EPI 210
ஷிவு தன் அம்மா வீட்டுக்கு செல்ல தயாராகி கொண்டு இருந்தாள்.
இன்று அவளுக்கும், ரூபேஷிற்கும் மறுவீடு அழைத்து விருந்து வைக்கிறார்கள்.
காலையில் இருந்து பரப்பாக அவளும், ரூபேஷின் அம்மாவும் அவர்கள் வீட்டிற்கு செல்ல வெறும் கையோடு செல்லக்கூடாது என்று வீட்டிலேயே பலகாரம் செய்து கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் இருவரும் எழுந்ததில் இருந்து தனக்கு ஒரு காபி கூட போட்டுக் கொடுக்காமல் மிகவும் பிஸியாக இருப்பதை பார்த்த ரூபேஷ்.
இவ தான் அவ அம்மா வீட்டுக்கு போறேன்னு காலில் சக்கரம் கட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கான்னா…
இவ கூட சேர்ந்து என் அம்மாவும் ரேக்கை கட்டிக்கிட்டு இல்ல வேலை செய்துட்டு இருக்காங்க.
என்னிக்கு நான் ஷிவுவை கல்யாணம் பன்னிட்டு வந்தேனோ அன்றில் இருந்து என் அம்மா அவ பக்கம் சாஞ்சுட்டாங்க.
நான் இந்த வீட்டில் இருக்கிறேனா இல்லையா என்று கூட கவனிப்பது இல்லை.
எனக்கு முன்னே எல்லாம் பார்த்து பார்த்து எல்லாமே செய்யுற என் அம்மா இவ கூட சேர்ந்ததில் இருந்து என்னை இப்போ எல்லாம் கண்டு கொள்வதே இல்லை என்று புலம்பிய படி சமையல் அறைக்கு வந்தான்.
ஷிவுவும், அவன் அம்மாவும் சிரித்து பேசிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தாவர்கள்.
ரூபேஷ் சமையல் கட்டிற்குள் நுழைந்ததும் பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டு முகத்தை உம்மேன்று வைத்து கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
இவ்வளவு நேரம் இவர்கள் இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருந்தது தன் அறை வரை கேட்டுக் கொண்டு இருந்தது.
ஆனால் நான் சமையல் கட்டிற்கு வந்ததும் என்னை பார்த்துவிட்டு முகத்தை எப்படி வைத்திருக்குதுங்க பாரு ரெண்டும் என்று புலம்பியவன்.
அங்கே இருந்த இன்டெக்ஷன் அடுப்பில் பாலை வைத்து தனக்கு காபி போட ஆரம்பித்தான்.
அவனை கண்டும் காணாமல் இருவரும் முறுக்கு சுட்டுக் கொண்டு இருக்க..
அப்போது எண்ணெய் ஷிவுவும் காலில் தெறித்து விட…
ஐயோ.. அம்மா… என்று அலறிக் கொண்டு ஷிவு இருந்த இடத்தில் இருந்து எழுந்தாள்.
அவள் இப்படி அலறியதும் ஷிவுவிற்கு என்னவோ ஏதோ என்று ரூபேஷ் பதறிக் கொண்டு ஷிவுவின் அருகில் வந்து.
ஏய்.. ஷிவு என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துறே என்றான் பதற்றமாக..
காலுல என்னை தெறிச்சுருச்சு என்று ஷிவு அழ..
ஏய் அழாதே.. வா ஹாலில் வந்து உக்காரு மருந்து போட்டு விடுறேன் என்றவன்.
அவன் அம்மாவிடம் திரும்பி அவளுக்கு தான் இந்த வேலை எல்லாம் தெரியாதுன்னு உனக்கு தெரியும் இல்ல..
அப்பறோம் எதுக்கு அவளை சமையல் காட்டுக்குள்ள விட்டுட்டு வேலை வாங்கிட்டு இருக்கே. எதுவும் செய்யணும்னா நீயே செய்ய வேண்டியது தானே என்று அவன் அம்மாவிடம் சண்டைக்கு வந்தவன்.
ஷிவுவை அலுங்காமல் குலுங்காமல் அழைத்து சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தவன்.
உள்ளே சென்று மருந்தை எடுத்து வந்து ஷிவுவின் காலில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டான்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ரூபேஷின் அம்மா தான் செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு எழுந்து ஹாலிர்க்கு வந்தவர்.
டேய் என்ன டா சும்மா சும்மா எப்போ பார்த்தாலும் உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பன்னிட்டு இருக்க…
உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் வேலை செய்ய தான் நான் இங்கே இருக்கேனா?
எனக்கு என்ன வந்தது அவள் தான் ஆசையா அவ அம்மா வீட்டுக்கு போகும்போது வெறும் கையோட போக கூடாது எதுவும் வாங்கிட்டு போகலாம்னு சொன்னா.
நான் தான் வெளியே வாங்கிட்டு போனா நல்லா இருக்காது. அதனால நம்ம வீட்லயே செய்துக்கலாம்னு நானே செஞ்சு தரேன்னு செய்துட்டு இருந்தேன்.
உன் பொண்டாட்டி தான் அவளே வந்து நானும் உங்களுக்கு ஹெல்ப் பன்றேன்னு வந்து வேலை செய்துட்டு இருந்தா.
என்னவோ அவ காலுல எண்ணெய் சட்டியை மொத்தமா கவுத்த மாதிரி அந்த அலறு அலறுரா… வெறும் ரெண்டு சொட்டு தான் விழுந்திருக்கும்.
அதுக்கே இப்படி சீனை போட்டு உன்கிட்டே என்னை திட்டு வாங்க வெக்குறா என்று ஷிவுவை பற்றி ரூபேஷிடம் குறை சொல்லி போறிந்து தள்ளி விட்டார்.
அவர் பேசும் வரை கேட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்து இருந்த ஷிவு.
வேகமாக சோபாவில் இருந்து எழுந்தவள். அத்தை நான் வெளியே வாங்கிக்கலாம்னு தானே சொன்னே.
நீங்க தான் வீட்டுல பலகாரம் செய்து கொடுத்தா தான் நல்லா இருக்கும்னு சொன்னிங்க.
நீங்க தனியா வேலை பாக்குறீங்கனு தானே நான் வந்து உங்களுக்கு ஹெல்ப் பன்னினேன்.
ஆனா நீங்க அப்போ எல்லாம் எதுவும் சொல்லாம இப்போ வந்து உங்க மகன் கிட்டே நான் என்னவோ என் காலில் பட்ட புண்ணை காட்டி சீன் போடுறேனு சொல்லிடு இருக்கீங்க.
எனக்கு ஒன்னும் உங்க மகன் கிட்டே நடிச்சி வனை என் கைக்குள்ள போட்டுக்கனும்னு எந்த அவசியம்ம இல்லை.
உங்க வாரிசு என் வயித்துல வளருது நாளைக்கு அதுக்கு அப்பா யாருனு தெரியாம வளர கூடாதுனு தான் நான் உங்க மகனையே போனா போகுதுனு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் கூட இருக்கேன் என்றாள் முகத்தை மூடி அழுது கொண்டே.
ஷிவு அழுவதை பார்த்த ரூபேஷ் அவளிடம் வந்தவன் அவன் முகத்தில் கையை எடுக்க போக..
என்ன தொடாதே.. உன்னை நம்பி கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வந்ததுக்கு உன் அம்மா இன்னும் என்ன எல்லாம் சொல்லி என் மனசை நோகடிக்க போறாங்கன்னு தெரியலை என்று தன் முகத்தை மூடிக் கொண்டு அழ..
அவளை சமாதானம் செய்ய முடியாமல் அவன் அம்மாவை பார்த்தான்.
அவர் எனக்கு என்ன வந்தது அவ அம்மா வீட்டுக்கு போறதுக்கு நான் ஏன் கஷ்டப் பட்டு வேலை செய்யணும் நான் எந்த வேலையும் செய்ய போறது இல்ல.
நான் என்னவோ இவளை கொடுமை படுத்துற மாதிரி இல்ல இப்படி முகத்தை மூடி அழுதுட்டு இருக்கா என்று ஷிவுவை திட்டினார்.
ரூபேஷிற்கு தன் அம்மாவை சமாதானம் செய்வதா.. இல்லை ஷிவுவை சமாதானம் செய்வதா என்று ஒன்றும் புரியவில்லை.
இவர்கள் இருவரும் இருப்பதை பார்த்தால் இருவரையும் இப்போதைக்கு சமாதானம் செய்து ஷிவு வீட்டிற்கு அழைத்து செல்வது வாய்ப்பு இல்லை என்று நினைத்தவன்.
பேசாம நானே வேலை செய்த்துக்கலாம் என்று முடிவு செய்தவன் . தன் வேஷ்டியை மடித்துக் கட்டியவன் சட்டையை கழட்டி அருகில் இருந்து சோபாவில் வைத்துவிட்டு சமையல் அறை நோக்கி சென்றான்.
அவன் செல்வதை பார்த்த ரூபேஷின் அம்மா டேய் ரூபேஷ் எங்கே போற என்றார்.
ம்ம்ம்… முறுக்கு சுட போறேன் என்றான் ரூபேஷ்.
டேய் அதெல்லாம் எதுவும் வேணாம் உன் பொண்டாட்டி சொன்ன மாதிரி பேசாம வெளியே போய் வாங்கிக்கலாம் என்று சொல்ல…
அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ அமைதியா இரு நானே சுட்டுக்கிறேன். உனக்கு எவ்வளவு முறை பலகாரம் செய்யும்போது நான் உனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன்.
நானே செய்துக்குவேன் நீ பேசாம வேடிக்கை மட்டும் பாரு என்றவன் கிட்சனிற்குள் சென்று முறுக்கு சுட ஆரம்பித்தான்.
அவன் வேலை செய்வதில் மும்முரமாக ஈடு பட்டு இருக்க..
ரூபேஷின் அம்மா சோபாவிவின் ஓரத்தில் அமர்ந்து இருந்தவர் உள்ளே ரூபேஷ் தங்களை கவனிக்கவில்லை என்று தெரிந்ததும் ஷிவுவின் அருகில் வந்து அவள் முகத்தில் இருந்து கையை எடுத்தவர்.
மருமகளே நடிச்சது போதும் என் மகன் ரொம்ப மும்முரமா வேலை பாத்துட்டு இருக்கான் என்றார்.
அவர் சொன்னதை கேட்டு இவ்வளவு நேரம் அழுவது போல நடித்துக் க்கொண்டு இருந்த ஷிவு.
அத்தை நீங்க சொன்ன மாதிரியே அவனே போய் வேலை செய்ய ஆரம்பிச்சுட்டான் எப்படி அத்தை என்றாள் ஆச்சர்யமாக.
என் மகனை பத்தி எனக்கு தெரியாதா … அவன் அப்படியே அவன் அப்பா மாதிரி பொண்டாட்டிக்கு ஒன்னுன்னா ஓடி வந்து வேலை பார்ப்பாங்க.
அதனால் தான் சொன்னேன் உன்னக்கு காலுல எண்ணெய் பட்டதும் நான் சொன்ன மாதிரி நடின்னு.
இப்போ பார்த்தியா இவன் நான் சொன்ன மாதிரியே நாம ரெண்டு பேரும் சண்டை போட்டதும். எப்படியும் மாமியார் மருமகள் சண்டைக்கு உள்ளே வந்து சமாதானம் செய்ய முடியாதுனு புரிஞ்சுக்கிட்டு அவனே போய் வேலை பாக்குறான் பாரு என்றார் ரூபேஷின் அம்மா.
ஆமா அத்தை நீங்க சொன்னது போலவே தான் ரூபேஷ் இருக்கான் என்றாள் ஷிவு.
சரி சரி கொஞ்ச நேரம் அவன் வேலை செய்ற வரை சண்டை போட்ட மாதிரி நடிச்சிட்டு இருக்கலாம் அப்போதான் அவனே எல்லா வேலையும் செய்வான் நமக்கு வேலை மிச்சம் என்றார்.
சரி அத்தை என்றவள் மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கோவமாக இருப்பது போல நடித்துக்கொண்டு ஷிவு ஒரு மூளையிலும், ரூபேஷின் அம்மா ஒரு மூளையிலும் அமர்ந்து இருந்தனர்.
சிறிது நேரத்தில் வேலை எல்லாம் முடித்து விட்டு வந்த ரூபேஷ் இன்னமும் சோபாவில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்த தன் அம்மாவையும் , மனைவியையும் பார்த்தவன்.
அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து அமர்ந்தவன் இன்னும் எவ்வளவு நேரம் ரெண்டு பேரும் இப்படியே இருக்க போறீங்க.
ஷிவு வீட்டுக்கு போற அப்போ இப்படி முஅஃத்தை தூக்கி வெச்சிட்டு போனா நல்லா இருக்காது இல்ல..
நீங்க ரெண்டு பேரும் இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோச்சுட்டு சண்டை போட்டுட்டு இருந்தா நல்லவா இருக்கும் என்று இருவரையும் சமாதானம் செய்ய முயன்றான்.
அவர்கள் இருவரும் சண்டை போட்டால் தானே சமாதானம் ஆவதற்கு. இது தெரியாமல் இருவருக்கும் நடுவில் அமர்ந்து இருவருக்கும் பெரிய மனிதன் போல அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்தான்.
அவன் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ஷிவு சோபாவில் இருந்து வேகமாக எழுந்தவள்.
இப்போ என்ன அத்தை கிட்டே நான் நல்லா பேசணும், நானும் அத்தையும் சண்டை போடக்கூடாது அப்படி தானே என்றவள்.
நேராக அவள் அத்தையிடம் சென்று அத்தை நான் தெரியாம உங்க கூட சண்டை போட்டுட்டேன். என்னை மன்னிச்சிருங்க அத்தை என்று ஷிவு சிரிப்பை அடக்க முடியாமல் ரூபேஷின் அம்மாவிடம் பேசினாள்.
அதனால என்ன ஷிவு நான் அதை எல்லாம் அப்போவே மறந்துட்டேன் என்றவர். சரி வா உங்க வீட்டுக்கு போக நேரம் ஆகிருச்சு இல்ல. நாம போய் ரெடி ஆகலாம் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல…
இங்கே என்ன டா.. நடக்குது என்று இவ்வளவு சீக்கிரத்தில் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று புரியாமல் விழித்தவன் எப்படியோ சண்டை போடாம சமாதானம் ஆனால் சரி என்று அவனும் ஷிவு வீட்டிற்கு செல்ல சென்றான்.
❤️
மாதவி, போதி திருமணத்திற்காக ஏற்படுகள் எல்லாம் மிகவும் முமுரமாக நடந்து கொண்டு இருக்க..
பத்திரிக்கை வந்ததும் முதலில் ஆதியையும், அவன் வீட்டில் இருக்கும் சங்கவியையும் அழைக்க முடியாத நிலையிலும் வேதாச்சலம் சங்கவியை பார்க்க வேண்டும் என்றும், அவர் நம்பண் வெங்கடாச்சலத்தையும் நேரில் பார்த்து அழைக்க வேண்டும் என்று மற்றவர்களுடன் அவரும் சென்றார்.
ஷிவுவிற்கு விருந்திற்கு வேண்டியதை எல்லாம் நானே செய்கிறேன் என்று யாரையும் சமையல் அறைக்குள் விடாமல் துர்காவே அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கோ கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தாள்.
விருந்திற்கு ராதாவையும், கீர்த்திகாவையும் அழைத்து இருக்க.. அவர்களும் வந்து துர்கா மட்டும் தனியாக சமைப்பதை பார்த்து நாங்களும் ஷிவுவிற்காக சமைக்கிறோம் என்று துர்காவிற்கு உதவிய படி அரட்டை அடித்துக் கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
ஆதி, கதிர், சந்தோஷ் மூவரும் பேசிக் கொண்டு இருக்க…
இந்த விக்கி என்ன சீக்கிரம் வீட்டுக்கு வரேன்னு இன்னும் வராம இருக்கானே என்று கதிர் சொல்லிக் கொண்டு இருக்கும்போது.
வாசலில் நின்று மச்சான்…. என்று அழைத்தப்படி ஆதியின் வீட்டிக்குள் நுழைந்தான் விக்கி
❤️

2 comments
Akka inaki episode super 😍💕
thank u💖