EPISODE -7
காந்தள் முத்தத்திற்கு விலை பேசி அவள் கையில் கற்றை பணத்தை கொடுத்து விட்டு சென்றவனை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அதே யோசனையோடு கையில் இருந்த பணத்தை ஹேண்ட் பேக்கில் வைத்தவள். தான் இருந்த ஷாப்பிங் மாலை ஒரு முறை அண்ணாந்து பார்த்தாள்.
இந்த பணத்தை எப்படியாவது அவனிடம் சேர்த்து விட வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆனால் எப்படி அவனைப் பற்றித் தான் எந்த விபரமும் தெரியாது அவன் பெயரைக் கூட தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேனே என்று தன்னையே கடிந்து கொண்டாள் .
அவன் தன் ஆடையை பற்றி விமர்சித்ததை யோசித்தாள் அங்கே இருந்த ஆள் உயர கண்ணாடி முன்பு வந்து நின்று தன்னை ஒரு முறை பார்த்தாள் . அவள் இன்று அணிந்திருந்த ஆடை அவ்வளவு மோசம் ஒன்றும் இல்லை நன்றாகத் தான் இருந்தது.
ஆனால் சில்வர் லைன் ஸ்டுடியோவில் வேலைக்கு செல்வது என்பது பெரிய விஷயம் தான். அந்த கம்பெனியின் தரம் அவ்வளவு உயர்வானது அப்போது அங்கே இண்டர்வியூக்கு செல்லும் தானும் ஓரளவிற்கு மதிப்புடன் காணப்பட வேண்டுமா? என்று அவளுக்குள்ளேயே கேள்வி எழுந்தது .
அவன் கொடுத்த பணத்தில் இருந்து தனக்கு ஓரளவுக்கு நியாயமான விலையில் நாளைக்கு இன்டர்வியூவிற்கு அணிந்து கொள்ள ஆடையும் , காலணிகளும் வாங்கிக் கொள்ள வேண்டும் என யோசித்தாள் .
அதே முடிவோடு அந்த மாலிற்குள் ஆடை எடுப்பதற்கான கடையை தேடிக் கொண்டு சென்றாள் .
அவள் யோசனையோடு கண்ணாடி முன்பு தன்னை சுற்றும் முற்றும் பார்த்ததையும், பிறகு ஏதோ முடிவு எடுத்துவிட்டு செல்வதையும் தூரத்தில் இருந்து அவளுக்கு பணமும், முத்தமும் கொடுத்தவன் மெல்ல புன்னகைத்தவன் அவளுக்கு தெரியாமல் பின்னால் சென்றான்
அந்த மாலில் இருந்த ஒரு கடையை தேர்வு செய்து அதனுள் சென்றவள். நீண்ட நேர தேடலுக்குப் பின்பு ஒரு ஆடையை எடுத்து கண்ணாடியின் முன்பு தன் மேல் வைத்துப் பார்த்தாள். அது தனக்கு நன்றாக இருப்பதை பார்த்து திருப்தியாக உணர்ந்தவள் .
அங்கே வேலை பார்க்கும் சேல்ஸ் கேர்ளிடம் அந்த ஆடையின் விலையை கேட்டாள் . அவள் எடுத்திருந்தது ப்ளூ நிறத்தில் மெல்லிய துணியைக் கொண்ட டாப்பும், கருப்பு நிறத்தில் முட்டிக்கு கீழே வரை உள்ள ஒரு ஸ்கர்ட்டும் . அவள் காட்டிய உடையின் விலையை அந்த பெண் சொன்னதும் அதிர்ந்து போனாள் காந்தள்.
இந்த உடைக்கு இவ்வளவு பணமா!! என்று அதை அவரிடம் கேட்கவும் கூச்சமாக இருக்க. அந்த உடையை கையில் வைத்தபடி கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும் அந்த உடையோடு பொருந்தி இருப்பதையும் பார்த்து பெருமூச்சு விட்டாள் .
ஹேண்ட் பேக்கில் இருக்கும் மொத்த பணத்திற்கும் அவளால் ஒரு வருடத்திற்கான ஆடையை கூட அதுவும் மிக விலை உயர்ந்த ஆடையை கூட வாங்க முடியும்.
ஆனால் சிறுவயதிலிருந்தே கஷ்டத்தில் வளர்ந்ததால் பணத்தின் அருமை அவளுக்கு தெரியும் அதை எப்படி கையாள்வது என்பது ஓரளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறாள் .
தவிர தான் அணியும் ஆடைகளுக்கு இவ்வளவு பணத்தை செலவழிப்பதில் அவளுக்கு துணியும் விருப்பமில்லை. ஒரு முடிவோடு அந்த துணியை வேண்டாம் என்று சொல்வதற்காக அந்த பெண்ணை நோக்கி திரும்ப…
அப்போது யாரிடமோ போன் பேசிவிட்டு வைத்த அந்தப் பெண் காந்தளை பார்த்து “மேடம் நீங்க எடுத்திருக்கிற இந்த டிரஸ்ஸுக்கு 80% டிஸ்கவுண்ட் இருக்கு. நீங்க 20 சதவீத பணத்தை மட்டும் கொடுத்து இந்த ஆடையை எடுத்துக் கொண்டால் போதும்” என்றார்
அதைக் கேட்டதும் காந்தளுக்கு ஆச்சரியமாக இருந்தது இவ்வளவு விலை உயர்ந்த துணியை 80% க்கு குறைத்துக் கொடுக்கிறார்களா? தன்னால் இதை நம்பவே முடியவில்லை என்று ஆச்சரியமாக அந்த பெண்ணிடம் அதே கேள்வியை கேட்டாள்.
“இந்த ஆஃபர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் இருக்கும். அதுவும் எங்க பாஸ் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான் இந்த ஆஃபரை எடுத்துக்க சொல்லி இருக்காரு. நீங்க எந்த உடை எடுத்துட்டாலும் மிக குறைவாகத்தான் எல்லா ஆடையும் விற்பனைக்கு கிடைக்கும்” என்றார் அந்த பெண்
ஆடை எடுக்க வந்த சிலர் அந்தப் பெண் பேசியதை கேட்டுவிட்டு அப்போது தங்களுக்கும் இதே போல டிஸ்கவுண்ட் இருக்கிறதா? என்று கேட்டனர் .
“இல்ல மேடம் இவங்களுக்கு மட்டும் தான் இன்னைக்கு இந்த ஆஃபர் அப்ளை ஆகுது” என்றாள் அந்த சேல்ஸ் கேர்ள் .
“அது எப்படி இந்த கடைக்கு நாங்களும் தான் துணி எடுக்க வந்திருக்கோம். அதுவும் இல்லாம இவளை பாத்தாள் இவ்வளவு காசு கொடுத்து வாங்குற அளவுக்கு வசதி இல்லாத மாதிரி தான் தெரியுது. அப்படி இருக்கிறப்போ அவளுக்கு மட்டும் எதுக்காக இவ்வளவு டிஸ்கவுன்ட் கொடுக்குறீங்க. ஏன் நாங்க உங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர் தானே எங்களுக்கு கொடுக்க முடியாதா?” என ஒரு பெண் கேட்க .
“மேடம் இன்னிக்கு எங்க கடைக்கு வர நூறாவது கஸ்டமருக்கு தான் இந்த ஆஃபர் அப்ளை ஆகும்னு எங்க பாஸ் சொல்லி இருக்கார். நீங்க இவங்களுக்கு முன்னாடியே கடைக்கு வந்துட்டீங்க” என்று காந்தளை பார்த்து சொன்ன அந்த சேல்ஸ் கேர்ள்.
“இவங்கதான் இன்றைக்கு எங்க கடையோட நூறாவது கஸ்டமர். அதனால அவங்களுக்கு தான் இந்த ஆஃபர் அப்ளை ஆகும்” என்ற அந்த சேல்ஸ் கேர்ள் காந்தளிடம் திரும்பி “மேடம் உங்களுக்கு வேற எதுவும் டிரஸ் வேணும்னாலும் நீங்க எடுத்துக்கோங்க எல்லாமே உங்களுக்காக மட்டும் 80% டிஸ்கவுண்ட்ல கிடைக்கும்” என்றாள் பணிவாக
காந்தளுக்கு அந்த பெண் பேசியதெல்லாம் கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தான் என்ன இன்று அவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியா! தனக்கு மட்டும் இவ்வளவு மலிவான விலையில் அதுவும் இவ்வளவு பெரிய கடையிலிருந்து ஆடை கிடைக்கிறதா? என்று யோசித்தவள்.
அந்த பெண்ணிடம் “இல்லை எனக்கு வேற எதுவும் வேண்டாம் இந்த ஒரு டிரஸ்க்கு மட்டும் பில் பண்ணிடுங்க” என்றாள் .
அந்த பெண் மீண்டும் காந்தளிடம் “இன்னைக்கு உங்களுக்கு ஆபர் நிறைய இருக்கு. வேற எதுவும் பாக்கறீங்களா?” என்று மீண்டும் கேட்டாள்.
நினைத்த ஆடையை எடுக்க தன்னிடம் பணம் அதிகம் இருந்தாலும் ஏற்கனவே வேறு ஒருவருடைய பணத்தில் தான் ஒரு ஆடை வாங்கியாகிற்று. மீண்டும் வாங்குவது பேராசை என்று நினைத்த காந்தள்.
” எனக்கு இந்த ஒரு டிரஸ் போதும் இதை மட்டும் பேக் செய்யுங்க” என்றாள்.
பேக் செய்த பின் பணத்தை கொடுத்துவிட்டு திருப்தியாக வெளியே வந்தவள் அடுத்து காலணிகள் வாங்க கடைக்கு செல்ல அங்கேயும் இதே தான் சொல்லப்பட்டது இன்று மிகவும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் ஆடையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள் .
அவள் வீட்டிற்கு வரும்போது மணி ஒன்பதை கடந்திருந்தது வந்ததும் முகத்தை கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தாள் .
சித்ராவும், பத்மாவும் காந்தளிடம் இன்று நடந்த இண்டர்வியூ எப்படி போனது என்று கேட்க அவள் நடந்த விபரங்களை எல்லாம் சொல்லி நாளை மறுபடியும் நேர்காணல் இருக்கிறது அதற்கு செல்ல வேண்டும் என்று அனைத்தையும் சொன்னாள்.
ஆனால் இன்று மாலில் சந்தித்தவனை பற்றியும், அவன் தந்த அழுத்தமான முத்தத்தை பற்றியும் எதுவும் சொல்வில்லை. இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்தாள் .
அறைக்குள் வந்ததும் கதவை சாற்றி விட்டு அதில் சாய்ந்து நின்றவள். இன்று நடந்ததை எல்லாம் அசை போட்டால் காலை இன்டர்வியூவில் நடந்ததை எல்லாம் அவளுக்கு பெரிதாக நினைவிற்கு வராமல் அவள் எண்ணம் முழுவதும் இன்று பார்த்த அந்த ஆறடி ஆணழகனை பற்றிய சிந்தனை தான் அவள் மூளைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது.
அவனுடைய நெருக்கம் அவனுடைய பர்பியும் ஸ்மெல். தன் உடலில் இன்னும் அடிப்பதையும், அவனுடைய உடல் சூடு தன் உடலில் இன்னும் படர்ந்து இருப்பதைப் போல உணர்ந்தாள் காந்தள்.
அதே யோசனையோடு போட்டு இருந்த சட்டையை கழட்டி முகத்தில் வைத்து கண்கள் மூடி முகர்ந்து பார்த்தாள் .
லேசாக அவள் முகத்தில் புன்னகை அரும்பியது அவன் முத்தமிட்ட தன் உதடுகளை தன்னிச்சையாக அவள் விரல்கள் தொட்டு தீண்ட … அதில் காந்தளின் உடல் சில்லிட்டது .
அதே சந்தோஷத்தோடு வந்தவள் உடை கூட மாற்றிக் கொள்ளாமல் மெத்தையில் சரிந்தாள். தனக்காக இவ்வளவு பணத்தை எதற்கு அவன் கொடுத்துவிட்டு போக வேண்டும் என்று யோசித்தவள். ஆடை எடுத்துட்டு போக மீதி பணத்தை ஏற்கனவே பேங்கில் தன் அக்கவுண்டில் டெபாசிட் செய்து வந்திருந்தாள்.
அவனை எப்போது எங்கே பார்த்தாலும் முதலில் அவனுடைய அக்கௌன்ட் நம்பரை வாங்கி அந்த பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவனை பற்றிய யோசனையை தள்ளி வைத்துவிட்டு. அடுத்த நாள் நடக்கவிருக்கும் நேர்காணலுக்கு எந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்பார்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்று தனக்குத்தானே யோசித்துக் கொண்டவள் சில தகவல்களை ஆன்லைனில் தேடி படித்து நாளைக்கான இன்டர்வியூவிற்கு தயாரானால் நீண்ட நேரம் கழித்து ஒரு தூங்கச் சென்றாள்.
நாளை மதியம் தான் இன்டர்வியூ என்பதால் காலை நன்றாக தூங்கி எழுந்து இன்டர்வியூக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு இவ்வளவு நேரம் படித்து முடித்து இருந்தாள்
காலை எழுந்ததும் சித்ராவும் பத்மாவும் பரபரப்பாக காந்தலுக்கு சீக்கிரமாக சாப்பிட்டு செல்வது போல உணவை சமைத்து வைத்திருந்தனர் . காந்தலும் குளித்துவிட்டு அவள் வாங்கிய புது ஆடையை அணிந்து கொண்டு வெளியே வர…
சித்ராவும் பத்மாவும் ஆச்சரியமாக காந்தலை பார்த்தார்கள் அவள் வாங்கி இருந்த அந்த உடை அவளுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருந்தது மிகவும் அழகாகவும். அதே சமயம் ஆடம்பரமாகவும் இருந்தது.
“இந்த டிரஸ் தான் நேத்து எடுத்துட்டு வந்தேன்னு சொன்னியா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ” என்று சித்ரா கேட்டார்.
நேற்று கடையில் தனக்கு ஆஃபர் கிடைத்ததையும் அதைப்பற்றியும் காந்தள் சந்தோஷமாக சொல்ல ..
இதை நீயே முன்னாடியே என்கிட்ட சொல்லி இருந்தா நான் உனக்கு கொஞ்சம் பணம் அக்கவுண்ட்ல போட்டு விட்டு இருப்பேனே. இன்னும் ரெண்டு மூணு டிரெஸ் நீ எடுத்து இருக்கலாம் இல்லையா நாளைக்கு வேலைக்கு போகும் போது நல்ல உடையா போட்டுட்டு போனா தானே நல்லா இருக்கும் என்றார் பத்மா .
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையும் இல்ல வேணும்னா மறுபடியும் நம்ம எடுத்துக்கலாம் என்றவள் சரி வாங்க சீக்கிரம் சாப்பிடலாம் எனக்கு டைம் ஆகுது இப்போ கிளம்பினாள் தான் மதியம் நான் இன்டர்வியூக்கு போக முடியும் என்றாள் .
சாப்பிட்டு முடித்துவிட்டு சித்ரா பத்மாவிடம் விடை பெற்றவள் சரியாக கிளம்பி சில்வர் லிங்க் ஸ்டுடியோவிற்கு குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தாள்.
நேற்று போலவே வானுயர்ந்த அதே கட்டிடத்திற்கு முன்பு நின்று அந்த அண்ணாந்து பார்த்தாள். கண்கள் மூடி சீரான மூச்சுக்காற்று வரும் வரை பொறுமையாக அங்கேயே நின்றிருந்தவள் பிறகு மிகவும் நம்பிக்கையோடு சில்வர் லைன் ஸ்டூடியோவில் காலடி எடுத்து வைத்தாள் .
நேற்றை போலவே இன்னும் நிறைய பேர் இன்று நடக்க இருக்கும் நேர்காணலுக்காக காத்திருந்தனர் . ஒவ்வொருவராக அழைத்து இன்டர்வியூ எடுக்கப்பட்டது அவளுடைய முறைக்காக காந்தள் பொறுமையாக காத்திருந்தாள்.
காந்தள் அணிந்திருந்த அட்டையில் அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த எண்ணை கூறி அவளை உள்ளே கூப்பிட்டனர் .
காந்தளை அழைத்ததும் எழுந்து உள்ளே சென்றாள் அவளை போலவே அவளுடன் போட்டி போடுவதற்காக இன்னும் இருவரை அந்த இன்டர்வியூ ஹாலுக்குள் அழைத்திருந்தனர்.
முதலில் தன் அருகில் இருந்தவர்களை பார்த்தவள் தன்னை தேர்வு செய்யப் போகும் நபரை பார்ப்பதற்காக தனக்கு எதிரே கவனித்தாள்.
40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவளுக்கு இடது புறமாகவும் 50 வயதை தாண்டிய ஒரு பெரியவர் அவளுக்கு வலது புறமாகவும் அமர்ந்திருக்க அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து இருந்தவனை பார்த்து அதிர்ந்து போனாள்
இவனா!! இவன் எப்படி இங்க… அதுவும் இன்டர்வியூ செய்வதற்காக இங்கே அமர்ந்திருக்கிறான் என்று காந்தள் புரியாமல் தனக்கு எதிரே அமர்ந்து இருந்தவனை பார்த்தாள்
