EPISODE 28
சில்வர் லைன் ஸ்டுடியோவிற்கு சைல்ட் ப்ராடக்ட் டெவலப்மென்ட் ப்ராஜெக்ட்க்கான வேலைகள் மும்முரமாக ஆரம்பித்திருந்தது .
ராணி, நீலகண்டன் , மதி மூவருடைய டீமும் மிகவும் தீவிரமாக தங்கள் டிசைன்களை உருவாக்குவதில் தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
வாரம் ஒரு முறை அனைத்து குழுவும் தங்கள் படைப்புக்களை அவரவர் குழுவில் கலந்தாலோசித்து தங்கள் படைப்புக்களை பற்றிய நிறை குறைகளை பேசி சரி செய்துகொள்வார்கள் .
“ம்ச்… முயல் குட்டி கண்டிப்பா நீ போயே ஆகணுமா … இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன் ” என்று சிணுங்கிக்கொண்டு இருந்தான் .
தன் சட்டை பட்டன்களை போட்டபடி அவன் மடியில் இருந்து எழுந்தவள் “என்ன விளையாடுறிங்களா சார் . இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க மீட்டிங் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க . நான் கண்டிப்பா போய் ஆகணும் . என்னோட டிசைனை வெச்சு தானே அங்கே மற்ற வேலையே நடக்குது . நானே லேட்டா போனா சரி வருமா ” என்றாள் .
“ச்சே… மதி நீதான் அவனுக்கு அசிஸ்டண்டா வேணும்னு கேட்டதும் யோசிக்காம நான் சரின்னு சொல்லிட்டேன் . இப்போ பாரு நீ ஜாலியா வேலை வேலைன்னு கிளம்பி போய்டுறே.. நீ போனதும் இங்கே இருக்குற வேலை எல்லாம் அப்டியே கிடப்பில் இருக்கு. இதை எல்லாம் எப்போ நீ வந்து பாக்க போற.. என்னோட வேலையை எல்லாம் எப்போ முடிச்சு கொடுக்க போறே..” என்றான் அவனை விட்டு தள்ளி நின்று இருந்தவளை இழுத்து தன் அருகில் நிற்கவைத்துக்கொண்டு கேட்டான்.
“நான் ஏற்கனவே உங்ககிட்டே சொல்லிட்டேன். இந்த ப்ராஜெக்ட் முடியுற வரை என்னை தொல்லை பண்ணாதிங்கன்னு… நான் வர வரைக்கும் நம்ம ஆபீஸ் ஸ்டாப் யாரையாவது உங்களுக்கு பியேவா போட்டுக்க சொல்லிட்டேன். நீங்க பிடிவாதமா நானே தான் வந்து வேலை பார்க்கணும்னு சொல்றிங்க. நான் என்ன தான் பண்றது ” என்றாள் சலிப்பாக .
“யாரும் எனக்கு பியேவா வேணாம் ” என்றான் அவள் கையை பிடித்து அதில் கோலம் போட்டுக்கொண்டே .
“ஏன் வேண்டாம்னு சொல்றிங்கன்னு நான் சொல்லட்டா ” என்றாள் காந்தள்.
“ம்ம்ம்… சொல்லு பார்ப்போம் ” என்றான் அவள் விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டே .
“ஏன்னா… வேற யாரும் வேளைக்கு இங்கே வந்தா நம்ம ரெண்டு பேரும் இப்படி அடிக்கடி தனியா ரூமில் ரொமான்ஸ் பண்ண முடியாதில்ல… நீங்களும் அப்போ அப்போ என் வேலையை கெடுக்குற மாதிரி . அந்த பைலை காணோம். இந்த டாக்குமென்டில் இருக்கிறது எதுவும் சரி இல்லை . அதை சரி செய்து கொடு இதை செய்து கொடுன்னு என்னை அடிக்கடி கூப்டு வெச்சு …. ” என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் காந்தள் வெட்கப்பட…
“ம்ம்ம்… ஏன் நிறுத்திட்ட… சொல்லு உன்னை கூப்டு வெச்சு… நான் என்ன பண்ணினேன் சொல்லு…” என்று அவளை இழுத்து தன் மடியில் அமரவைத்துக்கொண்டு கேட்டான்.
அவன் கையை தட்டிவிட்டு மடியில் இருந்து எழுந்தவள் “கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒரு டாக்குமென்டில் கரெக்ஷன் இருக்குன்னு சொல்லி என்னை வர சொல்லிட்டு என்ன பண்ணுனீங்களோ அதை தான் செய்விங்க ” என்றவள் .
“இனிமேல் பொய் சொல்லி என்னை இங்கே வர சொன்னிங்க அப்பறோம் நான் நீங்க நிஜமாவே வேலை இருக்குனு சொன்னாலும் வர மாட்டேன் . ஏற்கனவே நம்ம ரெண்டு ரூமுக்குள்ள ஒண்ணா இருந்தா யாரும் உள்ளே வரவே கூச்சப்படுறாங்க. உள்ளே நம்ம என்ன பண்ணிட்டு இருப்போம்னு அவங்க எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு. இனிமேல் இப்படி அடிக்கடி என்னை கூப்டு தொந்தரவு செய்யாதீங்க… என்னால இந்த ரூமுக்குள்ள வந்துட்டு திரும்ப போக முடியலை . என்னை முன்னே விட்டு பின்னே கிண்டல் செய்றாங்க எல்லாரும் ” என்று சலித்துக்கொண்டாள்.
‘ஏன் திரும்ப போகணும் நீ எங்கயும் போக வேண்டாம் இங்கையே இரு.. மதி டீமுக்கு நான் வேற ஆளை வரவெச்சுக்கிறேன் ” என்று தன்னை விட்டு தள்ளி நின்றவளை எட்டி பிடிக்க போனான் .
அவன் கை அவளை நோக்கி நீளவும் சட்டென்று துள்ளிக்குதித்து பின்னால் நகர்ந்தவள் “இங்கே பாருங்க இந்த ப்ரொஜெக்ட்டை முழுசா முடிக்காம நான் எதுகையும் வரதா இல்லை. என்னை சும்மா சும்மா கூப்பிடுற இப்படி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தா அப்பறோம் நான் எப்படி வேலையை சீகிரியாம் முடிக்குறது. திரும்ப இங்கே வந்து வேலை பாக்குறது ” என்றாள் .
“அப்போ நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நீ சீகிரியாம் உன்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு இங்கயே வந்திருவேன்னு சொல்றே அப்படி தானே ” என்றான் மாறன் .
“ஆமா… ” என்றாள் கதவை நோக்கி நடந்துகொண்டே…
“பேச்சு மாற மாட்டியே… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்திருவியா ” என்றான்.
“ம்ம்ம்ம் ஆமா …. ” என்று கதவை திறக்க போன காந்தள் அப்போதுதான் மாறனின் அறைக்கதவை அவன் உள் பக்கமாக லாக் செய்து இருக்கிறான் ” என்று புரிந்தது .
“ம்ஹ்ச்… இப்போ எதுக்கு கதவை லாக்க்க…..” என்று அவள் கேட்டுக்கொண்டே திரும்பி இருக்க…
காந்தள் திரும்பிய வேகத்தில் அவள் முகத்தில் கை கொடுத்து தன் கைகளில் ஏந்தியவன் குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்து இருந்தான்.
அதில் திணறியவள் அவன் முத்தத்தில் இருந்து தன்னை மீட்டெடுக்க முடியாமல் எப்போதும் போல தோற்றுத்தான் போனாள், நீங்க நேரம் அவள் இதழை விடாமல் இம்சை செய்தவன் அவள் இதழை மெல்ல தன இதழில் இருந்து விடுவித்தவன் “இப்போ போ … இனிமேல் நான் உன்னை சும்மா சும்மா பொய் காரணம் சொல்லி இங்கே கூப்பிட மாட்டேன் . நீ உன் வேலையை எல்லாம் எப்போ முடிச்சிட்டு வரியோ அப்போ வா… அதுவரை நான் உனக்காக வெயிட் பங்கிட்டு இருப்பேன் ” என்று தன் பாக்கெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து கதவை அன் லாக் செய்தான்.
கதவு திறக்கப்பட்டதும் அவனை ஒருமுறை பார்ததுவிட்டு “சீக்கிரமே வேலையை முடிச்சிட்டு வந்துடறேன் ” என்று கதவை திறந்து கொண்டு வெளியேறி இருந்தான் .
மாறனின் அறைக்கதவு சாற்றும் வரை நின்று செல்லும் காந்தளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் . தன் தலையை அழுந்த கொத்திவிட்டுக்கொண்டே தன் டேபிளுக்கு சென்றான்.
இங்கே மாறனை பார்த்துவிட்டு வெட்கபட்டுக்கொண்டே சிவந்த முகத்தோடு மதி டீம் இருக்கும் இடத்திற்கு வர… அவள் உள்ளே நுழையும்போது அனைவரும் காந்தளை ஆர்வமாக பார்த்தனர் .
வழக்கம் போல அவள் முகம் இன்றும் சிவந்து இருந்தது . உதடு லேசாக கண்ணிப்போய் வீங்கி இருந்தது . அவள் ஆடை சற்று கசங்கி இருந்தது . டீமில் அவனுடன் இணைந்து வேலையில் இருப்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் காந்தளை சுட்டி காட்டி கிண்டல் செய்து பேசிக்கொண்டு இருந்தனர். அதை காந்தளும் கவனித்துக்கொண்டு இருந்தாள் .
இது வழக்கமான ஒன்று தான் என்று தன கேபினுக்கு சென்று வேளையில் ஈடுபட ஆரம்பித்து இருந்தாள்.
அப்போது தான் ஆஃபீஸிற்கு வந்த மதி வந்ததும் வழக்கம் போல் அனைவரையும் அதிகாரம் செய்தவன் தனக்கும் இந்த ப்ரிஜெக்ட்டிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்று துளியும் அக்கறை இல்லாமல் எப்போதாவது இங்கே வருவதும் ,வந்ததும் அனைவரையும் கேள்வி கேட்கிறேன் என்று கடுப்பேற்றிவிட்டு அவர்கள் வேலையை குத்தம் சொல்லிவிட்டு தன் கேபினுக்கு சென்றான் .
“டேய் இவரு என்ன டா எப்போ பாரு லேட்டா ஆபீசுக்கு வரதும் . வந்தாலும் எந்த வேலையும் செய்யாம நம்ம எல்லாரையும் குத்த்த்தம் சொல்றதுமா இருக்காரு . நாளைக்கு இவர் தானே நம்ம ப்ரொஜெக்ட்டை பத்தி சைல்ட் டெவெலப்மென்ட் கம்பெனிகிட்டே எஸ்பிளான் பண்ணனும். இவரு இவ்ளோ சாதாரணமா இருந்தா அப்பறோம் எப்படி நம்ம பண்ணின ப்ராஜெக்ட் பத்தி இவருக்கு புரியும் ” என்றான் ஜெயந்தன் என்ற ஒரு டீம் மேட்.
” இங்க பாரு ஜெயா… நமக்கு கொடுத்த இந்த ப்ரொஜெக்ட்டை ஸ்க்ராட்ச்சில் இருந்து செய்துட்டு இருக்கிறது நம்ம காந்தள் மேடம் தான் . அவங்களுக்கு மட்டும் தான் இந்த ப்ராஜெக்ட் பத்தி A TO Z தெரியும் . அவங்க நல்லா வேலை செய்வாங்கன்னு தெரிஞ்சு தான் வேணும்னே அந்த மதி அவனுக்கு அசிஸ்டண்டா காந்தள் மேடமே தான் வேனும்ம்னு அடம் பண்ணி நம்ம டீமில் சேர்த்திருக்காரு . நாளைக்கு ப்ரொஜெக்ட்டில் காந்தள் மேடம் செய்த ப்ரொஜெக்ட்டை என்னவோ இவரே ராப்பகலா கஷ்டப்பட்டு வேலை செய்த மாதிரி சீன் போட்டு இவரு பேர் வாங்கிட்டு போவாரு பாரு ” என்றான் மற்றொருவன்.
இப்படி இவர்கள் இருவரும் மதியை பற்றி புறம் பேசிக்கொண்டு இருக்க.. “உங்களுக்கு கொடுத்த வேலையை முடியாம என்ன ரெண்டு பெரும் சேர்ந்து வெட்டி கதை பேசிட்டு இருக்கீங்க ” என்று அவர்கள் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது .
இருவரும் திடுக்கிட்டு திரும்பி பின்னால் பார்க்க… அங்கே அவர்கள் பின்னால் கைகட்டி நின்று கொண்டு இருந்தான் மதி . அவனை இவ்வளவு அருகில் பார்த்ததும் இருவருக்கும் ஒரு நிமிடம் இதயமே நின்று விடும் போல இருந்தது.
“சார்… நீ… நீங்க… ” என்று ஜெயந்தன் திக்கி திணறி பேச…
” என்ன சாரு… மோறுனுட்டு… ரெண்டு பேரும் வேலை பார்க்காம இங்கே நின்னு என்ன வெட்டி கதை வேண்டி இருக்கு . போங்க போய் குடுத்த வேலையை ஒழுங்கா செய்யுற வழியை பாருங்க ” என்று அவர்கள் இருவரையும் மிரட்டி திட்டி அங்கிருந்து ஓட வைத்தான் .
தங்கள் கேபினுக்கு வந்த இருவரும் ” டேய் ஜெயா நல்ல வேலை நம்ம ரெண்டு பெரும் பேசினதை அவன் கேட்கல… கேட்டிருந்தா இந்த நேரம் நமக்கு சீட்டு கிளிஞ்சிருக்கும் ” என்றான் ஒருவன்.
“ஆமா டா… எனக்கு அவனை பார்த்ததும் இதயமே வெளியே வந்து விழுந்த்திருமோன்னு ஆகிருச்சு ” என்று தன் இதயத்தை தேய்த்துவிட்டுக்கொண்டே சொன்ன ஜெயந்தன் .
” நம்ம ரெண்டு பேரையும் வெட்டியா இருக்கோம்னு சொல்லிட்டு அவன் செய்யுற வேலையை பாரு ” என்று மதியை காட்டி சொன்னான் ஜெயந்தன் .
இருவரும் மதியை பார்க்க… காந்தள் வேலை செய்து கொண்டு இருக்க… அவளிடம் வேலை விஷயமாக பேசுகிறேன் என்று அவள் முன்பு சேரை இழுத்து போட்டு நெருக்கமாக அமர்ந்தான் மதி.
” டேய் என்ன டா இவன் இவ்வளவு மோசமா இருக்கான் . காந்தள் அவனோட அண்ணன் பொண்டாட்டிதானே … அவங்ககிட்டே பொய் எப்படி பிடிச்சிட்டு உக்காந்திருக்கான் பாரு. ” என்றான் அவன் நண்பன்.
“ஆமா டா இவனுக்கு தினமும் இதே வேலை தான் . வருவான் வந்து நம்ம எல்லாரையும் திட்டுவான் . அப்பறோம் அவன் கேபின்ல போய் கொஞ்ச நேரம் சும்மா உக்காந்து போனை நோண்டிட்டு இருப்பான். அப்பறோம் காந்தள் மேடம் கேபினுக்கு போய் அவங்களை வேலை செய்ய விடாம ஏதாவது பேசி அவங்களை டென்சன் PANITU இருப்பான்” என்றான் ஜெயந்தன் .
“அவன் வேலை செய்றதை டிஸ்டர்ப் பண்ணினா பரவால்ல டா… ஆனா மேடம்கிட்டே டவுட் கேக்குறேன்னு சொல்லிட்டு அவங்க மேல உரசுரதும் . அவங்களை தொட்டு தொட்டு பேசுறதும் , வழிஞ்சு பேசுறதுமா இல்ல இருக்கான் . மேடமும் இவன் பண்றதை எல்லாம் பொறுத்து போயிடு இருக்காங்க ” என்றான் மற்றொருவன் .
” டேய் நீ அப்படி நினைக்குறியா அதான் கிடையாது . காந்தள் மேடம் மாறன் சாறை கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி கிட்டத்தட்ட ஒரு வருஷம் இந்த மதியை தான் காதலிச்சிட்டு இருந்தாங்க. நம்ம ஆபீஸ்ல இருக்குற யாருக்கும் இந்த விஷயம் தெறியது . ரெண்டு பெரும் அவ்ளோ சீக்ரெட்டா லவ் பண்ணிட்டு இருந்தாங்க . ஆனா இந்த மதி மேடமை லவ் பண்ணிட்டு இருந்த சைடு கபில் இனொரு பொண்ணை லவ் பணறேன்னு சொல்லி ஏமாத்தி அந்த பொண்ணை கர்பம் ஆகிட்டான். அந்த விஷயம் தெரிஞ்சு மேடம் என்னவோ இவனை வேணாம்னு சொல்லிட்டு அடுத்த நாளே மாறன் சாரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனா அவரை கல்யாணம் செய்துக்கிட்டாலும் இந்த மதி மேல இருக்குற காதல் இவங்களுக்கு இன்னும் மறக்கலை போல … அதான் இவன் இவ்ளோ இம்சை பண்ணியும் எதையும் கண்டுக்காம அவனுக்கு ஒத்துப்போறாங்க ” என்று ஜெயந்தன் பேசி முடித்திருக்க வில்லை .
அப்போது பலமாக ஒரு சத்தம் அனைவர் காதுகளையும் சென்று சேர்ந்திருக்க… சத்தம் வந்த திசையை அனைவரும் ஒன்றாக திரும்பி பார்த்தனர்.
அங்கே காந்தள் கோபமே உருவாக நின்று இருக்க… அவள் எதிரே மதி கன்னத்தில் கை வைத்தபடி தன் எதிரே பத்திரகாளியாய் மாறி நின்று இருக்கும் காந்தளை மிரண்டு போய் பார்த்துக்கொண்டு இருந்தான் .
