மூர்க்கன் 31
தான் நினைத்தது போல ராவணை ஊருக்கு அழைத்து செல்கிறோம் என்ற சந்தோசம் துளியும் இல்லாமல் ரக்ஷனா கடுப்பாக காரில் அமர்ந்து இருந்தாள்.
அவள் காரை டிரைவர் ஓடிக்கொண்டிருக்க..
பின்னால் சீட்டில் ராவண் , ரக்ஷணா அமர்ந்து இருந்தனர். ரெண்டு பேர் தானே அதுக்கு ஏன் கடுப்புன்னு தானே யோசிக்கிறீங்க.. இருங்க இருங்க முழுசா படிச்சிடலாம் வாங்க..
ராவண் ஒரு பக்கமும், ரக்ஷணா மறுபக்கமும் அமர்ந்து இருக்க.. அவர்களுக்கு முன் சீட்டில் டறிவருக்கு அருகே உள்ள சீட்டில் கயல் அமர்ந்து இருக்க..
பின்னால் இருந்த இவர்கள் இருவருக்கும் இடையில் அமர்ந்து இருந்தாள் இளங்கிளி..
இவர்கள் ஊருக்கு கிளம்புவதாக ராவண் இளங்கிளியிடமும், தன் குடும்பத்திடமும் சொல்ல…
அவர்களுக்கு ராவணைப் பிரியவே மனமில்லை. ஆனால் ரக்ஷனாவையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இவர்கள் கிளம்புகிறேன் என்றதும் “நானும் உங்க கோடா வரேன் ” என்று துணிப்பையுடன் வந்து நின்றாள் இளங்கிளி.
அவளை ராவண் உட்பட அனைவரும் அதிர்ந்து பார்க்க..
“அக்காவை மட்டும் நான் தனியா இவ கூட அனுப்ப மாட்டேன் ” என்று முன்வந்த கயலோ “அத்தை, என்னங்க.. நான் அக்காகூட கிளம்புறேன். நாங்க மாமாவை கூட்டிட்டு வர வரைக்கும் யசுவை நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கோங்க ” என்றாள்.
“கயல் அண்ணிக்கு துணையா நீ தான் போகணும்னு இல்ல.. நான் கூட போய்ட்டு வரேன். நீ வேணாம். அந்த ரக்ஷணாவைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது. அவ உன்னை ஏதாவது செய்திருவா ” என்று மித்ரா கயலுக்காக கவலைப் பட்டால்.
“நீங்க யாரும் எனக்கு துணையா வர வேணாம், என்னை பாத்துக்க தான் என் புருஷன் இருக்காரே.. ” என்று ராவண் கையை எட்டிப் பிடித்து தன் கையுடன் அவள் கோர்த்துக்கொள்ள..
அதை கண்டு எரிச்சலடைந்த ரக்ஷணா “ஏய் அவர் மேல இருந்து கையை எடு டி.. சும்மா என் புருஷன்னு சொல்லிட்டு இருக்கேன்னு வை ” என்று ரக்ஷனா எகிற..
“அப்படி தான் டி சொல்லுவேன். ஏன்னா இவர் என்னோட புருஷன். நான் தான் அவர் பொண்டாட்டி ” என்று விடாமல் இளங்கிளியும் பேசினாள்.
“அப்போ நான் யாரு டி?”என்று ரக்ஷணா கத்த..
“நீயா? நீ அவரோட பொண்டாட்டின்னு பொய் சொல்லி நாடகம் ஆடிட்டு இருக்க.. நீதான் டுபாக்கூர் பொண்டாட்டி. நான் தான் ஒரிஜினல் பொண்டாட்டி ” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசினாள் இளங்கிளி.
“ஏய்! என்ன டி சொன்ன.. ” என்று ரக்ஷனா எகிற..
“ரக்ஷணா எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற.. உன் உடம்புக்கு ஆகாது உள்ள இருக்க பேபியையும் அது அபக்ட் பண்ணும் ” என்று அவளை சமாதானம் செய்வது போலவோ, அவள் மீது அக்கறை இருப்பது போலவும் காட்டிக்கொண்டான் ராவண்.
அவனை முறைத்த இளங்கிளி “நீங்க எதுக்கு அவ மேல இவ்ளோ அக்கறை காட்டுறிங்க.. அவ வயித்துல இருக்க குழந்தைக்கு என்னவோ நீங்க அப்பா மாதிரி பேசுறீங்க ” என்று அவன் முன்னே வந்து நின்றாள் இளங்கிளி.
“ஏய் என்னை கொஞ்சம் பெர்போர்ம் பண்ண விடு டி.. அவளுக்கு நான் நடிக்குறதை நீயே காட்டிகொடுத்திருவ போல இருக்கே.. ” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான் ராவண்.
அவனை முறைத்துவிட்டு “நான் இருக்க அப்போ என்னவோ அக்கரையா இருக்க போல நடிக்குறிங்க.. என்னால இதை பொறுத்துக்க முடியாது ” என்று அவளும் ரகசியம் பேசினாள்.
“நடிக்குறேன்னு நீயே சொல்ற.. அப்பறோம் என்ன டி ” என்று அவளை தள்ளிவிட்டு ரக்ஷனாவின் அருகே சென்று நின்றவன் “இங்க பாரு.. நீ யாருன்னே எனக்குத் தெரியாது. சும்மா வந்து என்கிட்டே இப்படி உரசிட்டு பேசுற வேலை வெச்சுக்காத” என்று நடித்தவன் கண்களை சுருக்கி இளங்கிளியிடம் மன்னிப்புக் கேட்டவன் “பொறுத்துக்கோ ப்ளீஸ் ” என்று அவன் கெஞ்ச..
அவனை முறைத்துவிட்டு சரி என்பது போல கண்களை மூடித் திறந்தவள்.
“இங்க பாருங்க, உங்களுக்கு தான் எதுவும் நியாபகம் இல்ல. ஆனா எனக்கு எதுவும் மறக்கல ..இவ நம்ம ரெண்டு பேரையும் எவ்ளோ கஷ்டப்படுத்திருக்கனு உங்களுக்கு வேணா நியாபகம் இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல.. நான் ஆதியையும், அல்லியையும் பெத்தெடுக்கும்போதே எனக்கு எல்லாமே நியாபகம் வந்திருச்சு.. ஆனா நான் தான் இவ்ளோ நாள் நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாம தவிச்சுப் போய் இருந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் ” என்றவள் கண்களில் நிஜமாகவே அவர்கள் பிரிந்த நாட்களை நினைத்து கண்ணீர் வர அதை புடவைத் தலைப்பில் ஒற்றி எடுத்தவள்.
” இவளுக்கு இப்போ இல்ல எப்பவோ மறந்து போன விஷயம் எல்லாம் திரும்ப நியாபகம் வந்திருக்கு. ஆனா இன்னிக்கு காலையில தான் நியாபகம் வந்தது போல எப்படி நடிச்சா இந்த கடன்காரி. எல்லாருக்கும் இன்னிக்கு தானே தெரியும். அப்போ அந்த கர்ணன் கிட்டேயும் இவ கண்டிப்பா உண்மையை சொல்லி இருக்க மாட்டா.. அது தெரியாம அந்த முட்டாள் இவளை என்கிட்டே இருந்து காப்பாத்துறேன்னு இங்க வந்து அவளுக்கு பாதுகாப்பா இருந்திருக்கான்” என்று நினைத்த ரக்ஷ்ணாவுக்கு கர்ணன் மீது தான் கோபம் வந்தது.
“ஏய் இப்போ என்ன தான் முடிவா சொல்ல வர.. ” என்றாள் ரக்ஷணா பொறுமை இழந்தவளாக.
“என் புருஷன் எங்க இருக்காரோ.. அங்க தான் நானும் இருப்பேன் . அதனால நான் உங்க கூட கிளம்பி வரேன். அப்படி முடியாதுன்னு சொன்னா , அவரை இங்கையே விட்டுட்டு நீ மட்டும் கிளம்பு..” என்றாள் இளங்கிளி.
இதை சற்றும் எதிர்பார்த்திராத ரக்ஷனா அதிர்ந்து அவளைப் பார்க்க..
இளங்கிளியோ வேறு பக்கம் பார்ப்பது போல பாவனை செய்தாள்.
“என்ன டா உன் அண்ணனுக்கு இவ்ளோ டிமாண்டா..” என்றான் ஈஸ்வர் கிடலாக.
“சும்மா இரு டா. ” என்று ராஜ் அவனை அதட்டிவிட்டு அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
“அப்போ நீ எங்க கூட வரதுன்னே முடிவு பண்ணிட்டியா?” என்றாள்
“ம்ம்.. ஆமா ..” என்றாள்.
“சரி வந்து தோலை.. ஆனா அங்க வந்து இதே மாதிரி பேசிட்டு இருந்தேன்னு வை.. ” என்றாள் கடுப்பாகி
“அதை அங்க வந்து பாத்துக்கலாம் “என்றாள் இளங்கிளி.
“அப்போ நானு..” என்று இளங்கிளியின் கையை பற்றிக்கொண்டு நின்றாள் கயல்.
அவளை முறைத்த ரக்ஷனா “அவளே வரா இல்ல நீயும் வா.. உன்கிட்டே முடிக்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கு ” என்றாள் .
அப்படியா! எனக்கும் அதே கணக்கு பாக்கி இருக்கு பாத்துக்கலாம். ” என்றாள் கயலும்
வேறு வழி இல்லாமல் இவர்களையும் தங்களோடு அழைத்து செல்ல அனுமதித்தாள் ரக்ஷணா .
“அக்கா, நம்ம மருமக முன்ன மாதிரி இல்ல. ஆளே மாறிட்டா. அவ இந்த ரக்ஷனாவை புடிக்குற புடியைப் பாருங்க.. அந்த ரக்ஷனா என்ன பண்றதுனு தெரியாம வசமா மாட்டிக்கிட்டா..” என்று கமலா பரிமளாவின் காதுகளில் மெல்ல பேசினார்.
“ஆமா டி.. இப்போ தான் கிளி என் பையனுக்கு ஏத்த ஜோடியா மாறி இருக்கா.. இதெல்லாம் இவ்ளோ கஷ்டத்துக்கு அப்பறோம் தான் வரணும்னு இருக்கு.. ” என்று சொல்லி பெருமூச்சு விட்டுக்கொண்டவர். “உன் மருமக மட்டும் சும்மாவா.. இவளை எப்படி அந்த ரக்ஷணா சமாளிக்கபோறாளோ… ஆனா ஒன்னு இனி ரக்ஷனா ஆட்டம் சீக்கிரத்துலையே மொத்தமா அடங்கப்போகுது ” என்றார் பரிமளா.
கமலாவும் அது சரி தான் என்று ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொள்ள..
அவர்கள் நால்வரும் கிளம்ப..
ராஜ் கயலின் கையைப் பற்றிக்கொண்டு “கயல் குட்டி ஜாக்கிரதையா இரு டி.. எதுனாலும் எனக்கு ஒரு போன் பண்ணு நான் அடுத்த நிமிஷம் உன் முன்னாடி வந்து நிப்பேன் ” என்றான்.
“நீங்க கவலைப் படாதீங்க. நான் பத்திரமா இருந்துப்பேன், உங்க உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க.. ” என்று அவளும் தன் பங்கிற்கு பாச மழை பொழிய .
“இப்போ நீ வரியா? இல்ல நாங்க மட்டும் கிளம்பட்டுமா?”என்று ரக்ஷனா கத்த.
“ஏய் போதும் வாடி அப்பறோம் வந்து என் கொளுந்தனாரை கொஞ்சிக்கொ..” என்று அவளை முன் இருக்கையில் ஏற சொல்லிவிட்டு பின் இருக்கையில் ஏறி நடுவில் அமர்ந்தவள் ராவணையும், ரக்ஷணாவையும் ஆளுக்கு ஒரு பக்கம் வந்து அமர சொல்ல.
ராவண் இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டே வந்து அவள் அருகே அமர..
“இவளை. ” என்று கடுப்பில் நினைத்த ரக்ஷனா மறுபக்கம் வந்து அமர.. கார் ரக்ஷனாவின் வீட்டை நோக்கி கொடைக்கானலில் இருந்து கிளம்பியது.
இளங்கிளி கிளம்பும்போது ஆதியையும், அல்லியையும் தன் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு அவர்களை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினாள். பிள்ளைகளை விட்டு இருக்க முடியாத ஒன்று தான்., ஆனால் ரக்ஷணா இருக்கும் இடத்தில தன் பிள்ளைகளை அழைத்து செல்வது சரியாக இருக்காது என்று தான் இந்த முடிவை எடுத்தாள்.
அவர்கள் சென்றபிறகு அனைவரும் ஆதி, அல்லி, யஷ்வந்திகா மூவரையும் பார்க்க..
அவர்களோ அங்கு நடப்பது எதுவும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“சரி அப்போ நாம எல்லாரும் நாளைக்கே ஊருக்கு கிளப்பிடலாமா?” என்றார் வரதராஜன்.
“என்ன வரதா உன் மகனும், மருமகளும் கிளம்பினதும் நீயும் கிளம்புறேன்னு இருக்க.. என்ன அவசரம் ” என்றார் மார்க்கண்டேயன்.
“அதுக்கு இல்ல மார்க்கண்டேயா.. ஏற்கனவே வந்து ஒரு வாரம் ஆச்சு. ஆபீஸ்ல வேலை எப்படியும் அதிகமாகிருக்கும். அதுவுமில்லாம நாங்க நேரா எங்க வீட்டுக்குப் போகல” என்றார்.
“என்னங்க சொல்றிங்க.. நம்ம வீட்டுக்குப் போகாம வேற எங்க போறோம். நாமளும் கிளம்பி எந்த ரக்ஷனா வீட்டுக்கு எதுவும் போறோமா?” என்றார் பரிமளா.
“என்ன டி மறந்துட்டியா நம்ம ருத்ரசேனாவுக்கு உன் தம்பி மகளை பொண்ணு கேட்க வேணாமா? கல்யாண பேச்சு இருக்குள்ள.. அங்க என் மகன் வேலையை முடிச்சிட்டு வரதுக்குள்ள இங்க ருத்ராவுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்கணும் ” என்றார் வரதராஜன்.
“என்ன டி உன் புருஷன் ஒரே நாள்ல நல்லவனாகிட்டானா? உன் தம்பி வீட்டுக்கு அவனே போகலாம்னு சொல்றான் . என்னால நம்பமுடியலையே.. ” என்று வேதவள்ளி பரிமளாவிடம் கேட்க..
“அதே தான் அத்தை நானும் யோசிச்சேன். இவர் தான் பேசுறாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்றார் பரிமளா.
“என்ன உன் தம்பி வீட்டுக்கு போன் போட்டு நாளைக்கு நாம அவங்க வீட்டுக்கு வரும்னு சொல்லப்போறியா? இல்ல கிளம்பி நம்ம வீட்டுக்கே போகலாமா?” என்று முறுக்கிக்கொண்டு நின்றார் விரதராஜன்.
“இந்த மனுசனுக்கு எந்த நேரத்துல வீம்பு பிடிக்குறதுன்னு தெரியல, இவரு மனசு மாறுறதுக்குள்ள போன் போட்டு ரத்தினவேலுக்கிட்டே போன் போட்டு விஷயத்தை சொல்லணும். என் தம்பி பொண்ணுங்களைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு” என்று நினைத்தபடி “இதோ இப்பவே அவனுக்கு போன் போட்டு சொல்றேன்ங்க ” என்று ஆதியை வேதவல்லியிடம் கொடுத்துவிட்டு போனை எடுக்க அறைக்குள் சென்றுவிட்டார்.
“ருத்ரா, நாளைக்கு நாங்க ஊருக்குப் போயிட்டு எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டு சொல்றோம். ஒரு நல்ல நாளையும் குறிச்சிட்டு சொல்றோம். பொண்ணு பாக்க கிளம்பி வந்திரு சரியா ” என்றார்.
ருத்ராவும் சிரித்துக்கொண்டே “எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க. நான் மாட்டேன்னு சொன்னா மட்டும் விட்டுறவா போறீங்க. உங்க இஷ்டம் அங்கிள் ” என்றான்.
“அட என்ன நீ இன்னும் அங்கிள்னு தள்ளி வெச்சு கூப்பிட்ற.. வாய் நிறைய பெரியப்பான்னு கூப்பிடு.. ” என்றார்.
“ம்ம்.. சரிங்க பெரியப்பா ” என்று சிரித்தான் ருத்ரன்.
