News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்புத் தண்டா காதல் 21

by Sinamika Writes
1.4K views
A+A-
Reset

தப்பு 21 

வீடே ஒரு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. யுகேந்திரனின்  சொன்னதை ஏற்றுக்கொண்டு எந்த தயக்கமும் இன்றி பர்வதம், தன் அண்ணன் மகனின் ஆசைக்காகவும், தன் மீதான அவனது அன்பிற்காகவும் பூவிழியின் வளைகாப்பு ஏற்பாடுகளைத் தன் சொந்த மகளின் விசேஷத்தைப் போலவே முன்னின்று நடத்தத் தொடங்கினார்.

நகரத்தின் முன்னணிப் பட்டுப்புடவைக் கடையின் உரிமையாளருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பர்வதம், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மற்றும் தங்க நகைகளைக் குறிப்பிட்ட சில டிசைன்களின் மாடலைகளை சொல்லி அதை வீட்டிற்கே கொண்டு வர சொன்னார்.. சரியாக மதிய வேளையில், பெரிய பெரிய ஜவுளிப் பெட்டிகளுடன் கடை ஊழியர்கள் வந்து இறங்கினர்.

மதியம் சாப்பிடுவதற்காக வந்தவர்களை போகவிடாமல் வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டார் பர்வதம்.

லிவிங் ரூமில் பெரிய விரிப்பு விரிக்கப்பட்டு, பட்டுப்புடவைகளும், தகதகக்கும் நகைப் பெட்டிகளும் வரிசையாக அடுக்கிடப்பட்டன.

சோபாவில் ஒருபக்கம் ராஜேந்திரனும், கார்த்திகேயனும் ஆபீஸ் பற்றி பேசிக்கொண்டிருக்க.. யுகேந்திரனோ வீல் சேரில் அமர்ந்த படி பூவிழிக்காக வரவழைக்கப்பட்டிருந்த புடவைகளை, நகைகளையும் பார்வையிட்டபடி அமர்ந்து இருந்தான்.

“பூவிழி, சீக்கிரம் வா! இன்னும் என்ன கிச்சேன்ல பண்ணிட்டு இருக்க?  அதான் எல்லாரும் சாப்பிட்டாச்சு இல்ல. இங்க உனக்காக சேலை ,நகை எல்லாம் வர வெச்சிருக்கு,. நீ என்ன சம்மந்தமே இல்லாதது போல வேலை பார்த்துட்டு இருக்க..” என்று அவளை இழுத்து வந்து யுகேந்திரன் அருகே இருக்க வைத்தாள்.

அவளோ தரையில் அமர்ந்தவள் யுகேனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளையே ரசித்துக்கொண்டிருந்தவன் என்ன ? என்ற ரீதியில் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

அவள் பார்வையாலேயே  அனைத்தையும் சுட்டிக்காட்டி இது வேண்டாம் என்றாள்.

அவனோ கண்களை முடித்த திறந்தவன் தலையை உயர்த்தி புடவைகளையும், நகைகளையும் காட்டி பாரு என்றான்.

“ம்ம்.. ம்ம்.. போதும் உனக்கு எந்த கலர் பிடிக்குமோ அதைப் பார்த்து வாங்கு,” என்ற  பர்வதத்தின் அதட்டல் குரலில் sசட்டென நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் பூவிழி.

பார்வதி கம்பீரமாகச் சோபாவில் அமர்ந்து கொண்டு, “அந்தப் பச்சை நிறப் புடவையை எடுங்கப்பா… பூவிழி கலருக்குப் பச்சை ரொம்ப எடுப்பா இருக்கும்,” என்று தன் ஒவ்வொரு புடவையாக எடுத்து விரித்து, அதன் தரத்தைத் தொட்டுப் பார்த்து சொன்னவர்.


“பூவிழி உனக்கு என்ன வேணும்னு பார்த்து சொல்லு. அதுக்கு தானே இங்க கொண்டு வர சொல்லிருக்கேன்” என்றார் அவர்.

பூவிழிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு வரை தன்னைத் தாழ்வாகவும், சுமையாகவும் நினைத்த அதே பர்வதம், இன்று தன்னை உரிமையாக நடத்துவதை அவளால் நம்பமுடியவில்லை. அவளுக்கு இதெல்லாம் புதிது எல்லாமே புதிது.. கைகளைப் பிசைந்தபடி அவள் அமர்ந்து இருக்க..

“நீ இதுக்கு ஆக மாட்ட உனக்கு நானே செலக்ட் பண்றேன் இரு.” என்ற ஆராதனா அங்கே இருந்த புடவைகளை ஒவ்வொன்றாக தேட ஆரம்பித்தவள் இறுதியில்
க ஒரு பவள நிறப் புடவையை எடுத்து  அதை பூவிழியின் மீது போட்டுப் பார்த்தாள். “வாவ் பூவிழி! செமயா இருக்குடி இது. இதை கண்டிப்பா நீ வளைகாப்புக்குக் கட்டியே ஆகணும்,” என்று கண்களில் ஆர்வம் மின்னக் கூறினாள்.

பர்வதமும் அதை ஆமோதிப்பது போலத் தலையசைத்துவிட்டு, “ஆரா சொல்றதும் சரிதான்மா. இந்த நிறம் உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்,” என்றார்.

அவளோ தயக்கத்தோடு யுகேந்திரனைப் பார்க்க.. அவனோ “இதுவே எடுத்துக்கலாம் அத்தை” என்றான்.

“ஏன் டி ம்மா.. இங்க நானும், என் பொன்னும் உனக்காக சேலை பார்த்து எடுத்தா. நீ எங்ககிட்ட பேசாம உன் புருஷன்கிட்ட கண்ணுளையே பேசுறியா ” என்று அவளை கிண்டல் செய்தார்.

“ஹையோ அப்படி எல்லா இல்ல.. “என்று அவசரமாக பதில் சொன்னாள் பூவிழி.

‘ம்ம்.. சரி சரி இருக்கட்டும் ” என்றவர் அடுத்து நகைகளை பார்க்க ஆரம்பித்தார்.

அடுத்து நகைப் பெட்டிகள் திறக்கப்பட்டன. வளைகாப்புக்குத் தேவையான கை வளையல்கள், அரைஞாண் கொடி மற்றும் தங்கச் சங்கிலிகளைப் பர்வதம் எடுத்துப் பூவிழியின் கைகளில் போட்டு அழகு பார்த்தார்.

“எங்க குடும்பத்துக்கு வரப்போற வாரிசுக்குச் செய்யுற முதல் விஷயம் இது. இதுல எந்தக் குறையும் இருக்கக் கூடாது,” என்று பர்வதம் ஒவ்வொரு நகையையும் தேர்ந்தெடுத்த விதம், அந்த வீட்டில் தனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைப் பூவிழிக்கு உணர்த்தியது.

தன் மீது எவ்விதத் திணிப்பும் இல்லாமல், ஒரு தாயாக நின்று தன் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பர்வதத்தின் பாசத்தைக் கண்டு பூவிழியின் மனம் நெகிழ்ந்து போனது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவாறு, “அம்மா … எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல,” என்று திக்கித் திணறினாள்.

“இதெல்லாம் ஒரு விசயமா பூவிழி? யுகேந்திரன் எங்களை எவ்ளோ நம்பி இந்தச் பொறுப்பைக் கொடுத்திருக்கான். நீ இப்போ எங்க வீட்டுப் பிள்ளை. இதெல்லாம் உனக்குச் செஞ்சுதான் ஆகணும், அப்பறோம் இப்போ என்னை அம்மான்னு கூப்பிட்டியே,. அந்த வார்ததைக்கு உண்மையாவே மதிப்பு கொடுக்கிறதா இருந்தா உனக்கு என்ன வேணுமோ அதை கூச்சமில்லாம, தயங்காம சொல்லு. உனக்கு புடிச்சது தான் நான் எடுத்து தருவேன்” என்று பர்வதம் அன்போடு அவளிடம் பேச.. பூவிழியின் மனதில் இருந்த அத்தனை பயமும், அந்நியத் தன்மையும் அந்த ஒரு கணத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆராதனா பூவிழியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தப் புடவைகளுக்கும் நகைகளுக்கும் பொருத்தமான வளையல்களையும் பூக்களையும் எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்று பூவிழிக்கு உதவினாள் . ஒரு சிறு தயக்கத்துடன் பூவிழி ஆராதனா சொன்ன அதே பவள வண்ண பட்டு சேலையையும், பர்வதம் தேர்ந்தெடுத்த நகைகளில் இருந்து ஒரு சிறு செயினை மட்டும் சுட்டிக்காட்டி அதை எடுத்துக்கொள்கிறேன் என்றாள்.

அதை கையிலெடுத்துப் பார்த்த ஆராதனா “பலே ஆள் தான் டி நீ.. ” என்று பூவிழியின் தோளில் இடித்தாள்.

“என்ன டி.. ” என்று பர்வதம் கேட்க..

“அம்மா இதுல பாரு “Y” னு யுகேன் மாமாவோட பேர்ல் இருக்க முதல் லெட்டர் போட்ட டாலர் இருக்கு. இங்க இவ்ளோ கோஸ்டலியான ஜ்வ்ல்ஸ் இருக்க அப்போ மேடம்க்கு இந்த செயின் தான் வேணும்னு சொல்ராங்க” என்று கிண்டலடித்தாள்.

“அடிப்பாவி அமுக்கனி மாதிரி இருந்துட்டு என்ன வேலை பாக்குற நீ.. ” என்று சிரித்தவர் “டேய் யுகேந் நீயே உன் பொண்டாட்டிக்கு நகையை பாத்து செலக்ட் பண்ணு டா , அவ அவ நகையை பார்த்தா போதும் உள்ளத்துலையே எது பெருசா இருக்கோ அதை தான் எடுப்பாளுங்க.. இதோ இவகிட்டே கேளு இங்க இருக்குறதுலையே எது கோஸ்டலியோ அதை தான் கேப்பா.. ஆனா உன் பொண்டாட்டியைப் பாரு ” என்றார்.

யுகேந்திரனுக்கு பூவிலியின் மனம் புரிந்தது., அவளுக்கு இந்த பணம் , பகட்டெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. யுகேந்திரன் தான் அவளுக்கு எல்லாமே , எல்லாமுமாக அவனே வேண்டும் என்று மட்டும் தான் நினைக்கிறாள் என்று.

தன் காலுக்கு கீழே விரிப்பில் அமர்ந்திருந்தவள் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தபடி பூவிழிக்கு வேண்டிய நகைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து தேர்ந்தெடுத்தான்.

“யுகேன் மாமா , செம்மையா செலக்ட் பண்ணி கொடுத்திருக்கிங்க.. எனக்கும் இதே போல ஒரு ஆரம் செட் சூஸ் பண்ணிக்க கொடுங்க ” என்றாள்.

அவளை பார்த்து சிரித்தவன் இருந்ததாலேயே விலை அதிகம் உள்ள ஆரம் செட் ஒன்றை தேர்ந்தெடுத்து கொடுக்க..

பர்வதத்திற்கு யுகேனுக்கு ஆராவின் மீதிருந்த பாசம் நன்றாகப் புரிந்தது.

இவை அனைத்தும் முடிந்திருக்க.. கடைக்காரர் அவர்கள் எடுத்ததிற்கு மட்டும் பில் போட்டு அதை யுகேனிடம் நீட்ட..

“என்கிட்டே ஏன் கொடுக்கிறிங்க.. “என்றவன் பார்வையால் ராஜேந்திரனை சுட்டிக் காட்டினான்.

அவரோ அவனைப் புரியாமல் பார்க்க..

“நீங்க தானே பூவிழியை எனக்கு தேடிப் பிடிச்சு கல்யாணம் செய்து வெச்சீங்க.. அவளுக்கான பொறுப்பு உங்களோடது தானே டேட் , சோ நீங்களே பே பண்ணிருங்க”என்றான்.

யுகேன் பேசிய உள் அர்த்தம் அவன் மட்டுமே அறிவான் . பூவிழியை ஒரு துரும்புக்கும் கூட மதிக்காமல் இருந்தவரிடம் இன்று அவளுக்கான செலவை செய்ய வைக்கிறான்    அன்று அவனுக்கு மட்டுமே அறிந்த விசயம்,

அவன் கேட்டதில் கடுப்பானாலும், அவரும் வேறு வழி இன்றி பூவிழிக்காக  எடுத்த அனைத்துக்கும் பணத்தை காட்டினார் ராஜேந்திரன்.

“மாமா ஏன் இப்படி எல்லாம் பன்றாரு. அவருக்கு தான் என்னைக் கண்டாலே ஆகாதே. அவர்கிட்டயே போய் இப்படி பேசினா என் மேல தான் அவருக்கு இன்னும் கோபம் அதிகம் ஆகும்” என்று நினைத்தவள் இயலாமையோடு யுகேந்திரனைப் பார்த்தாள்.

அவனோ மென்மையாக சிரித்தவன் “அத்தை எனக்கு ரொம்பப் பசிக்குது. மதியம் சாப்பிட வந்தோம் இப்போ நைட் ஆகிடுச்சு ” என்றான்.

“யுகேன் இதுக்கே நீ சந்தோசப் பாடணும். பூவிழி சீக்கிரமே செலக்ட் பண்ணிட்டா. இதுவே உங்க அத்தையை மட்டும் விட்டுருந்தோம்னு வை அவ்ளோ தான் நம்ம பட்டினி தான் கிடக்கணும்” என்று பர்வதத்தை கிண்டல் செய்தார் .

“என் காலை வரலையின்னா அந்த பொழுது உங்களுக்குப் போதாதே.. ” என்றவர் “யுகேன் நீ வாப்பா சாப்பிடலாம். பூவிழிக்கும் பசிக்கும் ” என்று  அவர்களை வர சொல்லிவிட்டு டைனிங் டேபிளுக்கு அவர் செல்ல..

அவர்களோடு அனைவரும் எழுந்து சாப்பிட சென்றனர். ஆனால் ஒருவர் மட்டும் அங்கேயே அப்படியே அமர்ந்து இருந்தார் அவர் தான் ராஜேந்திரன், அவரால் அனைவரும் பூவிழிக்கு வழங்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“இது சரி இல்ல.. இது சரியே இல்ல. இவளை இனி இங்க இருக்க விடுறது சரி இல்ல. இவளை இங்க இருந்து அனுப்ப நான் நினைச்சிருந்தா. யுகேந்திரன் பேசுறதையும், அவளை நடத்துறதையும் பார்த்தா அவளை இனி நானே நினைச்சாலும் இங்க இருந்து அனுப்ப முடியாது போல.. ” என்று நினைத்தவர்

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கும் வந்துவிட்டார்.

கதை படிச்சீங்களா ஸ்டோரி எப்படிப் போகுது உங்க கருத்துக்களை சொன்னா தானே நான் கதை போக்கு எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்குவேன். மறுபடியும் எழுத உத்வேகமாக இருக்கும்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.