News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என் பொண்டாட்டி நீ தான்டி! 3

by Layas Tamil Novel
1K views
A+A-
Reset

EPISODE 3

இதழ்யாவும் , ராஜனும் தப்பு செய்தவர்கள் போல கை கட்டி  நின்று இருக்க ..  அவர்களுக்கு அருகில் சதாசிவம் நின்று இருந்தார் .

இவர்கள் மூவருக்கும் எதிரே போடப்பட்டு இருந்த சோபாவில்  மூன்று வாட்டசாட்டமான ஆண்கள் கம்பீரமாக அமர்ந்து இருந்தனர் .

“சொல்லு டா… எத்தனை நாளா இது நடக்குது . வீட்டுல யாரும் இல்லாத நேரமா பார்த்து இந்த மாதிரி காரியத்தை எல்லாம் செய்துட்டு இருக்கியா நீ … அந்த அளவுக்கு உனக்கு பயம் விட்டுப்போய்டுச்சா . நாங்க மட்டும் வராம இருந்திருந்தா இங்க நடந்ததை நீயும் , இவரும் சேர்ந்து காதும்  காதும் வெச்சா மாதிரி எங்க எல்லார் கிட்டேயும் இருந்து மறைச்சிருப்பிங்க அப்படித்தானே ” என்று ஒரு பெண்ணின் குரல் கணீர் என ஒலித்தது .

பார்ப்பதற்கு தைரிய சாலியாகவும் , கரடுமுரடான சுபாவமும் கொண்டவர் போல இருக்கும் அந்த பெண்மணி உள்ளத்தில் மிகவும் நல்ல குணம் படைத்தவர் . எதிலும் நியாயம் தர்மம் பார்ப்பவர் அப்படிப்பட்ட அந்த பெண்மணியின் கணவன் தான் சதாசிவம் . அவருக்கு இப்படி ஒரு பெண்ணா என்னும் அளவிற்கு குணத்தில் சிறந்தவராக இருக்கும் சதாசிவத்தின் மனைவி தேன்மொழி .

அதை கேட்ட ராஜன் அமைதியாக நிற்க… அவன் அருகில் நின்று இருந்த இதழ் ” அம்மா … இவன் தான் என்னை… ” என்று அவள் பேச வர…

” ஓஹோ ! இவன் உன்னை கூப்பிட்டாணனதும் வயசு புல்லை இப்படி தான் தனியா கிளம்பி வருவியா . என்ன தான் நீங்க ரெண்டு பேரும் காதலிக்குறதாவே இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்ன இப்படி தனியா சந்திச்சு பேசிக்குவீங்களா?” என்று இதழை முறைக்க..

அவரை புரியாமல் பார்த்த இதழ் ” என்ன ! நானும் இவனும் காதலிக்குறோமா ? என்னை கடத்திட்டு வந்ததே இவன் தான் . இவனை போய் நான் எப்படி காதலிப்பேன் . இந்த அம்மாவுக்கு என்ன புத்தி கெட்டுப்போய்டுச்சா … என்ன ஏதுன்னு கேட்காம அவங்க நினைச்சதை பேசிட்டு இருக்காங்க ” என்று நினைத்தவள் ” நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க… ” என்று வாயை திறக்க…

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் . எனக்கு எல்லாம் தெரியும் நீங்க ரெண்டு பெரும் பார்த்து பேசணும்னா நான் இருக்கும்போது இல்ல வீட்டுக்கு வந்திருக்கும். அது என்ன நான் இல்லாத அப்போ வீட்டுக்கு … அதுவும் என் பெடரூம்ல… ” என்று அவர் இதழையம், ராஜனையும் பார்க்க.

“அண்ணி ! நான் தான் சொன்னேனே.. இவளை கூட்டிட்டு வந்ததும் அண்ணன் வந்துட்டாருனு . அவருக்கு தெரியக்கூடாதுனு தான் நான் உங்க ரூமுக்குள்ள இவளை இருக்க சொல்லிட்டு அண்ணன் கிட்டே எதையாவது சொல்லி சமாளிக்கலாம்னு பேசிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்க வருவீங்கன்னு எனக்கு என்ன தெரியும் ” என்றான் ராஜன் காதை தடவிக்கொண்டே .

“ஓஹோ… அப்போ உங்க அண்ணன் இந்நேரம் வரலையின்னா சார் என்ன பண்ணிட்டு இருந்திருப்பிங்க . அந்த பொண்ணை நாடு வீட்டுல உக்கார வெச்சு பேசிட்டு இருந்திருப்பியா ” என்றார் தேன்மொழி .

“ஏங்க நீங்க என்ன எதுவும் பேசாம என் வாயவே பார்த்துட்டு இருக்கீங்க. அவனை கண்டிச்சு வைய்யுங்கன்னு நான் எவ்ளோ முறை சொல்றது  . எப்பவும் எவளையாவது கூட்டிட்டு வந்து கும்மாளம் அடிச்சிட்டு இருப்பான் . அதையும் என்னனு கேட்க மாட்டேங்க.. இப்ப்போ என்னடான்னா திடீர்னு இந்த பொண்ணை காதலிக்குறேனு சொல்றான் . அதையும் என்னன்னு கேட்டு கண்டிக்காம நின்னுட்டு இருக்கீங்க ” என்று பொரிந்து தள்ளினார் சதாசிவத்திடம் .

“ஏய் தேனு இப்போ எதுக்கு நீ தேவை இல்லாம டென்ஷன் ஆகிட்டு இருக்க .. அவன் தான் சொல்றானே சும்மா பேசிட்டு இருக்க தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்னு. நீ சொன்ன மாதிரி அந்த மாதிரி பொம்பளைங்களை அவன் கூட்டிட்டு நேரா இங்கையா வந்திருப்பான். இந்நேரம் பின்னாடி வீட்டுல இல்ல அவன் கூத்தடிச்சிட்டு இருந்திருப்பான். அந்த மாதிரி அவன் செய்யாத அப்போவே நீ புரிஞ்சுக்க வேண்டாமா ? இவன் நிஜமாவே அந்த பொண்ணை லவ் பண்றான்னு ” என்று ராஜனுக்கு பரிந்து பேசினார் சதாசிவம் மிகவும் நல்லவர்போல .

“என்ன எல்லாரும் உங்களுக்கு தோணுறதை பேசிட்டு இருக்கீங்க.. நான் யாரையும் லவ் பண்ணல . எனக்கு இவன் யாருன்னே தெரியாது . திடீர்னு வந்து என்னை தூக்கி… ” என்று இதழ் முழுவதுமாக சொல்லி முடிந்திருக்கவில்லை .

” என்ன டி பாப்பா இப்படி பொசுக்கு பேசிட்டே… என் மேல கோபம் இருந்தா என்னை ரெண்டு அடி கூட அடிச்சுக்க .. அதுக்குன்னு என்னை யாருன்னு தெரியாது. என்னை லவ் பண்ணல அப்படி இப்படின்னு சொன்னா எனக்கு மனசு வருத்தமா இருக்காதா ” என்று இதழின் தோளில் கைபோட்டு அவளை தன் அருகில் இழுத்து நிற்க வைத்தவன் .

“இங்க பாரு நான் உன்னை இங்கே தூக்கிட்டு வந்து அடைச்சு வெச்சதை எங்கையும் வாயை திறந்து இனிமேல் பேசினேன்னு வை உன் அம்மா, அப்பா , அண்ணா , அண்ணி  ஏன் உன் வீட்டுல இருக்கே அந்த குட்டி பையன் எல்லாரையும் கூண்டோட பரலோகம் அனுப்பிடுவேன் ” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி இதழை மிரட்டினான் .

அவன் பேசியதை கேட்டு பயந்துபோன இதழ் எங்கே தான் உண்மையை சொன்னால் தன் வீட்டில் இருப்பவர்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து அமைதியாகிவிட…

” டேய் முதல்ல அவளை விட்டு தள்ளி நில்லுடா நாங்க இருக்கோம்ங்குறது உனக்கு நினைப்பு இருக்கா ? இல்லையா ? ” என்றுவர் ” நீ இங்கே வா … ” என்று இதழின் கை பிடித்து அழைத்தவர் .

“நான் பேசுறதை எல்லாம் பார்த்துட்டு நீ பயந்துடாத .. அவனை நான் பார்த்துகிறேன் . கல்யாணம் ஆகாம இவன் எங்க கூப்பிட்டாலும் தனியா வராத சரியா ” என்ற தேன்மொழி ” உன் பேர் என்ன ?” என்றார் .

இதழ் பதில் பேசாமல் எதிரே நின்று இருந்தவனை பார்க்க…  ” நீ சொல்லு டா இவ பேர் என்ன ?” என்றார் ராஜனிடம் .

இப்படி திடீர் என்று அவனிடம் இதழ்யாவின் பெயரை கேட்டால் அவனுக்கு எப்படி தெரியும் . அவன் தான் சதாசிவம் அழைத்து சொல்லும்போதுதான் அவளைஏ முதல் முறை பார்த்தான் . இதில் அவள் பெயர் தெரிந்திருக்க என்ன வாய்ப்பு இருக்க போகிறது .

“டேய் என்ன டா ஒரு பேரை கேட்டா ரெண்டு பேரும் பதில் பேசாம முழிக்குறிங்க … ” என்று அதட்ட…

“அதான் சொன்னேனே பாப்பான்னு எனக்கு அந்த பேர் சொல்லி தான் கூப்பிட பிடிக்கும். வேணும்னா அவளையே சொல்ல சொல்லுங்க என்ன பேரு வெச்சிருக்காங்க அவளுக்கு அதான் நான் எனக்கு புடிச்ச பேரை வெச்சு கூப்பிடுறேன் ” என்று சொல்லி சமாளிக்க …

“அப்படி என்ன பேரு டி வெச்சாங்க உனக்கு உன் வீட்டுல ” என்று அவளை பார்க்க..

அவளை பார்த்த ராஜன் “அதான் கேக்குறாங்க இல்ல சொல்லு … ” என்று பல்லைக்கடித்துக்கொண்டு அவளை மிரட்டவும் “இதழ் … இதழ்யா ” என்றாள்.

“என்னது இதழ்யாவா ! இதுக்கு என்ன நல்ல பேரா தான் இருக்கு . இந்த பேரு உனக்கு பிடிக்கலையா டா… சரியா போயிருச்சு போ.. ” என்ற தேன்மொழி .

“டேய் யாரு டா அங்க… ” என்று குரல் கொடுக்க…

“அண்ணி…  ” என்று இரண்டு மூன்று ரௌடிகள் அவர் முன் வந்து பவ்வியமாக நிற்க .

“இவளை கொண்டு போய் அவங்க வீட்டுல விட்டுட்டு வந்திரு ” என்றார் .

அதை கேட்டதும் ராஜனும், சதாசிவமும் ஒருவரை ஒருவர் செய்வதறியாது பார்த்தனர்.

“அண்ணி அவங்க எதுக்கு அதான் நான் இருக்கேன்ன்ல நானே கொண்டு போய் அவளை விட்டுட்டு வந்துடறேன் ” என்றான் ராஜன் .

“ம்ஹும்.. நான் உங்க கூட வரல.. ” என்ற இதழ் தேன்மொழியின் கை பிடித்து “நீங்களே என்னை எங்க வீட்ல கொண்டு போய் விடுறிங்களா ?” என்று கெஞ்சுவது போல பார்க்க .

“வரும்போது அவன் கூட தானே வந்த இப்போ என்ன திடீர்னு அவன் கூட போகமுடியாதுனு சொல்ற ” என்றார் .

“அது… அது வந்து … ” என்று பதில் சொல்ல தெரியாமல் இதழ் விழிக்க…

“அட என்ன தங்கச்சி இவனை கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விடும்போது அவங்க வீடு ஆளுங்க யாரும் பார்த்துடக்கூடாதுனு அந்த பொண்ணு சொல்லுது நீயே ஒரு எட்டு கொண்டு போய்  விட்டுட்டு வந்திரு ” என்று சோபாவில் இவ்வளவு நேரம் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தேன்மொழியின் அண்ணன்களில் இளையவர் மணிகண்டன் கூற .

அவர் சொன்ன படியே இதழை அவள் வீட்டின் தெரு முக்கில் இறக்கிவிட்டு “பத்திரமா வீட்டுக்கு போ.. பொருக்கி பசங்க அதிகமா இருக்குற காலம் இது சரியா ” என்று அவளை அனுப்பிகிட்டு கிளம்பினார்.

இதழும் விட்டால் போதும் என்று வீட்டிற்கு செல்ல… அவளை திரும்ப பார்த்ததில் மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் இனிமேல் இப்படி நடந்துவிட கூடாது என்று இதழ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அமெரிக்கா மாப்பிள்ளையை பார்த்து அவளுக்கு திருமண ஏற்பாடு செய்துவிட்டார்கள் . அதற்கு பிறகு தான் நடந்தது தெரியுமே .

இதுதான் ராஜன் இத்தலயாவை முதல் முதலா கடத்தும் நடந்த விஷயம் . இப்போ என்ன  நடக்குதுன்னு பார்க்கலாம் …

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.