EPISODE -13
புதிதாக சேர்ந்து இருந்த பிரஷர்களுக்கான பார்ட்டி களைகட்டி இருந்தது . இளனுக்கு சொந்தமான சிட்டியிலேயே மிகவும் பெரிய ரெஸ்டாரண்டுக்கு அனைவரும் வந்திருந்தனர் .
கூட்டம் கூட்டமாக ஆட்கள் நின்று பேசிக் கொண்டிருக்க… காந்தள் வந்ததிலிருந்து தான் வேலை செய்த ஆபீஸில் யாருடனும் நெருங்கி பழகவில்லை .
எப்போதும் வேலை வேலை என்று இருப்பவள் அதிகமாக ராணியுடன் தான் இருப்பாள். அவள் ராணியுடன் வேலை செய்தியில் அவர் சொல்லிக் கொடுக்கும் சில தொழில் யுத்திகளை கையாண்டு தனக்கு தெரிந்ததையும் தான் கற்றுக் கொண்டதையும் சேர்த்து தன் வேலையில் கவனமாக இருந்ததால் இப்போது இங்கே காந்தள் தனக்கு நண்பர் வட்டம் இல்லாமல் தாம் மட்டும் தனியாக இருப்பது போல உணர்ந்தாள் .
அவள் தயக்கமாக ஓரமாக நின்றிருப்பதை பார்த்த ராணி அவராகவே காந்தளின் முன்பு வந்து “இதுக்கு தான் என் பின்னாடி சுத்தாதேன்னு சொன்னேன். வெளியில பார்ட்டின்னு வந்தால் பிரண்ட்ஸோட சேர்ந்து சந்தோஷமா என்ஜாய் பண்ணனா தானே நல்லா இருக்கும். இந்த 40 வயசானவ கூட சேர்ந்தா இப்படித்தான் என்ன மாதிரியே தனியா இருக்க வேண்டிவரும்” என்றாள்.
“மேடம் உங்களுக்கு 40 வயசுன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது. உங்கள பார்த்தா அப்படி எல்லாம் எதுவுமே தெரியல நீங்களும் சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்கீங்க . எனக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க மேடம் ஆனா அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியாது” என்றாள் .
“அதுவும் சரிதான் இங்கு நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஸ் மட்டும் தானே இருக்கோம்” என்று ராணி பேசிக் கொண்டிருக்கும் போது.
“ஏன் உங்க பிரெண்ட்ஸையும் தாராளமா இந்த பார்ட்டிக்கு நீங்க வரவழைக்கலாமே. வெளி ஆட்கள் இங்க வரக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லையே” என்று ஒரு குரல் காந்தளுக்குப் பின்னால் மிகவும் நெருக்கமாக கேட்டது.
அந்த குரலை கேட்டதும் திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க அங்கே இளன் சிரித்த முகமாக அவள் அருகில் நின்றிருந்தான் .
அவனைப் பார்த்ததுமே காந்தளுக்கு தூக்கி வாரி போட்டது. எப்படியாவது இவனை பார்ப்பதை தவிர்த்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு அவனாகவே தன் முன் வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சியானது .
இருந்தாலும் அவனை இப்போது பார்த்ததும் ஒருவகையில் நல்லதாக போய்விட்டது அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இப்போதே தூக்கி கொடுத்து விட வேண்டும் என்று எண்ணியவள் அதைப்பற்றி அவனிடம் பேசப் போக..
அதற்குள் ராணி அவர்களுக்கிடையில் புகுந்து “சார் நம்ம ஆபீஸ்ல இருக்குற ஸ்டேப்க்கு தானே இந்த பார்ட்டியை அரேஞ்ச் பண்ணி இருக்கோம். அப்படி இருக்கிறப்போ வெளியாட்கள் எப்படி… அப்படியே ஆட்கள் அதிகமான செலவு அதிகம் ஆகும்” என தயக்கமாக கேட்க .
“இது என்னோட ஹோட்டல் தானே செலவு பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க ராணி. அத பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல உங்க ஸ்டாஃப்க்கு இங்க தனியா இருக்க கஷ்டமா இருந்தா அவங்க பிரண்ட்ஸ் வரவழைச்சுக்க சொல்லுங்க. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
அவன் சொன்னதை கேட்டு ராணி காந்தளை பார்க்க… காந்தளோ வேகமாக தலையை அசைத்து “இல்ல மேடம் வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரத்துல பார்ட்டி முடிய போகுது நான் கிளம்பிடுவேன் . என் பிரண்ட்ஸ்க்கு இப்போ லாஸ் பண்ணிட்டு சொல்லி அவங்கள அலைய வைக்க நான் விரும்பல” என்றவள் .
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றாள் .
இதுக்கு மேல் என்ன சொல்வது என்று ராணிக்கு தெரியவில்லை. அப்போது பிரிண்டிங் டிபார்ட்மெண்டில் இருந்து அதனுடைய ஹெட் ராணியை பெயர் சொல்லி அழைத்து கையை அசைத்தவர். அவரை இங்கே வரும்படி அழைக்க ராணி காந்தள் இளன் இருவரையும் பார்த்து “ஒன் மினிட் வந்துடறேன்” என அங்கிருந்து நகர்ந்தார் .
ராணி அங்கிருந்து சென்றதும் வேகமாக காந்தள் இளனை பார்த்து “தயவுசெய்து உங்களுடைய அக்கௌன்ட் நம்பரை எனக்கு கொடுங்க உங்க பணத்தை நான் அக்கவுண்ட்ல வச்சுட்டு இருக்கிறது எனக்கு எதுவும் ரொம்ப பாரமா இருக்கு நான் ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கு உங்களோட பணம் வேண்டாம்னு ப்ளீஸ் உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க” என்றாள் .
“என்ன boo … நீ, நான் எத்தனை முறை அந்த பணம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கு பதிலா தானே உன்னோட முத்தத்தை நான் எடுத்துகிட்டேன்” என்று ஒரு பேச்சுக்காக அவளிடம் முத்தத்திற்கு பணம் என்று சொன்னான்.
“என்னுடைய விருப்பம் இல்லாம எனக்கு முத்தம் கொடுத்துட்டு அதுக்கு விலையும் பேசுற உங்கள என்னன்னு நான் சொல்றது எனக்கு உங்க பணம் வேண்டாம். தயவு செய்து உங்க அக்கவுண்ட் நம்பரை எனக்கு கொடுங்க இல்ல நான் ஆபீஸ் அக்கவுண்டுக்கு இந்த பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிடவா?” என்றாள் மீண்டும் .
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காந்தள் பிடிவாதமாக பணத்தை அவனுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருப்பதை கண்டு எரிச்சலுடன் இளன் அவள் கையைப்பிடித்து அங்கிருந்து தனியாக இழுத்துச் சென்றான் .
அவர்கள் பார்ட்டி நடந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்றிருக்க … இளன் காந்தளை இழுத்துச் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.
தன் கையை இழுத்துச் செல்லும் இளனை பார்த்த காந்தளுக்கு கோபம் வந்தது .
“என்ன பண்றீங்க? நீங்க முதல்ல என்ன விடுங்க. இத்தனை பேர் இங்க இருக்கும்போது எல்லார் முன்னாடியும் என்னை இப்படி இழுத்துட்டு போறது நல்லா இருக்கா. யாராவது நம்மள இப்படி பார்த்தால் என்ன நினைப்பாங்க” என்று கோபமாக அவன் கையில் இருந்த தன் கையை உதறினாள் .
அதை கண்டு மீண்டும் கோபம் அடைந்த இளன் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் தள்ளி கதவை அடைத்தான் .
அவன் அந்த ரூமிற்குள் தள்ளி கதவை அடைத்ததும் காந்தளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நடுங்கிய குரலில் “இப்ப எதுக்கு கதவை சாத்துனீங்க. முதலில் வழி விடுங்க நான் இங்கிருந்து போகணும்” என்று அவனை தாண்டி கதவை நோக்கி காந்தள் செல்ல போக…
அவளை இழுத்து கதவோடு சேர்த்து அழுத்தி நிற்க வைத்தவன் இரு பக்கமும் தன் கைகளில் வைத்து அனைக்கட்டி அவளை அங்கிருந்து செல்ல விடாமல் பிடித்துக் கொண்டான்.
பதட்டமான அவளை விழிகளை பார்த்து “இப்போ எதுக்கு இவ்வளவு சீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்க. நான் தான் அந்த பணம் எனக்கு வேண்டாம்னு சொன்னேனே அதை என்கிட்ட கொடுப்பதிலேயே குறியா இருக்க “என்றான் .
“நீங்க யாரு எனக்கு? முதல்ல எனக்கு எதுக்கு நீங்க பணம் கொடுக்கணும். உங்க பணம் எனக்கு தேவையில்லைனு நான் அன்னைக்கே சொல்லிட்டேன். இப்படி வலுக்கட்டாயமா பணத்தை என்கிட்ட கொடுத்து என்ன காரியம் சாதிக்கலாம் நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க” என்று அவனை காயம் படும்படி பேசினாள் காந்தள்..
“காந்தள் வார்த்தையை யோசித்து பேசு உன்கிட்ட காரியம் சாதித்து கொள்வதற்காக நான் அந்த பணத்தை கொடுக்கல. உன் மேல இருக்கிற அக்கறையில் ஒருவித அன்புல தான் அந்த பணத்தை நான் உனக்கு கொடுத்தேன். அது உனக்கு ஏதாவது ஒரு வகையில உதவியா இருக்கும்னு தான் அந்த பணத்தை உன் கிட்ட கொடுத்தேன்” என்றான் .
“நான் உங்ககிட்ட எனக்கு உதவி வேணும்னு கேட்டேன் அப்படி கேட்காமல் கொடுக்கறதுக்கு பேரு என்ன அர்த்தம்” என்றால் அவனை கோபமாக பார்த்து .
“காந்தள்!!” என்று இளன் கோபமா அவளை பார்க்க . .. என்ன மிஸ்டர் இளன் உங்களுடைய வசதி வாய்ப்புகளை என்கிட்ட காட்டி என்ன உங்களுக்கு அடிபணிய வைக்கலாம் என்று நினைக்கிறீர்களா? பணத்தை கொடுத்து எனக்கு முத்தம் கொடுத்து உங்களோட காரியத்தை சாதிக்க நினைக்கிறீங்க. அப்படித்தானே நான் எவ்வளவோ முறை சொல்லிட்டேன். நானும் என் முத்தமும் விற்பனைக்கு இல்ல அப்படி நீங்க பணத்தை கொடுத்து என் முத்தத்தை வாங்குறீங்கன்னா அதுக்கு பேரு என்ன அர்த்தம். என்னை எந்த மாதிரி நீங்க மனசுல நினைச்சு இருக்கீங்கன்னு இதிலிருந்து புரிய வேண்டாம். அப்போ காசு கொடுத்து ஒரு பொண்ணு கிட்ட போறவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். என்னை அந்த இடத்தில் தானே நீங்கள் வச்சிருக்கீங்க” என்றாள்.
அவள் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை “தான் இன்னும் அவளிடம் ஒருமுறை கூட மனது விட்டு பேசி இருக்காதபோது காந்தள் தன்னை பற்றி இப்படியான ஒரு எண்ணத்தை தன் மனதில் விதைத்து இருக்கிறாள்” என்று நினைக்கையில் அவன் மனம் கனத்தது .
“காந்தள் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. என் மனசு விட்டு உள்ளதை உன்கிட்ட பேசணும்னு தான். இந்த பார்ட்டியை நான் அரேஞ்ச் பண்ணினேன் . இன்னைக்கு இந்த பார்ட்டியை நான் இங்கே அரேஞ்ச் பண்ணதுக்கு காரணமே நீதான் உனக்காக மட்டும் தான்” என்றான் .
“பாருங்க இப்ப கூட உங்களோட வசதிய காட்டித்தானே என்னை மடக்க பார்க்கிறீங்க . அது ஒரு காலும் நடக்காது ” என பேசியவள்
“முதல்ல என்னை விடுங்க “என்று தன் அருகில் இருந்தவனை தள்ளிவிட்டு திரும்பி கதவை திறக்க போக காந்தளின் இந்த பேச்சும், செயல் இரண்டுக்கும் இளனுக்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்த…
திரும்பி இருந்தவர்களின் கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் கதவில் அழுத்தி காந்தளை நிற்க வைத்து குனிந்து அவள் இதழில் இந்த முறை வலுக்கட்டாயமாக முத்தம் வைத்தான் .
இதற்கு முன்பு கொடுத்த முத்தங்கள் மென்மையாக இருக்க.. இப்போது அவன் கொடுக்கும் முத்தம் அவளை காயப்படுத்தும் விதமாக இருந்தது. அவனின் இந்த செயலை காந்தள் எதிர்பார்க்கவே இல்லை. தன்னால் முடிந்த மட்டும் பலத்தை பிரயோகித்து அவன் மார்பில் கை வைத்து தன்னை விட்டு இளனை விளக்கி நிற்க வைத்தவள் மூச்சு திணறிய படி அவனை பார்த்தாள்.
இளனின் கோபம் இன்னும் குறைந்த பாடில்லை மீண்டும் குனிந்து அவள் இதழில் இளன் முத்தம் வைக்கப் போக..
இதற்கு மேல் காந்தளால் அவனை தடுக்க முடியாது என்று முடிவு செய்தவள் சிறிதும் யோசிக்காமல் இளனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் .
இதை சற்றும் எதிர்பாராத இளன் காந்தளை சிவந்த விழிகளோடு ஏரிடா…
“இங்க பாருங்க நீங்க நினைச்ச போதெல்லாம் வந்து எனக்கு முத்தம் கொடுப்பதற்கு நான் ஒன்னும் உங்க காதலி கிடையாது. நீங்க பணம் கொடுத்து விலைக்கு வாங்குற பொண்ணும் கிடையாது. நான் ஏற்கனவே ஒருத்தர மனசார விரும்புறேன் தயவு செய்து என் வழியில குறிக்கிடாதீங்க” என்றாள் .
அவள் இன்னொருவனை காதலிக்கிறேன் என்று சொன்னதை கேட்டு இளனுடைய இதயம் வெடித்து விடும் போல இருந்தது . அவள் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்தவன்.
காந்தளை நம்பமுடியாமல் பார்த்தவன் “என்ன சொல்ற!! நீ வேற ஒருத்தனை லவ் பண்றியா?” என்றான் அதிர்ச்சி மாறாமல்.
“ஆமாம் நம்ம ஆபீஸ்ல தான் அவர் வேலை பார்க்கிறார் இந்த பாட்டிக்கு கூட அவர் வந்திருக்கிறார். அவரை தான் நான் லவ் பண்றேன் என்றாள் காந்தல் . நம்ம ஆபீஸ்ல என்று புருவம் சுருங்க இளன் பார்க்க …
ஆமாம் என்று தலையாட்டியவள் தன்னை பிடித்திருந்ததனின் கையை பிரித்து விட்டு திரும்பி கதவை திறந்து வெளியே சென்றாள் . அவள் பின்னாலேயே வந்த இளன் அவளை பின்தொடர தன் பின்னால் இளன் வருவதை பார்த்ததும் வேகமாக காந்தளின் கண்கள் கூட்டத்தில் மதி எங்கே இருக்கிறான் என்று தேடியது.
அவன் தூரத்தில் நின்று யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருக்க வேகமாக அவனை நோக்கி ஓடிய காந்தள் மதி என அவனை அழைக்க …
காந்தளை பார்த்ததும் மதியும் சிரித்த முகமாக எங்கு போயிருந்த காந்தள் உன்னை நான் இவ்வளவு நேரம் தேடிக்கிட்டு இருந்தேனே என்றான் . தூரத்தில் இன்று தனக்கு பின்னால் தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் இளனை ஒருமுறை பார்த்து விட்டு திரும்பி நான் இங்க ராணி மேடம் கூட தான் பேசிகிட்டு இருந்தேன். உன்னை தான் தேடிட்டு இருந்தேன் நீ என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே என்ன அது என்றாள்.
அவள் அப்படி கேட்டதும் தயங்கிய மதி இங்கேயே சொல்லனுமா நம்ம கிளம்பும்போது வெளியே போய் பேசிக்கலாமா என கேட்டான் .
இல்ல மதி எனக்கு இப்பவே இங்கேயே தெரிஞ்சாகணும் சீக்கிரம் சொல்லு என்றார் அவனை அவசரப்படுத்தினாள்.
தாங்கள் நின்றிருந்த இடத்தை விட்டு காந்தளின் கைப்பிடித்து தனியே அழைத்து வந்த மதி அவள் கைகள் இரண்டையும் தன் கையோடு கோர்த்து பிடித்தவன் நீ ரொம்ப அவசரப்படுற எனச் சொல்லி சிரித்துவிட்டு எனவே எப்படியும் உன்னிடம் நான் சொல்லித்தான் ஆகணும் என்றவன்.
எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு காந்தள். நான் உன்னை விரும்புறேன் நீயும் என்ன விரும்புறதா எனக்கு தோணுது. அதனால தான் தைரியமா உன்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லிட்டேன் முடிவு உன் கையில தான் இருக்கு என்றாள் தீர்க்கமாக அவளைப் பார்த்து .
அவன் பேசியதை எல்லாம் காந்தள் கேட்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தது அதேபோல பேசியதை மதி பேசியதை அவர்களை விட்டு சற்று தள்ளி நின்ற இளன் கேட்டிருப்பான் என்று உறுதி செய்து கொண்டவள். அவன் இடம் இருந்த தன் கையை விடுவித்தவள் அவனை கட்டிக்கொண்டு நானும் தான் உன்ன விரும்புறேன் என்று சொல்லி சந்தோஷப்பட்டாள் .
மதிக்கு காந்தளும் தன்னை விரும்புவதை கேட்டு மிகவும் சந்தோஷமானது. அவனும் அவளை இருக்க அணைத்துக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ் காந்தள் நான் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோனு கொஞ்சம் பயமாவும் எனக்கு இருந்தது. அந்த பயம் இப்போ சுத்தமா இல்லை என்று சொல்லி அவளை மேலும் இருக்க அணைத்துக் கொண்டான் .
காந்தள் அவன் பேசியதை கேட்டு சிரித்தவள் அவனை விட்டு விலகி நின்று சரி வா நம்ம வெளியே போகலாம் இனி நமக்கு இங்கே வேலை இல்லை என்றவள்.
அவன் கைகோர்த்து அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் முன்பு தூரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த இளனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து மதியின் கைகோர்த்த படி கிளம்பினாள் .
