Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 7

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 7

by Layas Tamil Novel
547 views

FLING 7

சொகுசான அந்த வெல்வெட் மெத்தையில் உறங்கிக்  கொண்டிருந்த ஆதித்ய தீரன் மெல்ல தூக்கம் கலைந்து கண்விழித்தான்

தூக்கம் கலைந்ததும் அவன் முதலில் தேடியது அகலிகாவை தான்

தலையை திருப்பி தன் அருகில் படுக்கையை பார்த்தவன் அங்கு படுக்கை காலியாக இருப்பதை கண்டான்

அவள் அங்கு இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்தாலும் மெல்ல அவன் இதழ்கள் புன்னகைத்தது. அவள் மென்மையான ஸ்பரிசமும் அவளுடன் இருந்த அந்த இரவும் அவனுக்கு ஒரு ஏகாந்தமான நிம்மதியை மனதில் கொடுத்திருந்தது.  என்னவோ அவளுடன் பல நாள்  தன் பந்தம் தொடர்ந்து இருப்பது போல அவனுக்கு தோன்றியது.

அவளைப் பற்றிய நினைவுகள் மனதில் எழுந்ததுமே தீரனின் உடலெல்லாம் சிலிர்க்க தொடங்கியது .  அகலகா இல்லாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்ற எண்ணம் அவனை அறியாமல் தோன்ற .

” டேய் ஸ்டுப்பிட் !  என்ன மாதிரி திங்க் பண்ணிட்டு இருக்க நீ … அவ சொன்னது போலவே சீக்கிரம் வந்தா சீக்கிரமே போய்ட்டா   தட்ஸ் இட் ”  என்று எழுந்து அமர்ந்தான்

ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் இருவரின் பார்வை பரிமாற்றத்திலேயே  நிகழ்ந்த  உறவு இது இருவருக்குமே இது புதிய அனுபவமாக இருந்தது .

அவளை  காதலித்தவனால் ஏற்பட்ட துரோகத்தை வெளிப்படையாக  தன்னிடம் கூறியவளை நினைத்து ஆச்சரியப்பட்டான் அந்த நிலையில் கூட தன்னிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவளை எப்படி ஒரு நாள் ஏமாற்றம் முடிந்தது என்று   அகலிகாவை காதலித்தவன் மீது தீரன் அறியாமலேயே கோபம் வந்தது .

அவள் படுத்திருந்த இடத்தை இயல்பாக தொட்டுப் பார்த்தான் அங்கே அகழிகா இல்லை என்பது ஏமாற்றம் அளித்தது. அவள் படுத்திருந்த இடத்தில்  மிகவும் நேர்த்தியாக  சுருக்கம் இன்றி சரி செய்யப்பட்டிருந்தது .

“எப்போ கிளம்பி போனா? நான்  எப்படி அதை கவனிக்காமல் விட்டேன்”  என்று யோசித்தான்

அதே யோசனையோடு அந்த அறையை ஏறிட்டான்.  அவள் வைத்திருந்த கைப்பையோ, அல்லது அவளது உடமைகளோ எதுவும் அங்கில்லை.

லேசாகப் புன்னகைத்தான். அவள் சொன்னது மீண்டும் அவனுக்கு நினைவுக்கு வந்தது”நான் சீக்கிரம் வரேன், சீக்கிரம் போயிடுவேன்.” அவள் சொன்ன வார்த்தையை மறக்கவில்லை. “Fling” ஆப்பில் பேசப்பட்டபடியே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு சந்திப்பு. அகலிகாவுடன் நிகழ்ந்து விட்டதை எண்ணினான்.

“ம்ஹும்… கிளம்பிட்டா அவ”   என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவன்.  “இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல , மறுபடியும் அவளை  ஒரு முறை மீட் பண்ணினா நல்லா இருக்கும்” என்று தீரன்  நினைத்தான்.

உடனே   மேஜையில் இருந்த தன் மொபைலை எடுத்து  அகலிகாவிற்கு அழைக்கலாம் என்று முடிவு எடுத்து  டயல் செய்யப் போனவன்  அவளுக்கு  அழைக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன்  அழைக்க முடிவு செய்த போது தான் அவனுக்கு உரைத்தது  அதாவது அகலிகாவின் (Paru\_1)  நம்பரை வாங்கவில்லை என்று .

“ஷிட்! இதை எப்படி மிஸ் பண்ணினேன்  நான். ஒரு நைட் முழுக்க அவ கூட ஒண்ணா இருந்து இருக்கேன். இப்படி   ஸ்டுப்பிட்டா  இருந்திருக்கேன். ஃபுல் நேம் கேட்கல  அவ போன் நம்பர் வாங்கல  ராத்திரி முழுக்க  என்னென்னவோ அவகிட்ட உளறியாடா.. அவளை கிஸ் பண்ணும் போது அவ்வளவு பேசினாயாடா..  ஒரு போன் நம்பர் உன்னால வாங்க முடியல நீ எல்லாம் ஒரு சிஇஓ என்று வெளியே போய் சொல்லிடாத  இப்படி முட்டாள்தனமா இருந்திருக்க .. அறிவில்ல உனக்கு  ”  என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்

“இப்ப என்ன போன் நம்பர் தான வாங்காம விட்டுட்ட. அதான் ‘ஆப்ல அவ கூட காண்டாக்ட்ல இருக்கியே ! ஜஸ்ட் மெசேஜ் பண்ணு . அவளை மீட் பண்ணனும்னு சொல்லு. காண்டாக்ட் நம்பர் கேளு…  அவ்வளவுதான் சிம்பிள்” என்று மூளை அவனுக்கு அடுத்த ஐடியாவை எடுத்து கொடுத்தது.

“எஸ்  யூ ஆர் ரைட். எங்க கான்வர்சேஷன் முழுக்க Fling’ தான் நடந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் அதுல தானே அதிகம் பேசிக்கிட்டோம்  ஒரு கால் கூட பண்ணிக்கலையே   ” என்றவன் . அவளைத் தொடர்பு கொள்ள ஒரே வழி ‘Fling’ ஆப் மட்டுமே.

தீரன் உடனடியாக ‘Fling’ அப்ளிகேஷனைத் திறந்தான். நேற்றைய சாட் உரையாடலைப் பார்க்க, ‘Paru\_1’ என்ற ஐடியைத் தேடினான்.

தீரன் தேடியதும் ஸ்க்ரீனில் ஒரு தகவல் பளிச்சென்று தெரிந்தது.

அதை பார்த்ததும் அவனது முகத்தில் புன்னகை மெல்ல மறையத் தொடங்கியது.

“User ID: Paru\_1 has been deleted. (இந்த ‘பயனர் கணக்கு’ நீக்கப்பட்டுவிட்டது) .

தீரன் அதிர்ச்சியுடன் அந்தத் தகவலை ஒருமுறைக்கு இருமுறை வாசித்தான். அவள், தான் சொன்னபடியே, எந்தவிதத் தடயமும் வைக்காமல், முழுவதுமாக ‘மூவ் ஆன்’ செய்து விட்டாள்.

‘அவள் எதற்காகச் சந்திப்பில் இருந்தாளோ, அது முடிந்தது. அதனால் கணக்கையும் நீக்கிவிட்டாள். எந்தத் தொடர்பும் இனி இல்லை,’ என்பதை அவனது மனம் உடனடியாகப் புரிந்துகொண்டது.

ஆனாலும், தீரனுக்குள் ஒரு சிறிய ஏமாற்றம் உண்டானது. , அவளது துயரத்தை மறக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி மட்டுமே தானா?

அவன் ஒரு ‘CEO’ என்பதை மறைத்து ஒரு ‘சாஃப்ட்வேர் டெவலப்பர்’ ஆக வந்ததற்கான காரணமே அவளது வெளிப்படையான பேச்சு தானே…

“Fling’ ஆப் உருவாக்கப்பட்டது, இது போன்ற ‘No Strings Attached’ உறவுகளுக்காகத் தான். ஆனால், இதை உருவாக்கிய எனக்கே, இந்த திடீர் முடிவு ஏமாற்றத்தைக் கொடுக்கிறதே?” என்று நினைத்தான்.

தீரன் தன் டேபிள்ட்டை எடுத்து, லேப்டாப்பில் AD டெக்னாலஜிஸ் சர்வர் லாக்-இன் செய்தான். அவனுக்குத் தெரியும், அகலிகாவால் அவளது கணக்கை நீக்க முடிந்தாலும், அந்தச் சர்வரில் அவளது IP முகவரி (Internet Protocol Address) பதிவாகியிருக்கும் என்று.

அவன் கண்களில் லேசான ஒரு பிடிவாதம் தெரிந்தது.

“Paru\_1-நான் அவளைக் கண்டுபிடிக்காமல் விட மாட்டேன்.” என்று அந்த பிடிவாதத்தில் தெரிந்தது

பார்க்கலாம் கண்டு பிடித்துவிடுவானா என்று

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured