News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 33

by Layas Tamil Novel
192 views
A+A-
Reset

வெறியன் 33

“நீங்க பார்த்து வளர்ந்த பொண்ணு அப்படி தான் உங்க கண்னுக்கு ஒண்ணுமே தெரியாத பொண்ணு போல தெரியும். ஆனா அவங்க கூட கிலோசா இருக்க பிரெண்ட்ஸ்கிட்டே கேட்டா தான் அவங்க வண்டவாளத்தை எல்லாம் புட்டு புட்டு வைப்பாங்க” என்றவன் .” ப்ளீஸ் மல்லி உன் கையை காலா நினைச்சு கேக்குறேன். எனக்கு அல்லியை பார்க்கணும் அவகூட பேசணும்” என்றான்.

மல்லிக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனிடம் இருந்து மெல்ல தன் கையை உருவி எடுத்தவள்.

“அவ இங்க இல்ல ஊர்ல இருக்கா.. ” என்றாள்,

“தெறியுமே நீதானே அவ மதுரையில் இருக்கறதா சொன்ன.. நான் அவளை அங்கையே போய் மீட் பண்ணிக்குறேன். உன்னோட வீட்டு அட்ரஸ் மட்டும் சொல்லு.. ” என்றான்.

இது மேலும் தர்மசங்கடமாக இருந்தது. சட்டென தன் வீடு விலாசத்தை அல்லவா கேட்கிறான் இவன் . தான் சொன்னதே பொய்யான விலாசம் அதை அவனிடம் கொடுத்தால் தன் கூட்டு அக்னிக்கு தெரிந்து விடும் என்று நினைத்தவள் வேறு வழியே இல்லாமல் “சார் அது வந்து நீங்க அங்க போக வேண்டாம். அவளே இங்க வரா.. ” என்றாள் மல்லி.

“அப்படியா! பாத்தியா டா என் ஆளு எனக்கு சிரமம் வெக்கக் கூடாதுனு அவளே இங்க வரா.. ” என்றான் சாணக்கியன் சந்தோஷமாக.

அவன் சந்தோசம் கண்டு சிரித்த அக்னி “என்கிட்டே இதை பத்தி சொல்லவே இல்ல நீ.. உன்னை பார்க்க இங்க வராளா” என்றான்.

“அது பார்ட்டிக்கு போற அன்னிக்கு நான் போன் பேசின அப்போவே தெரியும். நான் மறந்துட்டேன் சொல்ல.. ” என்றவள். “அவ என்னைப் பார்க்க வரல.. என் அப்பாவுக்கு உடம்பு முடியல.. அவரை இங்க ஹோச்பிடல்ல சேர்த்து டிரீட்மென்ட் பார்க்கணும். அதுவுமில்லாம தம்பிக்கும், அல்லிக்கும் படிக்க இங்கையே மாத்தி வந்தா எல்லாரும் ஒண்ணா இருக்கலாம். அடிக்கடி பாத்துக்கலாம்னு எல்லாரும் ஷிஃப்ட் ஆகி இங்கையே வராங்க” என்றாள்.

“வாவ்! உன் தங்கச்சியே இங்க வரபோறாளா!” என்று குஷியான சாணக்கியன். “எந்த  காலேஜ்? எந்த டிபார்ட்மென்ட்?” என்றான் ஆர்வமாக,

“நீங்க,, நீங்க வேலை பாக்குறேன்னு சொன்னிங்க இல்ல சார் . அந்த காலேஜ்ல தான் சேரப்போறா. “என்றால் மல்லி.

அதை கேட்டு அதிர்ந்தான் சாணக்கியன் அது சந்தோசமாக மாறியது

சாணக்கியனின் ஆர்வத்தைக் கண்டு மெல்லப் புன்னகைத்த பவளமல்லி, “அவ… நீங்க வேலை பார்க்குற அதே காலேஜ்ல தான் சார் சேரப்போறா. பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் BSc computer science…”என்றாள்.

அதைக்கேட்டதும் சாணக்கியன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான். கண்கள் விரிவடைய, “வாட்! மேத்ஸ் டிபார்ட்மென்ட்டா?!” என்று கத்தினான்.

அவன் அதிர்ச்சியைப் பார்த்து மல்லி குழப்பத்துடன் நோக்க, சட்டென சாணக்கியனின் முகம் மலர்ந்து, பேரானந்தமாக மாறியது. “டேய் அக்னி! நான் அதே காலேஜ்ல, அதே மேத்ஸ் டிபார்ட்மென்ட்ல தான்டா ப்ரொபசரா இருக்கேன்! மை காட்… நான் லவ் பண்ற பொண்ணு, என்னோட டிபார்ட்மென்ட்லயே வந்து சேரப்போறாளா? இதைவிட எனக்கு வேற என்னடா வேணும்! இனிமே தினமும் நான் என் அல்லியை பார்க்கப் போறேன்!” என்று காரின் பின் சீட்டில் இருந்தபடியே துள்ளிக் குதித்துக் கொண்டாடினான்.

அவன் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த அக்னி, சட்டென ஏதோ யோசித்தவனாக தன் பார்வையை மல்லியின் பக்கம் திருப்பினான். அவளது முகம் லேசாக மாறியிருந்தது.

மல்லியை முறைத்துப் பார்த்த அக்னி, “மல்லி… இவ்வளவு பெரிய விஷயம் நடக்குது, உன் ஃபேமிலியே இங்க ஷிப்ட் ஆகுறாங்க… ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை? ” என்று கோபமும், ஆதங்கமும் கலந்த குரலில் கோபித்துக் கொண்டான்.

அக்னியின் இந்த திடீர் கோபத்தைக் கண்டு மல்லி என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

ஆனால் அக்னி தன் கோபத்தை உடனே மாற்றி, அவளது கையை லேசாகப் பற்றியபடி, “சரி விடு… அவங்க எல்லாரும் இங்க வந்த உடனே, நாம ரெண்டு பேரும் நேரா போய் அவங்களை பார்க்கலாம். உன் அப்பாவை நல்ல ஹாஸ்பிட்டல்ல சேர்க்குறதுல இருந்து, உன் தம்பி, தங்கச்சி காலேஜ் அட்மிஷன் வரைக்கும் எல்லாத்தையும் நான் முன்னாடி நின்னு பார்த்துக்கிறேன். நாம எல்லாரும் ஒண்ணா போய் அவங்களைப் பார்க்கலாம், சரியா?” என்றான் உரிமையோடு.

அக்னி அத்தனை அக்கறையோடும், தங்களை முழுமையாகத் தன் குடும்பமாக நினைத்தும் பேசிய வார்த்தைகளைக் கேட்ட பவளமல்லிக்கு, நெஞ்சில் பேரிடி விழுந்தது போல் இருந்தது!

“ஐயோ! என்ன இப்படி ஆகிருச்சு. இதை ஏன் நான் யோசிக்கவே இல்ல.. எல்லாரும் இங்க வந்த பிறகு அவங்களை பாக்கணும்னு இவன் சொல்றானே..” என்று  பதில் சொல்லத் திணறியவள் தலையை பொதுவாக நாலாப்பக்கமும் ஆட்டிவைத்தாள்.

“சரி டீடெயில்ஸ் எல்லாம் கேதர் பண்ணிட்டியா இனி மல்லியை காலேஜ் அனுப்பலாமா? இல்ல இன்னும் எதுவும் கேட்கவேண்டி இருக்கா?” என்றான்.

“அதெல்லாம் எதுவும் இல்ல டா.. போதும் இனி நான் டீல் பண்ணிக்குறேன்” என்ற சாணக்கியன் “மல்லி அத்தை, மாமா எல்லாம் எப்போ இங்க வராங்க” என்றான்.

“அது சரி.. லவ்வை சொன்ன நானே இன்னமும் பதில் தெரியாம குளிச்சிட்டு இருக்கேன். நீ என்ன டா ஆளையே பாக்காம அத்தை , மாமான்னு உரிமை கொண்டாடிட்டு இருக்க.. ” என்று சிரித்தான் அக்னி.

“அது எல்லாம் அப்படி தான் டா.. ” என்று அக்னியை அடக்கிவிட்டு “எப்போ வராங்க” என்றான் மீண்டும் மல்லியிடம் .

“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சார் , ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கு அப்பறோம் அவங்க அவங்க வேலையை பாக்கலாம்னு இருக்காங்க” என்றாள் அக்னியை பார்த்துக்கொண்டே.

இனி என்னவெல்லாம் பிரச்சனை வருமோ எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று மல்லிக்கு இப்போதிருந்தே பதற்றம் அதிகமானது.

“சரிம்மா அப்பறோம் என்னை சார்னு எல்லாம் கூப்பிட வேணாம். உன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்க போறவன் அதனால உரிமையா என்னை பேர் சொல்லி கூட கூப்பிடு” என்றவன் இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப..

“ம்ம்.. அப்பறோம்” என்று அக்னி அவளை பார்த்தான்.

“என்ன அப்பறோம் ” என்றாள் மல்லி புரியாமல்.

“பாக்காத அவனே இவ்ளோ தூரம் நம்பிக்கையா போறான். நான் வேற கிட்டையே என் ஆளை வெச்சிருக்கேன். உன் மேல லவ் வேற இருக்கு.. ” என்று கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டவன் மல்லியை நோக்கி முன்னே செல்ல..

அவளோ.. வேகமாக கதவை திறந்தவள் “எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்று இறங்கி ஓடிவிட்டாள்.

“ச்சே! ஒரு கிஸ் கூட கொடுக்க முடியல.. அதுக்குள்ள போய்ட்டா.. ” என்று ஸ்டியரிங்கில் அடித்தவன் “நீ மட்டும் ஐ லவ் யூ ன்னு சொல்லு டி குட்டிமா அப்பறோம் பாரு ” என்று சொல்லிக்கொண்டே காரை அங்கிருந்து ஆஃபீஸிற்கு கிளப்பி இருந்தான்.

 “அத்தை! அதை என்கிட்டே கொடுங்க நான் போட்டு விடுறேன்” என்று முத்துமாரிக்காக கையில் ஓயின்மெண்டோடு காத்திருந்த சௌந்தர்யாவிடம் மருந்தை வாங்கப் போனாள் பனிமதி .

“இல்லம்மா முத்து வந்துரட்டும்” என்றார்.

“அவங்க கிச்சேன்ல வேலையா இருக்காங்க அத்தை வரதுக்கு நேரம் ஆகும். நான் சும்மா தானே இருக்கேன் கொடுங்க ” என்று அவர் கையில் இருந்த மருந்தை வாங்கியவள் சோபாவில் இருந்த சௌந்தர்யாவிற்கு அருகே கீழே தரையில் அமர்ந்தாள்.

“என்ன டி என் மருமகளுக்கு மருந்து போட்டு விட்டு அவளை ஐஸ் வெக்க பாக்கறியா?” என்று அங்கு வந்தார் சித்தாத்தா.

“ஆமா ஐஸ் வெச்சு இந்த வீட்டை எழுதி வாங்கப் போறேன் பாரு.. ” என்று சிரித்துக்கொண்டே சொன்ன பனிமதி சௌந்தர்யாவின் கால்களை தூக்கி தன் மடி மீது வைத்து ஆயின்மென்டை அவருக்கு பூசி விட ஆரம்பித்தாள்.

அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த சிவனாண்டி “அதுக்கு தானே இந்த வீட்டுக்குள்ள வந்திருக்க.. வீட்டை மட்டும் எழுதி வாங்கலாம்னு உத்தேசமா இல்லை வேற எதுவும் பிளான் போட்டு உள்ள வந்திருக்கியா?” என்று வார்த்தை கொடுக்கை கூர்மையாக்கியபடி வந்து சோபாவில் சௌந்தர்யாவின் அருகே அமர்ந்தார்.

அவர் பேசியது மனதிற்குள் ஊசியை குத்தினாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவரைப் பார்த்து சிரித்தவள் “ஐயோ! மாமா நான் சும்மா கிண்டலுக்கு பேசினேன். எனக்கு இந்த சொத்து சுகம் எல்லாம் எதுவும் வேணாம் மாமா. நீங்க எல்லாரும் இருந்தாலே போதும் ” என்றாள். அப்படி பேசும்போதே அவள் குரல் கம்மியது.

“டேய் அறிவு கெட்டவேனே வீட்டுக்கு வந்த மருமகள்கிட்டே இப்படி தான் பேசுறதா. அவளே வேணாம்னு போனாலும் என் பேரனை தான் அவ கல்யாணம் பண்ணிருக்கா.  இது என் புருஷன் சம்பாரிச்ச சொத்து, அதை அனுபவிக்க உனக்கு எப்படி உரிமை இருக்கோ அதே உரிமை என் பேத்திக்கும் இருக்கு தெரிஞ்சுக்க.. ” என்றார் சித்தாத்தா.

“ஓஹோ! வந்ததும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க. அப்பா, அம்மா தெரியாத பொண்ணுக்கு இந்த வீட்ல அவ்ளோ உரிமை இருக்கு அப்படித் தானே.. ” என்றார் .

“டேய் நீ எதுக்கு இப்போ அவளை ஏதாவது சொல்லிட்டு இருக்க.. அவளை பார்த்தா உனக்கு எப்படி டா தெரியுது ” என்று கடுப்பாக கேட்டார் அங்கு வந்த மார்க்கண்டேயன்.

“என் மகன் இருக்க அந்தஸ்துக்கு அவனுக்கு எப்படிப்பட்ட இடத்துல நான் பொண்ணு பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா? இவன் என்னடான்னா இப்படி யாருன்னே தெரியாதவளை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறான். இது இப்படின்னா சின்னவன் அக்னி இருக்கானே.. அவன் வீட்ல வேலை பாக்குற ஒரு பொண்ணை லவ் பன்றான். நான் பெத்தது ரெண்டும் அதுங்க இஷ்டத்துக்கு சுத்துதுங்க. உங்க ஓடுகாலி மகளை போலவே இவனுங்களுக்கு இருக்கானுங்க,. அவ தானே இவனுங்க ரெண்டு பேரையும் வளர்த்தா அப்பறோம் அவளை மாதிரியே என் விருப்பத்துக்கு மாறா தான் யாரையோ கல்யாணம் பண்ணுவானுங்க நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா? டெபார்ட்மெண்ட்ல எனக்கு இருக்க பேரை இவனுங்க ரெண்டு பேருமே காலி பண்ணிருவானுங்க போல இருக்கு.. ” என்று மனதில் உள்ளதை எல்லாம் போட்டு உடைத்துக்கொண்டு இருந்தார் சிவனாண்டி.

“என்ன டி ஆச்சு உன் புருசனுக்கு.. இவன் பாக்குற பொண்ணை தான் நல்லா இருக்கும்னா இவனையே அந்த பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்ல வேண்டியது தானே.. அதை விட்டுட்டு என் பேரனுங்களுக்கு புடிச்ச பொண்ணுங்களை குறை சொல்ல இவனுக்கு என்ன இருக்கு. கல்யாணம் ரெண்டு மனசு புரிஞ்சு நடக்கணும் , ஆஸ்தி, அந்தஸ்து இதெல்லாம் பார்த்து நடக்குறது இல்ல சரியா” என்றார் சித்தாத்தா.

“அப்படி புரிஞ்சு நடந்திருந்தா நான் ஏன் அத்தை இப்படி இறுக்கப் போறேன். என் கல்யாணமே என் விருப்பத்துல நடக்கல.. ” என்று சௌந்தர்யா சொல்லும்போதே அவர் கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது.

மொத்த குடும்பமும் தனக்கு ஆதரவாக பேசுவதை கேட்டு பனிமதிக்கு சந்தோசமாக இருந்தாலும், தன் அம்மாவின் மீது இத்தனை ஆண்டுகள் ஆகியும் வெறுப்பு இன்னமும் குறையாமல் இருக்கும் சிவனாண்டியை நினைக்கையில் அவளுக்கு கோவம் தான் வந்தது. வார்த்தைக்கு வார்த்தை தன்னை அநாதை என்று சொல்வதை கேட்டு அவளால் பொறுக்க முடியவில்லை.

“மாமா ஏன் இப்படி பேசுறீங்க.. நான் அனாதை இல்.. ” என்று சொல்ல அவள் வாயெடுக்க..

அப்போது “பனி ! ” என்று அதட்டலான குரல் வாசலில் நின்று ஒலிக்கவும் அனைவரும் வாசல் பக்கம் பார்த்தனர்.

அங்கே கோபமே உருவாக நின்று இருந்தான் ஐராவதன். 

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.