EPISODE 30
“பாட்டி ப்ளீஸ் … இப்படி பிடிவாதம் பிடிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம் சொல்லுங்க. டாக்டர் நீங்க டிரீட்மென்ட் எடுத்துக்கலையின்னா உங்க உயிருக்கே ஆபத்தா முடியும்னு சொன்னதை கேட்டும் இப்படி பிடிவாதம் செய்தா என்ன செய்றது ” என்று அவரை தன் நோய் குணம் ஆகா டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ள சொல்லி கயல்விழியும், மதியும் கெஞ்சிக்கொண்டு இருந்தனர்.
வசுந்தரா பாட்டிக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதில் அவருக்கு மூச்சுத்திணறல் அவ்வப்போது இருந்து வந்தது. ஆரம்பத்திலேயே இதை சரிசெய்துகொள்ளலாம் என்று அவரை ஹாஸ்பிடல் அழைத்தாள். மாறனை பார்க்காமல் தான் வீட்டை விட்டு வெளியே வரப்போவது இல்லை என்று வீம்பு பிடித்துக்கொண்டு எப்போது காந்தளை அழைத்துக்கொண்டு மாறன் தன் வீட்டையும், அவன் உயிரை கொடுத்துப்பாடுபட்டு வளர்த்த சில்வர் லைன் ஸ்டுடியோவை விட்டு வெளியேறி இருந்தானோ அப்போதில் இருந்து அவர் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் அடைந்து இருக்கிறார்.
என்னதான் அவர்கள் வசதிக்கு வீட்டிலேயே ஒரு மினி ஹாஸ்பிடலை கொண்டு வந்தாலும் . சில முக்கியமான டிரீட்மெண்டிற்கு அவர் வெளியே செல்ல வேண்டி இருந்தது .
இன்றோடு ஒன்றரை ஆண்டு முளுமை அடைந்தது இருக்க… வசுந்தரா வீட்டுக்குள்ளேயே தன்னை சிறைப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அவரை எப்படியாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்று இவர்கள் இருவரும் போராடி பார்த்துவிட்டனர் .
ஆனால் வசுந்தராவோ பிடிவாதமாக வெளியே வர மறைத்துவிட்டார்.
“எப்போ என் பேரனும் , பேத்தியும் இந்த வீட்டுக்கு வாரங்களோ அப்போதான் நான் வீட்டை விட்டு வெளியே வருவேன். எனக்கு சிகிச்சை எடுத்துக்கவும் ஒத்துழைப்பேன்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் .
தமிழ்மாறனும், மரகதமும் கூட எவ்வளவோ பொறுமையாக பேசி அவரை சமாதானம் செய்ய முயன்றாலும் ” டேய் என்கிட்டே வந்து கெஞ்சிட்டு இருக்குறதுக்கு போய் உன் மகன்கிட்டே சொல்லி அவனை இங்கே கூட்டிட்டு வாரத்துக்கு வழியை பாரு டா.. ” என்று மூச்சிரைக்க பேசமுடியாமல் பேசிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டார் .
“பாட்டி ப்ளீஸ் … நான் சொல்றதை கொஞ்சம் கேளு பாட்டி . ஏற்கனவே நான் அறிவில்லாம காந்தளை பேசின பேச்சுக்கு தான் இந்த வீட்டில் இருக்குற யாரும் என்கிட்டே பேசாம என்னை ஒதுக்கிவெச்சு தண்டனை கொடுக்கிறிங்க. என் மகள் பிறந்து ஒண்ணேகால் வருஷம் ஆச்சு அவ கூட பேச ஆரம்பிச்சதுல இருந்து என்கிட்டே பேசுறது இல்லை. எனக்கு இதுக்குமேல ஒரு தண்டனை வேணுமா சொல்லு… நான் உங்க எல்லார்கிட்டயும் எவ்ளோ முறை வேணும்னாலும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா நான் செய்த காரியத்துக்காக என்னை ஒதுக்கி வெச்சு தண்டிச்சதை கூட நான் பொருத்துக்குவேன். ஆனா நீ இப்படி டிரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறது எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு பாட்டி ..” என்று தன்னிடம் முதுகு காட்டி படுத்திருந்த வசுந்த்ராவிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான் மதி .
அவன் அருகில் சற்று இடைவெளிவிட்டு அமர்ந்து இருந்த கயல்விழிக்கு மதி கெஞ்சுவதை பார்த்து ஒரு சிறு பரிதாபம் கூட ஏற்படவில்லை . காந்தளிடம் அவன் தப்பாக பேசிய விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்த அடுத்த நிமிஷம் அவனுடன் பேசுவதையே அனைவரும் நிறுத்திவிட்டனர் .
சில்வர் லைன் ஸ்டுடியோவில் அவன் நினைத்த பதவியும் கிடைத்துவிட்டது. அவனுக்கு தலை கால் புரியவில்லை. தினமும் ஆஃபீஸிற்கு செல்வது அங்கிருப்பவர்கள் செய்யும் வேலைகளில் குறை கூறுவது என்று நடக்கும் போல நாட்களும் நடந்து கொண்டிருந்தது . பொழுதே கொடுக்கப்பட்டிருந்த ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் அவன் சி இ ஓ பதவியில் இருந்து விலகி விட்டான் என்று தெரிந்ததும் அனைவரும் வாபஸ் வாங்கி விட்டனர் . மார்க்கெட்டில் சில்வர் லிங்க் ஸ்டுடியோவின் பெயர் சரியத் தொடங்கி இருக்க அப்போதுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு முதன்முதலாக உணர ஆரம்பித்திருந்தால் மதி .
வீட்டில் உள்ளவர்கள் தன் உடன் பேசாமல் இருப்பதை பெரிதாக எடுத்த்துக்கொள்ளாத மதி நாள் செல்ல செல்ல… மிகவும் தனிமையில் இருப்பதை போல உணர்ந்தான் ,. அதன் பிறகு தன் தவறை மெல்ல உணர ஆரம்பித்தான் . என்னுடைய பிரச்சினைகளை யாரிடம் சொல்லி முறையிடுவது அதற்கு தீர்வு காண்பது என்று உங்களுக்கு தெரியவில்லை இதையெல்லாம் அவன் உணர்ந்த மறுநொடி அவன் போய் முதலில் நின்றது காந்தன் மாறன் இருவரின் முன்பு போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம் என்றாள் அவர்கள் இருக்கும் இடம் இங்கே யாருக்கும் தெரியாது .
மாறனும், காந்தளும் மதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டில் உள்ளவர்களிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டிருந்தனர் இருவரும்.
எவ்வளவோ முயன்றும் இருவரையும் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
வீட்டில் உள்ளவர்களிடமும் காலில் விழாத குறைய குறையாக தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவனை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. இவர்களின் ஒதுக்கம் மதிக்கு ஆள் அரவம் இல்லாத காட்டுக்குள் தன்னை தனியே விட்டது போல தோன்ற ஆரம்பித்திருந்தது
இந்த இடைப்பட்ட காலத்தில் கயல்விழிக்கும் மதிக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது . அதை தொட்டு தூக்க கூட கயல்விழி மறுத்துவிட்டாள். குழந்தை வளர வளர அதன் மேல் அவன் பாசமும் அதிகமாக வளர்ந்தது ஆனால் அந்த குழந்தையின் மேல் இவன் மூச்சு கற்றுக் கூட பட விடாதபடி கயல்விழி அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் .
அவளிடம் எவ்வளவு முறை மன்னிப்பு கேட்டும் அவனை ஏற்க மறுத்து விட்டால் கயல்விழி . கயல்விழிக்கு சொந்தம் என்று யாரும் இல்லாததால் அவளை காந்தளின் அம்மாவும் அத்தையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டனர் அவர்களிடம் தான் மதியின் பிள்ளை வளர்கிறாள் அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு கயல்விழி ஒரு ரெஸ்டாரண்டில் இதில் போடும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள் .
அவ்வப்போது வீட்டிற்கு வந்து தமிழ்மாறனையும் மரகதத்தையும் வசுந்தரவையும் பார்த்து விட்டு செல்வாள் .
அவருக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்க்க வந்திருந்தாள் .
எவ்வளவோ எடுத்து செல்லிங் வசந்த்ரா தன்னுடைய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்து விட .
அவரிடம் வந்து அமர்ந்த தமிழ் மாறன் “அம்மா ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் பிரபலமான ஒரு டாக்டர் கிட்ட கஷ்டப்பட்டு உங்களுக்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன் அவர போய் நீங்க பார்த்தாலே உங்க நோய் எல்லாம் பூரணமா குணமடைந்திடும் தயவு செய்து வாங்க” என்று அவரை அழைத்தார்.
“ஆஸ்ட்ரேலியா என்னடா பெரிய ஆஸ்திரேலியா இங்கே இருக்கிற பக்கத்து தெருவுக்கு கூட என் பேரன் வராம நான் வெளியே வர மாட்டேன் ” என்று அவரை திரும்பியும் பாராமல் பதில் கூறினார் .
“இப்ப முடிவா என்னதான் சொல்ல வரீங்க நீங்க ஆஸ்திரேலியாவுக்கு வர போறீங்களா? இல்லையா? உங்க கூட அப்படியே நாங்களும் வரலாம்னு இருந்தோம். இப்ப நீங்க வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றார் தமிழ் மாறன்.
“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஊரை சுற்றி பார்க்கணும்னா அது போயிட்டு வர வேண்டியதுதானே அது என்ன என்ன ஒரு சாக்கா வச்சுக்கிட்டு எனக்கு மருத்துவம் பாக்கறீங்க என் கூட ஆஸ்திரேலியா வரேன்னு சொல்றீங்க நான் தான் எங்கேயும் வரலைன்னு சொல்றேனே” என்றார் வசுந்தரா மீண்டும்.
“சரி அப்போ நீங்க எங்க கூட வரல அப்படித்தானே” என்றார் தமிழ் மாறன் .
“ஆமாடா வரல” என்றார் முகம் கொடுத்து கூட பேசாமல்.
“சரி மரகதம் அம்மாவை நம்ம கூட அழைச்சிட்டு போய் அப்படியே அங்கே இருக்கிற மாறினையும் காந்தளையும் எப்படியாவது பார்த்து அவளை நம்ம கூட அழைச்சிட்டு வரலாம்னு இருந்தேன். ஆனால் அம்மா பிடிவாதம் பண்றத பார்த்தா அவங்கN கண்டிப்பா நம்ம கூட வரப்போவதில்லை சரி நம்ம ஆஸ்திரேலியா கிளம்பலாம் ” என்றார் .
அவர் மாறனை பார்க்க போகிறேன் என்று சொன்ன மறுநொடி குழந்தை போல துள்ளிக்குதித்து கட்டிலில் படுத்திருந்தவர் எழுந்து அமர்ந்து தமிழ்மாறனையும், மரகதத்தையும் பார்த்தவர் .” தமிழ் நீ சொல்றது உண்மையா !… மாறன் இருக்க இடம் தெரிஞ்சிருச்சா! ” என்றார்.
“ஆமாம் ” என்றார் தமிழ்.
“என் பேரப்பிள்ளைங்க ரெண்டு பெரும் நல்லா இருக்காங்களா? நீ அவங்க ரெண்டு பேர் கூடவும் பேசுனியா டா.. மாறன் என்னை கேட்டனா ? காந்தள் எப்படி இருக்கா ?” என்று வரிசையாக கேள்விகள் கேட்டார் வசுந்தரா.
அவர் உடல் நலன் சரியில்லாமல் ஆனதில் இருந்து சோர்ந்து போய் யாரிடமும் சரியாக பேபிசம் இருந்தவரை பார்த்தவர்களுக்கு . இன்று சிறுபிள்ளை போல் உற்சாகமாக பேசுபவரை பார்த்து வாய்யடைத்துப் போய்விட்டனர் .
அனைவரும் வசுந்தராவையே பார்க்க… “என்ன டா நான் பேசிட்டு இருக்கேன் நீ பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம் . நீ அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் பேசுனியா ? என்னை பத்தி ஏதாவது விசாரிச்சானா என் பேரன் ” என்று மிகவும் ஆர்வமாக கேட்டார் வசுந்தரா .
“அம்மா நான் இன்னும் மாறன்கிட்டே பேசல… அவன் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கானு என்னோட பிரென்ட் ஒருத்தன் அங்கே பிசினஸ் எக்ஸ்போவிற்கு போய் இருந்த போது காந்தளை பார்த்திருக்கான். காந்தள் அங்கே தான் சின்னதா ஒரு கம்பெனி நடத்திட்டு வரலாம். அவளும் அந்த எக்ஸ்போவிற்கு வந்திருக்கா… காந்தளை பார்த்ததும் அவளை அடையாளம் கண்டுபிடிச்சிட்டான் . .உடனே எனக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னான். காந்தள்கிட்டே போன் கொடுக்றேன்னு சொன்னான். நான் தான் அவங்க ரெண்டு பேரும் என்ன செய்றாங்க , எங்கே இருகாங்கங்குற விஷயத்தை மட்டும் எனக்கு சொல்லு நான் நேரடியாவே அங்கே வந்து அவங்களை நேரில் சந்திச்சு பேசிக்குறேன்னு சொல்லிட்டேன் ” என்று மரனையும், காந்தளையும் சந்தித்த விபரம் சொன்னார்.
“அப்பறோம் என்ன டா இப்போ அதான் என் பேர பசங்க இருக்க இடம் தான் தெரிஞ்சிருச்சே… வா நாம எல்லாரும் போய் அவங்களை நேரில் பார்த்து பேசி நம்ம கூட இந்தியாவுக்கு கூட்டிட்டு வந்துடலாம்” என்றார்.
அதை கேட்டதும் தமிழ்மாறன் “அம்மா… அவசரப்படாதிங்க… நம்ம நினைச்சா மாதிரி போக முடியாது ” என்று அவர் சொல்ல…
“என்ன டா சொல்ற… ஏன் நாம போகமுடியாது ” என்று அவரை குழப்பத்தோடு பார்த்தார் வாசுந்த்ரா
