவது சாக்கு சொல்லிட்டு உங்களை தேடி வந்துடுறா. இதுல நீங்க வேற அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க” என்று இளங்கிளியின் பின்னால் வந்து நின்றான் ராவண்.
அவன் சொன்னதைக் கேட்டதும் வாயில் கை வைத்த பரிமளா இளங்கிளியைப் பார்த்து “ஏன்டி நான் உன்னை எப்ப திட்டினேன். என்னமோ நான் உன்ன கொடுமை படுத்துற மாதிரி இல்ல என் பையன்கிட்ட என்ன பத்தி சொல்லி வச்சிருக்க” என்றார்.
“ ஹா!..ஐயோ அத்தை! அப்படியெல்லாம் எதுவும் நான் சொல்லவே இல்ல. இவர் சும்மா சொல்றார்” என்று அவசரமாக மறுத்தவள் திரும்பி ராவணை முறைத்தவள்.
“ ஏங்க சும்மா இருங்க . நான் எப்ப சொன்னேன் அத்தை திட்றாங்கன்னு சும்மா சொல்லாதீங்க” என்றாள் பதற்றமாக.
அவளை பார்த்து கிண்டலாக அவள் மட்டும் பார்க்கும் வண்ணம் சிரித்தவன்.
“அம்மா உங்க மருமக நல்லா பொய் பேச கத்துக்கிட்டா.. இப்படித்தான் அன்னைக்கு எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் தைலம் போட்டுவிடுடின்னு சொன்னதுக்கு இவங் உங்கள பத்தி என்ன சொன்னா தெரியுமா?” என்று நிறுத்திவிட்டு இளங்கிளியை கேலியாகப் பார்த்தான்.
“என்னடா என்ன பத்தி சொன்னா இவ” என்று பரிமளா ஆர்வமாக கேட்க..
“உங்க அம்மா என்ன அதை செய் இத செய்னு சொல்லி தினமும் டார்ச்சர் பண்றாங்க. அதையெல்லாம் சமாளிச்சு சமாளிச்சு எனக்கு தினமும் எனக்கு தலைவலி வரது தான் மிச்சம். இதுல உங்களுக்கு தைலம் தேச்சு விடுறது மட்டும்தான் எனக்கு வேலையா எனக்கு 1008 வேலை இருக்குன்னு சொல்லிட்டு உங்கள ஏதேதோ சொல்லி திட்டிட்டு வந்துட்டாமா” என்றான் பாவியாக முகத்தை வைத்துக் கொண்டான்.
அவன் சொன்னது கேட்டு அதிர்ச்சியில் வாயில் கை வைத்த இலங்கிளி “ ஐயோ! அத்தை! இவரு பொய் சொல்றாரு நம்பாதீங்க. நான் உங்களை அப்படி எல்லாம் சொல்லவே இல்ல” என்று பதறினாள்.
“அம்மா உன்னை மட்டும் இவ திட்டல.. பாட்டியையும், கமலா சித்தியும் சேர்ந்து தான் பேசினா” என்று மேலும் போட்டுக் கொடுத்தான்.
அதுவரை இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டபடி அமைதியாக இரவு உணவை சாப்பிட்டுகொண்டிருந்த கமலா “என்ன டா சொன்னா உன் பொண்டாட்டி.. அவளுக்கு என்னவாம். என்னை என்ன சொன்னா அவ..” என்று எழுந்து அவர்களிடம் வந்தார்.
“இந்த வீட்டில எல்லா வேலையும் என் பொண்டாட்டி தான் செய்றாளாம்.. நீங்களும், என் அம்மாவும் எனக்கு என்னன்னு அதிகாரம் பண்ணிட்டு வீட்ல சும்மா தான் இருக்கீங்களாம். உங்க பாட்டி உங்க அம்மாவுக்கும், சித்திக்கும் மாமியாரா இருக்கலாம். ஆனா எனக்கு இல்ல.. எப்ப பாரு என்ன ஆளாளுக்கு அதிகாரம் பண்ணி வேலை வாங்கிட்டு இருக்காங்கன்னு சொல்றா” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னான்.
“ ஐயோ சின்னத்தை இவர் பொய் சொல்றாரு. நான் அப்படியெல்லாம் சொல்லுவேனா அந்த மாதிரி சொல்லவே இல்ல” என்று குரல் தழுதழுக்க இருவரையும் பார்த்து கெஞ்சாத குறையாக தன்னை நம்பும்படி கெஞ்சாத குறையாக பேசினாள் இளங்கிளி.
“அம்மா இவ நடிக்கிறா உங்க கிட்ட ரெண்டு பேரும் ஏமாந்துறாதீங்க” என்றவன் தான் வந்த வேலை முடிந்தது என்ற ரீதியில் திரும்பி அறைக்குள் புகுந்து கொள்ள..
“ இவர் கேட்டது செய்யலைன்னு சொன்னதும் என்னை எப்படி வந்து மாட்டி விட்டுட்டு போறார் பாரு இவருக்கு இருக்கு இன்னைக்கு என் பக்கத்துல வரட்டும் அப்ப இருக்கு” என்று உள்ளுக்குள் ராவணை திட்டியவள். அவனையே முறைத்துக் கொண்டு நின்றிருக்க..
இளங்கிளியின் கையை பற்றி தன் பக்கம் திருப்பிய கமலா. “ போதும்டி மகன மொறைச்சது. அவன் சொன்னது எல்லாம் உண்மையா” நாங்க ரெண்டு பேரும் உன்னை டார்ச்சர் பண்றோமா? வேலை வாங்குகிறோமா? உன்ன எங்க பொண்ணு மாதிரி நானும் அக்காவும் தாங்குறோம். நீ என்னடா எங்கள பத்தி இப்படி வம்பு தும்பு பேசி சுத்திட்டு இருக்கியா என்ன பண்ண போறேன்னு தெரியுமா என்று ” அவளை சண்டைக்கு பிடித்துக் கொண்டார்
“ஐயோ! சின்னத்த ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. சத்தியமா நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல நம்புங்க அவர் வேணும்னு உங்ககிட்ட போட்டு கொடுத்துட்டு போறாரு. இருங்க அவரையே கூட்டிட்டு வரேன். நான்
சொன்னதெல்லாம் பொய்யின்னு
அவர் வாயாலயே உண்மைய ஒத்துக்க வைக்கிறேன்” என்று அங்கிருந்து வேகமாக அறைக்குள் சென்றாள்.
இளங்கிளி வருகைக்காக காத்திருந்த ராவண் கட்டிலில் தலைக்கு கை கொடுத்து கால் மேல் கால் போட்டு மல்லாக்க படுத்திருந்தவன். அவள் அறைக்குள் வந்ததும் கண் மூடி உறங்குவது போல் நடித்தான்.
பண்றது எல்லாம் பண்ணிட்டு தூங்குற மாதிரி நடிக்கிறதை பாரு என்று படுத்திருந்தவனை பார்த்து முறைத்தவள் கதவை தாழிட்டு விட்டு அவன் அருகே வந்து நின்றாள்.
இடுப்பிரண்டில் கைவைத்து அவனை முறைத்தப்படி எதுவும் பேசாமல் இளங்கிளி நின்று இருக்க..
கதவு சாற்றுப்பட்டு அவள் தன் அருகே வந்து நிற்கும் வரை உணர்ந்தவன். ஆனால் அவள் எதுவும் பேசாமல் நின்று இருக்கவும் மூடியிருந்த கண்களைச் சுருக்கி ஒற்றைக் கண்ணை மட்டும் விரித்து அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.
எதுக்கு அத்தைகிட்டயும், சின்ன அத்தைகிட்டயும் என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி கொடுத்தீங்க அவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க நான் அப்படியா சொன்னேன் உங்ககிட்ட எப்பவாச்சும் நான் அந்த மாதிரி சொல்லி இருப்பேனா என்று ஆதங்கமாக கேட்டாள்.
ஆமா நான் கூப்பிட்டா நீ வரவே மாட்டேங்குற எப்ப பாரு கிச்சன்ல வேலை இருக்கு ரொம்ப நேரம் ரூம்ல இருந்தா அத்தை ஏதாவது நினைப்பாங்க அப்படி இப்படின்னு நீ ஏதாவது ஒரு சாக்கு சொல்லிட்டு வெளியே இருக்க அதான் கொஞ்சம் கடுப்பா இருந்தது அந்த கடுப்புல போட்டு கொடுத்துட்டேன் என்று எழுந்து அமர்ந்தான்.
ஏங்க உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா நைட் நேரம் தான் பரவால்ல பகல்லையும்னா எப்படிங்க.. பெரியவங்க எல்லாம் வீட்டில் இருக்கிறப்போ நீங்க நான் மட்டும் தனியா ரூம்ல.. அதுவும் பட்டப்பகல்ல கதவை சாத்திக்கிட்டா என்ன நினைப்பாங்க என்றால் கடுப்பாக.
என்ன நினைப்பாங்க அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டாங்க நீயும் நானும் சந்தோசமா இருந்தா அவங்களுக்கும் சந்தோஷம் தானே என்றான்.
சரி அதெல்லாம் விடுங்க முதல்ல வாங்க வந்து அத்தை கிட்ட நீங்க சொன்னதெல்லாம் பொய்யின்னு சொல்லுங்க கமலாத்தையும் என்ன தப்பா நினைச்சுட்டு கோச்சிக்கிட்டாங்க என்றாள் கவலையாக
ம்ஹும்.. நான் வரல என்னவெல்லாம் வர முடியாது என்றான் முறுக்கிக் கொண்டு.
ஏன் வர முடியாது நீங்க சொன்னது எல்லாமே பொய் அது உங்களுக்கே நல்லா தெரியும் நீங்க வந்து சொன்னாதான் அவங்க நம்புவாங்க என்றாள் கிளி.
நான் சொல்றது எதுவுமே நீ செய்ய மாட்டேங்குற அப்போ நீ சொன்னது மட்டும் நான் ஏன் செய்யணும் என்றான்.
நீங்க சொல்லி நான் என்ன செய்யாம இருக்கேன். ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு என்றால் பரிதவிப்போடு.
இல்லையே நான் உன்கிட்ட எவ்வளவு முறை கேட்டு இருப்பேன் ஒரு தடவையாது நான் சொன்னதை நீ செஞ்சி இருக்கியா என்றான்.
என்னங்க சொன்னீங்க எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே என்றால் இளங்கிளி புரியாமல் உண்மையாகவே ராவண் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு விளங்கவே இல்லை.
ஞாபகம் இல்ல உனக்கு என்றான்
இல்லையே என்றால்
நிஜமா என்றான்
சத்தியமா எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லைங்க என்றாள் சத்தியம் செய்து.
சரி இப்ப சொல்ற நல்லா கேட்டுக்கோ நான் என் அம்மாகிட்ட பொய் சொன்னேன் அதை நான் ஒத்துக்கணும்னா நீ என் முன்னாடி மண்டி போட்டு மன்னிப்பு கேட்கணும் என்றான்.
மன்னிப்பு தானே எத்தனை தடவை வேணா கேட்கிறேன். இப்போ வாங்க வந்து அத்தை கிட்ட நீங்க பொய் சொன்னேன்னு ஒத்துக்கோங்க அவங்க தூங்கப் போயிடுவாங்க சீக்கிரம் வாங்க நேரம் ஆச்சு என்று அவனை அவசரப்படுத்தினாள்
எவ்ளோ முறைனாலும் ஓகேவா உனக்கு.. என்றான் குறும்பாக.
அவன் எதற்காக மண்டியிடச் சொல்கிறான் என்று அவன் கிளிக்கு தான் விளங்கவில்லை.
அவங்ககிட்ட காலையில் நான் சொல்லிக்கிறேன் இப்போ வா வந்து முட்டி போடு. ம் என்று எழுந்து அவள் முன்னே நின்றான்.
ஏங்க.. இதெல்லாம் ரொம்ப அதிகம் இப்பவே மன்னிப்பு கேட்கணுமா உங்களை நான் நம்ப மாட்டேன் முதல்ல அத்தைகிட்டே வந்து உண்மையை சொல்லுங்க அப்பறோம் நான் மன்னிப்பு கேக்குறேன் என்று இன்னமும் அவன் சொன்னதன் அர்த்தம் விளங்காமல் அவனிடம் மல்லுக்கு நின்றருந்தாள்.
நானும் உன்னை நம்ப மாட்டேன். முதல்ல நான் சொல்றதை நீ செய் அப்பறோம் நீ சொன்னதை நான் செய்றேன் என்றான் பிடிவாதமாக.
அவன் பிடிவாதம் அறிந்தவள் தானே இளங்கிளி. என்னங்க.. என்று அவனிடம் சிணுங்க..
ம்ஹும்.. என்றான்.
வேறு வழியே இல்லை என்று உணர்ந்தவள் அவன் முன் மண்டியிடப் போனாள்.
ஏய் ஏய்.. இரு.. என்று கிளியின் தோளைப் பற்றி நிறுத்தினான் ராவண்.
ஏங்க முட்டி போட்டு நீங்க தானே மன்னிப்பு கேக்க சொன்னிங்க.. இப்போ ஏன் நிறுத்துறீங்க.. என்றவள். அப்போ நான் மன்னிப்பு கேக்க வேண்டாமா? என்றாள் ஆர்வமாக.
முட்டி போடணும் தான் ஆனா இப்படி இல்லை என்றான் ஒரு மார்க்கமாக
எப்படி என்றாள் கிளி குழப்பமாக.
உன் டிரஸ் எல்லாம் கழட்டிட்டு முட்டி போடணும் என்றான்.
ட்ரெஸ்ஸயா எதுக்கு.. என்று கேட்டவள் சட்டென்று அனைத்தும் உணர்ந்தவலாக அதிர்ச்சியில் அவனைப் பார்க்க..
நாக்கை கண்ணத்தில் வைத்து சுழற்றியவன் சிரித்துக்கொண்டே ரெடியா என்றான்.
அவள் கண்கள் மேலும் அதிர்ச்சியில் விரிய.. அதை ரசித்து மேலும் சிரித்தவன் என்ன என்றான் மீண்டும்.
ம்ஹும்.. நான் மாட்டேன் என்று அவசரமாக தலையை இருப்பக்கமும் ஆட்டினாள்.
அப்போ நானும் மாட்டேன் என்று கைகளை கட்டிக்கொண்டு நின்றான் எங்கோ பார்த்துக்கொண்டு..
ஏங்க… என்று குழைந்தாள்.
அதில் திரும்பி அவளை பார்க்க..
பார்வையாலேயே அவனிடம் கெஞ்சினாள்.
அவனும் முடியாது என்று தலையை ஆட்டி பதில் சொன்னான்.
ப்ளீஸ்ங்க.. என்று அவனை நெருங்கி உடல் உரச நின்றாள்.
இப்படி எல்லாம் பண்ணினா நான் இறங்கி வருவேன்னு நினைக்காத என்றான்.
நான் பாவமில்லையா என்று அவளை பார்க்காமல் திரும்பி இருந்தவன் கன்னத்தை பற்றி தன் பக்கம் திருப்பினாள்.
அவள் கெஞ்சும் விழிகளும் சுழிக்கும் உதட்டையும் பார்த்தவன் தன்னை மறந்து லயித்து நிற்க..
தன் கால்களை தரையில் ஊன்றி அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள். மெல்ல பாதங்களை உயர்த்தி விரல் நுனியில் நின்று அவன் இதழை தன் இதழால் உரசி முத்தம் வைத்தவள் ப்ளீஸ்.. என்றாள்.
அவனோ முடியாது என்று மீண்டும் தலையை ஆட்டியவன் அவள் பின்னந்தலையில் கையை வைத்து தன் முகத்தோடு நெருக்கியவன் அவள் இதழை அழுந்த பற்றி முத்தம் பதித்தான்.
அவளோ அந்த ஒற்றை முத்தத்தில் கிரங்கிப்போய் அவன் கைவலைவில் தன்னை தொலைத்து நிற்க..
அவள் இதழை விடுத்தவன் அவளிடம் கெஞ்சுதலாக தன் வேண்டுதலை பார்வையாலேயே உணர்த்த..
அவனின் இந்த நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவன் முன் மண்டியிட முடிவெடுத்தவள். நீங்க கண்ணை மூடுங்க… அப்போதான் என்று அவள் வெட்கப்பட்டுக் தலை குனிய..
அவள் சம்மதம் சொன்னதில் சந்தோசம் வந்தவனாக சிரித்த படி அவள் முகத்தை நிமிர்த்தி சிவந்த கண்ணகளில் முத்தம் வைத்து கண் மூடினான்.
கிளியின் அவன் உதட்டில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டே கீழ் இறங்க..
அவள் இதழ் பட்ட இடமெல்லாம் தகிக்கத் துவங்கியது அவனுக்கு..
கண்களை மூடி அவள் தரும் சுகங்களை அனுபவிக்க தாயார் ஆனான். சற்று நேரத்தில் உஷ்ண மூச்சுக்களை அவன் உதடுகள் பிரித்து வெளியேற்ற…
“நோ… ராவண் நோ..” என்று தூக்கத்தில் பிதற்றிக்கொண்டே எழுந்து அமர்ந்தாள் ரக்ஷானா.
மூச்சு வாங்க அமர்ந்து இருந்தவள் திரும்பி தன் அருகே உறங்கிக் கொண்டிருந்த ராவணைப் பார்த்தாள்.
அவன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான். அவனையே சற்று நேரம் உற்றுப் பார்த்தவள் தன் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள். பெட் ரூமை விட்டு சற்று தள்ளி சென்றவள் தன் மொபைலில் இருந்து ஒரு எண்ணிற்கு அழைத்தாள்.
இருட்டில் போன் அடிக்கவும் தூங்கிக்கொண்டிருந்த கர்ணன் எழுந்து போனைப் பார்த்தான். அதில் ரக்ஷனாவின் பெயர் ஒளிரவும் மேடம் எதுக்கு இந்த நேரத்துல போன் பண்றாங்க என்று போனை கையில் எடுத்தவன் அதில் மணியை பார்த்தான் 6 எனக் காட்டியது .
யோசனையுடன் போனை எடுத்தவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து அட்டென்ட் செய்தவன் மேடம் சொல்லுங்க என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க என்றான்.
உனக்கு போன் எடுக்க இவ்வளவு நேரமாடா என்று அதட்டியவள் அந்தக் கடன்காரி என்ன பண்ணிட்டு இருக்கா? அது என்றாள் எரிச்சலாக.
கலங்கார்த்தால போன் பண்ணிட்டு லேட்டா எடுத்தேன்னு இந்த அம்மா என்னைத் திட்டுது என்று நினைத்தவன் கண்கள் மூடி மூச்சை இழுத்து விட்டு தூங்குறா மேடம் என்றான்.
அவள ரொம்ப கேர் ஃபுல்லா பாத்துக்கோ எக்காரணத்தை கொண்டும் அவளுக்கு ராவண் இருக்க இடம் அவனைப் பத்தி எதுவுமே தெரியக்கூடாது புரிஞ்சுதா என்றாள்.
இதையே இவங்க எத்தனை முறை தான் சொல்வாங்க. என்று நினைத்த கர்ணன் சரிங்க மேடம் நான் பாத்துக்கிறேன் என்றான்.
இன்னும் தூக்கம் வேண்டி இருக்கா அவளுக்கு.. என் தூக்கத்தை கெடுத்துட்டு அவ நிம்மதியா தூங்குறாளா இருக்கட்டும் அவளுக்கு ஒரு நாள் இருக்கு என்று நினைத்தவள் சரி கவனமா பாத்துக்க நான் போனை வெக்குறேன் என்று வைத்தவள் உள்ளே சென்றுவிட..
இங்கே கர்ணன் புலம்பியபடி இந்த அம்மாவுக்கு விவஸ்தையே இல்லை.. எப்போப்பாரு ஏதாவது சொல்லி நம்மல டென்ஷன் பண்ணி விடறதே இதுக்கு வேலையா போயிருச்சு என்று நினைத்தவன் அந்த நடுத்தர வர்க்கத்து ஓட்டு வீட்டிற்குள் நுழையப் போக..
அப்போது வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்த இளங்கிளி வாயை போற்றிக்கொண்டு ஓடினாள்.
என்ன ஆச்சு கனி என்று அவள் பின்னால் ஓடிய கர்ணன் இளங்கிளி வாந்தி எடுப்பதைப் பார்த்தவன். என்னம்மா ஆச்சு ஏன் வாந்தி எடுக்குற.. என்று அவள் நெற்றியை பிடித்துக்கொண்டான்.
அண்ணா என்னன்னே தெரியல தினமும் காலைல எழுத்ததும் எனக்கு வாந்தி வந்துகிட்டே அடிக்கடி தல சுத்தி ஒரு மாதிரியா இருக்கு ரொம்ப டயர்ட் ஆயிடுது எனக்கு. அண்ணா இன்னிக்கு ஹாஸ்பிடல் போலாமா என்ன கூட்டிட்டு போறியா என்றாள்.
சரி கனிமொழி காலையில சாப்பிட்டு ஹாஸ்பிடல் போலாம். நீ எதுவும் சமைக்க வேண்டாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. ஹாஸ்பிடல் போற வழியில சாப்பிட்டுக்கலாம் என்றான்.
சரி நான் இன்று போல் முகத்தை கழுவி விட்டு தளர்ந்த நடையோடு உள்ளே செல்ல..
அவளையே பாவமாக பார்த்த கர்ணன் பாவம் இந்த பொண்ணு புருஷன் விட்டுட்டு இங்க வந்து கஷ்டப்படுத்து எல்லாம் அந்த பொம்பளையாள வந்தது என்று பெருமூச்சு விட்டவன் நமக்கு என்ன வந்துச்சு சொன்ன வேலையை செஞ்சுட்டு காசு வாங்கிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான் என்று நினைத்தான்.
ராவண் ஏன் ரக்ஷாவுடன் ஒரே அறையில் தூங்குகிறான் அவனுக்கும் அவளுக்கும் இடையில் என்ன நடக்கிறது.
இங்கே கனிமொழி என்ற பெயரில் இளங்கிளி ஏன் தனித்திருக்கிறாள். ரக்ஷனாவின் அடியாளான கர்ணனை இளங்கிளி ஏன் உரிமையாக அண்ணா என்று அழைத்து அவனிடம் பேசுகிறாள்.
மொத்த குடும்பமும் இவர்கள் இருவரையும் தேடி கலைத்து இருக்க இங்கே இவர்கள் தனித்தனியே இருக்க என்ன காரணம்.
தெரிந்து கொள்ளக் காத்திருங்கள் உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி பார்ட் 2 விரைவில் வரப்போகிறது.

1 comment
Waiting for your story part 2