News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 34

by Layas Tamil Novel
180 views
A+A-
Reset

வெறியன் 34

அவனை பார்த்ததும் “ஐயோ! உணர்ச்சி வசத்துல என்னை பத்தின உண்மையை இந்நேரம் எல்லார் முன்னாடியும் போட்டு ஒடைச்சிருப்பேனே.. நல்ல வேலை இவர் வந்தார்” என்று நினைத்தவள் “ஐயோ! மாமா பேசினதை எல்லாம் இவர் கேட்டிருப்பாரோ.. அதுக்கு தான் இவ்ளோ கோபமா இருக்காரா.. போச்சு போச்சு.. நான் குடும்பத்தை ஒண்ணா சேர்க்கலாம்னு நினைச்சா.. என்னால தான் சேர்ந்த குடும்பம் பிரிஞ்சிரும் போல.. ” என்று பதட்டமானாள் பனிமதி.

வேகமாக ஐராவதனிடம் ஓடியவள் “ஏங்க வேணாம் ” என்று அவன் கையைப்  பற்றினாள்.

“நீ பேசாம இரு பனி, நீ இங்க வந்ததுல இருந்து இவர் பேச்சே சரி இல்ல.. உன்னை மட்டம் தட்டிகிட்டே இருக்கார். நானும் ரெண்டு நாளா பார்த்துட்டு தான் இருக்கேன்” என்றான் கோபமாக.

“ஏங்க விடுங்க.. மாமா தானே பேசுறார்..” என்று சிவனாண்டியை முறைத்துக் கொண்டிருந்தவன் முகத்தை பற்றி தன்னை பார்க்குமாறு திருப்பினாள்.

“அவர் தான் பேசினாருனு நீ வேணா சும்மா இருக்கலாம். அதுக்காக என் பொண்டாட்டியை பேசுறவரை நான் சும்மா விட முடியாது ” என்று சீறினான்.

சிவனாண்டியோ ஐரா பேசுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் நின்று இருக்க..

“இங்க பாருங்க.. என்னைப் பாருங்க ப்ளீஸ் ” என்று மீண்டும் அவன் முகத்தை தன் பக்கம் திருப்பியவள் “எனக்காக அமைதியா இருங்க ” என்று கெஞ்சினாள் அவன் கையை பற்றிக்கொண்டு.

அவள் கெஞ்சும் முகத்தை பார்த்ததும் ஐராவிற்கு அதற்கு மேல் தன் கோபத்தை காட்ட முடியவில்லை. கண்ணை மூடி கட்டுக்குள் கொண்டு வந்தவன் “சரி வா.. ” என்று அவள் கையை பற்றிக்கொண்டு நேரே தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

அவர்களை பார்த்து ஏளனமாக சிரித்த சிவனாண்டி “முத்து எனக்கு சாப்பாடு எடுத்து வை ” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

அவரையே பார்த்துக்கொண்டு மார்க்கண்டேயன், சித்தாத்தா , சௌந்தர்யா மூவரும் இருந்தனர்.

“ஏன் டி உன் புருசனுக்கு எதுவும் மறை கழண்டு போயிருச்சா.. ” என்றார் சித்தாத்தா.

“தெரியலையே அத்தை ” என்றார் சௌந்தர்யா சோர்வாக.

“இவன் சரி இல்லயே.. ஏதோ தப்பா தோணுது எனக்கு.. ” என்று மார்க்கண்டேயன் யோசித்தபடி உள்ளே சென்றார்.

இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் அறையில் தஞ்சம் புகுந்து கொள்ள.. பனிமதி முத்துமாரியோடு சேர்ந்து கிட்சனில் வேலைகளை முடித்தவன் அவர் சென்றதும் வாசல் கதவை தாளிட்டவள் அறைக்கு செல்ல மாடியேறப் போனாள்.

“ஒரு நிமிஷம் , நான் உன் கூட கொஞ்சம் பேசணும்” என்று அவள் பின்னே வந்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் அங்கே சிவனாண்டி நின்று இருப்பதைப் பார்த்தவள். “மாமா சொல்லுங்க..” என்று அவர் அருகில்  வந்தாள் பனிமதி.

“கொஞ்சம் கார்டனுக்கு வா.. ” என்று விறுவிறுவென வாசல் நோக்கி நடந்தார் .

பனிமதிக்கு ஒன்றும் புரியவில்லை. “எதுக்கு என்கிட்டே பேசணும்னு சொல்லறாரு. ஒன்னும் புரியலையே.. ” என்று யோசனையோடு அவர் பின்னே சென்றாள்.

கார்டனுக்கு வந்தவர் அங்கிருந்த பெஞ்சில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பாக்கெட்டில் இருந்து சிகெரெட் ஒன்றை எடுத்து பற்றவைத்து புகைத்தபடி . தன் முன் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தவளைப் பார்த்தார்.

அவரிடம் எதற்கு கூப்பிட்டார் என்று கேட்க அவளுக்கு சற்று தயக்கமாக இருந்தது. அவரே ஏன் அழைத்தார் என்று சொல்லட்டும் அமைதியாக தலையை குனிந்து  நின்று இருந்தாள்.

“ம்கூம்..” என்று தன் குரலை செறுமியவர். “நீ யாரு? எதுக்காக என் பையனை கல்யாணம் செய்துகிட்டே.. இவ்ளோ வருசமா இங்க வீடு பக்கம் காலடி எடுத்து வெக்காத என் பையன் நீ சொன்னதும் எப்படி இங்க வந்தான்.” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்.

“ஐயோ! இவர் என்ன இப்படி பட்டாசு மாதிரி வெடிக்குறாரு.. அதுவும் என்னை பத்தி இவ்ளோ டீடைலா கேட்டா நான் என்ன சொல்றது” என்று யோசித்தவள் “மாமா அது வந்து நான்..  முத்துவடுகன் இருக்காரில்ல அவர் வீட்ல.. ” என்று ஆரம்பித்தாள்.

“அந்த முத்துவடுகன், அவன் புள்ள பைரவன் எல்லாரையும் எனக்கு நல்லாவே தெரியும். அவன் பையன்கிட்டே இருந்து நீ தப்பிச்சு ப்ரோஸ்டிடியூட் பண்ணின இடத்துல போய் மாட்டிக்கிட்டது. அங்க வந்து என் புள்ளை உன்னை காப்பாத்தினது.. மறுபடியும் அந்த பைரவன் உன்னை தூக்கிட்டு போனது, என் பையன் காப்பத்தி அவன் வீட்ல உன்னை தங்க வெச்சது. நீ அங்க இருந்த கொஞ்ச நாளிலையே அவனை மயக்கி எங்களை வெச்சே உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை நடத்திகிட்டது வரை தான் எல்லாமே தெரியுமே.. அதெல்லாம் எனக்கு தேவை இல்ல.. உன்னை பத்தி உன் குடும்பத்தை பத்தி எனக்கு தெரியணும். ” என்று தன் போலீஸ் மூளை எப்படி எல்லாம் யோசித்தது என்று அவளுக்கு புரிய வைத்தார்,

சிவனாண்டி இவ்வ்ளவு துல்லியமாக அனைத்தையும் தெறிந்து வைத்துஇருப்பது அவளுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. இருந்தும் தன்னை பற்றி ஐராவிடம் என்ன சொன்னாளோ அதையே ஒன்று விடாமல் சொல்லவேண்டும் என்று தீர்மானித்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை நேருக்கு நேராக பார்த்தவள் “என்னை பத்தி சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்ல மாமா.. ஏன்னா என் மேல எந்த தப்பும் இல்லையே. நான் ஒன்னும் உங்க மகனை கல்யாணம் செய்துக்கறேன்னு ஒத்தை கால்ல நிக்கல.. அவர் தான் என்னை காதலிச்சார் , அவர் தான் என்னை கல்யாணமும் பண்ணிகிட்டார். எனக்கு உண்மையை மறைக்க என்ன அவசியம் இருக்கு.. ” என்றவள் அவரையே பார்க்க..

அவள் தைரியமாக பேசும் தோரணையைக் கண்டு ஆச்சர்யமான சிவனாண்டி .

“அப்படி மாமா பிரீஸ் ஆகிட்டார்.. அபப்டியே கொஞ்ச நாளைக்கு உண்மையை சொல்லாம சமாளிப்போம். நேரம் வரும்போது எல்லார்கிட்டேயும் உண்மையை சொல்லிக்கலாம்” என்று நினைத்தவள் “மாமா என் அப்பா ஒரு குடிகாரர் அவர் தண்ணி அடிச்சே இந்த உலகத்தை விட்டு போய்ட்டார்” என்று ஆரம்பித்தவள் கட்டுக்கதைகளாக அள்ளி தெளித்தாள் அவர் மேல். அவரும் அவள் சொல்வதை ஒன்று விடாமல் கூர்ந்து கவனித்தவர் அவள் சொல்வதில் என்ற குறையும் காண முடியாமல் திணறி தான் போனார்.

“சரி சரி… போதும்  நீ போ.. அவன் உன்னை காணோம்னு தேடப்போறான்” என்று அவள் பேச்சை நிறுத்த வழி இல்லாமல் அவளை அங்கிருந்து அனுப்ப பார்த்தார்.

“பரவால்ல மாமா அவர் இந்த நேரம் தூங்கிருப்பார் .நான் சொல்றேன்…” என்று மீண்டும் அவள் ஆரம்பிக்க..

அவளை சமாளிக்க திண்டாடியவர் சட்டென பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து காதில் வைத்தவள் “ஹெலோ!.. என்ன? அப்படியா! இதோ உடனே வரேன்” என்று வேகமாக போன் பேசியபடி எழுந்தவர். “நீ உள்ள போய் கதவை முடிக்க.. எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு நான் போயிட்டு வரேன்:” என்று அங்கிருந்து கிளம்பி இருந்தார்.

அவர் தன்னிடம் இருந்து தப்பித்து செல்வதை பார்த்து சிரித்தவள் “கொஞ்ச நாளைக்கு மாமாவை இப்படி பேசிப் பேசியே ஓட விடணும் ” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் செல்லத் திரும்பியவள் அங்கே வாசல் நிலையில் ஒரு காலை ஊன்றி மறு காலை மடித்து கிருஷ்ணர் போல சாய்ந்து நின்று கையை கட்டிக்கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஐராவதன்.

“ஹையோ! இவரா! எப்போ வந்தாரு..” என்று யோசித்தபடியே அவன் அருகே வந்தவள் “என்னங்க நீங்க எப்போ வந்திங்க.. “என்றாள்.

“ம்ம்.. என் அப்பாவை காதுல ரத்தம் வர பேசி ஓட வெச்சியே அப்போவே வந்துட்டேன்” என்றவன் அவள் இடையை வளைத்து இழுத்து அணைத்தவன் “என் அப்பாவையே மிரண்டு ஓட வெச்சுட்ட டி நீ.. ” என்று அவள் நெற்றி முட்டி சிரித்தான்.

“ஏங்க வாசல்ல நிக்குறோம் நாம.. ” என்றவள் “எல்லாம் உங்க ட்ரெயினிங் தான். நீங்க கத்துக்கொடுத்த தான்  எனக்கு இப்போ யூஸ் ஆகுது” என்றாள் கிண்டலாக.

“நான் இப்படி எல்லாமா பேச சொல்லிக்கொடுத்தேன் உனக்கு.. ” என்றான் அவளை மேலும் இறுக்கி அணைத்தபடி..

“சொல்லிக்கொடுக்கல.. சமயத்துல உங்களை சமாளிக்க பேச காத்துக்கிட்டது இன்னிக்கு யூஸ் ஆச்சு” என்று  சிரித்தாள்.

“ஓஹோ.. அப்பறோம் நான் ட்ரைனிங் கொடுத்தேன்னு சொன்னியே எதை பத்தி ட்ரெயினிங் கொடுத்தேன்னு கொஞ்சம் சொல்லு பாப்போம் ” என்றான்.

“ஹா! இப்படி கேட்டா நான் என்னங்க சொல்றது.. அது சும்மா .. ” என்று அவன் வெற்று மார்பின் ரோமங்களில் தன் விரல்களை நுழைத்து கோலம் போட்டாள்.

“சொல்ல வேண்டாம் செய்து காட்டு ” என்றவன் அடுத்த நொடி அவளை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். உள்ளே வந்ததும் அவளை இறக்கி விட்டவன் கதவை தாளிட்டு கதவில் சாய்ந்த படி அவளை மோகமாகப் பார்த்தான்.

அவனை கண்டுகொள்ளாதவள் “எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப்போறேன்” என்று திரும்பி கட்டிலை நோக்கி நடந்தாள்.

“இப்படி சொன்னா விட்ருவேன்னு நினைக்குறியா டி.. ” என்றவன் அவள் பின்னே சென்று பனிமதியின் சேலையை பற்றி இழுக்க.. அவன் இழுத்த வேகத்தில் சுழன்று நின்றவள் அதிர்ந்து பார்க்க.. ஐராவின் கையில் அவள் சேலை மொத்தமும் இருந்தது.

“என்னங்க இது.. ” என்றாள் வெட்கத்தோடு.

“இங்க வர அப்போ நான் என்ன டி கண்டிஷன் போட்டேன் உன்கிட்டே ” என்றான்.

“அது… அது வந்து.. ” என்று அவள் தடுமாற..

“நான் ரொம்ப நாலா கேட்டுட்டு இருக்கேன் உன்கிட்டே அதை செய்யணும்னு கேட்டேனா? இல்லையா? இப்படி ஒன்னும் தெரியாதவ போல முழிச்சா நான் அப்படியே விட்டிருவேனா” என்று அவளை நெருங்கினான்.

“ம்ஹும்.. மாட்டேன் போங்க.. என்னால முடியாது எனக்கு வெக்கமா இருக்கு.. ” என்று வேகமாக அவனை விட்டு பின்னோக்கி நகர்ந்தாள்.

“இப்படி எல்லாம் சொன்னா விட்ருவேனா , இங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு.. என்கிட்டே சிக்காம வேலை வேலைன்னே இருக்க நீ.. ” என்று அவளை நெருங்கியவன் “இன்னிக்கு வசமா மாட்டிக்கிட்ட என்கிட்டே..” என்று சுவற்றை முட்டி நின்றவள் இரு பக்கமும் கையை வைத்து அவளை பிடித்து நிறுத்தியவன் அவளை புருவம் உயர்த்திப் பார்த்தான்.

“என்னங்க.. ப்ளீஸ்ங்க.. ” என்று அவன் தடையை பற்றி கெஞ்சினாள் பனிமதி.

“இன்னிக்கு நான் கேட்டது எனக்கு வேணும்.. ” என்றான் அவளிடம் பிடிவாதமாக.

“வேற என்ன வேணா கேளுங்க நான் செய்றேன் இது மட்டும் வேணாமே.. ” என்று சிணுங்கினாள் அவள் .

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.