மூர்க்கன் 42
“என்கிட்டே இருந்து இத்தனை நாலா உண்மையை எப்படி நீ மறைக்கலாம் ” என்று ராவண் முன் வந்து கை நீட்டி பேசினாள் ரக்ஷனா.
“ஏன் சொல்லணும் ” என்று சிம்பிளாக பதில் வந்தது இளங்கிளியிடம் இருந்து.
“ஏய் நீ பேசாதடி! ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டு என் வீட்லையே உக்காந்துட்டு என்னை நக்கல் பண்ணறியா” என்று இளங்கிளியிடம் எழுந்து விழுந்தாள்.
“இங்க பாரு எங்களுக்கு என்ன வேண்டுதலா , உன்னை வளைச்சு கட்டி ஏமாத்துறதுக்கு. நீ பண்ணின காரியத்துக்கு உன்னை மாமா உயிரோட இவ்ளோ நாள் விட்டு வெச்சதுக்கு காரணம் யாரு தெரியுமா?” என்று கயல் பின்னால் இருந்து குரல் கொடுக்க..
“யாரோ டி..” என்றாள் அவளைத் திரும்பிப் பார்த்து கடுப்பாக.
“அதோ எங்க அக்கா தான். அவங்க எங்க இருக்காங்கனு தெரியாம இவ்ளோ நாள் இருந்தால தான் மாமா உன்னை உயிரோட வெச்சிருக்கார். அக்கா மட்டும் எங்க இருக்காங்கனு முன்னமே தெரிஞ்சிருந்தா இந்த நேரம் அவர் உன்கூடவா இருந்திருப்பாரு.. ” என்றாள் கயல்.
“அதான் அவ இருக்க இடம் தெரிஞ்சிருச்சுல்ல அப்பறோம் எதுக்கு என்கிட்டே நடிச்சு நாடகம் ஆடினாரமா உங்க மாமா… ” என்று நக்கலாகக் கேட்டாள்,
“அது நீ அவர்கிட்டே தான் கேக்கணும் ” என்று புருவத்தால் ராவணை சுட்டிக் காட்டி சொன்னாள்.
ரக்ஷனா வேகமாக ராவனிடம் திரும்பி “சொல்லு எதுக்காக இவ்ளோ நாள் என்கிட்டே நடிச்சிட்டு இருந்த ” என்றாள் .
“ரொம்ப சிம்பிள் நீ பண்ணிட்டு இருக்க போதைப் பொருள் பிசினெஸை உங்களை எல்லாம் வெச்சு வேலை வாங்குற அந்த முக்கியமான ஆள் யாரு? அவன் எங்க இருக்கான். அவனோட சேர்ந்து நீங்க என்ன எல்லாம் பண்ண இருக்கீங்க இது எல்லாம் தெரிஞ்சுக்க தான் ” என்றவன் தன் கைவளைவில் இருந்த இளங்கிளியை அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்
“இவ என்கூட வராம இருந்திருந்தா இந்த நேரம் நான் இதை எல்லாம் கண்டுபிடிச்சிருப்பேன். அது முடியாமப் போயிருச்சு ” என்றான்.
“நீ என் உயிரையே கேட்டாலும் என்கிட்டே இருந்து நீ தெரிஞ்சுக்க நினைச்ச எந்த விஷயத்தையும் வாங்க முடியாது ” என்றாள்.
“ம்ஹும்.. ” என்று நக்கலாக சிரித்தவன் “உன்கூட இவ்ளோ நாள் இருந்திருக்கேன். எனக்கு அடுத்து என்ன பண்ணணுன்னு தெரியாதா என்ன?” என்றவன் எழுந்து அவள் முன் வந்து நின்றவன் “உன்னக்கு இந்த வேலையை கொடுத்து செய்ய வெச்சது யாருனு தெரிஞ்சுக்க நான் கிட்ட நெரிஞ்சிட்டேன். உன்கூட இல்லேன்னாலும் எனக்கு இதை கண்டுபிடிக்குறது ஒரு பெரிய விஷயமே இல்ல” என்றான்.
ராவண் தன்னை இத்தனை வருடமாக ஏமாற்றிக்கொண்டிருந்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. “என் வயித்துல வளர்ற உன்னோட குழந்தைக்கு என்ன பதில் சொல்லப்போற.. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிருக்கே அதுக்கு என்ன பதில் சொல்லப்போற.. ” என்று ராவணை கார்னெர் செய்யப் பார்த்தாள்.
அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவன் “விவேக் குழந்தைக்கு எல்லாம் என்னால இனிஷியல் கொடுக்க முடியாது ” என்றவன். “அப்பறோம் ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகிருச்சு. அப்படி இருக்க அப்போ நீ காட்டின கல்யாண பாத்திரம் எப்படி செல்லுபடியாகும். முரையா நான் முதல் மனைவி கூட டிவேர்ஸ் வாங்கி இருந்தாக் கூட உன் போலி கல்யாண பத்திரம் செல்லுபடியாகுமோ என்னவோ.. “என்றான்.
“ஏய்!.. யார் சொன்னது என் வயித்துல வளர்றது விவேக்கோட குழந்தையின்னு.. இது உன் குழந்தை தான் அதுக்கான DNA டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் கூட என்கிட்டே இருக்கு. அது உனக்கு மறந்து போயிருச்சா.. “என்று கோபம் தாங்காமல் எகிறினாள்,
“ஏய் நானும் பார்த்துட்டே இருக்கேன். யாரோ கூட இருந்து நீ கர்ப்பமாகிட்டு . என் புருஷனை அதுக்கு இனிஷியல் வெக்க கேக்குற. உனக்கு வெக்கமா இல்ல.. இன்னமும் நீ சொல்றதை எல்லாம் கேட்டுட்டு இருக்க நாங்க ஒன்னும் லூசு கிடையாது புரிஞ்சுதா?” என்று அவளிடம் தன் கோபத்தைக் காட்டினாள் இளங்கிளி.
“ஏய் வாயை மூடு டி கடன்காரி.. உன்னோட அந்தஸ்துக்கு உனக்கு எல்லாம் ராவண் கேக்குதா. அவனோட அந்தஸ்து மரியாதைக்கு முன்னாடி நீ எல்லாம் எம்மாத்திரம் . என்னோட அந்தஸ்துக்கு முன்னாடி நிக்கக் கூட நீ தகுதி இல்லாதவ.. நீ என்கிட்டே வந்து பேசுறியா.. ” என்று தன் வார்த்தைகளில் வன்மம் தடவிப் பேசினாள் ரக்ஷனா.
அவள் பேசியது கேட்டு அங்கிருந்த எல்லோருக்குமே ஒரு மாதிரி தான் இருந்தது.
ஆனால் இளங்கிளியோ ரக்ஷணா பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்வதை இளங்கிளியோ அவள் முகத்திற்கு நேராக வந்து “உன்னோட அந்தஸ்து , பணம் , அவர்கிட்டே இருக்க பணம், மரியாதை, புகழ் இது இல்லறத்தையும் விட ஒரு பெரிய விஷயம் இருக்கு. அது நான் என் புருஷன் மேல வெச்சிருக்க காதல். அவர்கூட இருக்க எனக்கு அந்த ஒரு தகுதி போதாது.. ” என்றாள்.
அவள் வார்த்தைகளில் இருந்த ஆழமும், அழுத்தமும் ரக்ஷனாவை வாயடைக்க வைத்தது. ராவணிடம் திரும்பியவள் “ஏய் இவர் என் புருஷன் டி.. உண்மையாவே இவருக்கு பழசெல்லாம் மறந்து போயிருந்தாலும். அவர் உன்பக்கம் திரும்பிப் பார்த்திருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு அவர் மனசு முழுக்க நான் மட்டும் தான் இருக்கேன் “என்று நெஞ்சை நிர்மிதிக் கொண்டு ராவண் தன் மீது வைத்திருக்கும் காதலில் இருந்த ஆழத்தை உணர்ந்து சொன்னாள்.
ராவண் அவளைப் பெருமையாகப் பார்த்தான். “போதும் போலாம் டி…” என்று அவள் தோளைப் பற்றி அணைத்துக்கொண்டவன்.
“இதுக்கு மேல எங்களை பிரிக்க முடியும்னு நீ கனவுளையும் நினைக்காத ” என்றவன்.
“ரக்ஷணா நீ சொல்ற பொய்யை எல்லாம் இவ்ளோ நாள் கேட்டுட்டு பொறுமையா இருந்த காரணமே வேற.. இணையம் நீ சொல்ற கட்டுக்கதையை எல்லாம் நான் கேட்டுட்டு சகிச்சிட்டுப் போவேன்னு நினைக்குறியா. நீ ஏற்பாடு பண்ணினது போல போலி செர்டிபிகேட்ஸ் , டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் என்னாலையும் வாங்க முடியும். நீ இவ்ளோ பண்ணின பிறகும் நான் பொறுத்துப் போனதுக்கு ரெண்டு காரணம் இருக்கு ” என்றான்.
அவள் இன்னமும் ஏமாற்றம் தாங்க முடியாமல் அவனையே பார்க்க..
“முதல் காரணம் என்னோட இளங்கிளி. அவ கிடக்குற வரைக்கும் நீ பண்ணினதை எல்லாம் பொருத்திக்கிட்டேன் ” என்றான். “அதுக்கு அப்ரோமும் உன்னை எதுவும் பண்ணாம விட்டதுக்கு காரணம் உன் வயித்துல வளர்ற உன்னோட குழந்தை. இந்த குழந்தையால தான் நீ இன்னும் உயிரோடவே இருக்க. இல்லேன்னா நீ செத்த இடத்துல இந்த நேரம் செடி முளைச்சிருக்கும். உன் மேல இருக்க அவ்ளோ கோபத்தையும் நான் இப்போவரை பொறுத்திருக்க காரணமே அது தான் ” என்றான்.
“உன்னை பத்தியோ.. உனக்கு மேல இருக்கவன் பத்தியோ தெரிஞ்சுக்க எனக்கு வேற வழி கிடைக்காமலா போய்டும். அது எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல. உன் அம்மா என்னை அவங்க பிள்ளை மாதிரி தான் பாத்துக்கிட்டாங்க. அவங்க நீ , உன் அப்பா, மோகன் இவங்க எல்லாரையும் விட ரொம்பவே நல்லவங்க. அவங்க குணத்துல உங்க ரெண்டு பேருல ஒருத்தருக்குக் கூட அந்த குணம் இல்லேன்னு நினைக்கிற அப்போ எனக்கு வருத்தம் தான்” என்றவன்.
“உன் அம்மா மாதிரி உன் குழந்தைக்காவது நீ உண்மையா இரு. இனியாவது உன் வாழ்க்கையை சரியா வாழப் பாரு ” என்றவன் “இனி நமக்கு இங்க எந்த வேலையும் இல்ல போலாம் ” என்று இளங்கிளியிடம் திரும்பி சொன்னான்.
“மாமா அப்போ நிஜமாவே கிளம்பலாமா? ” என்றாள் கயல் ஆரவமாக .
“சரி நான் போய் என் ட்ரெஸ்ஸை பேக் பண்றேன் ” என்று அறைக்குள் சென்றுவிட்டாள் கயல்.
ராவணும் உள்ளே சென்றுவிட.. அவன் பின்னே இளங்கிளியும் சென்றுவிட்டாள்.
தான் போட்ட எந்த திட்டமும் நடக்கவில்லை என்ற கோபமும், ஏமாற்றமும் ரக்ஷணாவை உள்ளுக்குள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. “என்னை ஏமாத்தின உங்க யாரையும் நான் சும்மா விடம் மாட்டேன். சீக்கிரமே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டப் போறேன் நான் . சீக்கிரமே உங்க குடும்பம் மொத்தமும் அழியப் போகுது அதை நீங்க அனுபவிக்க தான் போறீங்க. அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும் ” என்று அவர்களை அழிக்க இப்போதிருந்தே யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்.
அவள் கோபம் தலைக்கேற சோபாவில் அமர்ந்து இருக்க..
அவள் கோபம் கண்டு இங்கே அரண்டு போய் இருந்தது என்னவோ அம்பிகாவும், பவித்ராவும் தான்.
“ஏய் இவ இவ்ளோ கேடு கெட்டவளா டி! இது தெரியாம நான் தேவை இல்லாம புருஷன் பொண்டாட்டி சந்தோசமா இருக்கறதை படம் புடிச்சு இவகிட்டே தேவை இல்லாம போட்டுக் கொடுத்துட்டேனே.. “என்று வருந்தினாள் அம்பிகா
“நமக்கு என்ன டி தெரியும். இவ இப்படிப்பட்டவன்னு . இன்னொருத்தி புருஷனை கூடி வந்து எவ்ளோ வேலை செஞ்சிருக்கா இவ .. அவ வயித்துல யாரோ குழந்தையை வெச்சுகிட்டு , அந்த சார் குழந்தையின்னு பொய்யில்ல சொல்லிருக்கா…” என்று ரக்ஷணாவின் குணம் கண்டு பவித்ரா அதிர்ச்சியாக சொன்னாள்.
“இப்போ என்ன டி பண்றது. நாமளும் பேசாம இங்க இருந்து கிளம்பிடலாமா?” என்றாள் அம்பிகா.
“ஏய் அப்படி உடனே கிளம்பிட முடியாது. இவளுக்கு நாம வேற காசு கொடுக்கணுமே.. அட்வான்ஸ் வாங்கி வெச்சிருக்கோமே.. இப்போ கிளம்பறோம்னு சொன்னா இவ பணத்தைக் கேப்பாளே..” என்றாள் பவித்ரா.
“அப்போ அந்த கடனை சீக்கிரம் அடைச்சு விட்டுட்டு சீக்கிரம் இங்க இருந்து கிளம்பிறனும் டி.. ” என்றாள் அம்பிகா.
அதற்குள் இளங்கிளியும், ராவணும் வெளியே வர.. கயலும் உடை பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
ராவண் தகவல் சொன்ன சிறிது நேரத்தில் அவன் கார் அங்கு வந்திருக்க..
மூவரும் ரக்ஷணாவை தான் பார்த்தனர். அவ்ளோ இவர்களை முறைத்தபடியே அமர்ந்து இருக்க..
“ரக்ஷணா சும்மா சும்மா முறைக்காத சரியா.. உன் வயித்துல வளர்ற குழந்தையும் போறோம் உன்னை மாதிரி அடங்காபிடாரியா தான் பொறக்கும் ” என்று அவள் அருகே வந்த கயல் ரக்ஷனாவின் மேடிட்ட வயிற்றை தொட்டுக் காட்டினாள்.
அவள் கையை தாடி விட்ட ரக்ஷணா “இது என் குழந்தை என்னை மாதிரி இருக்குறதுல எந்த தப்பும் இல்லை ” என்றாள் அழுத்தமாக.
“ம்ஹும்.. உன்னை திருத்தவே முடியாது ” என்றவள் “அக்கா போலாமா?” என்றாள் .
ரக்ஷ்ணாவிடம் வந்த ராவனோ “இன்னும் ஒன்னு வீக்ல உனக்கு டியூ டேட் குறிச்சு கொடுத்திருக்காங்க டாக்டர் உனக்கு நியாபகம் இருக்கு இல்ல. சரியா போய் ஹோச்பிடல்ல அட்மிட் ஆகிடு. உன் வீராப்பு, கோபம் எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு குழந்தையை நல்ல முறையில் பெத்து வளர்க்குற வழியைப் பாரு ” என்றான்.
“என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். உன்னோட நடிப்பை எல்லாம் இனி என்கிட்டே காட்டாத ” என்றாள் வெடுக்கென்று.
“போலாமா?” என்று இலங்கிலியின் கையை ராவண் பற்றிக்கொள்ள..
படையப்பா நீலாம்பரி போல அவ்ர்கள் கோர்த்திருந்த கையைப் பார்வையாலேயே பொசுக்கிவிடுபவல் போல பார்த்தாள்..
அவளை சட்டை செய்யாமல் மூவரும் கிளம்பி வெளியே வந்தனர்.
அவர்களுக்கு முன்பாக வாசல் பக்கம் ரக்ஷனாவுக்குத் தெரியாமல் வந்து நின்ற அம்பிகா ராவண் வரவும் கைகளைப் பிசைந்து கொண்டு அவனிடம் வந்தவள் “சார் என்னை மன்னிச்சிருங்க.. நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டின்னு தெரியாம நான் .. ” என்று தயங்க,
“பரவால்ல.. நீ சொன்னதும் ஒரு வகையில் நல்லது தான். இப்போதான் எனக்கு மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. இவ்ளோ நாள் நடிச்சதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது உன்னால தான் ” என்றான்.
அவனை சங்கடத்தோடு அம்பிகா பார்க்க.
‘ரக்ஷ்ணாவை நல்லபடியா பார்த்துக்க.. அவளை தனியா எங்கையும் விட வேண்டாம். ஹாஸ்பிட்டல் போற டைம் சரியா கூட்டிப் போயிரு ” என்று அவள் உடல் நிலை குறித்து உண்மையான அக்கறையோடு ராவண் கூற.
“பாத்துக்கிறேன் சார் , நீங்க சந்தோசமா போய்ட்டு வாங்க” என்று அவர்களை வழி அனுப்பி வைத்தாள் அம்பிகா.
