தப்பு 22
“இங்க பாரு நான் சொல்றதை கவனமா கேட்டுக்க.. விடியற்காலையில் சரியா 3 மணிக்கு நீ நம்ம வீட்டு பின் பக்கம் வந்திரு “என்றார் ராஜேந்திரன்.
பூவிழி அவரைப் புரியாமல் பார்க்க..
“எதுக்கு உன்னை அவ்ளோ காலையில் வர சொல்றேன்னு பாக்குறியா? ” என்று நக்கலாக சிரிக்க.
அவர் சிரிப்பில் இருந்த நக்கலைக் கண்டுகொண்ட பூவிழிக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியது, “சார், என்ன.. என்ன சொல்றிங்க ” என்றாள் சற்று பதற்றமாக,.
“நான் சொல்றதை கவனமா கேட்டுக்க.. 3 மணிக்கு வீட்டுக்கு பின் பக்கம் உன்னோட துணிமணியை எடுத்துட்டு வந்திரு. இந்த வீட்ல இனி நீ இருக்க வேணாம் ” என்றார்.
அவர் சொன்னதில் அதிர்ந்தவள் “சார்.. ஏ.. ஏன் சார். குழந்தை பிறந்து பிறகு தானே என்னைப் போக சொன்னிங்க ” என்றாள் படபடக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு.
“ஆமா சொன்னேன் தான். வெறும் குழந்தையை மட்டும் பெத்துக்கொடுத்துட்டு போயிருவேன்னு தான் நான் முதல்ல நினைச்சேன். ஆனா என் மகன் , என் தங்கச்சி எல்லாருமே உன்னை கையில் வெச்சு தாங்குறதை பார்த்தாலே எனக்கு பத்திகிட்டு வருதே.. நீ இந்த வீட்லையே நிரந்தரமா தங்கிடுவ போல.. “என்று குத்தலாகப் பேசினார்.
அவர் பேச்சில் இருந்த கடுப்பைக் கண்டுகொண்டவள் “சார், அப்படி எல்லாம் நடக்காது. நான் யார்கிட்டேயும் சொல்லாம குழந்தையை சொன்னபடி உங்க கைல பெத்து கொடுத்துட்டு போயிருவேன் . என்னை நம்புங்க ” என்றாள் கெஞ்சுதலாக.
“இல்ல எனக்கு அந்த நம்பிக்கை இல்ல. அதனால தான் எல்லா ஏற்படும் செய்துட்டேன். நீ காலையில யாருக்கும் தெரியாம கிளம்பி வந்திரு. என் ஆளு ஒருத்தன் உனக்காக காத்துட்டு இருப்பான். அவன் உன்னை நான் சொல்ற இடத்துல கொண்டு போய் விட்டிருவான். குழந்தை பிறக்குற வரைக்கும் நீ அந்த இடத்துலையே தான் இறுக்கப் போற.. அதுக்கு அப்பறோம் குழந்தையை பெத்துக் கொடுத்ததும். உனக்கும், இந்த வீட்டுக்கும் இருக்க உறவு மொத்தமா முடிஞ்சு போயிரும் . உனக்கு தேவையான அளவுக்கு காசு தரேன். அதை வாங்கிட்டு கண்காணாத இடத்துக்குப் போயிரு ” என்று கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் பேசினார் ராஜேந்திரன்.
“ஐயோ சார், குழந்தை பிறக்குற வரைக்குமாவது நான் இங்கையே இருக்கேன். அவர் இந்த குழந்தைக்காக ரொம்ப ஆசையா ஏங்கிட்டு இருக்கார். அவர்கையிலே குழந்தையை கொடுத்துட்டு அவர் சந்தோசப்படுற அந்த ஒரு விஷயத்தைப் பார்த்துட்டு நான் இங்க இருந்து போய்டுறேன் ” என்று சட்டென அவர் காலைப் பற்றிக்கொண்டு கெஞ்ச ஆரம்பித்திருந்தாள் பூவிழி.
அப்போதும் கூட இரக்கம் வராமல் கல் நெஞ்சத்தோடு நின்று இருந்தார்.
அவர் காலைப் பற்றி இருந்த பூவிழி நிமிர்ந்து அவரைப் பார்க்க..
அவரோ அவளை சட்டை செய்யாமல் “நான் சொல்றதை கேக்குற நிலையில் தான் நீ இருக்க. அதை புரிஞ்சுக்க முதல்ல.. நாளைக்கு காலையில மூணு மணிக்கு சொன்ன மாதிரி நீ வந்திரு ” என்று சொல்லிவிட்டு அவர் அங்கே இருந்து செல்லப்போக..
“மாமா.. உங்களை கெஞ்சிக் கேக்குறேன். என் யுகேன் மாமாகூட இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு அவர் புள்ளையை பெத்து கொடுத்து . அவர் முகத்துல தெரியுற அந்த சந்தோஷத்தை பார்த்துட்டு போய்டுறேன். எனக்கு வேற எதுவும் வேணாம். அவரோட கொஞ்ச நாள் கொஞ்சமே கொஞ்ச நாள் ” என்று அழுது புலம்பினாள்.
அதை கொஞ்சம் கூட காது கொடுத்துக் கேட்காதவர் “நான் சொன்ன சொன்னது தான். நீ நாளைக்கு மட்டும் வரல.. உன் அம்மாவை நீ பாக்கவே முடியாது” என்று தன் காலை உதறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்க.
அவர் உதறியதில் அப்படியே தரையில் அமர்ந்தவள் இதயம் பூகம்பம் போல வெடித்துவிட்டது, அவளால் யுகேந்திரனிடம் இருந்து இந்த பிரிவை அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பக்கம் தன் தாயின் உயிர், மற்றொரு பக்கம் தன் வயிற்றில் கருவை கொடுத்தவன் இவர்களில் யாரை வேண்டாம் என்று உதாசீனப்படுத்துவாள் அவள் .
நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தாள். அழுது அழுது கண்கள் ஓய்ந்து போனது பூவிழிக்கு. அப்போது ஒரு கை பின்னால் இருந்து அவள் தோளைத் தொட.. திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கே கஸ்தூரி நிற்பதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.
“என்ன புள்ள இங்க உக்காந்து இருக்க? சார் உன்னைக் காணோம்னு கிச்சனுக்கு போன் அடிச்சாரு.. ” என்றாள்.
“அக்கா அது அது .. லேசா தலையை சுத்திவிட்ருச்சு . உங்களை கூப்பிடலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.. ” என்று கைகளை ஊன்றி மேலே எழ..
அவளுக்கு கை கொடுத்து தூக்கிவிட்ட கஸ்தூரி பூவிழியின் முகத்தை பார்த்ததும் ” என்ன டி முகம் இப்படி வாடிப் போய் இருக்கு. உடம்பு எதுவும் முடியலையா?” என்றார் பதற்றமாக.
“இல்லக்கா தலை சுத்தல் மட்டும் தான்.” என்று புடவை தலைப்பில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே உள்ளே செல்ல..
அவள் பின்னே யோசனையாக கஸ்தூரியும் சென்றார்.
கிச்சனில் இருந்த சின்க்கில் முகம் கழுவிவிட்டு யுகேனுக்கு பாலை ஊற்றிக்கொண்டு திரும்ப..
அவளையே கேள்வியாகப் பார்த்தபடி கஸ்தூரி நின்று இருந்தாள்.
“என்னக்கா ” என்று மென்மையாக சிரித்தாள். தனக்குள் இருந்த சோகத்தை மறைத்து சிரித்த முகமாக நின்று இருக்க.
“இங்க பாரு. இந்த வீட்ல தான் உன்னை எல்லாரும் தாங்குறாங்களே.. அப்பறோம் எதுக்கு டி இப்படி எல்லா வேலையிலும் என்கூட சேர்ந்து இழுத்து போட்டு செய்துட்டு இருக்க. அதெல்லாம் எதுவும் வேணாம். நாளையில் இருந்து எல்லா வேலையும் நான் பாத்துக்கிறேன். பர்வதம் அம்மா கூட ரெண்டு ஆளுங்களை வேளைக்கு போட்டுக்க சொன்னாங்க. நான் பேசியிருக்கேன் எங்க ஊர் ஆளுங்க கிட்டே அவங்களும் நாளைக்கு வந்துருவாங்க சரியா?” என்றார்.
தன் மீது இன்று வரை ஒரே போல அக்கறையும், அன்பும் காட்டும் கஸ்தூரியை பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள் “நாளையில் இருந்து எனக்கு இங்க எந்த வேலையும் இல்லேன்னு நீங்களும் சொல்றிங்க.. ” என்றாள்.
“என்னடி சொல்ற.. ஒன்னும் புரியலையே.. “என்று கஸ்தூரி கூற.
அவர் அருகே வந்தவள் அவரை தோளோடு அணைத்து “ரொம்ப நன்றி அக்கா. என் மேல இவ்ளோ அக்கறை காட்டினதுக்கு ” என்றாள்.
“என்ன ஆச்சு இவளுக்கு ” என்று புரியாமல் அவளை தன்னிடம் இருந்து பிரித்து விட்ட கஸ்தூரி.
“நீ முதல்ல நல்லா தூங்கி எழுந்திரு ,. காலையில் பேசிக்கலாம்” என்று அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
சரி என்று அவளும் மெல்ல நடந்து லிப்டில் ஏற..
அவள் நடையில் இருந்த தளர்வையும், சோர்வையும் பார்த்த கஸ்தூரி “பாவம் புள்ள.. கிட்சனுக்குள்ள வேலை செய்றேன்னு வரட்டும் அப்பறோம் இருக்கு அவளுக்கு ” என்று அவளை செல்லமாக திட்டினார்.
இங்கே அவர்கள் அறைக்கு முன்பு வந்தவள் கதவை திறப்பதற்கு முன் கண்களை இருக்க மூடித் திறந்து மூச்சை ஆழ்ந்து வெளிவிட்டவள் முகத்தில் இருந்த சோகத்தை மறைக்க.. கஷ்டப்பட்டு சிரித்தவள் அதே சிரித்த முகத்தோடு யுகேனின் அறைக்குள் சென்றாள்.
அவள் வருவதைப் பார்த்ததும் வீல் சேரை அவளை நோக்கி செலுத்தியவன் “எங்க டி போன இவ்ளோ நேரம். மேல வரதுக்கு உனக்கு இவ்ளோ நேரமா?” என்று அவள் கையில் இருந்த டம்பளரை வாங்கி அருகே இருந்த மேஜையில் வைத்தவன் அவள் கையைப் பற்றி தன் அருகே இழுத்தான்.
யுகேனின் மோகம் கலந்த விழிகளையும், அவளைக் கண்டதும் அவளுக்காகவே சிரிக்கும் அவன் சிரிப்பையும் கண்டவளுக்கு ஒருவித பாரம் ஏறிப்போனது மனதில். இனி தனக்காக சிரிக்கும் இந்த சிரிப்பை, தன் நெருக்கத்தை நாடும் இந்த விழிகளும் தனக்கு சொந்தம் இல்லை என்ற உணர்வில் தோன்றிய பாரம் அது.
அவளுக்கு பேச்சு வராமல் தொண்டை அடைத்தது. அவளையுமறியாமல் கண்கள் குளமாகிவிட.. அதை அவனிடம் காட்டிவிடக்கூடாது என்று கண்ணீரை உள்ளிழுத்தவள் “வேலை இருந்துச்சு மாமா முடிச்சிட்டு வர வேணாமா?” என்று துக்கம் மறந்து அவனிடம் இயல்பாகப் பேசினான்.
“உன்னை யார் வேலை பாக்க சொன்னது .நான் தான் உன்னை கிட்சேன் பக்கம் போகக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல” என்று உரிமையும், அதட்டலுமாக சொன்னவன் . அவள் சேலையை விலக்கி மேடிட்ட வயிற்றில் குட்டி குட்டி முத்தம் வைத்தான்.
“இன்னிக்கு ஒரு நாள் தான் , நாளைக்கு நீங்களே என்னை வேலை செய்யுன்னு சொன்னாலும் அதை செய்ய நான் இருக்க மாட்டேன் ” என்றாள் .
“என்ன சொன்ன.. ‘ என்று சட்டென நிமிர்ந்து அவளைப் பார்க்க..
“அது.. அது நாளைக்கு நீங்களே என்னை இதை செய், அதை செய்யுன்னு அனுப்பினாலும் நான் போக வேண்டியது இல்ல. பெரியம்மா வேளைக்கு ஆளுங்களை சேர்க்க சொன்னதா கஸ்தூரி அக்கா சொன்னாங்க அதை சொன்னேன் ” என்று சமாளித்தாள்.
“ஓஹோ.. ” என்றவன் மேஜையில் இருந்த பாலை எடுத்துக் குடித்தவன் “நீ பால் குடிச்சியா டி ” என்றான்.
“ம்ம்.. அப்போவே கஸ்தூரி அக்கா எனக்கு சூடா கொடுத்தாங்க ” என்றாள்.
“சரி போய் டேப்ளெட்ஸ் எடுத்துட்டு வா.. “என்றான்.
அவளும் அவன் குடித்து முடித்த டம்பளரை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு தான் கர்ப்பகாலத்தில் சாப்பிடும் மாத்திரையையும், யுஜென் எப்போதும் சாப்பிடும் மாத்திரையையும் எடுத்து வந்து அவனிடம் நீட்ட..
தன் மாத்திரையை எடுத்து போட்டவன் தண்ணீரை குடித்துவிட்டு , பாட்டிலை அவளிடம் நீட்ட அவளும் வாங்கியவள் மாத்திரையை போட்டு தண்ணீரை ஒற்றி விழுங்கினாள்.
“சரி தூங்கலாமா?” என்றான்.
“அதுக்குள்ளையா?” என்று அவனைப் பார்த்தாள்.
“ஏய் மணி பதினொன்னு டி.. அதுக்குள்ளையான்னு கேக்குற,.” என்றான் சிரித்துக்கொண்டே..
“இல்ல.. எப்பவும் நாம லேட்டா தானே தூங்குவோம். அதான் கேட்டேன் ” என்று வெட்கப்பட்டு அவள் கூற. .
“அடிப்பாவி நீயா இது.. ” என்ற ரீதியில் அவளைப் பார்த்தான் யுகேன்.
“உங்களுக்கு மட்டும் தான் தோணுமா எனக்கு எல்லாம் வேணும்னு தோணாதா ” என்று அவளே அவனிடம் தானாக அவனோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று கேட்க.
யுகேனுக்கு இன்ப அதிர்ச்சி தான் அது.
“நீயே சொன்ன அப்பறோம் நான் மாட்டேன்னு சொல்வேணா?” என்று அவள் இடை பற்றி தன் பக்கம் இழுத்தவன் “டேய் குட்டி இங்க பாரு . இன்னிக்கு உன் அம்மாவே தான் என்கிட்டே வந்திருக்கா. நான் எதுவுமே சொல்லல..” என்று தன் பிள்ளையிடம் யுகேன் பேசினான்.
“ஆமா மாமா, நானே தான் வரேன். எனக்கு நீங்க வேணும்னு நானே தான் வரேன். இனி நானே நினைச்சாலும் உங்க கூட இருக்க இந்த கடைசி நிமிடம் எனக்கு கிடைக்காது. உங்களை விட்டுப் பிரிஞ்சு போனதும் எனக்கு உங்க நினைவுகள் மட்டும் தான் இருக்கனும். வேற எதுவும் வேணாம். அது ஒன்னு போதும். எப்பவும் உங்களுக்காக தான் உங்களோட ஒண்ணா இருப்பேன். ஆனா இன்னிக்கு முதல் முறையா. எனக்காக என் ஆசைக்காக.. என் மாமாவோட நியாபகத்துக்காக நானே ஆசைபட்டு உங்க கூட இறுக்கப் போறேன் மாமா ” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள் மெல்ல குனிந்து தன் முதல் முத்தத்தை பதித்து ஆட்டத்தை துவக்கி வைத்தாள்
இவங்க ரொமான்ஸையும், பிரிவையும் ஒரு சேர அடுத்த எபியில் பார்க்கலாம்

1 comment
யுகேந்திரன், பூவிழி பிரிய போறாங்களா, ஹையோ ஏன் சிஸ் பாவம் பூவி அவள ஏன் கஷ்டப்படுத்திறீங்க,😒😒
22 எபி வரைதான் இருக்கு அடுத்த எபி காட்டல நீங்க எத்தன எபி போட்டு இருக்கீங்க சிஸ்