News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மாறன் காதல் ரதியின் மேலே, EPISODE 3

by Layas Tamil Novel
385 views
A+A-
Reset

EPISODE 3

ரதியால் முடியவில்லை. தன்னை நிலைப் படுத்த முடியாமல் தவித்தவள் தான் செய்த செய்கையை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள் . ஒரு தவிப்பான பார்வையோடு அவனை தயக்கமாக பார்த்தாள் ரதி.

“ஒன்னும் பிரச்சனை இல்ல ரதி, நீ ஒரு நிமிஷம் அப்படியே சாஞ்சு படுத்துக்கோ . நான் தந்து வாஷ் பண்ணிட்டு வரேன்” என்று நேராக வாஷ் பேசினுக்கு சென்று தன் கைகளை சுத்தமாக கழுவி விட்டு வந்தவன். அவசர அவசரமாக அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ரதியின் வாயைக் கழுவி, ஒரு துண்டால் அவள்  முகத்தைத் துடைத்துவிட்டான். பின்னர் நர்ஸை அந்த இடத்தையும் சுத்தம் செய்ய வைத்தான்.

படுக்கையில் சாய்ந்த ரதி, அப்படியே உறைந்து போய் மாறனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஆச்சரியமும் திகைப்பும் விலகவே இல்லை.

அந்த வீட்டில் மாறனைப் பற்றி அவளுக்குத் தெரியும். எப்போதும் யாருடனும் அதிகமாகப் பேசாமல், முகத்தை ‘உர்’ரென்று வைத்துக் கொண்டு, எதற்கும் கவலைப்படாமல், அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு திரியும் ஒரு முரடன் அவன். ரதி அண்ணியாக அந்த வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து, அவளிடம் அவன் மரியாதையாக நடந்திருக்கிறானே தவிர, இவ்வளவு அக்கறை காட்டியதே இல்லை.

ஆனால் இன்று, அவள் கணவனே அவளை நடுத்தெருவில் வீசிவிட்டுப் போனபோது, இந்த மாறன் சற்றும் அருவருப்பு இல்லாமல், ஒரு புருஷனாகத் தன் கைகளிலேயே அவளது வாந்தியை வாங்கியிருக்கிறான்! அவள் முகத்தைத் துடைக்கும்போது அவனது விரல்களில் தெரிந்த அந்தப் பதற்றமும் அக்கறையும் ரதியின் இதயத்தைத் தொட்டது.

‘எப்படிப்பட்ட மனிதன் இவன்? அண்ணன் ஒரு சாக்கடை என்றால், தம்பி இவ்வளவு உன்னதமானவனாக இருக்கிறானே! தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பழியைத் தன் மேல் சுமந்து கொண்டு, இப்போது ஒரு கணவனை விட மேலாக என்னை இவன் தாங்குகிறானே!’ என்று ரதியின் மனம் வியந்தது.

மாறன் தன் கைகளை, ரதியின் அருகில் வந்து அமர்ந்தான். ரதியின் முகம் சோர்ந்து போய் இருந்தது. அவளை அப்படிப் பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. அவளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டு பார்க்க எண்ணி அவள்  தலையில் கை வைக்கப் போனவன், சட்டென்று தயங்கித் தன் கையை இழுத்துக் கொண்டவன்.   “இப்போ எப்படி இருக்கு ரதி? பரவாயில்லையா? டாக்டர்கிட்ட சொல்லி செக் பண்ண சொல்லவா?” என்றான் அக்கறையாக.

ரதி அவனைப் பார்த்துக் கண்கலங்கினாள். இந்த முறை வந்த கண்ணீர் துரோகத்தினால் வந்ததல்ல, மாறனின் இந்த அளப்பரிய அக்கறையைக் கண்டு வந்த கண்ணீர்!

“நான்… நான் நல்லா இருக்கேன். தேங்க்ஸ்…” என்று குரல் தழுதழுக்க கூறினாள்.

அவள் அப்படி சொன்னதும் தான் அவனுக்கு த்ரிப்தியாக இருந்தது. அவளைப் பார்த்து மெண்மையாக புன்னகைத்தவன். “சரி நீ கொஞ்ச நேரம் கண்ணை மூடித் தூங்கு. எதையும் யோசிச்சு இப்போ எதுவும் ஆகப்போறது இல்ல.. உனக்கு இப்போ தேவை கம்ப்ளீட் ரெஸ்ட் சரியா” என்றவன் எழுந்து படுத்திருந்தவளுக்கு தலையணையை சரியாக வைத்துவிட்டு பெட்டை கொஞ்சம் மேலே உயர்த்தி அவள் சாய்ந்து படுக்கும் படி மாற்றிவிட்டு அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டான்.

அவன் செயல்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படியே கண்களை மூடி படுத்துக்கொண்டாள்.

சற்று நேரத்தில் அவளிடம் இருந்து சீரான சுவாசம் வருவதை உணர்ந்த மாறன். அவளுக்கு போர்வையை சரி செய்துவிட்டவன் வேகமாக எழுந்து வெளியே வந்தவன் உடனே தன் மொபைலை எடுத்து அதர்வாவிற்கு அழைத்தான்.

“ஹலோ சொல்லுடா..” என்று போனை அட்டென்ட் செய்து மிகச் சாதாரணமாக பேசினான்.

“என்ன டா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க. உன் இஷ்டத்துக்கு நீயும், மாயாவும் லிவின்ல இருக்கீங்கன்னு சொல்ற.. ரதியோட புருஷன்னு என்னை வேற கை காட்டி இருக்க” என்று எடுத்ததும் எகிறினான் மாறன்.

“டேய்.. எதுக்கு இப்படி டென்ஷன் ஆகி கத்துற.. காது வலிக்குது டா.. ” என்று தன் காதை குடைந்து கொண்டே பேசியவன் “இங்க பாரு நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.  அப்போவே அந்த பட்டிக் காட்டச்சியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன் , ஆனா அம்மா தான் சொந்தம் விட்டுப் போகக்கூடாது, அம்மா இல்லாத புள்ள.. வாக்கு கொடுத்துட்டேன். நான் சாகுறதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணனும்னு  சொல்லி என்னை ப்ளேம் பண்ணி அவங்க தம்பி புள்ளையின்ன்னு இவளை என் தலையில கட்டி வெச்சிட்டாங்க. இப்ப அம்மாவும் இல்ல.. இனி யாருக்காக நான் என் விருப்பத்தை எல்லாம் சகிச்சிட்டு இருக்கணும். அதுவுமில்லாம அவளுக்கு பழசு எல்லாம் மறந்து போயிருச்சு. இதை விட ஒரு நல்ல சான்ஸ் எனக்கு கிடைக்காது. அதனால தான் அப்டி சொன்னேன்” என்றான் அதர்வா.

“டேய் ரதிக்கு பழசு மறந்திருச்சுங்கறதுக்காக அவ உன்னோட மனைவி இல்லேனு ஆகிடுமா. பாவம் டா அவ .. அவளுக்காக நீ தானே நிக்கணும். நீயே இப்படி பண்ணினா நாளைக்கு அவளுக்கு உண்மை தெரிய வரும்போது அவ எவ்ளோ கஷ்டப்படுவா அதை ஏன் நீ யோசிக்க மாட்டேங்குற.. ” என்று ரதியின் நிலையை அதர்வாவிடம் எடுத்துக் கூறினான். எப்படியாவது அதர்வாவிற்கு நிதர்சனத்தை உணர்த்த வேண்டும் என்று அவன் மனம் தவியாய் தவித்தது, ரதியின் வாழ்க்கை பின்னாளில் தன் கூடப் பிறந்தவனால் கேள்விக் குறியாகிவிடக்கூடாது என்ற எண்ணம் அவனுக்கு. இதில் தன் தாயின் ஆசையும் இருக்கிறதே… அவர் இல்லை என்றாலும் அவர் வளர்ப்பு எப்போதும் சரியாக இருக்கும் என்ற பேராவது அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு.

“இங்க பாரு டா… நம்ம அம்மாவும் சரி, அவ அப்பாவும் சரி அவங்க சுமையை தூக்கி என் தலையில கட்டிவெச்சிட்டுப் போய்ட்டாங்க. அதை காலம் முழுக்க சுமக்க என்னால சாத்தியமா முடியாது” என்றான் அதர்வா கொஞ்சமும் நியாயம் இல்லாமல்.

“டேய் ரதி உன் பொண்டாட்டி டா.. அவளை இப்படி விடறது சரியா நீயே சொல்லு” என்றான் மாறன் மனம் கேட்காமல்.

“நான் அவ பழசை எல்லாம் மறைந்திருக்கும் போதே அவளுக்கும் எனக்கும் டிவேர்ஸ் வாங்கிடலாம்னு இருக்கேன். அப்போ தான் நான் மாயாவை கல்யாணம் செய்துட்டு அவகூட என் வாழ்க்கையை சந்தோசமாக வாழ முடியும். இந்த பட்டிகாட்டச்சியை என்னால ஏத்துக்க முடியாது” என்றான்.

மாறனுக்கு அதற்கு மேல் பேச எதுவும் இல்லை. எப்படி பேசினாலும் ரதியை விட்டுப் பிரிவதிலேயே குறியாக இருக்கிறவனிடம் போய் காலில் விழுந்து கெஞ்சுவா முடியும்.

“என்ன டா பேச்சையே காணோம்” என்ற அதர்வா அவனே தொடர்ந்தான். “இங்க பாரு அவ வாழ்க்கை கேட்டு போயிருச்சுன்னு ஏன் நினைக்குற. நான் அவளுக்கே தெரியாம நல்லது தான் டா பண்ணிருக்கேன்” என்றான்.

“நல்லதா? நீயா? அதுவும் ரதிக்கு. அவளை கல்யாணம் பண்ணிட்டு வந்த நாளில் இருந்து அம்மாவை படுக்கவும் , உனக்கு வேலை செய்யவும் மட்டும் தானே நீ அவளை யூஸ் பண்ணிக்கிட்டே . அவளை பொண்டாட்டியா ஒரு நாள் ஆச்சும் நடத்திருப்பியா நீ.. ஒரு வேலைக் காரி மாதிரி ட்ரீட் பண்ணிருக்க.. சொல்லப்போனா இந்த அச்சிடேன்ட்ல அவளுக்கு இப்படி ஆனதுக்கு நீயும் தான் ஒரு காரணம்” என்று அதர்வாவின் மீதி குற்றம் சுமத்தினான் மாறன்.

“மதன் நான் என்ன டா பண்ணினேன். விட்டா நீயே என் மேல போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருவ போல.. ” என்றான்.

” நீ என்ன டா பண்ணல.. பாவம் டா அவ.. ” என்று உணர்ச்சிவசப்பட்டு மாறன் பேச..

“அவ மேல பாவப்பட உன்னால மட்டும் தான் முடியும், ஏன்னா அந்த பட்டிக்காட்டை ஒன் சைடா லவ் பண்ணினவன் தானே நீ.. அதனால தான அவளுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணி பேசுற நீ… ” என்று மன்மத மாறனின் பழைய நினைவுகளை முன்னெடுத்து வந்தான் அதர்வா.

“டேய் என்ன பேசிட்டு இருக்க. அது நீயும், ரதியும் கல்யாணம் பண்ணிக்குறதுக்கு முன்னாடி அவ மேல ஒரு க்ரஷ் இருந்துச்சு. அதை இப்ப ஏன் டா கொண்டு வர.. ” என்று அறைக்குள் உறங்குபவளை வெளியே இருந்தவன் ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பி அறையை விட்டு சற்று தள்ளி சென்றான்.

“என்னது கிரஷ்ஷா? நம்பிட்டேன். நீ இன்னமும் அவ மேல ஆசை வெச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும், நான் அவகிட்டே டிவேர்ஸ் வாங்கின அப்பறோம் நீயே அவளை கல்யாணம் பண்ணி அவளுக்கு வாழ்க்கை கொடு. இனி என்னால அவகூட சேர்ந்து வாழவே முடியாது” என்றான் கொஞ்சமும் நியாயம் இல்லாமல்.

“அதர்வா நீ செய்றது கொஞ்சம் கூட நியாயம் இல்ல. ரதி உன்னை தான் நேசிக்குறா. அவளுக்கு உன்னை எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெறியும் டா.. அந்த மாயா எல்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்காக ரதியை வேணாம்னு சொல்லாத . ரதி மாதிரி ஒரு பொண்ணு நீ எங்க தேடினாலும் கிடைக்காது” என்று ரதியின் வாழ்க்கையை காப்பாற்ற போராடினான் தன் ரத்த பந்தத்திடம்.

“ஹேய்! என் பேரை ஏன் இதுல இழுக்குற மதன். நான் என்ன மோசமானவளா?” என்று மறுபக்கம் இருந்து சீறினாள் மாயா.

அவள் இவ்வ்ளவு நேரம் மாறனும், அதர்வாவும் பேசிக்கொண்டிருந்ததை ஸ்பீக்கர் போனில் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள் . தன் பெயர் இழுக்கப்படவும் கோபம் வந்து பேசிவிட்டாள்.

“நீ மோசமானவ இல்லேன்னா உன்னைத் தேடி கல்யாணம் ஆன அன்னிக்கே வந்த அதர்வாவுக்கு நல்ல புத்தி சொல்லி அவனை ரதியோட சேர்ந்து வாழ சொல்லி இருக்கனும்” என்றான் மாறன் அழுத்தமாக.

“டேய் மதன், ஸ்டாப் திஸ் நான் சென்ஸ். இப்போ எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்க, நான் சொன்னா சொன்னது தான். எனக்கு அவ வேணாம் ” என்றவன் அடுத்த பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்து இருந்தான் அதர்வா.

அதர்வாவின் இந்த பொறுப்பில்லாத பேச்சும், அவனின் இந்த உதாசீனமும் மாறனுக்கு மிகவும் வலித்தது, தான் நேசித்தவள் தான் ரதி, அனால் அவள் இப்பொது தன் அண்ணனின் மனைவி. அவளை போய் எப்படி அவனால் இப்படி தட்டிக்கழிக்க முடிந்தது, தனக்கும், ரதிக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அல்லவா இருக்கிறான் இவன்  என்று அதர்வாவை நினைத்து அவனுக்கு கோபம் தான் வந்தது.

“அவனை நினைச்சு நீ ஏன் கோபப்படுற மாறா! நீ இப்படி கோபப்படுறதால எந்த பிரயோஜனமும் இருக்க போறது இல்ல. இப்போ உன்னோட முக்கிய வேலை ரதியை பார்த்துகிறது தான்., அவளுக்கு பழைய நினைவுகள் திரும்ப வர வரைக்கும் நீ மட்டும் தான் அவளுக்கு பாதுகாப்பாவும், அதர்வாவை பற்றின உண்மை வெளிவரும்போது அவளுக்கு பக்க பலமாவும் இருக்கனும்” என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்டவன் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே ரதி கண் மூடி அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க.. அவளின் இந்த அமைதியான முகத்தை பார்த்தபடியே அவள் அருகே சென்று அமர்ந்து கொண்டான் மன்மத மாறன்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது.. அதர்வா சொன்னது போல ரதியிடம் விவாகரத்து வாங்கி விடுவானா?

அனைவரிடமும் நடித்துக்கொண்டிருக்கும் ரதியின் உண்மை நிலை அறிய வரும்போது மற்றவர்கள் அவளை என்ன செய்வார்கள்.

மாறன் இப்பொது இருக்கும் மனநிலையிலேயே எப்போதும் இருப்பானா? அவன் மனதில் ரதியின் மீத்திருந்த காதல் மீண்டும் துளிர்க்க துவங்குமா?

பார்க்கலாம் அடுத்ததடுத்த அத்தியாயத்தில்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.