News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என் பொண்டாட்டி நீ தான்டி! 9

by Layas Tamil Novel
931 views
A+A-
Reset

EPISODE 9

புஷ்… என்று சுடுபாத்திரத்தில் பொங்கி வந்த பாலின் சத்தம் வர..

” கிழக்கு பார்த்து தான் பால் பொங்கி இருக்கு . நல்லது தான் ” என்றார் பாலு .

“ஆமா அண்ணா , நல்ல சகுனம் தான் ” என்ற தேன்மொழி.

“இதழ்யா பாலை இறக்கிட்டு எல்லாருக்கும் உன் கையாள ஊத்தி கொடும்மா ” என்றார் அவளிடம் .

பிடிக்காத வாழ்க்கைக்கு சகுனம் , சம்ப்ரதாயம் என ஒவ்வொன்றும் நடந்து கொண்டு இருக்க தன் நிலையை நினைத்து நொந்ந்துகொண்டு ஜடம் போல நின்று இருந்தால் இதழ்யா தேன்மொழி பேசியதை சரியாக கவனிக்காமல் .

ஆனால் அவள் இப்படி நின்று இருக்கும் காரணம் தெரிந்த இருவரும் அவளை தான் விரித்துகொண்டு இருந்தனர்.

ஒருவன் சதாசிவம், இன்னொரு ஆள் வேற யாரா இருக்கும்  ராஜன் தான் .

“ஆமாமா நல்ல சகுனம் தான் . இந்த வீட்டுல வெச்சு இந்த குட்டியை அனுபவிக்க நீயே முன்ன நின்னு எல்லாம் செஞ்சு தரே பாரு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ” என்று இதழ்யாவை மொத்தமாக விழுங்கிவிடும் நோக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்று இருந்தார் சதாசிவம் .

அவள் அருகில் நின்று இருந்த ராஜன் “ஏய் என்ன யோசிச்சிட்டு இருக்க அண்ணி கூப்பிட்றாங்க இல்ல போ… ” என்று அவளை அதட்ட…

” டேய் எதுக்கு டா இப்போ அவளை அதட்டுற நானும் நேத்தில இருந்து பாத்துட்டு தான் இருக்கேன் . நீ அவ கிட்டே கொஞ்சம் கூட பாசமா , கனிவா பேச மாட்டேங்குற . எப்போ பாரு சிடு சிடுன்னு பேசிட்டு இருக்க . நீ அவகிட்டே பேசுறதை பார்த்த அவளை லவ் பண்ணினவன் மாதிரி எனக்கு தெரியலையே ” என்று சந்தேகமாக ராஜனை பார்த்தார் தேன்மொழி .

“நீ என்ன எதையாவது அவனை சொல்லிகிட்டே இருக்க … ” என்ற சதாசிவம் ராஜன் அருகில் குனிந்து  .

“டேய் தம்பி நீ ஏன் அவளை விட்டு தள்ளி நிக்குறேன்னு எனக்கு தெரியும். நான் தொட போற பொண்ணு மேல உன் மூச்ச்சு காத்து கூட படக்கூடாதுனு தானே தள்ளி நிக்குற ” என்றார் நேற்று அவர் கிளம்பியதும் இதழ்யாவின் இதழை அவன் படுத்திய பாடு தெரியாமல் .

“அ … ஆமா அண்ணா , இவளை உங்களுக்காக தான் நான் தூக்கிட்டு வந்தேன் . என்ன தான் நான் இவ கழுத்துல தாலி காட்டினாலும் எனக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லை . அதனால தான் ஒதுங்கி நிக்குறேன் . ஆனா இந்த அண்ணியை தான் சமாளிக்க முடியல .. எதையாவது சொல்லிட்டே இருக்கு ” என்றான் அவர் காதில்  ரகசியமாக .

” என்ன டா நான் பேசிட்டு இருக்கேன் நீ உன் அண்ணன்கிட்டே ரகசியம் பேசிட்டு இருக்க ” என்று ராஜனிடம் குரலை உயர்த்தினார் தேன்மொழி .

“அண்ணி அதெல்லாம் ஒன்னும் இல்லை ” என்று மறுப்பாக தலையை அசைத்தான் .

” டேய் என்ன நீ இப்படி உன் பொண்டாட்டியை விட்டு தள்ளியே நின்னுட்டு இருக்க… கிட்ட போய்  நில்லு டா.. ராஜா ” என்று சதாசிவம் ராஜனை பிடித்து இதழ்யாவின் பக்கம் தள்ளினார் .

அவர் லேசாக தான் ராஜனை பிடித்து தள்ளி இருக்க… அவனோ இது் தான் சமயம் என்று அவள் மீது வேண்டுமென்றே போய் விழுந்தான் .

“என்ன அண்ணா இதெல்லாம் ” என்பது போல சதாசிவத்தை பார்க்க..

அவரோ “உங்க அன்னிக்கு சந்தேகம் வந்திரக்கூடாது டா அவ முன்னாடி நீ கொஞ்சம் அந்த புள்ளைகிட்ட கிளோஸா இருக்க மாதிரி காட்டிக்க … அப்போ தான் அவ எதையும் நொண்டி கேட்க மாட்டா”என்றார்.

அவர் இல்லாதபோது இதழை ஓட்டிக்கொண்டே இருந்தவனுக்கு இனி சொல்ல வேண்டுமா என்ன… 

அவளை இடித்துக்கொண்டு நின்ற நேரத்தில் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அவன் கைகள் அவளை தடவியது . அதில் அருவருப்பான இதழ்யா அவனை திரும்பி முறைக்க…

“என்ன பாப்பா அப்படி பாக்குற… நான் தொடத்தானே இதெல்லாம் இருக்கு ” என்றவன் திரும்பிக்கொண்டான்.

அவளோ எல்லாம் என் விதி என்பது போல நின்று இருந்தாள் .

“ம்ம்ம்… இப்போ எவ்ளோ அம்சமா இருக்கு . ரெண்டு பேரும் ஒண்ணா பாக்குற அப்போ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று இருவரையும் நெட்டி முறித்தார் தேன்மொழி .

“ஆமா அண்ணி அம்சமா தான் இருக்கு ” என்று இதழை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

“சரி சரி பேசிட்டு இறுக்கமா ரெண்டு பேரும் போய் எங்க எல்லாருக்கும் பாலை ஊத்திட்டு வந்து கொடுங்க ” என்றார் தேன்மொழி.

“என்ன தேனு இங்க இருக்க பத்து பேருக்கு பாலை கொண்டு வர இவனும் போகணுமா? அந்த பொண்ணு தனியா போனாள் ஆகாதா ” என்றார் சதாசிவம் .

தனியாக தனக்கு இப்பொது வரை இதழ்யாவிடம் பேசவோ அவளிடம் நெருங்கவோ அவருக்கு வாய்ப்பு கிடைத்ததே இல்லை . சற்று முன் கூட கிச்சனுக்கு செல்பவளை தனியாக சந்திக்க எண்ணினார். இப்போது அந்த வாய்ப்பையும் கெடுத்துவிட்ட தேன்மொழியை மனதில் வறுத்துக்கொண்டே அவரிடம் கேட்டார் .

“ஏங்க நீங்க தான் எனக்கு கூட மாட எந்த ஹெல்பும் செய்யிறதில்லை. உங்களை மாதிரியே இவனையும் மாத்தணுமா ? அவன் பழகட்டும்ங்க … வீட்டுவேலை, அடுப்படியில் வேலை அது இதுன்னு எல்லா வேலையையும் பொண்ணுங்க மட்டுமே செய்யணும்னு யார் சொன்னது . இப்போ எல்லாம் காலம் மாறிடுச்சு ” என்றவர் .

“இங்க பாருங்க உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க . ரெண்டு பேரும் எந்த வேலையா இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரிச்சிகிட்டு வேலையை செய்யணும் . அவளுக்கு நீ வீட்ல இருக்க அப்போ என்ன வேலை செய்யணும்னு கேட்டு செய்து கொடுக்கணும் டா நீ. ” என்று ராஜனை பார்த்து சொன்னவர்.

“அதே மாதிரி இவனுக்கு அவ்ளோவா எழுத படிக்க எல்லாம் தெரியாது இதழு.. இனிமேல் மார்க்கெட் கடையில் வர கணக்கு வழக்கு , பண வரவு எல்லாமே அவன்கிட்டே கேட்டு அவனுக்கு உதவியா தெரியாததை சொல்லி கொடுக்கணும் சரியா ” என்று இதழை பார்த்து கூற..

இருவரிடமும் இவ்வளவு அக்கறையாக பேசும் தேன்மொழி பேசுவதற்கு சரி என்று தலையாட்டுவதை தவிர இதழ்யாவுக்கு வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க… இதழ்யா முதலில் கிச்சனுக்குள் நுழைய.. அவள் சேலை முந்தானையை பிடித்துபடி அவள் பின்னால் உள்ளே சென்றான்.

“கடவுளே! இப்படி இந்த கறுப்பன்கிட்டே என்னை மாட்டிவிட்டுட்டியே ” என்று நொந்தபடி பாலை எடுத்து சக்கரை கலந்து ஆற்றி வாங்கி வைத்து இருந்த புது டம்பளர்களில் ஊற்றினாள்.

அவளை சமையல் மேடையில் சாய்ந்தபடி அணுவணுவாக அங்கம் அங்கமாக ரசித்துக்கொண்டு நின்று இருந்தவனிடம் பால் டம்பளரை நீட்டினாள்.

“ம்ஹும் எனக்கு வேண்டாம் ” என்றான் .

“இல்ல முதல் முதல்ல இந்த வீட்ல பால் காய்ச்சி இருக்கு கொஞ்சமாவது சம்பிரதாயத்துக்கு குடிக்கணும் ” என்றவள் .  “ச்சே… இவன்கிட்டே எதுக்கு இதை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன் நான். இவன்  குடிச்சா என்ன குடிக்காட்டி எனக்கு என்ன ” என்று நினைத்தவள் அவனுக்கு நீட்டிய பால் டம்பளரை ட்ரேயில் வைத்தாள் .

“இப்போ வேண்டாம் நைட் குடிச்சுகிறேன் ” என்றவன் பார்வை அவள் கழுத்துக்கு கீழே செல்ல…

அதை கவனிக்கவில்லை இதழ் .

அவன் சொன்னதை கேட்டு “நைட் வரை இருந்தா பால் கெட்டுடும் ” என்றாள்.

“இந்த பால் கெட்டு போகாது. எப்பவும் பிரெஷா இருக்கும் ” என்றான் .

“இவன் என்ன லூசா காலையில் வாங்கின பால் எப்படி எப்பவும் கெடாதுனு சொல்றான் கருப்பன் ” என்று யோசித்தவள். பிறகு அவனிடம் எதுவும் கேட்காமல் ட்ரேயை எடுத்துக்கொண்டு வெளியே செல்லப் போக…

“இரு நீ தான் இந்த வீட்டோட எஜமானி நீ முதல்ல குடி மத்தவங்களுக்கு நீ குடிச்சிட்டு போய் குடு ” என்றான்.

“எனக்கு வேண்டாம் ” என்றவள் திரும்ப…

“சொல்றேன்ல … முதல்ல நீ குடி ” என்றவன் பால் டம்பளரை எடுத்து அவள் வாயில் வைத்து சரித்தான் .

“ம்ம்… ம்ம்… ” என்று இதழ் பாலை குடிக்க திணற..

அவள் வாயில் இருந்து டம்பளரை எடுத்தவன் அவள் இதழிலும், அதை சுற்றிலும் வழிந்த பாலை தன் நாவால் தீண்டி சுவைத்தவன் பால் குடிக்காமல் அவள் இருந்த பாலை முத்தம் வைத்து குடித்தான்.

அதை சற்றும் எதிர்பாராதவள் அவன் முத்தத்தில் திணறியவள் ராஜனை தள்ளிவிட்டு பின்னால் நகர்ந்துவள்  அந்த இடத்திலேயே வாந்தி எடுக்க… தான் அவள் வாயில் இருந்த பாலை பருகியதில் அருவருத்து தான் இப்படி வாந்தி எடுக்கிறாள் என்று நினைத்த ராஜன் .

“எவ்ளோ தைரியம் இருந்தா நான் முத்தம் கொடுத்தது பிடிக்காம இப்படி வாந்தி எடுப்ப… ” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்.

அவன் அடித்ததை இதழ் சற்றும் எதிர்பார்க்கவில்லை கண்ணீர் துளிகளோடு கன்னத்தில் கைவைத்து தடவியபடி அவனை பார்த்தவள் . அழுதுகொண்டே ” நீங்க முத்தம் கொடுத்ததுனால நான் வாந்தி எடுக்கல… நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க ” என்றாள் இதழ் .

“அப்பறோம் எதுக்கு டி வாந்தி எடுத்த… ” என்று மீண்டும் அவளை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வர…

அவன் அடிக்க வருவதில் பயந்தவள் கண்களை இருக்க மூடிக்கொண்டு “எனக்கு பால் பிடிக்காது . அந்த வாசம் வந்தாலே வாந்தி வந்திரும் ” என்று அவசரமாக சொன்னவளை அடிக்காமல் பார்த்தவன் .

அதை கேட்ட அடுத்த நொடி கோபம் மறந்தவனாக “பாக்க நல்லா கொலுக்கு மொலுக்குனு நல்ல வெண்ணை மாதிரி இருந்துட்டு பால் வாசமே ஆகாதுன்னு சொல்ற… ” என்றவன் “சரி விடு இனிமேல் உனக்கும் சேர்த்து பாலை நான் குடிச்சுகிறேன் ” என்றான் .

ஒன்றும் சொல்லாமல் கண்களை துடைத்தவள் பால் ட்ரேயுடன் கிச்சனை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் இருந்தவர்களுக்கு ட்ரேயை நீட்டினாள். அனைவரும் பாலை குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப சதாசிவம் அங்கேயே இருக்கிறேன் என்று கூறவும் .

வீட்டில் எந்த பொருட்கள் எல்லாம் எங்கே இருக்கிறது என்று இதழுக்கு சொல்லிவிட்டு இரவு ராஜனுக்கும் , இதழ்யாவுக்கும் சாந்தி முகுர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணி ரெண்டு பேரையும் ரூமுக்குள்ள அனுப்பிட்டு அப்பறோம் வரேன் என்று சொல்லி தேன்மொழி மட்டும் அங்கேயே இருந்து கொண்டார். சதாசிவத்ததையும் தன் அண்ணன்களோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.