EPISODE 22
“அம்மு என்ன இது நீ வேல பாக்குற ஊருக்கு நாங்க ரெண்டு பெரும் வந்து என்ன பண்ண போறோம் . நானும் உன் அத்தியாயம் இங்கயே இருக்கோமே… புதுசா ஒரு ஊருக்கு வந்து எங்களுக்கு அங்க யாரையும் தெரியாது ..” என்று சித்ரா காந்தளுடன் சென்னை வர மறுத்தார்.
” அம்மா சொன்ன்னா கேளுங்க நாம் மூணு பெரும் இந்த ஊருக்கு பிழைக்குறதுக்காக வரும்போது இங்கே யாரையாவது தெரிஞ்சுக்கிட்டா வந்தோம் . இல்லையே … இங்கே வந்து அப்பறோம் தானே நிறைய பேரை தெரிஞ்சுக்கிட்டீங்க… அதே போல தான் அங்கே வந்தாலும் இருக்க போறோம் ” என்றவள்
பத்மாவிடம் திரும்பி ” அத்தை என்ன நீ அமைதியா இருக்கா… ஏதாவது சொல்லு …” என்றாள் .
” அம்மு உங்க அம்மா சொன்னது சரி தானே ஏறு என்னனு தெரியாத ஊருக்கு நாங்க ரெண்டு பெரும் வந்து என்ன செய்ய போறோம் சொல்லு … அதுவும் இல்லாம எங்களுக்கு u வயசாகிருச்சு … நாங்க வந்து அங்கே என்னம்மா பண்ண போறோம் . இங்க நம்ம வீட்டை விட்டுட்டு நாம எங்க ம்மா போறது”என்றார் பத்மா .
“அத்தை இப்போ இந்த வீடுதான் உனக்கு பிரச்னையின்னா பேசாம இந்த வீட்டை வித்துட்டு அந்த பணத்தையும், கையில் காசையும் போட்டு ஒரு வீடு வாங்கிக்கலாம். அதுவும் இல்லாம எனக்கு எங்க ஆபீஸ்ல கொடுத்த வீடு கூட இருக்கே அதுவும் எனக்கு தானே …” என்றாள் .
” அது இல்ல அம்மு…” என்று பத்மா தயங்க ..
“போதும் நீங்க ரெண்டு பெரும் எதுவும் சொல்ல வேண்டாம் . நான் ஒருத்தி தனியா அங்கே இருந்து கஷ்டப்படுறேனு உங்களுக்கு தோணவே இல்லை அப்படி தானே … தனியா நான் மட்டும் அவ்ளோ பெரிய வீட்டில் இருக்க போறேன். நீங்க அங்கே என் கூட வந்துட்டா நானும் நீங்களும் ஒண்ணா சந்தோசமா இருக்கலாம்னு எவ்ளோ ஆசையா உங்க ரெண்டு போரையும் என்கூட கூட்டிட்டு போலாம்னு வந்தேன் தெரியுமா? ஆனா நீங்க என் கூட வந்து இருக்க ரொம்ப கஷ்டப்படுறீங்க…” என்றாள்.
” ஏய் அம்மு என்ன டி… இப்படி எல்லாம் சொல்லற … நாங்க உன்கூட இருக்க மாட்டோம்னு எப்போ சொன்னோம். உன்னோட சந்தோசம் தானே எங்களுக்கு சந்தோசமே சொல்லப் போனா நானும் உன் அத்தையும் வாழுறதே உனக்காக தானே அம்மு…” என்று சித்ரா குரல் தழுதழுக்க பேசினார்.
” அப்போ எதுவும் பேசாம என்கூட கிளம்பி ஊருக்கு வாங்க எனக்காக நீங்க ரெண்டு பேரும் தானே இருக்கீங்க எனக்குன்னு வேற யாரு இருக்காங்க ” என்று கண்களில் கண்ணீரோடு காந்தள் கூற …
” அப்போ அந்த மதி… அவன் உனக்காக இல்லையா ?” என்று பத்மா குறும்பாக காந்தளிடம் கேட்க…
உடனே பத்மாவை பார்த்த காந்தள் “மதியா ? யாரு ? யாரு அது…” என்று எதுவம் தெரியாதவள் போல காந்தள் கேட்க…
“ஆஹா… ஆஹா … ரொம்ப நடிக்காத அம்மு நீயும் , மதியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறிங்கனு உன் அத்தை எப்பவோ என்கிட்டே சொல்லிட்டா … நீ இப்படி தெரியாத மாதிரி நடிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை ” என்று காந்தளின் கண்களை துடைத்துவிட்டபடி சித்ரா அவளை பார்க்க…
அவரை தாண்டி பின்னால் இருந்த பத்மாவை பார்த்து ” உன்கிட்டே நான் என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சு வெச்சிருக்க அத்தை …” என்று கண்களை உருட்டி பத்மாவிடம் கேட்டாள் காந்தள் .
“உன் அம்மாகிட்டே நான் எதை டி மறைச்சிருக்கேன். நீ என்கிட்டே அந்த மதி உன்னை லவ் பன்றேன்னு சொல்லும்போது உன் அம்மாவும் என்கூட தான் இருந்தா அப்பறோம் எப்படி நான் உன் அம்மாகிட்டே சொல்லாம இருக்க முடியும்” என்றார்.
“அப்போ… அம்மாவுக்கு நான் மதியை காதலிக்க ஆரம்பிச்ச அப்போ இருந்தே தெரியுமா!!” என்றால் அதிர்ச்சியாக .
“ம்ம்ம்… தெரியும்” என்றார் சித்ரா சிரித்துக்கொண்டே.
“அப்பறோம் ஏன் என்கிட்டே நீங்க எதையும் காட்டிகவே இல்லை ” என்றாள் .
“என் பொண்ணே வந்து என்கிட்டே சொல்லுவானு நான் காத்திருந்தேன் ” என்றார் சித்ரா.
“அம்மா… அது.. அது வந்து ” என்று காந்தள் தயங்க…
” சரி சரி… இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்லை . நானும் உன் அத்தையும் எப்போ உன்கூட ஊருக்கு வரட்டும் சொல்லு… எங்களுக்கு வேணுங்குறதை எல்லாம் நாங்க எடுத்து வைக்கணும் ” என்று காந்தள் பேச தயங்குவதை பார்த்து தன் பேச்சை மாற்றினார்.
“அம்மா !! அப்போ நீயும் அத்தையும் என்கூட வரிங்களா!!” என்று ஆச்சர்யமானாள் .
“ஆமா அம்மு.. நாங்களும் வரோம் வந்து அந்த ஊருலயும் கொஞ்ச நாள் இருந்து பாத்துகிறோமே… எப்படி இருக்குன்னு ” என்றவர்.
” இந்த வீட்டை விக்க வேணாம். அதான் உனக்கு ஏற்கனவே உன் ஆபீஸ்ல வீடு கொடுத்திருக்காங்களே அங்கேயே இருக்கலாம். அப்போ அப்போ நானும் உன் அத்தையும் இங்கே வந்துட்டு போறோம். இங்கே இருக்க ஆளுங்களை அப்போ அப்போ வந்து நாங்க பாத்துட்டு போனா எங்களுக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது தவிர…இங்கே வந்தா போனா தங்குறதுக்கு வீடு வேணுமில்ல…” என்ற சித்ரா.
“அப்போ நீங்க ரெண்டு பெரும் உங்களுக்கு வேணுங்குற ட்ரெஸ்ஸை மட்டும் பேக் பண்ணிக்கோங்க மாதத்து எல்லாம் அங்கேயே இருக்கு ” என்றாள்.
“வெறும் துணி மணியை மட்டும் எடுத்து வந்தா போதுமா அப்போ இந்த டிவி , பிரிட்ஜ் மத்தது எல்லாம் எடுத்துட்டு போக வேண்டாமா ?” என்றார் பத்மா .
“அத்தை அதெல்லாம் எதுவும் வேணாம் எல்லாமே எனக்கு கொடுத்த வீட்டில் இருக்கு … இங்கே இருக்கறதை விட அங்கே எல்லாமே பெருசா இருக்கும் அத்தை ” என்றாள் .
“அப்போ டிவியும் பெருசா இருக்குமா ? ” என்றார் ஆர்வமாக .
“ம்ம்ம்… ஆமா நீங்கலே நேருல வந்து பாருங்க ” என்றாலே இருவரும் தன்னோடு வருவதை நினைத்து சந்தோசமாக .
“அப்போ ஒன்னு பண்ணலாம் அம்மு … நீ முன்னாடி ஊருக்கு பொய் உன்னோட வேலையை பாரு . நானும் உன் அத்தையும் இங்கே இருக்கறதை எல்லாம் பேக் பண்ணி பத்திரமா வெச்சிட்டு … அப்டியே நமக்கு தெரிஞ்சவங்க கிட்டே எல்லாம் சொல்லிட்டு உனக்கு பின்னாடி கிளம்பி ஊருக்கு வரோம் ” என்றார் சித்ரா.
அவர் செல்வதும் சரி தான் அப்படியே அனைத்தையும் போட்டு விட்டு வருவது சரியாக இருக்காது என்று தோன்றியது அவளுக்கும்.
” சரிம்மா .. அப்போ நாநும் உங்க கூடவே இங்கயே இருக்கேன் எல்லா வேலையும் முடிச்சுட்டு நீங்க யாருகிட்ட எல்லாம் சொல்லிட்டு வரணும்னு நினைக்குறிங்களோ எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வாங்க அப்பறோம் மூணு பெரும் சேர்ந்து ஒன்னாவே ஊருக்கு போக்கலாம்” என்றாள் .
“அப்போ நீ வேளைக்கு போகலையா? அவங்க லீவு போட்டா ஏதும் சொல்லப் போறாங்க ” என்றார் பத்மா .
” அதெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை அத்தை , லீவு சொல்லிக்கிறேன் நான் ” என்றவள் தன் மொபைலை எடுத்து நீலகண்டனுக்கு அவர்கள் முன்பாகவே கால் செய்து விபரம் சொன்னவள் இரண்டு நாளில் வேளைக்கு வந்துவிடுவதாக கூறி போனை வைத்தாள் .
சொன்னது போலவே இரண்டு நாளில் தன் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் பேக் செய்து வைத்து வேட்டை சுத்தம் செய்து பசதுகாப்பக ணொய்து பொருட்களையும் வைத்துவிட்டு தங்களுக்கு வேண்டிய முக்கியமான பொருட்களை மட்டும் பேக் செய்து ஒரு கேப்பை புக் செய்து தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லிக்கொண்டு சித்ராவும், பத்மாவும் தங்கள் மகளுடன் சென்னைக்கு கிளம்பினார்கள்
மூவரும் காந்தள் வீட்டிற்கு வருகையில் காலை 7 மணி ஆகிவிட்டது அந்த நேரத்திலும் அங்கே பிரியா, முகுந்தன் அவர்களுடன் மதிமாறனும் இருந்தான் .
அவர்களிடம் ஏற்கனவே காந்தள் விஷயத்தை சொல்லி இருந்தாள் . ப்ரியாவியும், முகுந்தனையும் ஏற்கனவே சித்ரா , பத்மா இருவருக்கும் தெறியும் என்பதால் அவர்களிடம் மிகவும் சகஜமாக பேசியவர்கள் மதியை பார்க்க… அவனோ மிகவும் தயக்கமாக நின்று இருந்தான் . காந்தள் அம்மாவிடமும் , அத்தையிடமும் என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் நின்று இருக்க… அவன் அருகில் சென்ற பத்மா ” நீங்க தான் மதியா “என்றார்.
“ஆமாம் ம்மா…” என்று அவரை பார்த்து சிரித்தான்.
“எங்க ரெண்டு போரையும் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது பேய் மாதிரி தெரியுதா?” என்றார் பத்மா .
ஏற்கனவே பதட்டத்த்தில் இருந்த மதி பத்மா கிண்டலாக கேட்டதை சரியாக கவனிக்காதவன் ஆமாம் என்று தலையை ஆட்டிவிட… அதை பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.
காந்தள் பத்மாவிடம் வந்து “அத்தை என்ன இது வந்ததும் வராததுமா உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா? ” என்று அவரை அடுத்து பேசவிடாமல் செய்தவள் .
மதியையும் மற்றவர்களையும் பார்த்து நான் போய் குளிச்சிட்டு வரேன் எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகுது நீங்களும் ஆபீஸ் தானே போக போறீங்க ” என்று கேட்டாள் .
“ஆமாம்” என்று மூவரும் தலையை ஆட்ட …
அவர்களை சிறிது நேரம் அங்கேயே காத்திருக்க சொன்ன காந்தள் ப்ரியாவிடம் சொல்லி அனைவர்க்கும் என்ன வேண்டும் என்று கேட்டு உணவை ஆர்டர் செய்ய சொன்னவள் சென்று ரெடியாக சென்றாள் .
சிறிது நேரத்தில் உணவு வந்துவிட … காந்தளும் ஆஃபீஸிற்கு கிளம்பி வெளியே வரவும் சரியாக இருந்தது . வந்ததும் அனைவரும் சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்ப காந்தள் சித்ராவிடமும், பத்மாவிடமும் மாலை வள வரும் வரை வீட்டைவிட்டு இருவரும் எங்கும் போகக்கூடாது என்று எச்சரித்துவிட்டு சென்று இருந்தாள்.
ப்ரியா முகுந்துடேன் ஆபீஸ் சென்று விட … காந்தள் மதியுடன் ஆபீஸ் கிளம்பினாள். காந்தளுக்கு இனி தினமும் ட்ரைனில் போய் வரவேண்டிய அவசியம் இல்லை . அவள் ஆபீஸ் காந்தள் தற்போது தங்கி இருக்கும் அப்பார்ட்மென்டில் இருந்து அரைமணிநேர பயணம் செய்தலே வந்து விடும் .
அதனால் காந்தளும் , மதியும் சில்வர் லைன் ஸ்டுடியோவிற்கு நடந்து செல்ல தீர்மானித்து இருந்தனர். இருவரும் நடந்துகொண்டே பொதுவாக சில விஷயங்கள் பேசிவிட்டு… நடக்கத்துவங்கி இருந்தனர் .
“என்ன காந்தள் வந்ததில் இருந்து அமைதியாவே இருக்க… என்ன ஆச்சு உனக்கு ” என்றான் மதி.
“இல்லையே எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன் மதி ” என்றாள் .
“எனக்கு அப்படி தோணலை காந்தள் என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா?” என்றான்
அதற்குள் அவர்கள் அலுவலகம் வந்துவிட… அவளை கை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பி நிறுத்தி “என்ன ஆச்சு சொல்லு …” என்றான் மதி .
அவள் அவன் கண்களையையே ஆழமாக பார்த்தாள் பின் “மதி நான் என் அம்மாவையும் ,அத்தையையும் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். அவங்களுக்கு இங்க எப்படி பழக்கம் ஆகும். இந்த ஊரை பத்தி எதுவும் தெரியாது. நான் இல்லாத நேரம் வீட்டில அவங்க ரெண்டு பேரும் என்ன பன்னிட்டு இருப்பாங்களோன்னு நினைச்சு கொஞ்சம் திக்கு திக்குன்னு இருக்கு ” என்றாள்.
“இதுக்கா நீ முகத்தை இப்படி வெச்சிருக்க… நீதான் அவங்ககிட்டே நீ வீட்டுக்கு thriumba போற வரைக்கும் ஏதும் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கே இல்ல . அதெல்லாம் ஏதும் செய்யமாட்டாங்க . நீ கவலைப்படாதே” என்றான் மதி.
சரி என்று தலையை ஆட்டியவள் “சாரி மதி நான் ஈவினிங் ஆபீஸ் விட்டதும் வீட்டுக்கு கிளம்பிடுவேன் அம்மாவுக்கும், அத்தைக்கும் இந்த இடம் ,ஊர், ஆளுங்க எல்லாம் ஒரு அளவுக்கு பழகுற வரை நான் எங்கையும் வரல .. நீ என்னை தப்ப நினைச்சுகாதா ” என்றாள் காந்தள் .
“ஏய் இதுல என்ன இருக்கு … நீ தடவை எடுத்துக்கோ… ஆனா ஒரு விஷயம் மறந்துடாதே… நம்ம முதல் அன்னிவெர்சரி அப்போ மிஸ் பண்ணினதை நாளைக்கு என்னோட பர்த்டே பார்ட்டியில் வெச்சு நீ கொடுக்கணும்னு எதிர்பார்க்குறேன் என்றான்.
அப்போதுதான் நாளை மதியின் பிறந்தநாள் என்பதே அவளுக்கு நினைவு வந்தது.
“மதி!! உன்னோட பிறந்தநாளை நான் எப்படி மறந்தேன் . ஐயம் ரியலி சாரி மதி மறந்துட்டேன் ” என்றவள் சரி சொல்லு நாளைக்கு உன்னோட பர்த்டேவுக்கு என்ன கிப்ட் வேணும் என்றாள் .
“வேற என்ன கேட்க போறேன் நாளைக்கு என்னோட பிரததயவுக்கு உன்னோட முத்தம் தான் கிப்ட்டா வேணும் “என்றான் .
காந்தள் அவன் சொன்னது கேட்டு சிரித்தாள்.
நீ என்ன பண்ணினாலும் நான் நாளைக்கு என்னோட பர்த்டே கிப்ட்டை வாங்காம விட மாட்டேன் நியாபகத்துல வெச்சுக்கோ சரியா என்றான் .
ம்ம்… என்று தலையை ஆட்ட்டினாள் காந்தள் .
“சரி நாளைக்கு ஈவினிங் 6 ஓ கிளாக் பர்த்டே பார்ட்டி ஸ்டார்ட் ஆகிடும் நீ , உன் அம்மா , அத்தை மூணு பெரும் மறக்காம வந்துடனும் . நான் ப்ரியா , முகுந்த் கிட்டே ஏற்கனவே சொல்லிட்டேன் அவங்களும் வந்து ஜாயின் பண்ணிப்பாங்க “என்றான் .
“கண்டிப்பா ” என்றவள்.
“என்ன திடீர்னு பார்ட்டி எல்லாம் ” என்றாள்.
” நாளைக்கு பார்ட்டியில் வெச்சு நம்ம லவ்வை எல்லார் கிட்டயும் நான் சொல்ல போறேன். ஏற்கனவே உன் வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு இல்லையா .. என் வீடு ஆளுங்க கிட்டயும் நான் ஏற்கனவே நம்ம லவ்வை பத்தி சொல்லிட்டேன். எல்லாரும் நாளைக்கு வருவாங்க நம்ம வேலை பார்த்த டிபார்ட்மெண்டில் இருந்து எல்லாரையும் இன்விடே பண்ணி இருக்கேன் ” என்றான்.
காந்தள் அவன் சொன்னது எல்லாம் கேட்டுவிட்டு சரி என்று தலையை ஆட்டியவள் நாளை அவனை பார்ட்டியில் சந்திப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி நீலகண்டனை பார்க்க சென்றாள் .
