மூர்க்கன் 41
அந்த நீலக் கடலும், வெண் மணல் பரப்பும் சூழ்ந்த போரா போரா தீவின் சொகுசு விடுதி அறைக்குள் அதிகாலைச் சூரியனின் கதிர்கள் மெல்ல நுழைந்தன. கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே அலைகளின் ஓசை மென்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தேனிலவுக்காக இங்கு வந்திருக்கும் ராவண் மற்றும் இளங்கிளி இருவருமே அன்று காலையில் மிகவும் தாமதமாகத்தான் கண் விழித்தார்கள்.
புதிய இடம், கட்டுக்கடங்காத காதல், இரவு முழுதும் நீடித்த உடலளவிலான நெருக்கம் என அனைத்தும் சேர்ந்து அவர்களின் உறக்கத்தை நீட்டித்திருந்தது. அவர்களுக்காக அந்த விடுதி ஊழியர்கள் காலை உணவிலிருந்து அனைத்து வசதிகளையும் அறையிலேயே தயார் செய்து வைத்திருந்தார்கள்.
முதலில் கண் விழித்த ராவண், . அவன் அருகே கழுத்து வரை போர்த்திக்கொண்டு ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த இளங்கிளியைப் பார்த்தவன். அவள் தூங்கும் அழகை கண்டு ரசித்தவன் மெல்ல குனிந்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்தவன் குளியலறை சென்று முகம் கழுவிவிட்டு வந்தான்.
வெற்று மார்புடன், ஒரு மெல்லிய லோயர்ஸ் மட்டும் அணிந்திருந்தவன், ஹாலுக்கு வந்து அங்கிருந்த சொகுசு சோபாவில் சாய்ந்து அமர்ந்து டிவியை ஆன் செய்து சர்வதேசச் செய்தியைப் பார்க்கத் தொடங்கினான்.
சிறிது நேரம் சென்றிருக்கும், தூக்கம் களைந்து கண் விழித்தாள் இளங்கிளி. உறக்கக் கலக்கமும், ராவணின் காதல் லீலைகளில் சேர்ந்து கொண்ட கலைப்பும் அவள் முகத்தில் அப்படியே தெரிந்தன. குளித்துவிட்டு வந்தவள், தன் உடலை முழுமையாக மறைக்க ஆடை ஏதும் சட்டெனக் கிடைக்காததால், அங்கிருந்த ராவணின் டி-ஷர்ட்டை எடுத்து அப்படியே தலைவழியாக மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள். அவளது குட்டையான உடம்பிற்கு அந்த டி-ஷர்ட் முழங்கால் வரை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது.
அவள் நடந்து வரும் அரவமும், இளங்கிளியின் மெல்லிய கொலுசொலியும் கேட்டு நிமிர்ந்து பார்த்த ராவணனின் பார்வையில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அவளது ஒல்லியான, சிறிய உடம்பில் தன் ஆடை ஸ்பரிசிப்பதையும், அவள் உயரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்த ஆடையும். அதையும் மீறி அவளது தொடைப் பகுதி அரைகுறையாகத் தெரிவதையும் ராவண் ரசித்துப் பார்த்தான்.
“என்னடி இது? காலங்காத்தால என் டிரஸ்ஸை போட்டுட்டு வர்ற? உன் டிரஸ் எல்லாம் எங்க போச்சு?” என்று சிரிப்புடன், காந்தக் குரலில் கேட்டான்.
இளங்கிளி தன் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, தன் உடம்பில் ஒட்டி உறவாடிய டி-ஷர்ட்டின் கீழ் முனையைப் பிடித்துக் காட்டிச் சிணுங்கினாள். “போங்க எல்லாம் உங்களால தான்… நீங்க கொண்டு வந்த டிரஸ் எல்லாம் குட்டியா இருக்கு. அதை எப்படி நான் இங்க போட்டுட்டு வரது.அதான் உங்க ஷர்ட் பெருசா, வசதியா இருக்கும்னு எடுத்துப் போட்டுக்கிட்டேன். நல்லா இருக்கா?” என்று கண்சிமிட்டிக் கேட்டாள்.
“நீ எதைப் போட்டாலும் அழகு இருக்கும்டி” என்று எழுந்து வந்தவன், அவளது நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தவன், “பசிக்குதா? வா முதல்ல சாப்பிடலாம். எல்லாம் ரெடியா இருக்கு” என்று அவளது கையைப் பற்றி டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றான்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டும், போரா போரா தீவின் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டும் காலை உணவை நிதானமாக முடித்தார்கள். உணவிற்குப் பின், அந்த தீவின் வெக்கையும், கடலின் குளுமையும் அவர்களின் உணர்வுகளை மீண்டும் தூண்ட, இருவரும் மெல்லத் தங்களின் படுக்கை அறைக்குள் வந்து சேர்ந்தார்கள்.
அப்போதுதான் ராவணனின் மொபைல் போன் அலறியது. எடுத்துப் பார்த்தவன் திரையில் ராஜ்ஜின் பெயரை பார்த்ததும். ராவணனின் முகம் சட்டெனக் கடுமையாக மாறியது. போனை ஆன் செய்து காதில் வத்தவன், “டேய் ராஜ்! உனக்கு எத்தனை தடவை சொல்றது? நான் ஹனிமூன்ல இருக்கேன், என்னை எந்த விஷயத்துக்கும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? இப்போ எதுக்கு கால் பண்ணிருக்க?” என்று அதட்டலாக, கோபமாகக் கேட்டான்.
மறுமுனையில் ராஜ் ஏதோ ஒரு முக்கிய பிசினஸ் டீல் மற்றும் ஆபீஸ் ஃபைல் பற்றிய சந்தேகத்தைக் கேட்டுத் தயங்கித் தயங்கிப் பேசினான். கோபமாக இருந்தாலும், தொழிலில் எந்தத் தப்பும் நடந்துவிடக் கூடாது என்பதில் ராவண் குறியாக இருந்தது.
“சரி, அந்த ஃபைல்ல இருக்கிற தேர்ட் பேராவைப் படி… அதுல மார்க்கெட் ரேட்…” என்று தொடங்கி, ராஜ் கேட்ட சந்தேகங்களை ஒவ்வொன்றாக மிகவும் தெளிவாக, நிதானமாக விளக்கிப் பேசத் தொடங்கினான்.
அவன் போனில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த இளங்கிளிக்கு போர் அடித்தது. அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படியே சோபாவில் சரிந்தாள். சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டு, தன் கால்கள் இரண்டையும் காற்றில் ஆட்டியபடி, தன் மொபைல் போனை எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கினாள்.
அவள் பார்த்துக் கொண்டிருந்த ரீல்ஸ்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சில ‘ரொமாண்டிக் கப்பிள்ஸ்’ வீடியோக்கள் வந்தன. அதில் காதல் ஜோடிகள் , திருமணமானவர்கள் சேர்ந்து மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இருந்தன. அதை பார்த்துக் கொண்டிருந்த இளங்கிளியின் கண்களில் ஒரு புதிய ஆசை மின்னியது. அவளது இதழ்களில் ஒரு குறும்புத்தனமான புன்னகை தோன்றியது.
போன் பேசி முடித்துவிட்டு, மொபைலை மேஜை மேல் வைத்த ராவண், படுக்கை அறையின் சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டு போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இளங்கிளியை கவனித்தான். மெல்ல அவளருகே வந்தவன், அவள் பின்புற உடம்போடு தன் உடம்பு உரசுவது போல சோபாவில் சரிந்து படுத்தான்.
ராவணின் கதகதக்கும் உடலின் சூடு தன் மீது பட்டதும் இளங்கிளி லேசாகச் சிலிர்த்தாள். தன் பெரிய, முரட்டுத்தனமான கையை அவள் தளர்வான டி-ஷர்ட்டிற்குள் மெல்ல நுழைத்தான். அவள் வெற்று முதுகின் மென்மையான சருமத்தில் அவன் விரல்கள் பட்டு, மெதுவாகத் தடவிக் கொடுக்கத் தொடங்கின. அவனது விரல்களின் தீண்டலில் இளங்கிளிக்கு உள்ளுக்குள் ஒரு சுகமான நடுக்கம் பரவியது.
“என்ன பண்றடி சிணுங்கி? என்ன விட்டிட்டு போன்ல அப்படி என்ன பார்த்துட்டு இருக்க?” என்று அவளது காதோரம் குனிந்து, அவளது கழுத்துச் சரிவில் தன் உதடுகளால் லேசாகக் கவ்விக்கொண்டே கேட்டான்.
அவன் சூடான மூச்சுக்காற்றும், முதுகில் சுழலும் விரல்களும் அவளை என்னவோ செய்ய, இளங்கிளி தன் உடம்பை வளைத்துச் சிணுங்கினாள். “என்னங்க கையை எடுங்க… கூசுது “என்றவள் . ” இங்க பாருங்க, இந்த போன்ல வர்ற வீடியோவை…” என்று தன் மொபைலை அவனது முகத்திற்கு நேரே காட்டினாள்.
“ஏங்க.. இப்போ இதெல்லாம் தான் ட்ரெண்டிங்கா இருக்காம். நாமளும் இதே மாதிரி சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாமா ப்ளீஸ்?” என்று ஆசையும் , கெஞ்சலும், வெட்கமும் கலந்த கண்களோடு ராவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவள் பேசியத்தைக் கேட்டு ராவண் சத்தமாகச் சிரித்தான். அவள் டி-ஷர்ட்டிற்குள் இருந்த தன் கையை இன்னும் கொஞ்சம் மேலே நகர்த்தி, அவள் தோள்பட்டையை வருடியபடி, “உனக்கு இந்த டச் போன் யூஸ் பண்ணச் சொல்லிக் கொடுத்ததே தப்பாப் போச்சுடி. எங்கிருந்தோ இதையெல்லாம் பார்த்துட்டு வந்து என் உயிரை வாங்குற…” என்றான்,
“நான் என்ன பண்றது. எனக்கு சும்மா இருக்க போர் அடிக்குது , அதனால தான் இதை பார்த்துட்டு இருந்தேன்” என்றாள் சிணுங்களாக.
அவள் கெஞ்சும் முகத்தில் தெரிந்த அந்த ஆசையைக் கண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். “சரி… என் பொண்டாட்டி ஆசைப்பட்டுட்டா, செய்யாம இருக்க முடியுமா? வா… நீ சொல்ற மாதிரியே செய்யலாம்” என்றான் காமமும் காதலும் கலந்த மோகக் குரலில்.
“நிஜமாவாங்க!” என்று துள்ளிக் குதித்து எழுந்தவள், அந்த வீடியோக்களில் தனக்குப் பிடித்த இரண்டு மூன்று ரீல்ஸ்களைத் தேர்ந்தெடுத்து அவனிடம் காட்டினாள்.
“முதல்ல இந்த வீடியோல வர்ற மாதிரி செய்யணும் ” என்று அவள் ஒரு வீடியோவைக் காட்டினாள்.
அந்த வீடியோவில் கட்டுமஸ்தான ஒரு ஆண் , அவனுடைய மனைவி இருவரும் வருகிறார்கள். அதில் ஆண் அங்கே இருந்த பிளாட் பெஞ்சில் படுத்திருக்க.. அதன் மேலே ரேக்கில் வைக்கப்பட்டிருந்த அந்த ஹெவி பார்பெல் (Barbell) கம்பியைத் தன் இரு கைகளாலும் பற்றி, மெல்லத் தூக்கித் தன் நெஞ்சுக்கு நேரே கொண்டு வந்தான்.
அவன் அதை செய்து கொண்டிருக்கும்போது , அவன் மனைவி அவனருகே வருகிறாள். அவளைக் கண்டதும் அந்த பார்பெல்லை அதன் இடத்தில வைத்துவிட்டு . அவன் அருகே இருந்தவள் இடையைப் பற்றி அந்த பார் பெல்லிற்கு பதிலாக, தன் மனைவியை தூக்கி எக்சர்சைஸ் செய்கிறான். அதை காட்டி “இது மாதிரி நீங்க என்னை தூக்குவீங்களா?” என்றாள் ஆர்வமாக.
“நான் செய்யுறேன் நீ பாரு.. ” என்றவன் அவளை இழுத்து தன் அருகே நிறுத்திவிட்டு தரையில் நேராக மல்லாந்து படுத்துக்கொண்டான். அவனது அகன்ற இரும்பு போன்ற மார்பு நேராக வானம் பார்த்து எழும்பியது.
அவளை அந்த நிலையிலேயே மேலே நிமிர்ந்து பார்த்தவன் “இப்போ வா,, ” என்றான்.
“தூக்கிருவிங்க தானே.. ” என்றவள் ஒரு நிமிஷம் இருந்த நான் உங்க போன்ல வீடியோ எடுத்துக்குறேன் ” என்று ராவண் போனில் விடீயோவை ஆண் செய்தவள் அதை சரியான இடத்தில வைத்து இவர்கள் இருவரும் தெரிவது போல வைத்துவிட்டு விடியோவை ஆன் செய்துவிட்டு வேகமாக ராவண் அருகே சென்று நின்றாள்.
தன் புஜங்கள் இருக்கியா கைகள் இரண்டையும் மேலே தூக்கியவன் “வா..” என்றான் கண்கள் சிமிட்டி.
கொஞ்சம் பதட்டமும், பயமுமாக அவன் அருகே சென்றவள் அப்படியே மெல்ல ராவண் கையை நோக்கி மெதுவாக சாய.. அவன் ஒரு கை அவள் இடையிலும், மற்றொரு கை அவள் மார்புக்கு மேலேயும் வைத்து அபப்டியே அலேக்காக மேலே தூக்கியவன் தண்டால் எடுக்கத் துவங்க..
இளங்கிளிக்கோ சந்தோசம் தாங்கமுடியவில்லை. “ஏங்க.. சூப்பரா செய்யுறீங்க.. என்னை தூக்கிட்டீங்களே… ” என்று சிரித்துக்கொண்டே சொன்னவள் . அதை சந்தோசமாக அனுபவிக்க துவங்கினாள்.
ராவணும் இளங்கிளியை கையில் சுமந்து 10 முறை அவள் சொன்னது போல செய்தான்.
“போதும்.. போதும் இறக்கி விடுங்க.. இன்னும் இருக்கு.. அப்ரோம் டையெர்ட் ஆகிறப்போரிங்க” என்றவள் அவன் கீழே இறக்கி விட்டதும் தன் மொபைலை எடுத்து அதில் மற்றொரு விடீயோவை ஓடவிட்டாள்.
தரையில் ஒரு பக்கமாக திரும்பிப் படுத்தவன் அவள் காட்டிய விடியோவை பார்க்கத்துவங்கினான்,
அதில் வந்து ஆண் , அவன் காதலியை தூக்கி தன் தோளில் அமரவைத்து அப்படியே அருகே இருந்த சுவற்றில் வந்து அவள் அமர்ந்து இருந்த பக்கத்தில் இருந்த அவன் இடது கையை எடுத்து சுவற்றில் குற்றி நிற்கிறான். அவன் தோளில் அமர்ந்து இருந்த அந்த பெண் அப்டியே உட்கார்ந்த நிலையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து அவன் கையில் அதாவது அவன் புஜத்தின் மீது அமர்ந்து கால் மேல், கால் போட்டு உட்காருவாள்.
அதை காட்டியவள் ” இது தான் லாஸ்ட், இதுக்கு மேல எதுவும் செய்ய சொல்ல மாட்டேன் உங்களை ” என்றவள் அந்த விடியோவை மீண்டும் அவன் முகத்திற்கு நேராக கொண்டு வந்தவள் “செய்திருவிங்களா?” என்றாள் புருவம் சுருக்கி.
“இவ்ளோ நாள் என்கூட இருந்தும் என்னோட ஸ்ட்ரெங்த் பத்தி உனக்கு இன்னமும் சந்தேகம் வரத்து தப்பு டி.. ” என்றவன் அடுத்த நொடி மேலே எழுந்து அவள் கைகளை பற்றி அவளையும் நிற்க வைத்தவன் குனிந்து அவள் இடையில் கை கொடுத்து அப்படியே மேலே தூக்கி தன் இடது பக்க தோளில் அமரவைத்தவன். அருகே இருந்த சுவற்றிக்கு பக்கம் வந்தவன் கையை சுவற்றில் ஊன்றி. “இப்போ அந்த வீடியோவில் வரத்து போல வந்து உக்காரு” என்றான் .
அவளும் பயந்துகொண்டே மெல்ல நகர்ந்து ராவணின் புஜத்தில் வந்து அமர்ந்தவள் “வலிச்சா சொல்லிருங்க.. ” என்றாள்,
“உக்காரு டி…” என்றவன் அவளோடு சேர்ந்து விடீயோவிற்கு போஸ் கொடுக்க.. அதுவும் அழகாக அந்த காட்சியை தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தது.
அதன் பின் அவளை கீழே இறக்கி விட்டவன் “நீ சொன்னதை எல்லாம் நான் செஞ்சுட்டேன்லடி… இப்போ நான் ஒரு வீடியோ செலக்ட் பண்ணுவேன். அதுல வர்ற மாதிரி நீ என்கிட்ட பண்ணணும்” என்று அவள் போனை வாங்கினான்.
சிறிது நேரம் ரீல்ஸ்களை ஸ்க்ரோல் செய்தவன் அதில் ஒரு விடியோவை கண்டதும் அபப்டியே அவன் கைகள் நின்றது, அதில், படுக்கையில் படுத்திருக்கும் ஆணின் மேல் பெண் அமர்ந்து, அவனது கைகளைத் தன் கைகளால் படுக்கையோடு சேர்த்து அமுக்கிப் பிடித்துக் கொண்டு, அவனது கழுத்து, மார்பு மற்றும் இதழ்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் காதலாகவும் முத்தமிட்டுக் கொண்டே அவன் உடல் முழுவதும் முத்தமிட்டு அப்படியே அவன் அவன் உடல் முழுதும் முத்தமிடுவது போல அந்த வீடியோவில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்ததும் இளங்கிளியின் முகம் அப்படியே தக்காளிப் பழம் போல் சிவந்து போக, அந்தப் உணர்வு அவளது நரம்புகளுக்குள்ளும் ஊடுருவியது. “ஐயோ… என்னங்க இது… என்னால இதெல்லாம் முடியாது … எனக்கு வெட்கமா இருக்கு. நான் பண்ண மாட்டேன்” என்று கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சிணுங்கினாள்.
ராவண் அவளது கைகளை விலக்கி, அவளது முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்றான். அவனது சூடான உதடுகள் அவளது கன்னங்களை உரசி. “அதெல்லாம் முடியாதுடி சிணுங்கி… நீ சொன்னதை நான் செய்தேன் தானே.., அப்போ நான் சொல்ற டிமாண்டையும் நீ செஞ்சுதான் ஆகணும். இது பிசினஸ் மாதிரி… ஒன் வே கிடையாது, டூ வே… ஒழுங்கா நான் சொன்னதைச் செய்” என்று அவளது காதோரம் கடித்தபடி, அதட்டலும் காமமும் கலந்த குரலில் கட்டளையிட்டான்.
அவனது அந்த அதிகார மிரட்டலும், அவன் நெருக்கமும் இளங்கிளியை மொத்தமாகப் பணிய வைத்தன. எப்படியும் சொன்னதை செய்யாமல் தன்னை விடப்போவதில்லை என்று புரிந்து கொண்டவள் “சரி… ” என்று வெட்கப்பட்டுக்கொண்டே தரையை பார்த்தபடி சொன்னாள்,
“ம்ம்.. ஸ்டார்ட் பண்ணு.. ” என்று தன் வெற்று மார்பை அவள் முன் கைகள் விரித்துக் காட்டியபடி வந்து நின்றான்.
அவனை வெட்கத்தோடு பார்த்தவள் “விட மாட்டிங்களா?” என்றாள்.
பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அப்போதாவது தனக்காக ராவின் விட்டுக்கொடுப்பான் என்று. ஆனால் இன்று அவள் நேரம் போலும், அவள் முகத்தை குறும்பாக பார்த்து சிரித்துக்கொண்டே.. முடியாது என்ற ரீதியில் தலையை ஆட்டினான்.
