News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

இது உங்களுக்குத் தேவையா?மூர்க்கன் 41

by Sinamika Writes
321 views
A+A-
Reset

மூர்க்கன் 41

விடியற்காலை இருக்கும் ரம்யா வந்த பஸ் அவர்கள் ஊரின் நிறுத்தத்தில் வந்து நிற்க.. தன் பேக்கை எடுத்தவள் கீழ் இரங்கப் போக..

“ரம்யா! அதிசயமா இருக்கு. ஊரு பக்கம் வந்திருக்க?” என்று ஒரு ஐம்பது வயதை ஒத்த பெண்மணி அவளிடம் விசாரிக்க..

“சும்மா வருவேனா இந்த பக்கம். எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருக்கு . அதான் ஒரு எட்டு வந்து கல்யாணத்தை பண்ணிட்டு போகலாம்னு வந்திருக்கேன் அம்முச்சி..” என்றாள்.

“என்ன டி இவ.. கல்யாணம் ஆகப்போறதை என்னவோ கடைவீதிக்கு வந்துட்டு போறது போல சொல்றவ.. உங்கப்பன் ஒரு வார்த்தை உன் கல்யாணத்தை பத்தி யார்கிட்டேயும் மூச்சு விடலையே.. ” என்றார் வாயில் கையை வைத்தபடி.

“நீ இறங்கு அமுச்சி.. போற வழியில எல்லாம் விவரமா சொல்றேன்” என்று அவர் பையையும் சேர்த்து தூக்கியவள் அந்த அம்மூச்சி இறங்க வழி கொடுத்தாள்.

அவள் கையை மெல்ல பற்றியபடி கீழே இறங்கியவர் ரம்யா இறங்கியது, அவளிடம் இருந்து பையை வாங்கப் போக..

“விடு அம்முச்சி , நானே கொண்டு வரேன். ” என்று அவரோடு வீட்டிற்கு நடந்தாள்.

ரம்யா வருகிறாள் என்று அவளை அழைக்க ரத்னவேலு அப்போது தான் பஸ் ஸ்டாப்பிற்கு வர..

“அட அதுக்குள்ள பஸ் வந்திருச்சா?” என்று அவர்களிடம் வந்தார்.

“ஆமா ப்பா இப்போதான் ” என்று அவரைப் பார்த்து சிரித்தாள் .

“ஏன் டா ரத்னம் , புள்ளைக்கு கல்யாணம் வெச்சிருக்க? அதுவும் மூத்தவ இருக்க அப்போ இளசுக்கு கல்யாணம் பண்ண தேதி குறிச்சிருக்க.. எங்ககிட்ட எல்லாம் சொல்லணும்னு தோணலையா உனக்கு ” என்று உரிமையாக அவரிடம் கேட்டார்  பாட்டி .

“என் பெண்ணுக்கே நேத்து காலையில் தான் தகவலே சொன்னேன். அவ வந்த அப்பறோம் தண்டோரா காரன்கிட்டே சொல்லி ஊர் முழுக்க சொல்லலாம்னு இருந்தேன். அதான் உனக்கு தெரிஞ்சிருச்சே.. நீயே இந்த நல்ல விஷயத்தை ஊர்க்காரவங்களுக்கு சொல்லிரு. வர வெள்ளிக்கிழமை என் பொண்ணுக்கு கல்யாணம் ” என்றார் ரத்னவேலு.

“அது சரி என்கிட்டே சொல்லிட்டே இல்ல.. ஊரையே உன் வீடு விசேஷத்துக்கு கூட்டியாந்துறேன். நீ கவலையை விடு ராசா.. ” என்று மூவரும் பேசிக்கொண்டே நடந்து செல்ல..

மெல்ல விடியலும் ஆரம்பித்து இருந்தது.

“ஆமா அம்முச்சி எங்க போயிட்டு இவளோ காலையில வந்து இறங்குற.. ” என்றாள் ரம்யா.

“அதுவா.. என் பேத்தியை பாக்கணும் போல இருந்துச்சு. அதான் என் மவன் வீட்டுகுப் போயிருந்தேன். ” என்றார்.

“சரி சரி.. என் கல்யாணத்துக்கு நேரமே வந்திரு சரியா. எப்படியும் என்னை இனி கல்யாணம் முடியுற வரை வெளியே விட மாட்டாங்க. அதான் இப்பவே சொல்லிடறேன் உனக்கு ” என்றவள் அவர் வீடு வந்ததும் பையை அவரிடம் கொடுத்தவள் “என்னை ஆசிர்வாதம் பண்ணு அம்முச்சி ” என்று அவர் காலில் விழ..

“புள்ளையை தங்கமாட்டம் வளர்த்தி வெச்சிருக்க ராசா.. ” என்றவர் “நல்லா இரு டி என் ராசாத்தி. போற இடத்துல எல்லாரையும் நல்லா பார்த்துக்க.. அப்படியே உன் புருஷனையும் வளைச்சு கைக்குள்ள போட்டு வெக்க பழகிக்க சரியா?” என்று அவள் காதில் சொல்ல..

“ம்ம்.. சரி அம்முச்சி ” என்று வெட்கப்பட்டு சிரித்தவள் அவரிடம் விடை பெற்று ரத்தினவேலுவுடன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.

அவர்கள் வீட்டிற்கு வரும்போது நன்கு விடிந்து இருந்தது.

வாசலில் கனகா கோலம் போட்டுக்கொண்டிருக்க..

ஆதி , அல்லி, யசு மூவரும் ஆளுக்கு ஒரு கிண்ணத்தில் கோலப்பொடியை வைத்துக்கொண்டு கனகாவின் கோலத்திற்கு போட்டியாக வாசலில் ஆளுக்கு ஒரு இடத்தைப் பிடித்து கோலப்பொடியைக் கொட்டி அதில் தங்கள் விரல் கொண்டு அழகாக கிறுக்கிக்கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவள் “அப்பா இது எல்லாம் ஐரா மாமா குழந்தைங்களா! ” என்று ஆர்வமாக கேட்டாள்.

“அங்க சிவப்பு ட்ரொஸ்ர் மட்டும் போட்டுட்டு சட்டை இல்லாம இருக்கானே அவனும், அப்பறோம் அதோ அங்க அவனை உரிச்சு வெச்சது போல ஒருத்தி இவங்க போட்ட கோலத்தை மேற்பார்வை செய்துட்டு இருக்காளே.. அவளும் தான் ஐரா குழந்தைங்க, இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல.. சமத்து பொண்ணா கோலம் போட்டுட்டு இருக்காளே அது கமலா அத்தை பையன் ராஜ் இருக்கானே அவன் குழந்தை ” என்றார்.

“சரிப்பா.. ” என்று சிரித்துக்கொண்டே முன்னே செல்ல அவள் வந்ததைப் பார்த்ததும் கோலம் போட்டுக்கொண்டிருந்த கனகா அதை அப்படியே வைத்துவிட்டு அவளிடம் வந்தவர் “என்ன டி இப்படி வரம்பு போட்டுட்ட.. மாப்பிளை வீட்டுல உன்னைப் பார்த்தா பொண்ணு குண்டா இருக்குன்னு சொல்ல மாட்டாங்க.. ” என்று அவளை அணைத்துக்கொண்டே கேட்டார்.

“ஏம்மா வழக்கமா எல்லா அம்மாவுக்கு அவங்க பசங்களை ரொம்ப நாள் கழிச்சு பாக்குறாங்கன்னா என்ன இப்படி கறுத்துப் போயிட்ட.. இப்படி இளைச்சுப் போயிட்ட இந்த மாதிரி தானே சொல்வாங்க. ஆனா நீ என்ன இப்படி வந்ததும் என்னை கலாய்க்குற.. ” என்றாள்.

“ஏய் நான் கலைக்கள டி, நிஜமா தான் சொல்றேன். இங்க இருந்து நீ போன அப்போ எலும்பா தான் இருந்தே. இப்போ பாரு எப்படி கொலுக்கு மொலுக்குன்னு வந்திருக்கேன்னு. பாக்க நல்லா தான் இருக்கு , ஆனா மாப்பிளை வேற உன் போட்டோவைக் கூடப் பாக்காம உன்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னாரு. உன்னை இப்படி பார்த்தா என்ன சொல்வரோன்னு கவலையில சொல்றேன் டி.. ” என்றார்.

“அதான் என்னைப் பார்க்கமையே ஓகே சொல்லிட்டார் இல்ல. அப்பறோம் நான் எப்படி இருந்தாலும் அவர் என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும் .நீ பிரீயா விடும்மா” என்றவள்

நேராக யசுவிடம் சென்றாள் . அவள் குட்டி கை நிறைய கோலப்பொடியை அள்ளி முறுக்கு பிழிவது போல கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் . அதை பார்த்து சிரித்தவள் “இப்படி கோலப்பொடியை எடுத்து இப்படி போடணும்.. ‘ என்று அவள் கிண்ணத்தில் இருந்த கோலப்பொடியை கையில் எடுத்து தரையில் வரைந்து காட்டினாள் ரம்யா.

தன் கிண்ணத்தில் இருந்த கோலப்பொடியை எடுத்து கோலம் போட்ட ரம்யாவை பார்த்து முகத்தை சுருக்கியவள் அடுத்த நொடி.. “ங்கே… ” என்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்து இருந்தாள் யஷ்வந்திகா.

“ஹே ! குட்டி எதுக்கு இப்போ அழுற.. நான் எதுமே பண்ணலையே உன்னை ” என்று அவள் அழுகையைக் கண்டு பதறித்தான் போனாள் ரம்யா.

“கோலம்.. கோலோ .. என்னுது.. தா.. ” என்று அவள் தரையில் போட்ட கோலப்பொடியை காட்டி அழுதாள் யசு .

“அடியே அவகிட்டே இருந்து எதுக்கு டி கோலப்பொடியை எடுத்த. மூணு பேரும் சண்டை போடுவாங்கனு தானே தனித்தனியா நான் கிணத்துல கோலப்பொடியைப் போட்டுக் கொடுத்திருக்கேன்” என்று வந்தார் கனகா.

“அம்மா நான் சும்மா அவளுக்கு சொல்லி காட்டலாம்னு தான் எடுத்தேன். இவ அதுக்கு இப்படி அழுவானு எனக்கு எப்படி தெரியும் ” என்றவள்.

கீழே குனிந்து யசுவின் அருகே அமர்ந்தவள் “இங்க பாரு தங்கோ.. அழக்கூடாது சரியா? உனக்கு கோலப்பொடி தானே வேணும். ” என்று திரும்பியவள் ஆதியின் கையில் இருந்த கிண்ணத்தில் இருந்த கலர் கோலப்பொடியை வாங்கி அவளிடம் நீட்டி “இந்தா இதை வெச்சுக்கோ.. “என்றாள்.

அதை வாங்கியதும் யசு அழுகையை நிறுத்திக்கொண்டு சிரிக்க..

“அப்பாடா ” என்று பெருமூச்சு விட்டிருப்பாள். அடுத்த நொடி அவள் பின்னால் நின்றிருந்த ஆதியோ ரம்யாவின் முடியைப் பிடித்து அவளை அப்படியே பின்னால் இழுக்க..

“ஏய்! ஷ்.. ஆஹ்.. ” என்று வலியில் அலறிக்கொண்டே அவன் இழுத்த வேகத்தில் தடுமாறி ஈரத்தரையில் அப்படியே மல்லாக்க விழுந்துவிட்டாள்.

“ஷ்.. ஆ.. அம்மா.. .” என்று புலம்பியவள் தலைக்கு மேலே இடுப்பில் கையை வைத்து அவளை முறைத்துக்கொண்டிருந்த ஆதியைப் பார்த்தாள்.

அவனோ கோலப்பொடியை பிடுங்கி யசுவிற்கு ரம்யா கொடுத்தது பிடிக்காமல் இன்னமும் அவளையே முறைத்துக்கொண்டிருக்க..

கையில் படிந்த மண்ணை துடைத்த படி எழுந்து அமர்ந்தவள் ” டேய் எதுக்கு டா என் முடியைப் பிடிச்சு இழுத்த.. ” என்று அவனை அதட்டினாள்.

“எனக்கு.. என்னோடது.. ” என்று யசு கையில் இருந்த கோலப்பொடிக் கிண்ணத்தைக் காட்டிக் கேட்க..

“அதுக்குனு என் முடியைப் பிடிச்சு இழுப்பியா டா.. ” என்று அவன் கையைப் பற்றி தன் அருகே இழுத்தாள்.

அவள் இழுத்ததும் பயந்து போன ஆதி உதட்டைப் பிதுங்கிக்கொண்டு அழ ஆரம்பிக்க..

அவன் அழுவதை பார்த்த அல்லியோ வேகமாக ரம்யாவிடம் வந்தவள் கையில் இருந்த கோலப்பொடியை கோபத்தில் அவள் மீது வீசிவிட்டு..

அது அவள் முகம் , உடை என்று கொட்டி விட்டது.

அவள் செயலைக் கண்டு ரம்யா அல்லியை முறைக்க..

அல்லி கோலப்பொடி கொட்டியத்தைப் பார்த்த யசுவோ சிரித்துக்கொண்டே ரம்யாவின் பின்னால் இருந்து அவள் தலையிலும் உடையிலும் கோலத்தை கொட்டிவிட்டாள்.

இருவரையும் பிடித்து தன் பக்கம் இழுத்தவள் மூவரின் கைகளையும் ஒன்றாக வைத்து பிடித்தவள் வீட்டுக்கு வந்த சித்தியை இப்படி தான் வரவேற்பிங்களா மூணு பேரும் என்று பொய்யாக கோபம் காட்ட..

அவ்வளவு தான் மூவரும் ஒன்று சேர்ந்து அழ ஆரம்பித்து விட..

“ஏய் ரம்யா, வந்ததும் உன் வாலுத்தனத்தை ஆரம்பிச்சுட்டியா? அவங்கிட்ட ஏண்டி வம்பு வளக்குற.. “என்று அவளை முதுகில் ரெண்டு போட்டார்.

“ஆஹ்! அம்மா நீயுமா?” என்று அவரைப் பார்க்க..

அதற்க்குள் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்துவிட,,

வாசலில் முகமெல்லாம் ரங்கோலி போடி பூசப்பட்டிருக்க.. தரையில் அமர்ந்து இருந்தவளை, அவள் முன் நின்று அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை,

கமலா வந்து யசுவை தூக்கி அவளை சமாதானம் செய்ய..

கனகா அல்லியை தூக்கிக்கொண்டார்., வேதவள்ளி வந்து ஆதியை தன் பக்கம் இழுக்க..

“விடு பாட்டி.. இவ என் கோலம் எடுத்தா.. ” என்று அவர்கள் இருந்த தைரியத்தில் ரம்யாவின் கன்னத்தை தன் குட்டி கை கொண்டு பதம் பார்த்து இருந்தான்.

“டேய் டேய்.. என் பொண்ணு வந்ததும், வராததுமா மூணு பேரும் சேர்ந்து அவளை இப்படியா வரவேற்ப்பிங்க ” என்று ரத்னவேலு சிரித்துக்கொண்டே ராமாயாவின் கையைப் பற்றி மேலே தூக்கி விட்டார்.

அப்போது தான் ரம்யாவை முதல் முறை பார்த்த அனைவரும் சிரித்த படி அவளை பார்க்க..

இங்கே நான்கு பேர் மட்டும் அதிர்ச்சியில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

அது வேறு யாருமில்லை மித்ரா, ராஜ் ,ஈஸ்வர் தான். அந்த நாலாவது ஆள் யாருன்னு தானே கேக்குறீங்க.. அது ஈஸ்வரோட அம்மா பார்வதி தான். அவரும் தானே மித்ராவை இந்த நிலைக்கு ஆளாக்கின மோகனை ஈஸ்வர் அடிச்சு துவைக்கும்போது கூட இருந்தார். அப்போ அங்கே இருந்த ரம்யாவை பார்த்திருக்காரே.. அந்த அதிர்ச்சி தான் அவருக்கு.

நாலு பேரும் அதிர்ச்சியில் இருக்கறதை பார்த்ததும் உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்ட ரம்யா மற்றவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டவள் பார்வதி காலில் விழுந்து ஆசி வாங்கியவள் “சும்மா சொல்லக்கூடாது பெரியம்மா , ஈஸ்வர் அண்ணா ஒரு தினுசா இருந்தா நீங்க அவருக்கு மேல தான் இருக்கீங்க.. எங்க ரக்ஷணா மேமையே என்னனு கேட்டவங்க தானே நீங்க. நீங்க எல்லாரும் பண்ணினத்துக்கு தான் அவ எல்லாரையும் வெச்சு செய்திருக்கா.. இது உங்களுக்குத் தேவையா?” என்று நக்கலடித்துவிட்டு ஈஸ்வர், மித்ரா, ராஜ் மூவரையும் பார்த்து சிரித்தபடி உள்ளே சென்றுவிட.

அவளையே அதிர்ந்து பார்த்தபடி அவர்கள் நின்றிருந்தார்கள்.

இங்கே ரக்ஷணா கையில் மொபைலை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள். கோபம் தலைக்கு ஏறி  இருந்தது அவளுக்கு, தன்னிடம் இளங்கிளியை யார் என்றே நியாபகம் இல்லை என்று பொய் சொன்னவன் . தினமும் தான் தூங்கியவுடன் அவளுடன் ஸ்டோர் ரூமில் ரொமான்ஸ் செய்த விஷயம் அம்பிகா நேற்று இரவு எடுத்த போட்டோவைப் பார்த்து தான் உண்மை என நம்பி இருந்தாள்.

அவளிடம் ராவண், இளங்கிளியைப் பற்றி போட்டுக் கொடுத்தது அவள் தான்

அவள் கோபம் கண்டு மற்றவர்கள் தான் பயந்து போக வேண்டும். ஆனால் ராவனோ எப்படியோ உண்மை தெரிந்துவிட்டது என்ற நிம்மதியில் சாவகாசமாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து இருக்க.. இப்பொது தான் நிம்மதியாக இருக்கிறது , அதுவும் ரக்ஷனாவிற்கு உண்மை தெரிந்து விட்டது என்ற சந்தோசத்தில் அவன் கை வளைவிற்குள் ரக்ஷனாவின் கோபம் கண்டு ரசித்தபடி இளங்கிளி அமர்ந்து இருந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.