News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு-6

by Sinamika Writes
650 views
A+A-
Reset

EPISODE -6

இன்று நடக்கவிருந்த நேர்காணலை அடுத்த நாள் மாற்றி வைத்து விட்டார்கள் என்று காந்தள் சொல்லவும். அவள் அருகில் அமர்ந்திருந்தவன் 

“ஓ… நான் அதை மறந்து விட்டேன்” என்றான்.

அவன் என்ன சொன்னான் என்று புரியாமல் காந்தள் அவனை பார்த்து கேட்க..

” ஒன்றுமில்லை” என்று கண்கள் சிமிட்டி தலையாட்டியவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் 

 முன்பின் அறியாத ஒருவனுடன் தான் ஏன் இவ்வளவு சகஜமாக பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று யோசித்தவலுக்கு 

அவன் தன் அருகில் நெருக்கமாக அமர்ந்து இருப்பதையும் பெறுபடுத்தாமல் இருக்கிறோம்  என்று காந்தளுக்கு இப்போதுதான் உரைத்தது.

அவன் கண் சிமிட்டி தன்னை பார்த்து சிரிக்கும் அழகை அவளையும் அறியாமல் ரசித்தாள். எவ்வளவு அழகான வசீகரிக்கும் முகம் அவனுக்கு. அடர்த்தியான புருவங்கள், கவர்ச்சியான புன்னகை, காந்தம் போல சுண்டி இழுக்கிறது அவனது பார்வை. மேல் நோக்கி வளைந்து இருந்த அவன் அழகான தடித்த உதடு. அதற்கு மேலே ட்ரிம் செய்யப்பட்டு குட்டியாக வளர்ந்து இருந்த மீசை என ஒவ்வொன்றையும் அருகில் இருந்து ரசித்துக் கொண்டு இருந்தவள்.

“முட்டாள் என்ன இப்படி ஓப்பனா அவனை சைட் அடிச்சிட்டு இருக்க… அவன் உன்னை பத்தி என்ன நினைப்பான்” என்று அவள் மனம் அவளை உளுக்கியது

அடுத்த கணம் அவள் பெஞ்சை விட்டு எழுந்து “சரி நான் கிளம்புறேன்” என்றவள்   அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அங்கிருந்து செல்லப் போக.

” நாளை நடக்கப்போற இன்டர்வியூல நீ பாஸ் ஆயிடுவேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? ” எனக் கேட்டான்

அந்தக் கேள்வியில் நின்று திரும்பி அவனை பார்த்து “கண்டிப்பா நான் பாஸ் ஆயிடுவேன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. இந்த வேலைக்காக நான் தவம்  இருக்கேன். அதனால கண்டிப்பா சில்வர் லைன் ஸ்டூடியோவில் எனக்கான ஒரு இடத்தை நான் கண்டிப்பா  தக்க வச்சுக்க என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்வேன்” என்றாள் நம்பிக்கையாக.

“இவனும் என்னைப்போல அங்கே இன்டர்வியூவுக்கு வந்திருக்கனும். அதனால தான் நான் இந்த இன்டெர்வியூல பாஸ் ஆகிடுவேனான்னு கேக்குறான். நான் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கேன்னு  தெறிஞ்சுக்க இவன் என்னிடம் பேச்சு கொடுக்கிறானோ”   என்று காந்தளுக்கு தோன்றியது.

 அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தில் விட்டு காந்தள்  செல்லப் போக

 “நாளைக்கு நடக்க இருக்கிற இன்டர்வியூக்கு இதே போல ட்ரஸை தான் நீ  போட்டுட்டு போகப் போறியா?” என்று அடுத்த கேள்வியை கேட்டு அவளை அங்கிருந்து நகர்விடாமல் செய்தான்.

அவனை புருவம் சுருங்க திரும்பி பார்த்த காந்தள். குனிந்து தான் புதியதாக வாங்கி இருந்த ஆடையை பார்த்தவள்.

“இதுக்கு என்ன நல்லாத் தானே இருக்கு” என்றாள்.

“ம்ம்ம்… மோசம் இல்லை உனக்கு இது அழகாத்தான் இருக்கு” என்றவன் அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு

 “ஆனால் நீ போக போற இன்டர்வியூக்கு இந்த மாதிரியான டிரஸ் போட்டுட்டு போனா சரி வராதுனு எனக்கு தோணுது” என்றான்.

அவள் எதுவும் பேசவில்லை அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தால்..

 “எங்கயும் ட்ரெஸ்ஸ பார்த்து ஆளை வேலைக்கு எடுக்குறாங்களா? என்ன?.  எனக்கு அப்படி எதுவும் தெரியலையே “ என்று அவனை நக்கலாக பார்த்தவள். 

“திறமை தான் அங்கே முதலில் பேசப்படும் அதன் பிறகு தான் மற்றதெல்லாம்” என்றாள்.

 அவள் பதிலில் ஆச்சரியமானவன் சிரித்துக் கொண்டே   தான் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து எழுந்து அவள் அருகில் நெருங்கி வந்தான்.

 அவன் திடீரென  தன் அருகில் நெருங்கி வந்து நிற்கவும் பதட்டமானது காந்தளுக்கு. இரண்டு அடி அவள் பின்னோக்கி  தன்னிச்சையாக நகர…

அதைப் பார்த்து சிரித்தவன் அவள் அருகில் நெருங்கி செல்ல படப்படுத்த விழிகளோடு முகத்தை நிமிர்த்தி தன்னைவிட அதிக உயரமாக இருந்தவனை ஆச்சரியமாக  பார்த்தாள்.

 ” இதை வாங்கிக்கோ” என்று அவன் சொல்ல அவள் பார்வை தனக்கு முன்னால் அவன் நீட்டிய கையை குனிந்து பார்த்தது.

 அவன் கையில் பணக்கற்றைகள் இருந்தது. இதைப் பார்த்ததும் அவள் கண்கள் அகல விரிந்தது அதே அதிர்ச்சியோடு நிமிர்ந்து அவனை பார்த்து “என்ன இது?” என்றாள் 

அவன் அதற்கு பதில் கூறாமல் “நாளைக்கு நடக்க இருக்கிற இன்டர்வியூவுக்கு நல்ல ட்ரெஸ்ஸா வாங்கி போட்டுக்கோ.. பிடி” என்று அவள் கையில் அந்த பணக்கட்டுகளை வலுக்கட்டாயமாக திணித்தான்.

 காந்தளின் கண்கள் அவன் செயலில் மேலும் அகல விரிந்தது. 

“எனக்கு எதுக்கு இதெல்லாம். வேண்டாம்…” என்று மறுப்பாக தலையாட்டியவள். “தவிர நீங்க யாரு எனக்கு இதையெல்லாம் செய்றதுக்கு” என்று அவன் கொடுத்த பணத்தை அவன் கையிலே தினித்து விட்டு திரும்பி செல்ல போனாள்.

 அவளை அங்கிருந்து செல்ல விடாமல் அவன் வலிய கரம் காந்தளின் கையை பிடித்து தன் பக்கம் திருப்பியது. அவள் கேள்வியாக நிமிர்ந்து தனக்கு எதிரே அவளை மயக்கும் விதமாக புன்னகைத்தபடி நின்றிருந்தவனை பார்த்தாள்.

அந்த புன்னகையை பார்க்கையில் அவள் தன்னையும் சுற்றத்தையும் மறப்பதை உணர்கிறாள். ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவள் போராடவில்லை அவளையும் மீறி அவன் புன்னகையையும் அவன் அழகிய முகத்தையும் ரசித்துக்கொண்டு அங்கே நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் காந்தள்.

 அதை அவனும் கவனிக்க தவறவில்லை. இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் தன் கையில் இருந்து பணத்தை அவள் கையில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு “நல்ல உடையை வாங்கி போட்டுட்டு நாளைக்கு இன்டர்வியூவுக்கு செல்” என்றான்.

 அவன் பேச்சிலிருந்து சுயம் வந்தவள் தன் உணர்வுகளிலிருந்து வெளியே வந்து தன் கையில் இருந்த பணத்தை அவனிடம் காட்டி 

“இது எனக்கு சொந்தமானது இல்லயே.. நீங்க யார் எனக்கு இதையெல்லாம் செய்ய… தவிர நான் யாரிடமும் வேலை செய்யாமல் இலவசமாக வரும் பணத்தை வாங்க மாட்டேன்” என்றாள் தீர்க்கமாக.

 “அப்படியா!!! அப்போ எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு இந்த பணத்தை நீ வச்சுக்கோ. உன் முத்தத்துக்கான விலையா நான் இந்த பணத்தை உனக்கு கொடுக்கிறேன்” என்றான்.

 அவன் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் அதிர்ச்சியில் அவனைப் பார்த்து “என்ன!!” என்றாள்.

 அடுத்து அவளிடம் விளக்கம் கேட்காமல் இடையில் தன்னுடைய இடக்கரத்தை நுழைத்து அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன். அவள் உயரத்திற்கு அவன் குனிந்து வராமல் தன் உயரத்திற்கு அவள் இடையை பிடித்து காந்தளை மேலே தூக்கினான்.

 காந்தள் இன்னமும்  முன்பின் தெரியாத ஒருவன் தன்னிடம் முத்தம் கேட்டதை நினைத்து  அதில் இருந்து   மீண்டு வராமல் அதிர்ச்சியிலேயே இருக்க… அவன் தன்னை தூக்கியது கூட அவளால் உணர முடியவில்லை.

 அவளை தன் உயரத்திற்கு ஒற்றை கையால் தூக்கி தன் உடலோடு அவன் உடல் அழுந்த பிடித்துக் கொண்டவன். மற்றொரு கையால் அவள் முகத்தை பிடித்து குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

“ ஐயோ காந்தல் என்னடி அவன் முத்தம் கொடுத்துட்டு இருக்கான் நீ அதை தடுக்காம இப்படி அவன அதிசயமா பார்த்துட்டு இருக்க” என்று மனசாட்சி அவளை சுயநினைவுக்கு கொண்டு வர முயல 

 ஆனால் அவனோ அவளை மிக சாதாரணமாக பார்த்தபடி அவள் இதழில் முத்தமிட்டுக் கொண்டு இருந்தான்.

 அவன் மார்போடு உரசி கொண்டிருந்த தன் உடலில் அவன் உடல் சூடு தான் அணிந்திருந்த ஆடையை தாண்டி அவள் உடலுக்குள் ஊடுருவி காந்தளை ஏதோ செய்தது.

 அவள் உதடுகளை பிரிக்காமல் இன்னமும் இறுக்கமாக வைத்திருக்க… அவள் மொத்த உதடுகளையும் தன் வாய்க்குள் இருந்து விடுவித்தவன் காந்தளின் கீழ் உதட்டை.. தன் பற்களால் லேசாக கடித்து வெளியே இழுக்க… அதில் உணர்ச்சி பெருக் கெடுத்தவளின் உதடு தானாக பிரிந்து கொண்டது.

  இதைத் தான் எதிர்பார்த்திருந்தவன் போல அவள் கீழ் இதழை விடுவித்தவன் காந்தளின் மென்மையான மொத்த உதடுகளையும் அவன் தடித்த உதட்டிற்குள் சிறை செய்தவன் அவள் உதட்டின் பிளவிற்குள் தன் தடித்த நாக்கை உள்ளே கொண்டு சென்றான்.

அவன் சூடான நாக்கு அவள் வாய்க்குள் வித்தை காட்டி அவள் நாக்கை வருடிக்கொடுத்தது.

அதில் தன்னையும் அறியாமல் அவள் நாக்கும் அவனுடன் இசைந்து போக… அவள் நாவை வெளியே இழுத்தவன் தன் உதடு கொண்டு அதை முழுவதுமாக ஸ்பரிசித்தான்.

காந்தள் உதடு அவன் தந்த முத்தத்தில் கிரங்கிப்போனது. அவள் உதடு மட்டும் இல்லை அவள் மனதும் தான்.

அவளை முத்தமிட்டபடி மெல்ல கீழே இறக்கி விட்டவன் அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி தீவிரமாக அதே சமையம் மென்மையாக அவள் இதழ்களை கையாண்டு கொண்டு இருந்தான்.

அவள் உடல் அந்தரத்தில் பரப்பது போல… காற்றில் மிதப்பது போல தோன்றியது . கால்கள் தரையில் நிற்க முடியாமல் தள்ளாடுவதை, அது வழுவிலந்து போவதை உணர்ந்தாள்.

அவள் நிலையை அறிந்து ரசித்தவன் மெல்ல காந்தள் உதட்டில் இருந்து தன் உதட்டை பிரித்தவன். “உன் முத்தத்தை நான் வாங்கிட் டேன். இனி இது உன்னுடைய பணம். இதை நீயே வெச்சுக்கோ…” என்றவன் அவளை விட்டு பிரிந்து அங்கிருந்து கிளம்பினான்.

இங்கே என்ன நடந்தது என்று இன்னமும் நம்ப முடியாமல் காந்தள் தனக்கு முதுகு காட்டி செல்பவனை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.

அவனை அழைக்காமல் அவன் பின் ஓடி சென்று தன் கையில் இருந்த அந்த பண கற்றைகளை அவனிடம் கொடுக்காமல் அப்படியே நின்று இருந்தாள்.

தன் முத்தத்தை விலைக்கு வாங்கிவிட்டனா? தன் முத்தம் இவ்வளவு விலை உயர்ந்தத்தா!! என்று ஆச்சர்யமாக தன் கையில் இருந்த பணத்தை பார்த்துக்கொண்டு நின்று இருந்தவளுக்கு இப்போது தான் சுய நினைவு வந்திருக்கும் போல..

அவன் சென்ற திசையை இப்போது தான் கவனித்தவள் போல… அவனை நோக்கி பின்னால் ஓடினாள். ஆனால் அதற்குள் அவன் அங்கிருந்து சென்று மறைந்துவிட்டான்.

இத்தனை பணத்தை தன் வாழ்நாளில்   ஒன்றாக பார்த்தது கிடையாது . ஆனால் இதை தன் ஒற்றை முத்தத்திற்கு ஈடாக கொடுத்துவிட்டு செல்லும் அவன் யார்? என்று கூட தெரிந்துகொள்ள வில்லையே… அவன் பெயர் என்னவென்று கூட தெரிந்துகொள்ள  முடியாமல் போனதே என்று கையில் பணத்தை வைத்துக்கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.