EPISODE 21
சர்ப்ரைஸ்!! என்று பத்மா கதவை திறந்ததும் அவர் காது கிழியும் அளவிற்கு கத்தினாள் காந்தள் .
காந்தளை இந்த மதிய வேளையில் அவர் எதிர்பார்க்கவில்லை ” அம்மு!!! ” என்று ஆச்சர்யமானவரை கட்டிக்கொண்டு ” என்ன அத்தை பண்ணிட்டு இருக்க ? ” என்றபடி தன் பேக்குடன் உள்ளே நுழைந்தாள் காந்தள் .
” எனக்கு என்ன டி இத்தனை வருசமா நானும் உன் அம்மாவும் ஓடி , ஓடி உழைச்சத்துக்கு இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கோம்” என்றவர்
.
“ஆமா நீ என்ன திடீர்னு வந்து இருக்க… வெயிலயே நடந்து வந்தியா பாரு முகமெல்லாம் வேர்த்து போய் இருக்கு” என்ரூ தன் புடவை தலைப்பில் காந்தள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கேட்டார் பத்மா .
“கேப்பில் தான் வந்தேன் அத்தை . அந்த டிரைவர் நம்ம வீட்டில் கொண்டு வந்து விடாம பதிலையே என்னை இறக்கி விட்டுட்டான் . இதுக்கு மேல சார் வராதுன்னு சொல்லிட்டு. அப்டியே நானும் இறங்கி நடந்து வந்துட்டேன் ” என்றாள் சோபாவில் பொத்தென விழுந்து .
” அட என்ன அம்மு நீ … எனக்கு ஒரு போன் போட்டு இருக்க கூடாதா நீ … நான் வந்து உன்னை கூடிடிக்கு வந்து இருப்பேனே” என்றவர் காந்தளுக்கு வெயிலுக்கு இதமாக குடிக்க மோர் கொண்டு வந்து கொடுத்தார்.
அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு “ஆமா அம்மா எங்கே ? நான் வந்ததுல இருந்து ஆளையே காணோம் ” என்று வீட்டை சுற்றி நோட்டமிட்டபடி கேட்டல் காந்தள் .
“அவ கடைக்கு போயிருக்கா அம்மு . நம்ம கடை முழுவதும் எரிஞ்சு சாம்பல் ஆனதுக்கு அப்பறோம் நீ எங்களை கடையை இனிமேல் நடத்த வேண்டாம்னு சொல்லிட்டியா … சரி அதை அப்படியே போட்டு வைக்க எங்களுக்கு மனசு இல்லை. நாம கஷ்டப்பட்டு முதல் முதலா வாங்கின இடம் அது… அதனால இடத்தை எல்லாம் சுத்தம் பண்ணி கடையை ரெடி பண்ணி வேற ஆளுக்கு கடையை வாடகைக்கு விடலாம்னு முடிவு எடுத்துட்டோம் . அதான் அதுக்கு ஆளுங்களை பிடிச்சு கடையை சரி பண்ண சொல்லி போய் இருக்கா . நான் காலையில் இருந்து கடையில தான் இருந்தேன் . இப்போ கொஞ்சம் முன்னே ஓய்வு எடுக்க வீட்டுக்கு வந்தேன் ” என்றார் .
” அப்போ நான் சொன்னதை ரெண்டு பெரும் கேட்டுட்டீங்க போல… நல்ல விஷயம் தான் ” என்றவள் .
” அத்தை கிளம்பு நாம கடைக்கு போகலாம் . அம்மா மட்டும் தனியா கஷ்டப்படும் இல்ல ” என்று வந்ததும் வராததும் பத்மாவை தங்கள் கடைக்கு கிளம்ப அவசரப்படுத்தினால் காந்தள் .
“ஏய் அம்மு என்ன டி இது இப்போ தானே வந்தே அதுக்குள்ள கடைக்கு போக என்ன அவசரம் உனக்கு இப்போ . இரு நான் உனக்கு சாப்பிட ஏதும் எடுத்துட்டு வரேன் . சாப்பிட்டுட்டு நிதானமா கடைக்கு போக்கலாம் ” என்று பத்மா கிச்சனுக்குள் செல்லப் போக …
அவர் கையை பிடித்து நிப்பாட்டிய காந்தள் ” அதெல்லாம் எதுவும் வேணாம் நீ வா அத்தை நாம வெளியே போய் சாப்பிட்டுக்கலாம் ” என்று தன் கையில் இருந்த மோரை ஒரே மடக்கில் குடித்துத் டம்பளரை கீழே வைத்தவள் பத்மாவை இழுத்துக்கொண்டு கிளம்பினாள் .
இருவரும் ஆட்டோ பிடித்து கடைக்கு வந்து இருக்க… அங்கே சித்ரா சேலை தலைப்பை தன் தலையில் போட்டுகொண்டு வெயிலில் நின்று கடையில் வேலை செய்து கொண்டு இருந்தவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்.
`
அவர் கடை முன்பு வந்து ஆட்டோ நிற்கவும் திரும்பி கண்கள் சுருக்கி யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தவர் . ஆட்டோவில் இருந்து முதலில் பத்மாவும் , அவர் பின்னே காத்தலும் இறங்க .. அவளை பார்த்ததும் ஆச்சர்யத்தில் சித்ராவின் கண்கள் அகல விரிந்தது. வேகமாக காந்தளிடம் வந்தவர் அவளை கட்டிக்கொண்டு ” அம்மு எப்போ டா வந்தே .. நல்ல இருக்கியா ? வேலை எல்லாம் எப்படி இருக்கு ” என்றார்.
” எனக்கு என்னம்மா நான் நல்லா இருக்கேன். என் அம்மாவும் ,அத்தையும் என் மீள இவ்வளவு பாசம் வெச்சிருக்கும்போது நான் ரொம்ப ஹாப்பி ஆஹ் இருக்கேன் ” என்றவள் .
“வேலை எல்லாம் எப்பவும் போல தான் மா .. ஆனா முன்ன வேலை பார்த்ததை விட இப்போ பாக்குற வேலையில நிறைய கத்துக்க இருக்கு ” என்றாள்.
” சரி அம்மு , ஆமா என்ன திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வந்திருக்க… ” என்றார் சித்ரா.
” ஏன் நா்ன் திடீர்னு வரக்கூடாதா ? உங்க ரெண்டு பேரையும் அப்படியே அன்னிக்கு விட்டுட்டு போனது போல இருந்துச்சு அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் ” என்றாள் .
அப்போது கடையில் வேலை செய்து கொண்டு இருந்த நபர் ஒருவர் சித்ராவிடம் வந்தது “அம்மா கடை மொத்தமா இடிஞ்சு சாம்பல் ஆகி இருக்கு. அதில் இருந்து எந்த பொருளும் மிச்சம் ஆகலை ” என்றார்.
” அது எங்களுக்கே தெரியும். இதை சொல்லவா உன்னை நான் இங்கே வர சொன்னே ன் ” என்று சித்ரா அவருக்கு கௌண்டர் கொடுக்க…
அதை கேட்டு சிரித்த காந்தள் “எந்த சூழ்நிலையிலயும் இந்த நக்கல் பேச்சு இன்னும் போகலை உன்கிட்டே இருந்து ” என்றவள் திரும்பி அந்த வேலையாளிடம் ” அண்ணா சொல்லுங்க இப்போ என்ன செய்ய்யலாம் . இந்த எரிஞ்சு போன கடையை சரி செய்ய எவ்வளவு ஆகும் ” என்றாள் காந்தள் .
யார் இவள் என்று காந்தளை பார்த்த வேலையாளிடம் “அதான் கேக்குறா இல்ல வாயை திறந்து சொல்லாம அவளை எதுக்கு அப்படி பாத்துட்டு இருக்க ” என்று பத்மா தன் குரலை உசத்தி கேட்க..
” அட யாருமே நீ.. இப்படி கேக்குற… இந்த பொண்ணு வந்து திடீர்னு கடையை சரி செய்ய எவ்வளவு ஆகும்னு கேட்கவும் . பார்க்க படிச்சா பொண்ண தெரியுதே இந்த பொண்ணு கிட்டே எப்படி சொன்ன புரியுற மாதிரி இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன் ” என்ற அவர்.
” சரி சொல்லு என் பொண்ணு நீ சொல்றது புரிஞ்சுக்குற அளவுக்கு நல்லாவே படிச்சிருக்கா ..” என்றார் சித்ரா .
அவரை என்ற இறங்க முறைத்துவிட்டு காந்தலிடம் திரும்பியவர் “அம்மா இந்த கடையை மொத்தமா சுத்தம் பண்ணி சரி செஞ்சு நீங்க வாடைக்கு ஆளை விடுறதுக்கு நாளும் ஆகும், அதே போல செலவும் ஆகும். அதனால் நான் சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா கடையை சரி செய்த மாதிரியும் இருக்கும், அப்படியே கடைக்கு வாடகைக்கு ஆள் கிடைச்ச மாதிரியும் இருக்கும்” என்றார்.
“என்ன செய்யணும் அண்ணா சொல்லுங்க . நீங்க சொன்னது எங்களுக்கு ஒத்து வந்துச்சுன்னா அது படியே செய்துறலாம் ” என்றால் காந்தள் .
” வேற ஒன்னும் இல்லைம்மா .. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு அவரு ரொம்ப நாளா இந்த ஏரியாவுல ஒரு துணிக்கடை போடணும்னு சொல்லிட்டு இருந்தாரு .ஆனா இந்த ஏரியாவுல தான் அவ்வளவு சீக்கிரமா கடை காலி ஆகி இருக்காதே … அவர்கிட்டே வேணா நான் உங்க கடையை பத்தி சொல்றேன். அவரும் வந்து கடையை பார்த்த்ட்டுட்டு ஓகே சொல்லிட்டாருன்னா அவரே இந்த கடையை முழுசும் சரி செய்துட்டு அவரோட கடைக்கு தகுந்தா மாதிரி மாத்திக்குவாரு . அப்படியே உங்களுக்கும் கடையை சரி செய்தா மாதிரியுமிருக்கும் , கடையை வாடகைக்கு விட்ட மாதிரியும் இருக்கும் ” என்றார் .
அவர் சொன்னதை கேட்டு கந்தலுக்கு இந்த யோசனை சரியாக தோன்றவே தன் அம்மா , அத்தை இருவரையும் பார்த்து என்ன செய்யலாம் என்று புருவத்தை உயர்த்தி கண்ஜாடையில் கேட்டாள் .
“ஏன் யா … இப்படி அவங்களே கடையை சரி செய்து வாடகைக்கும் வரேன்னு சொன்னாங்கன்னா கம்மியாத்தானே வாடகை கொடுப்பாங்க து எப்படி எங்களுக்கு கட்டுப்படி ஆகும் ” என்றார் சித்ரா .
“அம்மா அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை வாங்க துணிக்கடைக்கு எப்படியும் எல்லாமே புதுசா தானே செய்து ஆகணும். அப்போ எப்படியும் நீங்க எல்லாமே சரி செஞ்சு மாத்தி கொடுத்தாலும் அவங்க கடையை வாடகைக்கு எடுத்த பிறகு அவங்ளுக்கு தகுந்த மாதிரி கடையை மாத்திதானே ஆகணும். அதுக்கு இப்டியே விட்டுட்டா அவங்களுக்கு பிரயோஜனம் உங்களுக்கும் வேலை மிச்சம்” என்று அவர்களை பார்த்து சொன்னவர் .
” நான் வேணா அவங்க கிட்டே பேசிப்பாக்குறேன் . உங்களுக்கு மாசா மாசம் ஒரு அளவுக்கு நல்ல வாடகை வரமாதிரி பேசிக்கொடுத்துறேன். அப்படியே ஓகே ஆகிடுச்சுனா எனக்கு கொஞ்சம் பத்து செய்து கொடுங்க போதும் ” என்றார் .
” அதானே இவ்வளவு நேரமா என்ன நீ இவளவு அக்கறையா சொல்லிட்டு இருந்தேன்னு பார்த்தேன் . அந்த அக்கறை எல்லாம் இதுக்கு தானா ..” என்றார் பத்மா .
“அத்தை பேசாம இரு ” என்றவள் அவரிடம் திரும்பி ” அண்ணா எங்களுக்கு ஓகே நீங்க அவங்க பேசிட்டு வந்து கடையை காட்டுங்க அவங்களுக்கு ஓகேன்னா
மத்ததை பேசிக்கலாம் ” என்று அவர்கள் கடை சாவியை கொடுத்துவிட்டு சித்ராவையும், பத்மாவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் காந்தள் .
மூவரும் வெளியே சென்று உணவருந்திவிட்டு வீட்டிற்கு வரவும் கடையை பார்த்துவிட்டு இவர்கள் கடையை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாகவும், நாளையில் இருந்து அதற்கான வேலைகளை ஆரம்பிக்க இருப்பதாகவும் , நேரடியாக அவர்கள் கடையை வாடகைக்கு எடுப்பவர் கந்தலுக்கு போன் செய்து விபரம் கூறியவர் அவர்களை நேரில் சந்திக்க விருன்புவதாக கூற முவரும் மாலை கடைக்கு வந்து அவரை சந்திப்பதாகவும் கூறி போனை வைத்தால் காந்தள் .
சொன்னது போலவே மாலையே தங்கள் கடைக்கு காட்னகளை மட்டும் அனுப்பி வைத்து அவளையே அனைத்தையும் பேசி முடிக்கும்படி கூறிவிட்டு சித்ராவும் , பத்மாவும் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
சொன்னது போலவே கடிக்கு வந்த கந்தலிடம் கடைக்கு மாத வாடகையையும், 10 மாச வாடகையை அட்வான்ஸாக அப்போதே அவள் கையில் பணமாக கொடுத்து விட்டு 5 வருடத்திற்கு அவர்கள் கடையை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி அதற்கான அக்ரெமெண்டை சீக்கிரமே அவர்களே தயார் செய்து நாளை வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
வீட்டிற்கு வந்த காந்தள் சித்ரா , பத்தமாவிடம் அவர்கள் கொடுத்த 12.5 லட்சம் அட்வான்ஸ் பணத்தை கையில் கொடுத்து மாதம் 1.25 லட்சம் வாடகை தருவதாக கூறி இருப்பதாய் சொன்னதும் பத்மாவும் , சித்ராவும் கையில் இருந்த பணத்தையும், மாத வாடகை எவ்வளவு வரப்போகிறது என்றுகேட்டு ஆவென வாயை பிளந்தனர்.
அடுத்து காந்தள் சொல்லப்போகும் செய்தி கேட்டு அதற்கு எந்த மாதிரியான பதிலை இருவரும் கொடுக்க போகிறார்களோ…
