News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என்னை டிஸ்டர்ப் பண்ணுது உன் லிப்ஸ்,வெறியன் 32 

by Layas Tamil Novel
245 views
A+A-
Reset

வெறியன் 32    

“இங்க பாரு நான் சொன்னது எல்லாம் நியாபகம் வெச்சுக்கோ.. திரும்ப காலேஜ் அனுப்பிட்டேன்னு எவ்ளோ சந்தோசப்படுறியோ அந்த அளவுக்கு கேர்புல்லாவும் இருக்கனும். அங்க போய்ட்டு எதுவும் தகிடு தத்தத்தம் வேலை செய்யணும்னு நினைச்சே.. மவளே அவ்ளோ தான்” என்று காரில் பவளமல்லியை ஏற்றிக்கொண்டு அவள் காலேஜிற்கு அழைத்து செல்லும் வழியில் அவளிடம் பேசிக்கொண்டு வந்தான் அக்னி.

“நான் என்ன சார் பண்ண போறேன்” என்றாள் மல்லி புரியாமல்.

“ம்ம்… இவ்ளோ நாள் கழிச்சு வீட்டை விட்டு வெளியே அனுப்பறேன்னு சொல்லிட்டு அப்படியே எங்கையும் எஸ்கேப் ஆகணும்னு நினைச்சேன்னு வை . நீ எங்க இருந்தாலும் உன்னை தேடி வந்து தூக்கிட்டு வந்து.. ” என்று சொல்லிகொண்டே திரும்பி அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் அக்னி.

அவன் பார்வையில் இருந்த அர்த்தம் புரிந்து விட்டதோ என்னவோ மல்லியின் முகம் குப்பென்று சிவந்து போனது. அவனை பார்க்காமல் பார்வையை. அவள் தாழ்த்திக்கொள்ள..

“போகணும்னு நினைச்சிருந்தா எப்பவோ போயிருப்பேனே.. இவ்வளவு நாள் வரைக்கும் வெயிட் பண்ணனும்னு அவசியமே எனக்கு இல்லை” என்றாள் அவனைப் பாராமல்.

“ ஓஹோ அப்போ என் கூட இவ்வளவு நாள் நீங்க இருக்க என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?” என்றான் குறும்பாக.

“ம்ம்.. அதை சொன்னா நீ தான் என்னை இந்த வீட்டை விட்டு முதல் ஆளா துரத்தி விடுவ.. ” என்று எண்ணியவள். “உங்களுக்கு நான் கடன் பட்டிருக்கேன் சார் ” என்றாள் .

அவள் சொல்வதும் சரி தானே.. அதை காரணம் காட்டி அல்லவா தான் மல்லியை இவ்வ்ளவு நாட்களாக தன் வீட்டிலேயே பிடித்து வைத்திருந்தேன் என்று நினைத்தவன்.

“இனியும் நீ எனக்கு பணம் கொடுக்கனுன்னு எந்த அவசியமும் இல்லை. அது நான் சும்மா உன்னை கண்ட்ரோல் பண்ணனும்னு நினைச்சு பண்ணின விஷயம். அதை நான் எப்பவோ மறந்துட்டேன்” என்றான்.

“நீங்க மறக்கலாம் ஆனா நான் மறக்கல சார். உங்ககிட்டே கை நீட்டி காசு வாங்கியிருக்கேன், அந்த கடனை அடைக்குற பொறுப்பு எனக்கு இருக்கு. அதை முழுசா கொடுத்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றாள் தீவிரமாக.

“நான் தான் வேணாம்னு சொல்றேன் இல்ல.. அது என்ன கடமை, பருப்பு.. பொறுப்புன்னு சொல்லிட்டு இருக்க. எனக்கு அதெல்லாம் வேண்டாம் அவ்ளோ தான், இனி அந்த பணத்தை பத்தி பேசினா நடக்குறதே வேற ” என்று சற்று கோபமாகவே சொன்னான்.

அவன் கோபம் கண்டதும் மல்லி அமைதியாகிவிட..

அவள் அமைதியை கண்டு வருந்தியவன் “சாரி ஒரு டென்ஷன்ல கத்திட்டேன்” என்றான்.

“பரவால்ல சார்.. ” என்றவள் “நான் ஒண்ணே ஒன்னு மட்டும் உங்ககிட்டே கேட்கட்டுமா?” என்றாள்.

“ம்ம்.. கேளு” என்று காரை அவள் காலேஜ் வாசலில் நிறுத்திவிட்டு அவளை திரும்பிப்  பார்த்து அமர்ந்தான்.

அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலையை தாழ்த்திக்கொண்டவள் “இல்ல.. நீங்க இப்போ என்னை லவ் பண்றதுனால தானே என்கிட்டே பணம் வேணாம்னு சொல்றிங்க. நான் உங்களை வேணாம்னு சொல்லிட்டா என்னை எப்படியும் உங்க வீட்டை விட்டு துரதிருவிங்க, அப்போ நான் உங்க மொத்த பணத்தையும் வட்டியும், முதலுமா திருப்பி கொடுத்துட்றேன்” என்றாள்.

அவளை எரித்துவிடுவது போல பார்த்தவன் “நீ என்னை காதலிக்குறேன்னு சொன்னலும், என்னை பிடிக்கலையின்னு சொன்னாலும் எனக்கு பிரச்சனையே இல்ல. உன்னை என் கண் பார்வையை விட்டு எங்கையும் போக விட மாட்டேன். ஏன்னா உன்னை எனக்கு அவ்ளோ பிடிச்சிருச்சு. என் கூடவே என் கண் முன்னாடியே வெச்சுப்பேன்” என்றான்.

அவனை ஆச்சர்யமாகப் பார்த்த பவளமல்லி விழி இமைக்க மறந்து இருக்க.. தன் சீட்டில் இருந்தவன் மெல்ல முன்னேறி அவள் முகத்தருகே வந்தவன் “என்ன பிரீஸ் ஆகிட்ட.. ” என்று அவள் கண்கள் இரண்டையும் அவன் விழிகளால் ஊடுருவினான்.

அவளால் அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியவில்லை. சட்டென பார்வையை அவள் தாழ்த்திக்கொள்ள.. அவள் வெட்கம் கண்டு சத்தமாக சிரித்தவன் “இன்னும் 2 டேஸ் தான் இருக்கு.. நீ எனக்கு ஓகே சொல்ல.. எனக்கு ஏற்கனவே ரிசல்ட் என்னனு தெரியும். இருந்தும் நான் ஏன் அமைதியா இருக்கேன் தெரியுமா? உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு உன் வாயால சொல்லணும். அதை நீ எப்படி சொல்லபோறேன்னு கேட்க நான் இன்னும் ஆர்வமா இருக்கேன் டி மல்லி.. ” என்று அவள் இரு கன்னங்களையும் தன் உள்ளங்கையில் பிடித்து இடவலமாக ஆட்டினான்.

அவன் சூடான கை அவள் கன்னத்தில் பட்டதும் மல்லியின் உணர்வுகள் விழித்துக்கொண்டது, முதல் முறை ஒரு ஆண்மகனின் தீண்டல் அவளை அதிர செய்தது.

அதை அவள் கன்னத்தை பற்றி இருந்த அக்னியால் உணர முடிந்தது. அவள் விழிகளை பார்த்துக்கொண்டே கீழே குனிந்தவன் அவள் இதழ் உரசும் தூரத்தில் நெருங்கி முகத்தை கொண்டு சென்றவன் அவள் விழிகளை பார்த்துவிட்டு பார்வையை அவள் இதழ்களில் நிறுத்தியவன் “இதை டேஸ்ட் பண்ணி பார்க்க நான் எவ்ளோ ஆர்வமா இருக்கேன்னு தெரியுமா டி உனக்கு.. என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது உன்னோட லிப்ஸ் ” என்றான்.

அவன் நெருக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த பென்னவளுக்கு அவன் பேச்சு சூட்டை ஏற்றிவிட்டு கன்னங்களை சிவக்க வைத்திருக்க.. அவன் நெருக்கத்தில் இருக்க முடியாமல் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

மூடிய அவள் இமைகளை பார்த்துக்கொண்டே மேலும் நெருங்கி அவள் இதழை முத்தமிடுவதற்காக தன் இதழ்களை நாவல் ஈரம் செய்தவன் மல்லியின் இதழை தொட்டுவிடும் தூரத்தில் வந்தும் விட்டான்.

மல்லியின் முகத்தில் உணர்வுகள் மொத்தமும் கொந்தளித்தது, அக்னியின் சூடான மூச்சுக் காற்று அவள் நாசியில் கலப்பதை அவளால் உணர முடிந்தது. அவள் மூச்சுக்காற்றும் வேகமெடுக்க.. அவள் இதழை தன் இதழ்களால் பருக நினைத்து தன் இதழ்களைப் பிரிக்க..

டொக்..டொக்.. என்று கார் ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டது அவனுக்கு. சட்டென இருவரும் உணர்வு வந்தவர்களாக வேகமாக கண்களை திறந்து விலகி அமர்ந்தார்கள்.

பவளமல்லிக்கு இதயம் கீழே விழுந்து விடும் அளவுக்கு துடித்துக்கொண்டிருந்தது.

எழுந்த உணர்வுகளை அடக்குவதற்காக தலையை அழுந்தக் கோதி தன்னை சமன் செய்து கொண்டவன் திரும்பி ஜன்னல் வழியே வெளியே பார்க்க.. “என்ன டா நடக்குது இங்க.. ” என்ற ரீதியில் அவனை பார்த்துக்கொண்டிருந்தான் சாணக்கியன்.

“இவனா?.. ” என்று நிம்மதியடைந்தவன் “நீ இங்கையே இரு.. நான் வரேன்” என்றவன் காரை விட்டு கீழ் இறங்கி வெளியே வந்தவன் “என்ன டா.. ” என்றான் எரிச்சலாக.

“உங்க எரிச்சலுக்கான காரணம் எனக்கு என்னனு புரியுது சகல.. ஆனா அதுக்குன்னு காலேஜ் வாசல்ல வெச்சு கிஸ் அடிக்குறது எல்லாம் சரி இல்ல.. ” என்றான்,.

“சகலையா? யாருக்கு யாருடா சகலை” என்றான் இன்னமும் எரிச்சல் அடங்காமல்.

“ம்ம்ம் .. உன் ஆளோட தங்கச்சியை நான் உஷார் பண்ணினா அப்போ நீ எனக்கு முறைக்கு சகலை தானே.. ” என்றான் சாணக்கியன்.

“அவளை நீ இன்னம் பாக்கவே இல்ல.. அதுக்குள்ள என்னவோ லவ் பண்ற ரேஞ்சுக்கு போயிட்ட நீ..  ” என்றான் அக்னி.

“நான் லவ் பண்ணிட்டு தான் டா இருக்கேன். என்னைக்கு என் அல்லியை நேருல பாக்குறேனோ அன்னிக்கே ப்ரொபோஸ் தான்.. அப்போ இருந்தே எங்களுக்கு லவ் தான். ரொமான்ஸ் தான் . நாங்களும் இடம் பார்க்காம கிஸ் அடிப்போம் எல்லாம் பண்ணுவோம் உங்களை மாதிரியே” என்றான்.

“டேய்.. எதுக்கு டா இவ்ளோ கத்துற.. அவ கேட்டிரப்போறா டா.. ” என்றான் அக்னி மெதுவாக.

“எப்படியும் பின்னாடி தெரியத்தான் போகுது, அது இப்பவே தெரிஞ்சுக்கட்டுமே.. நீ இரு நான் பேசிட்டு வரேன் ” என்று அக்னியை தள்ளிக்கொண்டு காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தான் சாணக்கியன்.

“இவன்கிட்டே மல்லிக்கு தங்கச்சி இருக்குன்னு சொன்னது தப்பகிருச்சு, இம்சை புடிச்சவன் ” என்று வேகமாக டிரைவர் சீட் கதவை திறந்து ஏறி அமர்ந்தான் அக்னி.

சாணக்கியனை பார்த்ததும் முதலில் அதிர்ந்தாலும், அவனை அக்னியுடன் ஒரு பார்ட்டியில் சந்தித்தது நினைவில் வர.. அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தாள் பவளமல்லி.

“ஹாய் மல்லி! எப்படி இருக்க?” என்றான் பின்னைருக்கையில் இருந்து.

“டேய் இப்போ எதுக்கு டா இங்க வந்தே .. அவ காலேஜ்க்கு போகணும். முதல்ல இறங்கு நீ.. ” என்றான் அக்னி.

“டேய் சும்மா இருடா.. நான் மல்லிகிட்டே சில இன்பெர்மேஷன் கேட்டுட்டு கிளம்பிடறேன். எனக்கும் காலேஜ்க்கு டைம் ஆகுது இல்ல.. ” என்றான்.

அவன் சொன்னது கேட்டு மல்லியோ.. “இவர் என்ன இந்த வயசுல காலேஜ் போறேன்னு சொல்றாரு. ஒழுங்கா படிக்காத ஸ்டுடெண்டோ.. அரியர் எதுவும் வெச்சிட்டு காலேஜ் போய்ட்டு இருக்காரே ” என்ற ரீதியில் அவனை பார்த்தாள் .

“என்ன சிஸ்டர் இந்த வயசுல காலேஜ் போறேன்னு நினைக்குறிங்களா.. ” என்று அவள் முகத்தை பார்த்தே சரியாக கணித்து சொன்னான் சாணக்கியன் .

“ஆமா.. இல்லை.. ” என்று தலையை நாளா பக்கமும் ஆட்டியவள் அவனை பார்த்து சங்கடமாக சிரிக்க..

“நான் ப்ரோபஸ்ர் மல்லி ” என்று தான் வேலை செய்யும் காலேஜின் பெயரை சொன்னான். அதை கேட்டதும் மல்லி ஆச்சர்யத்தில் விழி விரித்தாள். அதே காலேஜில் தானே அல்லியம் படித்துக்கொண்டிருக்கிறாள் அவள் ஊரில். 

“இப்போ என்னடா உனக்கு வேணும்” என்றான் அக்னி . அவனுக்கு மல்லியுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதை எண்ணி சாணக்கியன் மீது எரிச்சல் உண்டானது.

“இங்க பாரு மல்லி நான் டைரெக்டா விசயத்துக்கு வரேன். நான் உன் தங்கச்சி தேனல்லியை சின்சியரா லவ் பண்றேன். அவளை நான் மீட் பண்ணியே ஆகணும், எனக்கு உன் வீடு அட்ரஸ் வேணும், இல்ல அல்லியோட போன் நம்பராச்சும் வேணும் ” என்று பட்டாசாக பொரிந்தான் அவளிடம்.

அவன் சோர்ந்து கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாகிப் போனது,. சங்கடமாக நெளிந்துகொண்டே.. அக்னியை பார்த்தாள் . அவள் நிலைமை உணர்ந்தவன் ” இவன் என் பிரென்ட் தான் ரொம்ப நல்ல பையன், எதுவும் தப்பா எல்லாம் நடந்துக்க மாட்டான் அதுக்கு நான் கேரண்டி. ஏதோ அன்னிக்கு நான் பார்ட்டியில் வெச்சு சொன்னதில் இருந்து உன் தங்கச்சியை மீட் பண்ணியே தீரணும்னு என்னை டோர்சேர் பண்ணிட்டு இருக்கான் ராஸ்கல். இவன் தான் சொல்ல சொல்ல கேக்காம உன் சிஸ்டர் நம்பர் வேணும்னு வந்து நிக்குறான்” என்றான் .

“ஆமா வீட்டுக்கு வரேன்னு சொன்னேன். நீ தான் மல்லி காலேஜ் போறதா சொன்னா. அதான் நேரலையே வந்து பேசிடலாம்னு வந்துட்டேன்” என்றான் சாணக்கியன்.

அவனை என்னவென்று சொல்வதென தெறியாமல் பார்த்துக்கொண்டிருந்த பவளமல்லி “சார் அல்லி சின்னப்பொண்ணு.. அவளுக்கு இந்த காதல் எல்லாம் தெரியாது, ” என்றாள் தயக்கமாக

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.