EPISODE 31
மாறனை பார்க்க நினைத்த உடன் போகமுடியாது என்று தமிழ்மாறன் சொல்லவும் ..
ஏன் என்று புரியாமல் அவரை கேட்டார் வசுந்தரா .
“இப்போ நீங்க இருக்க கண்டிஷனுக்கு உங்களை பிலைட்ல கூட்டிட்டு போக முடியாது மா.. முதல்ல உங்க உடம்பு ஒரு அளவுக்கு குணம் ஆகட்டும் அதுக்கு பிறகு உங்க கண்டிஷன் பார்த்துட்டு ஆஸ்திரேலியா கூட்டிட்டு போலாமா?வேணாமான்னு முடிவு பண்ணிக்கிறேன்” என்றார் தமிழ்மாறன் .
“டேய் எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீதானே எனக்கு டிரீட்மென்ட் பார்க்க ஆஸ்திரேலியா கூட்டிட்டு போறேன்னு சொன்ன… இப்போ என்ன முடியாதுனு சொல்றே..” என்று அவரை முறைத்தார் .
“ஆமா இவ்ளோ நேரம் நாங்க உங்களுக்கு டிரீட்மென்ட் எடுத்துக்க ஹாஸ்பிடல் போலாம்னு கூப்டு வரமாட்டேன்னு சொன்னிங்க… இப்போ உங்க பிடிச்ச பேரன் இருக்கருங் இடம் தெரிஞ்சதும் சின்ன பொண்ணு மாதிரி துள்ளிகுதிச்சு எழுந்து உக்காந்துட்டு இப்போவே போகணும்னு சொல்றிங்க… அதான் முதல்ல உங்க உடம்பு ஒரு அளவுக்கு குணம் ஆகட்டும் அப்பறோம் யோசிக்குறேன்னு சொன்னேன் ” என்று தமிழ் மாறன் வசுந்த்ராவை கேலிபேசி வெறுப்பேற்றினார்.
“நீ என்ன என் பேரனை பார்க்க கூட்டிட்டு போறது … நானே அவனை போய் பார்த்துகிறேன் ” என்று கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்தவர் . அவர் அறைக்கு வெளியே நின்று இருந்த அவர் கார்ட்ஸை பார்த்தவர் “ப்ரத்யும்மா… ” என்று கர்ஜித்தார்.
அவர் அழைத்ததும் வேகாமாக உள்ளே வந்த அவரது கார்ட்ஸ் “மேடம்… ” என்று பணிவாக அவர் முன்பு வந்து நின்றார் .
“ப்ரத்யு என் பேரன் இருக்குற இடம் தெரிஞ்சிருச்சு , அவன் இப்போ ஆஸ்திரேலியாவில் இருக்கான் . நான் உடனே அங்கே போகணும் அதுக்கான ஏற்பாடுகளை செய் ” என்று அருகில் இருந்த வாக்கிங் ஸ்டிக்க்கை கையில் பிடித்துக்கொண்டு பழைய வசுந்த்ராவாக கம்பீர நடைபோட்டு அவர் அறையை விட்டு ஒண்ணேகால் வருடம் களைத்து வெளியே வந்தார் . அவரோடு தமிழ்மாறனும் தன் அம்மா நடந்து செல்லும் வேகத்தை பார்த்து சிரித்தபடி சென்றார் .
அவரை கட்டலை பிறப்பித்ததும் அதற்கான வேலையை செய்ய கிளம்பிவிட்டிருந்தார் அவருடைய கார்ட்.
மாறன் பற்றிய விபரம் கேட்டதுமே இவ்வளவு சுறுசுறுப்பாக எழுந்து நடப்பதை பார்த்த மரகதம் “கயல் அத்தை நடந்து போற வேகத்தை பார்த்தா மாறனை பார்க்க ஆஸ்திரேலியாவுக்கு நடந்தே போய்டுவாங்க போல இருக்கே…” என்று கிண்டல் செய்தார்.
“ஆமா அப்படிதான் தெரியுது அத்தை ” என்று கயல்விழி தன் மகளை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு மரகத்திடம் வந்தாள்.
அவள் இடுப்பில் இருந்த தன் மகளையும், கயல்விழியையும் ஏக்கமாக பார்த்துக்கொண்டு மதி நின்று இருந்தான்.
அதை கவனித்த மரகதம் “கயல் நீ போய் அத்தைக்கு சாப்பிட எதுவும் வேணுமான்னு கேட்டு செஞ்சு தரியா … நான் கேட்டா என் சமையலை குத்தம் சொல்லுவாங்க . நானே இப்போதான் சமைக்க கத்துக்கிட்டு இருக்கேன் .” என்றார் .
” சரிங்க அத்தை நான் பாட்டிக்கு என்னவேணும்னு கேட்டு செய்து கொடுக்கிறேன் ” என்று பிள்ளையோடு வெளியே செல்ல போனாள் .
“பிள்ளையை குடுத்துட்டு போ.. அவளையும் வெச்சிட்டு நீ எப்படி சமைப்ப… ” என்று தன் பேத்தியை கையில் வாங்கிக்கொண்டு கயலை வெளியே அனுப்பிவைத்தார் .
மரகதம் கையில் இருந்த தன் மகளை பார்த்தான் மதி மொட்டு இதழ் விரித்து அழகாக அவனை பார்த்து சிரித்தது அவன் அழகு மகள் அஞ்சனா .
அவளை பார்த்ததும் அப்படியே அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது மதிக்கு .
“என்ன டா தங்கம்… அஞ்சனா குட்டி.. வாங்க வாங்க …. இங்கே உக்காருங்க பாட்டி போய் உங்களுக்கு விளையாட பொம்மை எடுத்துட்டு வரேன். உங்களுக்காக நிர்யா பொம்மை வாங்கி வெச்சிருக்கேன் . அதை நான் போய் எடுத்துட்டு வரேன் . அதுவரை நீ சமத்தா பத்திரமா இரு… நான் போனதும் இங்கே ஒரு பூச்சாண்டி வந்து உன்கிட்டே பேசும் . அந்த பூச்சாண்டியை பார்த்து நீ பயந்துறாத சரியா… ” என்று அஞ்சனாவை கட்டிலில் அமரவைத்துவிட்டு அவளிடம் செல்லம் கொஞ்சியவர் மதியை ஒரு ஓரப்பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டார் அவனையும் அவன் மகளையும் தனியேவிட்டுவிட்டு .
அவர் சென்றதும் கதவருகே வந்து மரகதம் சென்றுவிட்டதை உறுதி செய்தவன் அடுத்த நொடி ஓடி வந்து தன் மகளை கையில் ஏந்தி அவளுக்கு முத்தமழை பொழிந்துகொண்டு இருந்தான்.
“என்ன கயல் அத்தை ஏதாவது வேணும்னு சொன்னார்களா ? என்ன செய்துட்டு இருக்க… ” என்றபடி மரகதம் கிச்சனுக்குள் நுழைந்தார்.
“பாட்டி சூடா எதுவும் தொண்டைக்கு இதமா வேணும்னு சொன்னாங்க அதான் சுக்கு காபி போட்டுட்டு இருக்கேன் அத்தை ” என்றாள் கயல் .
“அப்போ எனக்கும் சேர்த்து போடேன்… உன் பொண்ணுகிட்ட பேசி பேசி எனக்கு தொண்டையெல்லாம் வலிக்குது ” என்றார்.
“உங்க பேத்திக்கிட்டே உங்களால தனியா பேசி சமாளிக்க முடியாலையினு தான் உங்க பிள்ளைக்கிட்ட அவளை விட்டுட்டு நீங்க இங்கே வந்துட்டீங்களா ..” என்றாள் கயல் காபி போட்டுக்கொண்டே..
“ஆமா டி மருமகளே… எத்தனை நாளைக்கு தான் என் மகனையும், பேத்தியையும் பிரிச்சே வெக்குறது .. எப்படியோ மாறன் இருக்கிற இடமும் தெரிஞ்சிருச்சு.. இனி எல்லாமே சரி ஆகும்னு எனக்கு ஒரு நம்பிக்கை . மதியும் எதனை நாளைக்கு பெத்த புள்ளையை கையில் கூட தூக்கமா தள்ளிநின்னே பாத்துட்டு இருப்பான் . அதான் உன் பொண்ணையும் , உன் புருஷனையும் தனியா விட்டுட்டு வந்தேன். ” என்றார்.
கயல் சிரித்துக்கொண்டே அவர் பேசியது கேட்டு சரி என்று தலையாட்டினாள்.
“கயல் ஒருநிமிஷம் என்னை பாரு ” என்று அவள் கையை பிடித்துத் தன் பக்கம் திருப்பினார்.
“அத்தை காபி… ” என்று அவள் பதற…
“அது ஒன்னும் ஆகாது … நான் சொல்றதை முதல்ல கேளு ” என்று ஸ்டவ்வை சிம்மில் வைத்தவர்.
“என் மகனை இப்படி எத்தனை நாளைக்கு நீ தள்ளியே வெச்சிருக்க போறே… அவன்தான் பண்ணின தப்புக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுட்டானே… இன்னமும் கேட்டுட்டுதானே இருக்கான். அவனை மன்னிக்க கூடாதா…” என்றார் மகன் மேல் உள்ள பாசத்தில்.
“நான் அவரை மன்னிச்சு ரொம்ப நாள் ஆச்சு அத்தை ” என்றாள் கயல்.
“என்னது !!! என் மகனை மன்னிச்சுட்டியா !!! ஐயோ… ஐயோ… நான் ஒரு அறிவு கெட்டவ… நீ என் புள்ளையை மன்னிச்சுட்டேன்னு தெரிஞ்சிருந்தா என் பேத்தியை என்கூட வெச்சிட்டு உன்னையும் அவனையும் தனியா விட்டுட்டு வந்திருப்பேனே.. ” என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தவர்.
‘இரு இந்த சந்தோசமான விஷயத்தை நான் என் மகன் கிட்டே போய்சொல்லிட்டு வரேன் ” என்று அங்கிருந்து செல்ல போக…
“அத்தை இருங்க எங்க போறீங்க… நான் அவரை மன்னிச்சிட்டேன்னு தான் சொன்னேன். ஆனா அவரை நான் இன்னும் தள்ளி தான் வெச்சிருக்கேன் ” என்றாள் அவசரமாக…
“ஏன் டி .. அதான் அவனை மணிச்சுட்டேன்னு சொல்றியே… அப்ரோமும் என் மகன் கூட பேசாம தள்ளியே இருக்க…”
“ம்ம்ம்… உங்க பெரிய மகனும் , மருமகளும் எப்போ நம்ம கூட பழையபடி பேசுறாங்களோ அது வரை உங்க மகனை தள்ளி தான் வெப்பேன் ” என்று அவர் கன்னம் கிள்ளிவிட்டு அடுப்பை அணைத்து காபியை டம்பளரில் ஊற்றினாள்.
“அப்போ மாறனும், காந்தளும் நம்ம கூட பேசிட்டா நீ என் மகன்கூட பேசிடுவியா !… அவன் கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சிடுவியா?” என்று ஆர்வமாக அவளை பார்த்து கேட்டார் .
ஆமாம் என்று கயல் தலையை ஆட்டினாள். அப்போ சீக்கிரமே இந்த குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா சந்தோசமா இருக்க போறோம் என்று மாறனையும் , காந்தளையும் பார்க்க போகும் நாளிற்காக எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்தார்.
மாறனும், காந்தளும் இந்தியாவில் இருந்து கிளம்பி ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து விட்டனர்.
அங்கே மாறனின் ஆசைப்படி ஆஸ்திரேலியாவில் உள்ள THE UNIVERSITY OF SYDNEY பலக்லைக்கழகத்தில் உளவியல் சார்ந்த வகுப்பில் ஆராய்ச்சியாளராகவும் , அங்கு ஆராய்ச்சி உளவியல் சார்ந்து ஆராய்ச்சி செய்வதற்காக சேரும் மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் பணிபுரிகிறான்.
காந்தள் தன்னுடைய டிசைனிங் துறை சம்மந்தமான வேளையில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறாள்.
வழக்கம்போல காலை அலுவலகம் செல்ல அவசரமாக வேலைகளை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக்கொண்டு பரபரப்பாக செய்துகொண்டு இருந்தனர் .
“முயல்… என்ன செய்ற… கிச்சன்ல இன்னமும் வேலை தீரமாட்டேங்குதா உனக்கு… எவ்ளோமுறை சொல்லிட்டேன் . கிளீனிங் எல்லாம் நான் பார்த்துகிறேன்னு . நீ ஏன் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்துட்டு இருக்க…” என்று கிச்சனுக்கு வந்தவன் .
அங்கே மேலே உள்ளே அலமாரியில் பொருளை எடுக்கமுடியாமல் திணறிக்கொண்டு இருந்தவளை பார்த்தான் . பின்னழகு அளவான அழகில் அவனை சுண்டி இழுக்க… அவள் சட்டையை தாண்டி வெளிப்பட்ட அவள் சிறுத்த இடையைக் கண்டதும் அவன் கைகள் தானாகவே அவள் இடையை வருடிக்கொடுத்தவன் .
அவள் இடையில் கை கொடுத்து அப்படியே காந்தளை தூக்கி தன் தோள் மேல் அமரவைத்தவன் “இப்போ வை குட்டச்சி ” என்று அவள் உயரத்தை கிண்டலடித்தான் .
“என்னை விட கொஞ்சம் வளர்ந்துட்டதுனால நீ ஒன்னும் அவ்ளோ பெருசு கிடையாது புரிஞ்சுக்கோ… ” என்று அலமாரியில் வைத்து இருந்த பொருளை கையில் எடுத்தவள் .
“எடுத்தாச்சு கொஞ்சம் கீழே இறக்கி விடுறியா ” என்றாள்.
“இப்போ என்ன முயல் அவசரம் ” என்ற மாறன் .
“ரெண்டு பேரும் ஆபீஸ் இன்னிக்கு போயே ஆகணுமா ? இங்கையே இருந்துடலாமே …” என்று த்ன் தோளில் ஒய்யாரமாக அமர்ந்து இருந்தவளை சுமந்துகொண்டு வீடெல்லாம் சுற்றிய படி கேட்டான் .
“ஆமா சார் இன்னிக்கு ஒரு முக்கியமான கிளிஎன்ட் மீட்டிங் இருக்கு அதுக்காக தான் நான் இவ்ளோ காலையில் கிளம்புறேன் ” என்றாள்.
அப்போது வீடு காலிங் பெல் அடிக்கவும் நிமிர்ந்து காந்தளை பார்த்தான் .
“என்ன சார் பாக்குறீஙக… காலிங் பெல் அடிக்குற சத்தம் கேட்குது தானே … என்னை கீழே இறக்கிவிட்டு போய் கதவை திறந்து யார் வந்திருக்காங்கன்னு பாருங்க… ” என்றாள் .
“கதவை திறந்து பார்க்க எதுக்கு உன்னை கீழே இறக்கிவிடனும் . நீ இப்படியே இரு.. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போய் கதவை திறக்கலாம். இந்த நேரத்தில் அதுவும் இவ்ளோ காலையில் யார் வந்திருப்பாங்க . எமிலி தான் வந்திருப்பாங்க… நீ அவங்களை வர சொல்லி இருந்தியா ” என்று கேட்டுக்கொண்டே காந்தளை தோளில் சுமந்தபடி வாசலை நோக்கி சென்றான் மாறன் .
“இல்லையே… நான் எமிலியை வர சொல்லல ” என்று காந்தள் பேசிக் கொண்டிருக்கும் போதே மாறன் வாசல் கதவை திறந்து இருந்தான்.
கதவை திறந்து பார்த்த மாறன் , காந்தளுக்கு தன் மொத்த குடும்பத்தையும் பார்த்து அதிர்ச்சி என்றாள் .
குடும்பத்தோடு இவர்களை சர்ப்ரைஸ் செய்ய வந்தவர்களுக்கு அவன் காந்தளை தோளில் சுமந்து நிற்பதை பார்த்து மொத்த குடும்பமும் பதறியது .
“என்ன டா சும்மா காந்தளை தோளில் தூக்கி வெச்சிருக்குறதுக்கு இப்படி குடும்பம் மொத்தமும் ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறாங்கனு பாக்குறீங்களா… பின்ன என்னங்க இன்னும் ஒரு வாரத்துல டெலிவரி ஆகப்போறவளை தோளில் தூக்கிவெச்சு சுத்திகிட்டு இருந்தா பாக்குறவங்களுக்கு பதறாதா .. என்ன?.”
