Fling 4
“FLING அக்கௌன்ட்டை ஓபன் செய்த ஒரு மாசத்துல பதினைஞ்சாயிரம் பேருக்கு மேல எனக்கு request கொடுத்திருக்காங்க. அவங்களே இன்னும் விடின் லிஸ்ட்ஸ்ல நான் வெச்சிருக்கேன். ஆனா இவை என்ன அக்ஸ்ப்ட் கொடுக்குறா அப்பறோம் அவளாவே கான்செல் கொடுக்குறா ” என்று யோசித்தவன் “இவ தான் இவளே தான் நான் டேட் செய்ய போறேன் ” என்று மெட்டுடிவெடுத்துவிட்டு பாருவுக்கு டிபே செய்ய ஆரம்பித்தான்
அகலிகா கையில் பார்வதியின் போனைப் பிடித்தபடி, ஸ்க்ரீனில் ‘தீ…ரன் is typing…’ என்று வந்து போவதைப் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மனசுக்குள் ஒரு பயங்கர பரபரப்பு. சிறிது நேரத்தில், ஸ்க்ரீனில் ஒரு மெசேஜ் வந்தது.
“ஹலோ Paru\_1. ஏன் ரெக்குவெஸ்ட்டை கேன்சல் பண்ணிட்டீங்க? மனசு மாறிடுச்சா?” என்று அனுப்பி இருந்தான்
அதை பார்த்ததுமே அகலிகாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது . “என்ன இவன் எடுத்ததுமே நேரடியா பேசிட்டான்” என்று யோசனையில் ஸ்க்ரீனையே விரித்துகொண்டு இருத்தவளுக்கு இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. ‘பதில் அனுப்பலாமா, வேண்டாமா?’ என்று குழம்பினாள்.
“எல்லாம் இவளால வந்தது இப்போ பாரு அவன் கேள்வி கேக்குறான் நான் தான் என்ன பண்றதுனு தெரியாம குளிச்சிட்டு இருக்கேன் ” என்று முணுமுணுத்துக்கொண்டே தூங்கிக்கொண்டு இருந்த பார்வதியின் பின்னால் ஒரு செல்ல உதைவிட்டாள்
“ஹே! அஹி! ம்ஹும் வலிக்குது டி ” என்று தன் பின்புறத்தை தேய்த்துவிட்டவள் திரும்பி படுத்துக்கொண்டாள்
அவள் செய்கையில் சிரித்தவள் ‘சரி, பார்வதி போன் தானே? இவளே பேசிப் பாருன்னு சொல்லியிருக்கா. இப்போதைக்கு இவன் யாருன்னு தெரியாது. சாதாரணமாகப் பேசிப் பார்ப்போம். பிடிக்கலைன்னா அப்புறம் ப்ளாக் பண்ணிடலாம்,’ என்று முடிவெடுத்தாள்.
அகலிகா ஒரு ஒருமூச்சோடு டைப் செய்ய ஆரம்பித்தாள்
“நான் மெசேஜ் அனுப்பி இவ்ளோ நேரமா பாத்துட்டு இருக்கா என்ன ஆச்சு இவளுக்கு ஒரு ரிப்ளை பண்ண என்ன இவளுக்கு” என்று கடுப்பில் திரையை விரித்துகொண்டு இருந்தான் தீரன்
அப்போது paru\_1… typing .. என்று மேலே வர தீரன் பாருவின் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தான்
“ஹாய்… இல்ல, மனசு மாறல. அது தெரியாம பட்டிருச்சு. அது பை மிஸ்டேக் ,சாரி உங்களை CONFUSE பண்ணினத்துக்கு” என்றாள்
அவள் மெசேஜ் அனுப்பிய அடுத்த வினாடி, ‘தீரன் is typing…’ என்று மீண்டும் வந்தது. இவன் இவ்வளவு வேகமா பதில் அனுப்புவான் என்று அகலிகா நினைக்கவில்லை.
“தெரியாமப் பட்டிருச்சா? ஆனா, முதல்ல நீங்கதான் ரெக்குவெஸ்ட் அனுப்பி கேன்சல் பண்ணீங்களே . அப்போ அதுவும் தெரியாமப் பட்டிருச்சா? உங்க போன்ல ஏகப்பட்ட ‘மிஸ்டேக்’ நடக்குது போலிருக்கே, மிஸ் பாரு” என்று சிரித்துக்கொண்டே TYPE செய்து அவளுக்கு அனுப்பி இருந்தான் தீரன்
அவன் மெசேஜ்ஜை படித்ததும் அகலிகாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்தவிட்டது. ஜாலியான ஆள் போல சீரியஸ்ஸா எதுவும் கேட்பான்னு நினைச்சேன்” என்று யோசித்தபடி வந்து தன் கட்டிலில் அமர்ந்தவள் டைப் செய்ய ஆரம்பித்தாள்
” ம்ம், இருக்கலாம். ஆனா, உங்க ப்ரொபைல் நல்லா இருந்துச்சு, நானும் என் பிரெண்டும் பார்த்துட்டு இருந்தோம். மொபைலை பிடுங்க போய் இப்படி ஃபிரெண்ட் ‘அக்சப்ட்’ ஆகிருச்சு” என்று உண்மையை சொன்னாள் அகலிகா .
“சந்தோஷம்” என்று ஒரு சின்ன சிரிப்பு இமோஜி அனுப்பியவன் “சரி, இந்த ‘ஃபிரெண்ட்’ தான் இப்போ சேட் பண்ணிட்டு இருக்காங்களா என்னோட”, இல்லை உண்மையில FLING ID-ல இருக்க Paru\_1 தான் என்கிட்டே பேசுறாங்களா?” என்றான்
அவன் பதிலை படித்ததும் “ம்ம்ம்… ஆளு ஸ்மார்ட்டா தான் இருக்கான். இவனை சமாளிக்க முடியாது” என்று யோசித்தவள்
“ஹேய்! மிஸ்டர் தீரன் . நான் தான் Paru\_1. இது என்னோட ப்ரொபைல் தான்” என்று அவனிடம் பொய் சொன்னாள்
மீண்டும் ஒரு சிரிக்கும் இமோஜி அனுப்பிவிட்டு “அப்போ உங்க உண்மையான பேரு Parvathi இல்லையா? பரவாயில்லை. என் பேரு தீரன். உங்களை ‘மீட்’ பண்றதுல சந்தோஷம்.”என்றான்
“ம்ம்.. ஆமா என் புல் நேம் பார்வதி தான்” என்றவள் “நைஸ் டு சேட் வித் யூ” என்றாள்
“ஓகே சண்டையெல்லாம் விடுங்க. நீங்க ஏன் இந்த Fling ஆப்ல இருக்கீங்க? சும்மா டேட்டிங் போலாமான்னு யூஸ் பண்ண இந்த ஆப்ல இருக்கீங்களா? , இல்லை… ஜாலிக்காக வந்தீங்களா?” என்றான் அவன் நோக்கம் இந்த ஆப்பை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இதை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே இந்த கேள்வி. இருந்தாலும் பாரு(அகலிகா) எதற்காக இந்த ஆப்பை பயன்படுத்தி தன்னிடம் பேசுகிறாள் என்றும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் சேர்ந்து அவளிடம் இந்த கேள்வியை கேட்க வைத்திருந்தது
இந்தக் கேள்வி அகலிகாவைச் சற்றே யோசிக்க வைத்தது. இவ்வளவு நேரம் இருந்த அவினாஷ் மீதான கோபமும், வலியும் மீண்டும் நினைவுக்கு வந்தது.
“உண்மையாச் சொல்லணும்னா, எனக்கே தெரியல. இப்பதான் ஒரு பெரிய ‘ரிலேஷன்ஷிப்ல இருந்து ஏமாந்து போய் வந்திருக்கேன்.அதிலிருந்து என் கவனத்தைத் திசை திருப்பலாம்னு என் பிரென்ட் பண்ணின வேலை அதனால வேற வழியே இல்லாம உங்க கூட பேசிட்டு இருக்கேன்” என்று ஒரு சோக இமோஜியை அவனுக்கு அனுப்பினாள்
“ஓ! காட் பாரு! இனம் ரியலி சாரி .நான் வேணா போகட்டுமா? உங்களுக்கு நான் தொந்தரவு கொடுக்க விரும்பல” என்று உண்மையாக அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல் பதில் அனுப்பி இருந்தான் தீரன்
“ச்சே! ச்சே ! நான் அப்படி நினைக்கல , பட் உங்ககிட்டே பேசுற அப்போ ஜஸ்ட் ரிலாக்ஸ்டா இருக்க மாதிரி பீல் ஆகுது எனக்கு”என்றாள்
“பைன்!” என்றவன் “ஓ, புரியுது. பிரேக் அப்ன்னா ரொம்ப கஷ்டம் தான். அதைப்பத்தி பேச உங்களுக்கு விருப்பமா பாரு , இல்ல… வேற எதாவது பேசி டைம் கடத்தலாமா?”என்றான்
அவனின் அக்கறையான வார்த்தைகள் அகலிகாவைச் சற்றே யோசிக்க வைத்தது. இவன் மற்றவர்களைப் போல இல்லாமல், அக்கறையாகப் பேசுகிறானே என்று நினைத்தாள்.
“தேங்க்ஸ் மிஸ்டர் தீரன். இப்போதைக்கு வேற எதாவது பேசுவோம். சரி, நீங்க ஏன் Fling-ல இருக்கீங்க?” என்றாள்
“நானா? நான் இப்பதான் ஒரு பெரிய வேலையை முடிச்சேன். பல மாசமா அதுலதான் என் நேரம் எல்லாம் போச்சு. இப்போ எனக்கு ஒரு பிரேக் வேணும். கொஞ்சம் ஜாலியா இருக்கணும். சும்மாப் பேசிப் பழக ஒரு நல்ல ஆள் வேணும். டேட் பண்ணலாம், அப்புறம் எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம். யாருக்கும் எந்தக் கமிட்மென்ட்டும் வேண்டாம்னு நினைச்சேன் , அதே போல அந்த டேட் நல்லா இருந்தால் போதும்னு தோணிச்சு.”என்றான் வெளிப்படையாக
அவனது நேர்மையான பதிலில் அகலிகாவுக்கு நம்பிக்கை வந்தது. அவினாஷைப் போல பொய் சொல்லாமல், தன் எதிர்பார்ப்பை வெளிப்படையாகச் சொல்வது பிடித்திருந்தது.
“பரவால்லையே! ரொம்ப ஓப்பனா பேசுறீங்க கேட்கவே நல்லா இருக்கே… எந்தப் பிரச்சினையும் இல்லாம, ஜாலியா… ரைட்!” என்றாள்
” கரெக்ட்டா சொன்ன” என்று ஒரு ஹை பை ஈமோஜியை அநுப்பியவன் சரி, இந்த வீக்கெண்ட் நீ பிரீயா பாரு? என்ன பிளான்?” என்றான்
“ம்ஹும்.. இதுவரை எந்த பிளானும் இல்லை” என்றாள்
“ஓகே, உங்க லொகேஷன்?” என்று அடுத்த கேள்வி வந்தது அவனிடம் இருந்து.
“ஏன்! லொகேஷன் தெரிஞ்சா என்னை மீட் பண்ண போறிங்களா?” என்று சிரிப்பு ஈமோஜியுடன் பதில் அனுப்பினாள்
“ம்ம்.. எஸ்! நான் ஒரு ஒர்க் விஷயமா சென்னைக்கு வரப்போறேன். ஐ மீன் இந்தியா . அதான் உன் லொகேஷன் தெரிஞ்சா பிரீ டைமில் உன்னை மீட்.. டேட் .. அதுக்காக தான் கேட்டேன்” என்றான்.
“ரொம்ப ஸ்பீட் தீரன் நீங்க..” என்றவள். “நானும் சென்னை தான் “என்றாள்
“வாவ்! நைஸ்!” என்றவன் “நான் ஒரு புது மைக்ரோ ப்ரூவரி (மதுபானக் கூடம்) போய் பார்க்கலான்னு இருந்தேன். “Would you be interested in meeting, if you don’t mind?” என்று அவளை சந்திக்க அழைப்பு விடுத்தான்.
திடீரென்று டேட்டிங் அழைப்பு வந்ததும் அகலிகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன்பு இப்படி ஒரு அழைப்பை அவள் சந்தித்ததில்லையே. அவினாஷ் உடனான காதலில் அவள் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கடந்து இருக்கிறாள் இது அவளுக்கு புதிதாக இருந்தது, என்ன பதில் அனுப்புவது என்று அவளுக்கு தெரியவில்லை.
அகலிகாவின் அமைதியைப் பார்த்த தீரன், ‘என்ன ஆச்சு? இன்னும் பதில் வரல” என்று யோசித்தான்
“ஹே, கட்டாயம் வரணும்னு இல்ல. இப்போவே நீ முடிவு சொல்ல வேண்டாம். TAKE YOUR TIME”என்று அவனே மெசேஜ் அனுப்பி இருந்தான்.
அவனின் மெசேஜ் அவளுக்கு ஒரு தைரியத்தைக் கொடுத்தது.
“எனக்கு ஒன் டே டைம் கொடுங்க, தீரன். நாளைக்கு சொல்றேன்” என்றாள் .
“ஓகே! நோ ப்ரோப்லேம் . பொறுமையா யோசி. குட் நைட் Paru. நாளைக்குப் பேசலாம்.”
“குட் நைட், தீரன்.”
போனை வைத்துவிட்டு அகலிகா மெத்தையில் அப்படியே சாய்ந்தாள். மனதில் ஒரு இனம் தெரியாத சந்தோஷம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் மனம் லேசாக உணர்ந்தது. அவினாஷின் நினைவுகள் இப்போதைக்கு இல்லை. ‘ஒரு வேளை பார்வதி சொன்னது சரி தானோ? மூவ் ஆன் செய்ய இதுதான் சரியான வழியோ?’ என்று யோசித்தபடியே கண்ணயர்ந்தாள்.
மறுநாள் காலை, பார்வதியின் கத்தல் சத்தம் கேட்டு அகலிகா எழுந்தாள்.
“ஏய் அஹி… என்னடி இது! நீயா அவன்கிட்டப் பேசி இருக்க? எதுக்குடி அவசரப்பட்டு டேட்டுக்கு போகச் சம்மதிச்ச?” என்றாள் .
தூக்கத்தில் இருந்தவள் உடலை முறுக்கிக்கொண்டு எழுந்தவள் “பாரு! நான் இன்னும் ஓகே சொல்லலடி, ஜஸ்ட் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்” என்றாள்
“அது சரி” அவினாஷை பிரேக் அப் பண்ணி ஒரு ஒன் வீக் தாண்டி ஆகிருக்கு என்றாள்
“பாரு! என்னை கில்ட்டா பீல் பண்ண வைக்காத. நான் தப்பு பண்ணல” என்றாள் வடிய முகத்தோடு
“ஹே இல்ல இல்ல டி , இந்த் மெசேஜ் பார்த்ததும் ஒரு எமோஷன்ல பேசிட்டேன் டி ” என்று அகலிகா அருகில் வந்து அமர்ந்தாள் .
அகலிகா மெல்ல சிரித்தவள். “போன வாரம் பப்ல நீதானே பாரு , ‘மூவ் ஆன் பேபி’ன்னு கூவின? இப்போ என்ன ஆச்சு?” என்றாள்
