Episode -12
உள்ளே 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கம்பீரமாக அவர்களை நோக்கி சிரித்து முகமாக நடந்து வந்தார் .
உள்ளே வந்த அந்த பெண்மணி அவருக்காக போடப்பட்டிருந்த நாற்காலியின் அருகில் வந்து நின்றவர் அனைவரையும் பார்த்து புன்னகை சிந்தியவர் வணக்கம் என்னோட பேர் ராதா . சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோவின் விளம்பர பிரிவில் ஹெட்டாக இருக்கேன் இங்கே புதிதாக சேர்ந்து இருக்க உங்க கூட சேர்ந்து பணியாற்ற நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டார் ராதா .
நடு நாயகமாக போடப்பட்டிருந்த சேரில் ராதா அமராமல் அதன் அருகில் தங்களோடு சேர்ந்து போடப்பட்டிருந்த சாரில் அமரவும் அப்போ இன்னும் யாரோ அங்கே வர வேண்டி இருக்கு என்று யோசனையோடு காந்தள் அமர்ந்திருக்க மீண்டும் அவர்கள் இருந்த ஹாலின் கதவு திறக்கும் சட்டம் கேட்டது.
கதவின் இருபுறமும் பாடி காடுகள் கதவை திறந்து பிடித்துக் கொண்டு நிற்க அறைக்குள்ளே ஆறடிக்கும் அதிகம் வளர்ந்திருந்த இளன் கம்பீரமான தோற்றத்தோடு சிஇஓவிற்கு உண்டான மிடுக்கோடு அந்த ஹாலிற்குள் நடந்து வந்தான். வேலைக்கு வந்த முதல் நாளே அவனை சந்திப்போம் என்று காந்தள் எதிர்பார்க்கவில்லை அவள் கண்களும் வாயும் அவளை அறியாமல் அகல விரிந்தது .
நேராக உள்ளே வந்த இலன் தனக்கு போடப்பட்டிருந்த சாரின் முன்னால் வந்து நின்றவன் அங்கே அவனுக்கு மரியாதை செலுத்தும் வேகமாக நின்றிருந்த அனைவரையும் பார்த்து தன் பார்வையை சுழல விட்டவன் காந்தள் அருகில் வந்ததும் ஒரு நிமிடம் அவன் பார்வை நின்று மீண்டும் மற்றவர்களை தழுவி சென்றது .
அந்த ஒரு நிமிட அவன் பார்வை தீண்டலே காந்தள் உயிருக்குள் பூகம்பத்தையே ஏற்படுத்தியதுபோல அவள் உணர்ந்தாள் . ஏசி ஹாலில் அவள் முகம் முழுவதும் வியர்த்து கொட்டியது தன் பாக்கெட்டில் வைத்திருந்து கர்சீப்பை எடுத்து தன் முகத்தில் வழிந்த வியர்வையை லேசாக ஒட்டி எடுத்தபடி இருக்கையில் அமர்ந்த இளனை பார்த்தாள் .
அதை இளனும் கவனிக்க தவறவில்லை . லேசாக புன்னகை சிந்தியவன் அனைவரையும் பார்த்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இளன் .
“உங்களைப் போலவே நானும் இன்று தான் எனது முதல் பாதையில் சேர்ந்திருக்கிறேன் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று இளன் கூற அவன் பேசியதை கேட்டு அனைவரும் கைத்தட்டி அவனை உற்சாகமாக வரவேற்றனர்.
பின் ராணி எழுந்து ஒவ்வொருவராக இலனுக்கு அறிமுகம் செய்துவடித்தவர் யார் யாருக்கு எந்த தளத்தில் எந்த மாதிரியான வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இந்த ஹாலின் வெளியே இருந்த நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டிருப்பதாக கூறினார்.
சில பொதுவான ரூல்ஸுகளை சொல்லிவிட்டு ராணி முடித்துக்கொள்ள…
தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்ற இளன் மற்றவர்களிடம் விடை பெற்றவன் “உங்களோடு இணைந்து வேலை செய்வதில் ஆர்வமாக உள்ளேன்” என்றவனின் பார்வை காந்தளை துளைத்துக்கொண்டு இருந்தது .
“இவன் என்ன சொல்றான் என்கிட்டே தான் இப்படி சொல்றானா என்னோட சேர்த்து வேலை செய்ய இவன் ஆர்வமா இருக்கானா “ என்று குழம்பியவள் தான் வேலை செய்யும் டெபார்ட்மெண்டிற்கும் இந்த சில்வர் லைன் ஸ்டுடியோவின் சிஈஓ வுக்கும் எந்த சம்மந்தம் இருக்க போகிறது என்று சாதாரணமாக நினைத்தவள் இளன் அங்கிருந்து செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் .
இளன் சென்றதும் ராணியும் அங்கிருந்து சென்றுவிட புதிதாக வேளைக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் எழுந்து வெளியே நோட்டீஸ் போர்டில் ஒட்டி இருந்த விபரங்களை பார்க்க சென்றனர்.
காந்தளும் எழுந்து அங்கே சென்றாள் . தன பெயர் எங்கே இருக்கிறது என்று நோட்டீஸ் போர்டை பார்க்க போனால் ஆனால் அவளுக்கு முன்னாள் இருந்தவர்கள் நோட்டீஸ் போர்ட் தெரியாதவாறு மறைத்து நின்று இருக்க… அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு வரட்டும் என்று பொறுமையாக காத்திருந்தாள் ,
ஒவ்வொருவராக தங்களுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அங்கிருந்து சென்றனர் . கூட்டம் குறையவே காந்தள் தன் பெயர் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதற்காக அந்த நோட்டீஸ் போர்ட் அருகே செல்லப் போக ..
அப்போது excuse me என்று ஒரு மென்மையான குரல் அவள் பின்னால் கேட்டது .
யார் என்று திரும்பி பார்த்த காந்தள் அங்கே அவள் வயதை ஒத்த ஒரு இளைஞன் காந்தள் பின்னாள் நின்று அவளை பார்த்து புன்னகைத்தபடி நின்று இருந்தான் .
அவனை அவள் பார்த்ததும் “அப்படியே என்னோட நம்மையும் பார்த்து சொலிடறிங்களா எந்த லிஸ்ட்ல என் பேர் இருக்குன்னு” என்றான் .
தன்னை பார்த்து சினேகமாக புன்னகைத்து அந்த இளைஞன் உதவி கேட்கும்போது அவளால் முடியாது என்றா சொல்ல முடியும் சரி என்று தலையாட்டியவள் எங்க பேர் என்னனு சொல்லுங்க நான் பார்த்துட்டு சொல்றேன் என்றாள் .
“ஓஹ் சாரி என்றவன் அவள் முன் தன் கையை நீட்டி ஹலோ என் நேம் மதிமாறன் . நீங்க என்னை மாறன்னு கூப்பிடலாம் என்றான் . நான் ஏன் கூப்பிடனும்” என்று அவளுல் எழுந்த கேள்வியை அவனிடம் கேட்காமல் புன்னைகைத்தவள் திரும்பி லிஸ்ட்டில் அவன் பெயர் இருக்கிறதா என்று பார்த்தாள் .
அவன் பெயரை லிஸ்ட்டில் பார்த்ததும் ஆச்சர்யமானது காந்தளுக்கு . ஏன் என்றால் அவள் பெயருக்கு கீழாக அவன் பெயர் இருந்தது . காந்தள் வேலை செய்யும் டிபார்ட்மெண்டில் தான் அவனும் வேலை பார்க்க போகிறான் என்று பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யம் . என்னவோ அவன் பெயர் தன் பெயருக்கு அருகில் பார்த்ததும் காந்தளுக்கு உள்ளுக்குள் ஒரு புதுவித உணர்வு தோன்றியது . அதை உணர்ந்தவள் வெளிகாட்டிக்கொள்ளாமல் திரும்பி ” நீங்க விளம்பர பிரிவில் வேலை செய்ய வந்திருக்கிங்களா? என்றாள்
” ஆமாம் ” என்றான் சிரித்துக்கொண்டே .
” ஓ … ” என தலையை ஆட்டியவள் ” வெல்கம் டு மை டிபார்ட்மென்ட் நானும் இதே டிபார்ட்மெண்ட்டில் தான் வேலை செய்ய போறேன் ” என்று சிரித்துக்கொண்டே கூறியவள் .
” வாங்க நம்ம தேபர்த்மேன்ட் 85 வது தளத்தில் இருக்கு போலாமா ?” என்றாள் .
“வாவ் , ஒரு பியூட்டிபுல் எங் கேர்ள் கூட சேர்ந்து நான் வேலை செய்ய போறேன் . iam really lucky ” என்று சிரித்தவன் காந்தளுக்கு விலகி வழி விட்டு தன் இடுப்பை பாதியாக வளைத்து அவளுக்கு மரியாதை செய்தவன் ” லேடீஸ் பஸ்ட் ” என்றான்
” thank you மிஸ்டர் மதி ” என்றாள் .
அவள் மதி என்று அவன் பெயரை கூப்பிடவும் தலையையே உயர்த்தி அவளை பார்த்தவனை சிரித்த முகமாக பார்த்தவள் மாறன் ஓல்ட் நேம் மாதிரி இருக்கு நான் உங்களை மதின்னே கூப்பிடறேனே என்றாள் புருவம் சுருக்கி . அவள் சிரித்த முகமும் கேட்கும் விதமும் பிடித்துப் போனது அவனுக்கு . உங்களுக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படி கூப்பிடலாம் என்றான் மதிமாறன் .
thank you என்றவள் என் பேர் காந்தள் என்றாள் .
காந்தள் நேம் வித்யாசமா இருக்கு என்றபடி அவளுடன் பேசிக்கொண்டே தாங்கள் வேலை பார்க்கும் டெபார்ட்மெண்டிற்கு லிப்ட் ஏறி சென்றனர் இருவரும் .
இருவரும் பேசிக்கொண்டே தங்கள் டிபார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தனர் . அங்கே இவர்களை போலவே சிலர் வந்து சேர்ந்திருந்தனர் . அவர்கள் டிபார்ட்மெண்டிற்கு தலைமை நிர்வாகியாக அங்கே ராணி இருந்தார் . அவரவருக்கு என்னென்ன வேலை செய்யவேண்டும் என்றும் , அவரவருக்கு என ஒதுக்க பட்ட இடத்தை சுட்டிக்காட்டி அவர்கள் வேலையை ஆரம்பிக்க சொல்லி அனுப்பி வைத்தார் .
காந்தள் தன் அருகில் நின்று இருந்த மதிமாறனை பார்த்து சிரித்தவள் அவனிடம் தலையாட்டிவிட்டு தன் இருக்கைக்கு சென்றாள் .
அவரவர் வேளைகளில் மூழ்கிவிட முதல் நாள் வேலையே மிகவும் பரபரப்பாக சென்றது . மாலை வேலை முடிந்து காந்தள் ராணியிடம் தனக்கு கொடுத்த வேலைகளை கொடுத்து விளக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் .
சில்வர் லைன் ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த காந்தள் தான் தங்கி இருக்கும் இடத்திற்கு ட்ரைனில் செல்ல வேண்டும் . ரயில் நிலையம் செல்வதற்காக காந்தள் நடந்து சென்று கொண்டு இருக்க… அப்போது அவள் பின்னாள் இருந்து “ஹலோ மிஸ் பியூட்டி வீட்டுக்கு கிளம்பியாச்சா” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தான் மதிமாறன் .
அவனை பார்த்ததும் சிரித்த முகமாக ஆமாம் என்று தலையை ஆட்டினாள் காந்தள் .
“ஓ .. நீங்க எங்க தங்கி இருக்கீங்க.. எப்படி போக போறீங்க” என்றான்
“ஏன் நான் இருக்குற இடம் தெரிஞ்சுட்டு என் கூடவே வர போறிங்களா என்ன ?” என்றாள் .
“கூடவே வரணும்னு நீங்க நினைச்சா வருவேன்” என்றவன் .
“நான் ரயில்வே ஸ்டேஷன் போறேன் . ஒரு வேலை நீங்க பஸ் வழியா உங்க இடத்துக்கு போகணுமோன்னு கேட்டேன். பஸ்ல போகணும்னா வேற வழியில் போகணுமே அதான்” என்றவன் .
“நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேனா?” என்றான் தயக்கமாக .
“இல்லை..” என்று வேகமாக மறுப்பு சொன்னவள்.
“ நான் நீங்க போற வழியில் தான் வரேன்” என்று தான் சிட்டியை விட்டு தங்கி இருக்கும் பெயரை சொன்னதும் .
“அட enoda ஸ்டாப்பிற்கு இரண்டு ஸ்டாப் தள்ளி தான் நீங்க போக வேண்டிய இடம் இருக்கு” என்றவன். அவளோடு பேசிக்கொண்டே ரயில் நிலையம் வந்து சேர்ந்தவன் அவர்கள் செல்ல வேண்டிய ரயில் வந்ததும் காந்தளுடன் ஏறிக்கொண்டு வரும் வழி எல்லாம் கதை பேசிக்கொண்டும் வந்தான் . சீக்கிரத்திலேயே இருவரும் தங்கள் போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டனர் .
தன்னுடைய நிறுத்தம் வந்ததும் கந்தலிடம் விடை பெற்று மதி இறங்கி செல்ல… அவன் பிரிந்து சென்றதும் காந்தள் இதயம் ஏனோ கனத்து இருப்பது போல உணர்ந்தாள் ,
ஒரு வித சோர்வோடு தன் அறைக்கு வர… அங்கே வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்த ப்ரியா வந்து இருந்தால் . அவளை பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொண்டது காந்தளுக்கு .
“ப்ரியாஆஆ… “என்று அவளை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் .
“என்ன டி வரும்போது ஒரு மாதிரி டல்லா வந்தே , என்னை பார்த்ததும் மேடம் குஷி ஆகிட்டீங்க” என்றாள் பிரியா .
“அது ஒன்னும் இல்லை டி முதல் நாளே ஆஃபிஸில் இன்னிக்கு எனக்கு ஒரு பெரிய டாஸ்க்கை கொடுத்துட்டாங்க . அதுலயே பாதி டைரெட் அப்பறோம் ட்ரெயின் ஏறி வந்தது ஒரே களைப்பா இருக்கு ப்ரியா” என்றாள் .
அவளிடம் மதியை சந்தித்ததை பற்றி காந்தள் சொல்லவில்லை . சொன்னாள் ப்ரியா தன் கற்பனை குதிரையை ஓட விட்டுவிடுவாள் .
“சரி நீ போய் பிரெஷ் ஆகிட்டு வா நான் உனக்கு சாப்பிட ரெடி பண்ணி வைக்கிறேன்” என்றாள் பிரியா .
“ரொம்ப தேங்க்ஸ் டி..” என்றவள் குளிக்க டவலை எடுத்துக்கொண்டு பாத்ரோமிற்குள் நுழைந்தாள்.
…
காந்தள் வேளைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகி விட்டது. வார இறுதி நாள் என்பதால் ராணி புதிதாக வேளையில் தன டீமில் சேர்ந்தவர்களுக்கு இன்று ஒரு ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே டீம் டின்னருக்கு கொடுக்க போவதாக கூற அனைவரும் உற்சாகமாகினர்.
காந்தள் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டே மதி இருக்கும் [பக்கம் தன் பார்வையை யதார்த்தமாக திருப்ப ஆனால் மதி அவளை தான் பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் .
அவன் பார்வையை கண்டு அதிர்ந்தவள் என்ன என்று இருந்த இடத்தில இருந்து அவனிடம் சைகையால் கேட்க…
மதியோ “ஒன்றும் இல்லை சும்மா..”. என்று தன் தலையை ஆட்டினான் .
டீம் டின்னருக்கு மாலை அனைவரும் தயாராகிவிட.. அப்போது அங்கே வந்த ராணி “கைஸ் நான் சொன்ன ஹோட்டலுக்கு நாம இப்போ போகல” என்றார்.
அவர் அப்படி சொன்னதும் என்ன ஆச்சு திடீர்னு ஏன் ராணி இப்படி சொல்கிறார் என்று அனைவரும் யோசித்துக்கொண்டு இருக்க…
அவர் முகங்களில் தெரிந்த மாறுதலை கவனித்து சிரித்த ராணி “நம்ம பாஸ் மிஸ்டர் இளன் தன்னுடைய 7 நட்சித்திர ஹோட்டலில் உங்கள அணிவருக்காகவும் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்காரு நாம் எல்லாரும் இப்போ அங்கே தான் போக போறோம்” என்றார் .
அதை கேட்டதும் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியின் சிஇஓ வே தங்களுக்கு party ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று கேட்டதும் அங்கிருந்தவர்கள் யாருமே நம்பவில்லை . காந்தளும் இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை . இந்த ஒரு வாரத்தில் அவள் இளனை மறந்தே போய் இருந்தாள் .
இப்பொது அவனை சந்திக்க போகிறோம் என்றதுமே காந்தளுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது . அவள் இந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டுமா என்று யோசித்தால் மீண்டும் இளனை நேருக்கு நேராக சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது என்று அவளுக்கு தோன்றியது . ராணியிடம் தயங்கிக்கொண்டே சென்ற காந்தள் தான் இந்த பார்ட்டிக்கு வரவில்லை என்று சொல்வதற்காக போக..
அப்போது அவள் அருகில் வந்த மதி காந்தளை அழைத்தான் .
“என்ன மதி ஏன் என்னை கூப்பிட்ட” என்றாள் .
இந்த ஒரு வாரத்தில் இருவரும் ஒருமையில் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு வந்திருந்தனர்.
“ஈவினிங் பார்ட்டி முடிச்சிட்டு நீ என்கூட கொஞ்சம் வெளியே வர முடியுமா? நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றான் சிரித்துக்கொண்டே .
அவன் வார்த்தையில் இருந்த சந்தோஷமும் , கண்களில் தெரிந்த காதலையும் காந்தள் கவனித்தாள் . இந்த ஒரு வார நட்பில் முன்பை விட மதி தன்னிடம் அதிகம் நெருக்கம் காட்டி பேசுவதை அவள் கவனிக்க தவறவில்லை . தனக்கும் மதியை பார்க்கும்போது ஒரு வித சொல்ல முடியாத உணர்வு தொன்று வதை கவனிக்க தவறவில்லை காந்தள் .
மதி வந்து அவளை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் அவனிடம் மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்று சம்மதம் சொன்னவள் . ராணியிடம் எதுக்குவம் சொல்லாமல் பார்ட்டிக்கு கிளம்ப தயரானாள் .
அவள் இருந்த தளத்திலேயே இருந்த பாத்ரூம் சென்றவள் லேசாக ஒப்பனை செய்து கொண்டே இளன் பற்றிய யோசனையில் மூழ்கினாள் . தன்னிடம் அவன் அத்துமீறுவதும் அதை தன்னால் தடுக்க ்முடியாமல் போவதும் ஒரு புறம் இருக்க … இங்கே தன் மீது அன்பும் , அக்கறையும் காட்டும் மதி ஒரு புறம் என குழம்பி பொய் இருந்தாள் .
எதையும் எதிர்ப்பார்க்காமல் தன் மீது அக்கறை காட்டும் மதியின் பக்கம் அவள் மனம் சாய்ந்தது. இன்று பார்ட்டியில் இளனை நேருக்கு நேராக சந்தித்து அவன் கொடுத்த பணம் மொத்தத்தையும் திருப்பி கொடுத்துவிட வேண்டும் . பணத்தை காரணம் காட்டி இனிமேல் அவனை தன்னிடம் நெருங்க விடக்கூடாது என்று முடிவோடு அங்கிருந்து கிளம்பினாள் காந்தள் .
