News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உன் ரகசிய ரசிகை நான் 231

by Layas Tamil Novel
201 views
A+A-
Reset

EPI 231

வெங்கடாசலத்தின் முதல் மனைவியும் அவரது மகளுமான அபியும் மரகதமும் திடீரென வெங்கடாச்சலம் வீட்டிற்கு வந்துவிட அவர்களை கண்ட மற்றவர்கள் அனைவருக்கும் எரிச்சலாக தான் இருந்தது.

 ஆனால் சங்கவி மட்டும் அபியுடனும் மரகதத்துடனும் நெருக்கம் காட்ட முயன்றால்.

 ஆதியும் துர்காவும் டென்மார்க்கிற்க்கு செல்ல அனைத்து பொருட்களையும் வேலையாட்களிடம் கொடுத்து காரில் வைக்க சொல்லிவிட்டு இருவரும் ஹாலில் சோகமாக அமர்ந்திருந்தனர் .

 ஆதிக்கு இந்த ஒரு சூழ்நிலையில் தன் அம்மாவை விட்டுவிட்டு டென்மார்க் செல்ல விருப்பமில்லை.

 ஆதி இடம் மரகதத்தை பற்றியும் அபியை பற்றியும் தெரிந்து கொண்ட துர்காவுக்கு விசாலக்ஷியை இங்கே விட்டுச் செல்ல மனமில்லை .

 அபியும், மரகதமும் சங்கவியுடன் சேர்ந்து வெளியில் ஷாப்பிங் சென்று இருந்தனர்.

 ஹாலில் இவர்கள் இருவரும் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்த வெங்கடாசலம் அவர்களிடம் வந்தவர்.

 நீங்கள் ரெண்டு பேரும் எதுக்காக இவ்வளவு சோகமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும் என்றவர் ஆதியைப் பார்த்து.

 ஆதி நீ பயப்படற அளவுக்கு இங்கே எதுவும் நடந்திடாது நான் உன் அம்மாவை எங்கேயும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அது உனக்கு நல்லாவே தெரியும் இப்படி திடீர்னு மரகதமும் அபியும் வருவாங்கனு நான் எதிர்பார்க்கல.

அவங்க ரெண்டு பேரும் இப்போ என்ன காரணத்துக்காக அதுவும் எனக்கும் விசாலாட்சிக்கும் 60-ம் கல்யாணம் நடக்கிற விஷயம் கேள்விப்பட்டு வந்திருக்காங்கன்னா கண்டிப்பா ஏதோ குழப்பம் பண்ணத்தான் வந்திருக்காங்க.

நான் ஒன்றும் மரகதத்து மேலயும், அபி மேலயும் பாசம் வச்சு அவங்க ரெண்டு பேரையும் இங்கே இருக்க சொல்லல… காரணம் இல்லாம அவங்க ரெண்டு பேரும் இங்கே வந்திருக்க மாட்டாங்க ஆதி என்றார்.

 என்னப்பா சொல்றீங்க என்றான் ஆதி.

 ஆமா ஆதி ஏதோ காரணமாத்தான் அவங்க ரெண்டு பேரும் இங்கே வந்திருக்காங்க.

அவங்கள வெளியே எங்கேயும் தங்க வச்சா அவங்களோட அடுத்த நடவடிக்கை என்னங்கறத நமக்கு தெரியாமல் போய்விடும்.

அதனாலதான் நான் நம்ம கூடவே இருக்கட்டும்னு இங்க இருக்க சம்மதிச்சிருக்கேன் என்றார் வெங்கடாசலம்.

 என்ன வேணா இருக்கட்டும் அப்பா ஆனா அம்மா முகத்தை பாருங்க அவங்க ரெண்டு பேரும் பந்தத்தில் இருந்து அவங்க முகத்துல சந்தோசமே இல்ல அவங்க கஷ்டப்படுவதை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தான் ஆதி.

 அவ கஷ்டப்படுறது எனக்கும் சங்கடமாத்தான் இருக்கு ஆதி கொஞ்ச நாள் தான் இதெல்லாம் சரியாயிடும் அவங்க எதுக்காக இங்கே வந்துருக்காங்கன்னு இருக்கிற வரைக்கும் அவங்க இங்கு இருக்கிறது தான் நல்லது என்று சொன்னவர் விசாலாட்சி இடம் வந்து.

 விசாலம் எனக்காக கொஞ்ச நாள் பொறுத்துக்கோ அவ எதுக்காக இங்க வந்திருக்கான்னு எனக்கு தெரியல ஒருவேளை அவங்களோட எண்ணம் தப்பா இருந்தா அதை நம்ம குடும்பத்தை தானே பாதிக்கும்.

அதுக்காகத்தான் நான் அவங்கள இங்கே தங்க வைத்திருக்கிறேன். நம்ம பக்கத்துல இருந்தா தான் அவங்களோட ஒவ்வொரு அசைவையும் நம்மனால கண்காணிக்க முடியும் என்று வெங்கடாச்சலம் கூற.

அவர் சொல்வதும் சரியாகத்தான் இருக்கும் என்று யோசித்த விசாலாட்சி சரிங்க நான் எதுவும் சொல்லல உங்க விருப்பப்படியே எதுவும் நடக்கட்டும்.

 ஆனா அவங்களால திரும்பவும் நம்ம குடும்பத்துல எதுவும் பிரச்சனை வந்துச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் அவ்வளவு தான் என்றார் விசாலாட்சி.

 அவர் சொன்னதை கேட்ட கதிரும் கீர்த்திகாவும் விசாலாட்சி இடம் வந்து ஆமப்பா அவங்க அம்மாவ கஷ்டப்படுத்த மாறியும் அல்லது இந்த வீட்ல வேற யாரையும் கஷ்டப்படுத்தற மாதிரியும் பேசினாங்கன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம் என்று கதிர் கீர்த்திகாவுடன் சேர்ந்து கொண்டு சொல்ல..

 அப்போ அவங்க ரெண்டு பேரும் என்ன கஷ்டப்படுத்தினா பரவாயில்லையா என்று கேட்டார் வெங்கடாசலம்.

 ஆமா இப்படி கேட்டுட்டீங்க நீங்க வேற அத்தை வேறையா உங்க ரெண்டு பேரையும் யாரு கஷ்டப்படுத்தினாலும் அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கீர்த்திகா கூற..

 கீர்த்திகாவின் தலையை வாஞ்சையாக வருடிவிட்ட வெங்கடாசலம் என்னோட மருமகள ரெண்டு பேரும் மகனுங்க ரெண்டு பேரும் இருக்கிறப்போ நான் யாருக்காக எதுக்காக பயப்படனும் நீங்க எல்லாம் என் பக்கத்துல இருந்தாலே நான் எல்லா விஷயத்தையும் கடந்து வந்திடுவேன் என்றார்.

 கதிர் ஆதியிடம் வந்து அண்ணா உனக்கு ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு நீ கெளம்பலையா ஏன் இன்னும் இங்கேயே உட்கார்ந்து இருக்க என்று கேட்டான்.

மரகதமும் அபியும் இங்கே வந்ததிலிருந்து எனக்கு இந்த வீட்டை விட்டு போகவே மனசு இல்லை என்றான் ஆதி.

 அதை பற்றி எல்லாம் நீ கவலைப்பட வேண்டாம் ஆதி நீ முதல்ல துர்காவை கூட்டிட்டு போய் அங்க இருக்குற வேலையெல்லாம் முடிச்சிட்டு வா ஒரு பத்து நாள் வேலை தானே அதுக்குள்ள என்ன நடந்திட போகுது அதுவும் இல்லாம நாங்க இங்க இத்தனை பேர் இருக்கோமே நீ என்ன கண்டதை போட்டு மனசுல குழப்பிக்கிட்டு இருக்க நாங்க எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்குறோம் என்று துரையும் கனகாவும் கீர்த்திகாவிற்கு தைரியம் சொல்ல…

 இவர்களெல்லாம் இருக்கும் தைரியத்தில் ஆதி துர்காவுடன் டென்மார்க் கிளம்பினான்.

 ஆதியையும் துர்காவையும் ஏர்போர்ட்டில் டிராப் செய்துவிட்டு வருவதாக கீர்த்திகாவும் கதிரும் அவர்களுடன் சென்றனர்.

 இவர்கள் நால்வரும் ஏர்போர்ட்டுக்கு வர அவர்களுக்கு முன்னதாகவே ஸ்ரீயும் ரியாவும் வந்து இருந்தனர்.

 நிலானி கர்ப்பமாக இருப்பதால் அவளை அதிகம் வெளியில் விக்கி எங்கும் அழைத்து வரவில்லை.

 இவர்களை செண்ட் ஆப் செய்ய விக்கியும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தான். ஆதிக்கும் துர்காவுக்கும் ஒரு கிப்ட் கையில் கொடுத்த நீங்க ரெண்டு பேரும் டென்மார்க் போன பிறகு எப்ப ஃப்ரீயா இருக்கீங்களா அப்போ இந்த கிப்ட் பிரிச்சு பாருங்க ஒன்னும் அவசரம் இல்ல என்றான் விக்கி.

 அப்படி என்னடா இருக்கு இந்த கிப்ட்ல என்று ஆதி கேட்க அங்க போய் பிரிச்சு பாரு உனக்கு புரியும் என்று சொல்லி சிரித்தான்.

ரியா விடமும் ஸ்ரீ இடமும் வந்த விக்கி நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தான் அதை மனசுல ஞாபகம் வச்சுக்கோங்க அவங்க ரெண்டு பேருக்காவது கல்யாணம் ஆயிட்டு அவங்க இப்போ டென்மார்க் இருக்கு பிசினஸ் விஷயமா போகல ஹனிமூனுக்காக போறாங்க ஓகேவா நீங்க ரெண்டு பேரும் அவங்கள சும்மா சும்மா தொந்தரவு செய்யக்கூடாது வேலை நேரம் போக ஆதியையும் துர்காவையும் தனியா விட்டுடனும் சரியா என்றான் விக்கி.

 விக்கி சொல்வதைக் கேட்டு ஆதி திரும்பி துர்காவைப் பார்த்து அப்போ நாம ஹனிமூன் தான் போறோமா? ஆட் சூட்டிற்கு இல்லையா துர்கா என்றான்.

 துர்கா வெட்கப்பட்டு கொண்டு அப்படியும் வச்சுக்கலாம் என்றால்.

 ஆதியால் இதை நம்பவே முடியவில்லை துர்கா மாடலிங் போட்டோ சூட் காகத்தான் டென்மார்க் போகிறோம் என்று அவன் நினைத்திருக்க ஆனால் அவள் முதற்கொண்டு மற்றவர்கள் அனைவரும் தங்கள் ஹனிமூனிற்கு செல்வதாக தானே நினைத்திருக்கிறார்கள் இது ஏன் தனது தனக்கு தோன்றாமல் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டான்.

 பிளைட் அனௌன்ஸ்மென்ட் வந்துவிட அனைவரிடமும் விடை பெற்று நால்வரும் டென்மார்க் கிளம்பினர்.

❤️

 பவனும் மதுவும் அவர்களது திருமணத்திற்காக வீட்டில் உள்ளவர்களுக்கு ஆடைகள் எடுக்க இருவரும் சென்னையில் உள்ள பிரதான கடை ஒன்றிற்கு சென்றிருந்தனர்.

 பவனின் அம்மா இவர்கள் இருவரையும் சென்று அனைவருக்கும் ஆடைகள் எடுத்து வர சொல்லி இருந்ததால் இவர்கள் மட்டுமே கடைக்கு வந்திருந்தனர்.

 அனைவருக்கும் ஆடை எடுத்து முடித்த பிறகு மதுவிற்கு பவன் தான் ஆடை தேர்வு செய்வேன் என்று அவளுக்காக புடவைகள் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 இருப்பதிலேயே அவனுக்கு பிடித்தமான பச்சை நிற புடவையை எடுத்து மதுவின் மேல் வைத்து பார்த்தவன் அது அவள் நிறத்திற்கு அழகாக இருக்கவும் அதை அவளுக்கு ட்ரையல் சாரி போல கட்டி காட்டச் சொல்லி அங்கே பணி புரிந்த பெண்ணிடம் கூற…

 மதுவை அங்கே இருந்த ஒரு சிறிய ஸ்டூலின் மேல் ஏற்றி நிற்க வைத்துவிட்டு அவளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சை பட்டை அவள் அணிந்திருந்த ஆடையின் மேலேயே கட்டி காட்ட ஆரம்பித்தார் அந்தப் பெண்.

 மதுவிற்கு சேலை முழுவதுமாக கட்டி வைத்து கட்டி வைத்தேன் அதை பவனிடம் காட்ட…

 பச்சைப்பட்டில் மது பார்ப்பதற்கு மீனாட்சி அம்மன் போல மிகவும் அழகாக காட்சியளித்தால்.

 அவளை வைத்த கண் வாங்காமல் பவன் பார்த்துக் கொண்டு இருக்க…

 சேல்ஸ் வுமன் பவன் மதுவையே கண்ணிமைக்காமல் பார்த்ததை கண்டு.. மதுவிடம், மேடம் சார் உங்களை ரொம்ப ரசிக்கிறார் போல என்று சொல்லி கிண்டல் செய்ய…

 மது வெட்கப்பட்டுக் கொண்டே நிமிர்ந்து பவனைப் பார்த்தவள். அந்த பச்சை சேலையில் அவள் மிகவும் அழகாக இருப்பதையும் அதற்கு மேல் அவளுக்கு அழகு கூட்டும் விதமாக அவள் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்து ரசித்தவன்.

 இந்த சேலையில நீ ரொம்ப அழகா இருக்க மது இந்த சேலையில என்று பவன் சொல்லிக்கொண்டு இருக்க…

அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவரின் முகம் அப்படியே கலவரமாக மாறியது.

 அவள் ஏன் இப்படி கலவரம் ஆகிறாள் என்று யோசித்தபடி பவன் பின்னால் திரும்ப போக அதற்குள் அவனுக்கு பின்னால் இருந்து கைதட்டும் சத்தம் ஒன்று கேட்டது.

 இவ்வளவு நேரம் மதுவையே பார்த்துக் கொண்டிருந்த பவன் தன் பின்னால் கைதட்டும் சத்தம் கேட்கவும் யார் என்று திரும்பிப் பார்க்க.. அங்கே நின்று இருந்தவனை பார்த்து பவனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

 அவர்களுக்கு எதிரில் கைதட்டியபடி அவர்களைப் பார்த்து சிரித்தபடியே வந்தான் மதுவின் முதல் கணவன் ரவி.

 அவனை இங்கே இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் மது அவனை மறந்தே போயிருந்தாள்.

  மது ரவியை மறக்க மிகவும் சிரமப்பட்டு இருந்த நிலையில் பவன் தான் அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

 அவள் கடந்த காலங்களை எல்லாம் தாண்டி இந்த நிலைக்கு வர பவன் மிகவும் உதவியாக இருந்தான்.

 ரவி மதுவிற்கு செய்த கொடுமையும் அவள் தங்கை நிலானிக்கு செய்த கொடுமையும் அவள் தங்கையே திருமணம் செய்து கொள்ள அவன் போட்ட சதித்திட்டம் எல்லாம் நினைவிற்கு வந்து போக…. இவ்வளவு நேரம் வெட்கத்துடனும் சந்தோசமாகவும் இருந்து அவள் முகம் அப்படியே இறுக்கமாக மாறியது.

 அவர்களை இருவரையும் பார்த்தபடி வந்த ரவி இரண்டு பேருக்கும் கல்யாணம் போல… அதுக்காகத்தான் பர்சேஸ்க்கு வந்திருக்கீங்களா என்றான் ரவி.

 அவனைப் பார்த்ததும் மது பவனின் பின்னால் ஒளிந்து கொள்ள… அவனின் தோளில் கை வைத்த படி மது நின்று இருந்தால்.

 பவன் என்ன பின்னால் ஒளிந்து கொண்ட மதுவை பார்த்து என்ன மது இன்னமும் நீ என்ன பார்த்து பயந்துட்டு தான் இருக்கியா… பயப்படாதே மது நான் உன்னை எதுவும் செய்திட மாட்டேன் என்றபடி அவர்கள் அருகில் நெருங்க…

 அவனின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு நின்றிருந்த மது ரவி அவள் அருகில் நெருங்கி வருவதை பார்த்ததும் மிகவும் பயந்து போனால்.

 நம்ம போகலாம் வா….என்று அவன் கையைப் பிடித்து இழுத்து அங்கிருந்து செல்ல போக…

 எங்க போறீங்க மது ஏன் இப்படி அவசர படுறீங்க நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன் பயப்படாதீங்க என்று சொல்லி வேகமாக அவள் முன்பு சென்று நின்று அவர்கள் செல்லும் வழியை தடுத்தபடி நின்று இருந்தான் ரவி.

 மது ரவியை கண்டு பய இன்னமும் பயந்து நடுங்குவதை பார்த்த பவனுக்கு அவள் மீது சற்று கோபம் வரத்தான் செய்தது. இருந்தும் அதை காட்டிக் கொள்ள இப்பொழுது நேரமில்லை என்பதை உணர்ந்தவன் அவளை இழுத்து தன் பின்னால் நிற்க வைத்தவன் ரவியிடம் வந்து.

 இப்போ உனக்கு என்ன வேணும் எதுக்கு இப்போ வீனா எங்க ரெண்டு பேரையும் டிஸ்டர்ப் பண்ற என்று கேட்டான்.

நான் ஒன்னும் உங்களை டிஸ்டர்ப் பண்றதுக்காக இங்க வரலையே நீங்க எப்படி இந்த கடைக்கு பர்சேஸ் பண்ண வந்திருக்கீங்களோ நானும் அதுக்காகத்தான் இங்கே வந்தேன்.

 நான் டிரஸ் எடுக்க போகும்போது நீங்க ரெண்டு பேரும் இங்கே சந்தோஷமா சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கிறத பார்த்தேன் முதல்ல எனக்கு என்னன்னு போகலாம் தானே நினைத்தேன் ஆனா உன் பின்னாடி என்ன பார்த்து பயந்து மறஞ்சு நிக்கிறாளே அவ சந்தோசமா சிரிச்சிட்டு இருக்கிறதை பார்க்க என்னால முடியல.

 என்ன இத்தனை நாளா ஜெயில்ல போட்டு அடச்சி வச்சிட்டு என்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு இவன் மட்டும் எப்படி நிம்மதியா சந்தோசமா இருக்கலாம் அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கிற இந்த நேரத்தை கெடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்று சாதாரணமாக தன் வஞ்சகத்தை அவர்களுக்கு தெரிவித்தான் ரவி.

 அவ சந்தோசமா இருந்தா உனக்கு என்னடா வந்துச்சு நீ எதுக்கு அவளை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கிறேன் முதல்ல இங்கிருந்து போ என்று பவன் ரவியை அங்கிருந்து போகச் சொல்ல….

 அது எப்படி இந்த சொல்லலாம் அவ உங்களுக்கு இன்னும் பொண்டாட்டியா ஆகவில்லை இதற்கு முன்னாடி நான் தான் அவளுக்கு புருஷனா இருந்தேன். அவ எப்படி இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன் அவ சிரிக்கணும் நாளும் அழுகணும்னாலும் எதுவாயிருந்தாலும் நான் சொல்றபடி தான் அவ செய்யும் அப்படி எல்லாம் அவளை நான் பார்த்து பார்த்து எனக்கு தகுந்த மாதிரி மாத்தி வச்சிருந்தேன்.

 இன்னைக்கு அவ சந்தோசமா சுதந்திரமா அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கிறத பார்க்கும்போது எனக்கு உள்ளுக்குள்ள எல்லாம் பத்திக்கிட்டு வருது அவள இங்கேயே இப்பவே கழுத்தை நெரிச்சு கொல்லனும் போல இருக்கு என்று தன் ஆத்திரமான முகத்தை பவனிடம் காட்டியபடி மதுவை நோக்கி ரவி நெருங்கி வர…

 ரவி வருவதை பார்த்ததும் பயந்து போன மது பவனின் சட்டையை இருக்க பற்றி கொண்டு அவன் முதுகு பின்னால் தன்னை ஒளித்துக் கொள்ள…

 ரவி மதுவை நெருங்கி வருவதை பார்த்த பவன் இவ்வளவு நடந்த பிறகும் அவன் இன்னும் மதுவை மிரட்டுவதை பார்த்து எரிச்சல் அடைந்த பவன் அவன் மார்பில் கைவைத்து தங்கள் அருகில் வரவிடாமல் பின்னுக்கு தள்ளியவன் ஒழுங்கும் மரியாதையா இங்கிருந்து நீ வெளியே போயிடு இல்லேன்னா நடக்கிறதே வேற என்றான்.

 போக முடியாது என்ன செய்வ இது என்ன உன் அப்பன் வீட்டு கடையா நான் இங்கேதான் நிற்பேன் என்றான் ரவி திமிராக.

 அவன் அப்படி சொன்னதும் இனிமேலும் இங்கு நிற்பது சரியில்லை என்று நினைத்துக் கொண்ட மது பவனிடம் பவன் நீ எதுக்கு தேவையில்லாம அவங்க கிட்ட பேசிட்டு இருக்க நம்ம முதல்ல இங்கிருந்து போகலாம் வா நம்ம இன்னொரு நாள் வந்து இதையெல்லாம் எடுத்துக்கலாம் என்று கூற…

 இவனுக்காக எதுக்கு முதலில் நீ பயந்துட்டு போகணும் அவன் இங்க இருந்தா நமக்கென்ன நம்ம வந்த வேலையே முதல்ல பார்த்துட்டு போவோம் என்று சொன்னவன் நீ கட்டியிருக்கிற சில உனக்கு பிடிச்சிருக்கு தானே என்றான் அவள் ரவியை பார்த்தபடி பயந்து கொண்டே பவனை பார்த்து ம்ம்ம்ம்…. பிறகு பிடித்திருக்கிறது என்று தலையாட்ட.

 அங்கே இருந்த செல்ஸ்கேர்ளை அழைத்து மதுவை அழைத்துக் கொண்டு போய் அவள் சேலையை எடுத்து பேக் செய்து கொடுக்க சொன்னான்.

 அந்தப் பெண்ணும் மதுவை அழைத்துக் கொண்டு போய் அவள் கட்டி இருந்த செயலையை அவிழ்த்து அதை அழகாக மடித்து பேக் செய்தவள் கொண்டு வந்து பவனிடம் நீட்ட…

 அதை கைநீட்டி வாங்கும் போது சரியாக ரவி குறுக்கே புகுந்து அந்த சேலையை அவன் கையில் இருந்து வெடிக்கென பிடுங்கினான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.