News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

அஸ்க்..லஸ்கா..காதல்..24

by Layas Tamil Novel
373 views
A+A-
Reset

EPISODE-24

தமிழ் தள்ளாடியபடி இலக்கியாவின் பின்னால் வந்தவன் இலக்கியாவை அறைக்குள் தள்ளி கதவடைத்தான்.

இந்த நேரத்தில் தன் அறைக்குள் இவனுக்கு என்ன வேலை என்று யோசித்தவாறு,

“நீ… நீங்க… இங்கே என்ன பண்றிங்க…?” என்று அவனிடம் கை நீட்டி பேச…

அவள் நீட்டிய கையைப் பிடித்து தன் அருகில் இழுத்தவன் இலக்கியாவை அப்படியே தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அவள் படுக்கையை நோக்கி நடந்தான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத இலக்கியா அதிர்ச்சியாக அவன் தோளில் இருந்தவாறு தமிழைத் திரும்பி பார்க்க…

அவளை சட்டையே செய்யாமல் தமிழ் இலக்கியாவைத் தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் போட்டவன்.

தீபா தமிழுக்குக் கொடுத்த மருந்தின் வீரியம் இன்னமும் குறையாமல் இருக்க அவன் உடல் முழுவதும் இன்னும் சூடேறி தவித்துக்கொண்டு இருந்தது. தன் டையையும், கோட்டையும் கழட்டிப் போட்டவன் தன் சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தான்.

அதைக் கண்டு, “அதுல தமிழ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க முதல்ல என்னோட ரூம் விட்டு வெளியே போங்க!” என்று கத்திக்கொண்டே மெத்தையில் இருந்து கீழே இறங்க…

அதற்குள் தன் சட்டை முழுவதும் கழட்டி போல வீசியவன், “ஏய் சிட்டு….எங்க போற? இங்க வா…” என்று சொல்லி அவள் கையை எட்டிப் பிடித்து இழுத்தவன் மெத்தையில் இலக்கியாவை படுக்க வைத்து அவள் அருகில் தமிழம் படுத்துக்கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத இலக்கியா அவனிடமிருந்து தப்பித்து மெத்தையிலிருந்து எழுந்தவள், “நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா? இந்த நேரத்துக்கு எதுக்கு என் ரூமுக்கு வரீங்க? வந்ததும் இல்லாம இப்படி சட்டை எல்லாம் கழட்டி போட்டு படுத்திட்டு இருக்கீங்க? முதல்ல எழுந்திருச்சு இங்கிருந்து வெளியே போங்க…!” என்று கத்தினாள் இலக்கியா.

“ஏய் சிட்டு….இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு நீ இப்படி கோபப்படுற? ப்ளீஸ் என் பக்கத்துல வந்து படுத்துக்கோயேன், எனக்கு தூக்கம் வருது…” என்று அவளிடம் கெஞ்சினான்.

“தூக்கம் வந்தா போய் உங்க ரூம்ல படுத்து தூங்குங்க, இங்க எதுக்கு வந்தீங்க?” என்றாள் இலக்கியா.

“என்ன சிட்டு இப்படி பேசுற…? என்னைக்கு இருந்தாலும் நீயும் நானும் ஒரே ரூம்ல தான் படுத்து தூங்க போறோம். இப்போ வந்து உன் ரூம்ல தூங்கினா என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.

“என்ன விளையாடுறீங்களா? உங்களுக்கும் எனக்கும் இன்னும் கல்யாணமே ஆகல. கல்யாணம் ஆகாம எப்படி பையனும் பொண்ணும் ஒரே ரூம்ல இருப்பாங்க?” என்று கேட்டாள் இலக்கியா.

“ஏன் இருக்கக் கூடாது? அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நான் உன்னை எதுவும் செய்திட மாட்டேன். ப்ளீஸ் இங்க வந்து படுத்துக்கோ… எனக்கு மனசு சரியில்ல, ஏதோ போல இருக்கு…” என்று தமிழ் முதல் முறையாக தன்னிலை பற்றி இலக்கியாவிடம் கூற…

அவனைப் புருவம் சுருக்கி பார்த்த இலக்கியா, “ஏன் என்ன ஆச்சு?” என்று மனது கேட்காமல் தமிழிடம் கேட்டாள்.

“எதுவா இருந்தாலும் என் பக்கத்துல வந்து கேளு, அங்கிருந்து கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன்,” என்றான் தமிழ்.

“சொல்றதுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க… அங்க எல்லாம் வர முடியாது,” என்றவள் அவனையே பார்க்க…

தமிழுடன் முகமெல்லாம் வெளுத்து கண்கள் எல்லாம் சிவந்து போய் இருந்தது. “என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் உங்க முகம் எல்லாம் இப்படி இருக்கு?” என்று கேட்டாள் இலக்கியா.

“அதை சொல்லத் தானே நான் உன்னை என் பக்கத்துல கூப்பிடுறேன். ஆனா நீ தான் வரமாட்டேன், அங்கேயே பிடிக்காது பண்ணிட்டு நின்னுட்டு இருக்க,” என்றான் தமிழ்.

அவனை முறைத்தவள், “எனக்கு காது நல்ல கேட்கும், நீங்க அங்கிருந்து சொல்லுங்க நான் இங்கிருந்து கேட்கிறேன்,” என்றாள்.

“ம்ஹும்… நீ இங்க வந்தா தான் சொல்லுவேன்,” என்று தமிழ் அடம் பிடிக்க…

இவன் கிட்ட எப்படி பேசினாலும் வேலையாகாது, அவன் நினைப்பதை தான் செய்யணும்னு சொல்லுவான். பேசாம அவன இங்கேயே விட்டுட்டு நம்ம வேற ரூம் போய் தூங்கிடலாம் என்று நினைத்தவள்,

தமிழைப் பார்த்து, “நீங்க இங்கேயே தூங்குங்க, நான் வெளியே போய் ஆரா கூட அவர் உங்களை தூங்கிக்கிறேன்,” என்றாள் இலக்கியா.

“அப்போ நீ நான் கூப்பிட்டாள் வரமாட்டே அப்படித்தானே?” என்றான் தமிழ்.

“ஆமாம்,” என்று தலையாட்டியவள், அவன் அடுத்து எதுவும் செய்வதற்குள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று திரும்பி கதவை நோக்கி ஓட…

அவனிடம் இருந்து தப்பித்து திரும்பி ஓடுவதைப் பார்த்த தமிழ், மெத்தையில் இருந்து எழுந்தவன் தள்ளாடிப்படியே இலக்கியாவை நோக்கி நடந்து சென்றவன் கால் தடுக்கி கீழே விழப் போனான்.

கதவு வரை சென்று இலக்கியா தமிழைத் திரும்பிப் பார்த்தவள் அவன் கால் தடுக்கி கீழே விழப் போவதைப் பார்த்து பதறியவள் ஓடி வந்து அவனை கீழே விழாமல் பிடித்துக் கொள்ள…

தன் அருகில் வந்ததும் கீழே விழப் போவதுபோல நடித்த தமிழ் அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

அவன் அணைத்துக் கொண்ட பிறகுதான் உணர்ந்தாள் தான் அவனிடம் வந்து மாட்டிக்கொண்டோம் என்று…

இலக்கியா பாவமாக தமிழைப் பார்க்க,..

அவனும் அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி அவள் கைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்து தமிழும் அவள் அருகில் படுத்துக்கொண்டான்.

படுக்கையிலிருந்து இலக்கியா எழப்போக, “இப்போ நீ பேசாம படுக்கிறாயா இல்ல உனக்கு நான் முத்தம் கொடுக்கவா?” என்று கேட்டான்.

இலக்கியா எழுந்திருக்கப் போனவள் தமிழ் சொன்னதை கேட்டு மீண்டும் அமைதியாக கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

“ம்ம்ம்… இது நல்ல பிள்ளைக்கு அழகு,” என்றவன் அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு இலக்கியாவின் தோளில் தலை வைத்து படுத்திருந்தான்.

தமிழ் அணைத்துப் படுத்திருப்பதைப் பார்த்தவர்களுக்கு அவன் தப்பான நோக்கத்தில் தன்னிடம் நெருங்கி வரவில்லை என்பதை உணர்ந்த இலக்கியா அமைதியாகப் படுத்துக்கொண்டாள்.

அவள் எதுவும் பேசாமல் படுத்திருக்க அவள் தோள் மேல் தலை வைத்து படுத்து இருந்த தமிழ் அரை தூக்கத்தில் நிமிர்ந்து இலக்கியாவை பார்த்தான்.

அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த இலக்கியா தன் கண்களை கீழே உருட்டி, “என்ன? ஏன் அப்படி பார்க்கிறீங்க?” என்று கேட்டாள்.

“நான் எனக்கு மனசு சரியில்லை என்று சொன்னேனே, என்ன ஆச்சுன்னு நீ என்கிட்ட கேட்க மாட்டியா?” என்றான் தமிழ்.

“அச்சச்சோ, கொஞ்ச நேரம் முன்னே மனசு சரியா இல்லைன்னு தானே என்கிட்ட சொன்னான். நான் அப்போ நடந்த களேபரத்துல அத வேற மறந்துட்டேன் பாவம்,” என்று அவன் மீது பரிதாபப்பட்ட இலக்கியா.

“ஏன் மனசு சரியில்ல?” என்று கேட்டவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கப் போக…

“ஏய் எங்க போற?” என்று அவள் கையைப் பிடித்தான் தமிழ்.

“எங்கேயும் போகல. நீங்க சொல்றத கேக்குறதுக்காக எழுந்து உட்கார வந்தேன்,” என்றாள்.

“அப்படியா? அப்போ நானும் கண்டுகிறேன்,” என்று சொல்லி படுத்து இருந்த தமிழ் இருந்து அவள் எதிரில் காலை சம்மனங்கால் போட்டு மடக்கி அமர்ந்திருக்க.

மிகவும் ஸ்டைலாக கம்பீரமாக எப்போதுமே அமரும் தமிழ், என்று அவளுக்கு நிகராக சாதாரணமாக அமர்ந்திருப்பதைப் பார்க்க இலக்கியாவுக்கு பிடித்திருந்தது.

அவன் முகம் மிகவும் களைப்பாக சூம்பிப் போய் இருப்பதைப் பார்த்தவளுக்கு பாவமாக இருக்க, “நீங்க எதுவும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள் இலக்கியா.

“அதெல்லாம் நிறைய சாப்பிட்டேன்,” என்றான் தமிழ்.

“சரி,” என்று தலையாட்டிய இலக்கியா, “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? உங்க முகம் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு, என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்,” என்றான் தமிழ்.

“பெரிய தப்பா? அப்படி என்ன தப்பு பண்ணினீங்க?” என்றாள் இலக்கியா.

“உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க தானே இங்கே கூட்டிட்டு வந்தேன்,” என்றான் தமிழ்.

“அப்படியா!!!” என்று ஆச்சரியமாக இலக்கியா அவன் சொன்னதை கேட்டு பதில் கூற…

அவளை முறைத்தவன், “வேற எதுக்காக உன்னை நான் இங்கே அழைச்சிட்டு வந்தேன் நீ நினைக்கிற?” என்றான் தமிழ்.

“எனக்கு தெரியல,” என்றாள் இலக்கியா.

“நீ என்ன எப்படி வேணாலும் நினைச்சுக்க. ஆனா உண்மையாவே நான் உன்னை என் கூடவே வச்சுக்க, உன்னை கல்யாணம் பண்ணிக்க தான் நான் உன்னை என் கூட இங்கே கூட்டிட்டு வந்தேன்,” என்றான்.

“நிஜமாகவா?” என்றாள் இலக்கியா.

“ம்ம்ம்…. ஆமாம்,” என்றவன், “உன்னை பார்க்கும் போது என் சிட்டு எப்படி இருப்பாளோ அவளையே பார்க்குற மாதிரி இருக்கு.”

“சிட்டுவா!!” என்று புரியாமல் இலக்கியா தமிழைப் பார்த்தாள்.

அவள் பார்வையிலேயே இலக்கியா சிட்டுவைப் பற்றி கேட்பது புரிய… அவனே சொல்ல ஆரம்பித்தான்.

“நான் சின்ன வயசுல பார்த்த என்னோட சிட்டு மாதிரியே நீ இருக்க..அதனாலதான் உன்னை அங்கே ஏலத்துல பார்த்ததும் யோசிக்காம உன்னை விலைக்கு வாங்கிட்டேன்,” என்றான் தமிழ்.

“அவங்கள மாதிரியே நான் இருக்கேன்னு வாங்குனீங்க சரி…. ஆனா அதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க ஏன் முடிவு பண்ணுணிங்க?” என்றாள் இலக்கியா.

“ஒரு வேலை நீ என் சின்ன வயசு சிட்டுவா இருந்துட்டா… நான் உன்னை மிஸ் பண்ணிடக் கூடாது இல்ல அதான்,” என்றான்.

“உங்க சின்ன வயசுன்னா அப்படின்னா அப்போ இப்போ… அவங்க கூட நீங்க பேசுறது இல்லையா?” என்றாள் இலக்கியா.

“ம்ஹும்…” என்ற தலையை இடவலமாக தமிழ் ஆட்ட…

அவன் எப்போதும் போல் இறுக்கமாக இல்லாமல் இப்படி சகஜமாக அவளிடம் பேசுவதைப் பார்த்த இலக்கியா அவனைப் பார்த்து சிரித்தவள்.

“ஏன் அவங்க கூட பேசறது இல்ல?” என்றாள் இலக்கியா.

“ஏன்னா அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரியாதே…. அதனால நான் அவ கூட பேசுறதில்லையே…” என்றான் தமிழ்.

“அப்படின்னா நீங்க அவங்கள பார்த்து ரொம்ப நாளாச்சா?” என்று கேட்டாள்.

“ரொம்ப நாள் இல்ல, ரொம்ப வருஷமே ஆயிடுச்சு நான் அவளைப் பார்த்து,” என்றான் தமிழ்.

“அதுக்கப்புறம் நீங்க ஒரு முறை கூட அவங்கள பார்க்கவே இல்லையா? பார்க்கணும்னு முயற்சி செய்யவில்லையா?” என்றாள் இலக்கியா.

“ஆமா, அவ என்கிட்ட பொய் சொல்லிட்டு என்னை விட்டு போயிட்டா…. என்னை பற்றி யோசிக்காம என்கிட்டே எங்கே போறேன்னு கூட சொல்லிக்காம போய்ட்டா… அவ இல்லாம நான் என்ன செய்வேன்ன்னு யோசிக்காம என்ன விட்டுட்டு போய்ட்டா…” என்று இலக்கியாவிடம் புலம்பினான்.

அவன் புலம்புவதைப் பார்க்க இலக்கியாவுக்குப் பாவமாக இருந்தது.

“நீங்க அவங்களை தேடிப் பார்த்திங்களா?” என்றாள் இலக்கியா.

“தேடிபார்த்து… தேடிபார்த்து அலுத்து போய்ட்டேன்.. அவ எங்க இருக்கா… என்ன பண்ணிட்டு இருக்கா… உயிரோட இருக்காளா இல்லையான்னு எனக்கு எதுவும் தெரியாது,” என்றான் தமிழ்.

அவன் சொல்வதைக் கேட்டு இலக்கியாவுக்குக் கஷ்டமாக இருந்தது.

“அவங்க எந்த ஊரு? நீங்க அங்க போய் பார்த்தீங்களா?” என்றாள்.

“நான் அங்கே போய் ரொம்ப வருஷம் ஆச்சு,” என்றவன், “என் சிட்டுவை நான் கடைசியா பார்த்தது 11 வருஷத்துக்கு முன்னாடி… அவளுக்கு 6 வயசா இருக்கும்போது கொடைக்கானலில் இருக்குற எங்களோட டீ எஸ்டேட்,” என்றான்.

தமிழ் கொடைக்கானல் என்று சொன்னதும் இலக்கியா ஆர்வமாகி, “கொடைக்கானளில் எந்த இடம்?” என்றாள்.

தமிழ் “எங்க டீ எஸ்டேட் பெருமாள் மலையில் இருக்கு,” என்றவன், தன் டீ எஸ்டேட் இருக்கும் இடத்தின் பெயர் குமரன் டீ எஸ்டேட்டில் தான் நான் என் சிட்டுவை கடைசியா பார்த்தது,” என்றான் தமிழ்.

அவன் சொன்ன விபரங்கள் எல்லாம் கேட்ட இலக்கியாவுக்கு அவள் இலக்கியா தன் குடும்பத்துடன் தமிழ் சொன்ன டீ எஸ்டேட்டில் தான் வேலைக்கு இருந்தனர்.தமிழ் சொன்ன விபரங்கள் எல்லாம் இலக்கியாவுடன் பொருந்திப் போக… அவள் அதிர்ந்த விழிகளோடு தமிழ் சொன்னது எல்லாம் நிஜம் தானா என்பது போல பார்த்துக் கொண்டு இருந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.