மூர்க்கன் 15
அனைவர்க்கும் காபி கொடுத்தவள் உள்ளே திரும்பிச் செல்ல..
இளங்கிளி என்ன டி இது எங்களைப் பார்த்தும் பார்க்காம போற.. என்று அவள் அம்மா மீனாட்சி எட்டி இளங்கிலியின் கையைப் பிடிக்க..
அம்மா! இவங்க நம்ம இளங்கிளி அக்கா இல்ல. இவங்க கனி. கனிமொழி இந்த வீட்ல இவங்க சமையல் வேலை செய்றாங்க என்றாள் கயல் அவசரமாக மீனாட்சியின் கையைப் பற்றி இழுத்தவாறு.
கயல் பேசியதை கேட்டு அதிர்ந்த மீனாட்சி என்ன கையில் சொல்ற இவ என்னோட பொண்ணு இளங்கிளி இல்லையா? ஆனால் பார்க்க அப்படியே இளங்கிளி மாதிரி இருக்காளே என்று நம்ப முடியாமல் கேட்டார்.
ஆமா நீங்க வாங்க நான் அப்பறோம் விவரமா சொல்றேன் என்று அவரை இழுத்து தன் அருகே அமரவைத்தவள் “ஹெஹே…ஹெ.. நான் சொன்னேன்ல உங்கள போலவே ஒரு பொண்ணு இருக்காங்கங்கனு அது இவங்க பொண்ணு தான்” என்று இளங்கிளியிடம் அசடு வழிய சிரித்தபடி சொன்னால் கயல்.
அதற்கு ஒரு மென்மையான சிரிப்பை மட்டும் பதிலாக தந்து விட்டு இளங்கிளி கிச்சனுக்குள் சென்றுவிட…
அங்கு நடப்பதை இதுவரை பார்த்துக் கொண்டிருந்த ருத்ரசேனாவோ ஒன்றும் புரியாமல் ஈஸ்வரிடம் சென்றவன்.. என்னடா இது நீங்க சொல்றது போல கனிமொழி மாதிரியே இன்னொரு பொண்ணு இருக்காங்களா? என்றான்.
இல்ல ருத்ரா நாங்க தேடுற அந்தப் பொண்ணே இவங்க தான் இவங்களுக்கு பழசு எல்லாம் மறந்திருச்சுன்னு நினைக்கிறேன் என்றான்.
என்ன சொல்ற ஈஸ்வர் என்று சேனா அதிர..
என் மச்சான் ஐராவைத் தெரியும் தானே உனக்கு என்றான்.
ம்ம்.. பிசினஸ் மீட்டுங்ல ரெண்டு, மூணு தரம் பாத்திருக்கேன் என்றான் ருத்ரன்.
ம்ம்.. அவரோட வைப் தான் இவங்க. மகாராணியா எங்க வீட்ல சந்தோசமா இருக்க வேண்டியவங்க.. ஒருத்தி செய்த சத்தியாள இங்க உன் வீட்டில சமையல் வேலை செய்துட்டு தான் யார்னு கூட நியாபகம் இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க என்றான்.
ருத்ரசேனனுக்கு இன்னமும் தான் கேட்ட விஷயங்களை நம்ப முடியவில்லை. தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் கனிமொழியை எப்படியாவது சம்மதிக்கவைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தவன். இப்பொது தன் அப்பாவின் குடும்ப நண்பர்வீட்டு மருமகள், தன் பிசினஸ் நண்பனான ஐராவதனின் மனைவி என்று தெரிந்ததுமே ருத்ரனின் ஓராண்டு கால காதல் ஒரு நிமிடத்தில் உடைந்து போனது.
அவன் இதயம் கனத்துப் போனது. இனி கனிமொழியை தன் காதலியாக தன்னவளாக ஒரு நொடி கூட நினைத்துப் பார்க்க முடியாது என்று தோன்றும்போதே அவன் இதயத்தில் யாரோ பாரங்கல்லைத் தூக்கி வைத்தது போல இருந்தது.
என்ன ருத்ரா ஷாக் ஆகிட்டியா? என்று அவன் தோள்களைத் தட்டினான் ஈஸ்வர்.
ம்ம்ம்.. ஆமா.. என்றான் ருத்ரன். அப்போது அங்கு உத்தா.. உத்தா… என்று அல்லியின் மழலைக் குரல் அங்கிருந்தவர்கள் மொத்த கவனத்தையும் ஈர்த்திருக்க..
அல்லி.. வா.. வா.. என்று அவளை தூக்கிக் கொண்ட ருத்ரன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்க..
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வேதவள்ளி இது என் பேரனோட குழந்தையா? என்றார்.
குழப்பமாக ருத்ரன் பார்க்க.
அவன் பார்வையில் இருந்த குழப்பத்தை கண்ட ராஜ் என் அண்ணாவோட குழந்தையான்னு கேக்குறாங்க என்றான்.
அந்தக் கேள்வியில் சற்று நிதானித்தவன் ம்ம்.. ஆமா என்று அல்லியை தூக்கிக்கொண்டு வேதவல்லி இடம் கொடுத்தான்.
எப்படி பாட்டி பார்த்ததும் இது அண்ணாவோட குழந்தைன்னு கண்டுபிடிச்சீங்க என்றாள் கயல்.
இங்க பாரு அவளுக்கு பின்னங் கழுத்துல ஒரு மச்சம் இருக்கு. ருத்ரா குழந்தையை தூக்கும்போது நான் கவனிச்சேன். என் பேரனுக்கும் இதே போல மச்சம் இருக்கும் தானே அதான் கேட்டேன் என்றார்.
பார்த்த மாத்திரத்திலேயே பாட்டி எவ்வளவு நோட் பண்ணி இருக்கு என்று நினைத்துக் கொண்டான் ராஜ்.
அப்போது அங்கு தூங்கி எழுந்து வந்த ஆதி வேதவள்ளியின் கையில் அல்லி இருப்பதை பார்த்ததும் யாரோ தெரியாதவர்களிடம் அவள் இருப்பது போல அவனுக்கு தோன்றியதோ எண்ணவோbதெரியவில்லை.
தன் தங்கையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இந்த குட்டி பையனுக்கு தோன்றியிருக்க வேண்டும். வேக வேகமாக கத்தி தத்தி வேதவள்ளியிடம் சென்றவன். அல்லியின் கையைப் பிடித்து பா.. பா என்று கீழே இழுத்தான்.
அவனைப் பார்த்ததும் அனைவருக்கும் பேரதிர்ச்சி இளங்கிளி கர்ப்பமாக இருக்கிறாள் என்று அனைவருக்கும் தெரியும் தான்.
அவள் உயிரோடு இருப்பதே இப்போதுதான் இவர்களுக்கு தெரிய வந்திருக்கும். இதில் ராவணுக்கும், இளங்கிளிக்கும் பிறந்த குழந்தைகள் இரண்டு என்று ஆதியின் முகத்தை பார்த்ததுமே கண்டு கொண்டனர்.
ராவண் ஜாடையை அச்சு அசலாக அப்படியே இருப்பதை கண்டதும் புரிந்து கொண்டவர்களுக்கு பேரதிர்ச்சியும், இன்ப அதிர்ச்சியும் ஒரு சேர வந்தது போல தோன்றியது.
இளங்கிளிக்குப் பிறந்தது இரட்டை குழந்தைகளா? என்றார் பரிமளா குரல் தழுதழுக்க.
ம்ம்.. ஆமா கனிமொழி இங்க வேலைக்கு சேர்ந்தப்போ ஆறு மாதம் கர்ப்பம்,அவளுக்கு.. என்றவன் இனியும் இப்படி ஒருமையில் உரிமையாகப் பேசுவது சரியாக இருக்காது என்று உணர்ந்த ருத்ர சேனன் அவங்களுக்கு என்று மாற்றி சொன்னவன் டெலிவரி இங்கதான் நடந்துச்சு என்றான் ருத்ரசேனன்
அப்போது குட்டி என்று ஆசையாக ஆதியை அள்ளி அணைத்து தூக்கினாள் மித்ரா
அவனோ மித்ராவை புருவம் சுருங்க பார்த்தவன் கீழ.. ம்ஹும்.. கீழ.. என்று அவள் கையில் இருந்து துள்ளிக்குதித்து கீழே இறங்கப் போனான்.
ஹேய் இரு டா.. அத்தைகிட்டே பேசு.. என்றாள்.
ஆனா…ஆனா.. கீழ.. என்று கையையும் காலையும் உதறிக்கொண்டே கீழே இறங்க முற்பட…
அல்லியை இப்போ அவன் அழைச்சுக்கணும். இங்க இருக்கவங்களை தவிர யார் வேற யாரு ல்லிய தூக்கினாலும் ஆதிக்குப் பிடிக்காது. அவன் தங்கச்சி மேல அவ்வளவு பாசம் அக்கறை அவனுக்கு என்று சிரித்தான் ருத்ரன்.
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மொத்த குடும்பமும் ஒரு இன்னும் ஒழுங்காக நடக்கக்கூட தெரியாமல் தத்தக்க.. பித்தக்க என்று நடக்கும் குழந்தைக்கு தன் தங்கை மீது இந்த வயதிலேயே அக்கறை இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்
அப்படியே ராவண் போல அவன் மித்ரா மேல அவ்வளவு பாசம் வைச்சிருக்கான் இவளை அப்படி பார்த்துக்கணும்னு நினைப்பான் என்றார் பரிமளா.
அதைக் கேட்டதும் மித்ராவின் முகம் சடுதியில் மாறிவிட்டது. இவ்வளவு அக்கறை காட்டிய தன் அண்ணனையும் மொத்த குடும்பத்தையும் வேண்டாம் எனும் உதாசீனப்படுத்திவிட்டு எப்படி தன்னால் அந்த மோகனின் பின்னால் செல்ல முடிந்தது அவன் அப்படி என்ன தனக்கு செய்து விட்டான் என்று மனதிற்குள் அவளுக்கு கேள்வி இருந்தது அவள் முகத்திலிருந்து மாற்றத்தை கண்டு கொண்ட ஈஸ்வரோ..
மித்து என்று அவன் அழைப்பில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் கண் மூடித் திறந்து மென்மையாக சிரித்து நான் இருக்கிறேன் என்று அவளைத் தேற்றினான்.
அவளோ நெகிழ்ச்சியாக அவனைப் பார்க்க..
ஈஸ்வர் சுற்றிலும் பார்த்துவிட்டு இதழ்களைக் குவித்து முத்தம் கொடுக்க..
ராஸ்கல் என்று வாய்க்குள் செல்லமாக அவனைத் திட்டியவள் ஈஸ்வரைப் பார்த்துக்கொண்டே ஆதியின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
ஈஸ்வரும் அது தனக்குத் தான் என்று அறிந்தவன் அவளையே பார்க்க..
டேய் ரூம்குள்ள புருசனும், பொண்டாட்டியும் அடிக்குற கூத்து போதலையா? உங்க இவ்ளோ பேர் இருக்கோம் கொஞ்சம் அடக்கி வாசி டா.. என்று ராஜ் மெல்ல அவன் காதருகே பேசினான்.
உனக்கு வேணும்னா நீயும் உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணு.. என்றான் ஈஸ்வர்.
நீ சொல்லலையின்னாலும் இந்த குளிருக்கு ரூமுக்குப் போனதும் ரொமான்ஸ் தான் என்று குளிரும் தன் உடலை குறுக்கிக்கொண்டு கைகளை பரப்பரவென தேய்த்தவன் கயலைப் பார்க்க..
அவளோ அவனை கவனிக்காதவள் நான் அக்கா கூடாதான் இன்னிக்கு முழுக்க இருக்கப் போறேன். அவங்க கூட பேசி எவ்ளோ நாள் ஆச்சு.. என்று கிட்சனுக்குள் அவள் சென்றுவிட..
ஈஸ்வர் ராஜ்ஜை கிண்டலாகப் பார்த்து சிரித்தான் .
சரி விடு டா.. என்று தலையை அழுந்தக் கோதிக்கொண்டான்.
மித்ரா கையில் இருந்த ஆதியோ அவள் கொடுத்த முத்தத்தை தன் குட்டிக் கரம் கொண்டு துடைத்தவன் முகத்தை சுழித்துக்கொண்டே கீழ் இறங்கியவன் மித்ராவை நிமிர்ந்து பார்த்தவன் தனக்கு முத்தம் கொடுத்தாதற்காக அவளை முறைத்தான்.
ஆதியின் குட்டிக் கண்கள் சுருக்கி இடுப்பில் கைவைத்து நின்றவனை ரசனையாகப் பார்த்தவள் அவன் உயரத்திற்கு கீழே மண்டியிட்டு அமர்ந்தவள். என்ன டா நான் முத்தம் கொடுத்ததுக்கு என்னை முறைக்குறியா? என்றாள்.
ஆதியோ அவளையே அழுத்தமாகப் பார்க்க..
நான் முத்தம் கொடுத்தது பிடிக்கலையின்னா நான் கொடுத்த முத்தத்தை திருப்பி நீயே கொடுத்திரு.. என்று தன் கண்ணத்தை அவனிடம் காட்டினாள்.
ஆதியோ அவளையே பார்த்திருக்க..
ம்ம்.. கொடு டா.. என்று மித்ரா கண்களை மூடிக்கொண்டு அவன் முன் கன்னத்தை நீட்டிய அடுத்த நொடி ஆஹ்.. என்ற அலறளோடு மித்ரா கண்களைத் திறக்க…
அவள் கன்னத்தை நறுக்கென்று தன் பால் பற்க்கள் கொண்டு கடித்திருந்தான்
இதையெல்லாம் பார்த்த மொத்த குடும்பமும் சிரித்திருக்க..
மித்ராவைக் கடித்து விட்டோமே அவள் எதுவும் சொல்வாள் என்ற பயம் எதுவும் இன்றி வேதவள்ளியிடம் சென்றவன்.வள்ளியின் கையைப் பற்றி இழுக்க..
வேதவள்ளியும் அவன் அழுத்தமான பார்வையைக் கண்டு அல்லியை தன்மடியிலிருந்து கீழ் இறக்கி விட..
அவள் கையைப் பற்றியப்படியே அங்கிருந்தவர்களை ஒரு மார்க்கமாகப் பார்த்த படி உள்ளே செல்ல..
என் பேரன் அப்படியே அவங்கப்பன் மாதிரி இருக்கான். ஒரு விஷயம் பிடிக்கலையின்னா அப்பவே அதை காட்டிட்டிடுவான். அதே போல தான் இவனும் பன்றான் என்று சிலாகித்து சொல்லி சிரித்தார் வராதராஜன்.
மித்ராவோ ஆதி கடித்ததில் இன்னும் வலி தாங்காமல் கன்னத்தை தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
ஏன் டி அந்த சின்ன குழந்தை கடிச்சு உனக்கு இவ்ளோ வலிக்குதா? இன்னும் கன்னத்தை தேய்ச்சிட்டு இருக்க.. என்றார் கமலா.
சித்தி வலிக்குதாவா? இங்க பாருங்க என்று தன் கன்னத்தை அவரிடம் காட்டினாள் மித்ரா.
ஆதி கடித்த பற்த்தடம் பதிந்து இருக்க.. அதை சுற்றி சிவந்து இருந்தது. அவள் கண்ணில் வலியில் நீர் கோர்த்துக்கொள்ளும் அளவுக்கு வலி அவளுக்கு.
அடிப்பாவி என்ன டி இது இப்படி வீங்கிருக்கு.. என்று அவள் கன்னத்தை தடவிய கமலா டேய் ஈஸ்வர் உன் மருமகன் பண்ணிருக்க வேலையைப் பாரு என்றார்
கடிச்சிட்டுப் போகட்டும் அத்தை என்றவன் மித்ராவை பார்த்து சிரித்தபடியே அவன் அறைக்குள் சென்றுவிட..
அவரவர் வேளைகளில் அவரவர் மூழ்கிவிட்டனர்.
ஈஸ்வர் சிரித்துவிட்டு செல்லவும் அவனைப் பார்க்க அறைக்குள் சென்றவள் டேய் மச்சான்.. என்ன டா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.. உன் பொண்டாட்டியை அந்த குட்டி வாலு கடிச்சு வெச்சிட்டு போறான் நீ சிரிச்சிட்டு வர.. எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா மச்சான் என்று வந்து கட்டிலில் அவன் பக்கம் அமர்ந்தாள்.
இவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போது இப்படித்தான் ஈஸ்வரை மித்ரா அழைப்பாள் அதுவும் அவள் மூட் மிக நன்றாக இருந்தாள் மட்டுமே இந்த அழைப்பு.
அவளின் இந்த அழைப்பே மித்ராவுக்கு தன் அணைப்பு.. தன் அரவணைப்பு.. தேவை என்று உணர்ந்து கொள்வான் ஈஸ்வர்.
மச்சான் என்ற அவள் அழைத்த அடுத்த நொடி அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் படுக்க வைத்தவன். அவள் கன்னத்தை தடவிப் பார்த்தவன் உன் அண்ணன் மகனுக்கு அவனை மாதிரியே குசும்பு என் பொண்டாட்டியை எப்படி கடிச்சிருக்கான் பாரு என்று குனிர்த்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
ஆமா டா.. அவனுக்கு நான் ஆசையா தானே மச்சான் முத்தம் கொடுத்தேன். ஆனா பாரு எப்படிக் கடிச்சிருக்கான் என்று மீண்டும் தன் கன்னத்தை அவனிடம் காட்டினாள்.
வலிக்குதாடி செல்லம்.. என்று மீண்டும் அவள் கண்ணத்தில் முத்தம் வைத்தவன் உன் அண்ணன் மகன் உன்னை மாதிரியே கடிச்சிருக்கான் டி.. என்றான் அவள் கண்ணத்தில் தன் இதழை உரசியபடி கேட்டான்.
அவனைத் திரும்பி மித்ரா முறைக்க..
அவள் திரும்பியதும் அவன் முகமும், அவள் முகமும் உரசிக்கொள்ளும் தூரத்தில் இருந்தது.
எனை எங்கெல்லாம் கடிச்சு வெச்சிருக்கேன்னு காட்டட்டுமா என்றான் குறும்பாக.
அவன் விழிகளில் இருந்து பார்வையை ஈஸ்வரின் இதழ்களுக்கு கொண்டு வந்தவள். ஆதி கிட்ட சொன்னது தான் உனக்கும் நீயும் வேணா என்னை கடிச்சுக்கோ.. என்றாள்.
அதை சொல்லும்போதே மித்ராவின் முகம் செவ்வானமாய் சிவந்திருக்க..
அதை ரசித்துக்கொண்டே கீழே குனிந்து அவள் கீழ் இதழை தன் பற்க்களுக்கு இடையில் வைத்து கசக்கியவன் அவளை கீழே தள்ளி மித்ராவை அந்த குளிருக்கு இதமாக அணைத்து குளிர் காயத் துவங்கினான்.
இங்கே கிட்சனில் இளங்கிளி வேலை செய்துகொண்டிருக்க.. அவள் அருகே இருந்த கயலோ “அக்கா கொடுங்க சட்னி தானே நானே அறைக்குறேன்” என்று அவளிடம் இருந்து பறித்து வேலை செய்யத் துவங்கினாள்.
இல்ல பரவால்ல நானே செஞ்சுக்கிறேன். நீங்க இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளிக என்று இளங்கிளி கயலை வேலை செய்யவிடாமல் தடுக்க முயல..
ஐயோ அக்கா விருந்தாளி எல்லாம் ஒண்ணுமில்ல.. நம்ம எல்லாம் ஒரே குடும்பம் தான். நீங்க கொடுங்க நான் அறைக்கிறேன் என்று மிக்சியை அவளிடம் இருந்து வாங்கி சட்னி அறைத்தாள்.
வேதவள்ளிப் பாட்டியும், பரிமளா, கமலா, பார்வதி என நால்வரும் ருத்ரனின் அம்மா மீனாட்சியுடன் பேசிக் கொண்டிருக்க..
வரதராஜனும்,மருதமலையும் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருந்தனார்.
ருத்ரசேனனுடன் ராஜ் பேசிய படி வெளியே செல்ல.. அப்போது வந்திருந்த விருந்தினர்களுக்காக சமைக்க காய்கறிகள் வாங்க சென்ற கர்ணன் வீட்டிற்குள் நுழைந்தான்.
வாசலில் வைத்து ராஜ்ஜை பார்த்ததும் கர்ணனுக்கு ராஜ்ஜை எங்கேயோ பார்த்த நியாபகம் அவனுக்கு. ஆனால் சட்டென்று நினைவில் இல்லை அவனுக்கு.
வா கர்ணா இப்போதான் வரியா என்றவன். ராஜ் இவன் தான் கர்ணன் இந்த வீட்டை என்னோட தனிப்பட்ட வேலைகளை கவனிச்சுக்குறான் என்றவன். கர்ணனை இளங்கிளியின் அண்ணன் என்று அறிமுகம் செய்ய நினைத்தவன்.
இவங்க மொத்த குடும்பமும் இவ்ளோ வருஷமா கனியைத் தேடி இருக்காங்க. கனிக்கு தான் பழசெல்லாம் மறந்து போயிருக்கு. ஆனா கர்ணா நல்லா தானே இருக்கான் இவனுக்கு எப்படி மறக்கும் என்று யோசனையாக கர்ணனை பார்த்துவிட்டு சரி நீ உள்ள போ.. என்று அவனை அனுப்பி வைத்தான். ராஜ்ஜிடம் கர்ணன் பற்றி சொல்லாமல் மறைத்து இருந்தான் ருத்ரசேனா.
ஸ்டோரி படிச்சிட்டீங்களா அப்போ கமெண்ட் பண்ணிடுங்க😍 கூடவே லைக் பண்ணுங்க.

2 comments
Waiting for your next update ma 💐💐💐
POST PANNITEN MA.. 😍