வெறியன் 31
“எங்க இப்போ எதுக்கு பையன் வந்ததும் வராததுமா வம்பிழுக்கிறீங்க” என்று ஐராவை மீறிக்கொண்டு கோபத்துடன் கேட்டார் சௌந்தர்யா.
“நான் இப்போ என்ன சொன்னேன். மூத்த மருமகளுக்குன்னு யாரும் இல்ல, நீயாவது எல்லாரும் இருக்க குடும்பமா பார்த்து கல்யாணம் பண்ணணுமேன்னு அக்கறையில சொன்னேன்” என்றார் கொஞ்சம் கூட தான் பேசியது தவறு என்று காட்டிக்கொள்ளாதவாறு பேசினார் சிவனாண்டி.
“நீ பேசினது சரி இல்ல.. ” என்று அவரை ஒருமையில் அழைத்தவன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சண்டைக்கு செல்லத் தாயாராக இருந்தான்,
அவன் கையை பற்றி தன் பக்கம் இழுத்து நிறுத்திய பனிமதி “வேணாம் அமைதியா இருங்க , வந்ததும் ஏன் சண்டை போடணும்” என்று அவன் காதில் மெல்ல சொன்னாள்.
“வந்ததும் நான் எங்க டி சண்டைக்கு போறேன். அவர் தான் தேவை இல்லாம உன்னை பத்தி பேசி என் கோபத்தை கிளப்பிவிட்டாரு” என்று சத்தமாக சொன்னான்.
“அச்சோ! ஏன் இப்போ கத்துறீங்க ” என்று அவன் கையை பற்றி அழுத்தியவள். “கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்” என்று கண்கள் சுருக்கிக் கெஞ்சினாள் அவனிடம்.
“உனக்காக தான் டி நான் பேசுறேன்” என்றான் அவளை பார்த்து,
“நான் தான் சொல்றேன் அமைதியா இருங்க ப்ளீஸ்” என்று மீண்டும் அவள் கெஞ்ச.
அவள் பார்வையில் கொஞ்சம் கோபம் தனித்தவனாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
“அதெல்லாம் விடுங்க நம்ம பிரச்சனையில இங்க ஒருத்தன் எனக்கு என்னனு குளிர் காயுரான் ” என்று மார்க்கண்டேயன் அக்னியை மீண்டும் உள்ளிழுத்துவிட..
“ஏன்?…” என்ற ரீதியில் அவரை முறைத்த அக்னி. “நான் மட்டும் தான் லவ்வை சொல்லிருக்கேன் அவகிட்ட , அவ ஓகே சொல்லல செட் ஆனதும் அவளை உங்க எல்லாருக்கும் இன்ட்ரோ கொடுக்கிறேன்” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான்.
“அதுக்கு ஏன் டா முகத்தை இப்படி வெச்சிருக்க.. கொஞ்சம் சிரிச்சா என்ன?” என்றார் சௌந்தர்யா அக்னியின் மோவாயில் இடித்து,
“ஷ்..! அம்மா” என்று தன் கன்னத்தை தேய்த்துவிட்டுக்கொண்டவன் சிரித்துக்கொண்டே “சீக்கிரமே என் வருங்கால பொண்டாட்டியோட இங்க வரேன் ஓகேவா?” என்றான்.
“சரி டா..” என்றவர் அவ பேரு என்ன டா?” என்றார்.
“மல்லி மா.. பவளமல்லி.. ” என்றான் ஒருவித வெட்கம் கலந்த சிரிப்போடு.
“என்னது மல்லியா?.. கொத்தமல்லியா? இல்ல.. வர மல்லியா?” என்று கேட்டார் சித்தாத்தா.
“கிழவி அது பவளமல்லி..” என்றான் ஐராவதன் சிரிப்பை அடக்கிக்கொண்டே.
ஐராவதனை முறைத்த அக்னி “அண்ணி நீங்க நல்லா சமைப்பீங்கன்னு மார்க் சொல்லிச்சு. இன்னிக்கு உங்க கையாள சாப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா இவங்க எல்லாரும் என்னை ரொம்ப டோர்சேர் பண்றாங்க. அதனால நான் கிளம்பலாம்னு இருக்கேன்” என்றான் அக்னி பனியிடம்.
“ஐயோ! ஏன் வந்ததும் கிளம்புறீங்க . இவர் இப்படி தான் நீங்க அவரை பெருசா எடுத்துக்காதீங்க. நான் சமைச்சு தரேன் .இருந்து சாப்பிடுங்க ” என்று அவசரமாக அவனை மரித்தாள் பனிமதி.
“டேய் அக்னி , இவங்க மூணு பேரும் சேர்ந்தா இப்படி தான் பேசுவாங்கன்னு உனக்கு தெரியாதா டா.. இரு டா சாப்பிட்டு போ.. நாம எல்லாம் குடும்பமா இன்னிக்கு தான் இந்த வீட்ல ஒன்னா இருக்கோம்” என்று அவன் கையை பற்றிக்கொண்டு சௌந்தர்யா அவனை பார்த்தார்.
“வந்ததும் வீடு அதிகாரத்தை தூக்கி உன் மருமககிட்டே கொடுத்துடு. அப்பறோம் அவ நம்மளை எல்லாம் நடுத்தெருவில் தான் கொண்டு போய் நிறுத்தப் போறா.. ” என்று மீண்டும் பனிமதியின் மனம் நோக வார்த்தைகளை பேசிக்கொண்டு ஹாலுக்கு வந்தார் சிவனாண்டி.
“இவன் வேற… என் பேரன் வந்த அன்னிக்கே ஆரம்பிச்சுட்டான்” என்று நினைத்த சித்தாத்தா. “என் மருமகKITTAIYUM தான் நான் இந்த வீட்டு பொறுப்பை அவ உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்த அன்னிக்கே கொடுத்தேன். அவகிட்டே கொடுத்ததுனால தான் நம்ம குடும்பம் ஓரளவுக்கு ஒத்துமையா இருக்கு.. அது போல என் பேத்தியும் நல்லா திறமையா தான் இந்த வீட்டு நிர்வாகத்தை எடுத்து நடத்துவா,, ” என்று ஐரா பேச வரும் முன்னரே பேசி அந்த சூழ்நிலையை சரி செய்ய முயன்றார் சித்தாத்தா.
அவர் பேசிய பின் சிவனாண்டி எதுவும் பேசவில்லை. “நான் கிளம்பறேன் எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு..” என்று வெளியே செல்லப் போனார்.
“ஏங்க இனிக்கும் வேலைக்கு போகணுமா? நம்ம பசங்க எல்லாரும் வீட்ல இருக்காங்க நீங்களும் இருந்தா நல்லா இருக்கும். நம்ம மருமக சமைக்குறேன்னு சொல்றா இல்ல இருந்து சாப்பிடலாம்ல ” என்றார் சௌந்தர்யா ஒரு எதிர்பார்ப்போடு.
அவர் பேசியதும் கடுப்பான சிவனாண்டி.. “அதெல்லாம்… ” என்று வாயெடுக்க..
“அதெல்லாம் எதுவும் வேணாம். அவன் தான் வேலை இருக்குன்னு சொல்றான் இல்ல.. அவன் கிளம்பட்டும் . நாம எல்லாரும் சிரிச்சு பேசி சந்தோசமா இருக்கறதை பார்த்தா அவனுக்கு வயிறு எரியும், எதுக்கு அவனை கஷ்டப்படுத்தனும். போகட்டும் விடு.. ” என்றார் சித்தாத்தா.
அவரை ஏகத்துக்கும் முறைத்த சிவனாண்டி வேகமாக வெளியேறி இருந்தார். “இந்த கிழவிக்கு வயசாகியும் இன்னும் கொழுப்பு போகல.. ஒரு நாளைக்கு இருக்கு இதுக்கு.. ” என்று நினைத்தபடி சென்று ஜீப்பை ஸ்டார்ட் செய்து கிளம்பி இருந்தார்.
“பாட்டி நீ எப்பவும் மாஸ் தான். ஊரே பார்த்து நடுங்குற அப்பாவையே ஓட வெக்க உன்னால மட்டும் தான் முடியும்’ என்ற அக்னி தோள்களை இடித்துக்கொண்டு அவர் அருகே சென்று அமர்ந்தான்.
“பின்ன என்ன டா, அவன் தான் வந்த கொஞ்ச நேரத்துல எவ்ளோ பேச்சு பேசுறேன்னு தெரியுதே.. அப்பறோம் உங்கம்மாக்காரி அவனை இருங்க சாப்பிடலாம்னு சொல்றா. அப்பறோம் மறுபடியும் ஏதாவது பேசுவான் ஐயாவுக்கு கோபம் வரும் , அப்பறோம் சண்டை ஆகும். எதுக்கு வந்த அன்னிக்கே இதெல்லாம் ” என்றார்.
“அதுவும் சரி தான்” என்று அவர் அருகே சென்று சாவதானமாக அமர்ந்தார் மார்க்கண்டேயன்.
“தாத்தா!.. என்ன பண்றிங்க.. ” என்று பேரன்கள் இருவரும் ஒருசேர கிளம்பிவிட..
அவர்கள் கொடுத்த சத்தத்தில் அதிர்ந்த மார்கண்டேயனோ “என்னங்கடா..!” என்றார் புரியாமல்.
“என்னவா.! இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க? எதுக்கு பாட்டி பக்கத்துல போய் உக்கார்ந்திருக்க?” என்று அவர் இருக்கையையும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து மேலே இழுத்துவிட்டு அவர் இடத்தில ஐராவும், பாட்டிக்கு மறுபுறம் அக்னியும் வந்து அமர்ந்து கொள்ள..
அவர்கள் இருவரின் செயல் கண்டு சௌந்தர்யா, பனிமதி, முத்துமாரி என மூவரும் சிரிக்க..
மார்கண்டேயனுக்கோ தன் பஞ்சவர்ணத்தின் அருகே உட்கார விடாமல் பேரன்கள் இருவரும் அடிக்கும் லூட்டியை பொறுக்க முடியாமல் அவர்களை முறைத்தார்.
“என்ன முறைப்பு.. இப்படி பொசுக்குன்னு வந்து பாட்டிக்கு பக்கத்துல உக்காருற வேலை வேணாம் பெருசு.. ” என்று ஐரா சீண்ட..
“இங்க பாரு மார்க் உனக்கு வயசாகிருச்சு. இங்க சின்னஞ்சிறுசுங்க நாங்க இருக்கோம். எங்க முன்னாடி பாட்டி கூட ரொமான்ஸ் பண்ற வேலை வெச்சுகிட்டன்னு வை.. ” என்று தன் நாக்கை துருத்தி அவரை எச்சரிப்பது போல அக்னி பேச..
“டேய் என்னங்கடா .. உங்கப்பன் கொஞ்ச நாள் உங்க பாட்டி முந்தானையை பிடிச்சுட்டு சுத்தி என்னை அவகிட்டேயே விடல.. அப்பறோம் நீங்க ஆரம்பிச்சீங்க.. சரி பசங்க பெருசாகிட்டா சரியாகிடும்னு நான் பொறுத்து போனா.. இப்பவும் வந்து அதே டோர்சேர் பண்றீங்க. அப்பறோம் நான் எப்பத்தாண்டா என் பொண்டாட்டிகூட பேசுறது..” என்றார் கடுப்பாக.
“அதான் பேசி பேசி எங்க பாட்டியை கரெக்ட் பண்ணி ரெண்டு புல்லையும் கொடுத்துட்டியே.. இனி என்ன வயசான காலத்துல.. போ.. போ.. போய் வேற எதுவம் வேலை இருந்தா பாரு.. ” என்றான் அக்னி மேலும் அவரை வெறுப்பேற்றும் விதமாக.
இருவரையும் முறைத்தவர் சித்தாத்தாவின் கையை பற்றி தன் பக்கம் இழுத்து பிடித்தவர் “உனக்கு உன் பொண்டாட்டி இருக்கா.. இவனுக்கு ஒரு லவர் இருக்கா.. போய் அவனவன் ஆளுங்க கூட ரொமான்ஸ் பண்ணுங்க டா.. இன்னிக்கு நான் என் பொண்டாட்டியை உங்க யாருக்கும் விட்டுக்கொடுக்கிறதா இல்ல.. ” என்றவர் “நீ டா பஞ்சவர்ணம் நாம உள்ள போய் பேசலாம் . இங்க நிறைய கரடிங்க இருக்கு.. ” என்று சித்தாத்தாவை இழுத்துக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டார்.
“மார்க்..! மார்க்!..” என்று அக்னி இருந்த இடத்தில் இருந்து சத்தமிட..
“டேய் சும்மா இருடா.. ” என்று அக்னியை செல்லமாக அதட்டியவர். “பனி வாம்மா நாம போய் சமைக்கலாம்” என்று அவளை அழைத்தார்.
இவர்கள் குடும்பமாக சந்தோசமாக ஒருவரை ஒருவர் பேசி சிறிது கிண்டல் செய்வதை ரசித்துக்கொண்டு இருந்த பனிக்கு தன் குடும்பத்தின் நினைவு வந்துவிட.. சௌந்தர்யா அழைத்து அவளுக்கு காதில் விழவில்லை. அதை கவனித்த ஐரா “பனி!.. ” என்று சத்தமாக அழைக்க.
“ஆஹ்! என்னங்க.. கூப்பிட்டீங்களா?” என்றாள் அவசரமாக.
“அம்மா சமைக்க கூப்பிட்டாங்க. நீ ஏதோ யோசனையில் இருந்தியே…” என்றான்.
“அதுவா.. நீங்க எல்லாரும் சந்தோசமா பேசி சிரிக்குறதை பார்ததும் எனக்கு என் அம்மா , அப்பா நியாபகம் வந்திருச்சு” என்றாள் கவலையாக.
அவள் நிலைமை மற்றவர்கள் உணர.. “நான் இருக்கேன் மா உனக்கு.. நீ இனிமேல் உனக்கு யாரும் இல்லேனு கவலையே படக்கூடாது சரியா” என்றவர் மகன்களின் உதவியுடன் வீல் சேரில் அமர்ந்து பனியிடம் பேசி அவள் மனநிலையை மாற்றியபடி கிச்சனுக்குள் அவளோடு சமைக்க நுழைந்து கொண்டார்.
“அண்ணிக்கு குடும்பம்னு யாருமே இல்லையா டா.. ” என்றான் அக்னி.
“அவ உன்னை விட சின்னவ தான் டா. நீ சும்மா பேர் சொல்லியே பேசு..” என்றவன் அவளை பற்றி அக்னியிடம் சொன்னான்.
“அவங்களை நல்லா பார்த்துக்கோ.. ” என்று ஐராவின் தோள் தட்டி சொன்னான் அக்னி.
“ம்ம்ம்.. நிச்சயமா ” என்றவன் கிச்சனில் சிரித்துப் பேசும் பனியை ரசிக்கத்துவங்கினான்.
“நான் போனதுக்கு அப்பறோம் உன் பொண்டாட்டியை சைட் அடிச்சுக்கோ… இப்போ என்ன காரணத்துக்காக நீ திரும்பவும் நம்ம வீட்டுக்கு வந்தேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றான் அக்னி.
அவன் கேட்டதும் புருவம் சுருக்கி ஐரா அக்னியை பார்க்க.. “அவ்ளோ சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வர நீ சம்மதம் சொல்ற ஆள் இல்லையே.. நிச்சயமா ஏதாவது காரணம் இருக்கும்” என்றான் அக்னி.
அவனை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் “கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணிட்ட… நான் இங்க இருந்து போனதுக்கு காரணமும் அப்பா தான், இப்போ திரும்ப வந்ததுக்கு காரணமும் அப்பாவே தான்” என்றான்.
“அப்பாவா” என்றான் அக்னி.
“ம்ம்.. ” என்றவன் “இங்க பேச வேணாம் நீ வா… உன் ரூமுக்கு போய்ட்டு பேசலாம்” என்று அக்னியுடன் அவன் ரூமுக்கு சென்றான்.
உள்ளே சென்றதும் தான் இங்கே வந்ததற்கான காரணத்தை சொன்னதும் அக்னிக்கு கோபத்தில் நரம்புகள் புடைத்தது, “உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு நான் செய்ய தயாரா இருக்கேன். எப்படி அப்பாவால இப்படி ஒரு காரியத்தை செய்ய முடிஞ்சது, அதுவும் இந்த வயசுல.. ‘” என்று கண்கள் சிவக்க பேசினான்.
“எனக்கும் அதே எண்ணம் தான். ஆனா அது உண்மையா இருக்க கூடாதுன்னு நான் நினைக்குறேன்” என்றான்.
பிறகு இருவரும் அது சம்மந்தமாக பல விஷயங்கள் பேசி அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவு எடுத்தனர்.
