News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

நான் சொல்ற போல தான் இனிமேல் நீ நடந்துக்குற மூர்க்கன் 49

by Layas Tamil Novel
98 views
A+A-
Reset

மூர்க்கன் 49

“மித்ரா! ஏண்டி .. ஏண்டி இப்படி பண்ணின.. கொஞ்சம் நாங்க சொல்றதை நீ கேட்டிருந்தா உன் வாழ்க்கை இப்படி ஆகிருக்குமா” என்று அழுத விழிகளோடு மித்ராவை மார்போடு சேர்த்து அணைத்தபடி அழுதார் பரிமளா.

அவரை மருண்ட விழிகளோடு நிமிர்ந்து புரியாமல் பார்த்திருந்தாள் மித்ரா.

அவர் கண்ணீர் துளிகள் மித்ராவின் கன்னத்தில் பட்டு தெறிக்க..

அவரை பாவமாக பார்த்த மித்ராவோ “ஈஸ்வர் இவங்க என்னால தான் அழறாங்களா?” என்றாள் சோகமாக.

“இல்ல மித்து.. அது .. ” என்று அவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். ஆம் என்று சொன்னால் ஏன்? எதற்கு? என்று கேள்விகள் எழுப்புவாள். இல்லை என்று சொன்னால் அதற்கும் கேள்விகள் எழும் என்று அமைதியாக அவளை பார்த்தான்.

“பரிமளா பாரு நீ அழறதை பார்த்துட்டு மித்ரா முகம் சோகமாகிடுச்சு. இப்போ எதுக்கு பழசை எல்லாம் பேசி அவளை கஷ்டப்படுத்துற.. அதான் நம்ம புள்ள நம்ம கிட்டே வந்துட்டாளே .. அவளுக்கு கல்யாணம் வேற ஆகிருச்சு. இதை நாம சந்தோஷமா கொண்டாட வேண்டாமா?” என்றார் வேதவள்ளி.

அவர் சொன்னதும் கண்ணீரை துடைத்துக்கொண்ட பரிமளா. “சரிங்க அத்தை நான் அழல..”என்றவர் “ஈஸ்வர் எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டையேப்பா.. ” என்றார் சற்று வருத்தத்தோடு.

“ம்கூம்.. அவன் பக்கத்துலயே தான் நான் இருந்தேன். எனக்கே அவன் சொல்லல.. நீ இங்க இந்தியாவுல இருக்க சொல்லிருவானா?” என்றார் பார்வதி.

“சரி பாரு.. போய் எல்லாரும் குளிச்சிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வெக்குறேன் ” என்றார் பரிமளா.

“ஆமா ஆமா முதல்ல போய் குளிங்க.. உங்களை இப்படி பாக்கவே என்னவோ கொலைகார கூட்டத்துக்கு நடுவுல இருக்க மாதிரியே ஒரு பீலிங் வருது” என்றார் கமலா.

“இதுக்கே இப்படி சொல்றிங்க.. அந்த ரக்ஷணாவோட வீட்டை நேர்ல பாத்திருந்தா என்ன சொல்லிருப்பிங்க நீங்க” என்றபடி உள்ளே நுழைந்தான் ராஜ்,

“ஏன் டா ” என்றார் தன் மகன் வந்த கோலத்தை பார்த்துக்கொண்டே..

“ம்ம்.. சுடுகாடு மாதிரி இருக்கு அவ வீடும், லேபும்” என்றான்.

“அவங்க பண்ணின காரியத்துக்கு அனுபவிக்க தான் வேணும்” என்றார் கமலா.

“நீயும் போய் குளிச்சிட்டு வா டா.. ” என்றார் கமலா ராஜ்ஜை பார்த்து.

“எல்லாம் ஓகேவா ” என்றான் ஈஸ்வர் ராஜ்ஜிடம் .

“ஆல் ஓகே மச்சான். ” என்று அவன் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு எழுந்து தன் அறைக்கு குளிக்க செல்ல..

ஈஸ்வர் மித்ராவுடன் எழுந்து மித்ராவின் அறைக்கு சென்றான்.

பார்வதி வேதவள்ளியின் அறைக்கு சென்றுவிட்டான்.

செல்லும் தன் மகளையே பார்த்துக்கொண்டிருந்தவர் “ஐராவும் இப்போ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று மனம் நொந்துகொண்டார்.

“நாளைக்கு வந்துருவான் இல்ல அத்தை. அப்புறம் எல்லாரும் ஒன்னா ஒரே வீட்ல சந்தோசமா இருக்கலாம். நீங்க ஏன் வருத்தப்படுறீங்க. இனிமே நமக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும்” என்று நம்பிக்கையாகப் பேசினார் பரிமளா. 

“மித்ராவுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்து அவ பழைய படி இருக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா பழசு எல்லாம் ஞாபகம் வந்ததுக்கு பிறகு அவர் எப்படி நடந்துக்குவானு நினைக்கல கொஞ்சம் பயமாவும் இருக்கு பரிமளா” என்றார் வேதவல்லி கவலையாக.

“இவ்வளவு கஷ்டத்தையும் கடந்து வந்துட்டா அத்தை இனிமேல் பார்க்கிறதுக்கு என்ன கஷ்டம் இருக்கு. அவளுக்கு பழசு எல்லாம் நினைவு வரும் போது அவர் செஞ்ச தப்பும் அவளுக்கு நினைவு வரும் கண்டிப்பா அது அவளுக்கு பெரிய மனவேதனையை கொடுக்கும். இருந்தாலும் அதை கடந்து வரது தானே வாழ்க்கை. என் மித்ரா அதை சுலபமா கடந்து வந்துருவா அவளுக்கு அந்த தன்னம்பிக்கை இருக்கு” என்றார் பரிமளா. தன் மகளின் மனஉறுதியினை அறிந்தவராக.

இங்கே இப்படி இருக்க.. 

தங்கள் உலகம் மறந்து கவலை மறந்து ராவண் இளங்கிளி இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் மழை பொழிந்து கொண்டிருந்தனர்.

அன்றைய அவள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவள் எழுந்த நிமிடத்தில் இருந்து ஆரம்பத்து இருந்தான் ராவண்.

இரவு படுக்கவே நீண்ட நேரம் ஆகிவிட்டதால் காலை 10 மணி போல தான் இளங்கிளி மெல்ல கண்விழித்தாள்.

 அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்து “ஹாப்பி பர்த்டே சிணுங்கி” என்று அவளை முதல் வாழ்த்தி எழுப்பினான் ராவண்.

அவன் குரல் கேட்டு ராவண் முகத்தில் கண் விழித்தவள் “தேங்க்யூங்க..” என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனை தன்னோடு சேர்த்து அணைத்த படி  படுத்தாள்.

 மெல்ல சிரித்துக் கொண்டே அவள் இடையில் கரம் பதித்து தன்னோடு சேர்த்து அணைத்தவன். “ எழுந்திரி டி, மணி பத்து ஆகுது பசிக்கலயா உனக்கு” என்றான்.

“ம்ம்.. பசிக்குதுங்க. ஆனா தூக்கமும் வருதே “என்றவள் தன் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்துக் கொண்டே “டயர்டா  இருக்கு” என்று உடலை முறுக்கினாள்.

 “ஹேய் மெதுவாடி உடம்ப எதுக்கு இப்படி வளைக்கிற. உன் வயித்துல குட்டி பாப்பா இருக்கு அதை மறந்துட்டியா?” என்று அவளை நேராக படுக்க வைத்தவன். அவள் மென்மையான வயிற்றில் தன் விரல்களை பதிய விட்டு தன் குழந்தையை உணர முயன்றான்.

“ அதெல்லாம் எதுவும் ஆகாதுங்க ஏன் இப்படி பயப்படுறீங்க” என்று எழுந்து அமர்ந்தவள். அவள் அருகே தலைக்கு கையை முட்டுக்கொடுத்து அவளையே ரசித்துக் கொண்டிருந்த ராவனை திரும்பிப் பார்த்தாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ இனிமேல் இப்படி வளைஞ்சு நெளிஞ்சு சோம்பல் முறிக்கிறது இன்னியோட நிறுத்திடு. இதுக்கு அப்புறம் செய்யாத ரொம்ப கவனமா இருக்கணும். உள்ள இருக்குற பாப்பாவும் கேர்ஃபுல்லா இருக்கணும்,உனக்கும் எந்த பிரச்சனைக்கும் வரக்கூடாது. அதனால நான் சொல்ற போல தான் இனிமேல் நீ நடந்துக்குற சரியா” என்றான் 

“சரிங்க..” என்று சிரித்துக் கொண்டு சொன்னவள் “அது என்ன பாப்பா? என் பையன் இல்லை வேண்டாமா?” என்றாள்.

 “அடுத்து பையன் பெத்துக்கலாம். எனக்கு முதல்ல பொண்ணு தான் வேணும் அதுவும் உன்ன மாதிரியே ஒன்னு  உரிச்சு வச்சு வேணும்” என்றான்.

“ ஆனா எனக்கு உங்கள மாதிரி பையன் வேணுமே” என்றாள்.

“அதான் சொன்னேன் டி அடுத்தது பையன் ஓகேவா” என்றவன் “சரி எழுந்திரு போய் பிரஷ் பண்ணிட்டு வா. முதல்ல சாப்பிடு” என்றான்.

“ஆமாங்க செம்ம பசியா இருக்கு” என்றவள் ராவண் நெற்றியில் இதழ் பதித்து விட்டு எழுந்து பிரஷ்ஷாகச் சென்றாள்.

அவள் சென்றதும் ராவணன் போன் அடித்தது. எழுந்து வந்து மேஜையில் இருந்த போனை பார்க்க ராஜ்ஜிடம் இருந்துதான் வீடியோ கால் வந்திருந்தது.

இளங்கிழிக்கு  பிறந்தநாள் வாழ்த்து சொல்லத்தான் அழைத்திருக்கிறான்  என்று புரிந்தவனாக போனை அட்டென்ட் செய்து “அவ பிரெஷ் ஆயிட்டு இருக்காடா” என்றான்.

“ஹோ.. ஓகே அண்ணா.. “ என்றவன். “ உங்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ்” என்றான் ராஜ்.

வீடியோ  காலில் ராஜ்ஜை பார்த்துக்கொண்டே சென்று மெத்தையில் அமர்ந்தவன். “ பர்த்டே எனக்கு இல்லடா என் பொண்டாட்டிக்கு.  சர்ப்ரைஸ் நீ நியாயமா அவளுக்கு தானே கொடுக்கணும், எனக்கு என்ன சர்ப்ரைஸ்” என்று சிரித்தான்.

“அப்போ ரெண்டு பேருக்குமே சர்பிரைஷ்னு வெச்சுக்கோங்க” என்றவன் “சரி அண்ணி எங்கே? வந்தாச்சா. அவங்க வந்த பிறகு சர்ப்ரைஸ் ரிவீல் பண்ணிடலாம்” என்று சிரித்தான் ராஜ்.

“போன்ல யாருங்க” என்று கேட்டபடி முகத்தை துடைத்துக்கொண்டே அவனை நோக்கி நடந்து வந்தாள் இளங்கிளி.

“ராஜ்தான்” என்றவன் “ஏதோ பர்த்டே சர்ப்ரைசாம்” என்று போனை அவளை நோக்கித் திருப்ப..

“ஐயோ! என்னங்க வீடியோ காலா?” என்று அவசரமாக துண்டை வைத்து தான் அணிந்திருந்த இரவு உடையை  மறைக்க முயன்றாள்.

முட்டிக்கு கொஞ்சம் மேலே வரை இரவு உடை அமைந்திருக்க அவளை ராஜ் பார்த்ததும் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டு “அண்ணா திடீர்னு                         காட்டினா அவங்களுக்கு சங்கடமா இருக்காதா. நான் வேணா கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்” என்று போனை வைக்கப் போக “நைட்ரஸ் தான போட்டு இருக்கா. ஒரு நிமிஷம் இரு” என போனை வைத்து விட்டு எழுந்து இளங்கிளியிடம்  சென்றவன். இந்தா இதைப் போட்டுக்கோ” என்று அங்கிருந்த அவள் உடற்பயிற்சி செய்யும் போது அணியும் பேண்டை எடுத்து கொடுத்தான்.

ராவணை முறைத்துக்கொண்டே அவன் நீட்டிய பேண்ட்டை வாங்கி அணிந்தவள் போட்டிருந்த நைட்ரசிற்கு மேலே ராவணின் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு போனை வாங்கி ராஜை தயக்கத்தோடு பார்த்தாள். 

“சாரி அண்ணி அண்ணா தான் சட்டுனு உங்ககிட்ட போன கொடுத்துட்டார்” என்றான்

“பரவாயில்லை கொழுந்தனாரே” என்று அவளும் சமாளித்து சிரித்தாள்.

 “சரி அதெல்லாம் விடுங்க ரெண்டு பேரும் , நீ ஏதோ சர்ப்ரைஸ்ன்னு சொன்னியே . என்னடா அது” என்றான்  ராவண் இருவருக்கும் குறுக்கே புகுந்து.

“அண்ணா வெயிட் பண்ணுங்க ஃபர்ஸ்ட் அண்ணிக்கு விஷ் பண்ணிட்றேன்” என்றவன். “அண்ணி! ஹேப்பி பர்த்டே டு யூ! எங்க வீட்டுக்கு வந்த பிறகு முதல் பர்த்டே நீங்க கொண்டாடுறீங்க” என்று சிரித்தான்.

“தேங்க்ஸ்ங்க கொழுந்தனாரே..!” என்று தனக்கே உரிய வெட்கத்தோடு சொன்னவள். “ஆமாங்க கொளுந்தனாரே.. சொல்லப்போனா நான் கொண்டாடுற முதல் முதல் பிறந்தநாள் இது” என்றாள்.

“என் பேரன் கூட தான் நீ உன்னோட பிறந்தநாளை முதல் முதல்ல கொண்டாடனும்னு இருக்கும் போல” என்று rராஜ்ஜிடம் இருந்து ஃபோனை வாங்கி பேசினார் வேதவள்ளி.

“பாட்டி!..” என்று அவசரமாக கட்டிலில் அமர்ந்து இருந்தவள் வேதவள்ளியை பார்த்ததும் எழ முயல..

“அட உட்காருமா போன் தானே பேசிக்கிட்டு இருக்கோம் என்று அவளை செல்லமாக அதட்டியவர் “ஐரா உனக்கு என்ன கிப்ட் கொடுத்தான்” என்றார் ஆர்வமாக.

தன் கழுத்தில் இருந்த வைர டாலர் பதித்த செயினை எடுத்து அவரிடம் காட்டியவர் “இதுதான் கொடுத்தார் பாட்டி” என்றாள்.

“பரவாயில்லையே அவனுக்கு இதெல்லாம் கூட செய்ய தெரியுதா” என்று சிரித்தார்.

 “ஏ ராஜ் என்னடா சர்ப்ரைஸ்னு சொன்ன” என்றான் ராவண் பொறுமை தாங்காமல் 

“ஒரு நிமிஷம்” என்றவன் வேதவள்ளியிடமிருந்து மொபைலை வாங்கி தன் முகத்தை காட்டியவன் அப்படியே தன் கையை மேலே உயர்த்த அவன் பின்னால் ராவனின் மொத்த குடும்பமும் , அவர்களுடனே இளங்கிளியின் பெற்றோரும் அமர்ந்து இருக்க அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து “ஹாப்பி பர்த்டே கிளி” என்று ஒன்றாக வாழ்த்து சொன்னார்கள்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத ராவண் ஆச்சர்யத்தில் சிரிக்க.. இளங்கிளியோ தன் குடும்பத்தையும் அவர்களோடு சேர்த்து ஒன்றாக அமர்ந்து இருப்பதையும், தன் பிறந்தநாளுக்கு குடும்பம் மொத்தமும் வாழ்த்து சொன்னதை கண்டு நெகிழ்ந்து போய் நின்று இருந்தாள்.

அவர்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டு வந்த ராவண் பின்னே அமர்ந்திருந்த பார்வதி, ஈஸ்வர், மித்ரா மூவரையும் பார்த்து ஆச்சர்யமானான் மித்ராவின் குழந்தை முகத்தை  பார்த்ததும் ஒரு நிமிடம் இதயம் கனத்தவனாக இருந்தவன் தன்னை சுதாரித்துக்கொண்டு. “இவங்க மூணு பேரும்எப்போ இந்தியா வந்தாங்க” என்றான்  சிரித்துக்கொண்டே.  

 “நேத்துதான் மச்சான்” என்ற ஈஸ்வர் எழுந்து வந்து ராஜ் கையில் இருந்து போனை வாங்கினான்.

 “என்ன திடீர்னு என்கிட்ட சொல்லவே இல்ல” என்றான் ராவண்.

“மித்ரா தான் இந்தியா போகணும்னு அடம் பிடிச்சா சரி அவளுக்கும் ஒரு மாறுதல் வேணும்னு அம்மாவோட அவளையும் சேர்த்து அழச்சிட்டு வந்துட்டேன். அவளுக்கு சில டிரீட்மெண்ட்ஸ் பார்க்க வேண்டி இருக்கு இங்க இருந்தா அவளை சுத்தி நம்ம ஆட்கள் எல்லாரும் இருக்க அப்போ சீக்கிரம் மித்ரா குணமாயிடுவான்னு ஒரு நம்பிக்கையில் இங்கேயே வந்துட்டோம்” என்றான்.

 “எதுவும் பிரச்சனை இல்லையே? ஆல் ஓகே..” என்றான் ராவண் ஏதோ சந்தேகித்தவனாக. 

“எந்த பிரச்சினையும் இல்ல மச்சான். நீங்க எப்போ இங்க வரீங்க” என்றான்  ஈஸ்வர் ராஜ்ஜை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே. அந்த பார்வையிலேயே ராஜ்ஜிற்கு புரிந்து போனது . ராவண் ஏதோ கணித்துவிட்டான் என்று.

“நாளைக்கு காலையில கிளம்பிடுவோம் ஈஸ்வர்” என்றான் ராவண். 

“என் சிஸ்டர்கிட்ட குடு நான் தனியா ஸ்பெஷலா விஷ் பண்ணனும்” என்றான் ஈஸ்வர்.

“நேரில் வந்ததும் விஷ் பண்ணிக்கோ இப்ப நீங்க எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாதிரி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்க எல்லாருக்கும் சப்ரைஸ் கொடுக்கப் போறோம் போன் அப்படியே எல்லாருக்கும் தெரியுற மாதிரி போனைக் காட்டு” என்றான் ராவண்.

ராவண் எதை சொல்லப்போகிறான் என்று அறிந்த இளங்கிளி “எனக்கு வெக்கமா இருக்குங்க” என்று சிணுங்கினாள்.

 “எப்படியும் எல்லாருக்கும் தெரியத் தானே போகுது” என்று அவள் இடையோடு கை போட்டு தன்னருகே இழுத்து அமர வைத்தவன். 

அனைவரும் வீடியோ காலில் இருக்க அவர்கள் அனைவரையும் பார்த்து “உங்க எல்லாருக்குமே என் பொண்டாட்டி ஒரு பர்த்டே கிப்ட் ரெடி பண்ணிட்டா” என்றான்.

“என்னடா புதுசா சொல்ற பர்த்டே கிப்ட் எங்களுக்கா?” என்றார் பரிமளா.

“ஆமாம்மா உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் தான்” என்றவன் “அதை அவளே சொல்லுவா” என்று போனை இளங்கிளியிடம் நீட்டினான் ” என்னங்க நான் எப்படி.. எனக்கு வெக்கமா இருக்கு ..முடியாது போங்க” என்று சிணுங்கிக்கொண்டே போனை அவனிடம் இருந்து வாங்க மறுக்க.

“நீ இப்ப சொல்லலைனாலும் கொஞ்ச நாள்ல தெரிய தான் போகுது. இப்பவே சொல்லு”என்று அவள் கையில் போனை தினித்தான்.

ஒருவித தயக்கத்தோடும் , வெட்கத்தோடும் கூச்சமும் கலந்தவளாக போனை வாங்கி திரையில் தெரிந்தவர்களை பார்த்துவிட்டு சங்கடமாக திரும்பி ராவணைப் பார்த்தாள் 

“சொல்லு..” என்று அவள் வெட்கத்தை பார்த்து ரசித்துக்கொண்டே சொன்னான். 

“அத்தை.. அது வந்து.. நீ.. நீங்க பாட்டி ஆகிட்டீங்க” என்று சொன்ன மறுநொடி போனை மெத்தையில் போட்டுவிட்டு ராவண் தோளில் வெட்கத்தோடு முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவள் சொன்னதை கேட்டு அனைவரும் சந்தோஷமாக கைத்தட்டி ஆர்ப்பரித்து “எங்க குடும்பத்துக்கு முதல் வரிசு வரப்போகுது” என்று அனைவரும் ஒன்று சேர சந்தோசமாக இளங்கிளியை பார்க்க..

இளங்கிளியை தோளோடு சேர்ந்து அணைத்த படி “அவ ரொம்ப ஷை ஆயிட்டா” என்று  ராவண் சொல்லிக் கொண்டிருக்க.. 

திரையில் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் முகம் சுருக்கிய படி “மச்சான் அங்க பின்னாடி யார் இருக்கா?”என்று வீடியோ காலில் தெளிவாக தெரிய இடத்தை சுட்டிக்காட்டி ஈஸ்வர் சொல்ல..

ஈஸ்வர் கேட்ட திசையை நோக்கி ராவண் திரும்பிப் பார்க்கவும்.சரியாக அந்த நேரம் அவர்கள் பெட்ரூமில் இருந்த கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு நான்கு முகமூடி அணிந்த ஆட்கள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

சட்டென கட்டிலை விட்டு எழுந்த ஈஸ்வர் இளங்கிளியை தன்னோடு இழுத்து தனக்குப் பின் நிறுத்தியவன்.  வேகமாக கட்டில் அருகில் இருந்த  டிராவை திறந்து அதிலிருந்து துப்பாக்கி எடுக்கப் போக..

அதற்குள்ளாக அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்த அந்த ஆட்கள் தங்கள் கையில் இருந்து துப்பாக்கியை அவர்களை நோக்கி குறிப்பார்த்த படி நின்றிருந்தனர்.

 இங்கே வீடியோ காலில் கதவை உடைத்துக்கொண்டு ஆட்கள் உள்ளே நுழைந்ததை பார்த்த மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியானது. என்ன நடக்கிறது என்று அவர்கள் யூகிப்பதற்குள் இராவணன் போன் தரையில் இளங்கிளியை காப்பாற்றும் பொருட்டு எழுந்த அவசரத்தில் மெத்தையில் விழுந்துவிட்டது. .

 மறுபக்கம் என்ன ஆனது என்ன நிலைமை என்ன என்று புரிந்து கொள்ளும் முன்னரே அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.