EPISODE 32
தங்கள் இருவரின் குடும்பம் மொத்தமும் இங்கு வந்திருப்பதை சற்றும் எதிர்பார்த்திராத மாறனும் , காந்தளும் அதிர்ச்சியில் அப்படியே நின்று இருக்க…
வசுந்தரா, தமிழ்மாறன் , மரகதம், கயல் , குட்டி அழகி அஞ்சனா, காந்தள் அம்மா சித்ரா, அத்தை பத்மா என அனைவரும் அவர்கள் வீட்டின் முன்பு நின்று இருக்க… அனைவரையும் நீண்ட நாள் கழித்து பார்த்த சந்தோசம் இருவரின் முகத்திலும் வெளிப்பட்டது . தன் அம்மாவையும் , அத்தையையும் பார்த்து காந்தள் கண்களில் நீர்வழிய நிற்க … “அம்மு… நல்லா இருக்கியா ?” என்று இருவரும் நெகிழ்ந்து போய் காந்தள் தாய்மையை பூரித்து இருந்ததை பார்த்து சந்தோச்மாக கேட்டார்கள்.
அவர்களிடம் நன்றாக உள்ளதாக தலையை ஆட்டியவள் இன்னும் தன் கண்முன்னால் இருந்தவர்களை பார்த்து நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .
“டேய்.. டேய்.. என்ன டா பண்ணிட்டு இருக்க… முதல்ல என் பேத்தியை கீழே இறக்கி விடு… ” என்று அவசரமாக மாறனிடம் வந்த வசுந்தரா அவன் தோளில் அடித்து காந்தளை கீழே இறக்கிவிட சொன்னார்.
அவர் அடித்ததில் நினைவு வந்தவனாக தன் தோளில் அமர்ந்து இருந்த காந்தளை லாவகமாக தூக்கி மெல்ல கீழே இறக்கிவிட்டான்.
அவன் செய்யலை பார்த்து எல்லோருக்குமே சற்று பதற்றம் தொற்றிக்கொண்டு தான் இருந்தது .
அவன் அருகில் நின்று இருந்த வசுந்தரா ” காந்தள் நீ கர்ப்பமா இருக்கியா? இந்த சந்தோஷமான விஷயத்தை கூட எங்ககிட்டே சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல… அந்த அளவுக்கு நானும் மத்தவங்களுக்கு உங்க ரெண்டு பெருகும் ஆகாம போய்ட்டோமா… ” என்றார் சற்று வருத்தம் கலந்த குரலில் .
“ஐயோ… பாட்டி அப்படி எல்லாம் இல்லை .நான் கர்ப்பமான விஷயத்தையாவது உங்க எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு தான் இருந்தேன் . ஆனா…” என்று தயங்கியபடி மாறனை பார்த்தாள்.
அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவர் “எல்லாம் வளர்ந்து பெரியவங்க ஆகிட்டாலே அவங்க அவங்களுக்குன்னு ஒரு முடிவை எடுத்துட்டு கண்காணாத இடத்துக்கு போய்டா வேண்டியது. யார் எக்கேடு கேட்டு போனா என்ன … உனக்கு . நம்ம குடும்பத்துல இருக்கருவாங்க எல்லாரும் எப்படி இருகாங்க … உயிரோட இருக்காங்களா ? இல்லையான்னு கூட அதெரிஞ்சுக்க உனக்கு தோணல இல்ல ” என்று மாறனை பார்த்து கோபமாக பேசினார்.
“இப்போ எதுக்கு பாட்டி வந்ததும் வரத்துமா புலம்பிட்டு இருக்க… உன் பேரன் பண்ணின காரியத்துக்கு அவனை எதுவும் செய்யாம நான் ஒதுங்கி வந்துட்டேன்னு நீ சந்தோசப்படு … இல்லேன்னா இவன் காந்தள்கிட்டே தப்பான பேசின அன்னிக்கே இவனை கொன்னுபோட்டிருப்பேன் .” என்று மாறனின் வீட்டு வாசலை தாண்டி சற்று தள்ளி தயக்கத்தோடு நின்று இருந்த மதியை பார்த்து பேசினான்.
“டேய் அவன் தப்பை உணர்ந்து எங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுடான் , ஆனா நீயம், என் பேத்தியும் மன்னிக்காம அவன்கிட்டே நாங்க பேசுறது இல்லைன்னு முடிவு பண்ணி ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு… ” என்றார் தமிழ்மாறன் .
“அப்பா… எனக்கு இவனை மன்னிக்கனும்னு அதுவும் கிடையாது . அவனால ஆரம்பத்தில் இருந்து பாதிக்கப்பட்டது காந்தள் தான் . அவ மதியை மன்னிச்சாலே போதும் ” என்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நின்றான்.
“அம்மாடி காந்தள் பாவம்ம்மா அவன் அவன் பண்ணினது சரின்னு நான் பேச வரல… ஆனா அவன் செய்த தப்பை உணர்ந்து வர அப்போ அவனை மன்னிக்குறது நியாயம்தானே … ” என்று மதிக்கு பரிந்து பேசியவர்.
“டேய் அங்க நின்னுட்டு என்ன டா பண்ணிட்டு இருக்க… உனக்காக இங்கே நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கேன் . நீ இப்படி தயங்கிட்டே இருந்தேன்னா… ” என்று சொல்லிக்கொண்டே மதியை திரும்பி பார்க்க அங்கே அவன் இல்லை .
புரியாமல் விழித்தவர் “ஏன் டி கயல் எங்க டி உன் புருஷன் இங்க தானே நின்னுட்டு இருந்தான். ஒரு வேலை மாறனை பார்த்து பயந்து ஓட்டிட்டானா ?.. ” என்று அவளை பார்த்தார்.
“உங்க மகன் எங்கயும் போகல இங்கே பாருங்க ” என்று தரையை பார்வையால் சுட்டிக்காட்டினாள் கயல் .
“என்ன தரையை காட்டுறா… ” என்று யோசித்தபடி மரகதம் குனிந்து பார்க்க…
மதி சாஷ்டாங்கமாக காந்தளின் காலில் விழுந்து இருந்தான் .
காந்தள் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.
“மதி என்ன பண்றே … தயவு செய்து எழுந்திருங்க… ” என்று அவனை குனிந்து எழுப்ப முற்பட்டாள்.
காந்தளை குனியவிடாமல் தட்டுத்த மாறன் ” டேய் எழுந்திரு போதும் அதான் கால்ல விழுந்துட்டே இல்ல… அவ மன்னிச்சிட்டா எழுந்திரு… உன்னை கீழே குனிஞ்சு ஒரு ஆள் தூக்கிவிடணுமா ” என்றான் மாறன் .
“இல்ல மாறா… நான் செய்தது ரொம்ப பெரிய தப்பு . காந்தளிக்கிட்டே நான் அப்படி பேசியிருக்க கூடாது . அவ வாயாலேயே என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லு … அப்போதான் என்னால நிம்மதியா என் பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் ” என்றான் நிமிர்ந்து பார்க்கமலேயே .
அவன் சொன்னதை கேட்டு காந்தள் அதிர்ச்சியாக கயல்விழியை பார்க்க… அவளும் ஆமாம் என்பது போல காந்தளை பார்த்தாள்.
“மதி நான் உன்னை மன்னிச்சுட்டேன் எழுந்திரு … ” என்று மீண்டும் காந்தள் குனிந்து மதியை தூக்கி விட போக,…
“நீ இரு இப்போ எதுக்கு குனியுற… ” என்று அவளை தன் பக்கம் இழுத்து நிப்பாட்டியவன் .
“அதான் மன்னிச்சிட்டேன்னு சொல்லிட்டா இல்ல… இன்னும் என்ன டா செய்யணும் உனக்கு ஒழுங்கா எழுந்திருக்க போறியா ? இல்லை… உன்னை எழுந்திருக்க வெக்கட்டுமா ..” என்று மாறன் தன் கை முஷ்டியை மடக்கிக்கொண்டு மதியை பார்த்தான்.
அதை பார்த்ததும் மரகதம் அவசரமாக குனிந்து “ஒழுங்கா எழுந்திரு… ரெண்டு பெரும் உன்னை மன்னிச்சு விட்டதுக்கு அப்புறமும் என்ன டா உனக்கு எழுந்திருக்க கஷடம் ” என்றார் .
அவரை மதி திரும்பி பார்த்து “அம்மா!! ” என்று கண்களில் நீர் வழிய பார்த்தான்.
“டேய் மதி என்ன டா… ஏன் அழுவுற… ” என்று மரகதம் பதற்றம் ஆக…
“நான் என்ன எழுந்திருக்க மாட்டேன்னா சொல்றேன் . உன் ரெண்டு மருமகள்களும் , உன் மாமியாரும் என்னை எழுந்திருக்க விட்டா தானே” என்றான்,
“என்ன டா சொல்றே… ” என்று நிமிர்ந்து பார்க்க…
காந்தள் கைநீட்டி தரையில் விழுந்திருந்த மதியின் கையை தன் காலால் மிதித்து கொண்டு நின்று இருக்க… கயல் மற்றொரு புறம் அவன் இடுப்பில் தன் காலை வைத்து நசுக்கிக்கொண்டு இருந்தாள். இது எல்லாவற்றையும் விட… மரகதத்தின் பின்னால் நின்று இருந்த வசுந்தரா பாட்டி தன் வாக்கிங் ஸ்டிக்கை மதியின் முதுகில் வைத்து அழுத்திக்கொண்டு இருந்தார்.
“என்ன இது… முதல்ல எல்லாரும் அவனை விடுங்க… ” என்று அவர்களிடம் இருந்து காப்பாற்றி மரகதம் மதியை மேலே எழுப்பினார்,
“அவன் தான் மன்னிப்பு கேட்டுட்டானே … அப்பறோம் என்ன வந்துச்சு உங்களுக்கு என் புள்ளையை ஆளாளுக்கு மிதிக்குறிங்க… ” என்று காந்தள் , கயல் இருவரையும் பார்த்தவர் .
“அவங்க ரெண்டு பேருக்கும் அவன் பண்ணின துரோகத்துக்கு ரெண்டு பெரும் என் மகனை பழி தீர்த்துட்டாங்க… நீங்க ஏன் அத்தை அவனை கஷ்டப்படுத்துனீங்க.. ” என்றார் மரகதம் .
“என் பேரனும் , பேத்தியும் இந்தியாவை விட்டே போனதுக்கு இவன் தானே காரணம் , அவங்களை விட்டு நான் எவ்ளோ நான் பிரிஞ்சு இருந்தேன். அதான் அவனுக்கு என்சார்பா .. ” என்று மதியை பார்த்து தன் கைத்தடியை உயர்த்தினார் வசுந்தரா .
“பாட்டி போதும் வாங்க எல்லாரும் வந்ததில் இருந்து வெளியவே நிக்குறீங்களே… ” என்று மாறன் அவரை உள்ளே அழைக்க…
அவரோடு மற்றவர்களும் உள்ளே செல்ல… கடைசியாக நின்று இருந்த மதியையும் “உள்ள வா…. உனக்கு வேற தனியா சொல்லனுமா ” என்று அதட்டலாக அழைத்தான்.
அனைவரும் மாறன் , காந்தள் இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் சந்தோசமாக பேசி மீண்டும் பழையபடி பேச ஆரம்பித்து இருந்தனர் .
