தப்பு 26
முதல் நாள் யுகேந்திரனின் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள் ஆராதனா . ஒருவித பதற்றம் அவளுக்கு. இத்தனை நாள் ஏதாவது சொல்லி இங்கே வராமல் தவிர்த்தவளுக்கு, இன்று யுகேந்திரனின் கட்டளையை மறுக்க முடியவில்லை, கார்த்திகேயனுடன் வந்திறங்கி ஆபிஸிற்குள் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி அவர் பின்னே நடந்து சென்றாள்.
யுகேனின் ஆபீஸ் ஸ்டாப்கள் சற்று சோர்ந்த நடையும், சலித்துக்கொள்ளும் முகமுமாக உள்ளே வந்த ஆராவை யார் இவள் ? என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருக்க..
“அங்கிள் ஒரு வழியா இந்த அராத்துக்காரியை கொண்டு வந்து என் தலையில கட்டிட்டிங்க.. ” என்று அவர் முன் சிரித்தபடி வந்து நின்றான் பாஸ்கர், யுகேனின் பிஏ , கல்லூரி நண்பன்.
“ஆமாப்பா.. இவ படிச்சு முடிஞ்சு இங்க வந்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது. வந்ததுல இருந்து எங்கையும் போகாம.. வீட்டுலையே .. ம்ஹும்.. இவ ரூம்க்குள்ளையே தான் இருக்கா. எங்கையும் போகல.. யார்கிட்டேயும் பேசல.. வீட்ல மட்டும் தான் எல்லாரையும் அதட்டி மிரட்டுறது. மத்த நேரம் எல்லாம் இவ என்ன பண்றா? ஏது பண்றா எதுவும் புரியல. ஒரு வழியா யுகேன் இன்னிக்கு இவளை ஆபீஸ் வர சொல்லிட்டான். நானும் கூட்டி வந்துட்டேன். இனி இவ உன் கையில்.. ” என்றவர்
தனக்குப் பின்னால் நின்றிருந்தவளைப் பார்த்து சிரித்தவர் “பாரு சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகி தொப்பை எல்லாம் போட்டுட்டா.. இங்கையாச்சும் கொஞ்சம் ஓடியாடி வேலை செய்யட்டும் ” என்றவர் அங்கிருந்து சென்றுவிட..
“வாங்க மேடம் , எப்படி இருக்கீங்க?” என்று அவளை கிண்டல் தொனியில் வரவேற்றான் பாஸ்கர்.
“டேய் யாரை டா அராத்துன்னு சொன்ன.. ” என்று எட்டி அவன் சட்டைக் காலரை பிடித்து தன் பக்கம் இழுத்தவள் அவன் கழுத்தில் தன் கையைப் போட்டு கழுத்தை நெறிப்பது போல கை வளைவிற்குள் பிடித்துக்கொண்டாள்.
அதை பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்து போக..
“ஏய்! லூசு.. வலிக்குது டி.. விடு ” என்று அவள் கையை தன்னிடம் இருந்து பிரித்து விட்ட பாஸ்கர் “இது ஆபீஸ் கொஞ்சமாச்சும் பொண்ணு மாதிரி நடந்துக்க.. ” என்றான்.
“ம்ம்.. நடந்துக்கிறேன் .. நடத்துகிறேன். ” என்றவள் அப்படியே உடலை லேசாக குறுக்கி மெல்ல எட்டுக்கள் வைத்து நடந்தவள் “இப்படி நடந்தா பொண்ணு மாதிரி இருக்கேனா?”என்றாள்.
“சுத்தம்… ” என்று தலையில் அடித்துக்கொண்டவன் “உள்ள வா.. ” என்று முன்னே சென்றான்.
அவளும் அவன் பின்னே பாஸ்கரின் முடியை கலைத்துவிட்டு விளையாடியபடி சென்றாள்.
இந்த காட்சியைக் கண்ட அனைவரும் “கார்த்திகேயன் சார் பொண்ணு தானே அது.. பாஸ்கர் சார் கூட இவ்ளோ கிலோசா இருக்காங்க.. ” என்று சிலர் பேசிக்கொள்ள..
“அவங்களுக்குள்ள எதுவும் இருக்குமோ.. “என்று இன்னோரு கேங் பேசிக்கொண்டது.
“ச்சே.. அப்படி எல்லாம் இருக்காது. அவங்க பேசிப்பழகுறத்தைப் பார்த்தா ரெண்டு பேருக்கும் ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிருக்கும். நம்ம MD யோட பிரென்ட் தானே இவர் ” என்று சிலர் பேசிக்கொண்டனர்.
இதை அறியாத இருவரும் எப்போதும் போல ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
“சரி வேலையை ஸ்டார்ட் பண்ணிடலாமா?”என்றான்.
“என்ன டா இப்போ தான் ஆபீஸ் வந்திருக்கேன். என்னைக் கூட்டிப்போய் ஆஃபீஸ சுத்தி காட்டல.. ஸ்டாப்ஸ் யாருக்கும் இன்ட்ரோ கொடுக்கல.. வந்ததும் யுகேன் மாமா மாதிரி வேலை செய்ய சொல்ற.. “என்று அவன் சேரில் சென்று அமர்ந்தவள் அங்கே இருந்த பொருட்களை எடுத்து ஆராய்ந்தபடி பேசினாள்.
“ஆமா மேடம் தான் இந்த கம்பெனியோட முதலாளி , இவங்க வேளைக்கு வந்ததை எல்லாருக்கும் கூப்டு இன்ட்ரோ கொடுக்கிறதுக்கு.. ” என்றவன் “அடிச்சி.. நீயே இப்போதான் வேலை செய்ய வந்திருக்க. வேணும்னா பிரேக்ல போய் நீயே எல்லாருக்கும் உன்னை இன்ட்ரோ கொடுத்துக்க.. இப்போ வா வேலை பாக்கலாம்”என்று அவள் காதைப் பிடித்து தனக்கு பக்கத்திலேயே அவளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட டேபிளில் கொண்டு வந்து அமர வைத்தான்.
“ஷ் .. ஆஹ் .. டேய் வலிக்குது ” என்று கையை தட்டி விட்டவள் “ம்ம்.. இதுவும் நல்லா தான் இருக்கு.. ” என்று சுழல் நாற்காலியில் அமர்ந்து இப்படியும் , அப்படியும் ஆட்டிப் பார்த்தாள்.
அவள் தலையில் அடித்த பாஸ்கர். “விளையாடியது போதும் பீ சீரியஸ் ” என்றவன் “இங்க பாரு.. இந்த பைல்ல இருக்கறதை எல்லாம் முதல்ல எனக்கு ஒரு டாக்குமெண்ட்டா டைப் பண்ணி கொடு.. ” என்று ஒரு பெரிய நீல நிற பைலை அவள் முன் வைத்தான்.
“டேய் என்ன டா இவ்ளோ பெருசா இருக்கு. இது அத்தனையும் நான் டைப் பண்ணனுமா?” என்றாள் ஆரா.
“ம்ம்ம், ஆமா பேசிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாத. உன் மாமா இருக்கானே திடீர்னு போன் போட்டு ஏதாவது டீடெயில்ஸ் கேப்பான்.. அதை அனுப்பல அப்பறோம் வந்து லேபிட் , ரைட் வாங்கிருவான். சீக்கிரம்.. “என்று அவளை வேலை செய்ய சொல்லிவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தவன் வேலை பார்க்க ஆரம்பிக்க..
முதலில் சலிப்போடு பைலை திறந்தவள் மெல்ல வேலையை ஆரம்பித்து அப்டியே கொஞ்சம் கொஞ்சமாக வேளையில் மூழ்க ஆரம்பித்து இருந்தாள்.
சற்று நேரத்தில் பாஸ்கரின் மொபைல் அலறியது. எடுத்து காதில் வைத்தவன் “சொல்லு யுகேன் ” என்றான்.
“ஆரா என்ன பண்றா? வேலை எதுவும் கொடுத்தியா அவளுக்கு” என்றான்.
“ம்ம்.. கொடுத்திருக்கேன். ஒரு பெரிய பைலை கொடுத்து டைப் பண்ண சொல்லிருக்கேன்” என்று தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவளை பார்த்தபடி சொன்னான்.
“அதிகம் ஒர்க் கொடுக்க வேணாம் அவளுக்கு. உனக்கு ஒரு ஹெல்ப்புக்கு தான் அனுப்பிருக்கேன். அவளும் வீட்டுக்குள்ளையே இருக்கா எங்கையும் போறதில்லேன்னு அத்தை என்கிட்டே புலம்பினாங்க. அதான் அனுப்பிருக்கேன் ” என்றான்.
“ம்ம்.. சரி டா. “என்றான் பாஸ்கர்.
“சரி நீ எனக்கு மெயில் பண்ணினதை எல்லாம் நான் படிச்சேன். உன்கிட்டே டீடைலா பேசணுமே.. ” என்றான்.
“ஈவினிங் மீட் பண்ணலாமா? என்னோட முதலாளி எனக்கு நிறைய வேலை கொடுத்திருக்கார். அதை எல்லாம் நான் முடிக்கணும். இல்லேன்னா எனக்கு செம்ம டோஸ் விழும் “என்றான்.
“சரி டா.. முடிச்சுட்டே வா.. எங்க மீட் பண்ணலாம்னு நான் மெசேஜ் அனுப்பறேன் . வந்திரு ” என்று சிரித்துகொண்டே போனை வைத்தான் யுகேந்திரன்
மதியம் கடந்திருக்கும் “ஆரா லஞ்ச் டைம் ஆகிருச்சு. நீ வீட்டுக்குப் போறியா? இல்ல இங்கையே எதுவும் ஆர்டர் பண்ணி சாப்பிடறியா?” என்று தன் கம்ப்யூட்டரில் வேலை செய்தபடி கேட்டான்.
ஆராவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே “ஆரா உன்னை தான் காதுல விழலையா?” என்று அவள் பக்கம் திரும்பியவன் முகம் கோபத்தில் சிவந்து போனது.
வேகமாக எழுந்து அவள் அருகே வந்தான் .
அவளோ அவன் வந்தது கூடத் தெரியாமல் கையில் மொபைலை வைத்து அத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஏய் லூசு, நான் பேசுறது கூட கேட்காம அப்படி என்ன டி போனை பாத்துட்டு இருக்க? ஆபீஸ் டைம்ல வேலை பாக்குறதை விட்டுட்டு எதுக்கு போனை நோண்டிட்டு இருக்க நீ.. ” என்று அவள் கையிலிருந்த போனை வெடுக்கென பிடிங்கிக் கொண்டான்.
அவனிடம் இருந்து போனை பறிப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க..
ஆனால் ஆராவோ அப்படியே அதிர்ந்த வண்ணம் அமர்ந்து இருந்தாள்.
“என்ன ஆச்சு இவளுக்கு போன்ல எதையும் பார்த்து பயந்துட்டாளா?” என்று தன் கையில் இருந்த அவள் போனைப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.
இங்கே பூவிழி அவள் அம்மாவுடன் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
“அம்மா உன்னை பார்க்காம எவ்ளோ நாள் அழுத்திருக்கேன் தெரியுமா? உனக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு நினைச்சு நினைச்சு கஷ்டப்பட்டிருக்கேன். நீ நல்லா இருக்கறதை பார்த்த அப்பறோம் தான் எனக்கு நிம்மதியா இருக்கு ” என்றாள்.
“என் விதி டி எல்லாமே.. நான் இப்படி எல்லாம் கிடந்தது கஷ்டப்படணும்னு எழுதிருக்கு . என்னோட சேர்ந்து நீயும் கஷ்டப்படுறதை தான் என்னால தாங்கிக்க முடியல.. ” என்றார் பூவிழியை நினைத்து கவலையாக.
“எனக்கு அந்த ஒரு பிரச்சனையும் இல்ல ம்மா.. அவர் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டார். ஆரம்பத்துல என்கிட்டே புடிக்காம தான் இருந்தார். ஆனா என்னனு தெரியல திடீர்னு என்கிட்டே நல்லா பேச ஆரம்பிச்சுட்டார். என்னை அவ்ளோ நல்லா கவனிச்சுக்கிட்டார் ” என்றாள்.
“பரவால்ல டி அந்த வகையில் சந்தோசம் தான். உன் புருஷனாவது உன்னை நல்லா பார்த்துகிறாரே.. அது போதும் ” என்று பெருமூச்சு விட்டார்.
“அம்மா நானும் உன்கிட்டே நிறைய முறை கேட்டுட்டேன். அப்பாவை பத்தி பேசினாலே உனக்கு கோபம் வருது. அவர் போட்டோவைக் கூட எனக்குக் காட்ட மாட்டேங்குற நீ.. ஏன்மா அப்பாமேல உனக்கு இவ்ளோ வெறுப்பு. அவர் யாரு? எங்க இருக்கார்? எதுவுமே சொல்லவே மாட்டேங்குற நீ.. “என்றாள்.
“ஏய் இப்போ எதுக்கு டி அந்த ஆளைப் பத்தி பேசிட்டு இருக்க. அதெல்லாம் முடிஞ்சு போன கதை, அதை பத்தி பேசக்கூடாதுனு உன்கிட்டே எத்தனை முறை சொல்லிருக்கேன் “என்று கோபம் போங்க பேசியவர் முகத்தை திருப்பிக்கொள்ள..
“அம்மா!.. அம்மா!.. இங்க பாரு.. “என்று அவர் முகத்தைப் பற்றி தன் பக்கம் திருப்பினாள்.
“இங்க பாரு டி. இன்னோரு தடவை அந்த ஆளைப் பத்தி என்கிட்டே கேட்டேன்னு வை . நான் இங்க இருந்து கிளம்பி எங்கையாச்சும் போயிருவேன். “என்று அவளை மிரட்ட..
“சரி நான் எதுவும் கேக்கல உன்கிட்டே SARIYAA” என்றவள் “இப்படி முகத்தை தூக்கி வெச்சுட்டு இருக்காத மா.. ” என்று அவர் மடியில் படுத்துக்கொண்டாள்.
“என் வாழ்க்கையும், உன் வாழ்க்கையும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே அந்த நாதாரி தான் ” என்றார்.
“என்னம்மா அப்பாவுக்கு முன்னையாச்சும் மரியாதை இருந்துச்சு. இப்போ சுத்தமா குறைஞ்சிருச்சே.. ” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பூவிழி.
அவள் தலையை வருடிவிட்டவர் “ஆமா அவன் செஞ்ச காரியத்துக்கு திட்டுறதோட விட்டேன்னு சந்தோசப்படு.. ” என்றவர் இன்னமும் கோபம் அடங்காமல் பொன்மொழிகளால் அச்சத்தை வழங்கத் துவங்க,
அவர் மடியில் படுத்திருந்த பூவிழி “ஐயோ! என்னம்மா இவ்ளோ கேவலமா பேசுற நீ.. இதை எல்லாம் என் குழந்தை கேட்டா அவனும் உன்னை மாதிரி கெட்டுப் போயிருவான்” என்று எழுந்து காதை பொத்திக்கொண்டாள்.
“கேட்கட்டும் டி.. அப்போ தான் அவனும் பொறந்து வந்து அந்த ஆளை என்ன சங்கத்தினு கேக்கணும் “என்றவர் மீண்டும் கெட்ட வார்ததைகளை சொல்லி அர்ச்சிக்க..
“அம்மா மெல்லப் பேசு.. ராஜேந்திரன் சார் நீ பேசுறதை எல்லாம் கேட்டுட்டு இருக்கப்போறாரு.. ” என்று அவர் வாயை தன் கரம் கொண்டு மூடினாள்.
“கேட்டா கேட்டுட்டு போகட்டும். அதுக்குன்னு நான் எதுவுமே பேசாம ஊமையாட்டம் இங்க இருக்கணுமா? அதெல்லாம் என்னால முடியாது “என்று அவர் தன் மனதில் இருந்த ஆத்திரத்தை வார்த்தைகளால் கொட்டித் தீர்க்க..
அதற்கு மேலும் அங்கு அவர் பேசும் பொன்மொழிகளை கேட்க முடியாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள் பூவிழி.
“இனி தெரியாம கூட அப்பாவைப் பத்தி அம்மாகிட்டே கேட்டுறவே கூடாது “என்று நினைத்துக்கொண்டவள் “உன் அப்பா ரொம்ப சமத்து டா குட்டி. என் அப்பா போல இல்ல. உன் அப்பா எவ்ளோ தங்கம் தெரியுமா அவரு.. உன் அம்மாவை எப்படி எல்லாம் பாத்துக்கிட்டார் தெரியுமா?” என்று தன் வயிற்றில் இருந்த பிள்ளையிடம் யுகேனை பற்றி பெருமை பேசிக்கொண்டு.. மேடிட்ட வயிற்றை தடவியபடி நடந்து சென்றாள்.
பாஸ்கரை பார்ப்பதற்காக கிளம்பிய யுகேந்திரன் பூவிழி என்ன செய்கிறாள் என்று பார்பதற்க்காக லேப்டாப்பை ஆன் செய்திருந்தவன் தன் அப்பாவை பற்றி அவள் பேசத்துவங்கியதும் அதை கேட்க ஆரம்பித்தவன் இப்பொது தன்னை பற்றி தன் பிள்ளையிடம் பெருமையடித்துக்கொண்டு சென்றவேளை ரசித்துக்கொண்டே கிளம்பியவன் சீக்கிரம் எல்லாமே வெளிய வரப்போகுது டி.. அமுக்காஞ்சி. இங்க இருக்க வேலையை எவ்ளோ சீக்கிரம் முடிக்கணுமோ அவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டு உன்னை பார்க்க வரேன் டி.. என்று சொல்லிக்கொண்டவன் மறக்காமல் லேப்டாப்பை ஷுடௌன் செய்து விட்டு தான் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
