News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 37

by Layas Tamil Novel
155 views
A+A-
Reset

வெறியன் 37

சதாசிவம் அவளிடம் பணத்தை வாங்க மறுக்க..

பனிமதி சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு அவர்கள் மூவருக்கும் மட்டும் கேட்கும் படியாக மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

“என்னப்பா இப்படிக் கேட்டுட்டீங்க.. உங்க பொண்ணு சும்மா இல்லப்பா! நான் தான் மாமா வீட்ல எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் செஞ்சுட்டு அமைதியா இருக்கேனே தவிர… என் மூளை சும்மா இல்லையே!” என்று அழகாகக் கண் அடித்தாள்.

“பனிமதி! என்னடி சொல்ற? அங்க உனக்கு ஏது வேலை? எப்படி பணம் வந்துச்சு?” என்று மஞ்சுளா இன்னும் பதற்றம் குறையாமல் கேட்டார்.

“அம்மா! மெதுவா பேசுங்க… அங்க யாருக்கும் தெரியாம நான் ஒரு சூப்பர் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே டிரஸ் டிசைனிங், எம்பிராய்டரி பேட்டர்ன்ஸ் பண்றதுல ஆர்வம் இருக்குல்ல? அதைத்தான் இப்போ என்னோட ஆயுதமா மாத்தியிருக்கேன்.” என்றாள் குதூகலமாக .

“டிசைனிங்கா? அதுவும் அந்த வீட்ல இருந்துகிட்டா? எப்படிடி? அங்க எல்லாரும் எப்பவும் உன் மேல கண்ணா இருக்காங்களே?” என்றார் சதாசிவம் வியப்போடு.

“அதுதான்ப்பா என் சாமர்த்தியம்! மாமாவும் , அவரும் நேரமே கிளம்பி ஸ்டேஷன் போய்டுவாங்க.. அந்த நேரத்துல செய்வேன். அப்படி இல்லேன்னா நைட் எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமோ என் மொபைல்லயே புதுசு புதுசா ட்ரெண்டியான டிரஸ் டிசைன்ஸ் எல்லாம் வரைஞ்சு ரெடி பண்ணிடுவேன். என் காலேஜ் பிரண்ட் சுமதி வெளிய ஒரு சின்ன பொட்டிக் வச்சிருக்கா இல்லையா? அவகிட்ட இந்த டிசைன்ஸ் எல்லாம் மொபைல் மூலமாவே அனுப்பிடுவேன். அவ அதை தைச்சு கஸ்டமருக்கு வித்துட்டு, வர்ற லாபத்துல எனக்குரிய ஷேரை கரெக்டா கொடுத்துடுவா. இதோ இந்த பணமும் அப்படி உழைச்சு வந்ததுதான்!” என்று கண்கள் மின்னக் கூறினாள்.

மஞ்சுளாவுக்கு ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், மறுபக்கம் பயம் தொற்றிக் கொண்டது. “ஐயோ பனி! ஒருவேளை என் அண்ணனுக்கோ , உன் புருஷனுக்கோ இந்த விஷயம் தெரிஞ்சா என்னடி ஆகுறது? ” என்றார்.

“அம்மா! அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நான் ரொம்ப கேர்புல்லா தான் பண்றேன். லேப்டாப் வச்சு வேலை பார்த்தா தானே கண்டுபிடிப்பாங்க? நான் மொபைல்லயே பண்றதுனால அவங்களுக்கு வெறும் சாட்டிங் பண்ற மாதிரிதான் தெரியும். அதுமட்டுமில்லாம, என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணா மெசேஜ் வந்து மாட்டிப்பேன்-னு, லாபப் பணத்தை டைரக்டா உங்க அக்கவுண்ட்டுக்கே போட சொல்லிட்டேன் இனிமேல். இன்னைக்கு அவகிட்ட நேர்ல போய் இதுவரை செய்திருந்த வேலைக்கு மொத்தமாக கேஷ் வாங்கிட்டு வந்தேன். அப்பா உடம்பை நல்லபடியா பார்த்துக்கணும், அதுதான் எனக்கு இப்போ முக்கியம்!” என்று சதாசிவத்தின் சுருங்கிய கைகளைப் பற்றினாள்.

மகளின் அன்பையும், குடும்பத்திற்காக அவள் படும் கஷ்டத்தையும், அதே நேரத்தில் அவளது சாதுர்யத்தையும் பார்த்து சதாசிவத்தின் கண்கள் கலங்கின. “என் பொண்ணு இவ்வளவு பெரிய அறிவாளியா இருக்கா… ஆனா அங்க உன்னைப் பத்தி யாருக்கும் உண்மை தெரிஞ்சா என்னடி ஆகுறது” என்று அவர் இழுக்க,

“அப்பா! பயப்படாதீங்க… எப்படியும் ஒரு நாள் எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சு தானே ஆகணும். தெரிஞ்சா தெரியட்டும் . என்ன விஷயம் எல்லாருக்கும் தெரியுறதுக்கு முன்னாடி அவரோட தம்பிக்கும், நம்ம மல்லிக்கும் கல்யாணம் ஆகணும் , அதுக்கு அப்பறோம் எல்லாருக்கும் தெரிஞ்சா பிரச்சனை வராது” என்றவள். “நீங்க நாளைக்கு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி உடம்பை நல்லபடியா குணப்படுத்திக்கிட்டு வாங்க, அதுமட்டும் போதும் எனக்கு,” என்று அவர் கண்ணீரைத் துடைத்தாள் பனிமதி.

அவளது தைரியமான பேச்சும், குடும்பத்தின் மீதான அக்கறையும் அங்கிருந்த எல்லோர் மனதையும் நெகிழச் செய்தது.

ஒரு கேஸ் விஷயமாக அந்தப்பக்கம் வந்தவன் பனிமதி ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கி கோவிலுக்குள் சென்றதை பார்த்தவன். அவன் பனிமதி அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கம் தான் என்பதால் அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான்.

ஆனால் வேலை முடிந்து திரும்பி மீண்டும் அந்த வழியே சென்றவன் கோவில் வாசலில் பனியின் காலணிகள் இருப்பதை பார்த்து சந்தேகமாக உள்ளே நுழைந்தவன். அங்கே கோவில் பிரகாரத்தில் இருந்து மூவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கொடிமரத்தின் பின்னே சென்று அங்கு நடப்பதை பார்த்தவனுக்கு பனிமதி மட்டுமே நன்றாகத் தெரிந்தாள்.

ஆனால் அவளோடு பேசிக்கொண்டிருந்த மற்ற இருவரும் யார் என்று அடையாளம் தெரியாமல் நின்று இருந்தான்.

அவர்களோடு சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு பனிமதி அங்கிருந்து கிளம்பி இருக்க..

அவள் செல்வதையே பார்த்திருந்தவன் பனிமதி கோவிலைவிட்டு வெளியே சென்று கிளம்பும்வரை அமைதியாக நின்று இருந்தவன் . அவள் யாரிடம் இவ்வளவு நேரம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பிரகாரத்தில் அமர்ந்து இருந்தவர்களை நோக்கி சென்றான்.

அவன் வருவது தெரியாமல் அமர்ந்து இருந்த மஞ்சுளாவும், சதாசிவமும் வீட்டிற்கு கிளம்பும் பொருட்டு அங்கிருந்து எழ..

அவர்கள் இருவரும் எழவும் சட்டென்று தன் நடையை நிறுத்திய ஐராவதன் சற்று பின்னால் சென்று அங்கிருந்த தூணின் பின்னால் போய் நின்று விட்டான்.

இவர்கள் இருவரும் ஐராவதன் இருப்பது தெரியாமல் அவன் மறைந்து இருந்த தூணைக் கடந்தே சென்றார்கள்.

முதலில் அவன் கண்ணில் பட்டது என்னவோ சதாசிவம் தான்,

சதாசிவத்தை யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவரைத் தாண்டி சதாசிவத்தின் கையைக் கோர்த்துக்கொண்டு நடந்த பெண்ணின் முகத்தை எட்டிப் பார்த்தான்.

மஞ்சுளாவின் சாந்தமான சிரித்த முகத்தைப் பார்த்த ஐராவதன் அதிர்ந்து அப்படியே உறைந்து விட்டான்.

“ஹ.. அத்தை..! ” என்று அவனையும் அறியாமல் அவன் இதழ் உச்சரித்தது.

கோவிலைவிட்டு கிளம்பி சென்ற இருவரையும் பார்த்தவாறு அங்கேயே நின்று இருந்தவன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடியது. அதை எல்லாம் யாரிடம் கேட்பது . தன் அத்தைக்கும், பனிமதிக்கும் என்ன உறவு? அவளுக்கு எப்படி தன் அத்தையைத் தெரியும்.  இத்தனை நாள் அத்தை எங்க இருந்தாங்க? இப்போ எப்படி இங்க வந்தாங்க?” என்று மூளைக்குள் குடைந்தது.

அதே குழப்பத்தோடு அந்த கோவிலை விட்டு வெளியேறியவன் அவர்கள் இருவரையும் தன் ஜீப்பில் பின்தொடர்ந்தான்.

இருவரும் கையை கோர்த்துக்கொண்டு பேசியபடி சிரித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். தங்கள் பின்னே ஐராவதன் வருவதை கூட அவர்கள் அறியவில்லை.

 அவர்கள் இருவரையும் அமைதியாக ஐராவதன் பின் தொடர..

 தாங்கள் புதிதாக குடிப்பெயர்ந்த வீட்டிற்கு செல்லும் பாதையில் மஞ்சுளாவும், வரதராஜனும் பேசிக்கொண்டே செல்ல..

அந்த இடத்தை சுற்றிலும் நோட்டமிட்டவனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஐராவதன் வீட்டை விட்டு வந்த பிறகு இத்தனை நாள் தங்கி இருந்த வீடு இருக்கும் பகுதி  அது.

 அவனுக்கு புருவங்கள் இடிங்கியது. சரியாக அவன் வீடு இருக்கும் வீதிக்கு அவர்கள் செல்ல..

 அந்த வீதியின் எல்லையிலேயே ஜீப்பை நிறுத்தியவன் இறங்கி அவர்கள் பின்னே நடந்தான்.

அவன் தங்கி இருந்த வீடும் வந்தது. அங்குதான் தங்கி இருக்கிறார்களோ என்ற யோசனையில் அவன் அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னால் நின்றவன் அவர்களை பார்க்க..

அவன் வீட்டை தாண்டி இருந்த அடுத்த வீட்டின் கேட்டைத் திறந்து கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

இது கமலா அக்கா வீடு இல்ல இங்கேயா தங்கி இருக்காங்க இவங்க ரெண்டு பேரும். இத்தனை நாள் நான் இவங்கள பாக்கவே இல்லையே என்று யோசித்தவன். வந்த வழியே திரும்பி வந்து ஜிப்பை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்பினான்.

 ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியெல்லாம் அவன் மனதில் ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும் தோன்றின பணிமதிக்கு எப்படி தன் அத்தை தெரியும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்தால் நீண்ட நாட்கள் பழகியவர்கள் போல அல்லவா இருந்தது.

ஸ்டேஷன் வந்ததும் சிவாவை உள்ளே வரச்சொல்லிவிட்டு சென்றான்.

அவன் முகம் ஏதோ இருக்கமாக இருப்பதை கவனித்த சிவா. என்ன ஆச்சு சார்க்கு. போன இடத்துல எதும் பிரச்சனையா என்ற யோசனையோடு அவன் கேபின் சென்றான்.

வா சிவா வந்து உக்காரு என்றான்.

இல்லை சார் இருக்கட்டும் என்று நின்றான்.

டேய் உக்காரு டா.. என்றான் ஐரா உரிமையாக.

சார் வீட்லைனா பரவால்ல.. இதை ஸ்டேஷன் உங்களுக்கான மரியாதையை நான் கொடுத்தே ஆகணும் ப்ளீஸ் என்றான்.

இவன் விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லா.. என்ட்ரி நினைத்தவன் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு டா உக்காரு. நோ பர்மாலிட்டிஸ் என்று சற்று அதட்டாளாகவும், உரிமையாகவும் சொல்ல.. அதன் பின் மறுப்பு சொல்லாமல் அவன் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

உனக்கு என் அத்தை பத்தி தெரியுமா? என்றான்.

அத்தைன்னா மஞ்சுளா அத்தையை தானே சொல்றிங்க சார். பாட்டி அடிக்கடி அவங்களை பாக்க முடியலையின்னு சொல்லி புலம்புற அப்போ கேட்டிருக்கேன் என்றான்.

ம்ம்.. அவங்க தான் இப்போ இந்த ஊர்ல தான் இருக்காங்க என்றான்.

இந்த ஊரா! என்ன சார் சொல்றிங்க கிழவி கேட்டா எவ்ளோ சந்தோசப்படும் தெரியுமா? எங்க சார் இருக்காங்க அவங்க. நம்ம வீட்ல எல்லார்கிட்டேயும் சொல்லி அவங்களை போய் பார்க்கலாமா என்றான் சந்தோசமாக.

ம்ஹும்.. அது இப்போ முடியாது சிவா.  அப்பாவுக்கு என் அத்தை மேல இன்னமும்  கோபம் இருக்கு. சோ இப்போதைக்கு யாருக்கும் அவர் இந்த ஊர்ல இருக்க விஷயம் தெரிய வேணாம் என்றான்.

சிவா அவனை குழப்பமாகப் பார்க்க..

நம்ம இவ்வளவு நாள் குடியிருந்தோமே அந்த ஏரியாவுல நம்ம வீட்டு பக்கத்துல கமலா அக்கா இருக்காங்க தெரியுமா என்றான்.

ஆமா சார் தெரியும் என்றான் சிவா.

ம்ம்.. அவங்க வீட்டுல ஒரு போர்சன் காலியா இருந்துச்சு இல்ல.  அங்க தான் இப்போ அத்தை தங்கி இருக்காங்க அவங்க 

குடும்பத்தோட தங்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன் என்றான்.

 என்ன சார் சொல்றீங்க   கமலா அக்கா வீட்டிலேயா இருக்காங்க. இவ்வளவு நாள் நாம் அங்கதான் இருந்தோம். அப்ப எல்லாம் வராம நம்ம காலி பண்ணி வந்ததுக்கு அப்புறம் வந்திருக்காங்களே.. முன்னமே வந்து இருந்தா பாட்டி எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க என்றான் சிவா.

ம்ம்.. என்றவன் நான் சொல்றதை இப்போ கவனமா கேட்டுக்கோ.. அத்தை இங்க வந்திருக்க விஷயம் யாருக்கும் தெரியாம பாத்துக்கணும். முக்கியமா என் அப்பாவுக்கு என்றான்.

ம்ம் சரிங்க சார் என்றான்

அப்பறோம் நீ நேரா கமலா அக்காவைப் போய்ப் பாரு. அவங்ககிட்டே நைசா மஞ்சுளா அத்தையைப் பத்தியும், அவங்க குடும்பத்தைப் பத்தியும் விசாரிச்சிட்டு வா. எக்காரணம் கொண்டும் என்னை பத்தியோ, நம்ம வீட்டு ஆளுங்க பத்தியோ அவங்களுக்கு அதாவது என் அத்தை குடும்பத்துக்குத் தெரியவே கூடாது என்றான்.

ஏன் சார் அவங்கள பத்தி சார்கிட்ட வேணாம் சொல்லாம விட்டுறலாம் ஆனா நீங்க ஏன் உங்கள பத்தி தெரியக் கூடாதுன்னு சொல்றீங்க என்றான் குழப்பமாக 

 அதுக்கெல்லாம் ஒரு கார்னருக்கு சிவா நான் சொல்றது மட்டும் செய் முடிஞ்ச அளவுக்கு அவங்கள பத்தி முழுசா எல்லா விஷயத்தையும் காதர் பண்ணி பாரு எனக்கு எல்லாமே தெரிஞ்சாகணும் என்றான் அழுத்தமாக.

ஐரா எதாவது ஒரு காரணத்திற்காகத்தான் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட சிவா. ஓகே சரக்கு நான் இப்பவே கிளம்புறேன். உங்க அத்தை குடும்பத்தைப் பத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு உங்கள வந்து மீட் பண்றேன் என்று எழுந்தவுடன் அவனுக்கு சன்லைட் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

சீக்கிரமே தன் மனதில் எழும் குழப்பங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூழ்கிப்போனான் ஐராவதன். 

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.