Episode- 9
தன்னிடம் நெருங்கி வருபவனை பார்த்து அதிர்ந்த காந்தள் இரண்டடி பின்னால் தள்ளி நின்றாள்.
தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்தியவள் தனக்கு எதிரே நின்றிருந்தவனின் முகத்தை நேருக்கு நேராக பார்க்க கடினப்பட்டாலும் சிரமப்பட்டு அவன் முகத்தை பார்த்தவள்.
“உங்களோட அக்கவுண்ட் நம்பரை தயவு செய்து சொல்றீங்களா? நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் கொஞ்சமா செலவழிச்சிட்டேன். மீதி பணத்தை அப்படியே என்னோட பேங்க்ல டெபாசிட் பண்ணி வச்சிருக்கேன் அந்த பணத்தை இப்போ உங்களுக்கு அனுப்புறேன். மீதி பணத்தை நான் வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றாள். எதையும் மறந்து போய்விடக்கூடாது என்று மொத்தமாக சொல்லி முடித்துவிட்டு .
“அந்த பணம் நேத்து உன்னுடைய முத்தத்துக்காக நான் கொடுத்தது அதை திருப்பக் கொடுக்க வேண்டியதில்லை” என்றான் .
அவன் சொன்னதை கேட்டு காந்தளுக்கு நேத்து அவன் கொடுத்த சூடான முத்தம் நினைவிற்கு வர…
அவள் முகம் தக்காளி பழம் போல் சிவந்துவிட்டது . அவன் முகத்தை பார்க்காமல் தன் தலையை தாழ்த்திக் கொண்டவள் என் முத்தம் விற்பனைக்கு இல்லை என்றாள்.
“நானும் அதை விலைக்கு வாங்க வில்லையே” என்றான் அவன் சிரித்துக் கொண்டே .
அவனை நிமிர்ந்து பார்த்தவள். “அப்போ உங்க பணம் என் முத்தத்திற்குன்னு சொன்னிங்க அதுக்கு என்ன அர்த்தம்” என்று கேட்க தோன்றியது அவளுக்கு.
ஆனால் அதை கேட்காமல் “ப்ளீஸ் தயவு செய்து உங்க அக்கௌன்ட் நம்பர் குடுங்க இந்த பணத்தை நீங்க வாங்கிக்கோங்”க என்றாள் மிகவும் தன்மையாக .
அவளை நெருங்கி வந்தவன் அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை மிகவும் நெருக்கமாக கொண்டு வந்து. “இந்த பணத்தை நீ கண்டிப்பா எனக்கு திருப்பி கொடுத்து தான் ஆகணுமா?” என்று கேட்டான் .
அவள் முகத்திற்கு நேராக அவன் மூச்சுக்காற்று உரச தன் தலையை பின்னோக்கி சாய்ந்தபடி இழுத்துக் கொண்டவள் கண்டிப்பா” இந்த பணத்தை நான் உங்களுக்கு கொடுத்து தான் ஆகணும். இது என்னோட பணம் கிடையாது. நான் யார்கிட்டயும் இலவசமா பணம் வாங்குறது இல்லை” என்றாள் விழிகள் படபடக்க .
‘ஹே boo!! நானும் நேற்றே சொன்னே இந்த பணம் இலவசம் இல்லை உன் முத்தத்திற்கு” என்றான்.
“Boo!!!” என்று கேள்வியாக காந்தள் அவனை பார்க்க…
“என்ன பாக்குற உன்னை பார்த்ததும் எனக்கு அப்படி தான் கூப்பிட தோணுது” என்று அழகாக சிரித்தான்.
அவன் சிரிப்பில் தடுமாறியவள் “என்… என்.. முத்தம் நான் யாருக்கும் விற்பதற்கு இல்லை. இ.. இது… தப்பு… நீ… நீஙக இப்போ… என்.. என் முத்… முத்தத்தை விலைக்கு வாங்கலேன்னு சொன்னிங்க.. அப்பறோம் இந்த பணம் எனக்கு எதுக்கு வேண்டாம்” என்று மீண்டும் மருத்து அவன் வங்கி கணக்கை கேட்டாள்.
“நான் கொடுத்த பணத்தை திரும்பி வாங்குற எண்ணம் எனக்கு இல்ல” என்றவன்.
“ வேணும்னா இப்படி செய்யலாமா?” என்றான் .
தன் அருகில் நின்றிருந்தவனிடம் இருந்து மேலும் விலகி நின்ற காந்தள்.
“என்ன சொல்லுங்க” என்றாள் ஆர்வமாக அந்த பணத்தை திருப்பி கொடுக்கும் முயற்சியில்
“ஒன்னும் இல்ல நான் கொடுத்த முத்தத்தை நீ எனக்கு திருப்பிக் கொடுத்துட்டா கணக்கு சரியா போயிடும். நீ இந்த பணத்தை எனக்கு கொடுக்க வேண்டியதில்லை” என்றான் கண்கள் மின்ன அவளைப் பார்த்து .
காந்தள் அதிர்ச்சியாக “என்ன!!” என்று அவனை பார்க்க …
அடுத்து என்ன நடக்க போகிறது என்று காந்தள் உணரும் முன்பாக அவள் எதிரே நின்றிருந்தவனின் கை அவள் இடையே தழுவி தன்னோடு இழுத்து நிறுத்தியது.
அவளை முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கண்டு ரசித்தவன் அவளை விழிகளை கண்டு கிறக்கமானவன் குனிந்து அவள் இதழில் ஆழமாக முத்தமிட தொடங்கினான் .
இதை எதிர்பாராதவள் இமைக்க மறந்து தனக்கு முத்தமிட்டு கொண்டிருப்பவனின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க… அவனோ கண்கள் மூடி ஆத்மார்த்தமாக அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் .
அப்படியே பார்வையை தன்னைச் சுற்றி சுழல விட்டாள் காந்தள். நல்ல வேலையாக ஆபிஸ் முடிந்து அனைவரும் சென்று விட்ட நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லை அவளும் அவனும் மட்டுமே அங்கு இருந்தனர் .
அவனிடமிருந்து தன்னை விளக்கிக் கொள்ள காந்தள் முயன்றாலும் அவள் மனம் அவன் முத்தத்திற்கு இசைந்து போவது போல அவள் என்ன ஓட்டத்தை தடுத்திருந்தது .
அவள் இதழில் உள்ளே நுழைவதற்காக தன் தடித்த நாவால் அவள் உதட்டை ஈரம் செய்து வருடினான். அவன் செயலில் சட்டென அவள் உணர்ச்சிகளை தூண்டிவிட அவளையும் அறியாமல் தன் வாயை லேசாக திறக்கவும் இதுதான் சமயம் என்று அவள் உதடு மொத்தமும் தன் உதட்டிற்குள் இழுத்துக் கொண்டு அவள் வாய்க்குள் தன் நாவை சுழற்றி அவளுக்கு முத்தம் வைத்தான் .
அவன் செய்த செயலில் காந்தளையும் அறியாமல் லேசாக முனகினாள்.
நீண்ட நேர முத்தத்திற்கு பின்பு அவள் உதட்டை ஒரு வழியாக்கி விட்டு காந்தளிடம் இருந்து பிரிந்து நின்றவன். அவள் சிவந்து வீங்கி இருந்த உதட்டை பார்த்து தன் கட்டை விரலால் அவளை உதட்டை வருடிக்கொடுத்தவன்.
“இப்போ கணக்கு சரியா போயிடுச்சு நீ அந்த பணத்தை எனக்கு திரும்ப கொடுக்க வேண்டியது இல்லை” என்றான் ஈரமான தன் உதட்டை துடைத்துக் கொண்டே.
காந்தளும் புரங்கையால் தன் உதட்டை துடைத்தவள். “இது நியாயம் இல்ல எந்த ஊர்ல பணத்தை கொடுத்து முத்தத்தை விலைக்கு வாங்குறாங்க. நீங்க செய்யறது சரியில்ல பணத்தை வைத்து எது வேணும்னாலும் சாதிக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? இப்படி என்னோட சம்மதம் இல்லாம அத்து மீறி எனக்கு முத்தம் கொடுப்பது நியாயமா?” என்றாள் சற்று கோபமாக .
அவள் பேசியதில் அவன் கோபம் அடைவான் என்று காந்தள் எதிர்பார்க்க… ஆனால் அவனோ அதற்கு மாறாக “நீ என்னோட முத்தத்தை அனுபவிச்சத நான் கவனிச்சேன். அப்படியின்னா உனக்கு என் முத்தத்தில் விருப்பம் இருக்குன்னு நான் நினைச்சது சரி தானே” என்றான் அவளை ஆர்வமாக பார்த்து சிரித்துக் கொண்டே .
காந்தளுக்கு தன்னையே அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவன் முத்தத்திற்கு கட்டுப்பட்டு அவன் கைக்குள் இருந்தவள் சிறிதும் விலக முயற்சிக்காமல் நின்று இருப்பதை அவன் சுட்டிக்காட்டி சொன்னபோது அவளுக்கு எங்கேயாவது தன்னை ஒளிந்து கொள்ள வேண்டும் போல தோன்றியது .
அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் “அது… அது… அப்படி இல்லை” என்று தலையை மருப்பாக அசைத்தாள்.
அவள் அருகில் மீண்டும் நெருங்கி வந்தவன். “என் முத்தத்திற்க்கு நீ விருப்பப்பட்டதை நான் நிரூபிக்கட்டுமா” என்று காந்தளை நோக்கி நெருங்கி வந்தான்.
அவன் பின்னால் இருந்து ஒரு அழகிய பெண்ணின் குரல் நீங்க இங்கதான் இருக்கீங்களா என கேட்டுக் கொண்டே அவனை நோக்கி வந்தது .
அவன் உயரத்திற்கு அவன் பின்னால் வந்த பெண் காந்தளுக்கு தெரியவில்லை. அவனை விட்டு தள்ளி நின்றவள் அவன் பின்னால் வந்து கொண்டிருந்த பெண்ணை பார்க்க…
மிகவும் அழகான நேர்த்தியான உடை அணிந்த ஒரு பெண் பின் ஹீல்ஸ் அணிந்து ஒய்யாரமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.
அவனிடம் வந்து “மிஸ்டர் கேசவன் உங்களுக்காக காத்திருக்கிறார் போகலாமா” என்றால் அந்த பெண் .
“ஓ சாரி லூசி நான் மறந்துட்டேன் போகலாம்” என்றவன் காந்தளை திரும்பியும் பார்க்காமல் அந்த பெண்ணோடு கிளம்பி விட்டான் .
அவளோடு மிகவும் நெருக்கமாக அவன் பேசிக்கொண்டு செல்வதை பார்த்தவள். அந்த பெண் அவனுடைய காதலியாக இருக்குமோ என தோன்றியது அவளுக்கு. அந்த அளவிற்கு இருவரும் மிகவும் அன்னியோன்யமாகவும் சகஜமாகவும் பேசிக்கொண்டு இருந்தார்கள் .
“ச்சே … அவன் யார் கூட கிளோசா பேசினா எனக்கு என்ன வந்தது. இப்பவும் அக்கௌன்ட் நம்பர வாங்க மறந்துட்டேனே அவன் பேர கூட கேட்க மறந்துவிட்டேன்” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள்.
தனக்கு முதுகு காட்டி சென்று கொண்டிருந்தவனை சிறிது நேரம் நின்று வெறித்து கொண்டு இருந்தவள் அங்கிருந்து கிளம்பினாள் .
வீட்டிற்க்கு வந்தவள் சித்ராவிடமும், பத்மாவிடமும் தான் இன்று இன்டெர்வியூவை நன்றாக செய்திருப்பதாக கூறி அவர்களை சந்தோசப்படுத்தினாள்.
அன்று இரவு மூவரும் பேசி சிரித்து சந்தோசமாக இருந்தினர்.
இரண்டு நாளில் காந்தளின் இன்டெர்வியூ குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். அதை ஒரு புறம் எதிர்பார்த்து காத்திருந்தாலும். வழக்கமான அவளை பார்ட் டைம் வேலையையும், தன் அம்மா ஹோட்டலில் அவருக்கு உதவியாக என்று இரண்டு னால் கடந்துவிட்டது.
இன்று காந்தளுக்கு பெயர் தெரியாத எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அதை அவசரமாக அட்டென்ட் செய்து காதில் வைக்க…
மறுமுனையில் “ஹலோ இது மிஸ் காந்தளுடைய எண்ணா?” என ஒரு பெண் மிகவும் தன்மையான குரலில் பேசினாள்.
“ஆமாம் ,நான் காந்தள் தான் பேசுறேன்” என்றேன் நான்.
“Congratulations மிஸ் காந்தள் சில்வர் லைன் ஸ்டூடியோவில் விளம்பர பிரிவில் உங்களை வேலைக்கு நியமித்து உள்ளோம்” என்று சொன்னதை கேட்டு காந்தளுக்கு தலை கால் புரியவில்லை.
தன்னிடம் பேசிய பெண்ணிடம் நன்றி சொல்லிவிட்டு போனை வைத்தவள் தன் அம்மாவிடமும் அத்தை இடமும் தனக்கு சில்வர் லைன் ஸ்டுடியோவில் வேலை கிடைத்த விஷயத்தை சொல்லி மகிழ்ச்சி அடைந்தாள்
