News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 6

by Layas Tamil Novel
599 views
A+A-
Reset

வென்பனி 6

தன் உயரதிகாரி முன்  ஷல்லுய்யுட்  அடித்து நின்றான் ஐரா .

அவனை ஏறெடுத்துப் பார்த்தவர் “எங்க போனாலும் பிரச்னையை இழுத்துட்டு தான் வருவேன்னு வேண்டுதல் இருக்கா உனக்கு” என்றார் டிஜிபி சிவனாண்டி

“பிரச்சனையா? நான் எதுவும் பண்ணலையே சார்” என்றான் எதுவும் தெரியாதவன் போல.

“டேய் நடிக்காத டா, ஒரு SP போஸ்டிங்கில இருக்கேன்னு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம அந்த முத்துவடுகன் பையன் மேல கைய வெச்சிருக்க அவன் இப்போ சீரியஸ்னு சொல்லி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க.இதுக்கு என்ன சொல்ற இப்போ” என்றார் அவர்.

“சார் நான் அடிச்சது ஒன்னும் நல்லவன் இல்லையே , என் முன்னடியே ஒரு பொண்ணை விருப்பம் இல்லாம அடைய பாக்குறான், அப்படிப் பட்டவனை எல்லாம் அடிச்சதோட விட்டேன்னு சந்தோசப்படுங்க ” என்றான் விறைப்பாக நின்று கொண்டு.

“ஓஹோ! சட்டத்தை உங்க கையில் எடுத்துப்பீங்களா நீங்க, அந்த முத்துவடுகனுக்கு சொசைட்டியில் எவ்ளோ பெரிய மரியாதையை இருக்கு தெரியுமா உனக்கு. அவர் நினைச்சா உன்னை இந்த வேலையில இருந்தே தூக்கிட முடியும், நான் சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உன் மேல காம்ப்லன்ட் கொடுக்காம இருக்கார்” என்றார்.

அவரை பார்த்து நக்கலாக சிரித்தவன் “அவன் ஒரு கேடு கெட்டவன், அவன் புள்ள ஒரு அயோக்கியன் அவனுங்க ரெண்டு பெருகும் வக்காலத்து வாங்குற நீங்க… ” என்று சொல்ல வந்த வார்ததையை முழுதாகக் கூறாமல் நிறுத்தியவன்.

“எனக்கு எந்த பயமும் இல்ல, யாருக்கும் நான் அடங்கிப்போகணும்னு எந்த அவசியமும் இல்ல. என் மேல தப்பு இருந்த நீங்க ஆக்ஷ்ன் எடுத்துக்கோங்க சார் ” என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு.

அவனை ஏகத்துக்கும் முறைத்த சிவனாண்டி “இவ்ளோ பட்டும் உனக்கு புத்தியே வரல இல்ல.. ” என்றார்.

“எனக்கு எப்பவோ புத்தி வந்திருச்சு சார் அதனால தான் என் குடும்பத்தை கூட வேணாம்னு ஒதுக்கி வெச்சிட்டு என்னோட கடமையை செய்றேன் . உங்களை மாதிரியா…” என்று அவரை ஒரு புழுவைப் போலப் பார்த்தான்.

“டேய் ஐரா , நானும் பொறுமையா உன்கிட்டே பேசிட்டு இருக்கேன் நீ என்ன டா இன்னமும் பழசையே பேசிட்டு இருக்க.. ” ன்று எழுந்து வந்து அவன் தோளில் கையைப் போட்டார்.

வர கையை தட்டி விட்டவன் “சார், இங்க நான் SP நீங்க என்னோட சீனியர் அவ்ளோதான் அதுக்கு மேல நமக்குள்ள எந்த உறவும் இல்ல.. ” என்றவன் அவருக்கு சல்லியுட் அடித்துவிட்டு அந்த அறையை விட்டு விருட்டென வெளியேறி இருந்தான்

“என்னடா ஒரு டிஜிபி இவ்ளோ தூரம் இறங்கி வந்து நம்ம ஹீரோ கிட்டே பேசியும் அவன் மொரண்டுபிடிச்சிட்டு போறானேன்னு தானே யோசிக்கிறீங்க. காரணம் இருக்குங்க. டிஜிபி சிவனாண்டி தான் ஐராவதனோட அப்பா. ஐரா எப்போ போலீஸ் ஆஃபீஸரா பதவிக்கு வாதநோ அப்போ இருந்தே சிவனாண்டிக்கு பிரச்சனை தான். சிவனாண்டி பெரிய தலைகளுக்கு ஜால்ரா போட்டு பழகிட்டார். நம்ம ஆளு அப்படியா அவன் அம்மா போல நேர்மையானவன் . அவன் அம்மா சௌந்தர்யா ரொம்ப நல்லவங்க, தங்கமானவங்க, புருஷன் பண்ற அட்டூலியத்தை எல்லாம் பாத்துட்டு தன் மகன் அந்த மாதிரி வரக்கூடாதுன்னு சொல்லி சொல்லி வளர்ந்திருக்காங்க. அப்போ சிவனாண்டி குணத்துல அவர் வீட்ல யாரும் இல்லேன்னு யோசிக்காதிங்க அவரோட ரெண்டாவது பையன் இருக்கான் பேரு அக்னிவரதன் அண்ணனுக்கு அப்டியே அப்போசிட் எதுலன்னு தானே கேக்குறீங்க பொண்ணுங்க விசயத்துல தான். ஐரா பொண்ணுங்க விசயத்துல ரொம்ப தங்கமானவன்னா.. இந்த அக்னி பொண்ணுங்க விசயத்துல வேற மாதிரி.. . அவனை பத்தி போகப் போக பாக்கலாம்.

சிவனாண்டியை பார்த்துட்டு வந்தவனுக்கு இன்னும் கோபம் தீரல ..

“இந்த ஆள் மாதிரியே என்னையும் நினைச்சுட்டானா ? இவன் கூழைக்கும்பிடு போட்டா நானும் அவனை மாதிரியே இருக்கணும்னு இருக்கா ” என்று ஜீப்பில் அமர்ந்திருந்தவர் சிகெரேட்டை எடுத்து பற்றவைத்து ஊதத்துவங்கினான்.

அதை கண்டதும் சிவா அவனிடம் வந்து “சார் , இந்த கேம்பஸ்க்குள்ள சிகெரெட் குடிக்க கூடாது.. ” என்று சங்கடமாக அவனைப் பார்க்க.

“என்கிட்டே ரூல்ஸ் எல்லாம் பேசி என்னாகப்போகுது சிவா. இங்க இருகவானுங்க எல்லாம் ரொம்ப யோக்கியமா சொல்லு. ஒவ்வொருத்தணும் கடைஞ்சு எடுத்த கழிசடைங்க” என்றான்.

“உன் அப்பாவை மட்டும் திட்டிக்கோ டா ஐரா. அவ்னல்கூட சேர்த்து வெச்சு எங்களையும் ஏன் வறுத்து எடுக்குற.. ” என்று அங்கு வந்தார் மார்த்தாண்டம் dsp ஆக தன் மகன் சிவனாண்டிக்கு கீழ் வேலை செய்கிறார்.

“வந்துட்டியா, எங்க போயிருந்த இவ்ளோ நேரம் நான் வரும்போது இல்லையே ” என்றபடி சிகெரெட்டை அவசரமாக அனைத்துப்போட்டான் ஐரா.

“ஒரு முக்கியமான பைலை டிஜிபி கேட்டிருந்தார் அதை எடுக்க போயிருந்தேன் டா.. ” என்றார்.

“மார்த்தாண்டம் உன் பையனை மட்டும் டிஜிபி ன்னு மரியாதையா சொல்ற, நானும் போலீஸ் தான்யா ” என்று தன் பேட்ஜை தூக்கி காண்பித்தான்.

“டேய் அவன் வீட்ல தான் எனக்கு பையன். இந்த காம்பௌண்டுக்குள்ள வந்துட்டா அவன் எனக்கு ஹையர் ஆஃபீஸர், ஆனா நீ என்னோட பேரன் டா.. நீ எவ்ளோ உயரத்துக்கு போனாலும் எனக்கு நீ சின்ன பையன் தான் ” என்று அவன் தோளில் கைபோட்டு அழைத்தார்,

அவனும் இறங்கி மார்த்தாண்டத்துடன் சென்றவன் “சரி அதெல்லாம் விடு அம்மா எப்படி இருக்காங்க ” என்றான்.

“இன்னமும் பெட்ல தான் டா இருக்கா நீ எப்போ அந்த வீட்டை விட்டு போனியோ அப்போ இருந்தே அவ படுத்த படுக்கை ஆகிட்டா . நீயாச்சும் வந்து அவளை அப்போ அப்போ பார்த்துட்டு போலாம் இல்ல.. உனக்கும் உங்கப்பனுக்கும் தான் ஆகல.. என் மருமக என்ன டா பண்ணுவா பாவம் அவ.. ” என்றார் சௌந்தர்யாவின் நிலையை நினைத்து வருந்தியவராக.

ஐராவிடம் அமைதி .

“இங்க பாரு ஐரா ,உன் கோபம் உங்கப்பனோட போகட்டும் சௌந்தர்யா என்ன டா பாவம் பண்ணினா உங்க மூணு பேருகிட்டேயும் மாட்டிகிட்டு அவதான் கஷ்டப்படுறா. அவளுக்கு மட்டும் உடம்பு சரியா இருந்திருந்தா இந்த நேரத்துக்கு உன்னை காதை பிடிச்சு திருகி அங்க கூப்டு போயிருப்பா” என்றார்.

“என்ன தாத்தா திடீர்ன்னு ரொம்ப எமோஷனலா பேசுற.. நீ இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்லையே.. ” என்று அவரை சந்தேகமாகப் பார்த்தான் ஐரா.

“காரணம் இருக்குடா. எத்தனை நாளைக்கு தான் நானே சமைச்சு சாப்பிடறது. என் மருமகளும் படுத்த படுக்கையாகிட்டா .எனக்கு இருந்த ஒரே பொண்டாட்டி என் சித்ரா அவளையும் உன்கூட கூப்டு போயிட்ட . கடைசி காலத்துலையாச்சு என் பொண்டாட்டி கூட இருக்கணும்னு எனக்கும் ஆசையா இருக்கு டா . அவ கையாள சாப்பிடணும்னு இருக்கு” என்றார்.

“உனக்கு என்ன சித்ரு கையாள சாப்பிடணும் அதானே .. இன்னிக்கு உன் பொண்டாட்டி மீன் குழம்பு வெச்சிருப்பா.. நீ கிளம்பி வந்தா சாப்பிடலாம் ” என்றான்.

“என்ன டா சொல்ற மீன்குழம்பா! ” என்றார் மார்க்கண்டேயன்.

“யோவ் தாத்தா நீ DSP யா இப்படி சோறுன்னு சொன்னதும் வாயைப் பிளக்காத ” என்று அவர் திறந்த வாயை தன் இரு விரல் கொண்டு மூடியவன் “வரியா? இல்லையா?” என்றான்.

“ஒரு 5 நிமிஷம் பொறுடா நான் இதை என் டேபிள்ள வெச்சிட்டு வந்துடறேன்” என்று உள்ளே ஓடினார் .

சிரித்துக்கொண்டே வந்த ஐரா , “இந்த வயசுலயும் பொண்டாட்டின்னா எவ்ளோ ஆசை பாத்தியா டா..” என்று சிவாவின் தோளில் கையைப் போட்டபடி சொன்னான்.

“ஆமா சார் , நீங்க கூட ரெண்டு நாளா இப்படி தான் இருக்கீங்க ” என்றான் சிவா.

“ஆமா சிவா, அவளை பார்த்ததுல இருந்து இங்க ஏதோ பண்ணுது ” என்று தன் இடதுபக்க நெஞ்சை தடவிக்காட்டினான் .

“சீக்கிரமே உங்க மனசுல இருக்கறதை பனிகிட்டே சொல்லிருங்க சார்” என்றான்,

“சொல்லலாம் என்ன அவசரம் . இப்போத்தானே என்கிட்டே வந்திருக்கா பாத்துக்கலாம்” என்றான்.

“டேய் போலாம் டா.. போலாம் ” என்று வந்து ஜீப்பின் பின்னால் ஏறிக்கொள்ள.. சிரித்தபடியே அவரோடு வீட்டிற்கு புறப்பட்டான் ஐரா

இங்கே சமைத்துவைத்துவிட்டு சித்ரு கிழவி வாசலுக்கும், ஹாலுக்குமாக நடந்து கொண்டு இருந்தார்.

சாப்பிட்டு முடித்து தட்டை கழுவி வைத்துவிட்டு  வந்த பனியோ “என்ன பாட்டி ரொமப் நேரமா யாரையோ எதிர்பார்த்தது இருப்பிங்க போல.. ” என்றார்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல புள்ள.. நீ போய் போட்டு சாப்பிடு. நான் சும்மா தான் காலார நடந்துட்டு இருக்கேன்” என்றார்.

“இந்த நேரத்துல நடக்குறிங்களா? ” என்று சிரித்தவள் “வெளியே வராண்டாவுல நடந்தா கூட கொஞ்சம் நல்லா இருக்குமே பாட்டி ” என்றாள்.

அவளை திரும்பி முறைத்தவர் “என் பேரன் உன்னை கடைக்கு கூப்டு போக வந்திருவான் நீ போய் ரெடியாகு ” என்றார்.

“சரிபாட்டி போறேன் ” என்றவள் வாசலில் ஐராவின் ஜீப் சத்தம் கேட்கவும் “சார் வந்துட்டாரு” என்றாள்.

கிழவியும் ஜீப் சத்தம் கேட்டதும் வேகமாக சோபாவில் போய் காலை நீட்டி அமர்ந்து கொண்டார்.

பனி ஜீப்பில் இருந்து இறங்கிய மார்கண்டேயனையும், ஐராவையும் மாறி மாறி பார்த்தபடி வாசலில் நின்று இருந்தாள்.

ஜீப்பை நிறுத்திவிட்டு அவர்கள் பின்னால் சிவாவும் வர..

“என்ன ஐஸ்கட்டி இங்க நிக்குற?” என்றான்.

“இல்ல சும்மா தான் சார் ” என்றவள் அருகில் இருந்த மார்த்தாண்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இது என்னோட தாத்தா ” என்றான் .

அவளும் அவரைப் பார்த்து லேசாக சிரிக்க..

பின்னால் வந்த சிவாவிடம் “யாரு டா இந்த பொண்ணு , இவன் ஐஸ்கட்டின்னு எல்லாம் கூப்பிட்றான்” என்றார் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.

“சித்ரு கிழவிக்கு உங்களுக்கு எப்படியோ, அதே போல தான் சாருக்கும் இந்த பொண்ணும் ” என்று சிரித்தான்.

“ஓஹோ! அப்படிப்போகுதா” என்று நினைத்தவர் அங்கே இவர்கள் வந்தது தெரிந்தும் முகத்தை கூட காட்டாமல் சோபாவில் அமர்ந்து இருந்த சித்ராவை பார்த்தவர். “அடியே பஞ்சவர்னோ.. என்ன டி என் மேல கோபமா?” என்று உள்ளே அவர் ஓட..

“டேய் இன்னிக்கு இவங்க ரொமான்ஸை தாங்க முடியாது ” என்று சிரித்தபடி உள்ளே செல்ல..

பனிக்கு எதுவும் புரியாமல் அவர்கள் பின்னே சென்றாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.