News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என்னைத் தாங்குவியா டி நீ…?மூர்க்கன் 46

by Sinamika Writes
519 views
A+A-
Reset

மூர்க்கன் 46

இதழ்கள் துடிக்க அவன் முன் நின்றிருந்தவளை பார்த்தான். முகமும் உடலும் முற்றிலும் சிவந்திருக்க.. அவளை ஆசையாக பார்த்த படி நெருங்கி சென்றவன், அவளை இடையோடு சேர்த்து அப்படியே இழுத்துத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான். 

அவள் மென்மை அவன்  மார்பில் அழுத்தமாய் உரச, அவளது காதோரம் தன் முகத்தைப் புதைத்தவன், “என்னை ரொம்ப படுத்துற டி நீ…” என்று தழுதழுத்த குரலில், காதலும் மோகமும் கலந்த சூடேறிய மூச்சுக்காற்றோடு சொன்னான்.

அவனது அணைப்பின் சூட்டில் கரைந்த கயலோ, தன் வெட்கத்தை முற்றிலுமாகத் தூக்கி எறிந்துவிட்டு, “எனக்கு நீ வேணும் ராஜ்… முழுசா வேணும்… உன்கூட நான் சந்தோசமா இருக்கனும். உனக்கு நான் எனக்கு நீ நம்ம ரெண்டு பேருக்கான உலகத்துல நம்ம சந்தோசமா இருக்கனும்” என்று அவன் சட்டையைத் தன் விரல்களால் பிடித்து முறுக்கிக்கொண்டே  ஆசையோடு சொன்னாள்.

அவள் அப்படிச் சொன்னதும், அவளுக்குள் இருக்கும் அந்தத் தீராப் பெருங்காதலைக் கண்டு அப்படியே உறைந்துபோன ராஜ், மெல்ல அவளைத் தன்னிடமிருந்து சற்றே விலக்கி கயலின் முகத்தைப் பார்த்தான். 

அவள்  கண்களில் தெரிந்த காதலை ஆழமாகப் பருகியவன், “என் மேல அவ்ளோ நம்பிக்கையா டி உனக்கு? அதுவும் உன்னையே எனக்கு தர துணிஞ்சுட்ட.. நமக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல டி..” என்றான் நெகிழ்ச்சியோடு.

“நீ தான டா எனக்கு எல்லாமே.. கல்யாணம் ஊர் உலகத்துக்காக பண்ணிக்கிறது. எனக்கு நீ வேணும் அதுவும் முழுசா வேணும்..” என்று அவனது நெஞ்சில் முகம் புதைத்து தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக சொன்னாள் கயல்.

அவளது இந்த  பதிலில் ஒட்டுமொத்தமாய் தன்னை இழந்த ராஜ், அடுத்த நொடியே அவள் இதழ்களோடு தன் இதழ்களைப் பதித்தான். 

முத்தம் ஆழ்ந்து சென்றது அவளிடம் . ஆணின் முதல் ஸ்பரிசம் அவளுக்கு உடலில் கிளர்ச்சியை உண்டு பண்ண.. அவள் இதழை மென்று தின்றவனுக்கு தீராத மோகம் உடல் முழுதும் பரவத் துவங்கி இருந்தது.

முதல் ஸ்பரிசத்தின் அந்த முதல் முத்தத்தின் தீண்டலில், இருவரின் உலகமும் ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்துப் போனது. ராஜின் இதழ்கள் அவளது இதழ்களின் மென்மையை முதன்முறையாகச் சுவைத்தபோது, கயலின் உடலுக்குள் ஒரு மின்னல் வெட்டிப் பாய்ந்தது போல ஒரு உணர்வு. 

ஒரு ஆணின் முரட்டுத்தனமான காதலையும், ஒரு பெண்ணின் இதழின் தேன் சுவையையும் இருவருமே அங்கே முதன்முறையாக உணர்ந்தார்கள்.

வெறும் உதடுகளின் சேர்க்கையாக அது இருக்கவில்லை; இத்தனை நாட்களாய் இருவருக்குள்ளும் பூட்டி வைக்கப்பட்டிருந்த காதலும், அடக்கி வைக்கப்பட்டிருந்த தவிப்பும் ஒட்டுமொத்தமாய் எரிமலையாக வெடித்துக் கிளம்பியது.

அவன் இதழ்களின் அழுத்தத்திற்கு கயல் தன் இதழ்களை இன்னும் தாராளமாய் திறந்து வழிவகுக்க, அந்த அறையின் காற்று கூட அவர்களின் மூச்சுக்காற்றின் வெப்பத்தில் உருகத் துவங்கியது. இருவரின் இதயத்துடிப்பும்  அதிர்ந்தது.

நெடுநேர முத்தத்திற்குப் பின், மூச்சிரைக்க அவளது இதழ்களிலிருந்து விலகியவன், காதலோடு அவளை அப்படியே தன் இரு கரங்களிலும் அள்ளி ஏந்தினான். அவள் கைகள் ராஜ்ஜின் கழுத்தைச் சுற்றிக் கொள்ள, அவளைத் தூக்கிக் கொண்டு நேராக பெட்ரூமிற்குள் நுழைந்தான்.

கட்டிலில் அவளை மெல்ல படுக்க வைத்தான். அவள் கலைந்த கூந்தலும், இன்னும் முழுமையாக மூடிடாத அந்த ஜாக்கெட்டின் அழகும் அவனைக் கிறங்கடிக்க…

அவள் மேல் தன் உடலின் எடையைச் சாய்த்தபடி, அவளது கண்களை நேராகப் பார்த்து, “என்னைத் தாங்குவியா டி நீ…?” என்று மோகக் குரலில் ஆழமாகக் கேட்டான்.

அந்த வார்த்தைகள் அவளது காதலைச் சோதிப்பது போலவும், அவளது சம்மதத்தை முழுமையாய் யாசிப்பது போலவும் கேட்ட அவனது கேள்விக்கு… கயல் தன் கண்களை லேசாகச் சுருக்கி, ஒரு மயக்கும் கவர்ச்சிப் புன்னகையை உதிர்த்தாள்.

அவன் இதழ்களில் தன் இதழ்கள் பட்டும் படாமலும் உரசியபடி, அவன் கழுத்தில் தன் விரல்களால் கோலமிட்டுக் கொண்டே மயக்கும் குரலில் சொன்னாள்

“இப்படியே இந்த உலகத்தையே என்மேல தூக்கி வச்சாலும் நான் தாங்குவேன்… ஆனா அது நீயா இருக்கணும்! என் உலகம் நீயா இருக்கனும் ராஜ்..” என்று சொல்லும்போதே அவள் விழிகளில். கண்ணீர் கோர்த்துக்கொள்ள..  

அதை கண்டதும் பதறியவன்.” ஏய் கயல் ஏண்டி அழற.. “ என்று அவள் கண்ணீரை தன் விரல் கொண்டு துடைத்து விட்டான்.

“ம்.. ஒன்னுமில்ல ராஜ்” என்றவள் எம்பி அவன் இதழில் முத்தம் வைத்து அவன் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவள் “தாங்குவேனான்னு கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாதடா… முடிஞ்சா என்னை முழுசா உன் வசப்படுத்திப் பாரேன்!” என்றாள் சவாலும், குறும்பும் கலந்த குரலில்.

அவளின் அந்த வார்த்தைகளை கேட்ட பின்னும் அவனால் காத்திருக்க முடியுமா என்ன அடுத்த நொடியே ..

கயலின் அந்த சவாலான பேச்சு, ராஜுக்குள் இருந்த காதலின் வேகத்தை இன்னும் பன்மடங்கு அதிகமாக்கியது. அவளது இதழ்களில் தெரிந்த அந்த சிறு குறும்பு அவனது ஆண்மையைத் தீண்டிப் பார்க்க, அடுத்த நொடி அவளைத் தன் கைகளுக்குள் முழுமையாகச் சிறைப்பிடித்தான்.

“நீயேதான் சொன்ன கயல்… அப்புறம் என்மேல் தப்பு சொல்லக் கூடாது, நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல..” என்று அவள் காதோரம் அவன் காந்தக் குரலில் முணுமுணுக்க, அவனது சூடான மூச்சுக்காற்று பட்ட மாத்திரத்திலேயே கயலின் உடல் சிலிர்த்துப் போனது.

அவனது கைகள் மெதுவாக அவள் தோள்களில் பட்டு, லேசாகத் திறந்து கிடந்த ஜாக்கெட்டின் மீதமுள்ள ஹூக்குகளை நோக்கி நகர்ந்தன….

சட்டென அவன் கைகளை பற்றிகொண்டவள் அவனை கூச்சத்தோடு ஏறிட…

‘ஏய் பூன.. வேணும் வேணும்னு சொல்லிட்டு இப்போ என்னடி இது..” என்று தன் பார்வையால் அவள் பற்றி இருந்த கரத்தை காட்டினான்.

“வெட்கமா வருது எனக்கு.. ” என்று தலையை அவள் கவிழ்த்துக் கொள்ள..

அவள் மோவாயை பற்றி முகத்தை நிமிர்ந்து தன்னை பார்க்க செய்தவன் அவள் விழிகளில் தன் விழிகளை கலக்க விட்டவன் மெல்ல குனிந்து அவள் விழிகளை பார்த்துக்கொண்டே அவள் இதழை சிறை செய்திருந்தான்.

அவன் முத்தம் அவளை கிறங்கடிக்க.. அவனோ அவள் கிரங்கிய பொழுதில் உதிர்த்த முனகளில் மேலும் சூடேறிய உணர்வுகளோடு தன் கைகளை பிடித்திருந்தவள் கரத்தை பற்றி கீழ் இறங்கியவன் அவள் ஜேக்கெட் ஹூக்கில் கை வைத்து அவிழ்க்கத் துவங்கினான்.

அவனது விரல்களின் ஸ்பரிசம் பட்ட இடமெல்லாம் நெருப்பாய் சுட, கயல் முனகல்கள் மேலும் அதிகமானது.. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

ராஜ் அவள் ஜாக்கெட்டின் ஹூக்குகளை ஒவ்வொன்றாக மிக மெதுவாக நீக்கினான். அவள் தோள்களிலிருந்து அந்த ஆடை மெல்ல நழுவி கீழே விட்டவன், மங்கலான அந்த அறையின் வெளிச்சத்தில் அவளது பேரழகு முழுமையாக அவனது பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

பெண்ணவளின் அந்தப் எழிலைக் கண்ட ராஜின் கண்கள் மோகத்தாலும் காதலாலும் இன்னும் அடர்ந்து போயின. தன் கைகளால் அவள் மென்மையான தோள்களை வருடியவன், அவள் கழுத்தில் இருந்து கீழ் இறங்கியவன் தன் இதழ்களால் தடம் பதிக்கத் துவங்கினான். அவனது ஒவ்வொரு முத்தத்தின் சூடும் அவளுக்குள் ஒரு புதிய உலகத்தைக் காட்டியது; அவள் கைகள் அவளையும் அறியாமல் ராஜ்ஜின் தலைமுடியை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டன.

அவள் மூச்சு வேகம் எடுப்பதை உணர்ந்தவன், மெல்ல அவள் பாவாடையின் முடிச்சை நோக்கித் தன் கரங்களைக் கொண்டு சென்றான்.

கயலுக்குள் இப்போது வெட்கமும் மோகமும் ஒன்று சேர சரிசமமாகப் போராடிக்கொண்டிருக்க, அவன் செய்கைக்கு எந்தத் தடையும் சொல்லாமல் தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்தாள். 

அவள் உடலில் ஒட்டி இருந்த மிச்ச ஆடையும் அவளை விட்டு விலக, அவளை ஆசையாக.. ரசனையாக பார்த்தபடி தன் ஆடைகளுக்கும் விடுதலை கொடுத்தவன் அவள் முன் நிற்க..

அவனை அந்த கோலத்தில் பார்த்தவள் வெட்கப்பட்டுக்கொண்டே முகத்தை மூடிக்கொண்டாள்.

அவள் வெட்கம் கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. இப்பொது இருவருக்குள்ளும் இருந்த திரை முற்றிலும் மறைந்து போனது. அவளை இழுத்து அணைத்தவன் “எப்படி இருக்க தெரியுமா டி நீ.. ” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

“என்ன இப்படி எல்லாம் பேசுற நீ.. ” என்று அவள் வெட்கப்பட..

“இன்னமும் பேசுவேன்’ ன்று அவள் காதோரம் முத்தமிட துவங்கினான்.

இரு உடல்களும் எவ்வித தடையுமின்றி ஒன்றோடொன்று உரசிக் கொண்ட அந்த நொடி, அறையின் வெப்பம் உச்சக்கட்டத்தை எட்டியது. 

ராஜ்ஜின் கரங்கள் அவள் உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் வசப்படுத்தின. அவளது வளைவுகளையும் மென்மையையும் அவன் தன் விரல்களாலும் இதழ்களாலும் ஆராதிக்க, கயல் தாளாத இன்பத்தின் தவிப்பில் மெல்லிய முனகலோடு அவனது மார்பில் தன் நகக் கீறல்களைப் பதித்தாள்.

“ராஜ்… ம்ம்ம்…” என்று அவள் வாய் அவனையும் அறியாமல் அவன் பெயரை உச்சரிக்க, அது அவனுக்கு இன்னும் போதையை தந்தது.

இருவரின் இதயத் துடிப்புகளும் ஒரே சீராக, அதிவேகமாகத் துடிக்கத் துவங்கின. அவள் இதழில் இருந்து கீழ் இறங்கி இரு மலை முகடுகளில் முனைகளில் தன் தடித்த இதழ்களை பதித்தான்.

“ஷ்!.. ” என்று சிணுங்கலோடு அவன் கேசத்தை பற்றி மேலும் தன்னோடு ஒன்றி பிடித்துக்கொண்டாள்.

கைகளும், இதழ்களும் அவள் மலைகளை தாங்கி.. ஸ்பரிசித்து.. உணர்ந்து.. சுவைத்து.. என அவளை காதல் போதையில் திக்குமுக்காட செய்திருந்தான் ராஜ்.

காதலின் உன்னத நிலையும், மோகத்தின் தீவிரமும் அவர்களை ஆட்கொள்ள, இரு ஆன்மாக்களும் உடல்களால் தங்களை முழுமையாகப் பிணைத்துக் கொண்டன.

அவள் மேனியை தன் இதழ்களாலும், விரல்களாலும் ஸ்பரிசித்து அவளை திக்குமுக்காட செய்தவன். அவளுக்குள் மொத்தமாக சரணாகதி அடைந்தான்.

பெண்ணவளுக்கோ தாள முடியாத இன்ப வேதனை.. கீழ் இதழை கடித்துக்கொண்டு ராஜ்ஜ்… என்று வலியில் முனகினாள். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அவனுக்கும் அழுத்தம் கொடுத்ததில் அதே நிலை தான்.

அவள் இதழை பற்றி அவளுக்கு ஆறுதல் சொன்னவன் அப்படியே அவளுக்கு இளைப்பாற நேரம் கொடுத்து மீண்டும் அவளுள் மெல்ல மெல்ல தன்னை கலந்தான்.

அவள் வலியிலா சுகந்திலா என்று அறியாமல் அவன் மார்பிலும் தோளிலும் அவன் மேனியில் நகங்களாலும், பற்க்கலாளும் காதல் அச்சாரத்தை அரங்கேற்றினாள்.

ஒரு ஆணின் ஆளுமையும், ஒரு பெண்ணின் சரணாகதியும் அங்கே ஒன்றிணைந்து, அந்த இரவை அவர்களின் வாழ்நாளின் மறக்க முடியாத காவியமாக்கியது.

நீண்ட நேரத் தவிப்பிற்கும், தீராத தேடலுக்கும் பிறகு, இருவரும் அந்த மோகக் கடலின் கரையைத் தொட்டு, ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்தபடி, மூச்சிரைக்க அந்தப் படுக்கையில் சரிந்தனர். 

கயலின் நெற்றியில் வழிந்த வியர்வைத் துளியை தன் இதழ்களால் துடைத்த ராஜ், அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அந்த அறையில் அவர்களின் நிசப்தமான மூச்சுக்காற்று மட்டுமே காதலின் சாட்சியாக ஒலித்துக் கொண்டிருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு சோர்ந்து படுத்து உறங்கி இருந்தனர். தூக்கத்தில் ஒருவரை விட்டு ஒருவர் விலகி படுத்திருந்தாலும் உடல்கள் தீண்டும்போதெல்லாம் ஒருவரை ஒருவர் மீண்டும் தேடி ஆட்கொண்டு கலைத்து மீண்டும் உறங்கத் துவங்கினர்.

அதிகாலை தான் இருவரும் உழைத்து கலைத்து உறங்கிப்போயினர்.

காலை 12 மணி இருக்கும் ராஜ்ஜின் போன் அலறியது.

தூக்கம் கலைந்தவன் கண்களை திறக்க… அவன் இடையை கட்டிக்கொண்டு வயிற்றில் தலையை வைத்து உறங்கிகொண்டிருந்தாள் கயல்.

அவளை கண்டு தூங்கிய கோலம் மென்மையாக புன்னகைத்தவன் போனை திரும்பிப் பார்த்தான். அது கட்டிலை விட்டு சற்று தள்ளி மேசையில் இருந்தது.

மெல்ல அவள் தோள்களை பற்றி தன்னருகே படுக்க வைத்துவிட்டு எழப்போக.. அவளோ சட்டென அவன் இடையை  கட்டிக்கொண்டு தன் பக்கம் இழுத்தவள். “எங்க போறீங்க ராஜ்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க” என்றாள் அவன் முதுகில் முகத்தை புதைத்துக் கொண்டு.

“கயல் இரு போன் ரொம்ப நேரமா அடிச்சிட்டு இருக்கு. பேசிட்டு வரேன்” என்று மென்மையாக சொன்னவன் தன் அணைத்திருந்த  அவள் கையை விளக்கியவன் எழுந்து எட்டி போனை எடுத்தான்.

 ஈஸ்வர்தான் அவனுக்கு அழைத்திருந்தான்.

அப்படியே போன் ஸ்கிரீனில் மணியை பார்க்க அது 12 ஐ கடந்திருந்தது…”இவ்வளவு நேரம் தூங்கிட்டமா..”  என்று யோசித்தபடி போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து சொல்லுடா… என்றான்.

 “டேய் இடியட் எவ்வளவு நேரம் டா உனக்கு கால் பண்றது. நாங்க இந்தியா வந்து எவ்வளவு நேரம் ஆச்சு. எங்கடா இருக்க? உடனே கிளம்பி வா?” என்று  அதட்டளாக ஈஸ்வர் அழைக்க..

“என்னடா சொல்ற!  இந்தியா வந்திருக்கியா?  எப்போ வந்த? என்கிட்ட சொல்லவே இல்ல” என்றான் ராஜ்.

“ இப்போ அது ரொம்ப முக்கியமா” என்ற ஈஸ்வர். “ வாட்ஸ் அப்ல உனக்கு ஒரு லொகேஷன் அனுப்பி இருக்கேன் அந்த இடத்துக்கு சீக்கிரம் கிளம்பி வா” என்று அவசரமாக சொல்லிவிட்டு போனை வைத்தான்.

ஈஸ்வரின் குரலில் இருந்த பதட்டம் ஏதோ சரி இல்லை என்று ராஜ்ஜிற்கு உணர்த்த…  திரும்பி உறங்கிக் கொண்டிருந்த கயலின் கன்னத்தில் முத்தம் வைத்தவன்.

“ போய்ட்டு சீக்கிரம் வந்துறேன் கண்ணுகுட்டி..  நீ அதுவரை நல்லா ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு வேகமாக பாத்ரூமிற்குள் நுழைந்தவன் அவசரமாக குளித்துவிட்டு ஈஸ்வரைக் காண கிளம்பினான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.