News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 38

by Layas Tamil Novel
185 views
A+A-
Reset

வெறியன் 38

“என்னங்க இது இவ்ளோ சீக்கிரம் எங்க கிளம்ப சொல்றிங்க என்னை” என்று சேலையை காட்டிக்கொண்டே கண்ணாடி ஊடே தெரிந்த ஐராவதனை பார்த்தபடி கேட்டாள் பனிமதி.

“சொல்றேன் கிளம்பு முதல்ல.. ” என்று இடுப்பில் இருந்த டவலை சரி செய்தவன் தலையை துவட்டிக்கொண்டே பேசினான்.

“கிளம்பிட்டு தானே இருக்கேன். எங்கேன்னு சொல்லுங்க. என்னை சீக்கிரம் கிளம்ப சொல்லிட்டு நீங்க தான் இன்னிக்கு லேட்” என்று சிரித்தாள்.

“வெளிய கிளம்ப சொன்னா எப்பவும் பொண்ணுங்க தானே லேட் பண்ணுவாங்க. அதனால தான் முதல்ல உன்னைக் கிளம்ப சொன்னேன். எனக்கு ரெடியாக எவ்ளோ நேரம் எடுக்கப்போகுது” என்றபடி ஈரத்துண்டை ஹேங்கரில் கொண்டு போய் காயப்போட்டான்.

“அத்தை உங்களை வளர்த்த விதம் சரி இல்ல.. ” என்றாள்.

பேண்ட்டை போட்டுக்கொண்டே அவளை புரியாமல் பார்த்தான்.

“ம்ம்ம்.. போலீஸ்க்காரருக்கு புரியலையா ” என்று அவன் அருகே வந்தவள் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகப் போட்டுக்கொண்டாள்.

“ஏன் நான் என்ன பண்ணினேன்” என்றான் அவளை அழுத்தமாக பார்த்தபடி.

“ம்ம்.. எல்லா புருசனும் பொண்டாட்டி சொல் பேச்சு கேக்க மாட்டான். அவ எதை வேணாம்னு சொல்றாளோ அதை செய்துட்டு தான் மறுவேலை பாப்பாங்க.. அது இல்லாம குளிச்சு துவட்டின ஈரத் துண்டை கொண்டு போய் சமத்தா காயப்  போடுறிங்க. ஸ்டேஷன்ல் இருந்து வந்ததும் ஷூவை சரியாக் கழட்டி ஹேங்கரில் போடறீங்க. அழுக்குத் துணியை அங்க இங்க போடாம ட்ரெஸ்ஸை சரியா அழுக்கு கூடையில் போடறீங்க.. எப்பவும் பெர்பெக்ட்டா இருக்கீங்க… இப்படி எதுவுமே உங்களை சொல்ல முடியாத படிக்கு அத்தை வளர்த்திருக்காங்க” என்றாள்,

“அது உனக்கு நல்லது தானே , இதுக்கா என் அம்மா வளர்ப்பு சரி இல்லேன்னு சொல்ற நீ.. ” என்றான் அவள் தோள்களில் இருந்து தன் கைகளை விலக்கியபடி.

“ம்ப்ச்… இருங்க என்ன அவசரம் நான் இன்னும் சொல்லி முடிக்கல..” என்று அவனை இழுத்து அணைத்துக்கொண்டவள். 

“இப்படி எல்லாம் விதத்துலையும் நீங்க சரியா இருந்தா எனக்கு உங்க கூட மத்த புருஷன் பொண்டாட்டி போல சண்டை போட வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது.” என்றாள்.

எல்லா மனைவிகளும் தங்கள் புருசன்மார்களுடன் சண்டை இல்லாமல் , பிரச்சனை வராமல் இருக்க வேண்டும், அவருடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தானே சொல்வார்கள். இவள் என்ன வித்தியாசமாக இருக்கிறாள் என்று ஆச்சர்யமாக ஐராவதன் பார்க்க..

“என்ன பாக்கறீங்க.. என்ன டா இவ தினுசா யோசிக்குரான்னு தானே நினைக்குறிங்க” என்று அவன் இதழில் மென்மையாக பட்டும் படாமல் முத்தம் வைத்தபடி கேட்டாள்.

ஐராவதனும் அவள் முத்தத்தை உணர்ந்தபடி அவளைப் பார்த்தான்.

“ம்ம்ம் இப்படி சமத்துக்குட்டியாட்டம் புருஷன் இருக்க அப்போ எனக்கு சண்டை போட்டு பொழுது போக்க வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது, அப்படி சண்டை போட்டா நமக்குள்ள சின்ன சண்டை வரும். அப்போ ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து யாராவது வந்து ஒருத்தரை சமாதானம் பண்ணுவோம். சண்டை போடுற சமயத்துல ஒருத்தரை ஒருத்தர் மிஸ் பண்ணுவோம். இல்லேன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாம முறுக்கிடுப் போவோம். அதுக்கு அப்பறோம் சீண்டி , மறுபடி ஏன் பேசலைன்னு மாறி மாறி ஒருத்தர் மேல ஒருத்தர் குற்றம் சுமத்தி ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டிப்பிடிச்சு சமாதானம் பண்ணியே அப்பறோம் அதுக்கு அதுக்கு ஒரு கிஸ்.. இதுக்கு ஒரு கிஸ்.. அதுக்கு அப்பறோம்னு நிறைய செய்திருப்போம் ரெண்டு பேரும்” என்று மூச்சுவிடாமல் பேசியவள் மீண்டும் எம்பி அவன் இதழில் முத்தம் பதித்துவிட்டு விலகியவள்.

“ஆனா அந்த மாதிரி எல்லாம் நமக்குள்ள எதுவுமே நடக்கலையே.. இப்போ சொல்லுங்க.. அத்தை உங்களை சரியா தானே வளர்கள.. அதனால தான் நீங்க மிஸ்டர் பெர்பெக்ட்டா இருக்கீங்க..” என்றாள் ஏக்கமாக.

அவளையே விழி இமைக்காமல் பார்த்திருந்தவன் தலை சீவி தலைக்கு மல்லிகைப்பு பூச்சரத்தை வைப்பவள் பின்னே போய் நின்றவன், அவள் கையைப் பற்றி அந்த மல்லிகை சரத்தை வாங்கி அதை அவள் தலையில் சூடியவன் பனிமதியின் தோள் பற்றி தன் பக்கம் திரும்பியவன் “சீக்கிரமே உன்னோட ஆசை எல்லாம் நிறைவேத்துறேன் சரியா.. இப்போ கிளம்பலாமா?” என்றான்.

“ஹை! அப்படியாங்க… அப்போ சூப்பர் சூப்பர்.. ” என்று குதூகலமாக கையை தட்டியவள் வேகமாகக் கிளம்பி அவனுடன் கிளம்பி இருந்தாள்.  

இங்கே முந்தின நாள் நிகழ்வுகளை தன் மனதில் அசைபோட்டபடி இருந்தான் அக்னி தன் அறையில்.

மாலை பவளமல்லி சொன்னது போல நேரமே அவள் காலேஜ்ஜிற்கே சென்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். வந்ததும் இருவரும் குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்ப ஆயத்தமாகினர்.

அழகான மஞ்சள் வண்ண பாவாடை தாவணியில் மண் மனம் மாறாமல் வந்து நின்ற பவளமல்லியை பார்த்தும் உறைந்து போனான். ஒப்பனை இல்லாத அப்பழுக்கற்ற சருமத்தோடு புருவங்களுக்கு இடையில் மின்னிய பிங்க் நிறப் போட்டும் அதன் மேலே லேசாக கீற்று இருந்த வீபூதியுமாக வந்தவளை விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வெட்கம், கூச்சமுமாக வந்து நின்ற மல்லி “சார் ஒரு நிமிஷம் பூஜைக்கு கொடுக்க தேங்காய் பழம் எடுத்து வெச்சிருக்கேன் , அதை எடுத்துட்டு வந்துறேன்” என்று கிச்சனுக்கு சென்றாள்.

அவள் அழகில் மயங்கி நின்றவனோ சரி என்று தலையை ஆடிக்கொண்டிருந்தான் இன்னமும். அவள் பின்னழகில் மேலும் திகைத்து அல்லவா போனான். தலைக்கு குளித்தில் பாதி காய்ந்தும் ,காயாமலும் அலைபாய்ந்த அவள் கூந்தல் முதுகை முற்றிலும் மறைத்திருக்க… வழக்கம் போல தோட்டத்தில் இருந்த மல்லியை பறித்து சாரமாக இல்லாமல் குட்டியாக கட்டி அதை கூந்தலில் சூடி இருக்க.. அவள் சென்றும் இன்னமும் அந்த மல்லியின் வாசமும், அவன் மல்லியின் வாசமும் அவன் சுவாசத்தை முற்றுகையிட்டு.. மூளையை செயல் இழக்க செய்திருந்தது.

பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் அக்னி ஒரு மாதிரி உறைந்து நிற்பதை புரியாமல் பார்த்தாள். அதற்கு காரணமே தானும், தன் எழில் கொஞ்சும் அழகும் தான் என்று இந்த குட்டி பெண்ணுக்குத் தெரியவில்லை போலும்.

அவன் முன் வந்தவள் “சார்!.. ” என்றாள் .

“ம்ம்..” என்று சத்தம் மட்டும் தான் அவனிடம் வந்தது . அவன் பார்வை மொத்தமும் அவளில் உறைந்து தான் இருந்தது.

“சார்ர்ர்….”என்று அவன் முகத்திற்கு முன்பாக கையை ஆட்டி அவனை சத்தமாக அழைக்க..

“ஹா…! என்ன மல்லி.” என்றான் அவசரமாக.

“ஏன் சார் ஒரு மாதிரி நிக்குறீங்க.. ” என்றாள்.

“ம்ம்.. இவ்ளோ அழகா இருந்தா ஓரூ மாதிரி ஆகாம என்ன டி பண்றது . நீ மட்டும் என் லவ்வுக்கு பச்சைக் கொடி காட்டு.. அப்பறோம் நான் கொடுக்குற முத்தத்துல நீதான் பிரீஸ் ஆகப்போற..” என்று நினைத்தவன். “உன் அழகுல மயங்கி அபப்டியே நின்னுட்டேன் மல்லி.. “என்றான்.

அந்த வார்த்தைகளில் அவள் கன்னங்கள் இரண்டும் குப்பென்று சிவந்துவிட்டது.

சட்டென அவனை நேருக்கு நீராக பார்க்க முடியாமல் பார்வையை தாழ்த்திக்கொண்டவள் “போலாமா சார்..” என்றாள்.

“மல்லி கோவிலுக்கு போய் தான் முடிவை சொல்லனுமா.. இப்பவே சொலிட்டேன் . என்னால சஸ்பென்ஸை தாங்க முடியல..” என்று ஏக்கமும், எதிர்பார்ப்புமாக அவளை பார்த்தான்.

“கோவில்ல வெச்சே சொல்றேனே..” என்றாள் கூச்சத்தோடு.

இதற்கு மேல் என்ன கேட்டாலும் அவளிடம் இருந்து பதில் வராது என்று புறிந்து கொண்டவன். தலையை அழுந்தக்கோதி தன்னை சமன் செய்தவள் “போலாம்” என்று  முன்னே செல்ல.. அவன் பின்னே சென்றாள் மல்லி.

உள்ளுக்குள் ஒருவித பரவசம் சந்தோசம் எல்லாமும் இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் தான் யார் என்ற உண்மையை சொல்லாமல் மறைக்கிறோமோ என்று அழுத்தமாக இருந்தது.

“பேசாம மாமாகிட்டே உண்மையை சொல்லிரலாமா .. அதுக்கு அப்பறோம் அவரை பிடிச்சிருக்குன்னு சொலிக்கலாமா? ” என்று யோசித்தாள்.

“ஒரு வேளை உண்மை தெரிஞ்சதும் அவன் உன்னை வேணாம்னு சொல்லிட்டா என்ன டி பண்ணுவ.. உன் அம்மாவோட ஆசை என்ன அவர் அண்ணாவோட ரெண்டு பசங்களையும் அவங்க ரெண்டு பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கணும் . விட்டுப்போன சொந்தம் எல்லாம் உன் அக்காவும், நீயுமா தான் திரும்ப சேர்த்து வெக்கப்போறீங்கன்னு நம்பிக்கையில்லா இருக்காங்க. அதை கெடுக்கப் போறியா நீ. 

நீயும் அக்னியும் காதலை சொல்லி கல்யாணம் பண்ணினதும் தான் அவ புருஷன்கிட்ட உண்மையை சொல்லலாம்னு அங்க ஒருத்தி காத்துட்டு இருக்கா அது மறந்துபோயிருச்சா உனக்கு.. 

முதல்ல உன் மாமன்கிட்டே உன் காதலை சொல்லி அவனை சீக்கிரம் கல்யாணம் பண்ற வழியைப் பாரு. அதுக்கு அப்பறோம் உண்மையை சொல்லிக்கலாம் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் தன் காதலை சொல்ல அவனோடு கோவிலுக்கு சென்றாள்.

இங்கே கல்லூரி முடித்து வந்ததிலிருந்து தேன்நல்லியின்  முகமே சரியில்லை எதையோ பார்த்து அதிர்ந்தவளாக ஒரு மாதிரி பிட்டு பிடித்துக் கொள் போலவே தெரிந்து கொண்டிருந்தாள்.

சதாசிவத்தை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் மூவரும் சென்று இருக்க.. அப்போதும் கூட தேனல்லி அவ்வளவாக தங்களிடம் எதுவும் பேசாமல் தீவிர சிந்தனையில்  இருப்பதை பார்த்தபடி அவள் அருகே அமர்ந்திருந்தார் மஞ்சுளா                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

 ஏய் என்னடி ஆச்சு நானும் பார்த்துட்டு இருக்கேன் காலேஜ் முடிச்சு வந்ததுல இருந்து பேய் அரஞ்சவ   மாதிரியே இருக்க..  காலேஜ்ல எதுவும் பிரச்சனையா? என்றார்.

அவர் அதட்டலில் திரும்பி அவரைப் பார்த்தவள் அம்மாஆ!.. என்றவள் குரல் சற்று கரகரப்பாக இருந்தது.

 ஏய் அல்லி! என்னடி ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு? யாரும் எதுவும் உன்ன சொன்னாங்களா? புது காலேஜ்னால அங்க எதுவும் உனக்கு சரியா ஒத்துப் போகலையா? என்றார் பதட்டமும் கவலையுமாக.

 என்னமா ஆச்சு என்ன பிரச்சினைனாலும் சொல்லு என்றார் சதாசிவமும்.

 இருவரும் பதட்டப்படுவதை பார்த்ததும்.  காலேஜில் நடந்த விஷயத்தை இவர்களிடம் சொல்லாமல் மறைக்க முடிவு செய்து செய்தவள். ஹா.. ஐயோ அப்பா அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு புது பிரெண்ட்ஸ் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க எந்த பிரச்சினையும் இல்லை எனக்கு என்றாள்.

உண்மைய தான் சொல்றியாடி இல்ல நாங்க கேட்கிறோம்னு சமாளிக்கிறியா என்றார் மஞ்சுளா. மகளின் குணத்தை அறிந்து உள்ளுக்குள்ளேயே வைத்து கஷ்டப்படுபவள் ஆயிற்றே அவள் எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவள் கிடையாது என்பதை அவர் நன்கு அறிவார்.

 ஐயோ அம்மா சத்தியமா ஒன்னும் இல்ல அப்பாவுக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோமே அங்க அட்மிட் பண்ண பிறகு அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் நல்லா கொடுப்பாங்களா? என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சிட்டே இருந்தேன் அதான் என் முகம் ஒரு மாதிரி இருக்கு வேற எதுவும் இல்லை என்றாள்.

அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் தானடி பண்ண போறோம் அவருக்கு இருக்கிற ஆஸ்துமா பிரச்சனை, உடம்பு வீக்கா இருக்கிறது இது எல்லாம் தானே சரி பண்ணப் போறோம். அவர் சீக்கிரமா தேறிடுவாரு நீ கண்டத யோசிச்சு மனசப் போட்டு குழப்பிக்காத என்று மகளுக்கு ஆறுதல் சொன்னவர்.     

 என்னை விட உங்க மூணு பொண்ணுங்களுக்கும் தான் உங்க மேல ரொம்ப அக்கறை என்று சிலாகித்துக் கொண்டார் மஞ்சுளா.

என்னதான் என் பொண்ணுகளுக்கு என் மேல அக்கறை இருந்தாலும், நீ என் மேல வச்சிருக்கிற அன்பும் அக்கறையும் போல வருமாடி என்றார் சதாசிவம்.

 ஆரம்பிச்சுட்டீங்களா இப்பவே உங்க ரொமான்ஸை கடவுளே இவங்க கிட்ட இருந்து என்ன காப்பாத்து என்று விளையாட்டாக சொன்னவள் தொடையில் நறுக்கென்று கிள்ளிவைத்த மஞ்சுளா கண்ணு வைக்காதடி என்றார்.

சரிம்மா கண்ணும் வைக்கல.. காதும் வைக்கல.. போதுமா நான் உங்க பக்கமே நான் திரும்பல என்று வெளியில் வேடிக்கை பார்ப்பது போல தன் முகத்தை திருப்பிக் கொண்டவள். நேற்று காலேஜில் சாணக்கியன் அவளிடம் அதிரடியாக நடந்து கொண்டதை நினைத்து  அசைபோடத் துவங்கியிருந்தாள்.                                                                                                                                                                    

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.