News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி PART-2 மூர்க்கன் 17

by Layas Tamil Novel
1.6K views
A+A-
Reset

மூர்க்கன் 17

“என்னங்க இது.. நீங்க வாக்கிங் போறதுனா போயிட்டு வாங்க. என்னை ஏன் கூப்பிடறீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு.. ” என்று தன்னையும் அவர்களோடு வாக்கிங் வந்தே தீர வேண்டும் என்று அன்பு தொல்லை செய்து கொண்டிருந்த கயலிடம் அவர்களோடு செல்ல மறுத்துப் பேசிக்கொண்டிருந்தாள் இளங்கிளி.

“அட அக்கா! வேலை தானே அதுக்கு இப்போ என்ன அவசரம் . மணியைப் பாருங்க மணி நாலு தான் ஆகுது. இந்த நேரத்துல என்ன வேலை இருக்கு உங்களுக்கு. முதல்ல நீங்க முகம் கழுவிட்டு வேற புடவையை சீக்கிரம் கட்டிட்டு வாங்க. நாங்க எல்லாரும் உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க வந்து இந்த ஊரை சுத்தி காட்டலாமே ” என்று இளங்கிளியை தள்ளிக்கொண்டே பாத்ரூம் பக்கம் சென்றாள் கயல்.

“இல்ல பசங்க எழுந்தா என்னை தேடுவாங்க. ” என்று  எப்படியாவது இவர்களிடம் இருந்து நழுவலாம் என்ற எண்ணத்தில் சொன்னாள் இளங்கிளி.

“அதுக்கு தான் உங்க கூட அண்ணன்னு சொல்லிட்டு ஒருத்தர் இருக்காருல்ல அவர் பாத்துப்பார் ” என்று சொன்ன கயலுக்கு தெரியாமலா இருக்கும். இளங்கிளி அவர்களோடு செல்ல பிடிக்காமல் தான் சமையல் செய்கிறேன், வேலை இருக்கிறது, பிள்ளைகள் தேடுவார்கள் என்று சொல்லி சமாளிப்பதை கண்டு கொண்டு இருந்தவள் ஒருவாறாக இளங்கிளியை தயார் செய்து தங்களோடு காரில் ஏற்றி இருந்தாள்.

முன் இருக்கையில் ஈஸ்வர் காரை ஓட்ட.. அவன் அருகே ராஜ் அமர்ந்து இருந்தான்.

பின் இருக்கையில் ஏறிய இளங்கிளிக்கு மறுபக்கத்தில் மித்ரா ஏற்கனவே ஏறி இருக்க..

அவளை உள்ளே அமர செய்துவிட்டு அவள் அருகேயே அமர்ந்து கொண்டாள் கயல்.

கிட்டத்தட்ட இளங்கிளியை கடத்திக்கொண்டு தான் சென்றார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

ஒருவித சங்கோஜத்தோடு அமர்ந்து இருந்தாள் இளங்கிளி.

“வாக்கிங் போறதுன்னா இவங்க மட்டும் போய்ட்டு வரட்டுமே.. என்னை எதுக்கு இவ்ளோ காலையில வந்து கூட்டிப் போகணும் இவங்க ” என்று உள்ளுக்குள் நால்வரையும் நினைத்து நொந்து கொண்டாள் இளங்கிளி.

கயல் தான் வழி நெடுக பேசிக்கொண்டே வந்தாள் .

முதலில் அவள் பேசியதில் நாட்டம் இல்லாமல் நடந்து கொண்டாலும் , சிறிது நேரத்தில் அவள் சிரித்துப் பேசிக்கொண்டு வந்ததில் இளங்கிளியும் சற்று அவள் அலைவரிசைக்கு தகுந்தாற்போல கயல் பேசுவதை கவனித்தவாறே புன்னகைத்தபடி அமர்ந்து இருந்தாள்.

“அக்கா! எப்படி ஆதியையும்., அல்லியையும் நீங்க ஒருத்தர் சமாளிச்சு வளர்த்திருக்கிங்க.. ரெண்டு பேரும் கொஞ்சம் சேட்டை தான் போல.. ” என்றாள்.

“இல்ல நான் மட்டும் தனியா அவங்கள பாத்துக்க முடியாது. கூட என் அண்ணாவும், அப்பறோம் இங்க வந்ததுல இருந்து காமாட்சி அக்காவும் தான் எனக்கு கூட இருக்காங்க. அப்போ அப்போ அவங்களும் எனக்கு பசங்களை பாத்துக்க உதவியா இருப்பாங்க” என்றாள்.

“சரி அக்கா , உங்க கையாள மீன் குழம்பு சாப்பிட்டு எனக்கு ரொம்ப நாள் ஆச்சு . இன்னிக்கு செஞ்சு தரீங்களா?” என்றாள் கயல்.

“கயல் ! மீன் குழம்பு கேக்குற நேரமா டி உனக்கு ” என்று மித்ரா அவளை எட்டிப் பார்த்து பேச..

“இந்த நேரத்துல யாரு கேட்டா.. எனக்கு மதியம் சாப்பிட இருந்தா போதும் ” என்று கயல் பதில் சொல்லவும்

காருக்குள் இருந்த எல்லோருக்கும் அவள் பேச்சைக் கண்டு சிரிப்பு வந்துவிட்டது. இளங்கிளியும் தான் சிரித்தாள்.

“டேய் ராஜ், எப்படி டா இவளை சமாளிக்குற . வாயை திறந்தா மூடவே மாட்டேங்குறாளே.. ” என்று கயலை கிண்டல் செய்தான் ஈஸ்வர்.

“டேய் இவளோட மினி வெர்சன் என் மக யஸ்வந்திகா இருக்காளே.. அவ பேசுறதை நீ ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் முழுக்க கேட்டுப் பாரு.. காதுல ரத்தமே வழியும். ஒரு பக்கம் என் பொண்டாட்டி.. இன்னோரு பக்கம் என் பொண்ணு.. என் நிலைமையை நினைச்சுப் பாரு.. “என்று ராஜ் தன் காதில் ரத்தம் வழிவது போலவும் அதை துடைப்பது போலவும் பாவனை செய்ய..

“நேத்து அத்தைகிட்டே உனக்காக நான் போய் சப்போர்ட் பண்ணி பேசினேன் பாரு. என்னை சொல்லணும். என்னவோ செய்யட்டும்னு விட்டிருக்கும் உன்னை ” என்றாள் கயல் ராஜ்ஜை முறைத்துக்கொண்டே.

“சரி விடு கயல்., அவன் ஏதோ தெரியாம பேசிட்டான் “அவளை சமாதானம் செய்தாள் மித்ரா.

“இல்ல மித்ரா உனக்கு தெரியாது. யஸ்வந்திகா ஒன்னும் என்னை மாதிரி கிடையாது. அப்படியே இவரை மாதிரி தான், இவர் எப்படி என்னை இம்சை பண்ணுவாரோ அதே போல தான் அவளும் என்றாள்.

“சரி சரி.. போதும் உங்க பஞ்சாயத்து. நாம் வர வேண்டிய இடத்துக்கு வந்தாச்சு ” என்றான் ஈஸ்வர்.

காரை பார்க் செய்துவிட்டு நால்வரும் இறங்க.. இளங்கிளி சேலையை குளிருக்கு இதமாக இழுத்துப் போர்த்திக்கொண்டே அவர்கள் பின்னால் இறங்கி நடந்தாள்.

“ஷ்.. அப்பா.. செம்ம குளிர் இல்ல.. ” என்ற கயல் “எப்படி க்கா இந்த குளிரை சமாளிக்குறீங்க ” என்றாள்.

“இந்த நேரத்துக்கு வேலைக்குப் போறவங்களைத் தவிர வேற யாரும் வெளிய வர மாட்டோம். அப்டியே வந்தாலும் ஸ்வெட்டர் , சால்வைன்னு எல்லாமே எடுத்துட்டு தான் வருவோம். உங்களை மாதிரி டூர் வரவங்க தான் ஊரை சுத்தி பாக்குற ஆர்வத்துல இந்த நேரத்துக்கு வாக்கிங் வருவாங்க. அப்பறோம் குளிர் காய்ச்சல் வந்து படுத்துப்பாங்க” என்றபடி அவர்கள் பின்னால் சென்றாள் .

அதை கேட்டதும் முன்னே நடந்து கொண்டிருந்த நால்வரும் திரும்பி ஒரே நேரத்தில் இளங்கிளியைப் பார்க்க.. அவளோ அவர்களை கண்டும் காணாதவள் போல நடந்து சென்றாள் .

“அண்ணி எப்படி சொல்லிட்டு போறாங்க பாத்தியா? ” என்று கயலிடம் சொன்னவன். “பழசு மறந்தாலும்., இப்படி சரியான நேரத்துல சொல்லிக் காட்டுறது மட்டும் இன்னமும் மாறல.. ” என்றவன் முன்னே நடக்க..

மற்றவர்களும் அவனோடு சேர்ந்து நடந்தனர்.

சற்று தொலைவில் டீ கடை தெரியவும் “ரொம்ப குளிருது இல்ல. ஒரு டீ சாப்பிடலாமா?” என்றான் ராஜ்.

“அதோ அங்க இருக்கு டீ கடை ” என்ற கயல். “அங்க போலாம் ” என்றாள்.

“சரி இவ்ளோ தூரம் இவங்களை கூப்டு வந்தாச்சு. அண்ணாவுக்கு இவங்க தான் இளங்கிளின்னு தெரியும். ஆனா இவங்களுக்கு தான் எதுவுமே நியாபகம் இல்லையே , அங்க வந்து ஏதாவது கேட்டா என்ன செய்றது” என்றாள் மித்ரா.

“இவ்ளோ தூரம் கூட்டி வந்தாச்சு. சமாளிச்சுக்கலாம் வா.. ” என்றவாறு டீ கடையில் அமர்ந்து இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ராவணை பார்த்துக்கொண்டே முன்னே நடந்தான்.

பேசி வைத்தது போல நால்வரும் இளங்கிளியை மறைத்தபடியே முன்னே நடக்க..

அவர்கள் பின்னால் வந்த கிளியோ.. “இப்படி என்னை தனியா நடக்க விட தான் இவ்ளோ தூரம் கூடி வந்தாங்களா? விட்டிருந்தா வீட்ல நிம்மதியா தூங்கவச்சு செஞ்சிருப்பேன் ” என்று மனதிற்குள் புலம்பியபடி அவர்கள் பின்னால் சென்றாள்.

ராவணைக் கண்டதும் ராஜ் அவனிடம் பேசியவன் அவர்களோடு வந்த இளங்கிளியைப் பார்த்து உறைந்து போய் நின்று இருந்தான்.

ஈஸ்வர் ராவணைப் பார்த்து சிரித்தவன் சுற்றிலும் அவனோடு வந்த ஆட்களை தேடினான். யாரும் அங்கு இல்லாதது கண்டதும் . மச்சான் உஷார் பார்ட்டி தான் பொண்டாட்டியைக் கூட்டி வரும்னு தெரியாம இருக்கும்போதே இவ்ளோ எச்சரிக்கையா இருக்கான். இவங்க வரது தெரிஞ்சிருந்தா ..” என்று நினைத்தவன் “என்ன மச்சான் இப்படியே எவ்ளோ நேரம் பாத்துட்டு இருக்கறதா உத்தேசம் உனக்கு ” என்றான்.

அவன் குரலில் நிகளுக்கு வந்தவன் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு வேகமாக இளங்கிளியிடன் வந்தவன் அவள் கையைப் பற்றி தன்னோடு இழுத்துக்கொண்டு நேராக டீ கடைக்குப் பின்னால் சென்றான்.

இளங்கிளியோ அதிர்ந்தவள் எதுவும் புரியாமல் விழித்திருக்க.. அவளை இழுத்து செல்பவனை தடுக்க கூட யோசிக்காமல் இங்கே என்ன நடக்கிறது என்ற ரீதியில் அவன் பின்னால் சென்றாள்.

“என்ன டா உங்க அண்ணன் பொண்டாட்டியைப் பார்த்ததும் மறைவா அழைச்சிட்டுப் போய்ட்டான், தனியா கூட்டிட்டு போய் ஏதாவது செய்துரப் போறான் ” என்றான் ஈஸ்வர்.

“செஞ்சா இப்போ என்ன தப்பு.. அவர் பொண்டாட்டி தானே.. ” என்றாள் மித்ரா.

“அது அவருக்கு மட்டும் தானே தெரியும் . உங்க அண்ணிக்கு தெரியாது இல்ல.. ” என்றான் ஈஸ்வர்.

“அதை பத்தி உனக்கு என்ன டா கவலை, அதெல்லாம் என் அண்ணன் ஹேண்டில் பண்ணிப்பார்” என்ற மித்ரா. “அண்ணா! ஸ்ட்ரோங்கா நாலு காபி ” என்றவள் ஈஸ்வரை இழுத்துக்கொண்டு வந்து அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்தாள் .

அவர்களோடு கையாளும், ராஜும் அமர்ந்து இருக்க.. இங்கே இளங்கிளியை இழுத்துக்கொண்டு வந்திருந்த ராவனோ தங்களை சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவன் “சிணுங்கி! எப்படி டி இருக்க.. ” என்று அவளை இழுத்து சுவற்றில் சாய்த்து நிற்கவைத்தவன் இளங்கிளி என்ன என்று புரிந்து பேசுவதற்கு முன்னரே அவள் இதழை தன் இதழுக்குள் மொத்தமாக உறிஞ்சிக்கொண்டான்.

அதில் அதிர்ந்த இளங்கிளியோ ராவணின் தோளில் அடித்து தன்னை விடுவிக்கும் படி தள்ள..

அப்போதும் அவளை விடாமல் முத்தம் வைத்தவன் அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருக்கவும் தான் அவளை விட்டுப் பிரிந்து நின்றான்.

வேக மூச்சுக்கள் வாங்க அவனைப் பார்த்தவள் வேகமாக அங்கிருந்து செல்ல முற்பட..

அவளை இழுத்து மீண்டும் சுவற்றில் சாய்த்து நிறுத்தி இருந்தவன் “எங்க டி போற..” என்று இலங்கிலியின் உடல் உரச நெருங்கி நின்றான்.

அவன் மார்பில் மீண்டும் கைவைத்து தள்ளினாள் இளங்கிளி, அவளால் இந்த ராவணை அசைக்க முடியுமா? என்ன? அவங்க அவள் தள்ளும் வேளையில் விலகி நின்று அவளுக்கு மூச்சு வாங்க நேரம் கொடுத்தான். மூச்சு வாங்கியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தவள் கலங்கிய விழிகளோடு”யாருங்க நீங்க… முன்னபின்னத் தெரியாதவங்ககிட்டே இப்படித் தான் நடந்துப்பிங்களா?” என்று  தன் சேலைத் தலைப்பால் உதட்டில் இருந்த ராவணின் எச்சிலை அழுந்தத் துடைத்தாள்.

“என்னை யாருன்னு தெரியலையா சிணுங்கி?” என்றான்.

“தெரியாலையின்னு தானே கேக்குறேன் ” என்றவள் அவனை விட்டு விலகப் போக,.,

அவள் இருபக்கமும் கைகளை சுவற்றில் அழுத்தி இளங்கிளியை போக விடாமல் தடுத்து நிறுத்தியவன் அவள் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை கொண்டு சென்றான்.

அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடியாமல் இளங்கிளி தலையை மறுபக்கம் திருப்பிக்கொள்ள..

அதை கண்டு மனம் வலித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் ” நான் தான் டி உன்னோட புருஷன் ” என்றான்.

“புருஷன் ” என்ற வார்த்தையில் நிமிர்ந்து அவனை விழுக்கெனப் பார்த்தாள். பின் “புருஷனா? என்னோட புருஷனா?” என்று சிரித்தவள் “எனக்கு புருஷனே கிடையாது?” என்று உளறினாள்.

“புருஷன் இல்லாம எப்படி உனக்கு ரெண்டு  புள்ள பிறந்துச்சு?” என்றான் ராவண் .

அதை கேட்டு இளங்கிளி அவனை அதிர்ந்து பார்த்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.